எபிரேயர் 6:18 இந்த வசனத்தின் விளக்கம் என்ன? இதில் கூறப்பட்டுள்ள இரண்டு மாறாத விசேஷங்கள் என்ன?

எபிரேயர் 6:18 இந்த வசனத்தின் விளக்கம் என்ன? இதில் கூறப்பட்டுள்ள இரண்டு மாறாத விசேஷங்கள் என்ன?


நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.  எபிரேயர் 6:18

கர்த்தருடைய வாக்குத்தத்தம் நாம்
தாராளமாய் நம்பலாம். அவருடைய
வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாய்த்
தரித்திருக்கலாம் அவர் எவ்வளவேனும்
பொய்யுரையாத தேவன். சுவிசேஷங்களின்
நமக்கு நிறைந்த ஆறுதல் உண்டாகும்படிக்குச்
செய்திருக்கிறார். நாம் வாக்குத்தத்திற்கு
சுதந்தரவாளிகளாக இருக்கிறோம். நமக்கு
முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப்
பற்றிக்கொள்ளும்படி, நாம், கர்த்தருடைய
சமூகத்தில் அடைக்கலமாய் ஓ
டி வந்திருக்கிறோம்.
கர்த்தருடைய சமூகத்தில் யாரெல்லாம் மனத்தாழ்மையோடு, மனந்திருந்திய
இருதயத்தோடும் ஓடிவருகிறார்களோ, அவர்களெல்லோருக்குமே கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து அடைக்கலமாகயிருக்கிறார் (எபி 6:18).

தம்மிடத்தில் ஓடிவந்த நமக்கு நிறைந்த
ஆறுதல் உண்டாக வேண்டுமென்பது
தேவனுடைய விருப்பம். இதுவே அவருடைய
சித்தம் தம்மை விசுவாசிக்கிறவர்கள்
நிறைந்த ஆறுதலடைய வேண்டுமென்று
தேவன் கரிசளையுள்ளவரா இருக்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு பல
சோதனைகளும் வேதனைகளும் பாடுகளும்
உபத்திரவங்கள் வரலாம் இவையெல்லாவற்றிற்கும் மத்தியிலும்,
கர்த்தருடைய ஆறுதலே நமக்கு
ஆதரவாயிருக்கிறது. இந்த உலகம்
கொடுக்கிற ஆறுதல் பலவீனமானது
கர்த்தர் கொடுக்கிற ஆறுதல் பலம் உள்ளது.
கர்த்தருடைய ஆறுதல் நிறைவானது (எபி 6:18)

நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவே நமக்கு நம்பிக்கையாகவும்
ஆறுதலாகவும் இருக்கிறார். நாம் இந்த
உலகத்தில் கடலில் பிரயாணம் பண்ணுகிற
கப்பலை போல இருக்கிறேன். புயல்காற்றில்
சுப்பல் தத்தளிப்பது போல
நாமும் இப்பிரபஞ்சத்தில் தத்தளிக்கிறோம் எல்லா
சுப்பங்களும் துறைமுகத்தை நோக்கிப்போகும்
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு
பரலோகமே நாம் போகவேண்டிய துறைமுகம்
நாம் போகும் பாதையில் நமக்கு நங்கூரம்
வேண்டும் அப்போதுதான் கடல்
கொந்தளிக்கும் போது நம்முடைய கப்பலைப்
பாதுகாப்பாக நிறுத்தி வைக்கமுடியும்
சுவிசேஷத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிற
நம்பிக்கை நம்முடைய ஆத்தும நங்கூரம்
இந்த நங்கூரம் நிலையும் உறுதியுமானது.

சுவிசேஷத்தின் மூலமாய் வருகிற நம்பிக்கை உறுதியானது. இந்த நம்பிக்கை தேவனுடைய
மெய்யான ஆகையினால் இது நிலையானது
சுவிசேஷத்தில் நமக்கு மாய்மாலமான
நம்பிக்கை எதுவும் சொல்லப்படவில்லை
உறுதியில்லாத வாக்குத்தத்தம் எதுவும்
சுவிசேஷத்தில் இல்யை சுவிசேஷத்தில் உள்ள
பாக்குத்தங்களெல்லாம் நிலையும் உறுதியுமானது.

தேவனுடைய வாக்குத்தத்தம் மாறாதது
அவருடைய நோக்கமும் விருப்பமும் பாறாதது
தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை என்ன
நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார் அந்த
நோக்கமும் பாராது சுவிசேஷத்தின் மூலமாய்
நமக்கு உண்டாகும் நம்பிக்கை நிலையும்
உறுதியும், திரைக்குள்ளாகப் போகிறதுமான
ஆஸ்துமா நங்கூரமும் இருக்கிறது. இந்த
நங்கூரம் அஸ்திபாத்தை நன்றாகப்
பிடித்துக்கொள்ளும் எவ்வளவு பெரிய
புயல்காற்று இருந்தாலும் சுப்பலை
நத்தளிக்க gums நிலைத்திருக்கச் செய்யும்

நாம் நம்பிக்கைக்கும் போது. அந்த
கிறிஸ்துவினுடைய கயிஷேத்தின் மீது
நம்பிக்கை நம்முடைய ஆத்துமாவுக்கு
நங்கூரம் இருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய
ஜீவியத்தில் எத்தனை போராட்டங்கள்
வந்தாலும் நம்முடைய ஆத்து நங்கூரம்
நம்மை விசுவாசத்தில் நிலைத்திருக்கச்
செய்கிறது.

நங்கூரம் மணலில் நிறுத்தினால்
அது உருதியாகிறது நங்கூரம் மனலை
உறுதியாய்ப் பற்றிக்கொள் ளாது நங்கூரம் உறுதியாகவும் நிலையாகவும்
இருக்கவேண்டுமென்றால் அது
திரக்குள்ளாகப் போக வேண்டும்
கடலின் ஆழத்திலுள்ள வேர்களை
நங்கூரம் பற்றிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் அந்த நங்கூரம் உறுதியாயிருக்கும்

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
நமக்கு முன்பாதிரியாக, நமக்கு முன்னாய்
ஓடினவர் அவர் மெல்கிசேதேக்கின்
முறையின் படி நமக்கு நித்திய பிரதான
ஆசிரியர் நியமிக்கப் பட்டிருக்கிறார்.
பிதாவாகிய தேவனே அவருக்கு இத்தக்
காமாலை ஊழியத்தை கொடுத்திருக்கிறார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே!
நம் எல்லோருக்கும் அஸ்திபாரமாகவும்
ஆத்தும் நகரமாகவும் இருக்கிறார். அவர்
நமக்காக அந்தத் திரைக்குள்
பிரவேசித்திருக்கிறார். கடலின் ஆழத்தில்
நங்கூரம் திரைக்குள்ளாகப் போகிறது போல்
நம்முடைய இயேசு கிறிஸ்து பிரதான
ஆசாரியர் மகாபரிகுத்த ஸ்தலத்திலுள்ள
திரைக்குள் பிரவேசித்திருக்கிறார் அவரே நம்முடைய நம்பிக்கைக்கு நிலையும்
உறுதி நங்கூரம் இருக்கிறார்

விசுவாசிகளின் நம்பிக்கை இயேசுகிறிஸ்துவின் மீது நிலைத்திருக்க வேண்டும் அவரே நம்முடைய
ஆத்துமாவுக்கு இயேசு கிறிஸ்துவை
அசைக்கப்படுவதில்லை. அவர் மகாபரிகத்த
ஸ்தலத்திலுள்ள திரைக்குள் பிதாவாகிய தேவனிடம் நமக்காக பரிந்து பேசுகிறார், நம்முடைய ஆசாரியர், தேவனிடத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார் தேவனுக்கும் மனுஷருக்கும்
நடுவே கிறிஸ்துவானவர் மத்தியஸ்தராயிருக்கிறார்

இரண்டு மாறாத விசேஷங்கள் என்னும்
வாக்கியம் இரண்டு சத்தியங்களை
குறிக்கிறது. அவையாவன:

1) ஆபிரகாமுக்குச் செய்த வாக்குறுதியையும் ஆணையையும் குறிக்கின்றன (வச.13).
அல்லது 2) ஆபிரகாமுக்கு இட்ட ஆணையையும் (வச.13),

ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு,  எபிரேயர் 6:13

2). இயேசுவை மெல்கிசேதேக்கின் முறைமையின் படி ஆசாரியராக்கும் ஆணையையும் (7:20) குறிக்கின்றன என்று கருதலாம்.

அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள். இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.  எபிரேயர் 7:20

"நமக்கு முன் வைக்கப்பட்ட
நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் படி
அடைக்கலமாய் ஓடி வந்த நமக்கு" என்னும்
இந்த வாக்கியத்தில் அடைக்கல பட்டணத்தைப்
பற்றியும் அந்த பட்டணத்திற்கு தங்களுடைய
பாதுகாப்பிற்காக வருகிறவர்களை பற்றியும்
மறைமுகக் குறிப்பு உள்ளது. (எண் 35; யோக 20:2-3). பாவிகள் இயேசு கிறிஸ்துவிடம் ஓடி வரலாம் அவரிடத்தில் நித்திய அடக்கத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.

அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.  எபிரேயர் 6:19

 வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவற்றைச் சுதந்தரித்துக் கொள்வோம் என்று கிறிஸ்துவில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை நிலையானது, உறுதியானது, திரைக்குள் இருந்த தேவபிரசன்னத்திற்குள் செல்லும் (திரைக்குள் போகிறது), என்பதால் நமது ஆத்துமாவைப் பாதுகாக்கிறது, நிலை நிறுத்துகிறது, சமாதானப்படுத்துகிறது (அமைதிப்படுத்துகிறது),
ஆத்தும நங்கூரமாக இருக்கிறது.

போதகர்.சார்லஸ் சதீஷ் குமார்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. இந்த பிரசங்க குறிப்புகள் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகிறது. ஸ்தோத்திரம்.மிகவும் எளிமையாகவும் இருக்கிறது.ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அனால்மூட்டுகிறது.தேவனுக்கு மகிமை.🙏🙏🙏

    ReplyDelete