ரோமர் 1:1 இன் விளக்கம்
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனா கும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காக
பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய
பவுல், (ரோம 1:1)
பவுல் இந்த நிருபத்தில் தன்னைப்பற்றி அறிமுகம்
செய்யும்போது "இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன்" என்று தன்னைப்பற்றி சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரன் என்பது பவுலுக்கு மேன்மையாகத் தெரிகிறது. கிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதில் பவுல் சந்தோஷப்படுகிறார். தன்னைப்பற்றி மேலும் சொல்லும்போது "அப்போஸ்தலனா கும்படி அழைக்கப்பட்டவன்" என்றும் சொல்லுகிறார். கர்த்தர் அனனியாவிடம் பவுலைப்பற்றி சொல்லும்போது "அவன் புறஜாதிகளுக்கும் இராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் -தெரிந்துகொண்ட
பாத்திரமாயிருக்கிறான்" (அப் 9:15) என்று
சொன்னார். கர்த்தர் பவுலை அப்போஸ்தலனாகும்படி அழைத்திருக்கிறார்.
பவுல் தன்னுடைய ஊழியத்தைப்பற்றி எழுதும்போது "தேவனுடைய சுவிசேஷத்திற்காக பிரித்தெடுக்கப்பட்ட வன்" என்று எழுதுகிறா
ர். கர்த்தர் பவுலைச் சந்தித்தபோது அவரைப்
தம்முடைய சுவிசேஷத்திற்காக பிரித்தெடுத்திருக்கிறார். பவுலை
அப்போஸ்தலனாகும்படி
அழைத்திருக்கிறார். பவுல் அப்போஸ்தலனாக
அழைக்கப்பட்டிருப்பதினால், கர்த்தர் பவுலுக்கு
அப்போஸ்தல ஊழியத்தின் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். பவுல் தேவனால் அழைக்கப்படாமல், தானாகவே
அப்போஸ்தல ஊழியம் செய்வதற்குப்
புறப்பட்ட போகவில்லை. தேவனே பவுலை
அனுப்பியிருக்கிறார்.
“அப்போஸ்தலனா கும்படி அழைக்கப்பட்டவர்" என்று பவுல் தன்னைப்பற்றி குறிப்பிடும்போது,
அப்போஸ்தல ஊழியத்தின் அதிகாரத்தை
தெளிவுபடுத்துகிறேன் கர்த்தர் தன்னை
அப்போஸ்தலனாகும்படி அழைத்திருப்பதினால்,
பவுல் பெருமைப்பட்டாலும், மற்ற
அப்போஸ்தலர் எல்லாரையும்விடத் தான்
சிறியவனாயிருக்கிறேன் என்று சொல்லி,
பவுல் தன்னையே தாழ்த்துகிறார் (1கொரி 15:9)
இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக பவுல்
சபையைத் துன்பப்படுத்தினார். ஆகையினால்
தான் அப்போஸ்தலன் என்று பேர்
பெறுவதற்கும் பாத்திரனல்ல என்றும்
தன்னைத் தாழ்த்துகிறவன்.
பவுல் தான் செய்கிற சுவிசேஷ ஊழியத்தைப்பற்றி
எழுதும்போது "தேவனுடைய சுவிசேஷத்திற்காகப்
பிரித்தெடுக்கப்பட்ட வன்" - என்று
தன்னைப்பற்றிக் குறிப்பிடுகிறார். பரிசேயர்கள்
தங்களைப் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று
சொல்லிக்கொள்கிறார்கள். இவர்கள்
பிரமாணத்தை கற்றுக் கொள்வதற்காக,
தங்களைத் தாங்களே வேறுபடுத்திக் கொண்டவர்கள் பவலும் வேதத்தைப் படிப்பதற்காக ஒரு காலத்தில்
தன்னை வேறுபடுத்திக்கொண்டார்.
இப்போதும் பவுல் படித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் பவுல் படிக்கிற பாடம்
மாறியிருக்கிறது. இதுவரையிலும் யூதருடைய
நியாயப்பிரமாணத்தைப் படித்தார். இப்போது
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் படிக்கிறார்.
பவுல் தன் ஜனத்தாரில் தன் வயதுள்ள
அநேகரை பார்க்கிலும், யூதமார்க்கத்திலே தேறினவனாயிருந்தார். அவருடைய பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக
மிகவும் பக்திவைராக்கியம் முள்ளவராயிருந்தார்.
ஆனால் தேவன், தம்முடைய
சுவிசேஷத்திற்காக, பவுலை பிரித்தெடுத்திருக்கிறார்.
பிரித்தெடுக்கப்பட்ட காலத்தைப்பற்றி பவுல்
தான் சொல்லும்போது என்- தாயின்
வயிற்றில் இருந்து என்னை பிரித்தெடுத்தல்,
தம்முடைய கிருபையினால் அழைத்த
தேவன்" (கலா 1:15) என்று எழுதுகிறார்.
கர்த்தருடைய சுவிசேஷத்திற்காக
பவுல் தன்னை முழுவதுமாய்
அர்ப்பணித்துக் கொண்டவர். சுவிசேஷத்தைப்
பிரசங்கிப்பதைவிட பவுலுக்கு வேறு வேலை
எதுவுமில்லை
பவுல் தன்னுடைய ஜீவியத்தின் மூன்று
பகுதிகளில் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறான்.
அவையாவன
1. பிறப்பின்போது - தேவனுடைய சிந்தையில் (கலா 1:15)
அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
கலாத்தியர் 1:15
2. மனமாற்றத்தின்போது - யூதமார்க்கத்திலிருந்து சுவிசேஷத்திற்கு (அப் 9:15-16; 1 தீமோ 1:15-16)
அதற்கு கர்த்தர்; நீ போ. அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
அப்போஸ்தலர் 9:15
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.
அப்போஸ்தலர் 9:16
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான்.
1 தீமோத்தேயு 1:15
அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.
1 தீமோத்தேயு 1:16
3. ஊழிய அழைப்பு - உலகப் பிரகாரமான வேலையிலிருந்து தேவனுடைய ஊழியத்திற்கு (அப் 13:2; அப் 26:16-18; 1 தீமோ 1:11-12)
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது; பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 13:2
இப்பொழுது நீ எழுந்து, காலுன்றிநில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்ப்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
அப்போஸ்தலர் 26:16
உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
அப்போஸ்தலர் 26:17
அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்ககொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
அப்போஸ்தலர் 26:18
நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
1 தீமோத்தேயு 1:11
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
1 தீமோத்தேயு 1:12
தேவனுடைய சுவிசேஷம்
1. சுவிசேஷத்திற்குப் ஒரு விளக்கம் (ரோமர் 10:15)
2. வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றம் (அப் 1:2)
3. வெளிப்பாடு (கலா 1:11-12,16)
4. சுவிசேஷத்தின் கிரியை
(அ) தேவனுடைய சிருஷ்டிப்பு (அப் 1:20; எபி 3:9)
(ஆ) மனுஷனுடைய மீறுதல் (அப் 1:21-3:23)
(இ) தேவனுடைய அன்பும், இரக்கமும், கிருபையும் (யோவான் - 1:17; 3:16; தீத்து 2:11-12; 3:5)
(ஈ) தேவனுடைய கோபம் (ரோமர் 1:18-32)
(உ) தேவனுடைய இரட்சிப்பு (ரோமர் 1:16; 3:24-31; யோவான் 3:16; 1யோவான் 1:9)
(ஊ). தேவனுடைய திட்டம் (அப் 3:19-21;
ரோமர் 8:19-25 எபே 1:10; வெளி 21-22)
(எ) மனுஷனுடைய முடிவு - இரட்சிக்கப் படாதவர்கள் (மத் 25:4146 வெளி 14:9-11; வெளி 20:10-15), இரட்சிக்கப்பட்டவர்கள்
(யோவான் 14:1-3; வெளி 5:10; வெளி 21:1-22:5)
5. சுவிசேஷத்தின் வரலாற்று உண்மைகள்,
தீர்க்க தரிசன உண்மைகள்
(லூக்கா 24:44; 1கொரி 15:1-23)
6. சுவிசேஷத்தின் நியமனங்கள்
(அ) தண்ணீர் ஞானஸ்நானம் (மத் 28:19)
(ஆ). கர்த்தருடைய பந்தி (1கொரி 11:19-34)
7. சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுதல்
(மத் 28:19-20; லூக்கா 24:41; அப் 1கொரி 1:21)
8. சுவிசேஷத்தை உறுதிபண்ணுதல் (மாற்கு 16:15-20; ரோமர் 15:18-29 எபி 2:1-4)