எமோரியருடைய அக்கிரமம்
கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை'' (ஆதி 15:16) என்று சொல்லுகிறார்.
""எமோரியருடைய அக்கிரமம்'' என்பது கானானியருடைய பாவங்களைக் குறிக்கும். எமோரியர் அழிக்கப்படவேண்டியவர்கள். கானனியருடைய பாவங்களின் விவரம் வருமாறு:
1. ஓரினச்சேர்க்கை
(ஆதி 13:13; ஆதி 19:1-29; லேவி 18:22-30; லேவி 20:13)
2. தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியோடு சேருதல்
(லேவி 18:6-30; லேவி 20:12-23)
3. சூதகஸ்திரீயோடே சயனித்தல்
(லேவி 18:19-30; லேவி 20:18-23)
4. விபசாரம் (லேவி
18:20-30; லேவி 20:10-23)
5. விக்கிரகாராதனை (லேவி 18:21-30;
லேவி 20:2-5; உபா 12)
6. தேவனுடைய நாமத்தைப்
பரிசுத்தக் குலைச்சலாக்குதல்.
(லேவி 18:21-30)
7. மிருகத்தோடே புணருதல் (லேவி 18:23-30; லேவி 20:15-23)
8. சூனியம் (லேவி 20:6,23;
உபா 18:9-14)
9. வேசித்தனம் பண்ணுதல் (லேவி 20:1-23)
10. பெற்றோரை அவமதித்தல்
(லேவி 20:9-23)
11. கொலைபண்ணுதல் (உபா 12:31; உபா 18:9-10)
12. திருடுதல் (லேவி 19:11-13 = லேவி 20:23)
13. பொய்கூறுதல்
(லேவி 19:11-16 = லேவி 20:23).