ஆதி 15:13-16 விளக்கம்
""உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப் படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக் கடவாய்........'' (ஆதி 15:13-16) என்பது தீர்க்கதரிசன வாக்கியம்.
ஆபிரகாமின் சந்ததியார் அந்நிய தேசத்தில் இன்னும் நானூறு வருஷங்கள் தங்கியிருப்பார்கள். இஸ்ரவேலை ஒடுக்கியதற்காக எகிப்து தண்டிக்கப்படும். இஸ்ரவேலர் மிகுந்த ஐசுவரியங்களைப் பெற்றுக் கொள்வார்கள். ஆபிரகாம் நல்ல முதிர் வயதிலே அடக்கம் பண்ணப்படுவார். ஆபிரகாமின் சந்ததியார் நான்காம் தலைமுறையில் எகிப்தை விட்டு வெளியேறி எமோரியரை ஜெயிப்பார்கள்.
இந்தத் தீர்க்கதரிசனம் முழுவதும் மோசே, யோசுவா ஆகியோரின் தலைமையின்கீழ் இஸ்ரவேல் தேசத்தாருடைய வனாந்தர யாத்திரையின்போதும், கானான் தேசத்தில் குடியேறியபோதும் நிறைவேறிற்று. (யாத் 7:1-14:31; எண் 21:21-25; யோசு 12).
ஆபிரகாமின் சந்ததியார் எகிப்து தேசத்தில் 215 வருஷங்களுக்குப் பரதேசிகளாய்த் தங்கியிருப்பார்கள். (ஆதி 12:1-20; ஆதி 13:1-18; ஆதி 15:13-14; ஆதி 20:1-18; ஆதி 21:22-34; ஆதி 23:4; ஆதி 26:3-35; ஆதி 28:10; ஆதி 29:1; ஆதி 31:13-55; ஆதி 35:6; ஆதி 37:1; ஆதி 46:1-7; ஆதி 47:27; ஆதி 50:22-26 ; யாத் 1-12; எபி 11:8-10).
ஈசாக்கு பெரியவனாகி, ஆபிரகாமின் சுதந்தரவாளியாக உறுதிபண்ணப்படுகிறான். இஸ்மவேல் வெளியே அனுப்பப்படுகிறான். இக்காலத்தில் ஈசாக்கின் வயது ஐந்து. ஆதி 15:13, அப் 7:6 ஆகிய வசனங்களில் நானூறு வருஷம் என்று கூறப்பட்டிருப்பது ஈசாக்கு சுதந்தரவாளியாக உறுதிபண்ணப்பட்ட நாளிலிருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
வேறுசில வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 வருஷங்கள் பரதேசிகளாய்த் தங்கியிருப்பார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. (யாத் 12:40; கலா 3:14-17) ஈசாக்கின் ஐந்து வயதும், அவனுடைய பிறப்பிற்கு முன்பு 25 வருஷங்களும் இதில் கூட்டி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பொழுது ஆபிரகாம் கானானில் தங்குவதற்காகப் புறப்பட்டுப் போனார் (ஆதி 47:9).
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 வருஷங்கள் பரதேசிகளாய் தங்கியிருப்பார்கள் என்றும் சில வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான காலஅட்டவணையின் விவரம் வருமாறு:
1. ஆபிரகாமின் 75
ஆவது
வயதிலிருந்து ஈசாக்கின் பிறப்பு வரையிலும் - 25 வருஷங்கள்
2. ஈசாக்கின் பிறப்பிலிருந்து யாக்கோபின்
பிறப்பு வரையிலும்
(ஆதி 25:26)
- 60 வருஷங்கள்
3. யாக்கோபின் பிறப்பிலிருந்து
அவருடைய மரணம்
வரையிலும் (ஆதி 47:28) - 147 வருஷங்கள்
4. யாக்கோபின் மரணத்திலிருந்து
யோசேப்பின்
பிறப்பு வரையிலும்
(ஆதி 37:2; ஆதி 41:46; ஆதி 47:28; ஆதி 50:22) # 54 வருஷங்கள்
5. யோசேப்பின் மரணத்திலிருந்து எகிப்திலிருந்து வெளியேறிய நாள் வரையிலும் (யாத் 12:40; கலா 3:14-17) # 144 வருஷங்கள்
மொத்தம் # 430 வருஷங்கள்
""நானூறு வருஷம்'' என்பது ஆபிரகாமின் சுதந்தரவாளிகளாகவும், வித்தாகவும் ஈசாக்கு உறுதிபண்ணப்பட்ட நாளிலிருந்து நானூறு வருஷம். அது வரையிலும் ஆபிரகாமிற்கு அதிகாரப்பூர்வமாகிய வித்து இல்லை. (அப் 7:6).
""இவர்கள்
சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த வாக்கியம்
யாத் 7-14 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் வாதைகளைக் குறிக்கும்.