கனி

 


கனி

1. பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவது வாழ்வில் கனியை உருவாக்கும் (அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்) (கலாத்தியர் 5:22-23).

22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,  கலாத்தியர் 5:22

23 சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.  கலாத்தியர் 5:23

"ஆவியின் கனி" என்பது ஒருமை வாக்கியம், இது குறிப்பிடத்தக்கது - எல்லா நற்பண்புகளும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது ஒரே நேரத்தில் உருவாகின்றன.

2 நாம் இரட்சிக்கப்பட்டபின்னர் இப்பூமியில் இருப்பதன் நோக்கம் கனி கொடுப்பதற்காக (யோவன் 15:16, பிலிப்பியர் 4:17).

16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.  யோவான் 15:16

17 உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.  பிலிப்பியர் 4:17

3.நாம் தேவனுடைய வார்த்தையை கேட்பதினால் கனி கொடுக்கிறோம். (மாற்கு 4:20-28). மற்றும் அதன்படி செய்வதன் மூலம் கனிகொடுக்கிறோம். (எபிரெயர் 4:2)

20 வசனத்தைக் கேட்டு,ஏற்றுக்கொண்டு,ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்,இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார்.  மாற்கு 4:20

21 பின்னும் அவர் அவர்களை நோக்கி,விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும்,கட்டிலின் கீழாகிலும்,வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா?  மாற்கு 4:21

22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.  மாற்கு 4:22

23 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.  மாற்கு 4:23

24 பின்னும் அவர் அவர்களை நோக்கி,நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும்.  மாற்கு 4:24

25 உள்ளவனெவனே அவனுக்குக் கொடுக்கப்படும்,இல்லாதவனெவனே அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.  மாற்கு 4:25

26 பின்னும் அவர் அவர்களை நோக்கி, தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து.  மாற்கு 4:26

27 இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.  மாற்கு 4:27

28 எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும்,பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத்தானாய்க் கொடுக்கும்.  மாற்கு 4:28

2 ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது. கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.  எபிரேயர் 4:2

4.கனிகொடுக்கத்தவறும்போது, விசுவாசிக்கு தெய்வீக சிட்சைக்கு வழிவகுக்கும். மேலும் விசுவாசியின் அகால மரணம் கூட நேரிடலாம். (லூக்கா 13:6-9 யோவான் 15:2).

6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.  லூக்கா 13:6

7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன், ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.  லூக்கா 13:7

8 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும், நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,  லூக்கா 13:8

9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.  லூக்கா 13:9

2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.  யோவான் 15:2

5.கனி கொடுத்ததன் அளவைக்கொண்டே நித்தியத்தில் பிரதிபலன்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. (1 கொரிந்தியர் 3:10-15, 2 கொரிந்தியர் 5:10)

1 கொரிந்தியர் 3:10-15

10 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.

11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும். நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும். அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.

15 ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான். அவனோ இரட்சிக்கப்படுவான். அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும். 

2 கொரிந்தியர் 5:10

10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.