சுயசித்தம்

 


சுயசித்தம்

1. சுயசித்தம் என்பது தேவனுக்கு முன்பாக தெரிந்து கொள்ளும் செயல்பாட்டின் கடமையாய் இருக்கிறது.

2. தேவன் ஆதாமுக்கு ஏதேன் தோட்டத்தில் தெரிந்து கொள்ளும் ஆற்றலை அளித்தார். (ஆதியாகமம் 2:16-17).

3.தெரிந்துகொள்ளும் ஆற்றல் விசுவாசி மற்றும் அவிசுவாசியில் இருக்கிறது.(யோவான் 7:17)

4. கிறிஸ்தவத்தில் சுயசித்தம் ஒருபோதும் வற்புறுத்தப்படுவதில்லை. கீழ்ப்படிதலே காரியமாய் கொள்ளப்படுகிறது (2 கொரிந்தியர் 5:10)

5. மனிதன் தனது செயல்கள் ஒவ்வொன்றிற்கும், உத்திரவாதியாய் இருக்கிறான். மற்றும் அவன் ஒவ்வொன்றிற்கும் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். (வெளிப்படுத்தல் 20:11-15).

6. ஏனெனில் மனிதன் நியாயத்தீர்ப்புக்கு கீழ்பட்டிருக்கிறான். குறிப்பிட்ட காலக்கட்டத்தில், பிள்ளைகள் அனைவரும் தங்களது கிரியைகள் ஒவ்வொன்றிற்கும். தேவனிடம் கணக்கொப்புவித்தாக வேண்டும்.

7. வேதாகமம் சுயசித்தம் குறித்த மூன்று பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது.

a) சுவிஷேசத்தை கேட்குமுன்னர் மரிக்கும் சிசுக்களின் நிலை என்ன? அல்லது மனோரீதியான நிலையில் தீர்மானிக்க இயலாதவர்கள் நிலை என்ன? தீர்வு: (2 சாமுவேல் 12:18) தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த ஏழு நாள் சிசு இறந்துபோனது, எட்டாவது நாளில் உடன்படிக்கை உறவுக்குள் வருமுன்னர் அதாவது, விருத்தசேதனம் செய்வதற்கு முன் மரித்துப்போனது. தாவீது சொல்கிறார். நான் அந்த சிசுவினிடத்திற்கு செல்வேன், இதன் பொருள் அந்த சிசு உடன்படிக்கை அவசியமில்லாமல் இயல்பாகவே இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும்.

b) சரீர அங்கவீனம் ஒரு நபரில் சுயசித்தத்திற்கு தடை கொண்டு வரக்கூடுமா? தீர்வு: (யோவான் 9:1-7) பிறவியிலேயே குருடனாய் பிறந்த நபர் கண்பார்வையடைந்தார், இயேசு ஒருபோதும் சுயசித்தத்தை மீறவில்லை, அனால் குருடனுக்கு கண்பார்வை அளித்தார். அவர் ஒரு நபர் தேவசித்தம் செய்வதை தடைசெய்யும் தடைகளை தகர்க்கிறார். ஆனால் ஒரு நபரின் சுயசித்தம் செயல்படாதிருக்கச் செய்வதில்லை.

c) ஆவிக்குரிய நிலையில் சேதம் அடைந்துள்ள நபரின் சுயசித்தம் குறித்து வேதம் கூறுவது என்ன? தீர்வு: (ஆதியாகமம் 3:8) மனிதனின் வீழ்ச்சிக்குப்பின்னர். தோட்டத்தில் தேவனை விட்டு ஒளிந்து கொண்டிருந்த ஆதாமையும், ஏவாளையும் தேவன் கண்டு பிடித்தார், தேவன் எல்லா மனிதரையும் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு இரட்சிப்பின் தருணங்களை அளிக்கிறார்.

8.உங்களது இருதயத்தை விசுவாசிக்கவோ, அல்லது மனந்திரும்பவோ இயலாது, கடினப்படுத்த உங்களால் கூடும்.

வேதாகமத்தில் இதற்கான உதாரணங்கள்:

a) யோசுவாவின் நாட்களில் இருந்த அமோரியர்களும், கானானியர்களும். (ஆதியாகமம் 15:16).

b) யாத்திராகமத்தின் பார்வோன் (யாத்திராகமம் 7-11).

c] சிருஷ்டிகரை தொழுது சேவியாமல், சிருஷ்டிகளை தொழுது சேவிப்பவர்கள் (ரோமர் 1:1-32). மிருகத்தின் முத்திரையை தரித்துகொள்பவர்கள் (வெளிப்படுத்தல் 13:8), அ)இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவிசுவாசிகளின் பிரதிக்கிரியைகள் (வெளிப்படுத்தல் 6:16).

9. தேவனைத்தேட வாஞ்சையுள்ள நபர் அவரைக் கண்டுகொள்வார்கள். (யோவான் 7:17)

10.சுயசித்தம் ஒருபோதும் நடுநிலை வகிப்பதில்லை நீங்கள் ஒன்று தேவனுக்குக் கீழ்ப்படிகிறவராய் இருக்கவேண்டும் அல்லது அவருக்குக் கீழ்ப்படியாதவராய் இருக்கவேண்டும் (ஏசாயா 55:7-9).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.