அதிகாலையில் எழுந்தால்,
பரிசுத்த வேதத்தில் தேவனின் உதவியோடு சாதித்தவர்கள் எல்லோரும் அதிகாலையில் எழுந்தவர்கள்.
உதாரணங்கள்:-
1, ஆபிரகாமின் அதிகாலை ஜெபத்தால் லோத்துவை சோதோம் கொமார பட்டணத்தின் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டார். ஆதி 19:27
27 விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
ஆதியாகமம் 19:27
2, ஈசாக் பெயர்செபா வை உடன்படிக்கை செய்து சுதந்தரித்த நேரம் அதிகாலை. ஆதி 26:31-33
3, அதிகாலையில் கர்த்தர் மோசேக்கு ஆணையிடுதல், (என் ஜனங்களை ஆராதனைக்கு போக விடு ) யாத் 8:20
31 அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.
ஆதியாகமம் 26:31
32 அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.
ஆதியாகமம் 26:32
33 அதற்கு சேபா என்று பேரிட்டான். ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது.
ஆதியாகமம் 26:33
4,அதிகாலையில் கர்த்தர் தனது பெயரை மோசேக்கு தெரிவிக்கிறார். யாத் 34:4-6
4 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான்.
யாத்திராகமம் 34:4
5 கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.
யாத்திராகமம் 34:5
6 கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
யாத்திராகமம் 34:6
5,யோசுவா மோசேக்கு பிறகு தனது பயணத்தை அதிகாலையில் தொடங்குகிறார்.
(கானானை சுதந்தரித்தார் ) யோசுவா 3:1
1 அதிகாலமே யோசுவா எழுந்திருந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகும்முன்னே அங்கே இராத்தங்கினார்கள்.
யோசுவா 3:1
எரிகோவை வீழ்த்தியதும் அதிகாலமே. யோசுவா 6:15.
15 ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழதரம் சுற்றி வந்தார்கள். அன்றையதினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.
யோசுவா 6:15
6,கிதியோன் கண் கண்ட கர்த்தரின் அற்புதம் அதிகாலை.
தேவன் எங்கள் ஜனகளோட இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் நேரம் அதிகாலை. நியாயதி 6:38
38 அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.
நியாயாதிபதிகள் 6:38
7,தாகோன் சிலை கர்த்தருடைய பெட்டிக்கு நேராக உடைந்து நொறுங்கும் நேரம் அதிகாலை. 1சாமு 5:4
4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற் படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது. தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.
1 சாமுவேல் 5:4
8. இஸ்ரவேலின் முதல் ராஜாவை அபிஷேகம் பண்ணும் நேரம் அதிகாலை.
(கழுதையைத் தேடிச் சென்றவன் ராஜாவாக வீடு திரும்புகிறான் ) 1சாமு 9:26
26 அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான். சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.
1 சாமுவேல் 9:26
9, தாவீது முதன்முதலில் யுத்த களத்திற்கு சென்ற நேரமும் அதிகாலை.
(கோலியாத்தை முறியடித்து வெற்றியும் கண்டார் ) 1சாமு 17:20
20 தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளிவசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான். சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்துக்கென்று ஆர்ப்பரித்தார்கள்.
1 சாமுவேல் 17:20
10, யோசாபாத் அதிகாலையில் எழுந்திருந்து ஜனங்களை கர்த்தர் பக்கமாய் நடத்தினார். (எதிரிகள் விழுந்தார்கள் ) 2நாளா 20:20
20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப்புறப்பட்டார்கள், புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளை கேளுங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அவ்பொழுது நிலைப்படுவீர்கள், அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.
2 நாளாகமம் 20:20
இறுதியாக,
நமக்காக அல்ல, சுய பிரயோஜனத்திற்காக அல்ல, எல்லோரும் இரட்ச்சிக்கப்படும்படியாக நாம் எழுந்திருக்க வேண்டும். 1கொரி 10:32
32 நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல,
1 கொரிந்தியர் 10:32