உடன்படாதே
ஒருவன்மேலும் சீக்கிய
மாய்க் கைகளை வையாதே. மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே,
உன்னைச் சுத்தவனாக
காத்துக்கொள்ள. 1 தீமோ 5 : 22.
உடன்படாதிருங்கள்
1. பாவத்திற்கு உடன்படாதிருங்கள்
ஆதி 39 : 9 ,
9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
வெளி 18 : 4
4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
எரே 35 : 1 -- 19
2. இரகசிய
ஆலோசனைகளுக்கு
உடன்படாதிருங்கள்
ஆதி 49 : 5 -- 7
5 சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்கள். அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
6 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே. என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே. அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.
7 உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது: யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்.
லூக்கா 22 : 1 -- 6
3. பிணைப்படுவதற்கு
உடன்படாதிருங்கள்
நீதி 22 : 26 , 27
26 கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
27 செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
நீதி 6 : 1 -- 5
4. அந்தகாரக் கிரியை
களுக்கு உடன்படாதே
எபே 5 : 11 , 3 : 8
ரோமர் 13 : 12 -- 14
1 தெச 5 : 5 -- 8.
5 நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள். நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
6 ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.
7 தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள். வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.