உசியாவின் வாலிபம்
அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லோரும் பதினாறு வயதான
உசியாவை அழைத்து வந்து, அவனை அவன் தகப்பனாகிய
அமித்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். 2 நாளாக 26 :1.
உசியராஜாவை 15 வயதில் அதாவது
அவனது வாலிய வயதில் ராஜாவாக்கினார்கள். அவன் கர்த்த
ரை தேடும்போது அவன்
எப்படியிருந்தான் என்றும், கர்த்தரை விட்டு விலகும்போது அவன் எப்படியிருந்தானென்றும் இதில் நாம் கவனிக்கலாம்.
2 நாளாக 26ஆம் அதிகாரம்
1. உசியா கர்த்தரை தேடினவன், கர்த்தருக்கு பயந்தவன் 2 நாளாக 26 : 4
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
2. உசியா கர்த்தரை தேடியதால் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார் 2 நாளா 26 : 5
தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான், அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார்.
3. உசியாவுக்கு தேவன் துணையிருந்ததால் அவன் எங்கும் வெற்றி வாகை சூடினான். 2 நாளா 26 : 7
பெலிஸ்தரையும் கூர்பகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.
4. உசியா கீர்த்தி பெற்றவன்
2 நாளா 26 : 8
அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள், அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது, அவன் மிகவும் பெலங்கொண்டான்.
5. உசியாவிற்கு ஐசுவரியமும் மகிமையும் உண்டாயிற்று 2 நாளாக 26 : 10
அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளிகளிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான், அவன் வெள்ணாண்மைப் பிரியனாயிருந்தான்.
கர்த்தரை விட்டு விலகிய உசியா
1. கர்த்தரைவிட்டு அவன் விலகியபோது அவன் இருதயம் மேட்டிமையடைந்தான் 2 நாளா 26 :16
16 அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும் அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
2 நாளாகமம் 26:16
2. தேவ கட்டளையை மீறி தூபங்காட்டின தால் தேவ கோபத்தை பெற்றான் 2 நாளாக 26 : 17
17 ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,
2 நாளாகமம் 26:17
3. உசியா ராஜ்ஜிய பதவி இழந்தான் 2 நாளாக 26 : 17
17 ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,
2 நாளாகமம் 26:17