சபை ஒழுங்கு
1.சபைக்குள் வேத வசனங்களுக்கு கீழ்ப்படியாதவர்களை முதலாவது அவர்களை எச்சரிக்க வேண்டும், பின்னர் அவர்களை கடிந்துகொள்ள வேண்டும் (தனிப்பட்ட நிலையில் அத்தவறுகளை செய்திருப்பாரெனில் தனிப்பட்ட நிலையில் எச்சரித்து கடிந்து கொள்ள வேண்டும், பொதுவாய் எல்லார் முன்னிலையில் செய்திதுப்பார் எனில் எல்லார் முன்னிலையில் எச்சரித்து கடிந்துகொள்ளபடுதல் வேண்டும்) 2 தெசலோனிக்கேயர் 3:14, தீத்து 1:13, 14.
2. பின்னரும் சத்தியத்திற்கு கீழ்படியாமல் மீறி நடக்கும் தனிப்பட்ட நபரை சபை ஐக்கியத்தை விட்டு புறம்பாக்க வேண்டும், சபையின் மற்ற அங்கத்தினர் அத்தகைய நபரிடமிருந்து தங்களது ஐக்கியத்தை விலக்கிக்கொள்ள வேண்டும். 1 தீமோத்தேயு 6:3-5.
3. பின்னரும் அவர்களில் ஒரு மாற்றம் காணப்படவில்லையானால் அப்படிப்பட்டவர்களை முழுவதுமாய் (நிரந்தரமாய்) ஐக்கியத்திலிருந்து விலக்கிவிட வேண்டும். தீத்து 3:10 கலாத்தியர் 1:6-10.
4.பவுல் தவறான போதனை குறித்து எச்சரிப்பு கொடுக்கிறார். 1 தீமோத்தேயு 1:4.11. இம்மனேயு, அலெக்சாந்தர் இவ்விருவரையும் தவறான போதனை கொடுத்ததினிமித்தம் அவர்கள் சத்தியத்தை அறியவும், தூஷணங்களை நிறுத்தவும் அவர்களை சபையிலிருந்து வெளியேற்றினார். 1தீமோத்தேயு 1:18-20
5.சபைக்கு புறம்பாக்குதல் தற்காலிகமாயிருக்கிறது, இது அந்நபர் மனந்திரும்பாதவரை நீடிக்கும், அவர் மெய்யாய் மனந்திரும்பி வருவாரேயானால் அவரை கெட்ட குமாரனைப்போல மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். லூக்கா15:11-32, விபச்சாரத்தில் உள்ள மனிதனுக்கும் அப்படியே செய்யப்படவேண்டும். 1 கொரிந்தியர் 5:1-13, 2 கொரிந்தியர் 25-11,