சரீரமும் கிறிஸ்துவின் மணவாட்டியும்

 சரீரமும் கிறிஸ்துவின் மணவாட்டியும்


1.கிறிஸ்துவின் சரீரம் சபை யுகத்தில் பூமியில் வடிவமைக்கப்படுகிறது. (எபேசியர் 1:22 23, 2:16, 4:4-5, 5:23, GanGunlu 1:18, 1:24, 2:19).


2.சபை யுகத்தில், கிறிஸ்துவின் சரீரத்தில் சேரவேண்டிய அனைத்து விசுவாசிகளும் சேர்க்கப்பட்டு கிறிஸ்துவுடன் இணையும் போது முழுமை அடைகிறது. (1 கொரிந்தியர் 12:12-14) 


3.கிறிஸ்துவின் சரீரம் முழுமையடையும் போது, சபை எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்கும். (1 தெசலோனிக்கேயர் 4:16-18, 1கொரிந்தியர் 15:51-7, ஒப்பிட்டுப்பார்க்க வெளிப்படுத்தல் 19:6-8, சகரியா 13:2 மற்றும் 1தெசலோனிக்கேயர் 3:13)


4. பூமியில் உபத்திரவ காலத்தின் போது பரலோகில் கிறிஸ்துவின் மணவாட்டி உடுத்துவிக்கப்படுவாள்.


a) உயிர்த்தெழுந்த சரீரம் இறுதி பரித்தமாக்கப்படுத்துதல் (1 கொரிந்தியர் 15:51-7, பிலிப்பியர் 3:21, 1 யோவான் 3:1,2). 


b) எல்லா மனித நல்லவைகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, மணவாட்டி ஆயத்தப்படுத்தப்படுகிறாள். (1 கொரிந்தியர் 3:12-15) c) மணவாட்டி இனி ஒருபோதும் பாவத்தன்மையுடையவளாக இருக்கமாட்டாள். (வெளிப்படுத்தல் 19:7-8)


5. மணவாட்டி வெற்றி வாகை சூடப்பட்டு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவருடன் பூமிக்குத் திரும்புவாள் (1 தெசலோனிக்கேயர் 3:13)


6. பூமிக்குத்திரும்பிய மணவாளன் மணவாட்டியினால் நியாயத்தீர்ப்பு நடைபெரும் (சங்கீதம் 110:1)


a) பிசாசுகளை ஆயுதமிழக்கச்செய்தல் (கொலோசெயர் 2:15)


b) சாத்தான் 1000 ஆண்டுகள் சிறைவைக்கப்படுதல் (வெளிப்படுத்தல் 20:1-3) 


c) இயேசுக்கிறிஸ்து பிசாசுகளை சிறையில் தள்ளுதல் (சகரியா 13:2, கொலோசெயர் 2:15, 1 கொரிந்தியர் 15:24,25)


7. மணவாளனாகிய இயேசுக்கிறிஸ்து இவ்வுலகின் ராஜாவாக முடிசூடப்பட்டு, ராஜரீகம் 

செய்தல் (வெளிப்படுத்தல் 19:5)


8. ஆட்டுக்குட்டியானவரின் கலியான விருந்து (வெளிப்படுத்தல் 19:7-9)


a) திருமணம் பரலோகில் நடந்தது, திருமண விருந்து பூமியில் நடந்தது. (மத்தேயு 25:1-13)


b) திருமண விருந்தைக்குறித்து விரிவான விளக்கம் (வெளிப்படுத்தல் 19:6-9)


c) திருமண விருந்தில் பங்குபெறுபவர்கள் நான்கு குழுவினர்


  •  i) மணவாளன் - இயேசுக்கிறிஸ்து

  • ii) மணவாளனின் தோழர்கள் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் (யோவான் 3:29) 

  • ii) மணவாட்டி -சபை யுக விசுவாசிகள்

  • iv) மணவாட்டியின் தோழர்கள் - உபத்திரவ கால விசுவாசிகள், மணவாட்டியை அறிந்து விசுவாசிகளானவர்கள். (மத்தேயு 25:1-13)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.