குருட்டு மனிதர் இரட்சிப்பை படம்பிடித்துக்காட்டுகிறார்
1.குருடன் குணமாக்கப்பட்டது (யோவான் 9:1-13) இரட்சிக்கப்படாத அனைவரின் நிலைக்கு இணையானது. இதில் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது என்னவெனில், பிறப்பிலேயே பார்வையை இழந்து பிறவி குருடனாய் பிறந்தவனைத்தான் இங்கு காண்கிறோம். கண்ணிருந்தும் அதில் உள்ள புறையை (கேட்ராக்ட்) நீக்கும் செயல் அல்ல, பார்க்கும் கண்களை சிருஷ்டிக்கும் செயல் இங்கு நடை பெறுவது.
2.அவன் தேவாலயத்துக்கு புறம்பே, ஓர் அவிசுவாசியைப்போல, தேவனுடன் உள்ள ஐக்கியத்திற்கு அந்நியனாக இருக்கிறான். (எபேசியர் 2:12)
3. அவன் கண்களை இழந்தவன் அவனால் பார்க்கமுடியாது. அவிசுவாசிகளாய் இருக்கும் வரை நாம் சுவிஷே சத்திற்கு குருடராய் இருக்கிறோம். (1 கொரிந்தியர் 2:14 2கொரிந்தியர் 4:3,4),
4.அவன் பிறவியிலேயே குருடனாய் இருந்தான். எல்லா மக்களும் பிறவியிலேயே பாவத்தில் பிறந்திருக்கிறார்கள், (எபேசியர் 2:1)
5. அவன் மனித உதவிக்கு அப்பாற்பட்டவனாய் இருந்தான், பூமியில் அவனுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை (எபேசியர் 2:12) பிறவிக் குருடனாய் பிறந்தவனுக்கு ஒரு நம்பிக்கையும் இல்லை. பாவத்தை அகற்ற மனித உபாயங்கள் ஒன்றுமில்லை. மனிதன் அதற்காக ஒன்றும் செய்ய இயலாது.
6. அவன் ஒரு பிச்சைக்காரன் அவன் குணமாக ஒன்றும் கொடுக்க இயலாது. கிருபையில் நாமும் கூட, இரட்சிப்புக்காக ஒன்றும் கொடுக்க இயலாதவர்களாய் இருக்கிறோம். (எபேசியர் 2:8-9)
7. அவன் வாய்மொழியாக எவ்வித முறையீடும் செய்யவில்லை. அவன் கர்த்தரால் கண்டுகொள்ளப்பட்டான், நாமும் அவரண்டை இழுக்கப்பட்டது போல (யோவான் 6:44)
8. கர்த்தர் அவனைக்கண்டுகொண்டு அவனை இரட்சித்தார். பரிசுத்தாவியானவர் நம்மை அழைக்கிறவராய் இருக்கிறார்.
9. எந்த ஜனமும் அவனுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டவில்லை, பரிசேயர்கள் அவனை புறக்கணித்தனர். சீஷர்கள் அவனைக்கண்டு இறையியல் விவாதம் செய்தனர். ஆனால் கர்த்தர் அவனைத்தொட்டு குணமாக்கினார். (யோவான் 3:16)
10. அவன் மாற்றப்பட்டான். அவன் புது மனிதனான். (கொலோசியர் 1:10; 1தெசலோனிக்கேயர்2:12: 1யோவான் 1:7)
11.நாம் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை சந்திக்கும் பொழுது, நாம் மாற்றப்படுகிறோம். இது ஒரு நல்ல இரட்சிப்பின் செய்தி அடங்கிய வேதபகுதி.