கிளை: கிறிஸ்து சித்தரிக்கப்படுதல்

 கிளை: கிறிஸ்து சித்தரிக்கப்படுதல்


1. கிறிஸ்து நான்கு வழிகளில் கிளை என அறியப்படுகிறார், நான்கு சுவிஷேசங்களும் அவரைக் கிளை என காட்டுகிறது.


a) மத்தேயு சுவிஷேசம் இயேசுக்கிறிஸ்துவை இஸ்ரவேலின் ராஜாவாக முக்கியப்படுத்திக் காட்டுகிறது. இயேசுக்கிறிஸ்து தாவீதின் கிளை என அழைக்கப்படுகிறார். (ஏசாயா 11:1; எரேமியா 23:5; எரேமியா 33:15) இஸ்ரவேலின் ராஜாவாக வரப்போகிறார் என்பது ஆயிர வருட அரசாட்சியில் நிறைவேறும். 


b) மாற்கு சுவிஷேசம் இயேசுக்கிறிஸ்துவை பாடு அனுபவிக்கும் ஊழியக்காரனாகக் காண்பிக்கிறது. இயேசு கிளை எண்ணப்பட்டவராகிய என் தாசன் என அழைக்கப்படுகிறார். (சகரியா 3:8) முதன் முறையாக இயேசு மனிதனாய் இப்பூமிக்கு வந்தபோது இது நிறைவேறிற்று. (ஏசாயா 53


c) லூக்கா சுவிஷேசம் இயேசுக்கிறிஸ்துவை பரிபூரண மனிதனாகக் காட்டுகிறது. சகரியாவில் இயேசு ஒரு புருஷன் அவர் நாமம் கிளை என்பது" எனக்கூறுகிறது. (சகரியா 6:12) இது ஆயிரவருட அரசாட்சியில் இயேசுவின் ஆமுகயை குறித்து கூறுகிறது.


 d) யோவான் சுவிஷேசம் இயேசுக்கிறிஸ்துவை தேவனாய் கூறுகிறது. இயேசு "கர்த்தரின் கிளை" என அழைக்கப்படுகிறார். (ஏசாயா 4:2) மற்றும் தேவன் நம்மோடு இருக்கிறார் - இம்மானுவேல் எனவும் குறிப்பிடப்படுகிறார். (ஏசாயா 7:14)


 2. தவறான கிளை ஐரோப்பா தேசத்தில் ஒவ்வொரு கிறிஸ்மஸ் நாளிலும் ஓர் குறிபிட்ட பசுமயான மரத்தின் கீழ் நின்று, ஒருவரையொருவர் முத்தமிட்டு, தங்கள் ஒப்புரவாகுதலை தெரிவிப்பது பொதுவான பழக்கமாய் இருந்து வருகிறது. இப்பசுமையான, மரம் கிளை என அழைக்கப்படுகிறது. இது உண்மையான கிளை அளிக்கும் மெய்யான ஒப்புரவாகுதலை, தவறான வழியில் பரிகசிப்பதாய் இருக்கிறது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.