கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்படுதல்
1. வேதவசனம்: (கலாத்தியர் 2:20)
2.பரிசீலனை செய்தல் அல்லது இயல்பான மொழிபெயர்ப்பு:
a) "கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டேன்" நான் கடந்த காலத்தில் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டு இருந்தேன் அதன் விளைவு நான். எப்பொழுதும் கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். இது அவருடன் இனங்கண்டு கொள்ளப்படுதலையும், அவரது மரணத்தையும் தெரிவிக்கிறது.
செயப்பாட்டு வினை: சிலுவையில் அறையப்படுதலை நான் பெற்று இருக்கிறேன் (இது இரட்சிப்பின் போது நிகழ்வது) நாம் சிலுவையில் அறையப்பட்டபின்னர், நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவர்களாயிருக்கிறோம். காரணம் கிறிஸ்து அவைகளை நிறைவேற்றி விட்டார். (மத்தேயு 5:17). நாம் ஜெயம்பெற்றவர்களாய் இருக்கிறோம். (1 யோவான் 5:4,5)
b) "இனி நான் அல்ல" - ஜீவிப்பது நான் அல்ல, எனது பழைய ஜீவிதம் மற்றும் சுயம் மரித்துவிட்டது.
c) கிறிஸ்துவே எனக்குள் பிழைத்து இருக்கிறார் கிறிஸ்து தொடர்ந்து என்னில் வாழ்கிறார். (கலாத்தியர் 4:19), கிறிஸ்து நம்மில் வாழ்வது ஐக்கியத்திற்காக கூட - (வெளிப்படுத்தல் 3:20, யோவான் 14:20, 2 கொரிந்தியர் 13:5, ரோமர் 8:10, கலாத்தியர் 1:27)
3. நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும் ஒரே வழி இயேசுக்கிறிஸ்துவின் குணநலன்களால், அமையப்பெற்ற விசுவாசி பரிசுத்த ஆவியானவரின் ஊழியங்களால் அதை நிறைவேற்றமுடியும்.(ரோமர் 8:2-4). நமது சொந்த பெலத்தால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற முடியாது, காரணம் நாம் பாவ சுபாவத்தை பெற்று இருக்கிறோம்.