Type Here to Get Search Results !

ஆபிரகாமின் உடன்படிக்கை

 ஆபிரகாமின் உடன்படிக்கை:


1ஆபிரகாமோடு தேவன் செய்த உடன்படிக்கை ( ஆதியாகமம் 12:1-3). இஸ்ரவேல் தேசத்தைக் கண்டுகொள்ளுதல்


2.ஆபிரகாமுடன் உறுதி செய்யப்படுகிறது, மற்றும் அவருடன் அதேசத்தைக்குறித்து வலியுறுத்தப்படுகிறது( ஆதியாகமம் 13:14-18), ஆவிக்குரிய வித்து (ஆதியாகமம் 15:1-6) அதன் நித்தியதன்மை (ஆதியாகமம் 17:6-8),


3. இது ஒரு நிபந்தனையற்ற உடன்படிக்கையாயிருக்கிறது - தேவன்தாமே நிறைவேற்றுவார். ( தேவன் ஆபிரகாமை அயர்ந்த நித்திரை யடையச்செய்து அவர் தனித்து அவன் செய்த உடன்படிக்கையை அங்கீகரித்தார். ஆதியாகமம் 15:12-18).


4. கீழ்க்கண்டவாறு ஏழு உடன்படிக்கைகள் நிறைவேறி இருக்கின்றன; (ஆதியாகமம் 12:1-3)


அ) "நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன்"


நிறைவேறுதல்: யூதர்கள் (ஆதியாகமம் 13:16; யோவான் 8:37), அரேபியர்கள் (ஆதியாகமம் 17:20), கிறிஸ்துவுக்குள் (ரோமர் 4:16-17, 9:7-8; கலாத்தியர், 3:7,29).


ஆ) வாக்குத்தத்தம்: "நான் உன்னை ஆசீர்வதிப்பேன்".


நிறைவேறுதல்: ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்படுதல் ( ஆதியாகமம் 13:14-17, 15:18-21. 24:35), கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் ஆசீர்வதிக்கப்படுதல் (ரோமர் 4:16-17,9:7-8; கலாத்தியர் 3:7,29),


இ) வாக்குத்தத்தம்: உன் பெயரைப் பெருமைப் படுத்துவேன்"


நிறைவேறுதல்: ஆபிரகாம், சிறிஸ்தவர்களால் மட்டுமல்ல யூதர்களாலும், இஸ்லாமியர்களாலும் அறியப்பட்டவர்.


ஈ) வாக்குத்தத்தம்: "நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்"


நிறைவேறுதல்: கிரியைகளுடன் நிறைவேற்றப்பட்ட ஆபிரகாமின் வித்தாகிய இயேசுக்கிறிஸ்து ஆசீர்வாதமாய் இருந்தார். (கலாத்தியர்3:13,14).


உ) வாக்குத்தத்தம்: "உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன்"


நிறைவேறுதல்: அநேக தேசங்கள் உருவானதின் மூலம் இதை நாம் காணமுடிகிறது, உ ம் 19 ம் நூற்றாண்டில் உருவான பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு உருவானது.


ஊ) வாக்குத்தத்தம்: "சபிக்கிறவர்களை சபிப்பேன்",


நிறைவேறுதல்: அர்மதாவுக்குப் பின்னர் சரிவடைந்த ஸ்பானிஷ் சாம்ராஜ்யம், நாஜி ஜெர்மனியின் வீழ்ச்சி, ரஷ்யாவின் ஜார்ஸின் வீழ்ச்சி, எகிப்தை விட்டு இஸ்ரவேலர் பிரயாணப்பட்ட பின்னர் அவர்கள் சரிவடையத் தொடங்கினர்.


வேதாகம உதாரணங்கள்: (உபாகமம் 30:7; ஏசாயா 14:1-2; யோவேல் 3:1-8; மீகா 5:7-9; ஆகாய் 222; சகரியா 14. 1-3; மத்தேயு 25:40-46)


எ) வாக்குத்தத்தம்: "பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்"


நிறைவேறுதல்: ஆபிராகாமின் குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவுக்குள் முழு உலகமும் ஆசீர்வாதம் பெற முடியும். (யோவான் 8:56-58; கலாத்தியர் 3:16). 


5. நாம் யூதர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டும், காரணம் மேற்கண்ட சத்தியங்கள் நமக்கு தெளிவை ஏற்படுத்துகிறது மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களை நாம் பெற்று அனுபவிக்க அது ஏதுவுண்டாக்குகிறது.

Post a Comment

0 Comments