உடன்படிக்கைகள்
1.உடன்படிக்கை என்பது தேவனுக்கும், மனிதனுக்கும் இடையேயான ஒப்பந்தம் அல்லது உடன்பாடாய் இருக்கிறது.
2. சில உடன்படிக்கைகள் நிபந்தனையற்றவைகள் - தேவன் அவைகளை நிறைவேற்றுவார், மனிதனின் கீழ்ப்படிதல் பொருட்படுத்தப் படவில்லை. மற்ற உடன்படிக்கைகள் நிபந்தனைக்குட்பட்டவைகள் அவைகளுக்கு மனிதரின் கீழ்படிதல் அவசியம்.
3. வேதத்தில் உள்ள எல்லா உடன்படிக்கைகளுக்கும், கிறிஸ்துவே மையமாய் இருக்கிறார்.
8) ஏதேனின் உடன்படிக்கை: கிறிஸ்து இரண்டாம் ஆதாமாயிருக்கிறார். (1 கொரி 15:45 - 47).
b) ஆதாமின் உடன்படிக்கை: கிறிஸ்து ஸ்திரீயின் வித்தாயிருக்கிறார். (ஆதி. 3:15),
c) நோவாவின் உடன்படிக்கை: கிறிஸ்து சேமின் வம்சத்தில் எல்லாரிலும் பெரிய குமாரனாய் இருக்கிறார். (லூக்கா 3:36; ஆதி, 9:23-27).
d) ஆபிரகாமின் உடன்படிக்கை: யாரிடத்தில் தேவன் உடன்படிக்கையை ஏற்படுத்தினாரோ அவர்களது வித்தாக கிறிஸ்து இருக்கிறார். (ஆதி 22:18).
உ) மோசேயின் உடன்படிக்கை: கிறிஸ்து இந்த உடன்படிக்கையை நிறைவேற்றினார்.(LDC 5:17).
f) பாலஸ்தீனிய உடன்படிக்கை: கிறிஸ்து யூதனாய் அத்தேசத்தில் வாழ்ந்து, அத்தேசத்தை சுதந்தரித்துக்கொள்வார்,
g) தாவீதின் உடன்படிக்கை: கிறிஸ்து யூதர்களின் ராஜாவாயிருந்து, சதா காலங்களிலும் அரசாளுவார். (லூக்.1:31-33; யோவ 19:19-22),
h) புதிய உடன்படிக்கை: கிறிஸ்துவின் தியாகபலி இதன் அஸ்திபாரமாய் இருக்கிறது.
மற்றும் ஆயிர வருட அரசாட்சியில் இது வலியுறுத்தப்படும் (1 கொரி 11:25).