அற நிலையம் அல்லது தர்ம ஸ்தாபனம்

 அற நிலையம் அல்லது தர்ம ஸ்தாபனம்


1.தேவன் எப்பொழுதும் தேவை நிறைந்த ஏழைகள், பலவீனர், ஒடுக்கப்பட்டோர் போன்றோரைக்குறித்து அக்கறை உள்ளவராக இருக்கிறார். யாத்திராகமம் 22:21-27, உபாகமம் 15:11, 24:14, 15.


2. அநாதைகள், விதவைகள் இவர்கள் மீது ஆரம்பத்திலிருந்தே தேவன் விஷேச கவனம் செலுத்தி வருகிறார். உபாகமம்10:18 எசேக்கியேல் 22:7.


3. தேவன் ஏழைகளை குறிப்பிட்டு, அவர்களது சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்கிறார் மத்தேயு11:28-30, லூக்கா 4:18,6:20


4. விழுந்து போன உலகில் ஏழைகளாய் இருக்கும் ஜனங்கள் இருக்கின்றனர் என தேவன் இனங்கண்டுகொள்கிறார். மத்தேயு26:11, மாற்கு 14:7.


5. அநேக ஆதி சபையினர் தங்களது உலக சொத்துக்களை விற்று, தேவையுள்ள மற்ற கிறிஸ்தவர்களுக்கு கொடுத்து வந்தனர் அப்போ 4:32-37,


6. சபை ஏழைகளுக்கு அநுதினமும் சபை மூப்பர்கள் மூலம் அவர்களது அன்றாடத் தேவகளை சந்தித்து வந்தனர். ரோமர் 15.26, கலாத்தியர்2:10, யாக்கோபு 2:2-7.


7. ஜனங்கள் வேலை செய்கிறவர்களாயிருந்து அவர்கள் ஏழைகளாய் இருந்தார்களானால், அவர்களிடமிருந்து சபை ஒன்றையும் எதிர்பார்ப்பது இல்லை 1 தெசலோனிக்கேயர் 2:9-12, 2 தெசலோனிக்கேயர் 3:7-12. 


8. ஓர் விதவைக்கு சபையிலிருந்து தான தர்மம் அவசியப்பட்டால் அவளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து 1 தீமோத்தேயு 5 ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.


a) விதவைக்கு பிள்ளைகளோ, பேரப்பிள்ள்கள் இருப்பார்களெனில் அப்படிப்பட்ட விதவைக்கு, சபையிலிருந்து தான தர்மம் வழங்கப்பட மாட்டாது, அவளது உறவினர் அவர்கள் சொந்த குடும்பத்தை பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். வச. 4


b) ஓர் விதவை கர்த்தரது வேலையில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு ஜெபிப்பாள் என்றால் அவள் உதவிக்கு தகுதியுள்ளவள் வச. 5


 c) அவள் சுகபோகமாய் வாழ்ந்து, ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளதிருப்பாள் எனில், அவளுக்கு ஒரு உதவியும் சபையிலிருந்து செய்யப்படமாட்டாது, வச. 8. 


d) அவள் 60 வயதுக்கு மேற்பட்டவளாய் இருக்கவேண்டும். குற்றம் சாட்டப்படாதவளாயும், ஒரே புருஷனுடன் வாழ்ந்தவளாய் இருக்க வேண்டும்.வச.9.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.