கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் Lyrics with karaoke

 

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் Lyrics


கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

நேசரின் கரங்களே தேற்றுமே

இயேசுவின் காயங்கள் ஆற்றுமே


சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்

உடைந்து போன உன்

நெஞ்சம் காண்கிறார்

அழைத்த தேவன் உன்னை

நடத்திச் செல்வார்

கண்ணீரை துடைப்பார்

கவலைகள் மாற்றுவார்

புது ஜீவன் ஊற்றுவார்

புது சிருஷ்டியாக்குவார்


அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்

அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்

நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்

நிச்சயம் பலன் தருவார்

வியாதியில் சுகம் தருவார்


துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை

தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை

வாழும்தேவன் உன்னை காத்துக்கொள்வார்

இயேசுவின் மகிமையுமே

உன்னிலே வெளிப்படும்

சீக்கிரம் நீங்கிடும் இந்த

லேசான உபத்திரவம்


பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்

கதறிஅழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்

தாயைப்போல உன்னை தேற்றிடுவாரே

ஒரு தந்தையைப் போல உன்னை

ஆற்றிடுவாரே – இழந்த உறவாக

உன்னோடு வாழ்ந்திடுவாரே

கரம் பற்றி எந்நாளும்

உன்னோடு நடந்திடுவார் 

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் karaoke


You have to wait 40 seconds.

Download Timer

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.