அரிமத்தியா யோசேப்பு :
"அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவி -லிருந்து வந்தவனும், தேவனுடைய இராஜ்யத்திற்குக் காத்திருந்-தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம் -மதியாதவனுமாயிருந்தான்" (லூக் 23:51).
வேறு யாரும் செய்ய முன் வராத இந்த வேளைக்கு இதோ நான் வருகிறேன் என்று சொல்லி, யாரும் செய்ய விரும்பாத அந்த வேளையை முழு மனத் திருப்தியோடு செய்து முடித்தவன் தான் இவன். இவனின் பெயர் யோசேப்பு. இவன் செய்த வேலை, இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ணினது.
ஆம், இயேசு உயிரோடு இருக்கும் போது அவருக்கு உதவி செய்ய பலரும் பல விதங்களில் முன் வந்தனர். ஒருவன் மீனைக் கொடுத்தான், மற்றொருவன் அப்பத்தை கொடுத்தான், ஒரு பெண் விலையேறப் பெற்றதைலத்தை கொடுத்தாள். சீஷர்கள் இயேசு -வுக்கு தங்கள் படகை கொடுத்தனர். இப்படியாக அவர் உயிரோடு கூட இருக்கும் போது உதவி செய்தவர்கள் பலர். பலர். ஆனால், அவர் இறந்த போதோ அவருடைய சரீரத்தை அடக்கம் பண் -ணவோ, முறைமைகளை நிறைவேற்றவோ யாருமே முன் வர -வில்லை. அப்போதுதான் யாருமே அழைக்காமல் தானாகவே மனமுவந்து முன் வந்து இயேசுவின் சரீரத்தை சகல முறைமை -களின்படியும் அடக்கம் பண்ணினான். இந்த யோசேப்பு “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது" (பிர 7:8) என்றவசனத்தின்படி, யோசேப்பு இயேசுவுக்குச் செய்த செயல் நல்லதாக முடிந்தது, அவனுடைய பெயரும் வேதத்தில் இடம் பிடித்து, இப்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
a.பெயரும் - ஊறும்
யோசேப்பு என்கிற பெயர் கிறிஸ்தவர்களுக்கும், ஜோசப் என்கிற ஆங்கில பெயர் மற்றவர்களுக்கும் நன்றாக பரிச்சயமான பெயராகும். அதிலும் விசேஷமாக பலருக்கும் இரண்டே இரண்டு யோசேப்புகளைத்தான் தெரியும். ஒன்று முற்பிதாக்களில் ஒருவ னாகிய யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு, மற்றொருவன் கன்னிமரியாளின் புருஷனாகிய யோசேப்பு. இவர்கள் மட்டுமல்லா -மல் பரிசுத்த வேதாகமத்தில் ஏறத்தால பதினொரு யோசேப்புகள் உண்டு.
1. யாக்கோபின் மகனாகிய யோசேப்பு (ஆதி 30:24)
2. யோசேப்பின் சந்ததியாரைக் குறிப்பிடும் (உவமை) வார்த்தை (உபா 33:13)
3. கானானை சுற்றிப் பார்க்க அனுப்பப்பட்ட இசக்கார் கோத்திரத்துப் பிரபுவாகிய ஈகாலின் தகப்பன் (எண் 13:7)
4. ஆசாப்பின் வசத்திலிருந்த ஒருவன். முதல் சீட்டைப் பெற்றவன் (1நாளா 25:9)
5. யொயகீமின் நாட்களில் பிதா வம்சத் தலைவனாயிருந்த ஆசாரியன் [நெகே 12:14)
6. இயேசுவின் தாயாகிய மரியாளின் புருஷன் (மத் 1:16)
7. இயேசுவின் வம்ச அட்டவணையில் இடம் பிடித்த மத்தத்தி -யாவின் குமாரன் (லூக் 3:25)
8. இயேசுவின் வம்ச அட்டவணையில் யூதாவின் குமாரன் (லூக் 3:26)
9. இயேசுவின் வம்ச அட்டவணையில் யோனானின் குமாரன் (லூக் 3:30)
10. யூதாஸ்காரியோத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட சீட்டு போடப்பட்ட இருவரில் ஒருவன். இவனுடைய மறுபெயர் "பர்சபா” (அப்1:23)
11. இயேசுவின் சரீரத்தைக் கேட்டு வாங்கின இவன் ஐசுவரிய -வானும், இயேசுவின் அந்தரங்க சீஷனுமாயிருந்த அரி -மத்தியா ஊரான் (மத் 27:57)
மேற்கண்டவர்களில் பதினொறாவது இடம் பிடித்த யோசேப்பு -தான். புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்ததகங்களின் கடைசிப் பக்க கதாநாயகன் ஆவான். இந்த யோசேப்பைக் குறித்து சொல் -லாமல், அல்லது பேசாமல் இயேசுவின் மரணம் முழுமைப் பெறாது. ஊழியர்களின் பிரசங்கமும் நிறைவு பெறாது.
இவனுடைய முழுமையான பெயர் அரிமத்தியா யோசேப்பு என் -பதாகும். அரிமத்தியா என்பது அவனுடைய ஊர் பெயராகும். அரிமத்தியா என்றால் உயர்ந்த என்ற அர்த்தத்தையுடையதாகும். அர்த்தத்தின்படியே அந்த ஊர் ஓர் உயர்வான ஊராகும். அதாவது, சாமுவேல் தீர்க்கதரிசியின் ஊராகிய ராமாவின் மறு பெயர்தான் அரிமத்தியா. அரிமத்தியா என்கின்ற ராமாவை தற்காலத்தில் "ராமே” என்று அழைக்கின்றனர். தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் ஊரிலிருந்து யோசேப்பு வந்தபடியினால், நிச்சயமாக சாமுவேலைப் போலவே வைராக்கியமுள்ளவனாகத்தான் யோசேப்பு இருந்திருப் -பான். சாமுவேலை போல தீர்க்கதரிசனமும், யோசேப்பைப் போல வைராக்கியமும் அரிமத்தியாவைப் போல உயர்ந்த, மற்றும் உயர்வா -னவர்களும் இந்நாட்களில் தேவை. அப்போதுதான் நாம் வாழும் பட்டணங்களும் அரிமத்தியாவாக மாறும்.
அரிமத்தியா ஊர்க்காரன் என்றால் துணிவுள்ளவன் என்று அர்த்தம் (மாற் 15:43). யோசேப்பு பிலாத்துவினிடத்தில் துணிந்து போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டுள்ளான். அரிமத்தியனாகிய யோசேப்பின் துணிவை நேரில் கண்டபடியினால்தான் பிலாத்து எந்த பதிலும் சொல்லாமல் அனுமதியைக் கொடுத்துள்ளான். இயேசுவின் பிள்ளைககள் என்றால் கோழைகள் கிடையாது, துணிவுள்ளவர்கள் என்பதைத்தான் இந்த சம்பவம் நிரூபிக்கிறது.
அரிமத்தியா ஊர்க்காரன் என்றால் ஆலோசனைக்காரன் என்றும் பொருள்படும். ஏனென்றால், இவனுக்கு ஆலோசனைக் -காரன் என்கிற விஷேச பெயரும் உண்டு (லூக் 23:50). அதே சமயம், இவனுடைய ஆலோசனைகள் அனைத்தும் நீதி நிறைந்த -தாக இருந்தது. ஆனபடியினால்தான் அரிமத்தியா ஊரில் வாழ்ந் -தவர்களில் இவன்தான் நீதிமான் என்ற பெயரைப் பெற்றான்.
அரிமத்தியா ஊர்க்காரன் என்றால், தேவனுடைய ராஜ்யம் வரு -வதற்கு காத்திருக்கும் பொறுமைசாலி என்னும் பழமொழியையே இவன் உருவாக்கி விட்டான். இயேசு என்பவர் வருவார். அவர் மரிப்பார், பின்பு ஒரு நாள் தேவனுடைய இராஜ்யம் முழுவதும் இந்த பூமிக்கு இறங்கி வரும் என்ற மேலான தரிசனமுள்ளவனாக இருந்துள்ளான். "முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்" (மத் 6:33) என்ற வசனத் -துக்கு சொந்தக்காரனாகவும் மாறி விட்டான். இப்படியாக, அரி-மத்தியா என்ற ஊரால் யோசேப்புக்கும், யோசேப்பால் அரிமத்தியா என்கிற ஊருக்கும் புகழ்ச்சியும் கனமும் உண்டானது.
b. அடையாளங்கள்:
இயேசுவின் சரீரத்தை தன் கைகளினால் தொட்ட யோசேப்-புக்கு பல அடையாளங்கள் உண்டு என்று வேதம் சொல்கின்றது.
"அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா" (மத் 16:3) என்று இயேசு கேட்டார். அப்படியானால் யோசேப்பு போன்றசில நல்ல மனிதர்களின் வாழ்க்கையை குறித்த அடையாளங்களை கவனித்துப் பார்ப்பது தவறல்ல. இயேசுவே தன்னுடைய ஊழியத் -தையும், வசனங்களையும் அடையாளத்தினாலேதான் உறுதிபடுத் -தினார்.
1] இயேசுவுக்குச் சீஷன்
மத் 27:57
2] ஐசுவரியவான்
மத் 27:57
3) கனம்பொருந்தியவன்
மாற் 15:43
4) ஆலோசனைக்காரன்
லூக் 23:50
5) உத்தமன்
லூக் 23:50,51
6) நீதிமான்
லூக் 23:50
7] இயேசுவை கொலை செய்ய சம்மதிக்காதவன்
லூக் 23:51
8) அரிமத்தியா ஊரான்
யோவா 19:38
9) இயேசுவின் அந்தரங்க சீஷன்
யோவா 19:38
இப்படியாக பலவிதமான அடையாளங்கள் எழுதப்பட்டிருந்தாலும், ஒரே வசனத்தில் ஐந்து அடையாளங்கள் அவனைக் குறித்து எழு-தப்பட்டுள்ளதையும் காண முடியும் (மாற் 15:43).
1] கனம் பொரு -ந்தியவன்
2) ஆலோசனைக்காரன்
3) அரிமத்தியா ஊரான்
4) தேவனுடைய இராஜ்யம் வரக்காத்திருந்தவன்
5) துணிவுள்ளவன்.
இதே போல ஒரே வசனத்தில் இயேசுவுக்கும் ஐந்து நாமங் -கள் கொடுக்கப்பட்டுள்ளது (ஏசா9:6]
1] அதிசயமானவர்
2) ஆலோசனைகர்த்தா
3] வல்லமையுள்ள தேவன்
4) நித்திய பிதா
5) சமாதான பிரபு.
இந்த வசனங்களை கவனிக்கும் போது இயேசுவுக்கு நிழலாட்டமாய் இருந்துள்ளது. ஆனபடியினால், குமா -ரனாகிய இயேசுவின் பரிசுத்த சரீரத்தை அடக்கம் பண்ணவும் தொட்டுத் தூக்கவும், பிதாவாகிய தேவன் யோசேப்பை தெரிந்தெடுத்துள்ளார்.
எந்த ஒரு காரியத்தையும் தனிமையில் செய்யும்படி யாரையும் கட்டாயப்படுத்தாதவர் நம் தேவன். ஆனபடியினால்தான் மரித்த இயேசுவின் சரீரத்தை தூக்கவும், அடக்கமுறைமைகளை நிறை -வேற்றவும் யோசேப்பால் மட்டும் முடியாது என்று அறிந்த தேவன் நிக்கொதேமு என்னும் சீஷனையும் துணைக்கு அனுப்பினார். இந்த நிக்கொதேமு யூதன் கிடையாது, பரிசேயன். ஆனால், இஸ் -ரவேலில் போதகனாய் இருந்தவன் (யோவா 3:1,4,9). இவன் வாழ்க்கையைக் குறித்து மூன்று காரியங்களை கவனிக்கலாம். முதலாவது:- இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து சந்தே -கங்களை கேட்டு, விளக்கத்தை தெரிந்து கொள்கிறவனாக இருந்தான். இராக்காலம் என்றால் இரவு நேரத்தை குறிக்கின்றது. இயேசு உயிரோடு இருக்கும்போது இராக்காலத்தில் வந்ததைப் போலவே அவருடைய மரித்த சரீரத்தை அடக்கம் பண்ணவும் இராக்காலம் துவங்குகிறநேரத்தில்தான் வந்தான். ஆனபடியினால் இராக்காலம் என்பது இவனுக்கு பழகிப் போன ஒன்று.
இரண்டாவது:- வாசனை திரவியத்தைக் கொண்டு வந்து கொடுத் -தான். இவன் கொண்டு வந்த திரவியமானது வெள்ளைப்போளம் மற்றும் கரியபோளம் கலந்ததாக இருந்தது. பொதுவாக இப்படிப் -பட்ட வாசனை திரவியத்தை பயன்படுத்தினால், மண்ணிலிருந் -தும், கல்லிலிருந்தும் உருவாகக் கூடிய கரையான்கள் உருவா -காமல் அழிந்து போகும். அப்படியானால், கல்லறைக்குள் வைக் -கப்படுகிற இயேசுவின் சரீரத்தை எந்த கிருமிகளும் தொடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு கூட நூறு இராத்தல் அதா -வது 32 கிலோ திரவியங்களை இயேசுவுக்காகப் பயனபடுத்தியுள் -ளான். இதன் மூலம், இயேசுவை அவன் எவ்வளவாய் நேசித் -தான் என்பது தெரிகின்றது.
இப்படியாக யோசேப்பின் தனிமையை போக்க நல்ல சீஷனா-கிய நிக்கொதேமுவை தேவன் அவனுடன் இணைத்தார். ஆனப -டியினால்தான் இயேசுவின் சரீரத்தை சீலைகளில் சுற்றிக் கட்டி -னான் என்று எழுதப்படாமல் கட்டினார்கள் என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது (யோவா 19:40). வாசிக்கின்ற உங்களையும் தேவன் ஒரு அரிமத்தியனாகிய யோசேப்பை போலவும், இஸ்ரவே -லின் போதகனாகிய நிக்கொதேமுவாயும் மாற்ற விரும்புகிறார்.
யோசேப்புக்கும், நிக்கொதேமுவுக்கும் இடையே இந்த விஷயத்-தில் நிறைய ஒற்றுமைகள் இருக்கிதைக் காணலாம். யோசேப்பு மெல்லிய துப்பட்டியும், சீலையும் கொண்டு வந்தான். நிக்கொதேமு வெள்ளனப்போளமும் கரியபோளமும் கொண்டு வந்தான். இயேசு -வைக் கொலை செய்ய இருவருமே சம்மதிக்கவில்லை. யோசேப்பு சங்கத்தின் ஆலோசகனாக இருந்தான். நிக்கொதேமு இஸ்ரவேலின் போதகனாயிருந்தான். இயேசுவின் மரித்த சரீரத் -தை இருவரும் சேர்ந்துதான் கட்டினார்கள். யோசேப்பு வாங்கி வந்த துப்பட்டி இயேசுவை சுற்றிலும் முடினது. நிக்கொதேமு கொண்டு வந்த வாசனை திரவியங்கள் கல்லறைக்குள்ளும், கல் -லறைக்கு வெளியேயும் வாசனையால் நிறைத்தது. யோசேப்பின் சீலைகள் இயேசுவின் தோலையும், சதையையும் பாதுகாத்தது. நிக்கொதேமுவின் திரவியங்கள் கல்லறையை பாதுகாத்தது. மர -ணத்திலிருந்து உயிரோடு எழுந்த இயேசுவை யோசேப்பும் காண -வில்லை, நிக்கொதேமுவும் காணவிலலை. இருவருமே பார்த்த -தாக வேதத்தில் சொல்லப்படவில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அருமையானவர்களே, உங்களுடன் கூட புதியதாக யாரையோ கர்த்தர் கொண்டு வந்து இணைக்கிறார் என்றால் அதில் ஒரு நன்மையிருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். யோ-சேப்பை தேடி நிக்கொதேமுவை தேடி அலைய விட -வில்லை. அதே போலத்தான் அரிம்திய ஊரானாகிய யோசேப்பை போல அர்ப்பணித்துள்ள உங்களைத் தேடி சிலர் வரும்படி கர்த்தர் செய்வார். நீங்கள் அங்கலாய்க்க வேண்டாம். யோசேப்பின் மெல் -லிய வஸ்திரமும், நிக்கொதேமுவின் கரியபோளமும் ஒன்று சேர்ந் -தது போல நீங்களும் ஒன்று சேர்வீர்கள்.
C. கணம்:--
கிறிஸ்து இயேசுவுக்காக யார் எதை செய்தாலும் அதற்கு ஏற் -றகனத்தை ஆண்டவர் தராமல் விடவே மாட்டார். இது, இயேசு -வினிடத்தில் காணப்பட்ட நல்ல குணாதிசயங்களில் இதுவும் ஒன்றாகும். “ராஜா கனம்பண்ண விரும்புகிறமனுஷனுக்கு இப்படியே செய்யப்படும்” (எஸ்தர் 6:11) என்ற வேத வசனத்தின்படி யோசேப்புக் -கும் சில கனம் உண்டானது.
யோசேப்பின் வீட்டுக்கு அருகிலேயே இயேசு அடக்கம் பண்ணப்பட்டார்.
அவனுடைய தோட்டமும், அந்த தோட்டத்தில் இருந்ததுமான
கல்லறையும் பிதாவாகிய தேவன் தெரிந்தெடுத்தார். இயேசு உயிரோடிருந்த நாட்களில் இந்த யோசேப்பு இயேசுவை போய் தனியே பார்த்தது கிடையாது.
இயேசு உயிரோடிருந்த நாட்களில் ஒரு முறைகூட யோசேப்பின் கல்லறையை போய் இயேசு பார்த்தது கிடையாது.
இயேசுவின் மரணமும், உயிர்த்தெழுதலும் உலகம் முழுவதும் பேசப்படுகின்றது. அதே போல, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பையும், அவன் கொடுத்த கல்லறையை குறித்தும் உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
உயிர்த்தெழுந்த இயேசு உலகத்துக்கு அடையாளம். உயிரோடு எழுந்த இயேசுவின் கல்லறை கிறிஸ்தவர்களுக்கு அடையாளம்.
பிதாவின் திட்டங்கள் இயேசுவில் நிறைவேறினது. இயேசுவின் திட்டங்கள் யோசேப்பின் மூலம் நிறைவேறி முழந்தது.
இப்படியாக ஆவிக்குரிய பிரகாரமாகவும், வேத வசனத்தின்படி -யும் யோசேப்புக்கு கனம் உண்டானது. இவை தவிர, ரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்தவர்கள் மிகப் பெரிய பட்டமாகிய புனிதர் பட்டத்தை வழங்கி ஓர் புனிதராகவே கருதுகின்றனர்.
ரோமர்களின் காலண்டரில் சொல்லப்பட்டுள்ளதைப் போல ஆண்டுதோறும் மார்ச் மாதம் பதினேழாம் (17) தேதியை யோசேப்-பின் புனித நாளாகவும், ஆகஸ்ட் மாதம் பதினேழாம் தேதியை யோசேப்பு மற்றும் நிக்கொதேமு இருவரின் புனித நாளாகவும் கருதி கனம் பண்ணுகின்றனர். அருமையானவர்களே, ஒரு மெய் -யான கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும், கிறிஸ் -துவுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கும் அரி-மத்தியா யோசேப்பு ஒரு எடுத்துக்காட்டாக திகழுகின்றான்.
நான்கு சுவிஷேச நூல்களையும் நன்றாக வாசித்துப் பார்த் -தால், ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தவிர, யோசேப்பு அதிகம் பேசினதாக வேதத்தில் ஆதாரமே கிடையாது. ஆம், இது உண்மை. தேவனுக்காக ஏதோ செய்ய விரும்புகிறவர்கள், அதிகமாய் வெளியே தெரியவும் மாட்டார்கள். அதிகமாய் பேசவும் மாட்டார்கள். ஆனால், தேவ திட்டத்தில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
அரிமத்தியா யோசேப்பைப்போல மாறுங்கள், தேவ திட்டத்தை நிறைவேற்றுங்கள், உங்களுக்குள்ளதையும், உங்கள் இடத்தையும், தோட்டத்தையும் இயேசுவுக்காய் அர்ப்பணியுங்கள். அப்பொழுது ஜீவ புஸ்தகத்தில் உங்கள் பெயர் பதியப்படும். பரலோக இராஜ்யத் -திலும், பங்கு பெற்று கோடா கோடி ஆண்டுகள் நிலைத்திருப்பீர் -கள். காரணம் இயேசுவுக்காக செய்தவைகள் மட்டுமே நிலைத்து நிற்கும், மற்ற அனைத்தும் அழிந்து போகும்.
d. 1) இயேசுவின் கல்லறை எப்படிப்பட்டது?
மத் 27:60புத்தம் புதிய கல்லறை.
II) இயேசுவின் கல்லறை எங்கேயிருந்தது?
யோவா 19:41,42 சிலுவைக்கு அருகிலேயே கல்லறை இருந்தது.
III) கல்லறைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தவர்கள்:
லூக் 23:51,53
1) அரிமத்தியனாகிய யோசேப்பு
லூக் 24:12
2) பேதுரு
மாற்கு 16:1,5
3] மகதலேனா மரியாள்
4) யாக்கோபின் தாயாகிய மரியாள்
5) சலோமே என்கிறஸ்திரீ
யோவா 20:5,8
6) மற்றொரு சீஷன்
IV) இயேசுவின் கல்லறைக்கு உள்ளே இருந்தவைகள்:
மாற்கு 15:46
1) மெல்லிய துப்பட்டி
யோவா 19:39
2] வெள்ளைப்போளம்
3] கரியப்போளம்
யோவா 19:40
4) சுகந்தவர்க்கம்
5) சீலை
யோவா 20:7
6) தலையில் சுற்றியிருந்த சீலை