அக்கினி ஞானஸ்நானம்
1. அக்கினி ஞானஸ்நானம் புதிய ஏற்பாட்டில் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, (மத்தேயு 3:11-12; 24:36-41; லூக்கா 3:16-17; 2 தெசலோனிக்கேயர் 1.7-8)
2.அக்கினி ஞானஸ்நானம்- நியாயத்தீர்ப்பைக்குறிக்கிறது மற்றும், இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், பூமியில் உள்ள அனைத்து அவிசுவாசிகளும் அகற்றப்படுவார்கள். உபத்திரவக்காலத்தின் முடிவில் மீந்திருக்கும் விசுவாசிகள், உயிர்த்தெழப்பெற்ற பரிசுத்தவான்கள் மட்டும் ஆயிர வருட அரசாட்சியில் பிரவேசிப்பார்கள்.
3. அக்கினி ஞானஸ்நானத்தை குறித்த உவமைகள்:
(மத்தேயு 13:24-30, 36-43) - கோதுமை மணி மற்றும் பதர் (மத்தேயு 13:47-50) - நல்ல மீன்கள் மற்றும் ஆகாத மீன்கள், பத்துக்கன்னிகைகள் ? (மத்தேயு 25:1-13)
4. யூதர்களின் அக்கினி ஞான்ஸ்நானம் (எசேக்கியேல் 20:34-48, ஏசாயா 1:25-26, மத்தேயு 3:7-12)
5. புறஜாதியாரின் அக்கினி ஞானஸ்நானம் (மத்தேயு 25:31-46) செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள்.
6. அக்கினி ஞானஸ்நானத்தின் போது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன (தானியேல் 7:10 உபத்திரவ காலத்தில் சாத்தானின் போதனகளால் மிக உறுதியுடன் வஞ்சிக்கப்பட்ட அவிசுவாசிகள் அனைவரின் பெயர்ப்பட்டியல் இதில் இடம் பெறும். (2 தெசலோனிக்கேயர் 2:11-12}