உயிர்த்தெழுதுளும் செய்திகளும்

 

 

உயிர்த்தெழுதுளும் செய்திகளும் 


A. பரதீசும் இயேசுவும்:


இயேசுவின் எந்த பக்கம் தொங்கிய கள்ளன் பரதீசின் வாக் -குத்தத்தம் பெற்றான் என வேதத்தில் இல்லை.


வேதாகமத்தில் மிகவும் குறைவான இடங்களில் பயன்படுத்தப் -பட்டுள்ள சொல்லாட்சிகளில் பரத்சும் ஒன்று. கிரேக்க மொழியில் பாரடைசோஸ் (Paradeisos) என்பர். இதனை கிரேக்க மொழியில் முதலில் பயன்படுத்தியவர் செனபோன்தான் எனன்னு பெயரை உடையவர் என்று கருதப்படுகிறது. அவர் பெர்சிய அரசர் -களின் பூந்தோட்டங்களைக் குறிக்கவே இச்சொல்லைப் பயன்ப -டுத்தினார் என்றும் சொல்லப்படுகின்றது.


பரதீசு என்றால் அடைத்து பாதுகாக்கப்பட்ட தோட்டம். பூந்தோட் -டம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். கிரேக்க மொழி பழைய ஏற்பாட்டில் நெகே 2:8, பிர 2:5, உன் 4:13 ஆகிய இடங்களில் இந்த சொல்லாட்சி வருகிறது. அவ்விடங்கள் ராஜாவின் வனம், தோட்டங்கள், தோட்டம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமமான செப்டுவெஜிஸ்ட்-ல் ஏதேன் தோட்டத்திற்கும் இந்த சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.


யூதர்கள் இழந்த ஏதேனின் நிலை மீண்டும் தங்களுக்குக் கிடைக்கும் என நம்பிருந்தனர்.


புதிய ஏற்பாட்டில் வரும் ஆபிரகாமின் மடி (லூக் 16:19-31). மூன்றாம் வானம் (2கொரி 12:2) ஆகியன பரதீசின் பிறஉருவகங் கள் என வேதாகம அறிஞர் பலர் கருதுவர்.


மற்றபடி புதிய ஏற்பாட்டில் லக் 23:43, 2கொரி 12:3, வெளி 2:7 ஆகிய மூன்று இடங்களில் பரதீசு என்று நேரடியாக இது கூறப்படுகிறது.


இயேசுகிறிஸ்துவின் மரணம் வரை தேவனை விசுவாசித்தவ -ர்கள் இறந்தால் மேல்பாதாளம் என்னும் ஆபிரகாம் மடியில் செல்வர் என்றும், அவரது பலியாகுதலுக்குப் பின் அது பரதீசு என்னும் மூன்றாம் வானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது என -வும் கருதுவோர் உளர். எனவே இப்போது விசுவாசிகள் மரித் -தால், நல்ல உணர்வுள்ள நிலையுடன் பரதீசில் இளைப்பாறுவர். அதன் பின்பு கர்த்தரின் இரண்டாம் வருகையில் சரீரத்துடன் உயிர்த்து கர்த்தரோடிருப்பர்.


வெளி 2:7-ல் வரும் பரதீசு வாக்குத்தத்தம் இழந்த இன்பவ -னமான ஏதேனுக்கு நிகரான புதிய இடத்தைக் குறிப்பிடுகிறது. ஜெயங்கொள்வோருக்கு அதன் மத்தியிலிருந்து ஜீவ விருட்சக்க னியைப் புசிக்கும் அனுபவம் கிடைக்கும். நாம் ஜெயங்கொள்ளப் போராடுகிறோமா…?


B. உயிர்த்தெழுதலும் விளக்கமும்:


பல நேரங்களில் சிந்தனைக் குழப்பத்திற்குள்ளாக்கும் ஒருகாரியம் இது.


இயேசுகிறிஸ்து தெளிவாக உரைத்திருந்தார்.


யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் (மத் 12:40). 


இயேசுகிறிஸ்து வெள்ளி கிழமையன்று அடக்கம் பண்ணப்பட்டால், எப்படி மூன்று நாட்கள் ஆகும்?


யூதர்கள் தங்கள் நாள் கணக்கை மாலை 6 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணிவரை எண்ணுவர். அதன்படி வெள்ளி மாலை ஆறு மணிக்கு முன்பு அடக்கம் பண்ணியாயிற்று. ஆறு மணியுடன் அந்த நாள் முடிந்தது. 6 மணி ஆனவுடன் ஆயத்த நாள் முடிந்து ஓய்வு நாளாகிய சனிக்கிழமை உடனே ஆரம்பிக்கிறது (மாற் 15:42). சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இரண்டாம் நாளும் முடிந்து வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு ஆரம்பிக்கிறது. அதன் பின் கர்த்தர் உயிர்ததெழுந்துவிட்டார். ஆகையால் இருட்டோடே எழுந்துபோன போது சீடர்கள் கல் புரட்டியிருப்பதைப் பார்த்தார்கள் [யோவா 20:1).


யூதர்கள் இரவும் பகலும் என்ற சொல்லாட்சியை நாளின் ஒரு பகுதியைக் குறிக்கவும் பயன்படுத்துவதுண்டு. நாம் அல்லும் பகலும் உழைத்தார் என மரபுத்தொடராக பயன்படுத்துவதைப் போன்றது அது.


இதனை நிரூபிக்க எஸ்தர் நூலில் தக்க சான்று உண்டு. எஸ்தர் 4:16-ல் மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடி யாமலும் இருந்து, எனக்காக உபவாசம் பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம், என பார்க்கிறோம். தொடரந்து எஸ்தர் 5:1-லோ மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ் -திரந் தரித்துக்கொண்டு . என வாசிக்கிறோம்.


C. உயிர்த்தெழுதலால் வந்த மாற்றங்கள்:


1. லூக் 24:7,8 பெண்களின் நினைவுகளை சரிபடுத்தினார் 


2. லூக் 24:12 பேதுருவின் கண்கள் ஆச்சரியப்பட்டது.


3. லூக் 24:25 மந்தமான இருதயம் இருந்தது லூக் 24:32 இருதயம் பிரகாசமாய் மாரினது


4. யோவா 20:25 தொட்டால்தான் நம்புவேன் (சந்தேகம்) லூக் 24:27 தோமா தொட்டான் நம்பினான்


5. லூக் 24:37 சீசர்களின் ஆவி கலங்கி இருந்தது லூக் 24:45 பரிசுத்த ஆவியால் விடுதலை வந்தது


6. லூக் 24:52,53 உங்களுக்கு இயேசு என்ன தருகிறார்?

துதியின் உடையை தருகிறார்.


7. மாற் 16:20 சபைக்கு என்ன நடக்கும்?

அற்புதங்களால் சபையை உறுதி படுத்துவார் 


8, மத் 28:20 இயேசுவின் கடைசி வாக்குத்தத்தம் என்ன? 

முடிவுவரை உங்களோடுகூடவே இருப்பேன்.


D. உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டவர்கள்:


யார்

எங்கே

எப்பொழுது

வசன ஆறாரம்


மகதலேனா மரியான்

கல்லறை அருரிஸ்

ஞாயிறு காலையில்

மாற் 16:0-11, யோவா 20:13-18


மதலேனா மரியான், யாக்கோபின் தாய் மரியாள் மற்றும் சஸோமே

கல்லறை அருகில்

ஞாயிறு காலையில்

'மத் 28:1-10 மாற் 16:1-0 லூக் 24:1-12


பேதுரு

எருசசேமில்

ஞாயிறு

லூக் 24:34, 1கொரி 15:0


இரு பயணிகள்

எம்மாவூர் சாலையில்

ஞாயிறு மத்தியான வேளை

லூக் 24:13,22


பத்து சீடர்கள்

மேல் வீட்டறை

ஞாயிறு சாயங்காலம்

மாற் 16:14, லூக் 24:36-43 யோவா 20:15-26


பதினொரு சீடர்

மேஸ் வீட்டறை

ஒருவாரம் கழித்து

யோலா 201125-28, 1 கொரி 15:8


எழு சீடர்கள்

கலிலேயா கடற்கரையோரம்

காலையில்

மோவா 21:1-23


பதினொரு சீடர்

கலிலேயா

சிறிது நாட்களுக்குப் பின்பு

மத் 23:16-20; மாற் 16:16-18


ஐநூறு பேர்

கலிலேயாவாக இருக்க வேண்டும்.

சற்று நாட்களுக்குப் பின்பு

1 கொரி 18:6


யாக்கோபு

தெரியவில்லை

சில நாட்களுக்குப் பிண்பு

1 கொரி 18:7


சீடர்கள், விசுவாச பெண்கள் இயேசுவின் சகோதரர்கள் பலர் முள்ளிலையில்

ஒலிவ மலையில்

உயிர்ப்பிண் நாற்பதாவது நாள்

லூக் 24:45-531 அப் 13-14


ஸ்தேவான்

எருசலேமில்

சில ஆண்டுகள் கடந்து (கி.பி.32)

அப் 7:55


சவுஸ் (எல்) பவுல்

தமஸ்கு செல்லும் வழியில்

சில ஆண்டுகள் கடந்து (கி.பி.32)

அப் 9:1-5; 1கொரி 15:8


E. உயிர்த்த இயேசு அநேக நாள் தரிசனமானார்: அப் 13:31


 முக்கிய குறிப்புகள்:


1. எத்தனை நாட்கள் தரிசனமானார்? 

அப் 1:3 - 40 நாட்கள் தரிசனமானார்


2. எத்தனை பேருக்கு தரிசனமானார்? 

1கொரி 15:6 - 500 பேரக்கு தரிசனமானார்


3. இயேசு ஏன் இறந்தார்?

1பேதுரு 3:18 மாம்சத்தில் கொலையுண்டு,

ஆவியில் உயிர்ப்பிக்கப்பட


4. அழிவு உண்டா?

அப் 2:31 உயிர்தெழுதல் வந்துவிட்டால்

அழிவே கிடையாது.


I. மாற் 16:9 மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்:


மரியாள் (எல்) கண்ணீர்


1. லூக் 8:2 ஏழு பிசாசுகள் நீங்கினவள் 


2. யோவா 19:25 சிலுவைக்கு அருகில் நின்றவள்


3. மாற் 16:1 இயேசுவுக்கு சுகந்தவர்க்கமிட்டவள்


4. யோவா 20:11 இயேசுவுக்காக அழுதவள்


5. லூக் 24:10 உயிர்த்த இயேசுவை அப்போஸ்தலருக்கு சொன்னவள்.


II. மாற் 16:12 எம்மாவூர் சீர்களுக்கு தரிசனமானார்:


1. மாற் 16:12 மருரூப உறுவத்தில் தரிசனமானால் 


2. லூக் 24:15 உயிர்த்த இயேசு நடந்து போனார்


3. லூக் 24:25 சீஷர்களின் மந்த இருதயம் மாறினது


4. லூக் 24:27 வேத மகத்துவங்களை

விளக்கினார்


5. லூக் 24:31 சீசர்களின் கண்கள்


6. லூக் 24:31 திறக்கப்பட்டது இயேசுவைக் கண்டார்கள்


7. லூக் 24:32 இருதயம் வல்லமையால் எறிந்தது.


III. மாற் 16:14 சீசர்களுக்கு தரிசனமானார்:


1. மாற் 16:14 அவிசுவாசத்தை நீக்கினார்


2. மாற் 16:15 உலகமெங்கும் போக

கிருபை பெற்றனர்


3. மாற் 16:17,18 ஆறு விதமான

அதிகாரங்களைத் தந்தார்


4. யோவா 20:19 சமாதானம் கொடுத்தார்


5. லூக் 24:41 சந்தோஷம் உண்டானது


6. லூக் 24:48 சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்ற

நற்சாட்சியைப் பெற்றனர் 


F. கர்ந்தரின் இறுதி வார நிகழ்வுகள்:---


நாள்

நிகழ்வு

வேத ஆதாரம்


ஞாயிறு 10-ம் தேதி

எருசஸேம் நுழைதல் பின்பு சாயங்காலத்தில் பெத்தானியாவில் தங்குதல்

மாற்கு 11 : 1-11


திங்கள் 11-ம் தேதி

அத்திமரத்தைச் சபித்தலும், எருசலேம் தேவாலயத்தைச் சுத்தமாங்குதலும். (பின்பு சாயங்காலம் மீண்டும் பெத்தானியாவுக்கு

மாற்கு 11 : 12-19


செவ்வாய் 12-ம் தேதி

காலையில் பெத்தானியாவிலிருந்து எருசலேம் தேவாயத் -துக்குச் செல்லுநனும் மதத் தலைவர்களுடன் விவாதமும், கடைசி காலம் பற்றிய தீர்க்கதரிசனமுரைப்பும் வரும் வழி -யில் மீண்டும் சீடர்களுடன் கடைசி காலத்தைப் பற்றி விளக்குதல் (பெத்தானியா நோக்கி வருதல்?) பின்பு ஒரு பெண் பரிமளத்தைமம் பூகதலும் கர்த்தரைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் திட்டமிடுதனும்

மாற்கு 11 : 20; மாற் 11 : 13 – 33

மாற் 14 : 1-11


புதன் 13-ம் தேதி

--

--


வியாழன் 14-ம் தேதி

பஸ்கா விருந்தும், திருவிருந்து ஏற்படுத்துதலும், கெத்செமனே ஜெபமும்

மாற்கு 14 : 12-42


வெள்ளி 15-ம் தேதி

இயேசுவைப் பிடித்தலும், விசாரணையும் சிலுவையிலறை -தலும், அடக்கம் பண்ணப்படுதலும்

மாற்கு 14 1 43; 15 : 47


சனி 16-ம் தேதி

இயேசு கல்லறையில் ஓய்வு நாள்

மாற்கு 16 : 1


ஞாயிறு 17-ம் தேதி

இயேசு உயிர்ததெழுந்திருந்தார். மகதலேனா மரியாளுக்கு தரிசனம். சாயங்காலத்திஸ் எம்மாவூருக்குச் சென்ற இரு சீடர்களுக்குத் தரிசனம்

மாற்கு 15 : 2-13


G. கிறிஸ்துவின் மரணம் தந்த 16 நன்மைகள்:


1.எபி 9:26 பாவப்பரிகாரம் கிடைத்தது.


2. கலா 3:13 நியாயப்பிரமாணச் சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது.


3.கொலோ 2:14 நியாயப்பிரமாண அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது.


4. எபே 2:14-16 யூதர் - புறஜாதி என்ற வேறுபாடு அகற்றப்பட்டது. அனைவரும் தேவனுக்கு பிரியமான பரிசுத்த ஜாதியானோம்


5. கலா 4:3-5 புத்திரத்துவம் கொடுக்கப்பட்டது.


6. எபே 2:13 தேவனுக்குச் சமீபமானவர்களானோம்.


7. ரோம 5:10 தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டோம்.


8. எபே 1:7 பாவ மன்னிப்புக் கிடைத்தது.


9.1யோவா 1:7,9 சுத்திகரிப்புக் கிடைத்தது.


10. ரோம 5:9 நீதிகரிப்புக் கிடைத்தது.


11. ரோம 8:1-3,34,35 ஆக்கினைத் தீர்ப்பு அகற்றப்பட்டது.


12. 1பேது 1:18,19; 1கொரி 6:20

தேவனுக்காக விலைக்கு

வாங்கப்பட்டோம்.


13. கலா 6:14, ரோம 6:1-3:6:8

பாவத்திற்கு மரித்தோம்.


14. ரோம 8:32; எபே 1:3

உன்னதத்தின் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் உரிமையாளரானோம்.


15. எபி 2:14,15 மரண பயத்திலிருந்து விடுவிக்கப்பட்டோம்.


16. கொலோ 2:14-17 சாத்தானின் மேல் வெற்றிபெற்றோம்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.