சிலுவையின் வரலாறு பாகம் 26
அப்பம் தாலம் இராபோஜனம்:
I.அப்பம்:
"அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்” (லூக் 24:30).
ஜீவனுள்ள தேவன் தம்முடைய கிருபையுள்ளக் கரத்தினால் நேரடியாகத் தொட்டவைகளில் அப்பமும் ஒன்றாகும். மற்ற எல்லா -வற்றையும் விட அப்பத்துக்கு விசேஷ இடம் வேதத்தில் உண்டு. அப்பம் என்றால் பழைய ஏற்பாட்டில் இருதயத்தைத் திடப்படுத்துதல் என்றும், புதிய ஏற்பாட்டில் ஜீவனையும் குறிக்கும் (ஆதி 18:5; யோவா6:51]. இன்னொரு வகையில் அப்பம் என்றால் அது நேர -டியாக இயேசுவைக் குறிக்கும்.
புதிய ஏற்பாட்டில் அநேக விதமான அப்பங்களைக் குறித்து சொல்லப்பட்டிருந்தாலும், இயேசுவோடு தொடர்புடைய சில அப்பங் -களை குறித்து, தேவ கிருபையினால் கவனிக்க போகின்றோம். அதிலும் விசேஷமாக 1,5,7,12 என்ற குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ள -வைகளை கவனிப்போம்.
A. ஒரு அப்பம்:
“படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது” (மாற் 8:14). தேவன் என்பவர் ஒருவர்தான். அதுபோல இங்கு நாம் பார்க்கும் அப்பமும் ஒன்றுதான். ஒரு அப்பம் என்றால்
"அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்கு பெருகிறபடியினால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” [Iகொரி 10:17)என்ற சத்திய வசனத்தின்படி ஒரே சரீரத்தை குறிக்-கின்ற தாய் உள்ளது. அநேகராய் இருப்பவர்களை ஒரே ஐக்கியத்
-தில் கொண்டு வருவது தேவனுக்கு பிரியமானது ஆகும். ஆன -படியினால், ஒரு அப்பம் என்பது, ஒரே சரீரத்தையும் ஐக்கியத் -தையும் தெளிவாய் வெளிப்படுத்துகின்றது.
நீங்களும் ஒரே சரீரமான கிறிஸ்துவோடு கூட ஐக்கியப்படுங் -கள். பூமியில் பலராக இருந்தாலும் இயேசு என்கிற ஆண்டவர் எப்படி ஒருவரோ, அதே போல பரலோகமும் ஒன்று தான். அந்த ஒரே பரலோகத்திற்குள் போக முயற்சியுங்கள். ஐக்கியப்படுங்கள். அன்பின் அப்பமாக மாறுங்கள்.
B. ஐந்து அப்பங்கள்:
"அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களுண்டு என்றார்கள்” (லூக் 9:13). ஐந்து என்பது வேதம் முழுதும் நிறைந்து காணப்படும் எண்ணாகும். ஆனால், இயேசு தொட்ட அப்பங்களில் ஐந்து அப்பமும் ஒன்றாகும். ஐந்து அப்பம் என்றால் உணர்வு என்று அர்த்தமாகும் (மத்16:9). கிறிஸ்துவை சார்ந்த ஒவ்வொரு தேவ பிள்ளைக்குள்ளும் ஐந்து விதமான உணர்வுகள் கட்டாயம் காண்ப்பட வேண்டும். அவைகளை யோபுவின் புஸ்தகம் அழகாய் வரிசைப்படுத்திக் காண்பிக்கின்றது.
1) யோபு 13:23 பாவத்தைகக் குறித்த உணர்வு வேண்டும்.
2) யோபு 20:3 ஆவியிலே உணர்வு வேண்டும்.
3) யோபு 21:22 நியாயம் தீர்க்கின்றதேவனைக் குறித்த
உணர்வு வேண்டும்.
4) யோபு 23:5 தேவன் சொல்வதைக் கேட்கும் உணர்வு வேண்டும்.
5) யோபு 34:16 வார்த்தைக்கு செவி கொடுக்கும் உணர்வு வேண்டும்.
உணர்வில்லாதவர்கள் கிறிஸ்தவர்களே கிடையாது. ஐந்து அப் -பங்களுக்கும், மேற்கண்ட உணர்வுகளுக்கும் அநேக தொடர்பு உண்டு. நீங்கள் நான்கு சுவிசேஷங்களையும் நன்றாய் வாசித்து பார்த்தால், சீஷர்கள் பலரும் பல காரியத்தில் உணர்வற்றவர்களா -கவே இருந்துள்ளனர்.
நீங்களும் சீஷர்களைப் போல் ஆகாமல், ஐந்து அப்பங்களாய் மாறுங்கள். உணர்வுள்ளவர்களாய் வாழுங்கள். இயேசுவின் ஐந்து பெரும் காயங்களால் உண்டாகும் சுகம், பெலன், ஆரோக்கியம், கிருபை, மகிமை ஆகிய ஐந்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
C. ஏழு அப்பங்கள்:
"அந்த ஏழு அப்பங்களையும், எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்” (மத் 15:36). ஏழு அப்பங்களை எடுத்து அவருடையக் கைகளில் கொடுத்ததும் ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டார் என்று வேதம் விளக்கம் கொடுக்கின்றது. ஏழு அப்பம் என்றால் பிக்கப்படுகின்ற அனுபவம் என்பதை இது காண்பிக்கின்றது.
ஏழு என்றாலே நிறைவு, பூரணம், சம்பூரணம் என்று கேட்டு கேட்டு ஜனங்கள் அதிலேயே பழகிப் போய் விட்டனர். ஏழு அப்பத் தைப் போல நாம் என்றைக்கு பிட்கப்படுகின்றோமோ, அப்போது தான் நாம் மற்றவர்களுக்கும், மற்றவர்கள் நமக்கும் பிரயோஜனம் உள்ளவர்களாய் மாறமுடியும்.
ஏழு அப்பங்களை பிட்டபடியினால்தான் 4000 பேருக்குப் பங்கிட் -டார்கள் என்று வசனம் அழகாய் விவரிக்கின்றது (மாற் 8:20).
நமக்குள் தேவன் வைத்திருக்கிறகிருபை, அபிஷேகம், தாலந்து, வரம், வல்லமை, இவைகளை நாம் பங்கிட வேண்டும். அப்படி தனக்குள் இருக்கும் ஏழு அப்பங்களுக்கு ஒப்பானதை பங்கிடுகிற சீஷர்களைத்தான் தன்னோடு வைத்திருந்தார். எனக்கு வேண்டும், எங்களுக்கு மட்டும் தான் வேண்டும் என்கின்றவர் -களை தேவன் முற்றிலுமாய் புறம்பே தள்ளிப் போடுவார். இயேசுவின் கைகளில் உள்ள ஸ்தோத்தரிக்கப்பட்ட ஏழு அப் -பங்களாய் உங்களை ஒப்புக் கொடுக்கும் போது தேவன் உங் -களை 4000-யிரமாக மாற்றி, 11நாளா 23:5-ல் சொல்லப்பட் -டுள்ளதைப் போல கர்த்தரைத் துதிக்கின்றகூட்டத்தில் கொண்டு போய் வைத்து உங்களை மகிமைப்படுத்துவார், ஏழு அப்பங்களை தொட்ட ஆண்டவர் உங்களையும், உங்கள் வீட்டில் உங்கள யாவரையும் தொடுவார்.
D. 12 துண்டுகளான அப்பம்:--
"இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்” (மாற்14:22).
இராப்போஜன பந்தியிருக்கும் போது, இயேசுவும் 12 சீஷர்களும் மேல் அறையில் கூடியிருந்தனர். அது கம்பளம் முதலாய் விரிக் -கப்பட்டிருந்த நேர்த்தியான அறையாகும். அவர்களுக்கு மத்தி -யில் இருந்தது ஒரே ஒரு அப்பம் தான். அதுவும் நினைவு கூறு -தலுக்காக வைக்கப்பட்டிருந்தது (லூக் 22:19). அந்த ஒரு அப் -பத்தை தான் இயேசு பிட்டார்.
சீஷர்களிடம் கொடுத்து 12 பேரையும் பிட்டு சாப்பிட சொன்னார். அப்படியானால் இது எதைக் குறிக்கின்றது? அகியா என்னும் தீர்க்கதரிசி புது சால்வையை 12 துண்டுளாக கிழித்துப் போட்டான் (IIநாளா 11:30). அகியாவும் ஓர் தீர்க்கதரிசி, இயேசு ஓர் தீர்க்கத -ரிசி. அகியா புது சால்வையை 12 துண்டுகளாக கிழித்த பின்பு சாலமோனின் இராஜ்ய பாரமும், அழகையும் தேவனால் தள்ளப் -பட்டு, கிழிக்கப்பட்டதைப் போல மாறிற்று.
அதுபோல, இயேசு அப்பத்தை 12 துண்டுகளாக பிட்ட பின்பு இயேசுவும் சீஷர்களுமாய் இருந்த ஐக்கியம் கிழிக்கப்பட்டு போனது. சீஷர்கள் எங்கும் சிதறிப் போனார்கள் (அப்8:1). "அப்படியே கர்த் -தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார்” (ஆதி 11:8)என்றவசனம் நிறைவேறினது. அதனால் தான் தோமா என்றசீஷர் இந்தியாவுக்கு வந்தார்.
அகியா புது சால்வையைக் கிழித்து 10 துண்டுகளை யெரொ பெயாம் என்பவனுக்கு கொடுத்து உன் மனவிருப்பத்தின்படி ஆண்டு கொண்டு என்று சொன்னான்(ஐஇரா11:31,37). அதுபோலவே யூதர் கள் அவர்களின் மனவிருப்பத்தின்படியெல்லாம் இயேசுவுக்குச் செய்து, அவருடைய சரீரத்தில் 10 பகுதிகளை காயப்படுத்தினார்.
1] கண்கள் கட்டப்பட்டது.
2) கன்னத்தில் அறையப்பட்டது,
3) வாயில் கார கொடுக்கப்பட்டது.
4) தாடை மயிர் பிடுங்கப்பட்டது.
5] முகம் துணியால் மூடப்பட்டது.
6) கைகளில் ஆணி அடிக்கப்பட்டது.
7) முதுகு காயப்பட்டது.
8) விலாவில் ஈட்டடியால் குத்தப்பட்டது.
9) கால்களில் ஆணிகள் அடிக்கப்பட்டது.
10) உடல் சேலையால் கட்டப்பட்டது.
எனக்கன்பான சகோதரர்களே, சகோதரிகளே, இயேசு தொட் -டதான 1,5,7,12 என்கிறஅப்பங்களைக் குறித்து வித்தியாசமான முறையிலும், ஆழமான சத்தியத்திலும் ஆண்டவர் உங்களை கொண்டு போயிருப்பார் என்று விசுவாசிக்கிறேன்.
இப்படியெல்லாம் பல பாடுகளைபட்டு, தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தபடியினால் தான் இயேசு தைரியமாய் சொன்னார்: "இந்த அப்பத்தைப் புசிக் -கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவா6:58) என் -றார். ஆனபடியினால், இயேசு உங்களையும் அவருடைய ஜீவ அப்பமாக மாற்றி பிழைக்கச் செய்வார். நீங்கள் பூமியில் சத்திய வசனத்தினால் பிழைத்து, பின்பு பரலோகத்திலும் போய் இயேசு -வோடு சேர்ந்து பிழைக்க கர்த்தர் கிருபை செய்வார்.
E. உதாரனமாய் சொல்லப்பட்ட சில அப்பங்கள்:--
1) சங் 3725
நீதிமானின் அப்பம்
2] சங் 78:25
தூதர்களின் அப்பம்
3) நீதி 9:17
அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம்
4) யோவா 4:4
பிள்ளைகள் கேட்கும் அப்பம்
5] மத் 26:26
இயேசு ஆசீர்வதித்த அப்பம்
6) மாற் 14:22
சரீரமாகிய அப்பம்
7) லூக் 22:19
நினைவு கூறுதலின் அப்பம்
8) யோவா 6:31
புசிக்க கொடுத்த அப்பம்
9] யோவா 6:33
ஜீவனைக் கொடுக்கிறஅப்பம்
10] யோவா 21:9
சூடான அப்பம்
F. இயேசு பயன்படுத்திய அப்பம்:
யோவா 6:11 இயேசு அந்த அப்பங்களை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி சீஷர்களிடம் கொடுத்தார்.
முக்கியமானவைகளும் அர்த்தங்களும் (யோவா 6:7-14):
1. பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா
(என்றால்)
யோவா 1:40 இயேசுவுக்குப் பின் செல்பவன்.
2. அப்பம் கொண்டு வந்தபையன்
(என்றால்)
ஏசா. 11:6 ஒருமித்து வாழ்வதைக் குறிக்கின்றான்
3. வாற்கோதுமையினால் செய்த அப்பம்.
(என்றால்]
லேவி. 27:16 பரிசுத்தமான காணிக்கை
4. 5000 பேர் சாப்பிட்டார்கள்
(என்றால்)
யோசு. 8:12 பிரித்தெடுக்கப்பட்டவர்கள்
5. மீத துணிக்கைகள்
(என்றால்)
யோவா 6:12 திருப்தியைக் குறிக்கும்
6. 12 கூடைகள்.
(என்றால்)
உபா. 28:5 ஆசீர்வாதத்தைக் குறிக்கும்
மு.வ: யோவா 6:58
இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
G. இயேசு என்கிற அப்பம் (யோவா 6:58):
1. மத் 26:26 இயேசு ஆசீர்வதித்த அப்பம்: லூக் 9:17 ஆசீர்வதித்த அப்பம் 12 கூடைகளை ஆக மாறினது.
உபா. 28:5 கூடை (எ) ஆசீர்வாதம்
உ.ம்: 2கொரி 11:33 பவுல் கூடையின் மூலம் தான் உயிர் தப்பினான்
2. மத் 26:26 இயேசுவின் சரீரமாகிய அப்பம்: சரீரமாகிய அப்பம் என்றால் என்ன?
யோவா. 2:21 சரீரம் (எ) ஆலயம்
யோவா.2:19 இயேசு என்னும் சரீரமாகிய ஆலயத்தில் மூன்று நாட்களாக பலவி -தமான பாடுகளினால் இடித்து
(கொன்று] போட்டார்கள்.
விளைவு
எபி. 12:2 பிதாவின் சிங்காசனத்தின் வலது பக்கத் -தில் வீற்றிருக்கிறார். நமக்கு என்ன பலன்?
கொலோ. 3:1 நாமும் மேலான இடத்தினில் வீற்றிருப்போம்.
II. தாலம்:
"அவர் பிரதியுத்தரமாக: என்னுடனே கூடத் தாலத்தில் கையிடு -கிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன்” (மாற் 14:20).
தன் கையை நீட்டி இயேசு எடுத்த பாத்திரங்களில் தாலம் என்ற பாத்திரமும் ஒன்று. தாலம் என்றால் கவிழ்த்துப் போடுதல் என்று அர்த்தமாகும் (IIஇராஜா21:13). இயேசுவின் ஊழிய சரித்திரமும் கல்வாரி என்னும் பாடுகளினால் கவிழ்த்து போடப்பட இந்த தாலம் என்ற பாத்திரமும் ஓர் அடையாளச் சின்னமாக மாறிவிட்டது.
இயேசு தம்முடைய கடைசி இராப்போஜன பந்தியில் இருக்கும் போது இந்த தாலம் என்ற பாத்திரம் அவருடைய கைகளில் தவழ்ந் தது. தாலம் என்ற பாத்திரம் அவருடைய கைகளில் தவழ்ந்தது. தாலத்தை எப்போது தன் கைகளில் எடுத்தாரோ அதன் பின்பு நடந்த சம்பவங்கள் வித்தியாசமானதாக அமைந்தது.
H. மத் 26:21-28
1) உங்களிலொருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று துக்க செய்தியை அறிவித்தார்.
2) அவர்கள் (சீஷர்கள்) துக்கமடைந்தனர்.
3) மனுஷகுமாரன் போகிறார் என்ற விரக்தியின் வார்த்தை இயேசுவால் உண்டானது.
4] காட்டிக் கொடுக்கப்படுகிறமனுஷனுக்கு ஐயோ என்ற சாபம் அங்கு கூறப்பட்டது.
5) காட்டிக் கொடுக்கிறவன் பிறவாதிருந்தால் நலமாயிருக்கும்
என்று இயேசு ஏங்கினார்.
6) "நீ சொன்னபடிதான்” என்று சொல்லி யூதாஸ் குற்றவாளி என்பதை வெளிப்படுத்தினார்.
தாலம் என்ற பாத்திரம் யூதாசுக்காகவே உருவாக்கப்பட்டது போல சூழ்நிலை மாறிவிட்டது. அருமையானவர்களே நீங்கள் எந்தவிதமான பாத்திரமாய் இருக்கின்றீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். திராட்சை ரசம் இருந்த பாத்திரம் அனைவருக்கும் இரத்தம் என்ற உடன்படிக்கையைக் கொடுத்தது.
ஆனால், அப்பம் வைக்கப்பட்ட தாலமோ, யூதாசுக்கு சாபத் -தையும், இயேசுவுக்கு சிலுவையையும் கொண்டு வந்தது. தாலம் என்ற பாத்திரத்தைக் குறித்து யாரும் அதிகமாக யோசிப் -பதோ, தியானிப்பதோ கிடையாது. அதே சமயம் இந்த தாலம் மௌனமாக மறைந்திருந்தே தன் கிரியையை நிறைவேற்றி விட் -டது. உங்களுக்குள்ளே மறைந்திருக்கும் சில சுபாவங்கள் தாலத்தை போல உங்களுக்கு சாபத்தை கொண்டு வந்து விடக் கூடாது. மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள்.
இயேசு சொன்னார்! "என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகி -றவனே”என்றார் (மத்26:23). ஆம், நீங்கள் கையிடுகிறதாலம், அதாவது நீங்கள் கையிட்டு செய்யும் வேலைகள், தலையிடும் காரியங்கள் எப்படிப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்து ஜாக்கிரதை -யாய் இருங்கள் யூதாஸ் தான் கையிட்ட தாலமே அவனை குற் -றவாளி என்று காட்டி கொடுத்து விட்டது. இதைபோல் நீங்களும் சிக்கிக் கொள்ளக் கூடாது.
I. இரண்டுவத காலங்கள்:
வேதத்தில் பலவிதமான தாலங்களைக் குறித்து சொல்லப்பட் -டிருந்தாலும் அவைகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று: பாவம் என்கிறதாலம். இரண்டு: காணிக்கை என்கின்றதாலம். பாவம் என்கிற தாலம் யோவான் ஸ்தானகனின் தலையை வாங்கினது. யூதாஸின் உயிரை பறித்தது. காணிக்கை என்ற தாலமோ, பலிபீடத்தை அலங்கரித்தது. தேவனுக்கும், ஊழியத் -திற்கும் பிரியமான காணிக்கைளை கொண்டு வந்தது. தேவா -லயத்தில் இருந்த பணிமுட்டுகளில் இதுவும் ஒன்றாக கருதப்பட் -டது. அதனால் பரிசுத்தமும் அடைந்தது.
J.உவமையாய் வர்ணிக்கப்பட்டுள்ள சில தாலங்கள்:
1) எண் 7:13 நிறையுள்ள தாலம்
2) எண் 7:19 130 சேக்கலுள்ள தாலம்
3) எண் 7:84 பிரதிஷ்டை செய்யப்பட்ட தாலம்
4) எண் 7:85 பரிசுத்த ஸ்தலத்தின் தாலம்
5) 2இரா 21:13 துடைக்கப்பட்ட தாலம்
6) எஸ்றா 1:9 வெள்ளித் தாலம்
7) மத்14:11 யோவானின் தலையை
வாங்கின தாலம்
8) மத் 26:23 யூதாசை காட்டிக் கொடுத்த தாலம்
III.இராபோஜனம்:
இயேசுவின் பாடுகளின் அடையாளங்களில் போஜனமும் ஒன்று. சிலுவையில் அறையபடப் போகும் முன்பாக அவர் போஜனம் பண் -ணும்படி உட்கார்ந்தார் என்று வேதம் விவரிக்கின்றது. இதை பந்தி என்றும், இராப்போஜனம் என்றும், இராவிருந்து என்றும், போஜனப்பந்தி என்றும வேதம் அழைக்கிறது. விசுவாச மக்கள் இதைத்தான் திருவிருந்து என்று சொல்கின்றனர். ஆனால், திரு -விருந்து என்றவார்த்தை தமிழ் வேதாகமத்தில் சொல்லப்பட -வில்லை. போஜனம் என்றாலே தேவனுடைய கிரியையை முடிப்பது என்று அர்த்தம் (யோவா 4:34). இப்படி பல நுனுக்கங்களும், சத் -தியம் நிறைந்ததும், இயேசு தொட்டதுமான போஜனத்தின் பல மறைபொருட்களைக் குறித்துக் காண்போம்.
K. இராப்போஜன பந்தியில் இருந்தவைகள்:--
1. மத் 26:26 அப்பம்
வி.ம் 1கொரி 11:24 அப்பம் (எல்) இயேசுவின் சரீரம்
2. மத் 26:29 திராட்சைப்பழரசம்
வி.ம்: மாற் 14:25 திராட்சைபழரசம் (எல்) நவமான ரசம்
3. மத் 26:23 தாலம் (அப்பத்தட்டு)
வி.ம்: 2இரா 21:13 தாலம் (எல்) துடைக்கப்படுதல் (அ) கவிழ்க்கப்படுதல்
4. மத் 26:27 பாத்திரம்
வி.ம்: லூக் 22:20 பாத்திரம் (எல்) புதிய உடன்படிக்கை
5.யோவா 13:25 துணிக்கை
வி.ம்: லூக் 9:17 துணிக்கை (எல்) சாப்பிட்ட திருப்தி
6. மாற் 14:15 கம்பளம்
வி.ம்: எசே 27:20 மேன்மையானதர்க்கு ஒப்பானது
7. லூக் 22:17 ஸ்தோத்திரம்
வி.ம்: எபே 1:16 ஸ்தோத்திரம் (எல்) ஜெபங்களில் நினைத்து
8. மத் 26:30 ஸ்தோத்திரப்பாட்டு
வி.ம்: நெகே 11:17 ஸ்தோத்திரப்பாட்டு (எல்) ஜெபத்தைத் துவங்குதல்
9. யோவா 13:5 தண்ணீர் பாத்திரம்
வி.ம்: யோவா 13:10 முழுவதும் சுத்தமாகுதல்
10. யோவா 13:4 சீலை
வி.ம்: யோவா 13:5 சீலை (எல்) துடைத்து விடுதல்
L. இயேகவும் சிலர்களும் இராப்போஜன பந்தியிலிருக்கும்
போது நடந்தனலகள்:
1. மத் 26:21 காட்டிகொடுப்பான் என்று யூதாசை குறித்த தீர்க்கதரிசனம் உண்டானது வி.ம்: யோவா 13:21 காட்டிக்கொடுத்தல் (எல்) ஆவியைக்
கலங்கப்பண்ணுதல்
2. மத் 26:24 யூதாசுக்கு ஐயோ என்கிற சாபம் கூறப்பட்டது வி.ம்: யூதா 1:11 ஐயோ (எல்) கெட்டுப்போகுதல்
3. யோவா 13:18 என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலை தூக்கினான் என்ற பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் நினைவு கூறப்பட்டது வி.ம்: சங் 41:9 குதிகாலை தூக்குதல் (எல்) நம்பினவனே துரோ -கம் பண்ணுதல்
4.யோவா 13:11 சீஷர்களில் சுத்தமில்லாத சீஷனும் ஒருவன்
இருக்கிறான் என்கிற வெளிப்பாடு உண்டானது
வி.ம்: 2நாளா 30:17 சுத்தமில்லாதவன் (எல்) பரிசுத்தம் பண்ணிக் கொள்ளாதவன்
5. யோவா 13:27 யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்
வி.ம்: 1நாளா 21:1 சாத்தான் புகுதல் (எல்) விரோதமா எழும்புதல்
6. யோவா 13:27 நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்கிற
கட்டளை யூதாசுக்கு இடப்பட்டது
வி.ம்: ரோம 9:28 சீக்கிரமாய்ச் செய் (எல்) விரைவாக
காரியத்தை நிறைவேற்றுதல்
7. லூக் 22:24 சீஷர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது
வி.ம்: 1கொரி 3:3வாக்குவாதம் (எல்) மனுஷமார்க்கமாய் நடக்குதல்
8. லூக் 22:34 பேதுரு மூன்றுதரம் இயேசுவை மறுதலிப்
-பான் என்று தீர்க்கதரிசனம் கூறப்பட்டது
வி.ம்: எபி 6:6 மறுதலித்தல் (எல்) தேவகுமாரனை அவமானப் -படுத்துதல்
9.யோவா 13:21 இயேசுவுக்கு ஆவியில் கலக்கம் உண்டானது
வி.ம்: யோவா 14:26 கலக்கம் (எல்) ஆவேசம்
10. மத் 26:22 சீஷர்களுக்கு மிகவும் துக்கம் உண்டானது
வி.ம்: ஏசா 53:3 துக்கம் (எல்) பாடு அநுபவித்தல்
11. யோவா 13:5 சீஷர்களின் கால்களை இயேசு கழுவினார்
வி.ம்: 1சாமு 25:41 கால்களைக் கழுவுதல் (எல்) பணிவிடை செய்தல்
12. லூக் 22:15 தன்னுடைய ஆசையை
இயேசு வெளிப்படுத்தினார்
வி.ம்: சங் 63:2 மிகவும் ஆசை [என்பது) பரிசுத்த ஸ்தலத்தை குறித்த ஆசை
13.யோவா 21:20 அன்பின் அப்போஸ்தலனாகிய யோவான்
இயேசுவின் மார்பினில் சாய்ந்தான்
வி.ம்: எண் 11:12 மார்பினில் சாய்தல் (எல்) அணைத்துக் கொள்ளுதல்
14. மத் 26:26 அப்பம் ஆசீர்வதிக்கப்பட்டது
வி.ம்: யோவா 6:51 அப்பம் (எல்) உலகத்தின ஜீவனுக்கானது
15. மத் 26:27 ஸ்தோத்திரம பண்ணப்பட்டது
வி.ம்: 2கொரி 2:14 ஸ்தோத்திரம் (எ) வெற்றி சிறக்கப்பண்ணுதல்
16.யோவா 13:30 இராக்காலம் உண்டானது
வி.ம்: யோவா 9:4 இராக்காலம் (எல்) ஒரு கிரியையும் செய்யக்
கூடாத
17.யோவா 13:30 மனுஷகுமாரனும், தேவனும் (பிதாவும்)
மகிமைப்பட்டனர்
வி.ம்: ஏசா 44:23 மகிமைப்படுதல் (எல்) பாடுதல், ஆர்பரித்தல், முழங்குதல், மகிமையடைதல்
0. பழைய எற்பாட்டு போஜன வகைகள்:
1. ஆகா 2:11 அப்பம், சாதம், திராட்சைரசம், எண்ணெய்
2.1இரா 19:6 சுடப்பட்ட அடை வி.ம்: 1சாமு 30:12 அடை [எல்) திரும்ப கிடைக்கும் உயிர்
3. 1சாமு 9:24 முன்னந்தொடை வி.ம்: யாத் 29:27 முன்னந்தொடை (எல்) பரிசுத்தப்படுத்தப்பட்டது
4. யோபு 36:16 கொழுமையான பதார்த்தங்கள் வி.ம்: ஆதி 27:7 பதார்த்தங்கள் (எல்) ருசியுள்ளது (அ) சமைக்கப்பட்டது
5. 1இரா 19:6 பாத்திரத்தில் தண்ணீர் வி.ம்: மாற் 9:41 தண்ணீர் (எல்) கிறிஸ்துவினால் கிடைக்கும் பலன்
P. புதிய ரற்பாட்டு போஜன் வகைகள்:
1. லூக் 17:8 சாப்பாடு
வி.ம்: லூக் 15:17 பூர்த்தியான ஆகாரம்
2. யோவா 6:9 வாற்கோதுமை அப்பங்கள்
வி.ம்: ரூத் 3:17 வாற்கோதுமை (எல்) கர்த்தர் தெரிந்து கொண்டது
3. லூக் 24:42 பொரித்த மீன்கள்
வி.ம்: உபா 16:7 பொரித்தது (எல்) கர்த்தர் தெரிந்து கொண்டது
4. ரோம 14:20 பதார்த்தங்கள்
வி.ம் எரே 51:34 பதார்த்தம் (எல்) சுவையுள்ளவைகள்
5.கொலோ 2:16 பானம்
வி.ம்: யோவா 6:54 பானம் (எல்) நித்தியஜீவனுக்கு ஒப்பானது
6. லூக் 24:42 தேன்கூட்டுத் துணிக்கை
வி.ம்: சங் 19:10 தேன்கூட்டுத் துணிக்கை (எல்) மதுரமுள்ளது
7. மத் 26:7 பரிமளத்தைலம்
வி.ம்: யோவா 12:3 பரிமளம் (எல்) களங்கமில்லாதது
Q. இயேசுவோடு கூட பொதுவான போஜனம் பண்ணினவர்கள்:
1. மத் 9:10 ஆயக்காரர், பாவிகள்
2. யோவா 21:15 யோனாவின் குமாரனாகிய சீமோன் என்ற பேதுரு
3. லூக் 7:36 பரிசேயரில் ஒருவன்
4. மத் 26:7 ஒரு ஸ்திரீ
5. மாற் 14:3 குஷ்டரோகியாயிருந்த சீமோன்
6.லூக் 14:15 பந்தியிருந்தவர்களில் ஒருவன்
7. வெளி 3:20 கதவைத் திறப்பவன்
8. மாற் 14:1 பரிசேயரின் தலைவன்
9. யோவா 21:20 அன்பாயிருந்த சீஷன்
10. மாற் 14:17,18 சீஷர்கள் 12 பேர்
R. புதிய ஏற்பாட்டில் சில போஜனக் குறிப்புகள்:
1. மத் 25:42 பசிக்கு கொடுக்காத போஜனம்
2. மத் 25:35 பசிக்கு கொடுத்த போஜனம்
3.1கொரி 10:21 பேய்களின் போஜனப் பந்தி
4. அப் 11:3 வாக்குவாத போஜனம்
5. மாற்: 14:3 குஷ்டரோகியாயிருந்த வீட்டின் போஜனம்
6.1கொரி 10:3 ஞான போஜனம்
7. மாற் 6:37 200 பணமுள்ள போஜனம்
8. அப் 2:46 கபடமில்லாத போஜனம்
9. லூக் 14:15 தேவனுடைய இராஜ்யத்தின் போஜனம்
10. லூக் 17:8 ஆயத்தம் பண்ணின சாப்பாடு
11. மத் 11:18 போஜனம் பண்ணாத யோவான்
12. மத் 11:19 போஜனம் பண்ணும் இயேசுகிறிஸ்து
பாடுகளின் திரவியங்கள்:
I. பரிமளம்
A. பரிமளம் தயாரிப்பது எப்படி?
வெள்ளைப்போளம், சுகந்த கருவா பட்டை, சுகந்த வசம்பு, இலவங்க பட்டை, ஒலிவ எண்ணெய் ஆகியவைகளைக் கொண்டு, தைலக்காரன் என்று சொல்லப்படும், விஷேச மனுஷனால் உரு -வாக்கப்படுவதுதான் பரிமள தைலம் (யாத் 30:23,24,25) என்று பரிசுத்த வோதாகமம் தெளிவாக விளக்கியுள்ளது. பரிமள தைலம் என்றால் அபிஷேகம் என்று பொருள். இருதயத்தை களிப்பாக வைத்திருக்கும் விசேஷ குணம் இந்த பரிமளத்திற்கு உண்டு (நீதி 27:9). ஆம், யார் வாழ்வில் அபிஷேகம் ஏராளம், தாரளமாக உள்ளதோ அவர்களின் இருதயம் எப்போதும் களிப்புள்ளதாகத் தான் இருக்கும்.
ஞானத்துக்கும், கனத்துக்கும் ஒப்பிட்டு இந்த பரிமள தைலம் சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிமள தைலத்தை எங்கு வைத்திருந் -தாலும் சரி, அல்லது பயன்படுத்தினாலும் சரி அந்த சுற்று வட் -டாரம் எங்கும் அற்புதமான வாசனை வீசுவதை உணர முடியும் (உன்ன 1:3). அந்த வாசனை இன்பமான வாசனை என்று வேதம் வர்ணிக்கிறது. தேவனுடைய பிள்ளைகளாய், தேவனுக் -காய் வாழ்கின்றவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இன்பமான வாசனை தைலமாகத்தான் இருப்பார்கள். காரணம், அபிஷேகம் என்னும் பரிமளம் அவர்களுக்குள் இருக்கின்றது.
இயேசுவின் சரீரத்தை தொட்ட பரிமள தைலத்தை குறித்து முழு வேதாகமமும் விவரித்துச் சொல்லப்பட்டாலும், எசேக்கியா இராஜா இன்னும் விபரமாய் காண்பிக்கிறதை பார்க்க முடியும் (ஏசா39:2). வெள்ளி, பொன், பொக்கிஷங்கள் போன்ற ஏழு வித -மான பொருட்களுக்கு நடுவில் கொண்டுபோய் இந்த பரிமள தைலத்தை பத்திரமாக வைத்திருந்தான்.
பாபிலோன் இராஜாவின் ஆட்கள் எசேக்கியா இராஜாவின் சுக -பெலனை விசாரிக்க வந்த போது இவன் தன்னுடைய பொக்கிஷ -சாலையைத் திறந்து அங்கு பாதுகாப்பாக வைத்திருந்த பரிமளத் -தைலத்தையும் அவர்களுக்கு காண்பித்து, சந்தோஷப்பட்டான். இராஜாக்களையும், இராஜ அரண்மனைகளையும் வாசனை விசப் பண்ணினது பரிமள தைலம் ஆகும்.
B. உவமைக்கு ஒப்பான சில பரிமளங்கள்:
1. யாத் 30:25 அபிஷேகம் என்னும் பரிமளம்
2. நீதி 27:9 இருதயத்தை களிப்பாக்கும் பரிமளம்
3. பிர 10:1 ஞானம் மற்றும் கனம் என்னும் பரிமளம்
4.உன்ன1:3 இன்பமும் வாசனையுமுள்ள பரிமளம்
5. தானி 10:3 பூசிக் கொள்ளாத பரிமளம்
6.லூக் 7:46 இயேசுவின் பாதத்தை நனைத்த பரிமளம்
7.1சாமு 6:13 பரிமளம் செய்யும் குமாரத்திகள்
8.1நாளா 9:30 பரிமளம் இறக்கும் குமாரர்கள்
9.1 நாளா 16:14 கொழுத்தப்பட்ட பரிமளம்
C. பூசணம்
எந்த ஒரு பொருளையும் சில நாட்கள் பயனபடுத்தாமல் மண் -ணிலோ (அல்லது) தரையிலோ வைத்திருந்தால் அதை சுற்றிலும் பஞ்சு போன்றும், வெள்ளை நிறத்திலும் பூசணம் பூக்க ஆரம்பித்து விடும். பார்ப்பதற்கும் தொடுவதற்கும் பூசணம் அழகாக இருந்தாலும் அது தீங்கு செய்யக் கூடியது. பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
இயேசுவின் மரண சரீரத்தை சீலைகளில் சுற்றி பெட்டியில் வைக்காமல், கல்லறைக்குள் நேரடியாக தரையில் தான் வைத் -தனர். அங்கு ஈரம் இருந்திருக்கும். மண்ணும், பாறையுமாக அந்த கல்லறைகாணப்பட்டது. அப்படிப்பட்ட இடத்தில் இயேசுவின் மரண சரீரத்தை சுற்றிலும் பூசணம் பூத்து விடக் கூடாது என்று கவனமாக இருந்ததால்தான் நிக்கொதேமு கரியபோளத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.
நாமும் கூட சில நாட்கள் வேதம் வாசிக்காமல், சில நாட்கள் ஜெபம் பண்ணாமல் இருந்து விட்டால் நம் வாழ்விலும் கூட பூஞ் -சைகள் என்று சொல்லப்படுகின்றபூசணம் பூத்து விடும். அப்படி ஆகி விடாமல், ஜெபத்தையும், வேத வாசிப்பையும் ஒழுங்காக காத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.
பூசணம் என்றால் பொய் சொல்லுதல் அல்லது நடித்தல் என்று அர்த்தமாகும். யோசுவாவை சந்திக்க வந்த அந்நியராகிய சிலர் பூசணம் பூத்த உணவோடும், பழைய செருப்போடும் வந்து அவனுக்கு முன்பாக நடித்து, வேஷம் போட்டார்கள் (யோசு 9:5,12). அவர்களின் நடிப்பும், வேஷமும் மூன்றேநாளில் வெளிப்பட்டு பூஷ -ணம் பூத்ததைப் போல மாறிப் போனார்கள்.
அவர்களைப் பார்த்து யோசுவா சொன்னதை கவனியுங்கள்.
"இப்போதும் நீங்கள் சபிக்கபட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத் -துக்கு விறகு வெட்டுகிறவர்களும் தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களை விட்டு நீங் -கமாட்டாது என்றான்” (யோசு9:23). கிறிஸ்துவை தெரிந்து கொண்ட யாரானாலும், பூசணம் பூக்கும் வாழ்க்கை வாழ்ந்தால் சாபம்தான் தொடரும். ஆனபடியினால் பூசணத்தை தடுக்க கூடிய கரியபோளமாக மாறுவோம். நம்மையும், நாம் இருக்கும் இடத்தை -யும் காத்துக் கொண்டு வாசனை வீசுவோம்.
D. நிக்கொதேமு-1:
கரிய போளத்தை குறித்து பேசினால் கட்டாயம் நிக்கொதேமுவை குறித்தும் நாம் பேசியாக வேண்டும். காரணம், இயேசுவுக்காக கரி -யபோளத்தை கொண்டு வந்ததே இவன்தான். நிக்கொதேமுவுக்கு மூன்று அடையாளங்கள் உண்டு.
1) பரிசேயன்
2) யூதர்களின் அதிகாரி
3] இஸ்ரவேலருக்கு போதகன்.
இவனுடைய ஆரம்பம் யூதர்களின் மற்றஅதிகாரிகளோடும், பரி -சேயரோடும் இணக்கமாகக் காணப்பட்டாலும், இயேசுவின் திரு -வாய் மொழியை கேட்டது முதல் இயேசுவின் இரகசிய சீஷனாக மாறிவிட்டான் என்றுதான் செல்ல வேண்டும். பரிசேய தலைவர்க ளிடம் இயேசுவுக்காக பரிந்து பேசினவன் இவன்தான் (யோவா 7:50ற்ர்53).சனகெரிப் என்னும் சங்கம் கூடி இயேசுவை கொலை செய்ய தீர்மானித்த சமயத்தில் அதற்கு நிக்கொதேமு எதிர்ப்பு தெரிவித்ததாக வரலாறு கூறுகின்றது.
முன்பு பாவியை போல் இருந்த நிக்கொதேமு பின் நாட்களில் நீதிமான் என்று சொல்லப்பட்ட யோசேப்போடு கூட நட்பு வைத்துக் கொண்டு, இயேசுவின் சரீர அடக்கத்துக்குத் தேவையான பல உதவிகளை செய்தான். அதனால், நிச்சயம் இவனும் நீதிமானாக மாறியிருப்பான். நீங்களும் கூட நம்முடைய பழைய பாவ வாழ்க்கை, பாவ சுபாவங்ளை விட்டு விட்டு நிக்கொதேமுவை போல மாறினால், நீங்களும் நீதிமானாக மாறுவீர்கள் என்பது உண்மையிலும் உண்மையாகும்.
யூதர்கள் இயேசுவை கொலை செய்ததினால் அவர் மரித்து விட்டார் என்று தெரிந்ததும், இயேசுவின் உடலை சகல மரியாதை யோடும் அடக்கம் பண்ண வேண்டும் என்று நினைத்த நிக்கொதேமு ஏறத்தால 100 இராத்தல் கரியபோளமும், வெள்ளைப்போளமும் கலந்து கொண்டு வந்தான்.
ஒரு இராத்தல் என்றால் 320 கிராம் ஆகும். நூறு இராத்தல்
என்றால் 32 கிலோ அளவுள்ள வாசனை திரவியங்களை
கொண்டு வந்தான். கொடுப்பதில் நிக்கொதேமு முன் மாதிரியானவன் என்பதை நிரூபித்து விட்டான்.
முதலாவது தன்னையே கிறிஸ்துவுக்கு கொடுத்தான். பின்பு வாசனை திரவியங்களை நூறு இராத்தல் அளவுக்கு கொடுத்து தன்னை ஒரு முன் மாதிரியாக்கி கொண்டான். நீங்களும் கிறிஸ்து இயேசுவுக்கு உங்களை கொடுங்கள், உங்களால் இயன்றவைகளை கொடுங்கள். கர்த்தர் உங்களையும் நீதிமானாக மாற்றுவார்.
நிக்கொதேமு-II:
"ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு வந்தான்” (யோவா19:39).
இயேசுவின் நான்கு சுவிசேஷங்களில் ஒரே ஒரு இடத்தில் மட் -டும் சொல்லப்பட்டுள்ளதுதான் இந்த கரியபோளம். ஆனாலும் இதை குறித்ததான ஆழ்ந்த சத்தியம் நமக்குண்டு.
கரியபோளம் என்றால், வாசனை பொருள்களில் ஒன்று. இது அந்நாட்களிலேயே விலையுயர்ந்த பொருளாக கருதப்பட்டது. கிறிஸ் -துவுக்காக வாழ்கின்றநாமும் கூட நாம் இருக்கின்றஇடங்களில் எல் -லாம் சத்தியம் என்னும் வாசனையை வீசுகின்றவர்களாக இருக்க வேண்டும்.
இதை தயாரிக்க பயன்படும் மரத்தின் பெயர் AQUILARIA TREE என்பதாகும். இந்த மரத்தின் தண்டு பகுதியின் நடு மையத்திலி -ருந்து வெட்டி, துண்டித்து எடுப்பார்கள். அந்த நடு மையப் பகுதி மிக கடினமாக இருக்கும். அதாவது, நம் ஊர்களில் காணப்படும் கருவேல முள் மரத்தின் நடு மையத்தில் அரக்கு நிறத்தில் இருப்ப -தைப் போலதான் கரியபோள மரத்திலும் காணப்படும். இது, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்காக எவ்வளவு உறுதி -யாக இருக்க வேண்டும் என்பதை காண்பிக்கின்றது. இதை வாசிக்கும் நீங்களும், உங்களின் ஜீவியமும் உண்மையாகவே கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக உறுதியாக உள்ளீர்களா என்பதை தயவு செய்து கணித்துப் பார்த்து சீர்படுத்திக் கொள்ளுங்கள். கரியபோளம் என்பது பூசணம் பூப்பதையும், ஒட்டுண்ணி என்று சொல்லக்கூடிய கரையாண்களையும் தடுக்க கூடியது. இயேசு -வின் மரண அடக்கத்துக்காக கரியபோளத்தைக் கொண்டு வந்த நிக்கொதேமுவை குறித்த சில உவமையான சில வசனங்கள்.
E. மூன்று அடையாளமுள்ளவன்:
1. i. யோவா 3:1
பரிசேயன்
ii. யோவா 3:1
யூதர்களுக்கு அதிகாரி
iii. யோவா:10
இஸ்ரவேலின் போதகன்
2. யோவா 7:50
இராத்திரியில் இயேசுவிடம் வந்தவன்
3. யோவா 3:2
இயேசு பிதாவினால் அனுப்பப்பட்டவர் என்ற வெளிப்பாடு பெற்றிருந்தவன்
4. யோவா 3:2
இயேசுவை ரபி என்றும் போதகர் என்றும் மரியாதையோடு அழைத்தவன்
5. யோவா 3:4
தன் சந்தேகங்களை இயேசுவிடம் கேட்டு தெரிந்து கொண்டவன்
6.யோவா 7:51,52
சனகெரிப் சங்கத்தில் இயேசுவுக்காக பரிந்து பேசினவன் (or) வழக்காடினவன்.
7. யோவா 19:39
100 இராத்தல் கரியபோளம் கொண்டு வந்தவன் (320*100=32கிலோ]
II. கந்தவர்க்கங்கள்:
“வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் -பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு, வேற சில ஸ்திரீகளோடுங் கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்”
(லூக்.24:1).
கந்தவர்க்கம் என்பது புதிதாய் கேள்விபடும் பெயர் போல் காணப்படலாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் சமயத்தில் அவருக்கு பயனபடுத்தப்பட்டு, அவருடைய மரணத்திலும் இது அதிகமாய் உபயோகப்படுத்தப்பட் -டுள்ளது. கந்தவர்க்கம் என்றால் இயேசுவின் கன்னங்கள் என்று அர்த்தமாகும் (உன். 5:13). ஓர் வித்தியாசமானது தான் கந்த -வர்க்கம். இஸ்மவேலர் இந்த கந்தவர்க்கங்களை விரும்பி வாங் -குகிறவர்களாகவும், விற்பவர்களாகவும் இருந்துள்ளனர். எசேக் -கியா இராஜா பொக்கிஷசாலையில் மிக முக்கியமான பொக்கிஷங் -களை வைத்திருந்த இடத்தில் இதையும் வைத்திருந்தான் (IIஇராஜா.20:13). அப்படியானால், இது எவ்வளவு விலையும், மதிப்பும் அதிகமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
யாக்கோபு மற்றும் யோசேப்பின் நாட்களில் கந்தவர்க்த்தை காணிக்கையாகவும் கொடுத்துள்ளனர் (ஆதி. 43:11). காணிக்கை என்றால் பரிசுத்தமானது என்று அர்த்தமாகும். அப்படியானால், கந்தவர்க்கமும் பரிசுத்தமாக கருதப்பட்டது. அதே போல நீங்களும் உங்கள் வாழ்க்கையும் பரிசுத்தமான காணிக்கையாக மாற வேண்டும்.
சேபாவின் இராஜஸ்திரீ, சாலமோனுக்கு அதிகமான கந்த -வர்க்கங்களைத்தான் காணிக்கையாகக் கொண்டு போனாள் (1இராஜா 10:10). அதைப் போல இன்று வரையும் யாராலும் கந்த -வர்க்கத்தை காணிக்கையாக கொடுக்க முடியவில்லை. நீங்கள் கர்த்தருக்கு கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கிற காணிக்கை -கள் எப்படிபட்டதாக உள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
A. சுந்தவர்க்கம் என்றால் என்ன?
கந்தவர்க்கம் என்பது இரண்டு வகைப்படும். முதல் வகை கர்த்தருடைய ஆராதனைக்குரியது. இரண்டாவது வகை ஐசுவரிய -வான்கள், இராஜாக்கள், பிரபுக்கள் பயன்படுத்தக் கூடியது.
வெள்ளைப்போளம் என்றால் வாசனையையும், சாம்பிராணி என்றால் தூபம்/துதியையும், நளததைலம் என்றால் விலையேறப் பெற்றதையும், பரிமளத் தைலம் என்றால் அபிஷேகத்தையும், ஒலிவ எண்ணெய் என்றால் பிழியப்படும் அனுபவத்தையும், பிசின் தைலம் என்றால் காயம்/வைத்தியத்தையும், கரியபோளம் என்றால் மரணம்/அடக்கத்தையும் குறிக்கின்றவைகளாய் இருக்கின்றது.
இழ்கண்ட ஏழு கந்தவர்க்கங்களில், வெள்ளைப்போளம், வெள்ளைகல்பரணி என்ற நளததைலம், பரிமளத்தைலம், கரிய -போளம், சுகந்தவர்க்கம் என்ற ஐந்து மட்டும்தான் இயேசுவின் பாடுகளின் சமயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து என்றால் இயேசுவின் ஐந்து கொடிய காயங்களைக் குறிக்கும். பின்வரும் பகுதியில் ஒவ்வொன்றாக கவனிப்போம்.
உன் 4:14
1. சங் 45:8
வெள்ளைப்போளம்
நளதம்
2.1நாளா 9:29
சாம்பிராணி
குங்குமம்
3. யோவா 12:3
நளத தைலம்
வசம்பு
4. லூக் 23:56
பரிமளத் தைலம்
லவங்கம்
5. யாத் 30:24
ஒலிவ எண்ணெய்
தூபவர்க்கம்
6. ஏரே 8:22
பிசின் தைலம்
வெள்ளைப்போள செடி
7. யோவா 19:39
கரியபோளம்
சந்தனம்
கைகளில் ஆணி, கால்களில் ஆணி, தலையிலே முள்முடி,
முதுகிலே சாட்டை அடி, விலாவிலே ஈட்டியினால் குத்தப்படுதல் .
-பெற்ற இரத்தத்தினால் உங்களை விடுவித்து, சுகமாக்கி,
என்னும் கொடிய ஐந்து காயங்களால் உண்டாகும் விலையேறப் காருண்யம் என்னும் கேடகத்தினால் உங்களை சூழ்ந்து கொள் -ளுவார். நீங்களும் விலையேறப் பெற்றகந்தவர்க்கங்களாக மாறி கிறிஸ்து இயேசுவுக்காக மகிமையாக திகழ கர்த்தர் கிருபை செய்வார்.
B.கந்தவாக்கத்தை எதற்காகப் பயன்படுத்துவார்கள்?
எரே. 34:5 சாவுக்காக பயன்படுத்துவார்கள்
யாருடைய சாவில் கந்தவர்க்கங்களைப் பயன்படுத்தினார்கள்?
2நாளா 16:24 ஆசா ராஜாவின் சாவில் வெகுதிரளான கந்த -வர்க்கங்களைக் கொளுத்தினார்கள்.
C. உவமையாய் வர்ணிக்கப்பட்டுள்ள சில கந்தாவர்க்கங்கள்:
1) ஆதி 43:11
காணிக்கையான கந்தவர்க்கங்கள்
2) 11 நாளா 16:14
கொழுத்தப்பட்ட கந்தவர்க்கங்கள்
3) உன்ன 3:6
வாசனை வீசும் பொடியாகிய
கந்தவர்க்கங்கள்
4) உன்ன 5:13
கன்னங்கள் என்றகந்தவர்க்கங்கள்
5] எண்ணா. 8:2
குடிக்கக் கூடிய கந்தவர்க்கங்கள்
6) ஏசா 39:2
பொக்கிஷமாகிய கந்தவர்க்கங்கள்
7) லூக் 23:56
ஆயத்தம் என்னும் கந்தவர்க்கங்கள்
வ.கு: எரே 34:5 சமாதானத்தோடே சாவாய்: உனக்கு முன்னிருந்த
ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே. என்று சொல்லி, உளக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.
III. வெள்ளைக்கல் பரணி
A. வெள்ளைக்கல் பரணி என்றால் என்ன?
ஒரு ஸ்திரீ வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து அவர் சிரசின் மேல் ஊற்றினாள் (மத் 26:7).
இயேசுவின் சரீரங்களை தொட்டவைகளில் இந்த வெள் -ளைக்கல் பரணிக்குள் இருந்த தைலத்திற்கும் முக்கிய இடம் உண்டு. காரணம், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பிரசங் -கிக்கப்படும், உலகம் முழுவதும் சொல்லப்படும் (மத் 27:13) என்று இயேசுவே தீர்க்கதரிசனமாக சொல்லி விட்டார்.
வெள்ளைக்கல் என்பது வேதாகம நாட்களில் பயன்படுத் -தப்பட்ட ஓர் விலையேறப்பெற்றக் கல்லாகும். இந்த கல் சுத்தமான தங்கம் போன்றபசும் பொன்னுக்கு ஒப்பானது (உன்ன5:15). பெரிய இராஜாக்கள், பிரபுக்கள் இவைகளினால் -தான் அரண்மனையின் உள் பகுதியை அலங்கரிப்பார்கள்.
சூனேமித்தியாளின் அரண்மனையில் கூட இந்த கல்லினால் தான் பெரிய தூண்கள் செய்யப்பட்டிருந்தது. பின் நாட்களில் இந்த கல்லினாலான ஜாடிகள், குடுவைகள், நகை பெட்டிகள் செய்யப்பட்டன. விலையுயர்ந்த வாசனை திரவியங்களையும், தைலங்களையும் இவைகளில் அடைத்து பாதுகாப்பார்கள். அப்படிப்பட்ட தைலத்தை ஊற்றி வைத்த வெள்ளைக்கல்லா -லான குடுவைதான் (மத் 26:7) பரணி என்று சொல்லப்பட் -டுள்ளது. நாம் பயன்படுத்தும் சென்ட் பாட்டில்கள் அழகாக -வும் மிக உறுதியாகவும் இருக்க காரணம், வேத வசனத் -தின்படி வந்த மரபு ஆகும். வெள்ளைக் கல்லால் செய்யப் -பட்ட பரணி எப்படி அழகாகவும் உறுதியாகவும் இருந்ததோ, அது போலவே நாமும் கூட நேர்த்தியாக, உறுதியனாவர்களாக காணப்பட வேண்டும். அப்போதுதான் நம்மால் கிறிஸ்து இயேசுவுக்காக வாசனை வீச முடியும்.
B. நளதம்:
வெள்ளைக்கல் பரணிக்குள் இருந்த தைலம் நளதம் என்றும் உத்தமம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் முத -லாவது நளதத்தைக் குறித்து பார்ப்போம்.
நளதம் என்பது ஒரு செடி. அது தனிமையில் வளராமல் எப்போதும் ஒரு கூட்டமாகவே வளரும். அதுபோல விசுவாச பிள்ளைகளும் தனித்து இருக்க கூடாது. மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு ஐக்கியமாகவே காணப்பட வேண்டும். நமக்கு என்று ஓர் பரிசுத்தமான ஐக்கியம் காணப்பட வேண்டும்.
நளத செடி இருந்த இடத்தில் குங்குமம், வசம்பு, லவங்கம், சந்தனம் ஆகிய மரங்களும் இருந்தன (உன்ன 4:14). மற்ற -தெல்லாம் பெரிய பெரிய மரங்களாக இருந்தாலும், நளதம் ஒரு செடியாகவே இருந்தது. அதே சமயம் நளத செடியைத் -தான் வெள்ளைக்கல் பரணிக்குள் வைக்கும் தைலமாக தேவன் தெரிந்து கொண்டார். அதேபோல, உங்களைச் சுற் -றிலும் பெரிய மனிதர்கள் செல்வாக்கும் அதிகாரமும் நிறைந் -தவர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு செடியைப் போல இருக்கும் உங்களைத்தான் வெள்ளைக் கல்லாகவுகம், பரணி -யாகவும், வாசனையுள்ள தைலமாகவும் மாற்றப் போகின்றார். உங்கள் கவலைகள் மறையும். கர்த்தர் உங்களை உயர்த்துவார்.
C. உத்தமம்:--
இயேசுவின் தலை மேல் ஊற்றப்பட்ட வெள்ளைக்கல் பர -ணியில் இருந்த தைலம் உத்தமமானது என்று வேதம் சொல்லுகின்றது (மாற்14:3). அப்படியானால் உத்தமம் என் -றால் என்ன என்று பார்ப்போம்
உத்தமமாய் வாழ்கிறவர்களுக்குள் ஏழு அடையாளங்கள் இருக்கும்.
II கொரி 4:2-ல் அவைகளைக் காணலாம்.
1] வெட்கமானதை செய்ய மாட்டார்கள்.
2] அந்தரங்க பாவத்தை வெறுப்பார்கள்.
3) தந்திரமாய் நடக்க மாட்டார்கள்.
4) வசனத்தை புரட்ட மாட்டார்கள்.
5] சத்தியத்தை வெளிப்படுத்துவார்கள்.
6) தேவனுக்கு உண்மையாய் இருப்பார்கள்.
7] மனசாட்சியுடன் நடப்பார்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் இவைகள் அனைத்தும் காணப் -பட்டது. புதிய ஏற்பாட்டில் வாழ்ந்தவர்களில் யோவான்ஸ்நா -னகன் உத்தமனாய் இருந்தான் (லூக் 1:17). இதை வாசிக் -கும் உங்கள் வாழ்வில் உத்தமத்திற்கு தேவையான ஏழு தகு -திகள் உள்ளதா? இல்லையா? என்று சோதித்துப் பாருங்கள். அப்போதுதான் வெள்ளைக்கல் பரணிக்குள் வைக்கப்பட்ட கலங்கமில்லாத (யோவா 12:3) தைலமாக மாறமுடியும். இயேசுவின் தலையையும் குளிரப் பண்ண முடியும். இயேசு -வைப் போல,யோவான்ஸ்நானகனைப் போல மாறுவோம். சாட்சியாய் வாழுவோம். தைலமாய் வாசனை வீசுவோம்.
D. மத். 26:7:
மாற் 14:3 பரணி (எல்) தைலம்
மத் 26:7 பந்தியில் இருபவர்களுக்கு தடவி விடுவது. மாற் 14:3 தலையில் ஊற்றி தேய்யக்கக்கூடியது. அர்த்தம்: மாற் 14:8 இயேசுவின் அடக்கத்தைக் குறிக்கிறது பலன்: மத் 26:13 உலகமுழுவதுள்ள பரிசுத்தவான்கள் அந்த பெண்ணை நினைக்கிறார்கள், பேசுகிறார்கள்.
E.உலமையாய் சொல்லப்பட்டுள்ள சில வெள்ளைகள்:
1. ஆதி 40:16
வெள்ளை கூடைகள்
2.நியா 5:10
வெள்ளை கழுதைகள்
3.யோபு6:6
முட்டையின் வெள்ளை கரு
4. உன்:15
வெள்ளைக்கல் தூண்கள்
5. சக 6:3
வெள்ளைக் குதிரைகள்
6.வெளி 18:12
வெள்ளைக் கல்லுகள்
7.வெளி 19:14
வெள்ளை வஸ்திரங்கள்
VI. சுகந்தவர்க்கம்
"ஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோ -பின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் அவருக்கு சுகந்த வர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு" (மாற்16:1).
இயேசுவின் சரீரத்தை தொட்ட வாசனை திரவியங்களில் மிக முக்கியமானது சுகந்தவர்க்கமாகும். சுகந்த வாசனை யான காணிக்கையாக தேவனுக்கு செலுத்த வேண்டியவை -களில் இதுவும் ஒன்றாகும். "எனக்கு செலுத்தும்படி கவன மாயிருக்க கடவீர்கள்” (எண்28:2) என்று ஆண்டவர் கட்ட ளையும் இட்டிருக்கின்றார். பழைய ஏற்பாட்டு காலத்தில் அப் -படியே செலுத்தியும வந்தனர்.
A. சுகந்த வர்க்கத்தை முக்கியமான மூன்று காரியங்களுக்காக
பயன்படுத்தியுள்ளனர்:
1) யாத் 35:8 யாத் 40:27 }
கர்த்தருக்கு தூபம் காட்ட
2) எஸ்தர் 2:12
ஸ்திரீகள் தன்னை
அலங்கரித்துக் கொள்ள
3) ஆதி 50:2,3 மாற்16:1 '}
மரித்தோரை அடக்கம் பண்ண
B. சுகந்தவர்க்கத்தை இரண்டு விதங்களில் தயாரித்தனர்:
1) II நாளா2:4 தூபம் காட்ட தூளாகவும் (பொடியாக)
2] 1 நாளா9:30 சிக் கொள்ள தைலமாகவும் செய்தனர்
சுகந்தவர்க்கம், பரிமளம், நளதம் போன்றவைகளை பல -ரும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், சுகந்தவர்க்கத்தை மட்டும் எல்லாரும் பயன்படுத்த மாட்டார்கள். காரணம், அது மிக விலையுயர்ந்தது. மிகவும் மதிப்புக்குரியதாகவும் காணப் -பட்டது. ஆனபடியினால்தான் மிகவும் முக்கியமானவர்களாக கருதப்பட்ட, யாக்கோபு, யோசேப்பு, எஸ்தர், இயேசு போன் -றோர்க்கு மட்டும் பயனபடுத்தபட்டுள்ளது. இவர்கள் அனைவ -ருமே ஏதாவது ஒரு வகையில் இராஜாக்களின் வழி மரபை சார்ந்தவர்களாக இருந்ததை காணலாம். சுகந்தவர்க்கத்தை குறித்து மேன்மையாக, மகிமையாக, சிறந்ததாக சொல்லப்பட்டிருந்தாலும், இதை முதன் முதலில் யாக்கோபுடைய மரணத்துக்குத்தான் பயன்படுத்தியுள்ளனர். ஒருவருக்கு முழுமையான முறையில் சுகந்தவர்க்கம் இட வேண்டுமானால், குறைந்த பட்சம் நாற்பது நாட்கள் ஆகும் (ஆதி50:3). அந்த அளவுக்கு அது நுட்பமானது. வித்தியாச -மான பொருட்களையும் உடையது. இப்படி பதப்படுத்தப்பட்ட உடல்கள் தான் பின் நாட்களில் "mummy” என்று அழைக் -கப்பட்டது. அவைகள் பிரமீடுகளாகவும் மாறினது. யாக்கோபு-யோசேப்பு என்னும் இரண்டு பேரின் மரணத் -துக்கும் ஒரே அதிகாரத்தில் சுகந்த வர்க்கமிடுவதை ஆதி 50:3,26-ல் காணலாம். இதுவும் ஓர் விசேஷமான சம்பவம்தான்.
இந்த செய்தியை வாசிக்கின்ற தேவஜனமே, நீங்களும் உங்களின் வாழ்க்கையும் ஓர் அற்புதமான சுகந்தவர்க்கமாக மாறவேண்டும். சுகந்தவர்க்கத்தை போல மூன்று கட்டங்க -ளாக அதாவது, தூபம் என்னும் துதியும், அலங்காரம் என் -னும் சுத்திகரிப்பும், மரணம் நேரிடும் போது சாட்சியும் இருக்குமென்றால் கிறிஸ்துவின் வாசனை உங்கள் மூலமாக வெளிப்படுகின்றது என்று அர்த்தம்.
யாக்கோபு-யோசேப்பு இரண்டு பேரும் மரிக்கும் போது, எங்கள் எழும்புகள் கானானுக்கு கொண்டு போக வேண்டும் என்று சொல்லி விட்டுத் தான் மரித்தனர். அதே போல நாமும் பரம கானான் என்று சொல்லப்படுகின்ற பரம சீயோ -னை குறித்த சிந்தனையும், தரிசனமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் சுகந்தவர்க் -கமாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
C. i. சுகந்தவர்கத்தில் என்னவெல்லாம் ககந்திருக்கும்? (யாத் 30:23):
1. மத் 2:11 வெள்ளைப்போளம் காணிக்கை
2. யாத் 30:22, 23 கருவாப்ட்டை மேன்மை -
3.உன் 4:14 சுகந்த வசம்பு - சிங்கார வனம்
4. நீதி 7:17 இலவங்கபட்டை - வாசனை
5. யாத் 27:20 ஒலிவ எண்ணெய் விளக்கு
ii. எதற்காக பயன்படுத்துவார்கள்?
நீதி. 7:17 படுக்கையிலும் படுக்கை விரிப்புகளிலும் போடக்கூடியது.
iii. யாருக்கெல்லாம் சுகந்தவர்க்கமிட்டனர்?
1. ஆதி 50:26 யோசேப்பின் மரணத்தில் 2.யோவா 19:40 இயேசுவின் மரணத்தில்
D. உவமையாய் வியரிக்கப்பட்டுள்ள சில சுகந்தவர்க்கங்கள்:
1. யாத் 25:6 இஸ்ரவேலர் கொடுத்த சுகந்தவர்க்கம்
2. யாத் 30:23 மேன்மையான சுகந்தவர்க்கம்
3. யாத் 37:29 சுத்தமான சுகந்தவர்க்கம்
4. யாத் 31:11 அபிஷேகம் என்னும் தூபவர்க்கம்
5. ஏசா 3:24 துர்க்கந்தமான தூபவர்க்கம்
6. மாற் 16:1
வாங்கி கொண்டு வந்த தூபவர்க்கம்
7.யோவா 19:40
இயேசுவை சுற்றின தூபவர்க்கம்
V. வெள்ளைப்போளம்
"ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந் -திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரிய போளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு வந்தான்.” (யோவா19:39).
இயேசுவின் சரீரத்தில் பயன்படுத்தப்பட்ட வாசனை திரவி -யங்களில் மிக முக்கியமானது வெள்ளைப்போளம் ஆகும். இந்த வெள்ளைப்போளம் என்பது இஸ்ரவேல் நாட்டில் நெருக் -கமாக புதர் போல் வளர கூடிய “COMMIPORA" என்கின்ற பெயரையுடைய செடியிலிருந்து தயாரிக்கக் கூடியது ஆகும்.
இதை, தூபம் காட்டுதல், வாசனை திரவியம் தயாரித்தல், மருத்துவம் ஆகிய மூன்று காரணங்களுக்காக இஸ்ரவேலர் -களும், யூதர்களும் பயன்படுத்தினர். முக்கியஸ்தர்களை பார்க்க போகும் போது இதை ஒரு பொக்கிஷம் போல கொண்டு போய் கொடுப்பார்கள். இயேசு கிறிஸ்து பிறந்த போதும் சாஸ்திரிகள் இதைதான் கொண்டு வந்து மரியாளி -டமும், யோசேப்பிடமும் கொடுத்தார்கள் (மத் 2:11). அந்த அளவுக்கு இது விலையேறப் பெற்றவெள்ளைப்போளமாகும்.
இயேசு சிலுவையில் வேதனையோடு தொங்கி கொண்டி -ருந்த போதும் இந்த வெள்ளைபோளத்தைத் தான் திராட் -சைரசத்தில் கலந்து கொண்டு வந்து இயேசுவுக்கு கொடுத் -தனர் (மாற்15:23). ஆனால், அவர் அதை ஏற்றுக் கொள் -ளவில்லை. காரணம், அதிக வலி இல்லாமல் இருப்பதற்காக இப்படி கொடுப்பார்கள். இதை பருகி உடலில் வலி இல்லாமல் போனால், பிதாவின் சித்தம் நிறைவேறாது என்பதற்காகவும், நம்முடைய வேதனைகளை அவர் சிலுவையின் மீது சுமந்து தீர்ப்பதற்காகவும் அவர் அதை பருகவில்லை.
வெள்ளை போளத்தில் வாசனையுள்ளது, வாசனையில் -லாதது என்று இரண்டு வகை உண்டு (உன்ன5:5). வாச -னையில்லாததை கதவு ஜன்னல் போன்றபொருட்களுக்கும், வாசனையுள்ளதை உடலிலும் பூசிக் கொள்வார்கள்.
கானான் தேசத்தில் காணப்படும் ஆறு விதமான உச்சிதங் -களில் வெள்ளைப்போளமும் ஒன்றாகும் (ஆதி43:11). யாக் கோபு இதைதான் யோசேப்புக்கு கொடுத்தனுப்பினான். முக் -கியமாய் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு, அதாவது கர்த்தர் இதற்கு "மேன்மையான வெள்ளைப்போளம்" என்று பெயர் வைத்தார் (யாத்30:23). ஆம், தேவனுடைய பார்வை -யில் கணம் பெற்றவர்கள் மேன்மையானவர்கள்தான் என்ப -தில் சந்தேகமேயில்லை.
இதை வாசிக்கும் அன்பான தேவ ஜனமே, சாதாரண செடியை இவ்விதமாய் விலையேறப் பெற்றதைலமாக, பொக் -கிஷமாக, மேன்மையானதாக மாற்ற கர்த்தரால் ஆகும் என் -றால், உங்களையும கூட தேவன் இப்படி மாற்ற வல்லவராய் இருக்கிறார்.
மற்றவர்களின் பார்வையில் நீங்கள் ஒரு சாதாரண செடி -யைப் போல காணப்படலாம். உங்களுக்குள்தான் தேவன் கிருபை, தாலந்து, பொக்கிஷங்களை வைத்துள்ளார்.
நிச்சயமாக நீங்களும் வாசனை திரவியமாக அற்புதமான வெள்ளைபோளமாக மாறப் போகின்றீர்கள். கர்த்தருடைய இந்த வார்த்தையும், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமை -யும் இப்படி செய்யும். விசுவாசியுங்கள், விசுவாச அறிக்கை -யிடுங்கள், தேவனை ஸ்தோத்தரியுங்கள், கர்த்தர் உங்களை கனம்பண்ணி, மேன்மைபடுத்தி வாசனை வீசப் பண்ணும் நேரம் வந்து விட்டது. இந்த வார்த்தைகள் நடக்கும், நிறை -வேறும், சம்பவிக்கும் நீங்கள் காண்பீர்கள், கிறிஸ்துவுக்காக சாட்சியாக நிற்பீர்கள்.
A. உவமையாய் சொல்லப்பட்டுள்ள சில வெள்ளைப்போளங்கள்:--
1.ஆதி 37:25
கீலேயாத்தின் வெள்ளைப்போளம்
2.ஆதி 43:11
உச்சிதமான வெள்ளைப்போளம்
3. யாத் 30:23
மேன்மையான வெள்ளைப்போளம்
4. எஸ்த 2:12
சுத்திகரிப்புக்குரிய வெள்ளைப்போளம்
5. சங் 45:8
வஸ்திரங்களில் தடவும் வெள்ளைப்போளம்
6.உன் 3:6
வாசனை வீசும் வெள்ளைப்போளம்
7.உன் 5:13
உதடுகளுக்கு ஒப்பான வெள்ளைப்போளம்
8.மத் 2:11
பொக்கிஷம் போன்றவெள்ளைப்போளம்
9. யோவா 19:39,40
இயேசுவை அடக்கம்
பண்ணின வெள்ளைப்போளம்