சிலுவையின் வரலாறு பாகம் 25

 



சிலுவையின் வரலாறு பாகம் 25

முத்தமும் - எச்சிலும்:


“உடனே அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ் செய்தான்” (மத் 26:49).


சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை ஆசைப் -பட்டு கேட்டபதும், கொடுத்தமும் ஆசையோடு பெற்றுக் கொள்வதும் முத்தம் ஆகும். முத்தம் என்பது உண்மையான அன்பின் வெளிப் -பாடு ஆகும். ஆனால், "முத்தம் என்றால் அடையாளம்" (மத் 26:48) என்று வசனம் சொல்கின்றது.


இயேசுவோடு கூட இருந்த 12 சீஷர்களும் இயேசுவை போலவே ஒரே மாதிரியாக இருந்தனர். அதனால், இயேசு யார்? சீஷர்கள் யார் என்று போர்வீரர்களுக்கு தெரியாதபடியினால், யூதாஸ் கூட்டமான ஜனங்களோடு வந்து, (லூக் 22:47) இயேசுவுக்கு முத்தம் கொடுத்தான். இதை கவனமாய் பார்த்துக் கொண்டிருந்த போர்வீரர்கள் உடனே வந்து இயேசுவை பிடித்தனர்.


A. யூதாசின் வார்த்தைகள்:


இயேசுவுக்கு முத்தம் கொடுக்க வருவதற்கு சற்று முன்பும், முத்தம் கொடுக்கும் போதும் யூதாஸ் பயன்படுத்தின வார்த்தை -களை வேதம் படம் பிடித்துக் காண்பிக்கின்றது.


1) மத் 26:48 இயேசுவை "அவன்தான்” என்று சொல்லி கணயினம் பண்ணினான்.


2)மாற் 14:44 "எவனை முத்தஞ் செய்வேனோ" என்று அற் -பமாய் பேசினான்.


3) மாற் 14:44 "பிடித்து பத்திரமாய் கொண்டு போங்கள்" என்று எதிரிகளுக்கு ஆலோசனை சொன்னான்.


4) மத் 26:49 இயேசுவை “வாழ்க” என்று கபட்டுத்தனமாக வாழ்த்தினான்.


5) மாற் 14:44 "ரபீ, ரபீ”என்று பொய்யான உதடுகளோடு திரும்ப திரும்ப அழைத்தான்.


இவ்வளவு கபட்டுதனத்தையும், வஞ்சகத்தையும் உள்ளம் நிறைய வைத்துக் கொண்டு, எதுவுமே அறியாதவன் போல் வந்து சூது நிறைந்த முத்தத்தை கொடுத்தபடியினால்தான் "இயேசு அவனை நோக்கி யூதாசே முத்தத்தினாலேயா மனு -ஷக்குமாரனைக் காட்டிகக் கொடுக்கிறாய்” (லூக்22:48) என்று ஏக்கத்தோடும், பரிதாபத்தோடும் கேட்டார்.


அருமையான சகோதரர்களே, சகோதரிகளே, கபடும், வஞ்ச -கமும், சூதும், சூழ்ச்சியும், சூட்சுமமும், உங்கள் வாழ்க்கையில் காணப்படும் என்றால், அவைகளை சத்திய வசனத்தினாலும், இயேசுவின் இரத்தத்தினாலும் ஜெயித்து விடுங்கள். முற்றிலுமாய் அழித்து விடுங்கள். இல்லாவிட்டால் அவைகள் உங்களை அழித்து விடும்.


B. யூதாசின் முடிவு:


முத்தத்தினால் காட்டிக் கொடுத்த யூதாஸ், அதனால் எதை எதையெல்லாம் இழந்தான் என்று வாசித்துப் பாருங்கள்.


1) மத் 27:3 "மனஸ்தாபப்பட்டு" நிம்மதியை இழந்தான்.


2) மத்27:4 "பாவம் செய்தேன்" பரிசுத்தத்தை இழந்தான்.


3) மத்27:5 "வெள்ளிக்காசை எரிந்து விட்டு” தான் ஆசைப் -பட்ட 30 வெள்ளிக்காசை இழந்தான்.


4) அப் 1:17 "அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு'' சீஷர்களின் ஐக்கியத்தை இழந்தான்.


5) அப் 1:17 “இந்த ஊழியத்தில் பங்குப் பெற்றவனாயிருந்தான்" ஊழியத்தை இழந்தான்.


6) அப்1:18 "அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து” அவன் வாங்கியிருந்த நிலத்தை இழந்தான்.


7) அப்1:18 “குடல்களெல்லாம் சரிந்து போயிற்று" வயிற்றில் இருந்த குடல்களையும் இழந்தான்.


8) மத்27:5 “நான்று கொண்டு செத்தான்” தன்னுடைய உயிரையும் இழந்தான்


முத்தத்தை அற்பமாய் எண்ணாதிருங்கள். அதற்கு உணர்ச்சி மட்டுமல்ல, சக்தி இருக்கிறது, வல்லமை இருக்கிறது, உயிர் இருக்கிறது. முத்தத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று பரிசுத்த முத்தம், மற்றொன்று பாவத்தின் முத்தம்..


லூக்கா 7-ம் அதிகாரத்தில் பாவியான ஓர் ஸ்திரீ கொடுத்த முத்தம் அவள் சாட்சியை உலகம் முழுதும் பரவ செய்தது. ஆனால், மத்26-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட யூதாஸின் முத்தம் அவனை தற்கொலைக்கு கொண்டு சென்றது.


இவர்கள் இருவரில் நீங்கள் யாரைப் போல இருக்கின்றீர்கள் என்பதை இன்றேசிந்தித்து முடிவு எடுங்கள். மற்றவர்களால் பாவி என்று அழைக்கப்பட்ட ஸ்திரி இயேசுவுக்கு முன்பாக பாவம் மன்னிக்கப்பட்டவளானால் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக -வும் பரிசுத்தனாகவும் காணப்பட்ட யூதாசின் வாழ்க்கை அகோரமானது.


நியாயதீர்ப்பு நாளில் இந்த இரண்டு பேரில் யார் உங்களை சந்திப்பார்கள் யோசித்துப் பாருங்கள். உங்கள் உதடும், உள்ள -மும், உண்மையுள்ளவைகளாய் மாறட்டும்.


C. மூன்று சுவிசேஷங்களில் வரும் முக்கிய முத்தங்கள் சில:


1. மத் 26:48

அடையாளம் என்ற முத்தம்


2. மத் 26:49

வாழ்த்துதல் என்ற முத்தம்


3.மாற் 14:44

காட்டிக் கொடுத்த முத்தம்


4. மாற் 14:45

ரபி, ரபி என்ற முத்தம்


5. லூக் 7:38

கண்ணீரின் முத்தம்


6. லூக் 7:45

ஓயாமல் கொடுத்த முத்தம்


7. லூக் 15:20

மனதுருக்கத்தின் முத்தம்


8. லூக் 22:48

கேள்வி கேட்ட முத்தம்


 எச்சில் என்பது சரீரத்தில் உள்ள இரத்தம் ஊறும் தன்மை என்று சொல்வார்கள். ஆனால், அதே எச்சில் உமிழ்நீர் என்றும் சொல்லப்பட்டு அது பல ஆழமான சத்தியத்தையும் உபதேசத் -தையும் கொண்டதாக உள்ளது.


எச்சில் என்பது பல அர்த்தங்களை கொண்டதாக உள்ளது. வெட்கம், பரியாசம், அவமானம், நிந்தை மற்றும் அற்புதம் ஆகிய -வைகளைக் குறிக்கும்.


ஒரு முறைஅவர் மேல் துப்பினார்கள், அதாவது உடலின் பல இடத்தில் படும்படியாக. இன்னொரு முறை அவருடைய முகத்தில் துப்பினார்கள். உடலின் மீது துப்பின சம்பவம் பரியாசத்தைக் காண்பிக்கின்றது (மத் 27:30,31). அவருடைய முகத்தில் துப்பி -னது கிண்டல் மற்றும் கேலி பண்ணுதலைக் குறிக்கின்றது. இப்படி பல விதங்களில் யூதர்களால் இயேசு துப்பப்பட்டார்.


முதலில் ஒரு விசை ஒருவன் மட்டும் துப்பினான் என்றும் பின்பு சிலர் சேர்ந்து (மாற்14:68) அவர் மேல் துப்பினார்கள் என்றும் பார்க்கிறோம். இந்த சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறை -வேறும்படியாக நடந்துள்ளது (ஏசா50:6). தீர்க்கதரிசனம் என் -றால் நல்லது மட்டும் நடக்கும் என்று நினைக்கக் கூடாது. எச் -சில் துப்பப்படுதல் போன்றநாம் எதிர்பார்க்காததையும் தீர்க்கதரி -சனம் செய்யும். எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ள நாம் தான் ஆயத்தமாக இருக்க வேண்டும்.


இயேசு சொன்னார்:"உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக் -கவில்லை” (ஏசா 50:6) என்றார். அப்படியானால் எவ்வளவு அர்ப்பணிப்பும், தாழ்மையும், சகிப்புத் தன்மையும் இயேசுவிடம் இருந்துள்ளது என்று பாருங்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு இருந்தபடியினால்தான் அவர் பரலோகம் வரை உயர்த்தப்பட்டார். தாழ்மை, பொறுமை, உண்மை இம்மூன்றும் இருந்தால் இந்த உலகத்தையே நம்மால் ஆளுகை செய்ய முடியும்.


எச்சில் என்னும் உமிழ்நீரை அவமானத்துக்கும், வெட்கத்துக் கும் அடையாளமாக யூதர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், இயேசுவை நோக்கிப் பாருங்கள். அதே எச்சிலை பயன்படுத்தி குருடனுடைய கண்களை ஆண்டவர் திறந்தார் (யோவா9:6,7). அதுவே அற்புதமாகவும் மாறினது.


இந்த சம்பவம் உங்களுக்கு ஓர் பாடம் என்பதை மறக்காதீர்கள். யூதர்களை போல அவமானத்தின் அடையாளமாக இருக்கப் போகின்றீர்களா? அல்லது இயேசு கிறிஸ்துவைப் போல அற்புதத் -தின் அடையாள சின்னமாக மாறப் போகின்றீர்களா?


எச்சில் என்னும் உமிழ்நீரை அற்பமாக எண்ணாதீர்கள். அந்த சாதாரண எச்சில்தான் பிறவி குருடனுக்கு பார்வையை கொண்டு வந்தது. மற்றவர்களின் கண்களுக்கு எச்சில் போல காணப்படுகி -றவர்களைக் கொண்டு தான் ஆண்டவர் சிலருக்கு பார்வையை -யும், சிலருக்கு வெளிச்சத்தையும், சிலருக்கு வாழ்க்கையையும் கொடுக்கப் போகின்றார்.


தரித்திருங்கள், பொறுத்திருங்கள், காத்திருங்கள் தேவ வல் -லமை மகிமையாய் செயல்படுவதைக் காண்பீர்கள்.


D. உதாரணமாய் காணக்கூடிய எச்சில்கள்:


1) லேவி 15:8 : தீட்டு என்னும் எச்சில்


2) எண் 12:14 : வெட்கம் என்னும் எச்சில்


3) உபா 25:9 : அடையாளம் என்னும் எச்சில்


4) மத் 26:67 : முகத்தில் துப்பின எச்சில்


5) மத் 27:30 : சிரசில் அடித்த எச்சில்


6) மாற் 10:34 : பரியாசம் என்னும் எச்சில்


7) யோவா 9:6 : அற்புதம் செய்த எச்சில்


திராட்சைரசமும் காடியும்:


"பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்க -ளுக்குக் கொடுத்து நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண் -ணுங்கள், இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது"(மத் 26:27,28).


திருவிருந்து, இராப்போஜனம், அப்பம் பிட்குதல், நற்கருணை, கர்த்தருடைய பந்தி போன்ற வார்த்தைகளை கேட்டாலோ அல்லது அதில் பங்கு பெற்றாலோ அதில் முக்கியம் வகிப்பது இயேசுவின் இரத்தமாகும். இந்த இரத்தத்திற்கு நிழலாட்டமாக இயேசு பயன் -படுத்தினது திராட்சரசம் ஆகும். இந்த திராட்சரசத்தை ஜுஸ் என்றும் ஓயின் என்றும் ஆங்கிலத்தில் ஸ்டைலாக சொல்லிக் கொள்ளுவார்கள்.


திராட்சரசத்தில் பல விதங்கள் உண்டு. முகக்களைக்காக பயன் -படுத்தும் திராட்சரசம், ஆடல் பாடல் மற்றும் கொண்டாட்ட நேரங் -களில் பயன்படுத்துவதற்க்காக அதற்கென்று தயாரிக்கப்பட்ட திராட்சரசம், காயம்பட்டோருக்காக குடிக்க கொடுக்கவும் காயம் -பட்ட இடங்களில் தடவவும் என்று தனிப்பட்ட திராட்சரசம், போதை பழக்கம் உள்ளவர்கள் போதை ஏறுவதற்கென்று குடிக் -கப் பயன்படுத்தும் மிகப் பழமையான, நாள்பட்ட திராட்சரசம், இப்படி பல விதமான திராட்சரசம் இருந்தாலும், இரத்தத்திற்கு இணையாக சொல்லப்பட்டதும் பயன்படுத்தபட்டதுமான பரிசுத்த -மான திராட்சரசமும் உண்டு.


கிறிஸ்தவத்தில் ஆசாரங்கள் என்பது மிக மிகக் குறைவு. மிக எளிதும் கூட. அந்த குறைவான ஆசாரங்களில் இரண்டு மிக முக்கியமானதாகும். ஒன்று ஞானஸ்நானம், இரண்டு கர்த் -தருடைய பந்தி. ஞானஸ்நானம் ஒருவர் தனியாய் பெற்றுக் கொள்வது, கர்த்தருடைய பந்தியோ சபையாக அல்லது கூட்டமாக பெற்றுக் கொள்வதாகும். ஞானஸ்நானம் தேவனோடு இருக்கும் உடன்படிக்கையையும், ஐக்கியத்தையும் காண்பிக்கின்றது. கர்த்த -ருடையப் பந்தியோ ஐக்கியத்தைக் காண்பிக்கின்றது. உண்மை -யான எந்தவொரு கிறிஸ்தவனும், கிறிஸ்தவளும் இந்த இரண்டு ஐக்கியத்திலும் நிலைத்திருப்பார்கள்.


திராட்சை என்றவார்த்தையும், திராட்சை பழமும் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், அதே திராட்சை என்றவார்த்தையில் பல பகுதிகள் உண்டு. அவைகளைக் குறித்து வேதாகமம் முழுவ -திலும் நம்மால் வாசிக்க முடியும். ஆனால், அந்தோ பரிதாபம், அநேகர் அந்த பகுதிகள் எது எது என்றோ, அவைகள் எழ்ற்க் -காக சொல்லப்பட்டுள்ளது என்றோ கவனிப்பதும் கிடையாது. அறிந்து கொள்ள விரும்புவதும் கிடையாது.


ஒரு மருத்துவர் மருத்துவம் படித்து முடிக்கும் முன்பாக ஒரு மனுஷனின் உடல் உள் உறுப்புகள் எது, எது, எத்தனை என்று கற்று தேறிவிடுகின்றார். அதேபோலத்தான் ஒவ்வொரு கிறிஸ்தவ -ரும் திராட்சையை குறித்த அனைத்து பகுதிகளையும் நன்றாக -உய்ந்து, ஆராய்ந்து தெரிந்திருக்க வேண்டும். திராட்சையின் பகு -திகள் அனைத்தும் ஏறத்தால கீழே சொல்லப்பட்டுள்ளது.


அதற்க்கான ஆவிக்குரிய அர்த்தங்களையோ நீங்கள் ஜெபித்து, வேதத்தை வாசிதக்து தெரிந்து கொள்ளுங்கள். காரணம், ஆவிக்குரிய அர்த்தங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படும்.


1. திராட்சை வேர் சங் 80:8,9


2. திராட்சை இலை............ ஏசா 34:4


3.  திராட்சை செடி..  யோபு 15:33


4. திராட்சை கொடி.. மல்  3:11


5. திராட்சைக் கிளை............ எசே 8:17


6. திராட்சைக்குலை.. 1 சாமு 25:18


7. திராட்சைக்கொப்பு எசே 17:6


8. திராட்சைபூக்கள்.. ஆதி 40:9,10


9. திராட்சைக்காய்... எரே 31:29,30


10. திராட்சைப்பழம்......புலம் 1:15


11. திராட்சை ஆலை சக 14:10 ...


12. திராட்சை வற்றல்...... எண் 6:3


13. திராட்சைரசம்........ ஆமோ 2:12


14. திராட்சைத்தோட்டம்... Iஇரா 21:18


15. திராட்சைத்தோட்டக்காரர்....... ஏரே 52:16


16. திராட்சை நிழல்......... .... எரே 4:4


17. திராட்சையின் பலன்.......... ஏசா 32:10


18. திராட்சை விதை எண் 6:4 ...


19. திராட்சை தோல் எண் 6:4


20. திராட்சைரத்தம்... ஆதி 49:11


திராட்சை என்றபெயரில் எப்படி இத்தனை வகைகள் இருக்கி -றதோ, அதே போலதான் இயேசு என்னும் மனுஷக்குமாரனுக் -குள்ளும் ஏராளமான தன்மைகளும், குணங்களும் உண்டு. இதை வாசிக்கும் நீங்கள் அதிக ஜெபத்தோடும், மிகுந்த பரிசுத் -தத்தோடும் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்றால், ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விதமான கிருபையை உணரலாம், அனுப -விக்கலாம்.


திராட்ச பழத்தை பழமாக பார்க்காதீர்கள், கணியாக பாருங்கள். திராட்சரசத்தை ரசமாக கருதாதீர்கள், இயேசுவின் இரத்தமாக நினையுங்கள். திராட்சரச பாத்திரத்தை பாத்திரமாக எண்ணாமல், பாத்திரத்தை உங்கள் சரீரமாக சிந்தியுங்கள். கர்த்தருடைய பந் -திக்கு சென்றவுடன் உங்களை நீங்களே மறந்து விடுங்கள். உங் -களின் எண்ணங்கள், யோசனைகள், உணர்வுகள் அனைத்தை -யும் நீங்களே தடை செய்யுங்கள். தேவனுடைய பிரசன்னத்தை உணருங்கள். தேவ கிருபையில் நுழையுங்கள். தேவ வார்த்தை -யாகிய வேத வசனத்தின் சிந்தையில் மூழ்குங்கள். அதிகமாய் ஸ்தோத்திரம் பண்ணுங்கள். வியாகுலத்தின் கண்ணீரால் நிரம் -புங்கள். அதன் பின்பு, திராட்சரசமாகிய இயேசுவின் இரத்தத்தை பானம் பண்ணுங்கள். அப்பொழுது, நீங்கள் புது பெலனை பெறு -வீர்கள், ஆரோக்கியத்தை அடைவீர்கள். கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக பிரகாசிப்பீர்கள்.


இயேசு கிறிஸ்து கடைசியாக பயன்படுத்தின திருவிருந்தின் திராட்சரச பாத்திரம் நான்கு விதமான பாத்திரமாக சொல்லப்பட் -டுள்ளதை காணலாம். அவைகளை ஜெபத்தோடும், ஸ்தோத்திரத் -தோடும் கவனிப்போம்.


A. ஸ்தோத்திர பாத்திரம்:- (மத் 26:27)


"பின்பு பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி”. திராட்சரசத்தின் பாத்திரத்தை எடுத்து அவர் ஸ்தோத்தரித்தினால், வெறுமையாய் இருந்த பாத்திரம் ஸ்தோத்திர பாத்திரமாய் மாறிப் போனது. ஸ்தோத்திரம் என்பது, எங்கும், எப்போதும், எல்லா நேரத்திலும் சொல்ல வேண்டிய வார்த்தை. இடைவிடாமல் மன -தார நூறு ஸ்தோத்திரங்களைச் சொன்னால் அதற்கேற்ற பலன் உண்டாகும். கண்களை மூடி மிகுந்த தியானத்துடன் ஐந்நூறு ஸ்தோத்திரங்களை சொல்லிப் பாருங்கள், மிகப் பெரிய பலன்களைக் காண்பீர்கள்.


இயேசு அப்பத்தையும், மீன்களையும் எடுத்து ஸ்தோத்திரம் பண்ணினார் (மாற் 8:6,7,8). கூடை என்ற பாத்திரம் அப்பங்க -ளாளும், மீன்களாளும் நிறைந்தது. இந்த சம்பவம் திருப்தியை குறிக்கின்றதாய் உள்ளது. கர்த்தருடைய பந்தியில் ஸ்தோத்திரத் -துடன் காணப்பட்டால், உங்களையும் ஆண்டவர் ஸ்தோத்திர பாத்திரமாய் மாற்றுவார். உங்கள் வாழ்க்கையும் ஜீவியமும் எப் -போதும் திருப்தியுள்ளதாக இருக்கும். இடைவிடாமல் ஸ்தோத் -தரிப்போம். திருப்தியை அனுபவிப்போம்.


B. பானம் பண்ணும் பாத்திரம் (மத் 26:27);


"அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்” கர்த்தருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுவது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியமும் சிலாக்கியமுமாகும். அதே சமயம், அபாத்திரமாய் பானம் பண்ணுவது மிகப் பெரிய குற்றமாகும். அபாத்திரம் என்றால் ஆக்கினை தீர்ப்பு என்றும் ஆக் கினை என்றால் தண்டனை என்றும் அர்த்தமாகும் (Iகொரி 11:29). தானியேல் தீர்க்கதரிசியின் நாட்களில் வாழ்ந்ததான பெல்சாத்


-சார் என்றராஜா தேவனுடைய ஆவயத்திலிருந்து கொண்டு வஜ்ப் -பட்ட பரிசுத்த பாத்திரங்களில் மதுபானத்தை ஊற்றி, அவனும், பிரபுக்களும், அவர்களின் மனைவிகளும், வைப்பாட்டிகளும் குடித்தார்கள். இது கர்த்தருடைய பார்வையில் அபாத்திரமாய் காணப்பட்டது (தானி 5:2,4,30). அதனால் உண்டானத் தண்டனை என்ன தெரியுமா? அன்றைக்கு இரவே ராஜா கொலை செய்யப்பட்டான்.


பாத்திரமாய் இருங்கள், அபாத்திரமாய் போகாதீர்கள். பயம், நடுக்கம், பரிசுத்தம் இல்லாமல் திராட்சரசமாகிய இயேசுவின் இரத்தத்தை பானம் பண்ணாதீர்கள். பெல்ஷாத்சாரின் சம்பவம் தண்டனையை குறிப்பதாக உள்ளது.


C. பாவமன்னிப்பின் பாத்திரம் (மத் 2628):


"இது பாவ மன்னிப்புண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுகிற இரத்தமாயிருக்கிறது" பூவிலேயே சிறந்தது மன்னிப்பு என்பார்கள். கிறிஸ்தவத்தின் அடையாளங்களில் மன்னிப்பும் ஒன்றாகும். மன்-னிக்கிறவன் மனிதன் என்றும், மன்னித்து மறக்கிறவன மா மனிதன் என்றும் சொல்வார்கள். ஆம், மன்னிப்பு என்பது அப் -படிப்பட்ட ஓர் சிறந்த தன்மையாகும். இயேசு கிறிஸ்துவும் கூட சிலுவையில் சொன்ன ஒன்பது முக்கியமான வார்த்தைகளில் மன்னிப்பும் ஒன்றாகும்.


திராட்சரசம் என்னும் இயேசுவின் இரத்தம் உள்ள பாத்திரம் மன்னிப்பின் பாத்திரமாய் மாறினது. மனிதர்களாகிய நாமும் கூட எல்லா சூழ்நிலைகளிலும், எல்லாரையும் மன்னிப்புக்கு ஏற்ற ஒரு சம்பவத்தை வேதம் அழகாய் சொல்கின்றது.


மாய வித்தைக்காரனாகிய சீமோன் என்பவன் பிலிப்பு என்னும் ஊழியக்காரன் மூலம் இரட்சிக்கப்பட்டான். மனம் திரும்பினான், ஞானஸ்நானமும் எடுத்தான் (அப் 8:9ற்ர்24). ஆனால், சில நாட்களுக்குப் பின்பு எருசலேமிலிருந்து ஊழியத்திற்காக சன்ாரி -யாவிற்கு வந்த பேதுரு சீமோனை பார்த்து கடிந்து கொண்டான். காரணம், சீமோனுக்குள் மகா கொடிய சுபாவங்கள் இன்னும் காணப்பட்டது.


பணத்தினால் எதையும் சாதிக்க நினைத்தான்.


நினைவுகள் சரியில்லாதவன்.


நாசமாய் போக வேண்டியவன்.


செம்மையான இருதயம் இல்லாதவன்.


துர்க்குணம் நிறைந்தவன்.


கசப்பானவன்.


பாவம் என்னும் கட்டில் அகப்பட்டவன்.


இரட்சிக்கப்பட்டு, மனம் திரும்பி, ஞானஸ்நானம் எடுத்த சீமோ -னுக்குள் மேற்கண்ட ஏழு பாவங்கள் காணப்பட்டது. ஆனாலும், பேதுரு அவனை சபிக்காமல்"உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்” என்று மன்னிப்புக்கான வழியைக் கற்றுக் கொடுத்தான். இதுதான் ஊழியத்தின் உச்ச கட்டம் என்று சொல்லலாம்.


பாவத்தை மன்னிக்க ஏற்கனவே இயேசு சீஷர்களுக்கு அதிகா -ரம் கொடுத்திருந்தார் (யோவா 20:23). அந்த மன்னிப்பின் அதி -காரத்தை பேதுரு சரியாய் பயன்படுத்தி மன்னித்தார்


அன்பானவர்களே, நீங்களும் கூட பாவத்தை மன்னிக்கும் பாத் -திரமாக மாறுங்கள். உங்களை சுற்றியிருக்கிறவர்களை மன்னி -யுங்கள். உங்கள் கண்களுக்கு தெரியாத தூரத்தில் இருக்கிற -வர்களையும் மன்னியுங்கள். அப்படி செய்தால் உங்களுக்காக இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தின் பலன் ஒரு போதும் வீண் போகாது.


 புது உடன்படிக்கையின் பாத்திரம் (மத் 26:28):


"இது புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கி -றது”என்று சொன்னார். உடன்படிக்கை என்றால் மத்தியஸ்தம் பண்ணுதலைக் குறிக்கும். இயேசு கிறிஸ்துவும் கூட மத்தியஸ்த -ராயிருந்தார் (எபி 9:15). அவரைக் குறித்த இந்த தீர்க்கதரிச -னம் அவருடைய பாடுகளின் போதே நிறைவேறினது.


ஏரோது இராஜாவாகவும், பிலாத்து தேசாதிபதியாகவும் இருந்த -னர். ஆனால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகை-யாளிகளாக இருந்தனர். பல காலங்கள் பகையாளிகளாக இருந்தவர்கள் இயேசுவை நியாயம் விசாரித்ததின் நிமித்தம் இருவரும் சிநேகிதர்களானார்கள் (லூக் 23:12). ஏரோது என் -றால் கொலைகாரன் என்றும், பிலாத்து என்றால் கொடூரமா னவன் என்றும் அர்த்தமாகும். அப்படியானால், கொலைகார -னாய் இருந்தவனையும், கொஞரமானவனாய் இருந்தவனையும் ஆண்டவர் சந்தித்ததினால், அவர்களின் பெயரும் பரிசுத்த வேதாகமத்தில் இடம் பிடித்தது.


பகைகவர்களாய் இருந்தவர்களை ஆண்டவர் தம்முடைய பாடு -கள் என்னும் உடன்படிக்கையினால் ஒப்புரவாக்கினார், ஒன்றாக் -கினார், ஐக்கியமாக்கினார். கிறிஸ்தவர்களுக்கும் இப்படிப்பட்ட மத்தியஸ்தம் பண்ணும் உடன்படிக்கையின் அபிஷேகம் கிரியை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் திராட்சரசமாகிய இயேசுவின் இரத்தம் நிறைந்த பாத்திரம் முழுமையடையும். கிறிஸ்துவின் பாடுகளும் வீண் போகாது.


கானவூர் கல்யாணத்தில் திராட்சரசம் குறைவுபட்டது அனை -வரும் அறிந்ததே. ஆனால், அந்த கல்யாணத்தில் ஆறு கற் -ஜாடிகளுக்கு இணையாக ஆறு வகையான திராட்சரசம் சொல்லப்பட்டுள்ளது.


1. யோவா 2:3

குறைவுபட்ட திராட்சரசம்


2. யோவா 2:3

இல்லாத திராட்சரசம்


3. யோவா 2:9

வந்த திராட்சரசம்


4. யோவா 2:9

மாறின திராட்சரசம்


5. யோவா 2:10

திருப்தியின் திராட்சரசம்


6. யோவா 2:10

நல்ல ரசம்


II.காடி


"கசப்புக் கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார் -கள். அவர் அதை ருசி பார்த்து குடிக்க மனதில்லாதிருந்தார்" (மத்27:34).


இயேசு சிலுவையில் சொன்ன கிருபையுள்ள ஏழு வார்த்தைக -ளில் ஒன்றான தாகமாயிருக்கிறேன் என்ற தலைப்பில் பேசுகிற -யாரானாலும், காடியைக் குறித்து பேசாமல் பிரசங்கத்தை முடிப் -பதில்லை. அந்த அளவுக்கு காடி என்பது இயேசுவைத் தொட்ட பொருட்களில் முக்கியப் பொருளாக மாறிவிட்டது. பழைய ஏற்பாட்டி -லும், புதிய ஏற்பாட்டிலும் பாகுபாடு இல்லாமல் ஆண்களும், பெண்களும் காடியைப் பயன்படுத்தியள்ளனர். காடி என்றால் கசப்பு என்று அர்த்தம் (மத் 27:34).


காடி என்பது ஒரு வகையில் கசப்பையும் மரணத்தையும் குறிக் -கும். “மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம்'


(1சாமு 15:32) என்ற தீர்க்கதரிசனமான வார்த்தை உங்கள் வாழ் -வில் நிறைவேறும் படியாக சாவுக்கேதுவான மரண கட்டுகளிலி -ருந்து உங்களை விடுவித்து, உயிருள்ள சாட்சியாக நிலை நிறுத்தி, உங்கள் மூலம் அவருடைய நாமம் மகிமைபடத்தக்கதான சூழ்நிலைகளை உண்டாக்கப் போகின்றார். இதை விசுவாசியுங்கள். விசுவாசத்தோடும் ஜெபத்தோடும் அற்புதத்தை எதிர்பாருங்கள். காடியின் கசப்பு மாறும்.


காடி என்பது மிகப்பெரிய வேதபாடத்தை உள்ளடக்கியதாகும்.


ஆனாலும், இயேசுவுக்கு பயன்படுத்தக்பட்டக் காடியைக் குறித்த சில சத்தியங்களையம், புதிய காரியங்களையும் சத்திய வசன வெளிச்சத்தோடு கூட தியானித்து ஆராய்ச்சி செய்வோம்.


D. காடியில் முக்கியமாக ஆறு வகைகள் உண்டு: 


1. எண் 6:3 திராட்சை ரசம் கலந்த காழ


2. ரூத் 2:14 உணவுடன் சேர்த்து சாப்பிடும் காழ


 3. மத் 27:34 கசப்பு கலந்த காடி


4. சங். 69:21 தாகத்துக்குக் குடிக்க கொடுக்கும் காடி


5. எண் 6:3 மதுபாணம் கலந்த காடி


 6. நீதி 25:20 வெடித்த புண்ணுக்கு மேல் ஊற்றக்கூடிய காடி


E. கேள்லியும் பதிலும்:


a. காடியைக் குடித்தால் எப்படி இருக்கும்? நீதி 10:26 பற்கள் மரமரத்துப் போகும் கண்களூக்கு புகை மூடடம் போலக் காணப்படும்


b.இயேசுவுக்குக் காடி கொடுக்க காரணம் என்ன? சங் 69:21 தீர்க்கதரிசனம் நிறைவேறவேண்டியிருந்தது இயேசுவின் தாகத்தினிமித்தம் கொடுக்கப்பட்டது 


C. மத் 27:34 சொல்வதுபோல இயேசு ஏன் காடியைக் குழக்கவில்லை?


d. எண் 6:3,4 நசரேயனாய் இருக்க விரும்புகிறவர்கள் காழயை குழக்க விரும்ப மாட்டார்கள்


F. இயேசுவுக்கு மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டதாக வேத வசனங்கள் தெளிவாக கூறுகின்றன:


i.மாற் 15:23,24 - இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன்பாக காடி கொடுக்கப்பட்டது.


a) திராட்சை ரசத்தில் வெள்ளைப்போளம் கலந்தது.


b) இது வலியை மறப்பதற்காக கொடுக்கப்பட்டது.


ii. லூக் 23:35,36 - இயேசுவை சிலுவையில் அறைந்த பின்பு. மத்தியான நேரத்திற்கு முன்பாக கொடுக்கப்பட்டது.


a) ஏழு வார்த்தைகளில் ஒன்றாவது வார்த்தைக்கும் இரண் -டாவது வார்த்தைக்கும் இடைப்பட்ட சமயத்தில் கொடுக்கப்பட்டது.


b) இதன் பின்புதான் பகல் 12 மணி முதல் 3 மணி வரை அந்தகாரம் உண்டானது.


iii. யோவா 19:28,29,30 ; மாற் 15:36 - ஐந்தாவது வார்த்தை சொல்லி முடித்ததும் கொடுக்கப்பட்ட காழ:


a) இது கடற்காளானில் தோய்த்து, ஈசோப்பு என்னும் தண்டில் மாட்டி கொடுக்கப்பட்டதாகும்.


இந்த செய்தியை வாசிக்கும் எனக்கன்பான தேவ ஜனமே, உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவையில் தொங்கி காடியை ருசி பார்த்த இயேசு உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் அனைத்து விதமான காடியைப் போன்ற கசப்பான சூழ்நிலைக ளையும் மதுரமாக மாற்றுவார். “கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும் (நீதி27:7) என்ற அற்புதமான வாக்குத்தத் 

தத்தை உங்களில்

நிறைவேற்றுவார். நீங்கள் கலங்காதீர்கள்.


G. காடியோடு கூட சம்மந்தப்பட்டவர்கள்:


எண் 6:3


a) விரதம் பண்ணிக் கொண்டவர்கள்


b) நசரேய பொருத்தனை பண்ணினவர்கள் சங் 69:20,21 


c) இருதயம் பிளந்தவர்கள்


d) தாகமெடுத்தவர்கள் நீதி 25:20


e) மன துக்கமுள்ளவர்கள் மத் 27:34 


f) இயேசுகிறிஸ்து லூக் 23:36


g) போர்ச்சேவகர்கள் நீதி 10:26


h) சோம்பேறி மத் 27:48


i) அவர்களில் ஒருவன் ரூத் 2:14


j) போவாஸ் ரூத் 2:14


k) ரூத் மாற் 15:36


l) இயேசுவை எலியா என்று சொன்னவன்


H. புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சில காடிகள்:


a.மத் 27:34

கசப்புக் கலந்த காடி


b. மத் 27:48

கடற்காளானில் தோய்த்தெடுத்த காழ


C. லூக் 23:36

போர்ச்சேவகர்கள் கொடுத்த காடி


d.யோவா 19:29

 பாத்திரம் நிறைந்த காடி


e. யோவா 19:30

இயேசு வாங்கின காடி


f. மாற் 15:36

கோலில் மாட்டின காடி


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.