சிலுவையின் வரலாறு பாகம் 24 - பாடுகளும் பெத்தானியா மரியாளும் :

 



சிலுவையின் வரலாறு பாகம் 24 - பாடுகளும் பெத்தானியா மரியாளும் : 


“கர்த்தருக்கு பரிமளதைலம் பூசி தன் தலைமயிரால் அவரு-டைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே” (யோவா 11:2). வேதனைக்கும் பாடுகளுக்கும் ஒப்பான இயேசுவின் சரீரத்தைத் தொட்ட ஸ்திரீகளில் பெத்தானியா ஸ்திரீக்கு மிக அதிகப் பங்குண்டு இயேசுவின் சரீரத்தைத் தொட்டதினாலோ என்னவோ, இவளைக் -குறித்த பல நல்ல சம்பவங்கள் நிறைய சொல்லப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கன்னி மரியாளை குறித்து பேசப்படும் அளவுக்கு இந்த பெத்தானியா மரியாளைக் குறித்துப் பேசப்படாதது சற்று வருத்தமானதுதான். அநேகருக்கு மறைக்கப்பட்ட சத்தியம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டு இருப்பதால் நாம் தேவனைத் துதிப்


a. ஊர்:


ஒரு நபரைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்களின் ஊரை தெரிந்து கொண்டாலே போதும். அந்த நப -ரைக் குறித்த குணாதிசயங்களும் நமக்கு நன்றாக தெரிந்து விடும். அதைப் போல்தான் மரியாளும்.


இந்த மரியாளின் ஊர் பெத்தானியா என்பதாகும். பெத்தா -னியா என்றால் அத்திபழ வீடு என்று அர்த்தமாகும். இது, ஒலி -வமலைக்கு அடிவாரத்தில், எருசலேமிலிருந்து ஏறத்தால இரண் -டு மைல் தூரத்தில், அதாவது, மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. எருசலேமிலிருந்து எரிகோ என்னும் ஊருக்கு போகின்றவர்கள் பெத்தானியாவைக் கடந்துதான் போக வேண்டும். வேதாகமக் காலத்தில் பெத்தானியா என்று அழைக்கப்பட்டப் பெயர் தற்காலத்தில் லாசரியா என்று அழைக்கப்படுகின்றது. லாசரியா என்பது லாசரு என்னும் பெயரிலிருந்து வந்ததாகும்


இயேசுவுக்கு மிகப் பெரிய விருந்து கொடுத்த சீமோன் என் -னும் குஷ்டரோகியின் வீடும் இந்த ஊரில்தான் இருந்தது. இயேசு தம்முடைய ஊழிய நாட்களில் அதிகமாய் வந்து போன ஊர்களில் இதுவும் ஒன்று. இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெ -ழுந்து, கடைசியாக பரலோகத்துக்கு ஏறிப் போனதும் இந்த பெத்தானியாவிலிருந்துதான். இப்படி பல விஷேசங்கள் நிறைந்த ஊரைச் சேர்ந்தவள்தான் மரியாள்.


b. பெயர்:


மரியாள் என்றப் பெயர் அனைவருக்கும் பரிச்சயமானதாக இருந்தாலும் பரிசுத்த வேதாகமத்தில் மொத்தம் ஏழுவித வேறு வேறு மரியாள்களைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. அந்த ஏழு பேரில் இவளுடைய பெயர் பெத்தானியா மரியாள் என்பதாகும். மரியாள் என்பதற்கு கண்ணீர் என்பது பொருளாகும். கண்ணீர் என்னும் பொருளுக்கேற்ப தன் கண்ணீரால் இயேசுவின் பாதங்க -ளையும் துடைத்தாள். பெத்தானியா மரியாளாகிய இவளுடைய பெயர் அநேக இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் விசேஷ -மாக யோவான் 11-ம் அதிகாரம் முழுவதும் இவளுடைய பெய -ரைக் காணலாம்.


இவளுடைய சகோதரியின் பெயர் மார்த்தாள், சகோதரனுடைய பெயர் லாசரு. இயேசு உயிரோடு எழும்பின லாசருவை குறித்து சொல்லும் போது, இந்த மரியாளின் பெயரையும் உச்சரிக்காத ஊழியக்காரரே இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண் -டும். அந்த அளவுக்கு இவளுடைய பெயரை பரிசுத்த ஆவியான வர் பரிசுத்த வேதாகமத்தில் பிரபல்யப்படுத்தியுள்ளார். எபிரேய பாஷையில் மிரியாம் என்றாலும், கிரேக்கப் பாஷையில் மரியாள் என்றாலும் அர்த்தம் ஒன்றுதான்.


C. நற்க்கிரியைகள்:


i. பாதத்தில் விழுந்தாள்:


பெத்தானியா மரியாளிடம் காணப்பட்ட மிக நல்ல பழக்கங்க -ளில் ஒன்று இயேசுவின் பாதத்தில் விழுந்து அழுவதாகும் (யோவா 11:32).இயேசுவின் பாதத்தில் விழுந்த ஐந்து பேரை புதிய ஏற்பாட்டில் காணலாம். அந்த ஐந்து பேருமே விடுதலையை -யும், கிருபைகளையும் பெற்றுக் கொண்டனர்.


1. மாற் 7:25 அசுத்த ஆவி பிடித்த சிறு பெண்ணின் தாய் இயேசுவின் பாதத்தில் விழுந்தாள். மகளுக்கு விடுதலையைப் பெற்றுக் கொண்டாள்.


2. லூக் 5:8 சீமோன் பேதுரு இயேசுவின் பாதத்தில் விழுந் -தான். வலை கிழிந்து போகத்தக்கதாக மீன்களைப் பிடித்தான்.


3. லூக் 8:41 ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்பவன் இயேசுவின் பாதத்தில் விழுந்தான். பன்னிரெண்டு வயதுள்ள தன் மகளை மரணத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டான்.


4. வெளி 1:17 அன்பின் அப்போஸ்தலனாகிய யோவான் இயே -சுவின் பாதத்தில் விழுந்தான். நான் (இயேசு) முந்தினவரும் பிந்தினவரும் உயிருள்ளவருமாயிருக்கிறேன் என்ற பெரிய வெளிப் -பாட்டைப் பெற்றுக் கொண்டான்.


5. பெத்தானியா மரியாள் இயேசுவின் பாதத்தில் விழுந்தாள். மரித்துப்போன தன் சொந்த சகோதரனை உயிருடன் திரும்பப் பெற்றுக் கொண்டாள். பெத்தானியா மரியாளைப் போலவும், மற்ற -வர்களைப் போலவும் நாமும் இயேசுவின் பாதங்களில் விழு -வோம். நமக்குள் போராடிக் கொண்டிருக்கிற போராட்டங்களிலிரு-தும், மரணக் கட்டுகளிலிருந்தும் முற்றிலுமாய் ஜெயத்தைப் பெற் -றுக் கொள்ளுவோம்.


ii. பரிமளம் பூசினாள்:


வாசனைத் திரவியங்களை இயேசுவுக்காக அநேகர் பயன்படுத் -தினர்.ஆனால் அவர்கள் எல்லாரிலும் இந்த மகதலேனா மரி -யாள் செய்ததுதான் மேன்மையாய் கருதப்படுகின்றது. காரணம், மற்றவர்கள் பயன்படுத்தின வாசனைத் திரவியங்களுக்கும், பெத் -தானியா மரியாளாகிய இவள் பயன்படுத்தின வாசனைத் திரவிய -மாகிய பரிமளத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.


1. விலையேறப் பெற்றது.


2. களங்கமில்லாதது.


3. நளதம் போன்றது.


4.ஒரு ராத்தல் (300 பணம் மதிப்புள்ளது).


5. வாசனையினால் முழு வீட்டையும் நிரப்பக் கூடியது (யோவா 12:3).


6. இயேசுவின் மரண அடக்கத்தைக் காண்பிக்கக் கூடியது. இந்த பரிமள தைலத்தைப் பூசினபடியினால், இயேசு சீக்கிரத்தில் மரிக்கப் போவதையும், அதனால் அவரை அடக்கம் பண்ணப் போவதையும், சொப்பனம் அல்லது தரிசனம் மூலம் கண்டிருக்க -லாம். அல்லது இயேசு தன்னுடைய மரணத்தை குறித்து சீஷர் -களுக்குச் சொன்னபோது லாசரு அங்கே இருந்திருந்து, அதை கேட்டிருந்தபடியினால் அவைகளை தன் சகோதரியாகிய மரியா -ளுக்குத் தெரிவித்திருந்திருக்கலாம். ஆக மொத்தம் இந்த சம்ப -வத்தின் மூலம் மரியாளும் ஓர் தீர்க்கதரிசியைப் போல இருந்துள் ளாள் என்பது நன்றாக தெரிகின்றது.


பரிமளத் தைலத்தை இயேசுவின் பாதங்களில் பூசினாள் என் றும், துடைத்தாள் என்றும் வேதம் சொல்கின்றது. அப்படியானால் இவள் இயேசுவை தொட்டிருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரி -கின்றது. இப்படிப்பட்ட பாக்கியமும் சிலாக்கியமும் அங்கிருந்த வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. பெத்தானியா மரியாளுக்கு மட்டும் தான் கிடைத்தது.


iii. உட்கார்ந்திருந்தாள்:


உட்காருதல் என்ற வார்த்தையை கேட்பது எளிது. ஆனால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் என்பது கூடாத காரிய -மாகும். ஆனால், பெத்தானியா மரியாளோ உட்கார்ந்திருந்தாள் என்று இரண்டு இடங்களில் வாசிக்கின்றோம். இரண்டுமே ஆழ்ந்த சத்தியத்தை வெளிப்படுத்தும் பகுதிகளாகும்.


ஒன்று:- “அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள் (லூக் 10:39). எவ்வளவு இனிமையான அனுபவம் என்று பாருங்கள். வசனத்தை பேசுகிற -வர்கள் இந்நாட்களில் அதிகம். ஆனால் தேவனுடைய சமூகத்தி -லும், கர்த்தருடைய பாதத்திலும் உட்கார்ந்து வசனத்தை கவன மாய்க் கேட்கிறவர்கள் மிக மிக குறைவு.


இயேசுவின் பாதங்களை மரியாள் தொட்டபடியினால் இயேசு -வின் வசனங்களை கேட்கும் குணமும் மரியாளுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது. அதனால் நல்ல பங்கைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியமுள்ளவளாக மாறினாள்.


“வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் கொடுக்கிறார்கள்" (மாற் 4:20) என்ற வசனத்தின்படி பலனுக்கு மேல் பலன் கொடுக்க ஆரம்பித்தாள். அன்பானவர்களே, வசனத்தை கேட்பதற்கு மட்டும் உங்கள் காதுகளை மூடி விடாதீர்கள். எப்போதெல்லாம் சமயம் வாய்க்கின்றதோ, அப்பொழுதெல்லாம் தவறாமல் வசனங்களைக் கேளுங்கள், அப்பொழுது உங்களுடைய பலன் நாளுக்கு நாள் பெருகி கொண்டேயிருக்கும்.


இரண்டு:- மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். போதகர்

வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள் (யோவா 11:20, 28). அமைதலும் அடக்கமும் உள்ளவள் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகின்றது. லாசரு மரித்து விட்டபடியினால் மார்த்தாள் புலம்பிக் கொண்டிருக்கிறாள். யூத ஜனங்கள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டுள்ளனர். சீஷர்கள் திகைத்துப் போயுள்ளனர். இயே சுவோ அழுது கொண்டுள்ளார்.


இப்படி பலரும் பலவிதங்களில் அங்கலாயத்துக் கொண்டிருக் -கும் போது மரியாளோ அமதிையாய் வீட்டிற்குள் உட்கார்ந்திருந் -தாள். இதுதான் தேறின அனுபவமுள்ள விசுவாசிகளுக்கு அடையாளம். ஊர் முழுவதும் எல்லாரும் திண்டாடினாலும், விசு வாசியோ அல்லது கர்த்தருடைய ஊழியக்காரர்களோ திண்டாடவும் கூடாது, அங்கலாய்க்கவும் கூடாது.


எல்லாரும் துக்கத்தினால் நிறைந்திருந்தனர். ஆனால் மரியா -ளோ அமைதியாய் இருந்தாள். இயேசுவிடம் இருந்து அழைப்பு வரும் வரை அவள் உட்கார்ந்தே இருந்தாள். அழைப்பு வந்ததும் கொஞ்சம் கூட தாமதம் இல்லாமல் எழுந்து ஓடிப் போய் இயே -சுவை சந்தித்தாள். இந்த முன்மாதிரியின் ஜீவியம் நம்முடைய வாழ்விலும் கட்டாயம் காணப்பட வேண்டும். எப்போதும், எல்லா இடங்களுக்கும் ஓடிக் கொண்டிருக்காதீர்கள். அமைதியாய் இருங் -கள், உட்கார்ந்தே இருங்கள். அப்பொழுது பெரிய இடங்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். உங்களுக்கு கனமும், மேன்மையும் உண்டாகும்.


அன்பானவர்களே, உங்கள் ஊரை ஓர் அடையாளமாக மாற் -றுங்கள். உங்களுடைய பெயர் சாட்சியாய் சொல்லப்படும்படியாக ஜீவியம் பண்ணுங்கள். தேவனுடைய பாதத்தில் விழுந்து கிடந்து ஜெபியுங்கள். பல மணி நேரம் கர்த்தருடைய பாதத்தில் உட்கார்ந் -திருக்க பழகிக் கொள்ளுங்கள். யாரும் அழைக்காமல் எங்கேயும் போகாதிருங்கள். இப்படி நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டால் உங்களையும் உங்கள் வாழ்க்கையும் ஆண்டவர் இயேசு பரிமள தைலத்தைப் போல வாசனை வீசச் செய்வார்.


d. பெத்தானியா மரியாளைக் குறித்து மரியாள் என்றப் பெயருடன்

சொல்லப்பட்டுள்ள உவமையான சில வசனங்கள்:


1.லூக் 10:42

தேவையான ஒன்றைதெரிந்து கொண்ட மரியாள்


2. யோவா 11:2

கர்த்தருயை பாதங்களைத் துடைத்த மரியாள் 


3. யோவா 11:20

வீட்டிலே உட்கார்ந்திருந்த மரியாள்


4. யேவா 11:28

போதகரின் அழைப்புக்காக காத்திருந்த மரியாள்


5. யோவா 11:32

இயேசுவின் பாதத்தில் விழுந்த மரியாள்


6. யோவா 11:31

சீக்கிரமாய் செயல்படுகிற மரியாள்


7. யோவா 11:45

அநேகர் இயேசுவை விசுவாசிக்கக் காரணமாய் இருந்த மரியாள் 


8.யோவா 12:3

வீட்டை வாசனையால் நிறைத்த மரியாள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.