சிலுவையின் வரலாறு பாகம் - 23 : பாடுகளின் பாத்திரங்கள்
A. மாற் 14:23 பாத்திரங்கள்:
பாத்திரம் என்ற வார்த்தை இயேசுவின் பாடு துக்கத்தோடு சம் -பந்தப்பட்ட பொருளாகும். வேதாகமத்தில் முதன்முதலாக யாக் -கோபு, நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல என்றுச் சொல்லி உவமையின் பாத்திரத்தை தூக்கி பிடிக்கிறதையும் (ஆதி 32:10), கலந்து கொடுக்கும் பாத்திரம் [வெளி 18:6) என்று கடைசி பாத் -திரத்தைக் குறித்து வேதம் சொல்லியுள்ளதையும் வாசிக்கலாம். பாத்திரத்தில் பலவிதங்கள் உண்டு. விளக்கை மூடி வைக்கும் பாத்திரம் (லூக் 8:16), கலந்து கொடுக்கும் பாத்திரம் (வெளி 18:6), பேய்களின் பாத்திரம் (1கொரி 10:21), உடைந்த பாத்திரம் (சங் 31:12), கிருபை நிறைந்த கிருபா பாத்திரம் (ரோம 9:23). பாத்திரங்களில் பெயர் எழுதும் (வெட்டும்) பழக்கமும் அந்த காலத்திலேயே இருந்துள்ளது (ஏசா 8:1) என்பதும் ஆச்சரியமே.
“பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷர்களுடைய கால் -களை கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார் (யோவா13:5)."
இயேசுவின் பாடுகளில் பங்கு வகிப்பதில் பாத்திரமும் ஒன்றாகும். பாத்திரம் என்ற வார்த்தை பல அர்த்தங்களை குறிக்கும். ஆனால் இயேசு பயன்படுத்தின பாத்திரத்திற்கு புதிய உடன்படிக்கை (லூக் 22:20, 1 கொரி11:25) என்று அர்த்தமாகும். ஆம் இயேசு பாத்திரத்தை ஓர் உடன்படிக்கையாகவே கருதினார்.
இந்த செய்தியை வாசிக்கிற ஒவ்வொருவருமே இயேசுவோடு கூட உடன்படிக்கை பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். உடன்படிக்கை பண்ணுகிறவர்கள் யாரானாலும் அவர்கள் இயேசு -வோடு கூடவே இருப்பார்கள். இயேசுவுக்காகவே இருப்பார்கள்.
இயேசு தொட்ட பாத்திரங்களில் இரண்டு பாத்திரங்கள் மிக முக்கியமானது ஆகும். ஒன்று சீஷர்களின் கால்களை கழுவ பயன்படுத்தினது. இரண்டாவது, இராப்போஜனத்தின் போது ரசத் -துக்காக பயன்படுத்தினது. முதல் பாத்திரம் சுத்திகரிப்பையும், இரண்டாவது பாத்திரம் அர்ப்பணிப்பு அல்லது ஒப்புக் கொடுத்தலை -யும் குறிக்கும்.
இயேசு சீஷர்களின் கால்களைக் கழுவின பின்பு அவர்களை
நோக்கி “நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள் என்றார்”. இதே போல நாமும் சுத்தமான பாத்திரங்களாக மாறவேண்டும் என்று ஆண்டவர் எதிர் பார்க்கின்றனர்.
"ஆகிலும் எல்லாரும் சுத்தமாகவில்லை” என்று ஆண்டவர் யூதாசை சுட்டிக் காண்பித்தார். இதை உணர்ந்த பேதுரு என் கைகளையும், என் தலையையும் கூட கழுவ வேண்டும் என்று வேண்டினான். எனக்கு அன்பானவர்களே, இதை வாசிக்கும் நீங்கள் எந்த அளவுக்கு சுத்தமான பாத்திரமாக இருக்கின்றீர்கள் என்பதை சோதித்துப் பாருங்கள். இல்லாவிட்டால் “தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக" 1தெச 5:23 என்ற வேத வசனத்தின் படி கர்த்தர் உங்களை பரிசுத்தமான விலை -யேறப்பெற்ற கனத்துக்குரிய பாத்திரமாக மாற்றி பரலோகத்தில் கொண்டு போய் சேர்ப்பாராக.
இப்படி பலவித பாத்திரங்களைக் குறித்து வேதம் முழுவதும் காணப்பட்டாலும், இயேசு தன்னுடைய மரணத்தைக் குறித்து சொல்லத் தொடங்கினது முதல், மரிக்கும் வரைக்கும் ஏறத்தால ஏழு விதமான பாத்திரங்களைக் குறித்து அவர் சொல்லியும், பயன்படுத்தியும், தொட்டும் உள்ளார். அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து விளக்கமாக தியானித்து, சிலுவையின் பாடுகளை சிந் -தையில் கொண்டு நாமும் அவருக்கு ஏற்ற பாத்திரமாக மாறுவோம்.
B. யோவா 13:5 சீஷர்களின் கால்களைக் கழுவீன பாத்திரம்:
வி.ம்: 1சாமு 25:41 கால்களைக் கழுவுதல் (எ) பணிவிடைக்கா ரருக்கு சமானமாய்த் தன்னைத் தாழ்த்துதல் ஆகும்
உ.ம்: சங் 40:2 குழியிலும் சேற்றிலுமிருந்து தூக்கியெடுத்து நம் கால்களை உறுதிபடுத்தி கொள்ளுதல்
யோவா 13:5' ஏசா 52:11
தண்ணீர் நிறைந்த பாத்திரம் என்றால் கர்த்தரு -டைய பாத்திரம் என்றும், சுத்திகரிக்கப்பட்ட பாத் -திரம் என்றும் பொருள்
மு.கு: யோவா 13:5,10
இயேசுவால் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் சீஷர்கள் அனைவரையும் முழுவதுமாக சுத்தமாக்கினது
C. மத் 26:27,28 புது உடன்படிக்கையின் பாத்திரம்:
வி.ம்:
i) புது உடன்படிக்கை என்றால்....
2கொரி 3:6
a) நம்மை ஊழியக்காரராய் மாற்றுவது
b) நம்மை தகுதியுள்ளவர்களாக்குவது
c) நம்மை ஆவிக்குரியவர்களாக்குவது
d) ஆவியை உயிர்ப்பிப்பது
ii) இயேசுவின் இரத்தம் நம்மை....
வெளி 1:6
1) பாவங்களற நம்மைக் கழுவும்
2) பிதாவாகிய தேவனுக்கு முன்பாக
நம்மை நிறுத்தும்
3) நம்மை ராஜாக்களாக மாற்றும்
4) நம்மை ஆசாரியர்களாக்கும்
5) இயேசுவின் மகிமையையும், வல்லமையையும் என்றென்றைக்கும் காணச் செய்யும்
iii) இயேசு எடுத்துக் கொடுத்த பாத்திரம்....
1) லூக் 22:17,18
i) அவர்களை ஸ்தோத்திரம் பண்ண வைத்தது
ii) ஒருவருக்கொருவர் பங்கிட்டுக் கொள்ள செய்தது
iii) தேவனுடைய இராஜ்யத்தை நினைவு -கூறசெய்தது
2) மாற் 14:24 திராட்சைரசம் இயேசுவின் இரத்தமாக மாறினது
3) மாற் 14:26 ஸ்தோத்திரபாட்டு என்ற துதியின் பாடல் பாடப்பட்டது
4) லூக் 22:21 இயேசுவைக் காட்டிக் கொடுக்கப் போகிறவனுடைய கையைக் குறித் வெளிப்பாடு உண்டானது
5) லூக் 22:22 இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு ஐயோ என்ற தீர்க்கதரிசனம் இயேசுவின் மூலம் வெளிப்பட்டது
6) யோவா 21:20 அன்பின் சீஷனாகிய யோவான் இயேசுவின் மார்பினில் சாய்ந்தான்
7) 1கொரி 11:26 இயேசுவின் மரணத்தை தெரிவிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது
8) 1கொரி 11:27 அபாத்திரமானவர்கள் குற்றவாளிகளா -னார்கள் 9) 1கொரி 11:31 நம்மை நாமே நிதானித்து பார்க்கும் மிகப் பெரிய சிலாக்கியம் கிடைத்தது
D. மத் 25:39 சரீரம் என்கிற பாத்திரம்:
கேள்வி: மத் 26:39 இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்
கூடுமானால் நீங்கும்படி செய்யும் என்று இயேசு ஏன் ஜெபித்தார்?
a) சங் 129:3 வயலில் ஏர் உழுவதைப்போல இயேசுவின் முதுகை உழுதுபோட எத்தனித்தார்கள்
b) 1பேது 2:24 அவருடைய சரீரத்தில் ஏராளமான தழும்பு -களை உண்டாக்கத் திட்டமிட்டனர்
c) ஏசா 53:2 அவரின் சரீர அழகை அலங்கோலமாக்கப் பார்த்தனர்
d) ஏசா 53:2 அவரின் சௌந்தரியத்தை சீரழிக்க யோசித்தனர்
e) ஏசா 53:4 அவருடைய சரீரமாகிய பாத்திரம் வாதிக்கப்பட்டது
f) ஏசா 53:5 அவருடைய சரீரத்தைப் பல விதங்களிலும் நொறுக்க திட்டமிட்டனர்.ஆனபடியினால்தான் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கட்டும் என்று ஜெபித்தார்
உ.ம்: 1பேது 3:18 கிறிஸ்து ஒருதரம் பாடுபட்டார். பின்பு கொலை செய்யப்பட்டார்
பலன்: லூக் 18:33
1பேது 3:22
மரணத்திலிருந்து உயிரோடே எழுந்தார். பிதாவின் வலு பாரிசத்தில்
போய் உட்கார்ந்தார். தேவதூதர்களும் அவருக்கு கீழ்படிந்தனர்.
E. யோவா 18:11 பிதர கொடுத்தப் பாத்திரம்:
கேள்வி: இயேசுவுக்கு பிதா கொடுத்தப் பாத்திரம் என்றால் எது?
பதில்: யோவா 3:17 உலகத்தை இரட்சிக்கவே பிதா இயேசுவை உலகத்திற்க்குள் அனுப்பினார். அப்படியானால், -வதுதான் இயேசுவுக்கு பிதா கொடுத்த
இந்த உலகம்தான் பிதா கொடுத்த முதல் பாத்திரம் லூக் 4:19 கர்த்தருடைய அநுக்கிரகத்தைக் கூறுவது பிதா
இயேசுவுக்குக் கொடுத்த இரண்டாவது பாத்திரம் யோவா 5:36 பிதா தனக்குக் கற்பித்ததை பூமியிலே செய்
மூன்றாவது பாத்திரம்
அப் 3:26 ஜனங்களெல்லாரையும் பொல்லாங்கிலிருந்து விடுவிக்கும்படி இட்ட கட்டளை தான் இயேசுவுக்கு பிதா கொடுத்த நான்காவது பாத்திரம்
எபி 5:8 கிறிஸ்துவானவர் பாடுபடுகிறதினாலே கீழ்படிதலைக்
கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பிதா இயேசுவுக்குக் கொடுத்த ஐந்தாவது பாத்திரம்
விளைவு: 1தீமோ 1:15 பாவிகளை இரட்சிக்கும் கிறிஸ்து இயேசுவாக வெளிப்பட்டு, எல்லா அங்கிகரிப்புக்குமுரிய பாத்திரராக மாறினார்
பலன்: 1கொரி 10:16 அவருடைய இரத்தமும், சரீரமும் அநேகரை
ஐக்கியப்படுத்துகிறதாக மாறினது
F. யோவா 19:29 காடி நிறைந்த பாத்திரம்:--
1. நான்கு விதங்களில் சொல்லப்பட்டுள்ள காடி
a.யோவா 19:29 ஈசோப்புத்தண்டில் மாட்டிக்கொடுக்கப்பட்ட காடி
வி.ம் சங் 51:7 ஈசோப்பு (எ) தேவனால் உண்டாகும் சுத்திகரிப்பு
b. மத் 27:48 கடற்க்காளானால் தோய்க்கப்பட்டப் பூண்டு வி.ம் மாற் 15:36 கடற்க்காளான் (எ) உரிஞ்சும் சக்தியுடையது என்று அர்த்தமாகும்
C.லூக் 23:36,37 பரியாசம் பண்ணும்படி கொடுக்கப்பட்ட காடி வி.ம் நீதி 17:5 பரியாசம் (எ) தன்னை படைத்தவரை நிந்திப்பது
d. மத் 27:34 கசப்புக் கலந்த காடி
வி.ம் சங் 69:21 கய்ப்புக் கலந்தது (எ) ஆகாரத்தில் கலந்த விஷம்
2. காழ செய்த கிரியைகள்:
a.மாற் 15:37 இயேசுவை மகா சத்தமாய் சத்தம் போட வைத்தது
b. மாற் 15:37 அவருடைய ஜீவனை விட வைத்தது
C. மத் 27:34 அதைக் குடிக்க மனதில்லாதவராக இயேசு மாறினார்
பலன் லூக் 23:38 இயேசு யூதருடைய ராஜாவாக உயர்த்தப்பட்டார்
மாற் 15:18 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று வாழ்த்தப்பட்டார்
G. மத் 10:38 சிலுவையை பின்பற்றும் பாத்திரம்:
a.வி.ம்: மத் 16:24
சிலுவையை எடுத்துக்கொண்டு (எ)
தன்னைத் தானே வெறுத்து விடுவது
லூக் 9:23 தன்னைத்தான் வெறுத்து விடுவது (எ) சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு பின்பற்றுதல் ஆகும்
உ.ம்: எபி 11:24 மோசே தன்னைத்தானே வெறுத்தான்
பலன்: யாத் 11:3 மோசே மிகவும் பெரியவனானான்
b.வி.ம்: மத் 10:38 2இரா 23:3
சிலுவையைப் பின்பற்றுதல் என்றால்
1. கர்த்தரைப் பின்பற்றுவது
2. அவருடைய கற்பனைகளைப் பின்பற்றுவது
3. அவருடைய சாட்சிகளைப் பின்பற்றுவது
4. அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவது
5. முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் பின்பற்றுவது
6. அவருடைய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பின்பற்றுவது
உ.ம்: எண் 32:11 காலேபும், யோசுவாவும் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினார்கள்
பலன்: எண் 14:30 காலேபும், யோசுவாவும் கானானுக்குள் பிரவேசித்தனர்
H. மத் 26:66; மாற் 14:64 இயேசுவின் மரணப் பாத்திரம்:
மரணப் பாத்திரம் என்றால் என்ன?
a. மத் 20:18 ஆக்கினைத்தீர்ப்படைவது மரணத்தின் முதல் அடையாளம்
b. மத் 26:38 ஆத்துமாவில் உண்டாகும் மகா துக்கம் மரணத்தின் இரண்டாம் அடையாளம்
C. யோவா 19:1 இயேசுவைப் பிடித்து வாரினால் அடித்தது என்பது உயிரோடு மரிக்கச் செய்வதற்க்கு அடையாளம். இது மூன்றாம் அடையாளம்
d. லூக் 22:44 வேர்வையானது இரத்தமாய் மாறும் பொழுது, அது மகா கொடிய மரணத்தின் நான்காவது அடையாளமாக மாறும்
e. மத் 27:50 மரித்து அடக்கம் பண்ணப்பட்டது. அவருடைய மரணத்தின் கடைசியும்,
ஐந்தாவதுமான அடையாளமாகும்.
விளைவு: லூக் 23:15 மரண தண்டனைக்குரிய பாத்திரம் என்றும் சொல்லும் அளவுக்கு அவர் ஒரு தவறும் செய்யவில்லை
பலன்: வெளி 1:18 மரணத்தின், பாதாளத்தின் திறவுகோலுக்கு லூக் 24:65 உரிமையாளரானார் இயேசு உயிர்த்தெழுந்தார்
I. புதிய ஏற்பாட்டில் வரும் சில வித்தியாசமான பாத்திரங்கள்:—
1. வெளி 17:4 அசுத்தம் நிறைந்த பொற்பாத்திரம்
2. வெளி 14:10 கோபாக்கினையாகிய பாத்திரம்
3. எபி 9:4 மன்னா வைக்கும் பொற்பாத்திரம்
4. 2தீமோ 2:21 ஆயத்தமாக்கப்பட்டப் பாத்திரம்
5. 2தீமோ 2:20 பொன்னும் வெள்ளியுமான பாத்திரம் மண்ணும் மரமுமானப் பாத்திரம்
6.1கொரி 11:28 சோதித்தரியும் பாத்திரம்
7.1கொரி 10:21 கர்த்தருடைய பாத்திரம் {"பேய்களுடைய பாத்திரம்
கனமான பாத்திரம்
8. ரோம 9:21 கனவீனமான பாத்திரம்
9. அப் 13:25 பாத்திரன் அல்லாத பாத்திரம்
10. யோவா 4:11 மொண்டுக் கொள்ளும் பாத்திரம்
11. லூக் 11:39 போஜனபான பாத்திரம்
12. மத் 25:4 புத்தியுள்ள எண்ணெய் பாத்திரம்