சிலுவையின் வரலாறு பாகம் - 22 : அரையும் குட்டுதலும்
"இப்படி அவர் சொன்ன பொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன் பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்கிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்” (யோவா 18:22).
எத்தனையோ பொருட்களும் சூழ்நிலைகளும், இயற்கையும் இயேசுவைத் தொட்டுச் சென்றது. அதில் பல கண்ணுக்கு தெரிய கூடியது. சில கண்ணுக்கே தெரியாதது. அதுபோலதான் இயேசு -வுக்கு விழுந்த அறையும்.
அறைதலில் பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. 1இராஜா 22:24 [[நாளா 18:23; யோபு16:10; மீகா 5:1 ஆகியவைகளை வாசித்துப் பார்த்தால் கன் -னத்தில் அடித்தார்கள் என்றுதான் உள்ளது. இது பழைய ஏற் -பாட்டு மக்களின் பழக்கமாயிருந்தது. அறைவதற்கும் கன்னத் -தில் அடிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
“பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷர்களுடைய கால் -களை கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார் (யோவா13:5)."
இயேசுவின் பாடுகளில் பங்கு வகிப்பதில் பாத்திரமும் ஒன்றாகும். பாத்திரம் என்ற வார்த்தை பல அர்த்தங்களை குறிக்கும். ஆனால் இயேசு பயன்படுத்தின பாத்திரத்திற்கு புதிய உடன்படிக்கை (லூக் 22:20, 1 கொரி11:25) என்று அர்த்தமாகும். ஆம் இயேசு பாத்திரத்தை ஓர் உடன்படிக்கையாகவே கருதினார்.
இந்த செய்தியை வாசிக்கிற ஒவ்வொருவருமே இயேசுவோடு கூட
உடன்படிக்கை பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். உடன்படிக்கை பண்ணுகிறவர்கள் யாரானாலும் அவர்கள் இயேசுவோடு கூடவே இருப்பார்கள். இயேசுவுக்காகவே இருப்பார்கள்.
இயேசு தொட்ட பாத்திரங்களில் இரண்டு பாத்திரங்கள் மிக முக்கியமானது ஆகும். ஒன்று சீஷர்களின் கால்களை கழுவ பயன்படுத்தினது. இரண்டாவது, இராப்போஜனத்தின் போது ரசத் -துக்காக பயன்படுத்தினது. முதல் பாத்திரம் சுத்திகரிப்பையும், இரண்டாவது பாத்திரம் அர்ப்பணிப்பு அல்லது ஒப்புக் கொடுத்தலை -யும் குறிக்கும்.
இயேசு சீஷர்களின் கால்களைக் கழுவின பின்பு அவர்களை நோக்கி “நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள் என்றார்”. இதே போல நாமும் சுத்தமான பாத்திரங்களாக மாறவேண்டும் என்று ஆண்டவர் எதிர் பார்க்கின்றனர்.
"ஆகிலும் எல்லாரும் சுத்தமாகவில்லை” என்று ஆண்டவர் யூதாசை சுட்டிக் காண்பித்தார். இதை உணர்ந்த பேதுரு என் கைகளையும், என் தலையையும் கூட கழுவ வேண்டும் என்று வேண்டினான். எனக்கு அன்பானவர்களே, இதை வாசிக்கும் நீங்கள் எந்த அளவுக்கு சுத்தமான பாத்திரமாக இருக்கின்றீர்கள் என்பதை சோதித்துப் பாருங்கள். இல்லாவிட்டால் "தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக" 1தெச 5:23 என்ற வேத வசனத்தின் படி கர்த்தர் உங்களை பரிசுத்தமான விலை -யேறப்பெற்ற கனத்துக்குரிய பாத்திரமாக மாற்றி பரலோகத்தில் கொண்டு போய் சேர்ப்பாராக.
இப்படி பலவித பாத்திரங்களைக் குறித்து வேதம் முழுவதும் காணப்பட்டாலும், இயேசு தன்னுடைய மரணத்தைக் குறித்து சொல்லத் தொடங்கினது முதல், மரிக்கும் வரைக்கும் ஏறத்தால ஏழு விதமான பாத்திரங்களைக் குறித்து அவர் சொல்லியும், பயன்படுத்தியும், தொட்டும் உள்ளார். அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து விளக்கமாக தியானித்து, சிலுவையின் பாடுகளை சிந் -தையில் கொண்டு நாமும் அவருக்கு ஏற்ற பாத்திரமாக மாறுவோம்.
B. யோஸா 13:5 சீலர்களின் கால்களைக் கழுவீன பாத்திரம்:
வி.ம்: 1சாமு 25:41 கால்களைக் கழுவுதல் (எ) பணிவிடைக்கா ரருக்கு சமானமாய்த் தன்னைத் தாழ்த்துதல் ஆகும் உ.ம்: சங் 40:2 குழியிலும் சேற்றிலுமிருந்து தூக்கியெடுத்து நம் கால்களை உறுதிபடுத்தி கொள்ளுதல்
யோவா 13:5 தண்ணீர் நிறைந்த பாத்திரம் என்றால் கர்த்தரு ஏசா 52:11 -டைய பாத்திரம் என்றும், சுத்திகரிக்கப்பட்ட பாத்திரம் என்றும் பொருள் மு.கு: யோவா 13:5,10 இயேசுவால் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் சீஷர்கள் அனைவரையும் முழுவதுமாக சுத்தமாக்கினது
C. மத் 26:27,28 புது உடன்படிக்கையின் பாத்திரம்:
வி.ம்:
i) புது உடன்படிக்கை என்றால்....
2கொரி 3:6
a) நம்மை ஊழியக்காரராய் மாற்றுவது
b) நம்மை தகுதியுள்ளவர்களாக்குவது
c) நம்மை ஆவிக்குரியவர்களாக்குவது
d) ஆவியை உயிர்ப்பிப்பது
ii) இயேசுவின் இரத்தம் நம்மை...
வெளி 1:6
1] பாவங்களற நம்மைக் கழுவும்
2] பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை நிறுத்தும்
3] நம்மை ராஜாக்களாக மாற்றும்
4) நம்மை ஆசாரியர்களாக்கும்
5) இயேசுவின் மகிமையையும், வல்லமையையும் என்றென்றைக்கும் காணச் செய்யும்
iii) இயேசு எடுத்துக் கொடுத்த பாத்திரம்....
1) லூக் 22:17,18 i) அவர்களை ஸ்தோத்திரம் பண்ண வைத்தது
ii) ஒருவருக்கொருவர் பங்கிட்டுக் கொள்ள செய்தது
iii) தேவனுடைய இராஜ்யத்தை நினைவு கூறசெய்தது
2) மாற் 14:24 திராட்சைரசம் இயேசுவின் இரத்தமாக மாறினது
3) மாற் 14:26 ஸ்தோத்திரபாட்டு என்ற துதியின்பாடல் பாடப்பட்டது
4) லூக் 22:21 இயேசுவைக் காட்டிக் கொடுக்கப் போகிறவனுடைய கையைக் குறித்த வெளிப்பாடு உண்டானது
5) லூக் 22:22 இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு ஐயோ என்ற தீர்க்கதரிசனம் இயேசுவின் மூலம் வெளிப்பட்டது
6) யோவா 21:20 அன்பின் சீஷனாகிய யோவான் இயேசுவின் மார்பினில் சாய்ந்தான்
7) 1கொரி 11:26 இயேசுவின் மரணத்தை தெரிவிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்தது
8) 1கொரி 11:27 அபாத்திரமானவர்கள் குற்றவாளிகளா -னார்கள்
9] 1கொரி 11:31 நம்மை நாமே நிதானித்து பார்க்கும் மிகப் பெரிய சிலாக்கியம் கிடைத்தது
முகத்தில் அறைதலை நான்கு காரியங்களோடு கூட அப்போஸ் தலனாகிய பவுல் ஒப்பிட்டு விவரிக்கின்றார்.
"ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களை கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந் -தாலும் சகித்திருக்கிறீர்களே” (I1கொரி 11:20). இந்த நான்கு நோக்கத்தோடுதான் இயேசுவின் முகத்தில் அறைந்தனர். ஆனா -லும், சகித்திருக்கிறீர்களே என்று பவுல் சொன்னதைப் போல இவை எல்லாவற்றையும் அவர் சகித்தார், தாங்கினார், ஏற்றுக் கொண்டார்.
இந்நாட்களில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் சகித்தல், தாங் -குதல், ஏற்றுக் கொள்ளுதல் என்கிறமூன்று பொறுமையின் பேராயுதங்கள் கட்டாயம் தேவை. அப்படிப்பட்டவர்கள் மட்டும் தான், இயேசுவுக்குள், இயேசுவுக்காக, இயேசுவைப் போல வாழ முடியும்.
இதில் நீங்கள் எப்படி?
II. முகத்தை மூடி அறைந்தனர்:
"அவருடைய முகத்தை மூடவும் தொடங்கினார்கள் வேலைக்கா -ரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்” (மாற் 14:65).
ஒருவனை மற்றொருவன் கோபத்துடன் அறையும் போது முகத்தை மூடிக்கொள் என்று சொல்லிவிட்டு, அறைய மாட்டான். ஆனால், இயேசுவின் முகத்தை மூடிவிட்டு அறைந்ததற்குக் கார -ணம் உண்டு.
ஒருவர் மற்றொருவரை பார்க்கும் போது பயந்தால் முகத்தை மூடுவார்கள் என்று யாத்3:6 சொல்கிறது. அப்படியானால் பலரு -டைய சித்தரவதையாலும் இயேசுவின் முகம் மிகவும் அந்தகேடு அடைந்திருக்கிறது. அதைப் பார்க்க அந்தக் கொடுமைகாரர்க -ளுக்கே முடியவில்லை. அதனால், முகத்தை மூடிவிட்டு அறைந் -துள்ளனர்.
தவறு செய்கிறவர்களின் முகத்தை உடனே மூடிப் போடுவார் -கள் என்று எஸ்தர் 7:8 சொல்கின்றது. ஆனால், ஒரு தவறும் செய்யாத இயேசு குற்றவாளியைப் போல் கருதப்பட்டு, முகத்தை மூடப்பட்டார். முகம் என்றாலே கர்த்தரின் சாயல் (IIகொரி3:18) என்று அர்த்தமாகும். அந்த பிதாவின் சாயலை தரித்துக் கொள்ள இயேசுவின் முகம், சத்துருக்களால் மூடப்பட வேண்டிய -தாயிற்று.
அவருடைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அநேக தீர்க் -கதரிசனங்களில் கீழ்காணும் தீர்க்கதரிசனமும் ஒன்று. “உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது. அதிலிருக்கிறநியாயாதி -பதிகளின் முகத்தை மூடிப் போடுகிறார்கள்" (யோபு 9:24). உல -கத்தில் நியாயாதிபதியாய் வந்த இயேசுவின் முகம் மூடப்பட்டது, அறையப்பட்டது.
இயேசுவின் பாடுகளைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் எப்படி நிேைறவறினதோ, அதுபோலவே, உங்களைத் குறித்தும் சொல் -லப்பட்டுள்ள நன்மையான தீர்க்கதரிசனங்கள் ஒன்றும தவறிப் போகாமல், ஏற்றக் காலத்தில் ஏற்றபடி ஆண்டவர் உங்களுக்காக நிறைவேற்றி முடிப்பார். கலங்காதீர்கள் விசுவாசத்தோடும், அதிக நம்பிக்கையோடும் காத்திருங்கள்.
III. முகம், தலை, கன்னம்:
"அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார் -கள். சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து” (மத் 26:67).
ஒரே நேரத்தில் அவர் மூன்று விதத்தில் கொடுமைப்படுத்தப்பட் -டார். அதில் முதலாவது: முகத்தில் துப்பப்பட்டார். துப்பப்படுதல் என்றால் தீட்டு என்று பொருள். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குஷ்டரோகம் அல்லது பெண்களின் மாதவிடாய் போன்றவைகள் உண்டாகும் போது, அதை மிகப் பெரிய தீட்டாக கருதினார்கள். அப்படிப்பட்டவர்கள் துப்பின எச்சில் யார் மீதாவது பட்டால் அவர்க -ளும் தீட்டுப்பட்டவராக கருதப்படுவார். இந்த நோக்கத்தோடுதான் இயேசுவையும் தீட்டுப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகவே துப்பினார்கள்.
இரண்டாவது; தலையில் குட்டினார்கள். அடிப்பதற்கு சமம் என்று வேதம் சொல்கிறது. அந்நாட்களில் வாழ்ந்தவர்கள் மிகவும் முரட்டு தன்மையுள்ளவர்கள். அவர்களின் செயல்பாடும். மிகவும் முரட்டுத்தனமாகத்தான் இருந்தது. ஆதலால், இயேசுவை தலை -யில் குட்டினார்கள், ஒவ்வொரு குட்டும் அடி போலத்தான் அவரின் தலையில் இறங்கினது.
மூன்றாவதாக: கன்னத்தில் அறைந்தனர். முகத்தில் துப்பியும், தலையில் அடித்தும் காயப்படுத்தின பிறகு, பூ போன்ற கன்னத் -தில் ஓங்கி அறைந்தால் எப்படியிருக்கும் என்று சற்று கற்பனைப் பண்ணிப் பாருங்கள். முகத்தின் எலும்புகள், தாடை பகுதி ஆகிய -வைகள் நொறுங்கிப் போயிருக்கும். நன்மை செய்து பாடு அநுப -விக்கனும் என்ற வேத வசனம் நிறைவேறுவதற்க்காக அவர் ஒரே நேரத்தில் முகம், தலை, கன்னம் ஆகியவற்றில் வேதனை -யை அனுபவித்தார்.
இயேசுவை அறைதல் என்ற இந்தப் பகுதி உங்கள் ஆவிக்குரிய
வாழ்க்கைக்கு பிரயோஜனமாய் இருந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன். ஜெபத்தோடு கூட மற்றபகுதிகளையும் வாசிப்போம் தியானிப்போம்
C. பொதுவான சில அறைதல் :
1.நீதி 23:35
சுரணையில்லாத அறை
2. மத் 5:39
வலது கன்னத்தில் அறைதல்
3. மத் 26:67
சிலர் சேர்ந்து இயேசுவை அறைந்தனர்
4. மாற் 14:55
இயேசுவை அறைந்த வேலைக்காரர்கள்
5. லூக் 22:64
கண்களை கட்டி போட்டு அறைதல்
6. யோவா 18:22
சேவகன் அறைந்த அறை
குட்டினார்கள்
"அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரை குட்டினார் -கள்" (மத் 26:67).
பாடுபட வேண்டும் என்று பிதாவினால் தீர்மானிக்கப்பட்டபடியே அவர் அநேக பாடுகளை சகிக்க ஆரம்பித்தார். அதில் பல பாடுகள் பெரியவைகளாகவும், சில சிறியவைகளாகவும் காணப்பட்டது. அந்த சிறிய பாடுகளில் ஒன்று தான் தலையில் ஓங்கி குட்டப்பட்டது ஆகும். குட்டினார்கள் என்று தான் வேதம் சொல்கின்றது. ஆனால், ஒவ்வொரு குட்டும் மிகுந்த வழியையும், பெரிய வீக்கத் -தையும் கொடுத்திருக்கும் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஏனென்றால், நானும் குட்டு வாங்கியுள்ளேன்.
குட்டுதலில் நான்கு வகை உண்டு என்று வேதம் கூறுகின்றது. அவைகள்:
1) நீதிமானின் குட்டு
2) சாத்தானின் குட்டு
3) ஊழியத்தில் உண்டாகும் குட்டு
4) பாடுபடுவதற்க்காகவே வரும் குட்டு
D. நீதியானின் குட்டு சங் 141:5 :
நீதிமான் என்னும் தேவனுடைய பிள்ளைகள் குட்டும் போதும் ஒவ்வொரு குட்டிலும் நான்கு காரியங்கள் வெளிப்படும்.
ஒன்று: நீதிமானின் குட்டுதல் தயவு உள்ளதாக இருக்கும்.
தயவு என்றால் இரக்கம். நம்முடைய ஆண்டவரும், நீதிமான்தான். ஆனபடியினால்தான் அவர் இரக்கமுள்ளவராய் இருந்து, தயவாய் நம்மை குட்டி நடத்துகின்றார்.
இரண்டு:- எண்ணெயைப் போலிருக்கும்.
எண்ணெய் என்றால் புத்தி என்று அர்த்தமாகும். பத்து கண்ணிகைகளில் ஐந்து கண் -ணிகைகள் புத்தியுள்ளவர்களாய் இருந்தார்கள். காரணம். அவர் -களின் தீவட்டிகளில் எண்ணெய் இருந்தது. நீதிமான் குட்டும் போது, இப்படிதான் சில நேரம் நமக்கு அது அறிவைக் கொண்டு வரும். இந்த எண்ணெய் என்பது சில நேரம் நம்மு டைய சாபத்திலிருந்தும் நம்மை விலக்கி காக்கும் (சங் 109:18). ஆனபடியினால் முதியோர் குட்டினால், இயேசு கிறிஸ்துவைப் போல பொறுமையாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.
மூன்று:- அல்லத்தட்ட முடியாது.
நீதிமான் தயவோடும், எண் -ணெயைப் போல மெதுவாயும் அன்புடன் குட்டும் போது அதை யாரால்தான் அல்லத்தட்ட முடியும். நிச்சயம் முடியாது. இயேசுவை எத்தனையோ விதத்தில் பாடுகளுக்கு உட்படுத்தினார்கள்.
ஆனால், அவர் அதில் எதையுமே அல்லத் தட்டவில்லை. எல்லா -வற்றையும் நீடிய பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார். இந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும் உங்களுக்குள்ளும் வரவேண்டும்.
நான்கு:- ஜெபம் பண்ண வைக்கும்.
நீதிமான் போல இருக்கும் ஒரு தேவமனுஷன் குட்டும் போது, அது முறுமுறுப்பையோ, வருத் -தத்தையோ, மனக்கசப்பையோ கொண்டு வராது. மாறாக அது உங்களை ஜெபம் பண்ண வைக்கும். முன்பை விட இன்னும் அதி -கமாக ஜெபம் பண்ணத் தூண்டும்.
இந்த நான்கு அடையாளங்கள் இருந்தால், நிச்சயமாகவே அது நீதிமான் குட்டிய குட்டு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இயேசுவையோ, நீதிமான்கள் குட்டவில்லை. மாறாகப் பாவிகளும், புறஜாதியாரும், அரண்மனையின் வேலைக்காரர்க -ளும் அவருடைய தலையில் பலமாய் குட்டினார்கள். அனைத் -தையும் இயேசு சகித்தார். ஏற்றுக் கொண்டார்.
E. சாத்தானின் குட்டு (IIகொரி 12:7):
ஒன்று: உயர்த்த விடாது.
தேவனுடைய பிள்ளைகளோ, தேவனு -டைய விசுவாசிகளோ, வாழ்க்கையில் உயரக் கூடாது என்பது தான் சாத்தானின் முதல் நோக்கம். அதில் அவன் கண்ணும் கருத்துமாய் இருப்பான். தானியேல் உயரக் கூடாது என்று திட்ட -மிட்டவன். அங்கு அரண்மனையில் கூட வேலை செய்கின்றவர் -களையே எதிராக தூண்டி விட்டான். ஆனாலும் தானியேலை ஜெயிக்க முடியவில்லை.
இயேசுவோ, இசுேவின் ஊழியமோ, பிதாவின் சித்தமோ, பூமி -யில் உயர்ந்து விடக் கூடாது என்றபலத்த போராட்டத்துடன் தான் வேலைக்காரர்களைக் கொண்டும் தலையில் குட்டிப் பார்த்தான். ஆனாலும் அவனுடைய ஐம்பம் பலிக்காமல் போனது.
இரண்டு: முள் போலக் குத்தும்,
குட்டுதல் என்றால் தலையில் குட்டுவது மட்டும் குட்டுதல் கிடையாது. எப்போதும் மனசாட்சியை வருத்தி கொண்டே இருப்பதும் ஒரு விதமான குட்டுதல்தான். நெரிஞ்சில் முள் குத்தினால் எப்படி உள்ளுக்குள் வலி இருந்து கொண்டே இருக்குமோ, அதுபோல சாத்தானால் குட்டு வாங்கின -வர்களின் மனசாட்சியும், மன நிலையும் வலித்து கொண்டேயி -ருக்கும். இதிலிருந்து முதலாவது விடுதலை தேவை.
மூன்று: ஜெபித்தாலும் போதாது.
சாத்தானால் வருகின்ற குட்டு போன்ற வேதனை வரும் போது அது நீங்க வேண்டும் என்று எவ்வளவு தான் ஜெபித்தாலும் அது நீங்காது, போகாது. இருந்து கொண்டே இருக்கும். பவுலுக்கு கண் பாதிக்கப்பட்டதைப் போல சில நேரம், சரீரத்தில் சில அடையாளங்களை உண்டாக்கப் பார்க்கும்.
நான்கு: கிருபை கிருபை:
சாத்தானாலும், அவனுடைய குட்டுதலால் உண்டான அடையா -ளத்திலிருந்தும் விடுவிக்கப்பட நமக்குத் தேவையானது, தேவனு -டைய கிருபை மட்டுமே. கிருபையை தேவனிடமிருந்து, பெற்றுக் கொண்டு, தேவனுடைய கிருபையை சார்ந்துகொண்டுவிட்டடோமா -னால், நிச்சயமாக சாத்தானின் கொட்டுதலிலிருந்து நூற்றுக்கு நூறு மடங்கு விடுதலையை பெற்று விடலாம்.
பிலாத்துவின் அரண்மனையில் வைத்து, பலரும் பல விதத் -திலும் இயேசுவைக் குட்டினபோது, அவரோ கிருபையையே நோக்கியிருந்தார். அவருடைய வழிகள் அனைத்தையும், கிருபை தாங்கி கொண்டது. நீங்களும் கிருபையை மட்டும் கேளுங்கள். கிருபையின் மேல் சார்ந்து கொள்ளுங்கள். அப்போது, எந்த சாத்தானும் உங்களை ஒன்றும் பண்ண முடியாது.
F. ஊழியத்தில் உண்டாகும் குட்டு (Iகொரி 4:11):
குட்டு என்பதற்கு அப்போஸ்தவனாகிய பவுல் தன்னுடைய அனுபவத்திலிருந்து ஒரு புது விளக்கத்தைக் கொடுக்கின்றார். ஆனால், இது அனுபவத்தினால் உண்டான உண்மையான விளக் -கம்.
ஒன்று:- பசி என்கின்ற குட்டு.
பசி என்பது சரீரத்தில் உண்டாகின்ற
ஒரு வகையான வேதனையாகும். இந்த பசி என்கின்றவேத -னையை சிலர் தாங்கிக் கொள்வார்கள். பலரால் அதைத் தாங்க முடியாது. பவுலுக்கும் பசி என்பது ஊழியத்தினால் உண்டான குட்டு போன்ற வேதனையாகும்.
“வருத்தத்திலும், பசியிலும், அநேக முறை உபவாசங்களிலும் இருந்தேன்" (IIகொரி 11:27) என்ற தன்னுடைய அனுபவத்தைக் கூறுகின்றார். இயேசுவின் வாழ்க்கையிலும் பசி என்பது பல முறை குறுக்கிட்டது. பசியாய் இருந்தபடியினால் அத்திமரத்தை சபித்தார். புசிக்க ஏதாவது உண்டா என்று வாய்விட்டு கேட்டார், சில சமயம் புசிக்கவும் நேரமில்லாதபடி ஊழியம் செய்தார். ஊழியத்தினிமித்த -மாகவும், பிதாவின் சித்தம் நிறைவேறவும் இதையெல்லாம் தாங்கி கொண்டார்.
ஊழியத்தில் உண்டாகும் குட்டு போன்ற இந்த நிலைமைகள் வரும்போது பவுலைப் போல மாறுங்கள். இயேசுவைப் போல வாழ பழகுங்கள்.
இரண்டு:- தாகம் என்னும் குட்டு.
தாகம் என்பது சாதாரணமா -லாது அல்ல. தாகம் சில நேரம் உயிரைக் கூட பரிக்கும் (நியா 15:18). மனுஷகுமாரனாக பூமியில் இருக்கும்போது, ஊழி-யத்தின் போதும், மரணத்தின் போதும் இயேசு தாகத்தோடு இருப்பதை வெளிப்படையாய் சொன்னார்.
தாம் அநேக நேரங்களில் பலரையும் சோர்ந்து போகப் பண் -ணிவிடும். அந்நாளிலே சௌந்தர்யமுள்ள கன்னிகைகளும், வாலிபரும், தாகத்தினால் சோர்ந்து போவார்கள் (ஆமோ 8:13). பார்வைக்கு சௌந்தர்யமாய்க் காணப்பட்ட இயேசுவுக்கே தாகம் எடுத்தது. அப்படியானால் சாதாரண மனிதர்களாகிய நமக்கும் தாகம் உண்டாவது சகஜம்தான்.
வேதவாக்கியம் நிறைவேறுவதற்க்காகவே சிலரை தாகத்தின் பாதையில் கர்த்தரே நடத்துவார் (யோவா 19:28). அப்படிப்பட்டவர் -கள், இதை சாத்தான் குட்டினதாகவோ, அவன்தான் சோதிக் -கிறான் என்றும் நினைக்க கூடாது.
உங்களுக்கு எப்படி? சிம்சோனைப் போன்றதாகமா? அல்லது, வேதவாக்கிய நிறைவேறுவதற்க்காக உண்டாகின்றதாகமா என் -பதை சோதித்துப் பாருங்கள்.
மூன்று:- நிர்வாணம் என்னும் குட்டு.
நிர்வாணம் என்பது அருவ -ருப்பைக் குறிக்கும். ஊழியத்திற்கு என்று வரும்போது இது போன்ற அருவருப்புகள் வருவதுண்டு. இயேசுவை சுற்றிலும் நின் -றிருந்த பலரும் அருவருப்பானவர்கள்தான். ஏறத்தால நிர்வாணி -கள் போல்தான் காணப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் இயே -சுவின் தலையில் குட்டவும் செய்தனர்.
இயேசு சிலுவையில் தொங்கும் போது, நாம் படத்தில் பார்ப் -பது போல இடுப்பில் துணியை கட்டி தொங்க விடவில்லை. அவரை முழு நிர்வாணமாகத்தான் சிலுவையில் தொங்க விட்டனர்.
G. இயேசுவும் குட்டும் (மத் 26:67):
இயேசுவை இரண்டு விதங்களில் குட்டினதாக வேதத்தில் பார்க்கலாம். இரண்டும் இரண்டு அர்த்தங்களையுடையது.
ஒன்று:- துப்புதல் குட்டுதல் (மத் 26:67) தேவக்குமாரனாகிய இயேசுவின் முகத்தில் துப்பியுள்ளனர். அதன் பின்பு குட்டியுள்ள -னர். இது ஏற்கனவே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறை -வேறுதல் ஆகும் (மாற் 10:34). துப்புதல் என்பது வெட்கத்தைக் குறிக்கும். வெட்கமுண்டாகும்படி துப்பியும், வழியுண்டாகும்படி குட்டி -யும் உள்ளனர். துப்புதலும், குட்டுதலும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தா -லும், அவரோ மௌனமாகவே இருந்துள்ளார்.
இரண்டு:- முகத்தை மூடுதலும் குட்டுதலும் (மாற் 14:65) முகத்தை மூடின பின்பு குட்டினதாக இங்கு வாசிக்கின்றோம். யாராவது செத்தால்தான் உயிரோடு இருக்கின்றவர்கள் முகத்தை மூடுவார்கள் (11சாமு 19:4). ஆனால், இயேசு இன்னும் சாகவே இல்லை. அதற்குள்ளாக அவருடைய முகத்தை மூடிப் போட்டனர்.
ஏன் தெரியுமா? அவரை சுற்றிலும் சேவகர்கள். பிரதான ஆசாரியர்கள், காவளாளிகள் போன்றபலரும் நின்றுக் கொண்டி -ருந்தனர். அவர்களில் பலரும் அவரை குட்டி விட்டு, யார் அறைந்தது என்று சொல்லச் சொல்லுவார்களாம். குட்டின நபரை சரியாக சொல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் குட்டுவார்களாம்.
இப்படியெல்லாம், கேலியும், கிண்டலும், நையாண்டிதனமும் பண்ணுவதற்க்காகவே அவருடைய முகத்தை மூடி போட்டு குட்டி -யுள்ளனர். அன்பான சகோதரர்களே, சகோதரிகளே இப்படியாய் இயேசு விதவிதமாய் அனுஅனுவாய் அனுபவித்த பாடுகளையும், வேதனைகளையும், சோதனைகளையும் நீங்கள் அனுபவித்தால் உங்கள் உள்ளம் பண்பட ஆரம்பிக்கும். ஆவி கிறிஸ்துவுக்குள் வைராக்கியம் கொள்ள வைக்கும்.
எந்த சோதனைகள் வந்தாலும் எதிர்த்து நிற்கவும், சாத்தா -னையும், சாத்தானின் மக்களை மேற்கொள்ளவும் தேவ கிருபை உங்களைப் பூரணமாக நிரப்பி விடும். இயேசு துப்பப்பட்டு, முகம் மூடப்பட்டு, உங்களுக்காக குட்டுகளையும் சகித்தபடியினால் நீங்கள் பாக்கியவான்களாகவும், பாக்கியவதிகளாகவும் இருப்பீர்கள்.
H.உதாரணமான சில குட்டுகள்:
1. சங் 141:5
நீதிமானின் குட்டு
2. மத் 26:67
துப்பின பின்பு குட்டுதல்
3. மாற் 14:65
முகத்தை மூடி குட்டுதல்
4.1கொரி 4:11
ஊழியத்தில் உண்டாகும் குட்டு
5. 11கொரி 12:7
சாத்தானின் குட்டு