சிலுவையின் வரலாறு பாகம் - 21 : இயேசுவின் கட்டுகளும் கை, கால்களும்

 



சிலுவையின் வரலாறு பாகம் - 21 : இயேசுவின் கட்டுகளும் கை, கால்களும்


“அவரைக் கட்டி கொண்டு போய், தேசாதிபதியாகிய பொந்தியுபி -லாத்துவினிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள்" (மத் 27:2).


கட்டுகள் என்ற வார்த்தை கிறிஸ்தவர்களின் மத்தியில் மிகவும் பரிச்சயமான வார்த்தையாகும். ஜெபத்திலே போய் உட்கார்ந்தால் தேவனைத் துதிப்பதை விட கட்டுகளை உடைப்பதும், அவிழ்ப்பதும் தான் இன்றைய கிறிஸ்தவர்களின் ஜெப நேரமாக உள்ளது. இதை நான் தவறாக சொல்லவில்லை. அந்த அளவுக்கு ஜனங் -கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இயேசுவின் பாடுகளின் நேரத்தில் அவரையும் ஐந்து விதமான கட்டுகள் தொட்டு சென்றுள்ளது. இது அநேகருக்கு ஆச்சரியமாய் இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. அந்த ஐந்து விதமான கட்டுகள் என்னென்ன என்றும், அதன் விளக்கங்களையும் ஒவ் -வொன்றாக ஜெபத்துடனும், பரிசுத்த ஆவியானவரின் நடத்துத -லுடனும் கவனிப்போம்.


a. மரனாக்கிளை என்றகட்டு:


“அவரைக் கட்டி கொண்டு போய், மரணாக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டதைக் கண்டு" (மத் 27:2,3).


இயேசுவுக்கு உண்டான முதல் கட்டு, மரணாக்கினை என்ற கட்டு ஆகும். மரணாக்கினை என்றால் என்னத் தெரியுமா? “காரி -ருள், மரண அந்தகாரம், இருண்ட ஸ்தலம், ஒளியையும் இரு -ளாக்கும் நிலைமை, போனால் திரும்பி வர முடியாத தேசம்” (யோபு 10:21).இப்படிப்பட்ட மகா பயங்கரமான நிலைமைக்கு பெயர் தான் மரணாக்கினை.


இதை வாசிக்கும் நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்த யாரோ இப்படிப்பட்ட மரண தண்டனைக்குள்ளாக போய்விட கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, இயேசு மரணாக்கினை என்னும் மரண தண்டனையின் கட்டை தன் மீது ஏற்றுக் கொண்டார்.


இயேசுவுக்கு உண்டான முதல் கட்டாகிய மரணாக்கினை கட்டு விடியற்காலத்தில் வழங்கப்பட்டது (மத் 27:1,3). விடியற்காலை என்றால் "இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப் போலிருப்பீர்" (யோபு 11:17) என்ற வேத வசனத்தின்படி அவர் வாழ்க்கையில் இருள் அடைந்த நேரமாக அவருடைய நேரம் காணப்பட்டது.


எனக்கன்பானவர்களே, எப்பேர்பட்டதான இருள் உங்களை சூழ்ந்து இருந்தாலும், இயேசு ஏற்றுக் கொண்ட மரணாக்கினை என்ற கட்டினிமித்தம் உங்களுக்கு மாபெரும் விடுதலை உண்டா -கின்றது. இருளில் இருக்கிற நீங்கள் இனிமேல் பெரிய வெளிச் -சத்தைக் காண்பீர்கள்.


b. குற்றச்சாட்டு என்றகட்டு:


"இயேசுவைக் கட்டிக் கொண்டு போய், பிரதான ஆசாரியர்கள் அவர் மேல் அநேகங் குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை" (மாற் 15:3).


இந்த கடைசிகாலத்தில் குற்றஞ்சாட்டப்படாதவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏதாவது ஓர் குற்றச்சாட்டு அணைவர் மீதும் வரத்தான் செய்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குற்றஞ்சாட்டுதல் அதிகமாக இருந்துள்ளது. அதுவும் குற் -றஞ்சாட்டுவதற்க்காகவே இயேசுவை கட்டி கொண்டு போயுள்ள -னர். ஒன்றோ இரண்டோ குற்றத்தை அவர் மீது சுமத்தாமல் அநேகங் குற்றங்களை அவர்மேல் சுமத்தினர்.


குற்றஞ்சாட்ட நோக்கமாயிருந்தார்கள், அவருடைய வாய் மொழியில் பிழை கண்டுபிடிக்க வகை தேடினர். பிடிவாதமாய் அவர்மேல் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தனர் என்று மாற்3:2, லூக்11:53; 23:10 ஆகிய வசனங்கள் சொல்லுகின்றது. இத்தனை -யும் அவருக்கு உண்டான கட்டுகள் என்பதையே காண்பிக்கின்றது.


இரண்டாவது கட்டு என்ற குற்றச்சாட்டுகளை மேற்கொள்ள இயேசு என்ன செய்தார் தெரியுமா? “அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை. அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்” (மாற் 14:61; 15:5). நல்ல மருந்து, சிறந்த மருந்து உண்டென்றால் அது மௌனம் என்கிறதான மருந்துதான். இந்த மௌனம் பல பெரிய பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வுகளைக் கொண்டு வந்து விடும்.


உங்கள் ஜீவியத்தில் பழிச்சொல், இழிச்சொல், நிந்தையான வார்த்தைகள் போன்ற கட்டுகள் உங்களை சூழ்ந்துக் கொள்ளும் போது நீங்கள் செய்ய வேண்டியது, இயேசுவைப் போல மௌன -மாகவே இருந்து விடுங்கள். அவசரப்பட்டு எந்த பதில் உத்தரவும் சொல்லிவிடாதீர்கள். பதிலைக் கொடுத்து விடாதீர்கள். நிச்சயம் நீங்கள் மகிமைபடுத்தப்படுவீர்கள். உங்கள் கட்டுகளும் உங்களை விட்டு முற்றிலுமாக மாறும் மறையும்.


C. சாவு என்ற கட்டு:


"யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப் பிடித்து, அவரைக் கட்டி, ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கு -மென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே" [யோவா 18:12,14).


சாவு என்பது ஓர் மிகப் பெரிய பொல்லாத கட்டாகும். சாவும், மரணமும் ஒன்றா அல்லது வேறு வேறா என்கிறசந்தேகம் பல -ருக்கும் உண்டு. மரணம் என்றால் தண்டனை. இது ஒருவர் மற் -றொருவருக்கு வழங்கும் தீர்ப்பாகும். சாவு என்பது அப்படியல்ல, அது விஷம் போன்றது. உணவு மூலம் உண்டாகும், தண்ணீர் மூலம் உண்டாகும் (IIஇரா4:40). ஆனபடியினால்தான் இயேசு -வுக்கு கசப்பு கலந்த காடியை கொடுத்தார்கள். திராட்சை இர -சத்தில் கலந்த காடியைக் கொடுத்தார்கள், கடற்காளானில் தோய்த்தும் கொடுத்தார்கள். ஆனாலும் அதை அவர் பருகவில்லை.


மரணமோ அல்லது சாவோ எது வந்தாலும் அவைகளிலி -ருந்து முற்றிலுமாய் உங்களை பாதுகாக்க கிறிஸ்து இயேசு வல் -லவராய் இருக்கிறார்.


யூதர்கள் பல உபாய தந்திரங்களை கையாண்டு இயேசுவை சாகடிக்க எவ்வளவோ முயற்ச்சித்தனர். கடைசியில் சிலுவையில் அறைந்தும் கொடுமைபடுத்தி பார்த்தனர். ஆனாலும், அவர்களின் ஸ்தம்பன வித்தைகள் பழிக்காமல் போனது. பிதாவின் சித்தமும், பரலோக நேரமும் வரும் வரை அவர் சிலுவையில் உயிரோடுதான் இருந்தார்.


ஏற்ற நேரம் வந்த பிறகு அவர் தாமாகவே பிதாவின் கையில் தனது ஜீவனை ஒப்புக் கொடுத்தார். அதன் பின்புதான் அவரின் ஜீவன் பிரிந்தது. யூதர்கள் சாகடித்தபடியினால் இயேசு சாகவில் -லை. அவரை சாகடிக்க அவர்களால் முடியவும் இல்லை. அவர் தமது ஜீவனை பிதாவின் கைகளில் ஒப்புக் கொடுத்தார் இது தான் உண்மை.


சாவின் கட்டை அறுத்து, சிலுவையை ஜெயித்தார். உலக சரித்திரத்தையும் ஜெயித்தார். சகலத்தையும் ஜெயித்த இயேசு உங்களையும் ஜெயிக்க செய்வார்.


d. தூஷணம் என்ற கட்டு:


"அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து அநேக தூஷண வார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்” (லூக் 22:64,65).


தேவனுடைய ரூபத்திலே இயேசு வந்திருந்தாலும், அவர் மனுஷ சாயலானபடியால் அவரும் தூஷணத்துக்கு ஆளானார். தூஷணம் என்பது, ஒருவர் செய்த நல்ல காரியத்தை த்மை என்று சொல்வ -துதான் தூஷணம். “அன்றியும், மனுஷகுமாரன் சர்வ வல்லவ -ருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங் -கள் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று உங்க -ளுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத் 26:64). தரிசனத்தைக் குறித்து சொன்ன இந்த வார்த்தையை உடனே தேவதூஷணம் என்று சொன்னார்கள். காரியத்தின் அர்த்தத்தை புரிந்து கொள் -ளாமல் குற்றம் சாட்டுவதுதான் தூஷணம்.


உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும், யாரையும் பார்த்து தூஷணமாய் பேசாதிருங்கள். அதை கர்த்தர் முழுதுமாய் வெறுக்கிறார். ஒரு மனுஷனோ அல்லது மனுஷியோ தூஷணமுள் ளவர்களா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.


தூஷணம் என்றால் என்ன?


1) பொல்லாத சிந்தனைகள் 

2) கொலைபாதகங்கள்

 3) விபச் -சாரங்கள் 

4) வேசித்தனங்கள்

 5) களவுகள்

 6) பொய்சாட்சிகள் (மத் 15:19)


 ஆகிய ஆறு துர்க்கிரியைகள் உள்ள மனுஷன் தூஷ -ணம் பண்ணுகிறவனாக காணப்படுகின்றான்.


மற்றொரு வகையினரும் தூஷணகாரர்களாய் இருப்பார்கள். அதாவது, இயேசுவின் மேல் தூஷணம் சொன்னவர்கள் யார் தெரியுமா? பிரதான ஆசாரியன், வேதபாரகர், பரிசேயர், யூதர் -கள், இவர்கள் எல்லாம் முக்கியஸ்தர்கள், பதவிகளில் இருப்ப -வர்கள், ஜனங்களால் மதிக்கப்படுவார்கள். ஆனால், பாருங்கள் இவர்களும் தூஷணக்காரர்கள் என்கிற பட்டத்தையுடையவர்களாக மாறிப் போனார்கள். இவர்கள் தான் இயேசுவை சிலுவையிலி -ருந்து இறங்கி வா என்றார்கள். உன்னை நீயே இரட்சித்துக் கொள் என்றாார்கள். இந்நாட்களிலும் நன்கு படித்த, பதவியில் இருக்கின்ற சிலரும் இப்படிதான் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாகவும், கவனமாகவும் இருங்கள்.


அவருக்கு எதிராக சொல்லப்பட்ட ஒவ்வொரு தூஷணத்தின் போதும் இயேசு வசனங்களையும், வல்லமையுள்ள வார்த்தைக -ளையும் சொல்லி மேற்கொண்டார். ஆனால், அவர்களின் தூஷணத்துக்கு எதிரான தூஷண வார்த்தைகளை அவர் ஒரு போதும் பயன்படுத்தினதே இல்லை. நாமும் இயேசுவைப் போல -வே தேவ வசனங்களைக் கொண்டு, அனைத்துவித தூஷணத் -தையும் மேற்கொள்வோம்.


மன்னிப்பு


இந்த செய்தியை வாசிக்கின்ற நீங்கள் கடந்த காலத்தில் பல -ரையும் தூஷிக்கின்றவர்களாய் இருந்திருக்கலாம். நீங்கள் அதை அறியாமல் செய்திருந்தால் தேவனுடைய இரக்கம் நிச்சயம் உங்க -ளுக்கு உண்டு. "முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்து -கிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன். அப்படியிருந் -தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடி யினால் இரக்கம் பெற்றேன்" (Iத்மோ1:13) என்கிற இந்த வசனத் -தை விசுவாசத்தோடு அறிக்கையிடுங்கள். அப்போது தூஷணம் என்கிற கட்டு உங்களை விட்டு மாறிப் போகும்.


"மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்த தூஷ -ணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்" (மாற் 3:28) என்ற வல்லமையுள்ள வசனத்தின்படியே நீங்களும், உங்களை சார்ந்த -வர்களும் கிறிஸ்துவின் மன்னிப்பை பெற்று, எந்தவொரு கட்டுக -ளும் இல்லாத பாக்கியமுள்ள வாழ்க்கையை உங்களுக்குத் தந் -தருள்வாராக.


e. கைகளும் கால்களும்:


"அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள்” (அப் 2:23).


பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் கைகள் என்பது மிக முக்கியமானது ஆகும். அதுபோலவே, இயேசுவுக்கும் கைகள் மிகவும் முக்கிமாகக் காணப்பட்டது. கைகள் என்றால் பிரயாசம் என்று அர்த்தம் (ஆதி 5:29). உங்களுடைய என்னுடைய கைக் -ளின் பிரயாசத்தை (முயற்சியை) ஆசீர்வதிப்பதே தேவனுக்கும் பிரியமானது.


இயேசவும் தன் கைகளைக் கொண்டு ஏராளமான நன்மைக -ளைச் செய்தார், அற்புதங்களைச் செய்தார், அடையாளங்க -ளைச் செய்து காட்டினார். பேய்களையும் பிசாசுகளையும் துரத் -தினார். அவருடைய கைகளினாால் விடுதலையாக்கப்பட்டவர்க -ளும், நன்மைகளை பெற்றுக் கொண்டவர்களும் ஏராளம், ஏராளம்.


அப்பழப்பட்ட இயேசுவின் கைகளில்தான் யூதர்கள் அன்றைக்கு ஆணிகளை அறைந்து, சிலுவையில் அவரை கொலை செய்த -னர். அப்படிப்பட்டதான கொடூரமான கொலைக்கு கூட தன் கை -களை அவர் விலக்கவில்லை.


எனக்கு அன்பான தேவ ஜனமே உங்கள் கைகளின் பிரயா -சத்தை ஆசீர்வதிப்பதற்க்காக தன் கைகளில் ஆணிகளை ஏற்றுக் கொண்ட ஆண்டவர் இன்று முதல் நன்மையான கைக் -ளாக உங்கள் கரங்களை மாற்றப் போகின்றார். இது வரையி -லும் எந்த ஒரு சுபிட்ஷத்தையும் காணாத உங்கள் கைகள் இனிமேல் ஏராளமான அற்புதங்களை காணும்படி பண்ணுகிறதை நீங்களும் காண்பீர்கள். உங்களைச் சுற்றிலும் இருக்கின்றவர்க -ளும் காணப் போகின்றார்கள்.


யோவான் 18:12 சொல்கிறது, போர்ச்சேவன் ஆயிரம் பேருக்குத் தலைவன், யூதர்களின் ஊழியக்காரன் ஆகிய மூன்று பேரும் இயேசுவைப் பிடித்தார்கள். அதினால் அவர்களின் கைகள் இயே -சுவைத் தொட்டது. இதுபோல பாடுகளின் போது இயேசுவைத் தொட்ட ஆறு சம்பவங்களையும், இயேசு தம்முடைய கைகளினால்

தொட்ட ஆறு சம்பவங்களையும் கீழே காணலாம். 


I. இயேசுவை தொட்ட கைகளின் சம்பவம்:


1. மத் 26:67 : கன்னத்தில் அறையும் போது


2. மத் 27:2 : அவரைக் கட்டினவர்களின் கைகள்


3. மாற் 14:65 : வேலைக்காரரின் கைகள்


4. லூக் 22:64 : கண்களைக் கட்டியவர்களின் கைகள்


5.யோவா 18:22 : சேவகனின் கைகள்


6. யோவா 19:3 : கையினால் இயேசுவை அடித்தவர்களின் கைகள்


II.உன்னத 5:14 படிகப்பச்சை:


தானி 10:6 இயேசுவின் முழு சரீரமும் படிகப்பச்சைதான்.


 எசே 1:16 படிகப்பச்சை (எல்) தேவனுடைய மகிமை.


ஆப 3:4அவர் கரத்தினில் பராக்கிரமம் மறைந்திருக்கும்.


இயேசுவின் கரங்களினால் நமக்குக் கிடைக்கும் நான்கு நன்மைகள்: 


ஏசா 66:14 முழுவதும் வாசிக்கவும்.


1) இருதயம் மகிழும்.


2) எலும்புகள் செழிக்கும்.


3) கர்த்தருடைய ஊழியக்காரர்களை வேறு பிரித்துக் காட்டும்.


4) சத்துருக்கள் தேவகோபத்திற்கு ஆளாவார்கள்.


உன்ன 5:14 பொன்வளையல்கள்:


பொன் வளையல்கள் என்றால் என்ன?


யாத் 25:12 பொன்னினால் செய்த வளையங்களைக் குறிக்கும்.


வளையங்கள் (எல்) என்ன?


யாத் 28:28 வளையங்களைக் ஒன்றுடன் ஒன்றைக் கட்ட வேண்டும்.


யாத் 36:29 வளையங்கள் என்றால் இணைக்கக் கூடியது.


வா.ம்: மாற் 10:7,8 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனை -யும் தாயையும் விட்டுத் தன் மளைவியோயேடே இசைந்தி -ருப்பான், அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயி -ருக்கிறார்கள்.


புல 2:3 பின்னாகத் திரும்பின வலதுகரம்: 


பின்னாகத் திரும்பினது (எல்) என்ன?


சங் 74:11 வலது கரத்தை முடக்கிக் கொண்டார். என்ன நடக்கும்?


சங் 74:10,13 நிந்திக்கிறசத்துருக்களின் தலையையும், பகைக் -கிறபகைவர்களின் தலையையும் உடைப்பார்.


உ.ம்:- நியா 5:26 எதிரியாகிய சிசெராவின் மண்டை உடைந்தது. வா.ம்:- சங் 17:7 உமது வலது கரத்தினால் தப்புலித்து

இரட்சிக்கிறவரே.


சங் 8:3 உமது விரல்களின் கிரியை: 


யோவா 8:6 விரலினால் தரையிலே எழுதினார்.


1) ஆண்டவரும் புத்தகம் எழுதியுள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா?


யாத் 32:32 நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து


 2] கர்த்தரே பாடலையும் பாடியுள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா?


உபா 31:14-21 கர்த்தரே பாடலையும் பாடியுள்ளார். 


3) தேவன் தமது விரல்களினால் எழுதினவைகள் என்னென்ன?


யாத் 24:12 நியாயப்பிரமாணத்தை எழுதினார். யாத் 24:12 கற்பனைகளை எழுதினார். உபா 9:10 கற்பலகைகளில் (உடன்படிக்கை) எழுதினார்.


யாத் 32:32 புஸ்தகத்தில் எழுதினார் (பெயர்கள்). வா.ம்:- யாத் 31:18 விரலினால் அவனிடத்தில் கொடுத்தார்.


சங் 8:3 உமது விரல்களின் கிரியை:


லூக் 11:20 நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறேன்.


மூன்று விதங்களில் பிசாசுகளைத் துரத்தினார்:


1) மத் 17:15-18 ஒரே ஒரு பிசாசைத் துரத்தினார்.


2] மாற் 16:10 ஏழு பிசாசுகளைத் துரத்தினார்.


3) மாற் 5:1-15 1000, 1000-ஆன பிசாசுகளைத் துரத்தினார். பலன்: லூக் 11:20 தேவனுடைய ராஜ்ஜியம் இறங்கி வரும். வா.ம்: சங் 144:1 என் விரல்களைப் யுத்தத்திற்கு படிப்பிக்கிறகர்த்தருக்கு ஸ்தோத்திரம்.


சங் 8:3 உமது விரல்களின் கிரியை: மாற் 7:33 விரல்களினால் காதுகளையும் நாவையும் சுகமாக்கினார்.


1. காது என்றால் என்ன?


மத் 13:16காது (எல்) பாக்கியம். பாக்கியம் என்றால் என்ன?


லூக் 6:21 

1) பசி இல்லாத வாழ்க்கை. 

2] திருப்தியான ஜீவியம்.

3] அழுகை இல்லாத நாட்கள்.

4) நகைப்பு நிறைந்த ஜீவியம்.


b. நாவு என்றால் என்ன?


ஏசா 50:4

 1) இளைப்பை மாற்றக்கூடியது.

2) சமயத்திற்கு ஏற்றவார்த்தை வரும்.

3) கல்விமானாய் மாற்றக்கூடியது.

4) கற்றுக்கொள்ள வைக்கிறது.


வா.ம்: நீதி 21:23தன் வாயையும், தன் நாவையும் காக்கின்றான்.


II. இயேசு தொட்ட கைகளின் சம்பவம்:


1. மத் 27:29 : கோலை தொட்டது


2. மாற் 14:35 : தரையிலே விழுந்தார் (தரையை தொட்டார்)


3. லூக் 22:51 : மல்கூசின் காதைத் தொட்டார்


4.யோவா 13:4 : வஸ்திரங்களை தொட்டு கழற்றினார்


5.யோவா 13:5 : சீஷர்களின் கால்களைத் தொட்டு கழுவினார்


6. யோவா 21:13 : மீனையும்/அப்பத்தையும் தொட்டார்


f. கால்கள்:


“நான் தான் என்று அறியும்படி, என் கால்களையும் பாருங் -கள், என்னைத் தொட்டுப் பாருங்கள்" (லூக்24:39).


தேவனால் உண்டாக்கப்பட்ட மனித சிருஷ்டிப்பில், பெரிய அவ -யவம் அல்லது உறுப்பு என்றால் அது கால்கள்தான். ஒருவர் நிற்க்க வேண்டுமானால் முதலாவது கால்கள் இருந்தால்தான் அவர்களால் நிற்க முடியும்.


கால்களை குறித்து வேதாகமம் அழகாக விளக்கம் கொடுக் -கின்றதைப் பாருங்கள். "அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்" (சங்18:33). கால்களை மகிமைப்படுத்துவதற்கா -கவே ஆவியானவர் எழுதி வைத்துள்ள வசனம் இது என்று நான் விசுவாசிக்கிறேன்.


இயேசுவின் கால்களும் கூட மலைகள் மேல் ஏறினது, படகில் ஏறினது, கடலின் மேல் நடந்தது, ஏழைகள் மற்றும் பணக்காரர்களின் வீடுகளில் நுழைந்தது. மரித்துப் போனவர்க -ளின் சரீரங்களைத் தேடி அவருடைய கால்கள் சென்றது. அநே -கர் வந்து வணங்கும்படியான மரியாதைக்குரியதாகவும் அவரு -டைய கால்கள் விளங்கினது.


உங்கள் கால்களையும் கூட ஆசீர்வதித்து விலையேறப் பெற்ற -மகிமை பொருந்திய கால்களாக அவர் மாற்றுவார். "நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத் -தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைத் சந்தித்திருக்கிறது” (லூக்1:79) என்றவாக்குத்தத்த வச -னத்தின்படி உங்கள் கால்களை சமாதானத்தின் கால்களாக மாற்றப் போகின்றார்.


இயேசுவின் பாடுகளில் அவருடைய கால்களும் பலவிதமான பாடுகளை சந்தித்தது. பாடுகளும் உபத்திரவங்ககளும் நிறைந்த நேரத்தில் அவர் தன்னுடைய கால்களில் பாதரட்சையை அணிந் -திருந்ததாக சொல்லப்படவில்லை. அப்படியானால் கால்களில் செருப்புக் கூட இல்லாமல் தான் நியாய விசாரணை மண்டபத்திற்கு சென்றார், அரண்மனைக்குள் கொண்டு போகப்பட்டார். பிலர்தது -வின் மாளிகையிலிருந்து மண்டை ஓடு என்று சொல்லப்படும் கொல்கொதா மலை வரைக்கும் வெறும் கால்களாலேயே நடந்து சென்றுள்ளார்.


ஆனபடியினால், ஸ்தோத்திரம் என்னும் பலிகளை செலுத்தி இயேசுவின் பாதங்களை முத்தம் செய்யுங்கள் அப்போது “சமா -தானத்தின் தேவன் சீக்கிரமாய்ச சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்" (ரோம 16:20) என்ற வல்லமையான வச -னம் உங்கள் வாழ்வில் நிறைவேறுவதைக் காண்பீர்கள்.


நீங்களும், உங்கள் கால்களை கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்து இயேசுவின் சுவிசேஷத்தை சொல்வதற்காகவும் ஆயத்தப்படுத்துங் -கள். கிறிஸ்துவின் நாம மகிமைக்காக ஆயத்தமாய் இருக்கும் கால்கள் மட்டும் தான் பரலோகத்தையும், சீயோன் பிரதேசத்தை -யும் அடைய முடியும்.


இயேசுவின் பாடுகளுக்கு இணையாகச் சொல்லப்பட்டுள்ள உவமையான கால்களும்/ பாதங்களும்:


1. மத் 14:25 : கடலில் நடந்த கால்கள் 


2. மாற்10:32 : முன்னே நடக்கும் இயேசுவின் கால்கள்


3. லூக் 5:8 : பாவத்தை வெளிப்படுத்தின பாதம் 


4. லூக் 7:38 : கண்ணீரால் நனைந்த பாதம்


5. லூக்24:15 : ஆவியில் நடந்த கால்கள்


6. லூக்24:39 : தொட்டு பார்க்க சொன்ன கால்கள்


7. யோவா 1:36 : ஆட்டுக்குட்டி போன்றகால்கள்


8. வெளி 1:15 : பிரகாசம் போன்ற கால்கள்


குறிப்பு:


இஈ.மீ - வாக்குத்தத்தம் / வி.மீ விளக்கம் / எ.ல் - என்றால் / அ.மீ - அர்த்தம் எ.கா - எடுத்துக்காட்டு / உம் - உதாரணம் / முக்கியக் குறிப்பு / அ - அல்லது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.