சிலுவையின் வரலாறு பாகம் - 18: ஊர்வலத்தில் கழுதை :

 



சிலுவையின் வரலாறு பாகம் - 18: ஊர்வலத்தில் கழுதை :


"அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சை செடியிலும், தன் கோளிகைக் கழுதையின் குட்டியை நற்குல திராட்சை செடியிலும் கட்டுவான். திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சைப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்" (ஆதி 49:11).


கழுதை! கழுதை!! இந்த வார்த்தையை இன்றும் கூட சில கிராமங்களில் பெற்றோர் தன் பிள்ளைகளைப் பார்த்து சொல்வ -தைக் காணலாம். கழுதை என்றாலே ஒன்றுக்கும் உதவாதது என்கிற நினைப்பு பலருக்கும் உண்டு. கழுதை சுமப்பதைப் போல நான் சுமந்து கஷ்டப்படுகிறேன் என்று தன்னைத் தானே சலித்துக் கொள்கிறவர்களும் உண்டு. காட்டுக் கழுதையைப் போல நான் இங்கு கத்துகிறேன் நீ அங்கே என்ன செய்து கொண்டிருக்கி -றாய் என்று, கழுதையைப் போலவே கத்துகிறவர்களும் உண்டு. இது எல்லாமே ஜனங்கள் கழுதையைக் குறித்து சொல்லும் வார்த்தைகள். இப்படி அவர்கள் கழுதை என்று சொல்லும் ஓவ் -வொரு வார்த்தைகளும் கழுதையை குறித்து பெருமையாய் பேசு -கிறார்கள் என்று அர்த்தம். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், ஜனங்கள் எவ்வளவுதான் கழுதை கழுதை என்று கழு -தையாகக் கத்தினாலும் அது எந்த கழுதைக்கும் கேட்கப்படப் போவது இல்லை. காரணம், அது காட்டில் வாழ்கிறது. ஜனங்கள்

வீட்டில் வாழ்கிறார்கள்.


பரிசுத்த வேதாகமத்தில் கழுதையின் பயணம் என்பது ஆதியா -கமம் 12-ல் ஆரம்பித்து யோவான் 12-ல் முடிகின்றது. வேதத்-தில் முக்கியமானவைகள் 12 என்ற எண்ணில் போய் முடிகின்ற -தைக் காணலாம். 


உதாரணமாக: 


12 மணியக்காரர்கள், 

12 லேகியோனகள், 

12 நட்சத்திரங்கள், 

12 ரிஷபங்கள், 

12 சிங்கங்கள், 

12 காளைகள், 

12 நீரூற்றுகள் 


இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வருகையில் 12 விதமான கழுதைகளை குறித்து வேதம் சொல்கின்றது. அவைகளை பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலோடும், வேத வசனத்தின் வெளிச்சத் -திலும் தெரிந்து கொள்வது நல்லது.


1. ஆதி 12:16

கோளிகைக் கழுதை


2. எண் 22:28

பேசும் கழுதை


3.நியா 5:10

வெள்ளைக் கழுதை


4. 11சாமு 16:1 

பொதி சுமக்கும் கழுதை


5. 1இரா 13:24,28

கழுதை [அல்லது) துணிச்சலான கழுதை


6. யோபு 6:5

காட்டுக் கழுதை


7.சங் 32:9

கோவேறுக் கழுதை


8. ஏசா 30:6

மறி (அல்லது) கழுதை மறி 


9.எரே 2:24

மதவெறிக் கழுதை


10. மாற் 11:2

கழுதைக் குட்டி


11. லூக் 19:30

ஒருவரும் ஏறியிராத கழுதைக்குட்டி


12. சங் 32:9

புத்தியில்லாத கழுதை


இத்தனை வகை கழுதையை வேதம் சொன்னாலும் ஒவ்வொரு வகை கழுதைகளுக்கும் உணவு பட்டியலும் மாறுபடுகின்றது.


காட்டுக் கழுதையைப் பாருங்கள் அது காற்றைதான் முக்கியமான உணவாக உட்கொள்கின்றது (எரே 14:6). நல்ல முறையில் வளர்க் -கப்படும் கழுதையோவென்றால் “முறத்தினாலும், தூற்றுக் கூடை -யினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும்" (ஏசா 30:24). அதாவது சல்லடையினால் சலித்து எடுக்கப்பட்ட நல்ல ருசியானவைகளைத்தான் தின்னுமாம். இந்த செய்கை பிரித்தெடுக்கப்பட்ட அனுபவத்தைக் காண்பிக்கின்றது.


ஆதி காலத்திலும், பழைய ஏற்பாட்டு நாட்களிலும், கழுதைகளை வளர்ப்பதும் மேய்ப்பதும் முக்கியமான தொழிலாக இருந்தது. கழுதை என்பது வேதம் சொல்லும் மிருக ஜீவன்களில் மூன்றாவது வகையில் வருகின்றது. ஆடு, மாடு, கழுதை என்று எழுதப்பட்டுள்ளது. ஆடுகள் உள்ளவன் அந்தஸ்து மிக்கவனாகவும், மாடுகளை உடையவன் செல்வந்தனாகவும், கழுதைகளை உடைய -வன் பெரிய வியாபாரியாகவும் கருதப்பட்டான். ஏனென்றால் வியாபார பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது இந்த கழுதைகள் தான். இராஜாக் -களே பல நேரங்களில் குதிரையில் ஏறுவதை விட, கழுதையின் மேல் ஏறுவதை பெருமையாக நினைத்தனர். ராஜாவின் கழுதை -கள் என்றே தனியாகவும் வளர்த்தார்கள் (1இரா 1:38). இவைத் தவிர பெரிய பெரிய யுத்தத்தில் கலந்துக் கொண்ட கழுதைகளும் உண்டு.


முழு வேதாகமத்திலும் மிக அதிகமான கழுதைகள் யாரிடம் இருந்தது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நம் அனைவ -ருக்கும் பரிட்சயமான தேவமனுஷனான மோசேயிடம் ஏறத்தால 61000 கழுதைள் இருந்துள்ளது (எண் 31:34). கர்த்தர் சொன் -னபடி யுத்தம் செய்தபோது மீதியானியரை ஜெயித்ததினால் கிடைத்த கழுதைகளாகும். கர்த்தர் சொல்லி யுத்தம் செய்தால் வெற்றி மட்டுமல்ல, கழுதைகளும் கிடைக்கும் என்பதை இதிலி -ருந்து நாம் அறிந்து கொள்ளலாம். இதை வாசிக்கும் உங்க -ளுக்கும் கழுதைகள் வேண்டுமா, வேண்டாமா என்பதை சிந்தியுங்கள்.


கழுதைகள் 12 விதங்களாக இருந்தாலும் இயேசு ஏறின கழுதைதான் அனைவருக்கும் தெரிந்த கழுதை. இயேசு ஏறின கழுதை ஆவிக்குரிய ஜீவியத்தையும் நன்மையானதையும் குறிக் -கும். அதற்கு முன்பாக, கழுதை என்றால் என்ன என்பதையும் அதனிடம் காணப்படும் ஆறு விதமான மாம்சீகத்தின் கிரியைக -ளையும் தெரிந்துக் கொண்டால், நாம் நம்மை மாற்றிக் கொள் -ளவும், கிருபையாக நம்மை காத்துக் கொள்ளவும் ஏதுவாக


a. காட்டுக் கழுதை:


“காட்டுக் கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப் போல் காற்றை உட்கொள்ளுகிறது: புல் இல்லாததினால் அவைக -ளுடையக் கண்கள் பூத்துப்போகிறது என்றார்” (ஏரே 14:6).


கழுதை என்பதற்கு பலரும் பல விதங்களில் பலவிதமான விளக்கங்களை தன் மனம் போல் சொல்வதுண்டு. ஆனால், கழுதை என்றால் என்ன என்பதற்கு வேதம் தருகின்ற விளக்கம் என்னத் தெரியுமா? “கழுதை மாம்சமான மாம்சமும்" (எசே 23:20). ஆம் கழுதை என்றால் மாம்சம் என்று அர்த்தமாகும். அப்படியா -னால் கழுதைக்குள் பலவிதமான மாம்சத்தின் கிரியைகள் இருக் -கின்றது என்பது உண்மை. வேதத்தில் காணப்படும் பல்வேறு கழு -தைகளில் காட்டுக் கழுதையிடம் மட்டும் காணப்படுகின்ற மாம்சீக -மான ஆறு கிரியைகள் என்ன என்ன என்பதை நாம் பார்க்கப் போகின்றோம்.


அதற்கு முன்பாக! காட்டுக் கழுதை என்பதின் சரியான விளக் -கம் என்னவென்றால், கிறிஸ்துவுக்குள் ஒருவர் வருவதற்கு முன் -புள்ள வாழ்க்கையை குறிக்கின்றது. அதாவது, பழைய ஜீவியத்தை சுட்டி காண்பிக்கின்றது.


1)தங்கும் இடங்கள் (ஏசா 32:14):


பாழான இடங்கள், வெறுமையான இடங்கள், மேடுகள், துருக் -கம் (இங்கு சொல்லப்பட்டுள்ள துருக்கம் மண்டை உடைந்து போகு -தலை காட்டுகின்றது), மற்றும் கெபிகள் போன்ற இடங்களில் தங் -கக் கூடியது. இவைகள் எதுவுமே மனிதர்கள் வாசம் பண்ணுவ -தற்கு ஏற்ற இடம் கிடையாது. ஆனால், இந்நாட்களில் பலருடைய வீடுகள் பாழடைந்த கட்டடம் போலவும், கெபி என்கிற குகை போல -வும், வெறுமையாகவும் இருக்கின்றது. அப்படி இருந்தால் அங்கு கிறிஸ்து இயேசு இல்லை என்று அர்த்தம். இந்த நிலைமை மாற -னும். அதற்கு நீங்கள் ஆண்டவர் இயேசுவிடம் கெஞ்சனும்.


2)தன்னிச்சையானது (யோபு 39:5);


தன் இஷ்டப்படி வாழ்கிற வாழ்க்கைக்கு பெயர்தான் தன்னிச்சை இந்த காட்டுக் கழுதை எப்படி தன்னிச்சையாய் வாழ விரும்பினது என்பதை ஆண்டவரே சொல்கிறார் பாருங்கள். "அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம் பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை” (யோபு 39:6,7,8). ஆனபடியினால் அதனுடைய வீட்டை வனாந்தரமாக்கினார், அது வாழும் இடத்தை உவர் நில -மாக்கினார், மலையெல்லாம் அலைந்தது. பச்சை பூண்டுகளை தேடி தேழ திரியும்படியாக அதை எங்கும் அலைய விட்டார். இரட் -சிக்கப்பட்டேன், மனந்திரும்பினேன் என்று சொல்லி விட்டு, கனி -யும் கொடுக்காமல், முன் மாதிரியாகவும் வாழாமல் தன்னிச்சை -யாக வாழ்கின்ற சகோதரனே, சகோதரியே, ஊழியக்காரனே, ஊழியக்காரியே உங்கள் நிலைமையும் வனாந்தரமாய் மாறி, பூண் -டுக்கும், புல்லுக்கும் வழியில்லாமல் போவதற்கு முன்பாக உங்க -ளின் தன்னிச்சையான முரட்டு வழிகளை விட்டு மனம் திரும்புங் -கள். கர்த்தர் நியமித்த இடம் அல்லது மனிதர்களுக்கு கீழாக அடங்கி நடக்கப் பழகுங்கள். தன்னிச்சை என்கிற மாம்சம் ஒழியட் -டும், தாழ்மை என்கிற கனி உண்டாகட்டும்.


3. தனித்தே திரியும் (ஒசி 8:9):


மிருகங்கள் எப்போதுமே தன்னை சார்ந்த இனத்துடன் சேர்ந் |-தேதான் இருக்கும். ஆனால் காட்டு கழுதையின் சுபாவத்தைப் பாருங்கள். யாரோடும் சேராமல் எந்த மிருகங்களுடனும் ஐக்கியம் கொள்ளாமல் தனித்தே இருக்க விரும்புகிறது. தேவனுடைய பார் -வையில் இதுவும் ஒரு வகையான மாம்சத்தின் கிரியைதான். “தனித்தும், சிறைபட்டும், நிலையற்றும் இருந்தேனே” (ஏசா 49:21) என்று சொல்வது போல யாரோடும் சேராமல் தனித்து இருந்தால் சிறைச்சாலையைப் போன்றும், நிலையற்றும் வேதனை பட வேண் -டியது வரும். இயேசு ஜெப நேரம் தவிர, மற்ற எந்த நேரத்திலும் அவர் தனித்தே இருந்ததே இல்லை. காட்டு கழுதையைப் போல இராமல், இயேசுவைப் போல இருக்கப் பழகுங்கள். மாம்சம் ஒழி -யட்டும். ஐக்கியம் வளரட்டும்.


4. மதவெறி பிடித்தது (எரே 2:24):


காட்டுக் கழுதையிடம் காணப்படும் மாம்சத்தின் கிரியைகளை ஆவியானவர் சொல்லும் போது மத வெறிக்கு இணையாக அதை விவரிக்கின்றார். மதத்துக்காக வெறி கொண்டதும் அதனால் தன் மேன்மையெல்லாம் இழந்து அழிந்து போனது யார் தெரியுமா? சாலமோன்தான் மதத்துக்காக வெறி கொண்டான்.


எருசலேமுக்கு மிக அருகிலும், எதிரிலுமாக ஒரு மலை இருந் -தது. அந்த மலையில் தன்னுடைய மனையாட்டிகளுக்காகவும், மறுமனையாட்டிகளுக்காகவும், அஸ்தரோத், மில்கோம், காமோஸ், மோளேடு போன்ற விக்கிரகங்களின் பெயரில் ஏறத்தால ஆயிரம் மேடைகளை கட்டி அருவருப்பாக்கினான் (1இரா 11:4,8). அந்நிய மதத்துக்காகவும், விக்கிரகங்களுக்காகவும் காட்டு கழுதையை போல மதவெறி கொண்டு அலைந்தான். அதனால் அந்த மலை “நாசமலை” (IIஇரா 23:13) என்று பெயர் மாறிப் போனது. இந்த பெயர் வர சாலமோன்தான் காரணம்.


அன்பான கிறிஸ்தவர்களே, விசுவாசிகளே, கர்த்தருக்காக, இயேசுவுக்காக வைராக்கியம் கொள்ளுங்கள். ஆனால், வெறி கொள்ளாதீர்கள். பக்தி வைராக்கியம் நல்லது (IIஇரா10:16). ஆனால், மத வெறி ஆபத்தானது. அது உங்களை காட்டுக் கழு -தையை போல மாற்றி விடும். சாலமோனைப் போல உங்கள் ஆஸ்தி முழுவதையும் அழித்து விடும். எச்சரிக்கையாயிருங்கள். மத வெறியா அல்லது பக்தி வைராக்கியமா என்று தீர்மானியுங்கள். 5. அதிகாலையில் தின்னக் கூடியது (யோபு 24:5):


காட்டுக் கழுதை மாம்சத்துக்கு ஒப்பானது என்பதற்கு இந்த வேத பகுதி மிக பொருத்தமானதாகும். அதாவது, சூரியன் உதிக் -கும் முன்பே, அதிகாலையில் போய் தீவனத்தைத் தேடுமாம். எவ்வளவு பயங்கரம் பாருங்கள். விழந்தவுடன் அதிகாலையிலேயே தின்பதோ, ஆகாரத்தில் உட்காருவதோ ஆசீர்வாதம் கிடையாது. காட்டில் வாழும் மிருகங்கள் "சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி தங்கள் தாபரங்களில் படுத்துக் கொள்ளும்" (சங் 104:22) என்பதுதான் உண்மை. ஆனால் காட்டுக் கழுதை மட்டும் அப்படியில்லாமல் எப்போதும் தீவனத்தை தேடுகின்ற மாம்சீக குணமுள்ளதாக உள்ளது.


அருமையானவர்களே, அவசியமில்லாத நேரத்தில் சாப்பிடுவதும், அவசியமே இல்லாததையெல்லாம் சாப்பிடுவது ஒரு வகையில் பாவம்தான். நாவையும், வயிற்றையும் கர்த்தருடைய கிருபையைக் கொண்டு கட்டுப்படுத்த தெரிய வேண்டும். “ராஜா சிறு பிள்ளையு -மாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேச -மே உனக்கு ஐயோ!" (பிரச 10:16). உணவையும், உடலையும் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வாருங்கள். கட்டுப்பாடுகளோடு வாழ்ந் -தால், கட்டுகளை தேவன் அவிழ்த்து விடுவார். உணவா? கட்டுப்பாடா எது முக்கியம்?


6) புத்தியில்லாதது (யோபு 11:12): 


பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் என்று ஒவ்வொன் -றுக்கும் தேவன் புத்தியை கொடுத்துள்ளார். மிக சிறிய ஜீவராசி -யாகிய எறும்புக்கு கூட தேவன் புத்தியை தந்திருக்கும் போது காட்டு கழுதைக்கு கொடுக்காமலிருப்பாரா? அதற்கும் புத்தியை தேவன் கொடுத்தார் என்பதுதான் உண்மை. "புத்தியில்லாத மிரு -கங்களைப் போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவை -களாலே தங்களை கெடுத்துக் கொள்ளுகிறார்கள்” (யூதா 1:10) என்ற வேதவசனத்தின்படி காட்டுக்கழுதை தன்னையே கெடுத்துக் கொண்டது. அதனால் புத்தியில்லாத மிருகமாய் மாறினது.


அன்பான தேவபிள்ளையே, நீங்கள் அழகாய் இருக்கின்றீர்களா? அல்லது திறமையாய் இருக்கின்றீர்களா என்று ஆண்டவர் கேட்க -வில்லை. தேவன் உங்களுக்கு கொடுத்த புத்தியில் நிலைத்திருக் -கின்றீர்களா? அல்லது மனந்திரும்புவதற்கு முன்பு இருந்தது போலவே புத்தியற்ற காரியங்களைச் செய்கின்றீர்களா என்று தான் கேட்கின்றார். நீங்கள் என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்.


b. இயேசுவின் கழுதை:


"உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த் -துக் கொண்டு வாருங்கள்" [மாற் 11:2).


இயேசு ஏறின கழுதைக்குட்டியை குறித்து அறிந்துக் கொள் -வதற்கு முன்பு அதைச் சுற்றிலும் உள்ள பல சம்பவங்களை அறிந்து கொள்வது நல்லது. இந்த கழுதைக் குட்டியைக் குறித்து சொல்லப்பட்டுள்ள பகுதியின் துவக்கத்திலேயே நான்கு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளதைக் காணலாம் [மாற் 11:1o 10). அவை எருசலேம், ஒலிவமலை, பெத்பகே, பெத்தானியா ஆகிய -வைகள்.


பெத்தானியா என்ற ஊரின் மிக அருகில் இருந்த பெத்பகே என்ற கிராமத்திலிருந்து ஒலிவமலையின் வழியாக எருசலேமுக்கு போவதற்க்காகத்தான் இயேசு கழுதைக் குட்டியை பிடித்து வரச் சொன்னார். இளம் அத்திபழத்தின் வீடு என்று அர்த்தமுள்ள பெத்பகே என்ற கிராமம், எரிகோவிலிருந்து எருசலேமுக்கு போகும் வழியில் உள்ளது. பெத்தானியா என்ற ஊரோ எருசலேமுக்கும் எரிகோவிற்கும் சரிசம தூர அளவில் நடுவிலிருக்கும் ஊர். அதாவது பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு இரண்டு மைல் தூரம். அதே போல எரிகோவிற்கும் இரண்டு மைல் தூரமாகும்.


ஒலிவமலையென்னும் மலையடிவாரத்தில்தான் பெத்தானியா இருக்கின்றது. இந்த ஊருக்கு முன்பு அத்திபழ வீடு என்னும் அர்த் -தம்தான் இருந்தது. தற்சமயம் "நிர்பந்த வீடு” என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகின்றது. வேதாகம காலத்தில் பெத்தாணியா என்று சொல்லப்பட்டிருந்தாலும், தற்காலத்தில் “லாசரியா" என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. லாசரியா என்ற சொல் “லாசரு" என்ற பெயரி -லிருந்து வந்ததாகும். சாதாரண கழுதை என்று நாம் நினைக்கி -றோம். ஆனால் அந்த கழுதை நுழையும ஊருக்கு எவ்வளவு பெரிய விளக்கமும், சிறப்பும் உள்ளது என்றும் பாருங்கள்.


இயேசு ஏறிச் சென்றகழுதை ஒலிவமலையின் வழியாகத்தான் எருசலேமுக்குச் சென்றது. ஒலிவமலை என்றால் பிரகாசம் அல் -லது தேவ வெளிச்சம் என்று அர்த்தமாகும். இந்த மலை ஏறத் -தால மூன்று மைல் சுற்றளவு கொண்டதாகும். இந்த மலையில் இயேசு ஏறின பகுதி என்பது எருசலேமிலிருந்து ஒரு மைல் தூரத் -தில் உள்ளது. அப்படியானால் கழுதைக்குட்டி மிகவும் கஷ்டப்பட்டு நீண்ட தூரம் போக வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிகின் -றது. அழகு நிறைந்த நான்கு சிகரங்களுள்ள ஒலிவ மலையில் சுமந்து கொண்டு போவது இந்த கழுதைக் குட்டிக்கு கிடைத்த -மிகப் பெரிய பாக்கியமாகும். 


கழுதையின் பெயர்:


இயேசு கழுதையின் மீது ஏறவில்லை. அதற்கு பதிலாக கழுதை குட்டியின் மீது தான் ஏறினார் என்று வேதம் ஆணித்தரமாக கூறுகின்றது (யோவா 12:15). காரணம் கழுதையின் மீது ஏறினால வேதவசனம் சொல்வதைப் போல கடிவாளம் பயன்படுத்தவேண்டியது வரும் (நீதி 26:3). கடிவாளம் என்றால் மூடத்தனம் அல்லது முட்டாள் என்று பொருள். இயேசு ஏறின கழுதை குட்டி மூடத்தன -மானது அல்ல, கவனமானது. ஆனபடியினால்தான் மரக் கிளை -களின்மேல் நடந்த போதும், அது தடுமாறவே இல்லை. இயேசு -வை தள்ளி விடவில்லை. இந்த கழுதைக் குட்டி மிகவும் பொறு -மையானது. ஆனபடியினால்தான் ஏராளமான ஜனங்கள் ஒன்றாக இணைந்து ஓசன்னா, ஓசன்னா என்று கத்தின போதும் இந்த கழுதைக்குட்டி மிகுந்த பொறுமையோடு இருந்துள்ளது. இந்த கழு -தைக் குட்டியைப் போல இடறி போகாத ஜீவியமும், பொறுமை யான குணமும் நமக்குத் தேவை.


கழுதைக் குட்டியின் மீது ஏறும் போது இயேசு, நீதியுள்ளவர், இரட்ச்சிக்கிறவர், தாழ்மையுள்ளவர் (சகரி 9:9) என்னும் மூன்று தன்மைகளையுடையவராக காணப்பட்டார். இப்படிப்பட்ட நல்ல குணங்களெல்லாம் அவரிடம் இருந்தும், அவர் விலையுயாந்த குதிரை மீதோ, ஒட்டகத்தின் மீதோ ஏறாமல், கழுதைக் குட்டியின் மீது ஏறினார் பாருங்கள். அது அவருடைய தாழ்மையாகும்.


சிலர் தன்னை தாழ்த்துவது போல தாழ்த்தி, ஆண்டவரே நான் உம்மை சுமக்கும் கழுதையாக மாறவிரும்புகிறேன் என்று சொல்வார்கள். ஆனால் கோபமும், ஆக்ரோஷமும் நிறைந்தவர்க -ளாய் இருப்பார்கள். யார் சொல்லையும் கேட்க மாட்டார்கள். அப் -படிப்பட்டவர்கள் இயேசுவின் கழுதை குட்டியாக எப்போதுமே மாற -முடியாது. நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பது உண்மையானால் | சாந்த குணம் இருக்க வேண்டும்.


வேதத்தில் பலவிதமான கழுதைகளைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இயேசு எந்த வகையான கழுதைக் குட்டி -யின் மீது ஏறினார்? நியாயமான கேள்வி மனதில் வருவதுண்டு. அதாவது கோவேறு என்னும் கழுதை இனத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவன் "ஆனாகு" என்பவன்தான் (ஆதி 36:24). அது -முதல் கோவேறு கழுதை என்பது தனித்துவமாக மாறினது. ஆனாகு என்பவன் எப்படி தனித்துவம் வாய்ந்த கழுதையை கண் -டுபிடித்தானோ அதே போலத்தான் இயேசு கிறிஸ்து ஏறின கழு -தைக்குட்டிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. கழுதைக்குட்டியாகிய மறி என்று பெயர் சொல்லப்பட்டுள்ளது. இந்த மறி என்ற பெயரை வேதத்தில் நான்கு இடங்களில் காணலாம்.(ஏசா 30:6,24; சக9:9; மத்21:4). நான்கு என்பது ஒரு விஷேசமான எண்ணா -கும். இயேசுவின் சகோதரர்கள் நான்கு பேர் (மத் 13:55). மத் - தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் சுவிசேஷ புத்தகங் -கள் நான்கு. மரித்துப் போன லாசரு உயிரோடு வந்தது நான் -காவது நாள். மறி என்னும் கழுதைக் குட்டி போன இடங்கள் எருசலேம், ஒலிவமலை, பெத்பகே, பெத்தானியா என்னும் நான் -காகும் (மாற் 11:1). இப்படியாய், நன்கு பொருத்தமான, அர்த்தம் பொருத்தமுள்ள பெயர்தான் இந்த கழுதைக் குட்டிக்கும் வழங்கப்-பட்டுள்ளது. 


C. மூன்று அடையாளங்கள்:


1. வஸ்திரங்கள்:


கழுதைக் குட்டியின் மீதும், வழியிலும் வஸ்திரங்களை விரித்-தார்கள் (மாற் 11:7,8,). வஸ்திரம் என்பது இரண்டு அர்த்தங் -களை உடையது. நீதிசரிகட்டுதல், மற்றும் வைராக்கியம் என்ப -வைகளாகும் (ஏசா 59:17). பிரதான ஆசாரியர்களுக்கும், பரி -சேயர்களுக்கும் அவர் நீதியை சரிகட்டினார். வைராக்கியத்துக்கு ஒப்பான வஸ்திரங்களை அவர்கள் வழிகளில் விரித்ததும், பாடு -களைக் குறித்தும், உபவத்திரங்களை குறித்தும் இனிமேல் கவ -லையே படக்கூடாது என்று வைராக்கியமாய் தீர்மானித்து விட்டார்.


கழுதைக்குட்டியின் மேலும், வழியிலும் ஜனங்கள் விரித்த வஸ்திரங்கள், தீர்க்கதரிசியாகிய ஏசாயா சொல்வதைப் போல சிகப்பு வஸ்திரங்களாகத்தான் இருந்திருக்க வேண்டும்


(ஏசா 63:2). ஏனென்றால் நியாயாதிபதியின் அரண்மனையில் வைத்து இயேசுவை சிட்சிக்கும் போது அவருக்கு சிவப்பு அங்கி -யைதான் உடுத்தினார்கள் (மத் 27:28). இது எல்லாமே தீர்க்க -தரிசனத்தின்படிதான் நடந்தது. இயேசுவுக்கும், ஏசாயா தீர்க்க -தரிசியின் தீர்க்கதரிசனங்களுக்கும் அதிக தொடர்பு உண்டு.


II. மரக்கிளைகள்:


மறி என்னும் கழுதை குட்டியின் மீது ஏறி இயேசு பவனியாக சென்ற போது சிலர் மரக்கிளைகளையும் தரித்து வழியில் போட் -டார்கள். மரக்கிளைகள் என்பது நம்பிக்கையை காட்டுவதாக உள்ளது. இதை குறித்து யோபு மிக அழகாகவும் தெளிவாகவும் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார் (யோபு 14:7). வெட்டி போடப் -பட்டாலும் என்ற வார்த்தை இயேசுவின் மரணத்தை குறிக்கின் -றது. திரும்பவும் தழைக்கும் என்ற வார்த்தை இயேசு மறுபடியும் உயிரோடு கூட வருவார் என்பதையும் காட்டுகின்றது.


யோபு தீர்க்கதரிசனமாக சொன்னது போலவே, வெட்டப்பட்டது போல இயேசு மரித்தார். மூன்றாவது நாள் மீண்டும் உயிரோடு எழுந்தார். “இளமரம் போல கிளை விடும்" [யோபு 14:9) என்ற வார்த்தையின்படி கிறிஸ்தவம் என்னும் ஒரே மரத்தில் ஊழியங்கள் என்னும் கிளைகள் மூலமாக துளிர் என்னும் விசுவாசிகள் முளைத்துக் கொண்டே உள்ளனர். இந்த தரிசனத்தோடுதான் இயேசுவின் பவனிக்கு முன்பாக மரக்கிளைகளை தரித்துப் போட்டனர்.


அதே சமயம் கண்ட கண்ட மரக்கிளைகளையும் அவர்கள் போடவில்லை. அதற்கு பதிலாக ஒலிவகிளை, மிருது செடிகளின் கிளை, பேரிச்ச மரக்கிளை மற்றும் அடர்ந்த மரக்கிளை என்னும் நான்கு வகையான கிளைகளை போட்டனர் (நெகே 8:15). ஒலி -வக்கிளை என்பது நற்செய்தியையும். மிருது செடி நித்திய அடை -யாளத்தையும், பேரீச்சக மரக்கிளை பன்னிரெண்டையும், அதா -வது பன்னிரெண்டு கோத்திரங்களையும், அடர்ந்த மரக்கிளை என்பது ஐக்கியத்தையும் விளக்குவதாக உள்ளது.


இத்தனை வகையான பசுமையான இலைகளையும், கிளைக ளையும் போட்டும் மறி என்ற கழுதைக் குட்டி ஒன்றையும் தின்ன -தாக வேதம் சொல்லவில்லை. அப்படியானால், வாய்க் கட்டுப்பா -டுள்ள கழுதை குட்டியாகும். உங்கள் வாயும் கட்டுப்பாடோடு உள் -ளதா அல்லது கழுதையை போல கால் கால் எனக் கத்திக் கொண்டு இருக்கின்றீர்களா என்று சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ் -தவர்களுக்கு வாய் கட்டுப்பாடு மிக மிக முக்கியமாகும்.


III. ஓசன்னா!!


"முன் நடப்பாரும், பின் நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்; கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்" (மாற் 11:9,10). ஓசன்னா என்றால் காப்பாற் -றுங்கள் அல்லது இரட்சியும் என்பது விளக்கமாகும்.


இயேசு எருசலேம் தேவாலயத்துக்கு பவனி போகையில், ஜனங்கள் உன்னதத்தில் ஓசன்னா என்று ஆர்ப்பரித்தார்கள். கூடார பண்டிகை நாட்களில் யூதர் இந்த வார்த்தையை சங் 118:25,26-லிருந்து எடுத்து சொல்வது வழக்கமாகும். கர்த் -தரே இரட்சியும் என்பது இதன் அர்த்தமாகும். தொடக்க நாட்க -ளில் ஒரு விண்ணப்பம் போல சொல்லப்பட்டது. பின் நாட்களில் இது மகிழ்ச்சியான வாழ்த்துதலாக மாறிப் போனது.


ஓசன்னா என்ற வார்த்தை மத்தேயு, மாற்கு, யோவான் என் -னும் மூன்று புஸ்தகங்களில் ஆறு முறை சொல்லப்பட்டுள்ளது.


மூன்று என்பது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திரித்து -வத்தையும், ஆறு என்பது ஆறாம் நாள் சிருஷ்டிக்கப்பட்ட மனி -தனையும் குறிக்கின்றதாக உள்ளது. அதாவது, ஆறாவது நாள் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷன் திரியேக தேவனை ஓசன்னா, ஓசன் -னா என்று எப்போதும் துதிக்க வேண்டும் என்பதுதான் தேவனு -டைய மகா பெரிய பரிசுத்த திட்டமாகும்.


அன்பானவர்களே, சீஷர்கள் மறி என்னும் கழுதை குட்டியை கொண்டு வந்து கீழ்படிதலை நிரூபித்தனர். கழுதைகுட்டி இயேசு -வை சுமந்து சென்று அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினது, வஸ்தி -ரங்களும், கிளைகளும் தரையில் கிடந்து கொண்டு தங்களை தரை மட்டும் தாழ்த்தினது, ஓசன்னா என்று சொல்லி ஜனங்கள் தேவனுக்குரிய மகிமையை செலுத்தினார்கள். இயேசுவோ பவனி -யாய் சென்று பிதாவின் சித்தத்தையும், தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றினார்.


இப்படியாக, அவரவர், அவரவர் கடமையை சரியாயும், உண் - மையாயும் செய்து முடித்தனர். இவைகளை வாசிக்கிற நீங்கள் உங்கள் கடமையில், தேவ திட்டத்தை நிறைவேற்றுவதில் சரியாய் உள்ளீர்களா? உண்மையாய் இருக்கின்றீர்களா என்பதை நன்கு உய்ந்து ஆய்ந்து சோதித்துப் பாருங்கள். ஒரு வேளை தேவன் உங்களுக்கு கொடுத்த உக்கிராணத்துவத்தில் நீங்கள் சரியில்லா -மல் போனால் கழுதையின் தலையை முறித்துப் போடுவதை போல உங்கள் கழுத்தையும் தேவன் முறித்து போடுவார் (யாத் 13:13). கழுதையை போல நடிப்பதை விட, கழுதைக்குட்டி -யாக மாறி விடுவதே நல்லது.


d. இயேசு தொட்ட கழுதைக்குட்டி:


கழுதை மற்றும் கழுதைக்குட்டி என்பது இயேசுவின் வாழ்க் -கையை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்றாகும். இயேசு தன்னுடைய ஊழிய நாட்களில் மூன்று முறை கழுதையை மேற்கோள் காட்டியுள் -ளார். 


[1]கழுதைக்கு தண்ணீர் காட்டுகிறதில்லையா? (லூக் 13:15). 


(2)கழதை துரவில் விழுந்தால் தூக்கிவிட மாட்டீர் -களோ? [லூக் 14:5).


 (3)கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங் -கள் (லூக் 19:31). 


கழுதைக்குட்டியைக் கண்டு இயேசு ஏறிப்போ -னார் என்று வேதம் சொல்கிறபடியினால், கழுதைக்குட்டி வந்து இயேசுவைத் தொடவில்லை என்றும் இயேசுதான் கழுதையை தொட்டார் என்றும் விளங்குகின்றது. அதுமுதல் இயேசுவின் பாடு -களும் ஆரம்பம் ஆயின.


e. கழுதைக் குட்டியும் வேதமும்:


1. ஆதி 32:15 கழுதைக்குட்டி (எ) பிரித்தெடுக்கப்படுதல்

  ரோம 1:1 அப்போஸ்தலனாகிய பவுலும் சுவிசேஷத்திற்க்காகப் பிரித்தெடுக்கப்பட்டான்


2. மத் 21:4 கழுதைக்குட்டி (எ) சாந்தகுணம்

  எரே 51:60 நேரியாவின் குமாரனான செராயா சாந்தகு -ணமுள்ளவனாய் விளங்கினான்


3. சக 9:9 கழுதைக்குட்டி மரியாளுக்கு இணையானது

 லூக் 1:38 கழுதைக்குட்டி இயேசுவுக்கு அடிமை ஆனதைப்போல, மரியாளும் அடிமையைப் போல தன்னைத் தாழ்த்தினாள்


4.யோவா 12:14 கழுதைக்குட்டி ராஜா ஏறக்கூடியது 

 எஸ்த 6:8,9 ராஜா ஏறுகிறகழுதைக்குட்டி (குதிரை) நகர

வீதிகளில் உலா வரும் 


5. சகரி 9:9 கழுதைக்குட்டியின் மீது ஏறினதால், இயேசுவுக்குள் -ளிருந்து நீதி, இரட்சிப்பு, தாழ்மை என்ற மூன்றும் வெளிப்பட்டது


 பிலி 2:8 மனுஷரூபமாய் இருந்து தம்மைத் தாழ்த்தினார் 6. சக 9:9-ல் சொல்லப்பட்ட கழுதைக்குட்டியைக் குறித்த தீர்க்க -தரிசனம் மத் 21:4,5-ல் நிறைவேறினது


 அப் 3:21 பாடுகளின் மூலம் இயேசுவை ஏற்றுக் கொள் -ளும்படி இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறினது


7. மாற் 11:2 ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டி என்பது இயேசுவின் கல்லறையைக் குறித்த தீர்க் -கதரிசன வார்த்தைகளாகும்


 யோவா 19:41 இயேசுவின் கல்லறையும் கூட ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராதக் கல்லறையாக இருந்தது


f. கழுதை பற்றிய குறிப்புகள்:


1. கழுதை பாலூட்டி இனத்தைச் சார்ந்தது


2. 2008-ம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 5488 வகை -யான பாலூட்டி இனங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கழுதை இனம்


3. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதையானது 19 முதல் 142 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.


4. இலை, தழை, புற்கள் போன்ற தாவர உணவு வகையைச் சார்ந்தது கழுதை


5. முகத்தின் மூக்கின் முன்புறம் உள்ள வெள்ளி நிறமானது கழுதையின் அடையாளங்களில் ஒன்று


6. குதிரை மற்றும் வரிக்குதிரையைப் போல கால்களில் ஒற்றைக் குழம்பு உடையது


7. கழுதையின் வயிறு எளிதில் செறிமானம் ஆகக் கூடியது


8. மிகுந்த சத்தமான ஒலி எழுப்பும் குணம் கொண்டது


9. கழுதை என்பது, சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற விலங்காகும்


g. புதிய ஏற்பாட்டில் சில கழுதைகள்:


1.யோவா 1. யோவா 12:15 இயேசு ஏறிப்போன கழுதைக்குட்டி


2. மாற் 11:2 ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டி


3. மத் 21:7 வஸ்திரங்கள் போடப்பட்ட கழுதை 


4. லூக் 14:5 துரவில் விழுந்த கழுதை


5. யோவா 12:14 ராஜா ஏறின கழுதைக்குட்டி


6. மத் 21:2 கழுதையும், குட்டியும்


7. லூக் 19:30 கட்டியிருந்த கழுதைக்குட்டி


8. மத் 21:4 மறியாகியக் கழுதை


9. லூக் 13:15 தொழுவத்திலிருந்த கழுதை


10. லூக் 19:33 அவிழ்க்கப்பட்டக் கழுதைக்குட்டி 


யோவா 12:15 இயேசு கழுதைக்குட்டியைக் கண்டு அதின் மேல் ஏறிப்போனார்.


இயேசு ஏன் கழுதையை தெரிந்தெடுத்தார்?


சக 9:9 அவர் தாழ்மையுள்ளவர்.


இயேசு ஏன் கழுதையின் குட்டியை தெரிந்தெடுத்தார்?


சக 9:9 சகரியாவை கொண்டு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காக.


கழுதைகுட்டியின் மேல் ஏறினதினால் என்ன நடந்தது?


யோவா 12:13,16


 i) ஓசன்னா என்கிற கோஷம் உண்டானது.


ii) கர்த்தருடைய நாமம் ஸ்தோத்ததரிக்கப்பட்டது.


iii) இஸ்ரவேலின் ராஜா என்கிறபட்டம்

கிடைத்தது


iv) இயேசு மகிமையடைந்தார்


இதோ, உன் ராஜா சாந்த குணமுள்ளவராய் கழுதைக் -குட்டியாகியமரியின் மேலும் ஏறிக்கொண்டு உன்னிடத்தில் வருகிறார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.