சிலுவையின் வரலாறு பாகம் - 19 : இயேசுநாதரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை

 



சிலுவையின் வரலாறு பாகம் - 19 : இயேசுநாதரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை


இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமை -யான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டிபிடித்துள் -ளனர். இது கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது இயேசுநாதர் உடல் அடக் -கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டி -ருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர். ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்தி -ருக்கிறது இந்தக் கல்லறை, கி.பி.70-ம் ஆண்டுக்கு முந் -தையதாகக் கருதப்படுகிறது. இயேசு நாதரின் ஆரம்ப கால சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் “புனித ஜெகோவா விழித்தெழு என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள் கண்பிடித்திருக்கின்றனர்.


இதே போன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பெறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் யோனா என்கிற தேவதூதரின் சம்பவயாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


யோனாவை விழுஙங்கிய பெரிய மீன் அல்லது திமிங் -கலம், பிறகு அவரை விட்டுவிட்டதாக பைபிளில் கூறப்பட் -டிருக்கிறது. மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது, அது யோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரியவந்தது.


கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை "உயிர்த்தெழுதல்' என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையைக் காட்டும் வகையில் அமைந்தி -ருப்பதாக "லைவ் சயின்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.


பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் யோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கமானதுதான் என்றாலும், அவற்றில் எதுவும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல.


இருப்பினும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் இந் -தக்கல்லறை 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதா -கும். ஆனால், கல்லறைகளைத் தோண்டுவதை எதிர்க்கும் யூதக்குழுக்கள் அதை ஆய்வு செய்வதை எதிர்த்தனர். இத -னால், ஆய்வாளர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற் -றப்பட்டனர். பின்னர் அந்தக் கல்லறை சீலிடப்பட்டு இப்போது இருக்கும் இடத்தில் புதைக்கப்பட்டது.


சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய அகழ்வா -ராய்ச்சிக் குழுவின் தலைவரான தபோரும் அவரைச் சேர்ந் -தவர்களும் கல்லறையைத் தோண்டியெடுப்பதற்கு அனுமதி பெற்றனர். யூத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, கல்லறையைத் தோண்டுவதற்குப் பதிலாக ரிமோட் கண்ட் -ரோல் உதவியுடன் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத் -தப்பட்ட கேமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 சிலுவையில் அறையும் போது நடக்கும் 10 விஷயங்கள்:


சித்ரவதை என்பது வரலாற்றின் பக்கங்களில் நாம் ஒதுக்க முடியாத ஒரு பகுதி. பல்வேறு காலங்களில் பல்வேறு வித -மான சித்ரவதை முறைகள் கையாளப்பட்டுள்ளன. இதில் ரோமானியர்களால் பல கட்டப் பரிசோதனைக்குப் பிறகு மெருகேற்றப்பட்ட ஒரு சித்ரவதை முறைதான் சிலுவையில் அறைதல், ஆம்... இயேசுவை மட்டுமல்லாது பல்லாயிரம் பேரை சித்ரவதைக்குள்ளாக்கியதுதான் இந்த முறை. ஒரு -வரை அணு அணுவாக சித்ரவதை செய்ய வேண்டுமென் -றால் சிலுவையில் அறைதலைத் தவிர வேறு வழிமுறை கைக்கொடுக்காது. அப்படிப்பட்ட அந்த சித்ரவதையின் போது மனித உடல் படும் 10 அவதிகள் இதோ... 


1. மூச்சுத் தினறல்:--


சிலுவையில் அறையப்பட்ட பின் ஒருவர் வலியாலும் ரத்தப்போக்காலும் சாவதைவிட மூச்சுத் திணறலால் சாவ -தற்கு சாத்தியங்கள் அதிகம். சிலுவையில் ஏற்றப்படுபவ -ரின் உடல் எடை முழுவதும், கைகளின் மணிகட்டு மட் -டுமே தாங்கும். இதனால் உடல் சற்றே கீழ்நோக்கி அழுந்தி, உதிரவிதானத்தில் அழுத்தம் கொடுக்கும். இத -னால் மூச்சு விடுவது சிரமமாகும். தண்டனைக்குள்ளா -னவர், பல மணி நேரம் முதல் சில நாள்கள் வரை மூச்சுத்திணறி இறப்பார்.


2. தொடை எலும்புகள் உடைக்கப்படலாம்:


சிலுவையில் ஏற்றும்போது, கால்களில் ஆணி அடிப் -பது சில சமயம் தண்டனையை நிறைவேற்றுபவருக்கு கடி -னமாக இருக்கும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தொடை எலும்புகளை உடைத்து, இழுத்து ஆணி அழப்பர். இது பாதிக் -கப்பட்டவருக்கு அதிகமான வலியைக் கொடுக்கும். தொடை எலும்பு முறிவு ஏற்படுவது மனிதனின் உடலில் ஏற்படும் அதி -கபட்ச வலிகளுள் ஒன்றாகும். தொடை எலும்பு முறிவால் தன் உடல் எடையை சற்று தாங்கும் தன்மையும் அவருக்கு குறைந்துவிடும். எனவே மேலே கூறியபடி மூச்சுத்திணறல் ஏற்படும். ஆனால், நம் மூளை உயிரோடு இருப்பதற்காகவே யோசிக்கும். மரணம் வேண்டும் என்று மனதளவில் நினைத் -தாலும், அதை நம் முளை ஏற்காமல் உயிர்வாழ பாடுபடும். இந்தப் போராட்டத்தில் ஏற்படும் வலி சொல்லி மாளாது.


3. ஆணிகள் நரம்புகள் மேல் உராயும்:


 மணிக்கட்டிலும், கால்களிலும் அடிக்கப்பட்ட ஆணிகள் சில நரம்பகளை துண்டித்துவிடும். துண்டிக்கப்பட்ட நரம்பு தரும் வேதனையைவிட, அந்த ஆணிகளின் மேலே படும் ரம்புகள் தரும் வேதனை அதிகமாக இருக்கும். சிறு அசைவு ஏற்பட்டாலும், ஆணிகளின்மேல் நரம்புகள் உராய்ந்து வலிதரும். கைகளை வெட்டி, அந்த காயத்தின் வழியே கம்பிகள் செலுத்தினால் என்ன வலி இருக்குமோ அந்த அளவு வலி, அந்த சிறு உராய்வு தந்து விடும்.


4. கசையடிகள்:


ஒருவரை சிலுவையில் அறைந்த பின் அதோடுவிடா -மல், அவருக்கு ஒன்பது முனைகொண்ட சாட்டையால் அடிகள்விழும். அந்தச் சாட்டையின் ஒவ்வொரு முனையி -லும் கொக்கி வடிவிலான எலும்பகளோ, இரும்போ இருக்கும் ஒவ்வோர் அடியின்போதும் சிலுவையில் இருப் -பவரது உடலில் உள்ள தோல், தசைகள் கிழித்துக்கொண் -டுவரும். இதனால் மன அதிர்ச்சியோடு சேர்ந்து ரத்தப் -போக்கும் அதிகமாக இருக்கும். மரண வேதனையைக் கொடுக்கும். இந்தச் செயலை அறியப்பட்டவரை மரண வாயிலில் கொண்டு செல்லும். ஆனால், அவரை கொல் -லாது. இதனால் தன் இறுதி தருணங்களில் அதிக வேதனையை அவர் அனுபவிப்பார்.


5. கிழிந்த தசைகள் மூலம் மரத்துகள்கள் ஊடுருவும்:


கசையடி சில சமயங்களில் சிலுவையில் அறைவதற்கு முன்னாலேயே நடந்தேறிவிடும். பிறகு, தன்னை அறையப்போ -கும் மரத்துண்டை தானே தூக்கிச்செல்ல வேண்டும். படங் -களிலோ தேவாலயங்களிலோ இருப்பது போல் வழுவழுப் -பான சிலுவையாக அது இருக்காது. வெட்டப்பட்டு, பிளவு -பட்டு தொட்டால் சதையைக் கிழித்துக்கொண்டு செல்லும் அளவு இருக்கும். கசையடி வாங்கி கிழிந்த உடலுக்குள் இந்த மரத்துண்டுகள் புகுந்து, மேலும் எரிச்சலை உண்டாக் -கும். சிலுவையில் அறைந்த பின்பும் சற்றே உடலை அசைத் -தாலும் இது நகர்ந்து வலியை மேலும் அதிகப்படுத்தும்.


6. ஹைபோவெலிக் ஷாக் (Hypovolemic Shock):


ஆரம்பத்தில் அளிக்கப்படும் கசையழகளே இந்த நிலைக்குத் தள்ள போதுமானது. பாதிக்கப்பட்டவர், உடலில் உள்ள மொத்த ரத்தத்தில் 20% ரத்தத்தை இழந்தால் இந்த நிலைக்குத் தள்ளப்படுவார். ரத்தப்போக்கு, உடலுக்குத் தேவை -யான பிராணவாயு கிடைப்பதைத் தடுக்கும். இது, இதயத்து -டிப்பை குறைத்து, அதிக ரத்தம் உற்பத்தியாகாமல் தடுக்கும்.


மேலும், இது பிராணவாயுவின் போக்கைத் தடுக்கும். இந்த சுழற்சியால் ஏற்படும் நிலையே ஹைபோவெலிக் ஷாக். சுயநினைவு இழத்தல், மயக்கம் போன்றவை இந்த நிலையால் ஏற்படும். சில சமயம் பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுப்பார். ஆனால், உடல் தொங்கும் நிலையில் இருந்தால் அது வெளியேறாமல் தொண்டையில் சிக்கி, மூச்சுத்திண -றலை அதிகப்படுத்தும்.


7. தோள்பட்டைகள் முறிவு:


ஒருவரைச் சிலுவையில் அறைய ஆரம்பிக்கும்போது இது நடந்துவிடும். தண்டனையை நிறைவேற்றுபவர், தண் −டனைக்குள்ளானவரின் கைகளை கீழே வைத்து கிடை -மட்டக் கட்டையில் ஆணிகளால் அடித்துவிடுவார். பிறகு அவரைத் தூக்கி, செங்குத்தான கட்டையில் நிற்கவைத்து கால்களை அணிகளால் அறைவார். அதுவரை, உடலின் மொத்த எடையும் மணிக்கட்டில்தான் இருக்கும். இதனால், மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை எலும்புகள் முறிந்தோ இடப்பெயர்ந்தோ போகும். முறிந்தபின்பு உடல் எடை முழு -வதும் சற்று நேரம் கைகளாலேயே தாங்கப்படும்.


8. மாரடைப்பு:


மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிராணவாயுவின் போக்குச் சரியாக இல்லாத அழுத்தத்தோடு ரத்தத்தை வெளியேற்றும். இந்த அழுத்தம் சில சமயம் மாரடைப்பிலும் சில சமயம் இதயம் வெடித்துவிடவும் காரணமாக இருக்கும்.


9. தசைப்பிழப்பு:


சாதாரண நிலையில் தசைப்பிழப்பு என்பது தாங்கி -கொள்ளகூடிய ஒரு வலி தான். ஆனால், ஏற்கெனவே வலியில் பாடுபடும் ஒருவருக்கு இது சிரமமான ஒன்று. சிலு -வையில் அறையப்பட்ட மனிதரின் முட்டிகள் வளைந்து இருக்கும். எனவே, உடல் எடையில் பெரும்பகுதி தொடையில் தான் தாங்கி இருக்கும். சில நிமிடங்கள் தொடையில் உடல் எடையை தாங்கினாலே தசைப்பிழப்பும், இழுப்பும் ஏற்படும். ஆனால், தன் இறுதியான நேரத்திலும் அதை தாங்கி தான் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் துறப்பர்.


10. முக்கிய உடலுறுப்புகளில் வலி:


பிராணவாயு அனைத்து உடல் பாகங்களுக்கும் அவசி -யமான ஒன்று. ரத்தப்போக்கு, மூச்சுத்திணறலால் அனைத்து உறுப்புக்கும் இது கிடைக்காமல் போகும். மேலும், புவியீர்ப்பு விசை, உடலில் மீதமுள்ள ரத்தத்தையும் கீழே இழுக்கும். இதனால், ரத்தமும் உறுப்புகளை அடையாமல் போகும். உடலுறுப்புகள் தன்னிடம் குறையிருந்தால் அதை சுட்டிக்காட்ட பயன்படுத்தும் ஆயுதம் வலி. எனவே பிராண வாயு கிடைக்காமல் போனதை வலியின் மூலம் வெளிப்படுத்தும். மற்ற வேதனைகளோடு சேர்த்து இதை -யும் ஒருவர் அனுபவித்து தான் ஆக வேண்டும்.


இவற்றில் கவனிக்கப்பட வேண்டியது இரண்டு விஷயங் கள்.


ஒன்று, இந்த துன்பங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பொறுமையாக வருவதில்லை. இது அனைத்தும் மேலும் பல வேதனைகளும் ஒரே சமயத்தில் தண்டனைக் -குள்ளானவரை தாக்கும்.


இரண்டு, இவற்றை விவரிக்க பத்து நிமிடங்களே அதிகம். ஆனால், இந்த துன்பங்கள் தண்டிக்கப்பட்டவர் சாகும் வரை அனுபவிக்க வேண்டும். அவர் இறப்பதற்கு சில நாள்களானால், அதுவரை இந்த வேதனைகள் அனைத்தும் அவரைத் தாக்கிகொண்டே தான் இருக்கும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.