சிலுவையின் வரலாறு பாகம் - 17
பாடுகளுக்கும் சிலுவைக்கும் தொடர்புடைய இடங்கள்:
1. மத். 26:3
காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரிய -னுடைய அரண்மனை.
2. மத் 26:6
பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த
சீமோனின் வீடு.
3. மத். 26:18
நகரம்
4. மத். 26:30
ஒலிவ மலை
5.மத்.26:32
கலிலேயா
6. மத்.26:36 கெத்செமனே என்னப்பட்ட இடம்
7. மத். 26:39
சற்று அப்புறம்
8. மத். 27:5
தேவாலயம்
9. மத். 26:58
பிரதான ஆசாரியனுடைய அரண்மனை
10. மத். 26:69
அரண்மனை முற்றம்
11. மத். 26:71
வாசல் மண்டபம்
12. மத், 27:7
குயவனுடைய நிலம்
13. மத். 27:8
இரத்த நிலம்
14. மத். 27:27
தேசாதிபதியின் அரண்மனை
15. மத். 27:33
கபாலஸ்தலம்
16. மத். 27:39
அந்த வழி, பூமி
17. மத். 27:51
கன்மலைகள்
18. மத். 27:52
கல்லறைகள்
19. மத். 27:60
கன்மலையில் வெட்டியிருந்த
புதிய கல்லறை
20. மாற் 14:14
தகுதியான இடம்
21. மாற் 14:15
விஸ்தாரமான மேல் வீட்டு அறை
22. மாற் 14:54
நெருப்பன்டை
23. மாற் 14:57
கை வேளையாகிய தேவாலயம்
24. மாற் 14:66
அரண்மனை முற்றம்
25. மாற் 14:68
வெளி வாசல் மண்டபம்
26. மாற் 15:16
அரமனையாகிய மாளிகை
27. மாற் 15:21
நாட்டிலிருந்து
28. மாற் 15:22
கபாலஸ்தலம்
29. மாற் 16:3
கல்லறையின் வாசல்
30. லூக் 22:10
போகும் வீட்டிற்குள்
31. லூக் 22:12
மேல் வீட்டிலுள்ள பெரிய அறை
32. லூக் 22:41
கல்லெறிதூரம்
33. லூக் 22:43
வானத்திலிருந்து
34. லூக் 22:54
பிரதான ஆசாரியனுடைய வீடு
35. லூக் 22:55
முற்றத்தின் நடுவே
36. லூக் 22:66
ஆலோசனை சங்கம்
கூடின இடம்
37. லூக் 23:5
கலிலேயா நாடு
38. லூக் 23:5
யூதேயா தேசமெங்கும்
39. லூக் 23:7
எருசலேம்
40. லூக் 23:51
அரிமத்தியா
சிலுவையின் மேன்மை:
சிலுவை என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் 83 தடவை எழுதப்பட்டிருகின்றன. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல என்றும், ஒருவன் என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத் -துக்கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன் என்றும் இயேசு தமது சீஷர்களுக்குப் போதித்தார் (மத் 10:38; 16:24; மாற் 8:34; லூக் 9:33).
இயேசு கிறிஸ்து தமது விலையேறப்பெற்ற இரத்தத்தைக் கல்வாரிச் சிலுவையில் சிந்தி மனுக்குலத்துக்கு பாவமன் -னிப்பாகிய நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அது மாத் -திரமல்ல, பகையைச் சிலுவையினால் கொன்று சமாதா -னத்தை உண்டாக்கி, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கினார் (எபே 2:16; கொலோ 1:20).
அநேகர் இரதங்களைக் குறித்தும் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டிக்கொண்டிருக்கும்போது, அப்போஸ்தலனாகிய பவுல் நானோ நம்முடைய கர்த்தரா -கிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தல்லா -மல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பே -னாக என்றும், நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம் என்றும் கிறிஸ்துவுடனே -கூட சிலுவையில் அறையப்பட்டேன் ஆயினும் பிழை -த்திருக்கிறேன், இனி நானல்ல கிறிஸ்துவே எனக்குள் பிறைத்திருக்கிறார் என்றும் சிலுவையின் மகாமேன்மை -யைக் குறித்து நிருபங்களில் எழுதியிருக்கிறார் (சங் 20:7,8; கலா 2:20: 6:14: ரோம 1:16: 6:6; 1கொரி 1:18,27-31).
1. கிழக்கு திசை:
முந்தின ஆதாம் பின்பு வந்த கிறிஸ் -துவுக்கு முன்னடையாளம். ஆதாம் நிமித்தம் மனுக்கு -ளம் முழுவதும் பாவிகளானார்கள். பிந்தின ஆதாமா -கிய கிறிஸ்துவினால் பாவ விமோசனமும் உண்டாயிற்று (1கொரி 15:45-50, 21,22,23).
முந்திய ஆதாமை தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன்
என்னும் தோட்டத்தை உண்டாக்கி அதிலே வைத்தார். எனவே
பாவம் உற்பத்தியான இடமும் கிழக்கு திசைதான் (ஆதி 2:8).
இரண்டாம் ஆதாமகிய கிறிஸ்து, ஆதாமின் மீறுதலாகிய பாவத்தைப்போக்க கிழக்கிலே அவதரித்தார். சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து: யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கி -றவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள் (மத் 2:2). முதல் ஆதாமால் கிழக்கு திசையிலே உண்டான பாவத் -தைப்போக்க கிறிஸ்து கிழக்கு திசையிலே பிறக்க வேண் -டுமென்பது தேவனின் பரம நிவாரணம் உண்டான திசையும் கிழக்கு.
2. மரம்:
பாவமானது நன்மை தீமை அறியத்தக்க ஒரு மரத்தினால் வந்தது. ஆதி 3:6,7; இயேசுவை மரத்திலே தூக்கிக் கொலை செய்தார்கள் என்று அப் 10:39 யில் வாசிக்கிறோம்.
மரத்தினால் உண்டான பாவத்தை கிறிஸ்து, சிலுவை மரத்தால் போக்கவேண்டுமென்பது தேவனுடைய அனந்த ஞானமல்லவா? பட்ட மரங்களை எல்லாம் பச்சை மரத் -தால் பிழைக்கும்படி செய்தார் (லூக் 23:31; கலா 3:13: உபா 21:22,23)
3. நடுமரம்:
தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் கனியை நீங்கள் சாகாதபடிக்கு புசிக்கவேண்டாம் என் -றார் தேவனாகிய கர்த்தர் - ஆதி 3:3. நடுமரத்தினால் பாவம் வந்தது.
அவரோடேகூட வேறிரண்டு பேரை இரண்டு பக்கங்களி -லும் இயேசுவை நடுவிலுமாக சிலுவையில் அறைந்தார் -கள் என்று யோவான் 19:18-யில் பார்க்கிறோம் நடு மரத்தால் உண்டான பாவத்தைக் கிறிஸ்து நடுச்சிலுவை மரத்தால் போக்கவேண்டுமென்பது தேவ தீர்மானமல் -லவா? (கலா 3:13: உபா 21:23; யோவா 9:31).
4. தொங்கினது:
பாவத்திற்குக் காரணமாயிருந்த விருட்சத்தின் கனி வானத்துக்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கினதாக அறியலாம் (ஆதி 2:17)
இயேசுவும் பாவநிவாரண பலியாக, வானத்துக்கும் பூமிக் -கும் நடுவில், சிலுவையில் தொடங்கினார், தொங்கின கனியால் வந்த பாவததைப் போக்க ஜீவ விருட்சத்தின் கனி -யாகிய இயேசு சிலுவையில் தொங்கவேண்டுமென்பது தேவ ஞானமல்லவா?
5. புசிப்பு:
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி -யைப் புசித்ததினால் ஆதாமும் ஏவாளும் பாவிகளானாரகள் (ஆதி. 2:9,17; 3:3)
என் மாம்சத்தைப் புசியாவிட்டால் உங்களுக்கு ஜீவனில்லை என்றும், என் மாம்சத்தைப் புசித்தால் பாவ நிவாரணம் உண் டாகுமென்றும் இயேசு சொன்னார். புசியுங்கள் என்ற புது உடன்படிக்கையால் பாவ நிவாரணம் உண்டாகிறது (யோவா 6:53, மத் 26:26-28)
கனியைப் புசித்ததால் வந்த பாவத்தைப் போக்க, கிறிஸ்து தமது மாம்சத்தைப் புசிக்கும்படி செய்து, பாவம் போக்க வேண்டுமென்பது தேவசித்தந்தானல்லவா?
6. சதை-சாறு:
மரத்தில் தொங்கின கனியால் இயற் -கையாகவே சதை-சாறு என இரண்டு வஸ்துக்கள் உண்டு, சதை-சாறு ஆகிய இரண்டு வஸ்துக்களும் மனிதரைப் பாவத்துக்குள்ளாக்கியது.
இயேசு கிறிஸ்துவின் மாம்சம்-இரத்தம் என்ற இரண்டு வஸ்துக்களால் பாவம் போக்க வேண்டுமென்பது மனுஷ -னின் சுய ஞானத்துக்கெட்டாத தேவ ஞானமல்லவா? (1கொரி 11:23-28; 10:16,17).
7. இருவர் கண்கள் திறந்தது:
ஆதி 3:6,7. கனியைப் புசித்த உடன் அவர்கள் இருவருடைய (ஆதாம்-ஏவாள்) கண்களும் திறந்தன. அதாவது புசித்ததினால் இருவரு -டைய மனக்கண்கள் மூடப்பட்டு பாவக்கண்கள் திறந்தன (2கொரி 4:4,5).
எம்மாவூருக்குச் சென்ற இரண்டு சீஷர்களுக்கு இயேசு அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் புசித்தபோது அவர்கள் இருவருடைய கண்களும் (மனக் -கண்கள்) திறக்கப்பட்டன (லூக் 24:31,45).
பாவம் எந்த வழியில் எந்தெந்த முறையில் வந்ததோ, அதே அடையாளப்படி பாவநிவாரணம் உண்டாக வேண்டுமென் பது தேவனுடைய அநாதி தீர்மானமும், ஞானமும் சித்தாந்த -முமாயிருக்கிறது.
பாவம் ஸ்திரீயின் மீறுதலின்மூலமாக உலகத்தில் வந்தது. பாவ பரிகாரம் கொடுக்கவந்த இயேசு ஸ்திரீயின் வித்தாக ஒரு ஸ்திரீயின்மூலமாக பிறந்து பாவத்தைப் பரிகரிக்க வேண்டுமென்பதும் தேவனுடைய அநாதி தீர்மானமன்றோ? (ஆதி 3:15; ஏசா 7:14; 9:6; கலா 4:5).
முந்தின ஆதாம் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அதை மீறினதினால் தேவ மகிமை இழந்து பாவத்துக்குள்ளானான். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவோ தேவனுடைய எல்லா கட்டளைகளையும் கீழ்ப்படிதலோடே செய்து நிறைவேற்றி சிலுவையிலே வெற்றி சிறந்தார் (கொலோ 2:13-15; 1கொரி 15:57; 2கொரி 2:14).
உலகமனைத்தையும் கெடுத்துப்போட்ட சாத்தனின் தலையை இயேசு தமது சிலுவை மரணத்தால் நசுக்கி -விட்டார். மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவ காலமெல் லாம் (பாவத்தின் சம்பளமாகிய) மரண பயத்தினால் அடி -மைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை -பண்ணும்படிக்கும் அப்படியானார் (எபி 2:14,15,18).
ரோமப் போர்ச்சேவகர்கள் கிறிஸ்துவைச் சிலுவையில் ஆணியடித்து கொலை செய்தார்கள். அதே ரோமர்களும் ரோம மார்க்கத்தாரும் கிறிஸ்துவின் சிலுவையை மற்ற மார்க்கத்தாரைவிட மிகவும் அதிகமாக தொழுது ஆராதிக் கிறார்கள்.
பெரிய பெரிய சிலுவைக் கோபுரங்களும், பொன், வெள்ளி, மரம் மற்றும் பலவித உலோகங்களில் சிலுவை அடையாளம் செய்து, கழுத்திலும், கையிலும், விரலிலும் இடுப்பிலும் தொங்கவிட்டுக்கொள்வதும், அடிக்கடி சிலுவை அடையாளத்தை சைகையால் காட்டுகிறதுமாகச் செய்து, சிலுவையில் அதிக பற்றுதலுமாயிருக்கிறார்கள்.
இவ்விதமாக கிறிஸ்து இயேசுவை சிலுவையில் அறைந்து
கொலை செய்தவர்களின் சந்ததியைக் கொண்டு,
சிலுவையை எப்போதும் வணங்க வைத்தது தேவ தீர்மானமல்லவா? தேவனின் அனந்த ஞானம் எவ்வளவு பெரிய -தாயிருக்கிறதென்றும் சிந்தித்துப் பாருங்கள்.
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. [2கொரி 1:18,23).
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மொழிகள்:
தமிழில்:
1. பிதாவே, இவர்களுக்குமன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே,
2. இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசியிலிருப்பாய், என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
3. ஸ்திரீயே, அதோ உன் மகன்.... அதோ உன் தாய்,
4. என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்,
5. தாகமாயிருக்கிறேன்,
6.முடிந்தது,
7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.
கிரேக்க மொழியில்:
1. பபற்றேர் அபெஸ் ஒளடொய்ஸ்ஊ கார் ஓய்டாஸி டீ பொயூசி.
2. காய் ஐபென் ஔடோ ஹொ ஈசூஸ். ஆமேன் லெகோ சொய் சீமெறொன் மெற்றா எழு எச் என் டோ பயரடைசோ
3. குனபய் இடு ஹொ ஹீயொஸ் சூ இஞ ஹீ மேற்றீர் சூ.
4. ஹொ தெயொஸ் மூ ஹொ தெயபஸ் மூ ஐஸ் டி மெ எங் கற்றெலிபஸ்.
ஏலீ ஏலீ லாமா அசப்தானீ
- எபிரெயம்
எலாக் எலாக் லமா சபக்தானி
- அரமேயம்
5. டிப்சோ
6. டெட்டெலஸ்ற்றாய்
7. பாற்றெர் ஐஸ் கைறாஸ் சூ பரதீசொமாய் டொ சூப்னியூமா மூ