சிலுவையின் வரலாறு பாகம் - 16 : கள்ளர்கள் (part 2)

 



சிலுவையின் வரலாறு பாகம் - 16 : கள்ளர்கள் (part 2) :


"அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந் -திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்” (லூக்8:46).


பூமியின் குடிகளாகிய மக்களில் அநேகர் இயேசுவைத் தொட-வும், தொட்டு ரசித்து பார்க்கவும் ஆசைப்பட்டனர். அதன்படி பலர்

இயேசுவை நேரடியாக தொட்டும் பார்த்தனர். அதுபோலவே இயே-சுவும் பூமியில் இருக்கும்போது அநேகரை தொட்டார். தொட்டு

அற்புதங்களையும் செய்தார்.


ஆனால், இயேசுவின் இருதயத்தை தொடுவது என்பது அவ்வ -ளவு எளிமையான காரியமல்ல. இயேசுவின் இருதயத்தை தொட வேண்டும், அவருடைய இருதயத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்று அநேகர் பிரயாசப்பட்டனர். பலவித முயற்சியும் செய்தனர். அவர்களில் மிக சிலரே வெற்றி பெற்றனர். அந்த சிலரில் ஒருவ னாகிய வலதுபுறத்து கள்ளனைக் குறித்துப் பார்க்க போகின்றோம்.


இயேசுவின் முப்பத்து மூன்றரை ஆண்டு ஊழிய வாழ்க்கையில், அவருடைய கடைசி நாளும் கடைசி நேரமுமான சமயத்தில்தான் அவன் இயேசுவை சந்தித்தான். ஆனாலும், அவன் மூலம் முழு பூமிக்கும் ஒரு உபதேசம் கிடைத்தது. அப்படிப்பட்டவனை குறித்து சிந்திப்பதும் வாசிப்பதும் தேவன் நமக்கு அருளின கிருபையே காரணம்.


வலதுபுறத்து கள்ளன் இடதுபுறத்து கள்ளன் என்று இரண்டு கள்-ளர்கள் உண்டு. அந்த இரண்டு கள்ளர்களில் வலது புறத்து கள்ளனை குறித்து மிகத் தெளிவாக அறிந்து கொள்ளும் முன் -பாக இடதுபுறத்து கள்ளனைக் குறித்து கொஞ்சமாவது தெரிந்து கொள்வது நல்லதாகும். அதே சமயம், கள்ளர்கள் என்றால் யார்? அவர்களை குறித்து வேதம் சொல்லும் ஆதாரங்கள் என்ன என்று பொதுவான குறிப்புகள் சிலவற்றையும் ஆராய்வோம், தியா -னிப்போம், தெரிந்து கொள்வோம்.


A. கள்ளர்கள் என்றால் யார்?


கள்ளர்கள் என்றால் திருடர்கள் என்று பொதுவாக நினைத்து விடும் எண்ணம் பலருக்கும் உண்டு. திருட்டு தொழில் செய்கிறவர் -கள் மட்டும் கள்ளர்கள் அல்ல. துர்குணமுள்ளவர்கள், தாறுமா -றாய் பேசுகின்றவர்கள், ஏமாற்றுகின்றவர்கள் என்று அவர்களை குறித்து அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், கள்ளர்களுக் -குரிய சில அடையாளங்கள் அழகாயும், அருமையாயும் வேதத் -தில் வரையப்பட்டுள்ளது. அவைகளை நன்கு அறிந்து கொண் -டால், இந்த பொல்லாப்பு நிறைந்த கடைசி காலத்தில் நாம் வெகு ஜாக்கிரதையாக வாழ முடியும்.


கள்ளர்களுக்குரிய சில பெயர்கள்:


துராகிருதன், திருடன், வஞ்சகன், ஏமாற்றுகிறவன், லோபி (ஏசா32:7), பொய்யன், சண்டாளன் போன்றபலவிதமான புனை பெயர்களும் உண்டு. ஆனாலும், சிலுவையில் தொங்கின இரு -வரை குறித்து கள்ளன் என்று சுறுக்கமான பெயரோடு வேதம் நிறுத்திக் கொள்கின்றது.


வாய்:


கள்ளர்களின் வாய் கபடு நிறைந்தது தான் (சங் 109:2). கபடு நிறைந்த வாய் காணப்பட்டால் அவர்களை துன்மார்க்கர் என்று வேதம் எச்சரிக்கின்றது. துன்மார்க்கம் ஒழிய வேண்டுமானால் கபடு இருக்கவே கூடாது. அப்போதுதான் கள்ள சொல்லுக்கு ஆளாகாதிருப்போம்.


நாவு:


கள்ளர்களின் நாவு கிலேசபட்டவர்களை பகைகுமாம் (நீதி 26:28). அதாவது மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை கண்டால் ஒரு ஆறு -தலான வார்த்தைகள் கூட சொல்லாமல், அதற்கு பதிலாக அப்ப -டிப்பட்டவர்களை பகைக்கும். இதுதான் கள்ளர்களின் நாவுக்குரிய அடையாளம்.


பேச்சு:


கள்ளர்களைப்போல ஜீவிக்கிறவர்களின் பேச்சு கொடூரமாகவும், கலகத்தை உண்டுபண்ணுவது போலவும் இருக்கும் (ஏசா 59:13). இயேசுவோடு கூடவே இருந்த பேதுரு ஒரு நாள் வேறு யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்க்காக கள்ளத்தனமாக சேவகர்கள் நடுவில் போய் உட்கார்ந்தான். ஆனால், அங்கு அவனை பார்த்து விட்ட ஒரு பெண் நீயும் அவர்களில் ஒருவன்தான். உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்று ஆதாரபூர்வமாக குற்றம் சாட் -டினாள். ஆனபடியினால்தான் நம்முடைய பேச்சு ஒருவருக்கும் சந்தேகத்தை வர வைக்காத பேச்சாக காணப்பட வேண்டும்.


கைகள்:


கள்ளர்களின் கைகள் மாயைக்கு ஒப்பானது என்று பரிசுத்த

வேதாகமம் சுட்டிக் காண்பிக்கின்றது (சங் 144:8). மாயை என் -றால், கைக்கு வந்து கிடைக்கின்ற எதுவுமே அவர்களிடம் தங் -காது. நிறைய வரும், ஆனால் எங்கு போகிறது என்று கண்டு -பிடிக்க முடியாது. பெரிய ஏமாற்றமாக இருக்கும். இதற்கு பெயர் -தான் மாயை.


சரீரம்:


உடல் என்கிற சரீரம் எப்போதும் விபச்சாரத்தையும், அருவருப்பான இச்சைகளைத்தான் தேடிக் கொண்டிருக்கும் (ஓசி 7:4). அடுப்பு எப்படி சூடாக இருக்குமோ அவர்களும், அவர்களின் உடலும் கூட எப்போதும் சூடாகத்தான் இருக்கும். ஆனபடியினால்தான் பரிசுத்த வேதாகமம் அவர்களை விபச்சார கள்ளர்கள் என்று பகிரங்கமாக எச்சரிக்கின்றது. இதை வாசிக்கும் நீங்களோ அல்லது உங்களை சார்ந்தவர்களோ இப்படி இராதபடிக்கு காத்துக் கொள்ளுங்கள். 


சாப்பாடு:


பணக்கார கள்ளர்களின் போஜனம் ருசியாகத்தான் இருக்கும் (நீதி 23:3). ருசி இருக்கும், பதார்த்தங்கள் இருக்கும். அதோடு -கூட அந்த போஜனத்தில் இச்சையும் இருக்கும். அதாவது உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடிய ஐட்டங்களாகக் காணப்படும். இப்படிப்பட்ட போஜனத்தை தேவனுடைய பிள்ளைகள் யாரும் விரும்ப மாட்டார்கள். ஆசைப்படவும் கூடாது.


இருப்பிடம்:


வெளியரங்கமான, வெளிப்படைடயான இடங்களில் கள்ளர்கள் தங்கமாட்டார்கள். அதற்கு பதிலாக குகை போன்ற வளைவுகளி -லும், மறைவுகளிலும், வெகு தூரமான இடங்களிலும்தான் தங் -குவார்கள். ஆனபடியினால்தான் இயேசுவும் நீங்களோ அதை கள்ளர் குகையாக்கினீர்கள் என்று ஆசாரியர்களை கடிந்து கொண்டார் (மாற்11:17). 


குணம் (சுபாவம்):


ஒவ்வொரு மனுஷனுக்கும் குணம் என்கிற சுபாவம் இருக்கும்.

அதுபோல கள்ளர்களின் சுபாவமோ யாரையும், எப்படிப்பட்டவர்க ளையும் உளவு பார்க்க சொல்லும். தன்னுடன் இருக்கும் ஒருவ ரையும் சுயாதீனமாக இருக்க விட மாட்டார்கள் [கலா 2:4). அடி -மைகளாக இருக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். எங்கும் எதற்கும் நேர் வழியாய் போக விரும்ப மாட்டார்கள். பக்க வாசல் வழியாய் நுழைவதைதான் அதிகமாக விரும்புவார்கள்.


மேற்கண்ட மகா பயங்கரமான செயல்கள் அவர்களிடம் காணப்படுவதினால்தான், அவர்களை யூத மக்கள் கள்ளர்கள் என்று அழைத்தனர். காரணம் அவர்கள் தேவாதி தேவனையும் கோபப்படுத்தக் கூடியவர்கள். பழைய ஏற்பாட்டு காலத்தில் கள்ளர்களை கண்டால் துரத்தி விடுவார்கள் (யோபு 30:5). அதுபோல நாமும், நமக்குள் காணப்படுகின்ற சின்னசின்ன மோசமான சுபாவங்களை அப்புறப்படுத்தினால், நம்மை கள்ளர்களாய் பார்க்காமல் நல்லவர்களாய் தேவன் பார்ப்பார்.


B. இடது புறத்து கள்ளன்:


"இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர் -களே, என்னை விட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்கா -கவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” (மத் 25:41).


இயேசுவின் இரண்டு பக்கமும் தொங்கின கள்ளர்களைக்

குறித்து பார்க்க வேண்டுமானால், அவர்கள் யார் எந்த திசையில் தொங்கி கொண்டிருந்தனர் எனபதையும் பார்க்க வேண்டும். காரணம், அந்த அந்த திசைக்கு ஏற்றபடிதான் அவர்கள் அறை -யப்பட்டனர். தண்டனையும் அனுபவித்தனர். தீர்க்கதரிசியாகிய சகரியா பார்த்த தரிசனத்தில் ஒரு குத்துவிளக்கின் வலது புறத்தி -லும் இடது புறத்திலும் இரண்டு ஒலிவ மரங்கள் இருப்பதாக கண்டான் (சகரி 4:3). அதைப் போலத்தான் குத்து விளக்காய் பிரகாசித்த இயேசுவுக்கு இரண்டு பக்கங்களிலும் கள்ளர்கள் தொங்கி கொண்டிருந்தனர். சகரியா பார்த்தது இரண்டு ஒலிவ மரங்கள், இங்கு தொங்குவதோ இரண்டு கள்ளர்கள். ஒலிவ மர -மாய் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள் கள்ளர்களாய் மாறி விட்ட -னர். இதை வாசிக்கும் அன்பான தேவ ஜனமே நீங்கள் ஒலிவ மரமா? அல்லது கள்ளர்களா என்பதை சிந்தித்து பாருங்கள்.


கொல்கொதா மலை மீது மூன்று சிலுவையில் மூன்று பேர் தொங்க வைக்கப்பட்டதில் நடுவாக தொங்கினவர் இயேசு. மற்ற

இருவரைக் குறித்து மத்தேயுவும், மாற்கும் கள்ளர்கள் என்று கூறியுள்ளனர். யோவான் நூலின் ஆசிரியரோ அவர்களுக்கு எந்த பெயரையும் குறிப்பிடாமல் மற்ற இரண்டு பேரையும் என்று குறிப்பிட் -டுள்ளான் (யோவா 19:18). இந்த மூன்று ஆசிரியர்களை விட லூக்கா புத்தகத்தின் ஆசிரியரோ அந்த இருவரையும் குற்றவாளி என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் (லூக் 23:33).


லூக்கா அந்த இருவரையும் குற்றவாளிகள் என்று எழுத முக்கிய காரணம் உண்டு. ஆம், இயேசுவையுமே அவர்கள் "இவன் குற்ற -வாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்க மாட்டோம்” [யோவா 18:30) என்று மக்கள் சொன்னர்கள். அதே போல அவரும் குற்றவாளியாய் தீர்க்கப்பட்டார்.


தான் சிலுவையில் அறையப்படும் போது இரண்டு பேரை இரண்டு பக்கங்களில் அறைவார்கள். நாம் மரிக்கும் முன்பாக அந்த இரண்டு பேரின் குற்றங்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்து விட வேண்டும். அப்படியானால், இப்போதே நாமும் அந்த குற்றவாளி என்ற பட்டத்தை சுமக்க வேண்டும் என்று முன் கூட்டியே அறிந்து இரண்டு கள்ளர்களுக்காக, இயேசு குற்றவாளி என்ற பட் -டப் பெயரை தன் மீது ஏற்றுக் கொண்டார். மற்றவர்களின் குற்றச் -சாட்டுகளையும், பழி சொற்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப்-பான்மையும், பொறுமையும் இருந்தபடியினால்தான், யூதர்கள் அவரை குற்றவாளி என்று கத்தும் போது பொறுமையாக இருந் -தார். அன்பானவர்களே, இது போன்று ஏற்றுக் கொள்ளும், சகித்து கொள்ளும் நல்ல மனப்பான்மை உங்களிடமும் உள்ளதா என்று சிந்தித்து பாருங்கள். இல்லாவிட்டால் அந்த கிருபையை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த இரண்டு பேரில் ஒருவனா -கிய குற்றவாளி என்றும் கள்ளன் என்றும் சொல்லப்பட்டவன் இடது பக்கத்தில் அறையப்படவும், அவன் நியாயம் தீர்க்கப்பட்டதற் -கும் மிக முக்கியமான ஆறு காரணங்கள் உண்டு. அவைகளை பொறுமையாகவும், கவனமாகவும் வாசித்து நன்றாக அறிந்து கொள்வது மிகவும் நல்லது.


காரணம்:1 


இயேசுவை நீ என்று ஒற்றைச் சொல்லினால் குத்திக்

காண்பித்தான் (லூக் 23:39). இது எதைக் குறிக்கின்றது தெரியமா? இயேசுவை தன்னுடைய அடிமையைப் போல எண்ணி -னான் என்பதாகும். பிரதான ஆசாரியனாகிய காய்பாவும் இயே -சுவை நீ என்று தான் பேசினான் (மத் 26:62). அதனால் அவன் பிரதான ஆசாரியனாயிருந்தும் ஆசாரியன் என்னும் பட்டத்தை இழந்து தந்திரவாதி என்று அழைக்கப்பட்டான்


(மத்26:3,4). அன்பானவர்களே நீங்களும் கூட யாரையும் நீ என் -றோ அற்பமாகவோ பேசாதீர்கள். அதனால் வரும் தண்டனையை அனுபவிக்காதீர்கள். இடது புறத்து கள்ளனின் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.


காரணம் 2:- 


கிறிஸ்துவானால் என்று அழுத்தம் திருத்தமாக கூறி -னான் (லூக் 23:39). கிறிஸ்து என்றோ, கிறிஸ்துவே என்றோ அவன் சொல்லாமல் கிறிஸ்துவானால் என்று தான் சொன்னான். இது, அவனுக்குள் இருந்த அவிசுவாசம் என்னும் சந்தேகத்தைக் காண்பிக்கின்றதாக உள்ளது. எவ்வளவாகிலும் சந்தேகப்படக் கூடாது (யாக் 1:6) என்பது ஆண்டவர் இயேசுவின் உபதேசமாகும்.


இவன் தேவ இராஜ்யத்தை இழந்து போக சந்தேகமும், சந்தேகப் படும்படியாக கேள்வி கேட்டதும் ஒரு காரணமாகும். அருமையான -வர்களே, நீங்கள் யாராயிருந்தாலும் சரி, எவ்வளவு பெரிதான மேன்மையில் இருந்தாலும் சரி, நீங்கள் விசவாசத்தை இழந்தும், சந்தேகப்படுகிறவர்களுமாய் காணப்படுவீர்களானால், இந்த கள்ள -னைப் போல கடைசி நேரத்தில் உங்களுக்குரிய பரலோக இராஜ் -யத்தை இழந்து போவீர்கள். கவனமாயிருங்கள்.


காரணம் 3:- 


இயேசுவைப் பார்த்து உன்னையும் என்று சத்தமிட் -டுச் சொன்னான் (லூக் 23:39). உன்னையும் என்ற வார்த்தை ஒருவரை அவமரியாதை செய்வதற்கு சமமாகும். அதாவது அற்ப -மாய் நினைப்பதாகும். இவன் சிலுவையில் தொங்கிக் கொண்டி -ருந்தாலும் அந்த சமயத்தில் கூட உபயோகமில்லாதவைகளைத் -தான் அதிகமாய்ப் பேசினான். "பிரயோஜனமில்லாத வார்த்தைக -ளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?" (யோபு 15:3). ஆம், நாம் பேசுகின்ற, நம்முடைய வாயிலிருந்து பிறக்கின்ற ஒவ்வொரு சொற்களும் கவனமுள்ளதாக இருக்க வேண்டும். இந்த கள்ளனைப் போல அவமரியாதையான வார்த் -தைகளை பேசி விடக் கூடாது. அதனால் கிருபைகளை இழந்து விடக் கூடாது.


காரணம் 4:- 


கள்ளன் சொன்னதான முக்கியமான வார்த்தை இரட்சித்துக் கொள் என்ற வார்த்தை (லூக் 23:39). இரட்சித்துக் கொள்ளும் என்று அன்பாகவோ, அல்லது இரட்ச்சிக்கமாட்டிரா என்று மன்றாடவோ இல்லை. அதற்கு பதிலாக இரட்சித்துக் -கொள் என்று விகற்பமாய் பேசினான். இந்த பேச்சு தூஷணத் -துக்கு ஒப்பானது என்று வேதம் எச்சரிக்கின்றது. தேவதூதர்கள் கூட தேவனுக்கு முன்பாக தூஷணமாய் பேசமாட்டார்கள் என்று எச்சரிக்கின்றது (IIபேது 2:11). அருமையானவர்களே, இரட்சிப்பு என்ற வார்த்தையை அவன் பயன்படுத்தினதின் மூலம், இரட்சிப் -பின் மேன்மையை அவன் அறிந்துள்ளான் என்று தெரிகின்றது. ஆனாலும், அவன் அதை இழந்து போகக் காரணம், அவனிடம் காணப்பட்ட தூஷணம்தான். ஒன்றைமாத்திரம் நன்றாய் தெரிந்து கொள்ளுங்கள். தூஷணம் எப்போதும் வெளியே தெரியாது. அது உள்ளத்திற்குள் மறைந்துதான் காணப்படும். திடீரென்று பாம்பை போல படமெடுத்து ஆடி சாட்சியை கெடுத்து விடும். ஆனபடியி -னால் இந்த இடதுபுறத்து கள்ளனைப் போல தயவு செய்து தூஷணத்துக்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.


காரணம் 5:- 


இகழ்ந்தான் . ஆம், இதுதான் இடதுபுறத்து

கள்ளனுக்கு தண்டனையைக் கொண்டு வர பெரும் காணரமாக அமைந்தது. இயேசு அற்புதங்களையும், நன்மைகளையும் செய்து தகாதது ஒன்றையும் நடப்பிக்காதவர் என்று தெரிந்திருந்தும் அவ -ரை இகழ்ந்தான் என்று வேதம் தெளிவாக சொல்கின்றது. (லூக் 23:39).இகழந்தான் என்றால் திட்டினான் என்று அர்த்த -மாகும். மரண நேரத்திலும் சாவு நெருங்கும் போதும் பரிதவிப் -பார்கள், அல்லது ஏதாவது சொல்லி கெஞ்சுவார்கள். ஆனால் இவனோ அப்படியல்ல தன் கடைசி நேரமான மரண நேரத்திலும் இகழ்வதிலும், திட்டுவதிலும்தான் கவனமாக இருந்தான்.


“பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார் -கள்” (தானி 12:2) என்று தானியேல் தீர்க்கதரிசியை கொண்டு கர்த்தர் சொன்னதைப் போல இந்த இடதுபுறத்து கள்ளன் நித்திய நித்திமான நிந்தை நிறைந்த அக்கினியுள்ள நரகத்தில்தான் தள் -ளப்படுவான்.


இதை வாசிக்கும் தேவ ஜனமே, உங்கள் வாழ்க்கையின் கடைசி நாட்களில் கவனமாக இருங்கள். நிதானமாய் செயல்படுங் கள். யாரையும், எந்த சூழ்நிலையிலும் அவசரப்பட்டு இகழ்ச்சியாக பேசி விடாதீர்கள். வலதுபுறத்து கள்ளனை விட இடதுபுறத்து கள் -ளன் உங்களுக்கும் எனக்கும் கூட ஒரு எச்ச்ரிப்பின் மணியாகவே இருக்கிறான்.


காரணம் 6:- 


அக்கிரமக்காரனாயிருந்தான் (மாற் 15:28). மேற் -கண்ட பல அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் இவன் மேல் உண்டாகவும், இடதுபுறத்தில் அறையப்படவும் அவனிடம் காணப்பட்ட அக்கிரமமே காரணமாகும். சரி, அப்படியானால் வலதுபுறத்து கள் ளனும் அக்கிரமக்காரன் என்றுதானே வேதம் சொல்கிறது என்று நீங்கள் நினைப்பீர்கள். அது உண்மைதான். ஆனாலும் வலதுபு -றத்து கள்ளனுடைய அக்கிரமத்தை விட, இடதுபுறத்து கள்ளனு -டைய அக்கிரமம் பெரியதாகும்.


வலதுபுறத்து கள்ளன் சிலுவையில் அறையப்பட்ட பின்பு தகா -ததை ஒன்றும் பேசவில்லை. யாரையும் இகழவில்லை. இயேசு -வுக்கு முன்பாக தன்னை முரடனாகவோ, மேட்டிமையாகவோ காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இடதுபுறத்து கள்ளன் இவை எல்லாவற்றிலும் நேர் எதிராக இருந்தான். அமைதி அன்பையும், அலறுதலோ பாதிப்பையும் கொண்டு வரும். “அக்கிரமக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" (சங்6:8) என்று வசனம் சொல்வதைப் போல, இவனும் அகற்றப்பட்டான். பரதீசு என்னும் மேலானதை இழந்தான். பரலோகத்துக்கு பதிலாக நரகத்துக்கு பங்காளியானான்.


பாதாளம்:


இப்படியெல்லாம் மனம் போல பேசியும், இயேசுவை எதிர்த்தும் செயல்பட்ட இடதுபுறத்து கள்ளன் அவனுடைய மரணத்துக்கு பின்பு அவனுடைய ஆத்துமா போய் சேர்ந்த இடத்தை குறித்து அறிந்து கொள்வது, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஓர் எச்சரிப்பாய் இருக்கும்.


மரணத்துக்கு பின்பு மனிதர்கள் போக கூடிய முக்கியமான இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று: நரகம் மற்றொன்று: பரலோகம். இந்த நரகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. அதாவது நித்திய நரகத்துக்கு போகும் முன்பாக சில காலம் பாதாளத்தில் இருக்க வேண்டும். அந்த பாதாளத்தில் மூன்று பகுதிகள் உண்டு. 1) வேதனையுள்ள இடம் 2) புறம்பான இருள் 3) அதாள பாதாளம். இதில் முதலாம் இடமான வேதனையுள்ள இடத்துக்குதான் இடது -புறத்து கள்ளன் போனான்.


இந்த பாதாளம் பூமியின் கீழே இருக்கின்றது. இங்கு யார் யார் போவார்கள் தெரியுமா? இரட்சிக்கப்படாதவர்கள், மனம் திரும்ப விரும்பாதவர்கள், சத்தியத்தை மறுதலித்தவர்கள், பின் -வாங்கிபோனவர்களை போன்றோர் போவார்கள். இதில், இடதுபுறத்து கள்ளன் மனம் திரும்ப விரும்பாதவன். ஆனபடியி-னால் நிச்சயமாக அவனும் அங்குதான் போயிருப்பான். இந்த பாதாளத்தில் என்னவெல்லாம் இருக்கும் எப்போதுமே அணைந்து போகாத அக்கினி இருக்கும். நெளிந்து கொண்டே இருக்கக் கூடிய உயிருள்ள புழுக்கள் இருக்கும். நெளிந்தும், ஊர்ந்தும் செல்லக்கூடிய ஏராளமான பூச்சிகள் இருக்கும். ஒருபுறம் இருளின் ஆவிகள், மற்றொருபுறம் கட்டி வைக்கப்பட்டிருக்கும் அவைகளின் சத்தமும் ஓசையும் மிகவும் கொடியதாக இருக்கும். இவைகள் எல்லாவற்றையும் விட உச்சக் கட்டமாக ஏறத்தால நான்காயிரம் டிகிரி அளவுக்கு சூடு (உஷ்ணம்) இருக்கும். “புழுக் -களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை" (ஏசா 14:11) என்ற வார்த்தையின்படி படுக்கிற இடமெல்லாம் புழுவாயும், நடக்கிற இடமெல்லாம் பூச்சியாயும் இருக்கும். புலம்பலும் அழுகையும் எப் -போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். அமைதல் என்பதே இருக் -காது, ஓய்வும் தூக்கமும் இல்லாமல் போகும். யார் விரும்பினா -லும், எவ்வளவுதான் முயற்சித்தாலும் அங்கிருந்து மீண்டும் வெளியே வரவே முடியாது. அது ஒரு மகா பயங்கரமான இடம்.


எனக்கன்பானவர்களே, தன் வாழ்க்கையின் கடைசி நேரத்தில் இயேசுவை எதிர்த்த, மறுதலித்த கள்ளன் போன இடத்தைக் குறித்தும், அவன் இப்போது அநுபவித்துக் கொண்டிருக்கும் வேத -னையை குறித்தும் வாசித்தீர்கள். இபபோதே உங்கள் ஆத்து மாவையும், உங்களின் உள்ளான அந்தரங்க ஜீவியத்தையும் கவ -னித்து பாருங்கள். இடதுபுறத்து கள்ளனைப் போல நீங்களும் பாதாளத்துக்குப் போக கூடாது என்பதற்காகத்தான் இந்த சத்தி -யத்தை இயேசு உங்களுக்கு வெளிப்படுத்தி, உங்களோடு இந்த புஸ்தகத்தின் மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார்.


C. வலதுபுறத்து கள்ளன்:


"அப்பொழுது ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டி -ருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" (மத் 25:34).


உலகம் முழுவதும் உள்ள அநேக கிறிஸ்தவர்கள் மற்றும் தேவ ஊழியர்களின் கேள்விக்குரியவனாக இருப்பவன் இந்த வலதுபு -றத்து கள்ளன்தான். ஞானஸ்நானம், அந்நியபாஷை குறித்து விவாதங்கள் எழும்பும் இடங்களில் இந்த வலதுபுறத்து கள்ளன் நுழையாமல் இருந்ததே இல்லை. ஒருவகையில் சொல்லப்போ -னால் பூமியில் உண்டாகும் மனந்திரும்புதலையும் பரலோகம் போக தேவையான இரட்சிப்பையும் இணைக்கிறவனாகவும் இவன் காணப்படுகின்றான்.


இவனை வலதுபுறத்து கள்ளன் என்று ஏன் சொல்லுகின்றார் -கள்? அப்படியானால் வலதுபுறத்தில் என்ன இருக்கின்றது? வல -துபுறம் என்பது ஆசீர்வாதமானது. அதேபோல, வலதுபுறத்தில் நிற்பவர்களும் ஆசீர்வாதமானவர்கள்தான் (மத் 25:34). 


வலதுபுறம் நிற்பவர்களை பார்த்து இயேசு 5 முக்கியமான காரி-யங்களை சொன்னார்:


 i) வாருங்கள்

ii) ஆசீர்வதிக்கப்பட்டவர்களே

iii) ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது

iv) இராஜ்யத்தை தருவேன்

v) சுதந்தரிதுக் கொள்ளுங்கள் (மத் 25:34). 


எவ்வளவு பெரிய சிலாக்கியம் பாருங்கள். இயேசுவின் உயிர்த்தெழுந்த கல்லறையில் இருந்த தேவதூதன் வலதுபக்கத்தில்தான் உட்கார்ந்து இருந்தான் (மாற் 16:5).யோவா -னின் தகப்பன் சகரியா ஆசாரிய ஊழியம் செய்து கொண்டிருக் -கும் போது பலிபீடத்தண்டையில் தோன்றின தேவதூதனும் வலது புறத்தில்தான் நின்று கொண்டிருந்தான் (லூக் 1:11).


இப்படி வலதுபுறம் என்பது தேவனாலும், தேவனுடைய மனிதர் -களாலும், தேவ தூதர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பக்கமா -கும். இப்படிப்பட்ட வலதுபுறத்தைதான் தேவன் குறிப்பிட்ட இந்த கள்ளனுக்கு கொடுத்தார். இந்த வாய்ப்பு தேவனால் அவனுக்கு அருளப்பட்ட சிலாக்கியம் என்றுதான் நான் கருதுகிறேன். இதே போல வலதுபுறத்து ஆசீர்வாதங்களினால் என் தேவனாகிய கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பார்.


வலதுபுறத்து கள்ளன் மீது ஆண்டவராகிய இயேசு இரக்கம் பாராட்டி, அவன் கேள்விகளுக்கு பதில் கொடுத்து, பரத்சையும் பரிசாக வழங்கியதற்கு மிக முக்கியமான காரணங்கள் உண்டு. அவைகளை பொறுமையாகவும், தேவ சிந்தையோடும் வாசித்து தெரிந்து கொள்வோம்.


காரணம் 1:-


 இந்த வலதுபுறத்து கள்ளனின்

பெயர்: திஸ்மாஸ் என்பதாகும். இவன் குற்றத்துக்கு தக்க ஆக்கினை உண்டாகும் என்பதை நன்றாக அறிந்தும் உணர்ந்தும் இருந்தான்


(லூக் 23:40). ஆக்கினை என்றால் தண்டனை என்று அர்த்தமா -கும். செய்த குற்றத்துக்கு தண்டனை உண்டு என்று யார் உண் -மையாக உணருகின்றார்களோ அப்போதே அவர்கள் திருந்த ஆரம்பித்து விட்டார்கள் என்று அர்த்தமாகும். “கர்த்தர் உன் ஆக் -கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார். இஸ்ர -வேலின் இராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனி தீங்கை காணாதிருப்பாய்" (செப் 3:15) என்ற வசனத்தின்படி, அவ -னுடைய ஆக்கினையாகிய தண்டனை மன்னிக்கப்பட்டது. தீங்கை காணாமல் பரதீசுக்கு சென்றான்.


காரணம் 2:- 


தேவனுக்கு பயப்படுகிறதில்லையா? என்றான் (லூக் 23:40). அப்படியானால் தேவனுக்கு பயப்படுகிறபயம் அதிக -மாகவே இருந்துள்ளது. தேவனுக்கு பயப்படுதல் என்றால் கபட -மில்லாத ஜீவியம் என்று அர்த்தமாகும் (கொலோ3:22). வெளித் -தோற்றத்தில் அவன் கள்ளனாக காணப்பட்டாலும் உள்ளத்திலோ கபடற்ற புறாவைப்போல இருந்துள்ளான். அன்பான விசவாச ஜனமே, நீங்களும் கபடற்றவர்களாய் வாழ்ந்து ஜீவித்து பாருங்கள் தேவனுக்கு பயப்படுகிறபயம் உங்களுக்குள் தானாகவே நீரூற்றைப் போல பெருக்கெடுத்து ஓடும்.


காரணம் 3:- 


நியாயத்தை உணர்ந்தவனாகவும், நியாயத்தையே பேசுகிறவனாகவும் காணப்பட்டான் (லூகக் 23:41). நியாயத்தை பேசுவதற்கு இந்நாட்களில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், நியாயத்தை நியாயமானபடி எடுத்து சொல்லத்தான் அதிகமான ஆட்கள் இல்லை. ஆனால், இந்த வலதுபுறத்து கள்ளன் சரியாக செய்தான். "தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கி -றமனுஷன் பாக்கியவான்” (சங் 112:5) என்று சொல்லப்பட்டுள்ள அற்புதமான வசனத்தின்படி, இந்த வலதுபுறத்து கள்ளனும் சிலு-வையிலேயே பாக்கியவானாக மாறிவிட்டான்.


நீங்களும் எப்போதும், எல்லாரிடமும் எல்லா இடத்திலும் நியா -யமானதை மட்டும் பேசுங்கள். அப்பொழுது உங்களையும் தேவ -னாகிய கிறிஸ்து இயேசு பாக்கியவானாக, பாக்கியவதியாக மாற்றி, தம்முடைய பாக்கியங்களையும் உங்களுக்கு தந்தருள்வார்.


காரணம் 4:-


 “இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” (லூக் 23:41) என்று இயேசுவை குறித்து அருமையான சாட்சி கொடுத்தான். நீங்களே என் சாட்சிகள் (ஏசா 44:8) என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட வசனத்தை நிறைவேற் -றும் பாத்திரமாக இந்த வலதுபுறத்து கள்ளன் மாறினான். இயே -சுவை சிலுவையில் அறைந்ததைப் போலதான் இந்த கள்ளனும் சிலுவையில் அறையப்பட்டான் (லூக் 23:33). அப்படியானால் இவன் வேதனையினால் கத்தியிருக்க வேண்டும், துடித்திருக்க வேண்டும், புலம்பி தவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படியெல் -லாம் தன்னை வெளிப்படுத்தாமல் தன்னுடைய மிகுந்த வேத -னைக்கு மத்தியிலும் இயேசுவை உயர்த்தி காண்பித்து சாட்சி சொன்னான் அல்லவா, இந்த செயல்தான் அவனுக்கு இரக்கமும் பரத்சும் கிடைக்க செய்தது. துன்பங்களுக்கு மத்தியில் சத்தியத் -தையும், இயேசுவையும் மறுதலிக்காமல் வாழ்பவனே உண்மை -யான கிறிஸ்தவன் என்பதை இந்த வலதுபுறத்து கள்ளன் நிரூபித்து விட்டான்.


காரணம்: 5


 “என்று அவனைக் கடிந்து கொண்டு" (லூக் 23:41) வலதுபுறத்து கள்ளன் இடதுபுறத்து கள்ளனை கடிந்து கொண்ட -படியினால் தான் இடதுபுறத்து கள்ளனும் அமைதலானான். கடிந்து கொள்ளுதல் என்றால் பாவத்தை கண்டித்து எச்சரித்து உணர்த்துவதாகும். அவனை கடிந்து கொள்ளுகிறவர்கள் மேல் பிரியமுண்டாகும். அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும் (நீதி 24:25) என்ற தேவ வசனத்தின்படி வலதுபுறத்து கள்ளன் தேவனுக்கு பிரியமானவனாக மாறினான். அதனால் அவன் உத்தம ஆசீர்வாதத்தையும் சுதந்தரித்துக் கொண்டான்.


இந்த கடைசி காலத்தில் வாழ்த்தி பேசவும், போற்றி புகழவும் பல ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். ஆனால் நேருக்கு நேராக உண்மையை சொல்லி கடிந்து கொண்டு எச்சரிக்கும் ஆட்கள் தான் இல்லவே இல்லை. இதை வாசிக்கும் நீங்கள் இந்த அழைப்புக்கு கீழ்படியுங்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் உங் -களுக்கும் உத்தம ஆசீர்வாதங்களை கட்டளையிடுவார். உங்க -ளையும் உத்தமர்களாக மாற்றுவார்.


காரணம்: 6


 "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்" (லூக் 23:42]. அதாவது பரலோக இராஜ்யத்தில் இடம் கிடைக்க வேண்டும் என்று ஜெபித் -தான். "மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ அவனை நானும் பரலோகத்திலிருக்கிறஎன் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன்" (மத் 10:32) என்ற வசனத் -தின்படி, இடதுபுறகள்ளனுக்கு முன்பாகவும், மற்றும் சிலுவைக்கு அருகில் இருந்தவர்களுக்கு முன்பாகவும் இந்த வலதுபுறத்து கள்ளன் இயேசுவை அறிக்கை செய்தான். அதனால் அவனுக்கு இராஜ்யத்தில் இடம் கிடைத்தது.


ஆனால், அவன் ராஜ்யத்தின் எந்த பகுதிக்கு போனான் என்றும், அங்கு யாரெல்லாம் போவார்கள் என்றும் சற்று விரி வாகவும், விளக்கமாகவும் பார்ப்போம்.


பரதீசு:


பரதீசு என்றால் பூந்தோட்டம் அல்லது அடைத்து பாதுகாக்கப் -பட்ட தோட்டம் என்ற அர்த்தங்கள் உண்டு. லூக்கா 16-ம் அதிகா -ரத்தில் சொல்லப்பட்டுள்ள ஆபிரகாமின் மடியையும் பரதீசு என்று தான் பரிசுத்தவான்கள் சொல்கின்றனர். பரதீசு என்பது பரிசுத்த -வான்களின் ஆத்துமாக்கள் இளைப்பாறும் இடமாகும்.


பரத்சு என்பது இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முன்பு வரை -யிலும், பூமியின் கீழுள்ள பாதாளத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு தனி இடத்திலும் இருந்தது. ஏழையாய் இருந்து மரித்த லாச -ருவும், வலதுபுறத்து கள்ளன் ஆகியோரும் கூட இந்த பதரீசுக்கு -தான் சென்றனர். ஆனால் அந்த பரதீசு இப்போது அங்கு பாதா -ளத்தில் இல்லை. “நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” (வெளி 1:18) என்ற வசனத்தின் நிறைவேறுதலுக்கு ஏற்ப, இயேசு மரித்து உயிர்த்த போது, அடியில் பாதாளத்தில் இருந்த பரத்சு உயரே வானத்துக்கு மேலே எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்பு கீழே இருந்த பரதீசு இப்போது வானத்துக்கு மேலே இருக்கிறது. வலதுபுறத்து கள்ள -னும் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டான். இந்த பரத்சை மூன்றாக பிரித்து பார்க்கலாம்:


1 ம் வானம், 

2 ம் வானம், 

3 ம் வானம்


1ம் வாணத்தில்: 


இரட்சிக்கப்பட்ட, மனம்திரும்பின புதிய அனு -பவத்தில் உள்ளவர்கள் இருப்பார்கள்.


2 ம் வானத்தில்:


பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள். மாபெரும் தேவமனிதர்கள், தீர்க்கதரிசிகள் காணப்படுவர்.


3 ம் 3 ம் வானத்தில்: 


கிருபையின் காலத்தில் மரிக்கும் பரிசுத்த-வான்கள், ஆத்துமாக்கள் இருப்பார்கள். வலதுபுறத்து கள்ளனும் இங்குதான் இருப்பான். ஏனென்றால் அவன் மனம் மாறின காலம் கிருபையின் காலம்.


பூமியில் எந்த மனுஷனும் பேசாத ஒரு வித்தியாசமான புதிய பாவை அங்கு பேசப்படும் (IIகொரி 12:3). அங்த பாஷையின் சத்தத்தை அங்குள்ளவர்கள் தங்கள் காதுகளால் கேட்க முடியும். காரணம்: அங்கு இருப்போர் சுய நினைவோடும், நல்ல மகிழ்ச்சி-யோடும் இருப்பார்கள்.


இந்த பரத்சுக்கு மத்தியில் ஓர் விசேஷ இடம் உண்டு. அந்த இடத்தில் ஜீவ விருட்சம் என்கிற உயிருள்ள மரம் உண்டு. (வெளி 2:7). அதனால் அங்கு ஜீவ கனியும் உண்டு. தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, பரிசுத்த ஜீவியம் ஜீவித்து, கடைசி வரை கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்தவர்கள் மரிக்கும் போது இந்த பரதீசு அவர்களுக்காக திறக்கப்படும். இந்த பரத்சுக்குள் எடுத்துக் கொள்ளப்படுகிறவர்கள், இயேசுவின் ஆயிரம் வருட அர -சாட்சி முடிந்து உயிர்த்தெழுதல் நடக்கும் வரை இங்கு இளைப்-பாறுவார்கள்.


அன்பானவர்களே, சாதாரண கள்ளன் மனம் திரும்பினபடியால் அவனுக்கே இவ்வளவு சிறப்பான, அழகான மகிமை நிறைந்த பர -தீசை கொடுப்பாரானால் உங்களுக்கு ஏன் தரமாட்டார்? சிந்தித்து பாருங்கள். மனம் திரும்புங்கள், கிறிஸ்துவுக்குள், கிறிஸ்துவுக் -காக உறுதியாய் இருங்கள். பரத்சை சுதந்தரியுங்கள்.


“அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து, வலது புறத்திலாகிலும், இடது புறத்திலாகிலும், அவனை விட்டு விலகாமல் துரத்திக் கொண்டு போனான்" (11சாமு 2:19) என்பதைப் போல இயேசு -வையும் இரண்டு பக்கத்திலும் இரண்டு கள்ளர்கள் தொங்கிக் கொண்டு இயேசுவை வலது இடதுபுறம் திரும்ப கூட விடாமல் மாறி மாறி பேசினார்கள். அப்னேரை விடாமல் துரத்தினதைப் போல இயேசுவையும் ஒரு பக்கம் கள்ளர்கள் பேச்சினால் துரத்தி -னார்கள். மற்றொருபுறம் யூதர்கள் உபத்திரவத்தினால் துரத்தி -னார்கள். ஆனாலும் இவைகளுக்கு மத்தியில் ஜெயித்தார். வெற்றியாய் ஓட்டத்தை முடித்தார். பிதாவின் சித்தத்தை நிறைவேற் றினார். இதை வாசிக்கும் நீங்களும் இயேசுவை போல வெற்றி -யுள்ள ஓட்டம் ஓடுங்கள். வலதுபுறத்து கள்ளனை போல இராஜ் -யத்தை சுதந்தரியுங்கள்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.