சிலுவையின் வரலாறு பாகம் - 15 : பாடுகளின் அடிகளும், கோல்களும்

 



சிலுவையின் வரலாறு பாகம் - 15 : பாடுகளின் அடிகளும், கோல்களும் 


"யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்” (யோவா 19:3).


வேதத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும், ஒவ்வொரு வார்த் -தைகளுக்கும் ஆழமான அர்த்தங்களும், காரணங்களும் உண்டு. “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்: அவன் மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண் -டிக்கிறான்” (நீதி 13:24) என்கிற வேத வார்த்தை நிறைவேறுவ -தற்க்காகவே இயேசுவும் தண்டனைக்கு ஒப்பான அடிகளை வாங்கிக் கொண்டார்.


அவர் அடிக்கப்பட்டார் என்பது உண்மையிலும் உண்மை. ஆனால், அவரை அடித்ததைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் உண்டா? உடலில் எங்கெல்லாம் அடித்தார்கள், எதை கொண்டு அடித்தார்கள், எப்படியெல்லாம் அடித்தார்கள், யார் யார் அடித் -தார்கள் என்பவைகளை வேதத்தின் வெளிச்சத்தோடும், பரி -சுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளோடும், கவனித்து பார்த் -துத் தெரிந்து கொள்வோம்.


a. அடிகளை குறித்த தீர்க்கதரிசனங்கள்:


அ . “உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன், நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மௌனமாயிருந்தேன்" (சங் 39:9,10). சங்கீதக்காரனைக் கொண்டு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம், இயேசுவின் வாழ்வில் நடந்தது. ஆண்டவர் இயேசுவும் வாயைத் திறவாமல் மௌன -மாகவே காணப்பட்டார்.


ஆ. "அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப் போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்"


(ஏசா 10:24). ஏசாயாவைக் கொண்டு சொன்ன இந்த வார்த்தை -யின்படியே இயேசுவை கோலைக் கொண்டும் அடித்தார்கள். கோல் என்றால் அடையாளம் என்று அர்த்தம் (யாத் 4:17). உடலில் அடையாளம் உண்டாகும் அளவுக்கு கோலால் இயேசுவை அடித்துள்ளனர். “வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்ப -டுத்துவீர்கள்” (மத் 23:34). இயேசுவின் சீஷர்களில் ஒருவனா -கிய மத்தேயுவை கொண்டு சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனத் -தின்படி இயேசுவை ஊருக்கு ஊர் துன்பப்படுத்தினார்கள்.


"அவரை வாரினால் அடித்து அவரை கொலை செய்வார்கள்" (மாற்10:34). இந்த வாக்கின்படியே இயேசுவை நாற்பதுக்கு ஒன்று குறைய முப்பத்தி ஒன்பது விசை வாரினால் அடித்தனர். அதனால், அவருடைய முதுகு படைச்சால்களைப் போல கிழிக்கப்பட்டது.


"மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட -வைகளெல்லாம் நிறைவேறும்” (லூக் 18:31). ஆம், இந்த உல -கத்தில் இயேசு மனுஷகுமாரனாகத்தான் வந்தார், வாழ்ந்தார். ஆனாலும், எந்த ஒரு மனுஷனும் அனுபவிக்க முடியாத அடிக ளையும் அவர் நம் ஒவ்வொருவருக்காகவும் அனுபவித்தார்.


b. எங்கெல்லாம் அடித்தார்கள்:


1. “அவரை சிரசில் அடித்தார்கள்" (மத் 27:30). சிரசு என் -றால் அலங்காரம் என்று அர்த்தமாகும். (நீதி1:9) அலங்கார -மாய் இருந்த அவரின் தலையை அடித்தே அலங்கோலம் ஆக்கினார்கள்.


2. "கிறிஸ்துவே உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ் -டியினால் எங்களுக்கு சொல்லும்" (மத்26:68) என்று சொல்லி அவரைப் பரியாசம் பண்ணினார்கள். பரியாசம் என்றால் நிந்த -னை என்று பொருள் (நீதி 17:5). நிந்தனையும், பரியாசமும் அனுபவிக்கக் கூடாத ஆண்டவர் நமக்காக அனுபவித்தார். ஆன -படியால் யாரையும், எந்த சூழ்நிலையிலும், ஒரு போதும் பரியா -சம் பண்ணாதீர்கள்.


நீங்கள் யாரையாவது பரியாசம் பண்ணினால், உங்களுக்காக சிலுவையில் அடிக்கப்பட்ட இயேசுவை நிந்திக்கின்றீர்கள் என்று அர்த்தமாகும். மத் 26:68-ல் இயேசுவை எந்த இடத்தில் அடித் -தார்கள் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அடித்தார்கள் என்று இருப்பதால் எங்கோ, ஓரிடத்தில் நிச்சயமாய் அடித்துள்ள -னர். “அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும் ஒப்புக் கொடுத்தேன்' (ஏசா 50:6). அநேக அடிகள் வாரினால் அடித்தபோது, அதில் பெரும்பாலும், முதுகில்தான் பட்டது. முதுகு என்றாலே சத்துருவின் போராட்டம் என்று அர்த்தமாகும் [யோசு 7:8,12]. இயேசுவை அடித்த ஒவ்வொருவனும் சத்துருவாக மாறிதான் அடித்தனர். அதனால்தான் அவர் அந்த அளவுக்கு காயப்பட்டார்.


c. எவைகளைக் கொண்டு அடித்தார்கள்:


1."கோலை எடுத்து, அவரை சிரசில் அடித்தார்கள்” (மத் 27:30). அநேகருக்கு ஆகாரத்தையும், விடுதலையையும் தந்தார் என்பதை மறந்து, கோலால் அவரை அடித்தார்கள். கோல் என்றால் துஷ்டரின் தண்டாயுதம் (ஏசா 14:5) என்று அர்த்தமாகும். இயேசுவை சுற்றிலும் இருந்தவர்கள் வேதம் சொல்கிறபடி துஷ்டர்களாகவும், அவர்களின் கைகளில் இருந்த கோல் தண்டாயுதமாகவும் இருந்துள்ளது.


2. “அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து” (மாற் 10:34). இயேசுவை பயங்கரமான முறையில் அடித்தவைகளில் வாரினால் அடித்ததுதான் மிக முக்கியமான அடியாகும். இரும்பு குண்டுகளும், இரும்பு கொக்கிகளும் ஆங் -காங்கே அந்த வாரில் மாட்டியிருந்தபடியினால் ஒவ்வொரு அடி -யும் தோலையும், சதையையும் பிய்த்துக் கொண்டு வந்தன. அதனால், அவருடைய முதுகில் மட்டும் ஏறத்தால 150 காயங் -கள் இருந்ததாக வேதாகம வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


3. “யூதருடைய ராஜாவே வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்” [யோவா19:3). பல ஆயுதங்களைக் கொண்டு, பல விதத்தில் அடித்திருந்தாலும், அது போதாதென்று கையினாலும் ஓங்கி ஓங்கி அடித்துள்ளனர். கையினால் அடிப் -பது கொலைபாதகத்துக்கு சமானம் (எண் 35:21). ஆனபடியி -னால் தான் யூதர்கள் இயேசுவைக் கொலை செய்த கொலை -பாதகர்கள் என்று உலகம் சொல்கின்றது. இந்த செய்தி உங்க -ளுக்கு ஓர் எச்சரிப்பாகும். அவசரப்பட்டு யாரையும் கை நீட்டி அடித்து விடாதீர்கள். அது உங்களை கொலைகாரர்களாகவும் மாற்றி போடும்.


d. எந்த விதங்களில் அடித்தார்கள்?


1. “கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்" (மத் 26:68)


கிறிஸ்து என்றால் கன்மலை என்று அர்த்தமாகும் (Iகொரி 10:4). கன்மலையைப் போல உறுதியாய் இருந்தவரை, ஒரு ஆட்டை அடிப்பதுபோல அடித்தனர். பழைய ஏற்பாட்டில் மோசே கன்ம -லையை அடித்தான். இங்கு யூதர்கள் கிறிஸ்துவை அடிக்கின் -றனர். மோசே காலத்து சம்பவம் இதன் மூலம் கிறிஸ்துவின் நாட்களில் நிறைவேறுகின்றது.


இதைப்போல உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிக்கு

கிடைத்த தரிசனங்களும், சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களும்

உங்கள் நாட்களில், உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும். நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.


2. "யூதருடைய ராஜாவே, என்று சொல்லி, அவரை அடித் -தார்கள்" (யோவா19:3). அடிக்கும்போது, சொல்லி சொல்லி அடித்துள்ளனர். அப்படி அவர்கள் சொன்ன வார்த்தைகளில் ஒன்றுதான் யூதருடைய இராஜாவே என்பதாகும். யூதருடைய இராஜா என்று சொன்னால் நசரேயனாகிய இயேசு என்று விளக்கமாகும் (யோவா19:19). கொடூரர்களாகிய அவர்கள் கூட இயேசு ஒர் நசரேயர் என்பதை தெரிந்து வைத்துள்ளனர்.


3. “அவரை அடித்து, அவர்மேல் துப்பி" (மாற் 15:19) பலரும் சூழ்ந்து நின்றிருந்து அவரை தாக்கவும் அடிக்கவும் தொடங்கின போது, அவர்மேல் துப்பி அதன் பின்பு அடித்துள்ளனர். துப்புதல் என்றால் வெட்கம் என்று அர்த்தமாகும். இயேசுவை அடித்தால் மட்டும் போதாது, வெட்கப்படுத்தவும் வேண்டும் என்று சொல்லி, துப்பி, துப்பி அடித்துள்ளனர்.


4. "அவருடைய கண்களைக் கட்டி, உன்னை அடித்தவன் யார் என்று அவரைக் கேட்டதுமன்றி” (லூக் 22:64). கண்களை கட்டு -வது என்பது, ஒரு நபரை கடத்திக் கொண்டு போகும் போதுதான் கண்களைக் கட்டுவார்கள். அங்கு இருந்த முரட்டாட்டமான மனி -தர்களில் யாரோ சிலர் கொஞ்சம் இரக்கம் உள்ளவர்களாகவும் இருந்துள்ளனர். கொடுமைகளை இயேசு பார்க்க வேண்டாம் என் -றஎண்ணத்தில் இயேசுவின் கண்களை கட்டினர் என்று சில வேத பணடிதர்கள் கூறுகின்றார்கள்.


e. யார் யார் அடித்தார்கள்:


1. "அவரை புறஜாதியாரிடத்தில் ஒப்புக் கொடுப்பார்கள்” (மத் 20:19). இயேசுவை அடித்ததில் புறஜாதியார்தான் முதல் வரி -சையில் உள்ளனர். புறஜாதியார் என்றால் பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுபடுத்தினவர்கள் என்றும், எருசலேமை மண் மேடுகளாக்கி -னவர்கள் என்றும் பேர் பெற்றவர்கள் (சங் 79:1). பரிசுத்தமுள்ள இயேசுவை பரிசுத்தர்களால் அடிக்க முடியாது. தீட்டுபட்டவர்களால் தான் அடிக்க முடியும். ஆனபடியினால்தான் புறஜாதியார் கையால் அடிக்கப்பட்டார்.


தன்னை அடித்து கொடுமைப்படுத்தின புறஜாதியாருக்கு சுவிசே -ஷத்தை அறிவிக்க அப்போஸ்தலனாகிய பவுலை பின் நாட்களில் அனுப்பினார் (அப் 9:15). இதன் மூலம் இயேசுவின் அன்பும் மன -துருக்கமும் வெளிப்படுகின்றது.


2. "பிரதான ஆசாரியன், கிறிஸ்துவே உம்மை அடித்தவன் யார்? எங்களுக்குச் சொல்லும் (மத் 26:65,58). இயேசுவின் சரீரத்தில் பலத்த அடியை கொடுத்தவர்களில் பிரதான ஆசாரி -யன் இரண்டாவது நிலையில் வருகின்றான். பிரதான ஆசாரி -யன் என்றால் பிடிவாதமாய் குற்றஞ்சாட்டுகிறவன் என்று வச -னம் சொல்கின்றது (லூக் 23:10). அந்நாட்களில் வாழ்ந்த பிர -தான ஆசாரியர்கள், யார் மேலாவது ஏதாவது ஒன்றை சொல்லி குற்றஞ்சாட்டுவதை பழக்கமாக கொண்டிருந்தனர். அப்படியா -னால், இயேசுவை அடிக்கும் போது, குற்றஞ்சாட்டி, குற்றஞ் -சாட்டி அடித்துள்ளனர்.


3. "அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்” (யோவா19:1). இயேசுவைப் பிடித்து அடித்தவர் -களில் ஒரு VIP-யாக இருந்தவன் பிலாத்துவாகும். இவன், திபேரியு இராயனால் யூதேயாவுக்கு VI-ம் தேசாதிபதியாகக கி.பி.25-ல் நியமிக்கப்பட்டவன். இவனுடைய தலைநகரம் செசரியாவாக இருந்தாலும், பண்டிகை நாட்களில் எருசலேமில் போய்த் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.


யூத ஜனங்களை தன் போர்சேவகர்களைக் கொண்டு, கொன் -றுக் குவித்தவன் இந்த பிலாத்து. எருசலேமுக்குப் பலியிடப் போன கலிலேயரைக் கொன்று, செத்து போனவர்களின் இரத்தத் -தை எடுத்து, பலியிடும் இரத்தத்தோடு கலந்தவனும் இவனே (லூக் 13:1). இவன் இயேசுவை அடித்தது மட்டுமல்ல, சிலுவை -யில் அறைய ஒப்புக் கொடுத்தவனும் இவனே.


அவன் மீண்டும் கி.பி.39-ம் ஆண்டு தன் சொந்த நாட்டுக்கு கடந்து சென்றபோது, அங்கே தன் சுய தேசத்தாரால் துரத்தப்பட்டு, அவன் தற்கொலை செய்து கொண்டான். அவனுடையப் பிரேதம் மலையிலிருக்கிற ஒரு குளத்தில் எரிந்து விடப்பட்டது. “அவன் வடி -வைப் பொட்டரிப்பைப் போல் அழியப்பண்ணுகிறீர். நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே” (சங் 39:11) என்ற வசனம் அவன் வாழ்க்கையில் நிறைவேறினது.


இயேசுவை அடித்தபடியினால், தன் மிகப் பெரிய தேசாதிபதி என்கிறப தவியையும், பட்டத்தையும் இழந்தான். உங்களுக்கு விரோ -தமாக நியாயத்தில் எழும்புகின்ற யாரையும் பிலாத்துவின் முடிவைப் போலவே அவர்களையும் காணச் செய்வார். நீங்கள், செம்மை -யாய் உண்மையாய் இருந்தால் உங்களுக்கு வருகின்ற எல்லா அடியிலிருந்தும் ஆண்டவர் காப்பாற்றுவார். இயேசுவை அடித்தவர் -களில் இதுவரை நாம் பார்த்த புறஜாதியார், பிரதான ஆசாரியர், பிலாத்து இவர்களைத் தவிர இன்னும் சிலரும் இயேசுவை அடித் துள்ளனர் என்று வேதம் தெளிவாக கூறுகின்றது. அந்த சிலர் யார் யார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


4. "இயேசுவைப் பிடித்துக் கொண்ட மனுஷர் அவரைப் பரியா -சம் பண்ணி, அடித்து" (லூக் 22:63). இயேசுவை பிடிக்க வந் -தவர்களில் பொது மக்களும் சிலர் இருந்துள்ளனர். அவர்களும் இயேசுவை அடித்துள்ளனர்.


5. "தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவை கொண்டுபோய்" (மத்27:27). மெய்காப்பாளன் போன்ற விசேஷ போர்ச்சேவகன் தேசாதிபதிக்கு உண்டு. அவனும் இயேசுவை அடித்தான்.


6. “போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடி வரச் செய்து, அவரை சிரசில் அடித்தார்கள்" (மத் 27:27,30). தேசாதிபதியின் அரண்மனையில் வேலைச் செய்யும் போர்ச்சே -வகர்கள் ஓர் கூட்டமாக இருந்தனர். அத்தனை பேரும் வரவ -ழைக்கப்பட்டு அவர்கள் அனைவராலும் அடிக்கப்பட்டார்.


7. “சமீபத்தில் நின்றசேவகரில் ஒருவன்" (யோவா 18:22,23). பிரதான ஆசாரியனுக்கு அனுஷாரியாகவும், சேவகனாகவும் இருந்த ஒருவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஓங்கி இயே -சுவை அடித்து விட்டான்.


இயேசுவை அடித்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், இயேசுவுக்கு உண்டான அடியைக் குறித்த தீர்க்கத -ரிசனங்கள், இயேசுவின் சரீரத்தில் எங்கெல்லாம் அடித்தார் கள், எந்த பொருட்களைக் கொண்டு அடித்தார்கள்? என்னவெல்லாம் சொல்லி சொல்லி அடித்தார்கள், யார் யார் அடித்தார்கள் போன்ற ஆழமான சத்தியங்களை இதன் மூலமாக உங்களுக்கு வெளிப்படுத்தி தந்த தேவன், உங்களையும் தம்மு டைய கிருபையுள்ள பாத்திரமாக எடுத்துப் பயன்படுத்துவார்.


1. அடிகளைக் குறித்ததான சில வசனங்கள்:--


1. ஏசா 50:6

முதுகில் விழுந்த அடி


2. மத் 10:17

வாரினால் அடித்த அடி


3. மத் 21:35

ஊழியக்காரரை பிடித்து அடிப்பார்கள்


4. மத் 27:30

சிரசிலே (தலையில்) அடித்தனர்


5.மாற்12:5

அடித்துக் கொன்று போடுவார்கள்


6.மாற் 13:9

ஜெப ஆலயங்களில் அடிப்பார்கள்


7. லூக் 12:47

ஊழியக்காரரை அநேக அடிகள் அடிப்பார்கள்


8. லூக் 23:48

மார்பில் அடித்துக் கொண்டு போவார்கள்


9. யோவா 19:3

கையினால் அடித்தார்கள்


இயேசுவையும் சுவிசேஷத்தையும் எப்படித் தனித்தனியே பிரிக்க முடியாதோ, அதேபோல வேதத்தையும் கோலையும் தனித்தனியா. -கப் பிரிக்க முடியாது. முதன் முதலாக யாக்கோபு கோலோடு பிர -யாணத்தை துவங்கினான் (ஆதி 32:10). பின்பு மோசேயின் நாட்களில் அந்த கோல் அற்புதங்களைச் செய்யும் கோலாக மாறி -னது (யாத் 4:17). அதன் பின்பு ஆசாரியனை தெரிந்தெடுக்கும் அற்புதக் கோலாக மாறினது (எண் 17:8). அதே கோல் பின் நாட்களில் துலாக்கோலாக மாறி, பொருட்களயுைம், இடங்களையும் அளக்கும் கருவியாக உருவெடுத்தது (ஏசா 40:12). கோலுக்கு இப்படிப் பல விசேஷங்கள் இருந்தபடியினால் வழிக்கு ஒரு தடி என்கிற கோலை மாத்திரம் எடுத்துக் கொண்டு போங்கள் என்று இயேசு தமது சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் (மாற் 6:8). ஏனெ -ன்றால் இயேசுவை அடிக்கப் பயன்படுத்தின ஆயுதம் எரே 48:17 -ன்படி, ஒரே நேரத்தில் பெலனான தடியாகவும், அலங்காரமான கோலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


பாடுகளின் நாட்களில் இயேசுவைத் தொட்டவைகளில் கோலும் முக்கியமான ஒன்றாகும். கோல் என்பது பார்வைக்கு சாதாரண -மாகக் காணப்பட்டாலும், அதற்குள்ளும் பல இரகசியங்களையும் வெளிப்பாடுகளையும் தேவன் மறைத்து வைத்துள்ளார்.


யாத்4:17-ஐ வாசிக்கும்போது கோல் என்பது அடையாளத்தை குறிக்கும் என்று வேதம் கற்றுக் கொடுக்கின்றது. புதிய ஏற்பாட்டில் உள்ள சம்பவங்கள் பெரும்பாலும் பழைய ஏற்பாட்டின் நிழலாட்டமாகத்தான் எழுதப்பட்டுள்ளது. மோசே கோலைக் கொண்டு கன்மலையை இரண்டு தரம் அடித்தான் (எண் 20:11) என்று எழுதப்பட்டுள்ளது. அதே போல இயேசுவை -யும் ஒரே நேரத்தில் இரண்டு தரம் அடித்திருப்பார்கள் என்று விசு வாசிக்கின்றேன். ஏனென்றால் கன்மலையும் இயேசுவை தான் குறிக்கின்றது.


இயேசுவின் கடைசிக்கட்ட பாடுகளின்போது ஏறத்தால ஐந்துவித -மான கோல்களை சத்துருக்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்ப -டுத்தியுள்ளனர். அது எந்தெந்த கோல் என்றும், அதன் விளக் -கங்கள் என்ன என்பதையும் வேதவசனங்களைக் கொண்டு கவனிப்போம்.


"நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு” (சக 11:7).


g. இயேசுவின் கையில் கொடுத்த கோல்:


இயேசுவை தேசாதிபதியின் அரண்மனைக்குள் கொண்டு சென்று பலவிதத்திலும் துன்புறுத்த ஆரம்பித்தனர். அப்போது அவரை உட்கார வைத்து அவருடைய வலது கரத்தில் ஒரு கோலை கொடுத்தார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த கோல் பரியாசம் பண்ணப்படுதலை குறிக்கின்றதாக இருந்தாலும், அநுக்கிரகத்தை -யும் குறிக்கும். ஏனென்றால், கோலை இயேசுவின் கையில் கொடுத்தார்கள். ஆனால், அதனைக் கொண்டு அவரை அடிக் -கவில்லை. அதுவே பெரிய அநுக்கிரகம்தான்.


அதே சமயம் அவரை பல சமயத்திலும் பரியாசமும் பண்ணினார் -கள். ஆனால், நன்றாக வாசித்துப் பாருங்கள் அந்த பரியாசமும் கூட மரியாதையானதாகத்தான் இருந்தது. அதாவது அதிலும் ஓர் அநுக்கிரகம் காணப்பட்டது.


அவருக்கு முன்பாக முழங்கால் படியிட்டனர்.


இயேசுவை இராஜா என்று சொன்னார்கள். அவர் வாழ்க என்று முழக்கமிட்டனர்.


அநுக்கிரகம் என்பது பொறுமையையும், ஆறுதலையும் குறிக்கின் -றது (ரோம 15:6). இயேசுவின் கையில் கொடுக்கப்பட்ட கோலை அவர் பொறுமையோடு பெற்றுக்கொண்டு அதையே தனக்கு ஆறு -தலாகவும் மாற்றிக் கொண்டார். இதை வாசிக்கும் நமக்கும் கூட இதை போன்ற மகிமையான அனுபவங்கள் வர வேண்டும்.


b.i) மத் 27:29 இயேசுவின் வலதட கையில் கொடுக்கப்பட்ட கோல்:


a. சங் 73:23 வலது கை (எ) தாங்குதல்


ii). இந்த கோல் எப்போது கொடுக்கப்பட்டது?


மத் 27:29 தேசாதிபதியின் அரண்மனையில் இருக்கும் போது

கொடுக்கப்பட்ட கோல்


iii) இந்த கோல் எதைக் குறிக்கின்றது?


மத்27:29 அவரைப் பரியாசம் பண்ணினார்கள்


iv). இது ஏன் நடந்தது?


எசே 20:37 நான் உங்களைக் கோலின் கீழ் செல்லும்படி செய்வேன் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்க்காக


v). இதனால் நமக்கு என்னப் பலன்?


ஏசா 9:4 நுகத்தடியும், மிலாறும் உடைந்து போகும்


I. இயேசுவை அடித்த கோல்:


"அவரை சிரசில் கோலால் அடித்து அவரை வணங்கினார் -கள்" (மாற் 15:19).


இரண்டாவதாக ஒரு கோலைக் கொண்டு இயேசுவை சிரசில் (தலையில்) அடித்தார்கள். இது சகரியா தீர்க்கதரிசி சொன்ன -தைப் போல நிக்கிரகத்தைக் குறிக்கும் கோலாகும். நிக்கிரகம் என்றால் மனஸ்தாபத்தை வெளிப்படுத்துகின்றது (ஆதி 6:7). தேசாதிபதியின் அரண்மனையில் இருந்தவர்களும் கூட இயேசு -வின் மீது மனஸ்தாபத்துடன்தான் காணப்பட்டனர். அதனால் தான் அவர்களால் பரிசுத்தராகிய இயேசுவை அடிக்க முடிந்தது. முகத்தில் துப்ப முடிந்தது. அவரின் வஸ்திரங்களை கழற்றி அவரை நிர்வாணப்படுத்த முடிந்தது. இறுதியாக சிலுவை -யில் அறையவும் முடிந்தது.


ஆனாலும், இயேசு அந்த மனஸ்தாபம் என்னும் நிக்கிரகத்திற்கு ஒப்பான கோலை உடைத்து போட்டார். "நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்” (சக 11:14). அப்ப்டியானால், நாமும் கூட மற்றவர்கள் மேல் வைத்திருக்கும் மனஸ்தாபத்தை முறித்து போட்டால் தான், அவர்களை தண்டிக்க வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற சிந்தனை நமக்குள் வராமல் இருக்கும். அப்பொழுதுதான் கிறிஸ்துவும், கிறிஸ்துவின் ஆவியானவரும் நமக்குள் வாசம் பண்ண முடியும். இந்த உலகத்தையும் நம்மால் ஜெயிக்க முடியும்.


j. i) மீகா 5:1 கன்னத்தில் அடித்தக் கோல்:


a. உன் 1:10 கன்னம் (எ) அழகு


b. மத் 5:39 கன்னத்தில் அடித்தார்கள் (எ) தீமையோடு எதிர்த்து நிற்க்காமல், தீமையைச் சகித்துக் கொள்ளுதல்


ii) நிறைவேறின தீர்க்கதரிசனங்கள்:


1. புல 3:30 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பது


2. யோபு 16:10 நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்


iii) கன்னத்தில் அடித்ததினால் அவருக்கு என்ன நடந்தது? ஏசா 52:14 இயேசுவின் முகப்பார்வை மாறினது. அவருடைய ரூபம் மாறினது. அந்தக்கேடு அடைந்தார். அவரைக்

கண்டவர்கள் பிரமித்தனர்


iv. நமக்கு என்னக் கிடைக்கும்?


வெளி 1:16 அவருடைய முகம் உங்கள்மேல் வல்லமையோ -டும். சூரியனைப் போலவும் பிரகாசிக்கும்.


k. கடற்காளானை மாட்டினகோல்:


"ஈசோப்புத் தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக் கொடுத்தார்கள்" (யோவா19:29).


இந்த கோலைக் குறித்து சற்று விரிவாக பார்த்தால் இதன் பெயருக்குரிய விளக்கம் தெளிவாக தெரிய வரும்.


ஈசோப்பு என்பது தரையில் வளரும் புல் பூண்டு இனத்தைச் சேர்ந்த ஓர் சாதாரண சின்ன சின்ன செடியாகும் [Iஇரா4:33).


அந்த செடிகளை பறித்து ஒன்றாக சேர்த்தால் ஒரு கொத்தாக காணப்படும் (யாத்12:22). அதை சிவப்பு நூலைக் கொண்டு ஒரு தண்டில் (குச்சியில்) கட்டிக் கொண்டு அதை இரத்தத்திலோ அல்லது தண்ணீரிலோ முக்கினால் அவைகளை இந்த ஈசோப்பு என்னும் கொத்து உரிஞ்சு கொண்டு பஞ்சு போல அப்படியே வைத்திருக்கும். இதற்கு பெயர்தான் ஈசோப்புத் தண்டு.


இந்த ஈசோப்பு தண்டை பழைய ஏற்பாட்டில் சுத்திகரிப்புக்

-காகவும் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் தாகத்தைக் தீர்க்கவும்

பயன்படுத்தினார்கள். (எண்19:18, எபி9:19, யோவா 19:29).


உறைந்த மழையைப் போல மாறுமளவுக்கு என்னை சுத்திகரி -யும் என்று சங்கீதக்காரனைப் போல ஊக்கமாக ஜெபியுங்கள். அப்பொழுது ஈசோப்பினாலும், ஈசோப்பின் தண்டினாலும் ஆண்ட -வர் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவார். நீங்களும் பரிசுத்தமாவீர்கள்.


1. மத் 27:48 கடற்காளானை மாட்டின கோல்: a. ஈசோப்புத்தண்டு எதினால் செய்யப்பட்டது?


லேவி 14:4

 (i) கேதுரு மரக்கட்டையினாலும்

 (ii) சிவப்பு நூலினாலும் செய்யப்பட்டது


b. ஈசோப்புத்தண்டு எதற்கு அடையாளமானது? லேவி 14:49 தோஷம் (சாபம்) நீங்குவதற்கு அடையாளமானது


C. ஈசோப்புத்தண்டை எத்தனை முறைபயன்படுத்த வேண்டும்? லேவி 14:51 ஏழுதரம் பயன்படுத்த வேண்டும்


d. ஈசோப்புத் தண்டு எந்தவித சாபத்தை நீக்கக் கூடியது? எண் 19:18 லேவி 14:51 } வீட்டில் இருக்கும் சாபத்தை நீக்கக் கூடியது

ஈசோப்புத் தண்டு யாரை சுத்தம் பண்ணினது? சங் 51:7தாவீது வெண்மையான மழையைப் போலானான் 


f. ஈசோப்புத்தண்டு என்னும் கோலால் நமக்கு என்ன லாபம்?


சங் 51:8 

i. சந்தோஷம் கிடைக்கும்

ii. மகிழ்ச்சி கிடைக்கும்

iii. களிகூறுதல் கிடைக்கும்

M. தடி என்ற கோல்:


"நீங்கள் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே" (லூக் 22:52).


தடி என்பது நாய் பிடிக்கிறவர்களை அல்லது நாயை விரட்டு -தலைக் குறிக்கும். [சாமு17:43 வாசிக்கும் போது, கோலியாத் தாவீதை பார்த்து கேட்கிறான். நீ தடியோடு கூட என்னிடத்தில் வர நான் என்ன நாயா என்று கேட்டான்.


ஆம், இதை போலதான், இயேசுவை காட்டி கொடுத்து அவ -ரை பிடித்து கொடுக்க நினைத்த யூதாஸ், தன்னோடு வந்தவர் -களின் கையில் தடியை கொடுத்து அழைத்து வந்தான்.


ஆனால், அவர்களை பார்த்தோ, அவர்களின் கையில் இருந்த தடியை பார்த்தோ இயேசு பயப்படவே இல்லை. அதற்கு பதிலாக அவர்களைப் பார்த்து ஆச்சரியப்படத்தான் செய்தார்.


இந்த சம்பவம் நமக்கு ஓர் பாடத்தை கற்றுக் கொடுக்கின்றது. உங்களை யாராவது நாய் என்றோ, அதைவிட கேவலமாகவோ பேசினால் நீங்கள் மனம் தளர வேண்டாம். தாவீதோடு கூட இருந்த தேவன் உங்களோடும் இருக்கின்றார்.


சங்கீத காரணாகிய தாவீது சொல்வதைப் போல, உம்முடைய கோலும், தடியும் என்னைத் தேற்றும் என்று அறிக்கையிட்டுப் பாருங்கள். எல்லா எதிர்ப்புகளும் மறைந்து விடும். தேவனுடைய மகிமயினாலே நீங்கள் தேற்றப்படுவீர்கள். பரிசுத்த ஆவியானவ -ரின் தேற்றுதல் உங்களோடு கூட இருக்கும்.


N. j) மத் 26:47 தடி என்ற கோல்:


வி.ம்: ஏசா 10:15 தடி (எ) மிரட்டுதல் மாற் 14:43 இயேசுவைப் பிடிக்க தடிகளைக் கொண்டு

வந்தனர்


உ.ம்: மத் 26:55 தடி படடயத்திற்குச் சமமானது எண் 22:27 தடி (எ) அடிப்பது


 மாற் 6:8 ஒரு தடியையும் எடுத்துக் கொண்டுப் போங்கள் என்று இயேசு சொன்னத் தீர்க்கதரிசனம் அப்ப -டியே நிறைவேறினது


ii. மத் 27:30 சிரசில் அடித்தக் கோல்:


a. வி.ம்: நீதி 1:9 சிரசு (எ) அலங்காரம்


b. 2சாமு 3:29 கோல் (எ) சாபம். கோலினால், இயேசுவின் தலையில் அடிக்கப்பட்டதால் நம்முடைய சாபங்கள் அனைத்தும் அவர் தலையில் இறங்கினது


C. தீ.த: யோபு 19:9 என்னிலிருந்த என் மகிமையை அவர்


உரிந்து கொண்டு என் சிரசின் கிரீடத்தை எடுத்துப் போட்டார் என்றதீர்க்கதரிசனம் இதன் மூலம் நிறைவேறினது


iii. இயேசுவுக்கு கிடைத்த பலன் என்ன?


1. சங் 21:3 இயேசுவின் தலையில் பொற்கிரீடம்


தரிப்பிக்கப்படும் 2.தானி 7:9 அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும்,

பஞ்சைப்போல துப்புரவாகவும் மாறினது


iv. நமக்கு என்ன பலன்?


சக 3:5 தேவதூதர்களால் நமக்கு சுத்தமான பாகையும், சுத் -தமான வஸ்திரங்களும் தரிப்பிக்கப்படும்


0. புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சில கோல்கள்:


a. வெளி 11:1

கைக்கோல்


b.எபி 11:21

யாக்கோபு சாய்ந்த கோல்


C. வெளி 21:15

பொற்கோல்


d. லூக் 11:52

அறிவாகிய திறவுகோல்


e. வெளி 7:2

முத்திரைக் கோல்


f.மத் 16:19

பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்


g. எபி 1:8

ராஜ்யத்தின் செங்கோல்


h. வெளி 1:18

பாதாளத்தின் திறவுகோல்


i. வெளி 9:1

பாதாளக் குழியின் திறவுகோல்


j.வெளி 21:16

அளக்கும் கோல்


k. வெளி 3:7

தாவீதின் திறவுகோல்


p. ஏசா. 9:4 இயேசுவைத் தொட்ட கோல்கள் நம்மேல் இருக்கும்:-- 


மூன்று கோல்கள் இயேசுவைத் 

தொட்டது;


1. இயேசுவின் கையில் கொடுத்த கோல்:


இந்த கோல் எப்போது கொடுக்கப்பட்டது?


மத் 27:27-29 தேசாதிபதியின் அரண்மனையில் இருக்கும்

போது கொடுத்த கோல்


இந்த கோல் எதைக் குறிக்கின்றது?


மத் 27:31 அவரைப் பரியாசம் பண்ணினார்கள் இது ஏன் நடந்தது?


லூக் 18:32 தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காக நடந்தது. இதனால் நமக்கு என்ன பலன்? ஏசா 9:4 நுகத்தடியும், மிலாறும் உடைந்து போகும்.


2. மாற் 15:19 இயேசுவை அடித்த கோல்:


கோலால் எங்கெல்லாம் அடித்தார்கள்?


 i. மத் 27:30 தலையில் அடித்தார்கள்

ii. மீகா 5:1 கன்னத்தில் அடித்தார்கள்


தலை என்றால் என்ன?


நீதி 11:26 தலையின் மேல் ஆசீர்வாதம் தங்கும் கன்னம் என்றால் என்ன?


உன் 5:13 கன்னம் புஷ்பத்ததைப் போன்றதாகும் அடித்ததினால் அவருக்கு என்ன நடந்தது?


ஏசா 52:14 மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார் -வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே,

அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.


நமக்கு என்ன பலன்?


வெளி 1:16 அவருடைய முகம் உங்கள்மேல் வல்லமையோடு சூரியனைப்போல் பிரகாசிக்கும்.


3.யோவா 19:29 ஈசோப்புத்தண்டு என்ற கோல்: ஈசோப்புத்தண்டு எதினால் செய்யப்பட்டது?


லேவி 14:4


 i. கேதுருமரக் கட்டையினாலும்


ii. சிவப்பு நூலினாலும் செய்யப்பட்டது


ஈசோப்புத்தண்டு எதற்கு அடையாளமானது? லேவி 14:49 தோஷம் (சாபம்) நீங்குவதற்கு அடையாளமானது.


ஈசோப்புத்தண்டு எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்?


லேவி 14:51 ஏழுதரம் பயன்படுத்த வேண்டும்


ஈசோப்புத்தண்டு எந்த சாபத்தை நீக்கக் கூடியது? GTGCOT 19:18 வீட்டில் இருக்கும் சாபத்தை லேவி 14:51 நீக்கக் கூடியது


ஈசோப்புத்தண்டு யார் பயன்படுத்த வேண்டும்? எண் 19:18 சுத்தமானவர்கள் பயன்படுத்த வேண்டும் ஈசோப்புத்தண்டு யாரை சுத்தம் பண்ணினது?


சங் 51:7 தாவீது வெண்மையான மழையைப் போலானான் நமக்கு என்ன பலன்?


சங் 51:8 


1. சந்தோஷம் கிடைக்கும்

ii. மகிழ்ச்சி கிடைக்கும்

iii. களிகூறுதல் கிடைக்கும்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.