சிலுவையின் வரலாறு பாகம் - 14 : பலகையும் இயசுவை அடித்த வாரும்

 



சிலுவையின் வரலாறு பாகம் - 14 : பலகையும் இயசுவை அடித்த வாரும் 

சிலுவையின் பலகை

“இவன் யூதருடை ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது” (லூக் 23:38).


இயேசுவின் மகா வேதனையின் நேரத்தின் போது “அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி சிலுவையின் மேல் கட்டினார்கள்" (மாற்15:26). இந்த வார்த்தைகளை கண்டிப்பாக பலகையில்தான் எழுதி மாட்டியிருப்பார்கள். காரணம், ஆசாரிய -னாகிய சகரியாவின் நாட்களில் அதாவது இயேசு கிறிஸ்து -வின் பிறப்பின் நாட்களில் எழுதுவதற்காக பலகையைத்தான் பயன்படுத்தியுள்ளனர் (லூக் 1:63). இதுதான் இயேசுவின் மர -ணத்தின் நேரத்திலும் நடந்துள்ளது.


இயேசு யூதர்களின் இராஜா என்ற வார்த்தையை கிரேக்கு, இலத்தீன், எபிரெயு ஆகிய மூன்று மொழியில் எழுதியுள்ளனர். அதே சமயம் இந்த வார்த்தை நான்கு சுவிஷேங்களிலும் நான்கு விதமாக எழுதப்பட்டுள்ளது. இவைகளை பிலாத்து தன் கைபட எழுதியுள்ளான் (யோவா19:19) என்று வேதமே சாட்சி கொடுக்கின்றது.


பலகையை சிலுவையின் மீது கயிற்றினால் கட்டினார்களா அல்லது ஆணியால் அடித்ததார்களா? என்கின்ற சந்தேகம் சிலருக்கு வருவதுண்டு. "சிலுவையின் மீது கட்டினார்கள்" (மாற்15:26) என்று வேதம் அற்புதமான பதிலை தருகின்றது.


கட்டினார்களா, அடித்தார்களா என்பதை விட, இயேசுவை ராஜா என்று சொல்லி கனத்துக்குரிய வார்த்தையை அதில் எழுதினார் -கள் பாருங்கள் அதுதான் முக்கியம்.


இந்த பலகை எதைக் குறிக்கிறதோ என்று சொல்லி சிலர் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இந்த பலகை அவருடைய ஆக் -கினையை அதாவது தண்டனையை குறிக்கின்றது. இந்த பலகையை இயேசுவின் சிலுவையின் மீது கட்ட முயற்சிக்கும் போது நிச்சயமாக இந்த பலகை இயேசுவின் சரீரத்தின் எந்த பகுதியையாவது நிச்சயம் தொட்டிருக்கும்.


இந்த பலகை இயேசுவின் சரீரத்தை ஏதோ ஒரு வகையில் தொட்டு விட்டபடியினால் தான் அதற்கும் கனம் வந்தது. அதா -வது, இயேசு சிலுவையில் கீழே தொங்கி கொண்டிருக்க இந்த பலகையோ இயேசுவின் தலைக்கு மேலே ஆடிக் கொண்டிருந் -தது. இதுவே பலகைக்குக் கிடைத்த ஒரு பெரிய கணம்தான்.


பெரும்பாலும் மரணத்தண்டனை குற்றவாளிகளின் கழுத்தில் ஒரு பலகையைத் தொங்க விடுவார்கள். அதில், இவர் என்ன குற்றத்திற்க்காக மரண தண்டனை அடைகிறார் என்ற காரணத்தை எழுதியிருப்பார்கள். ஆனால், நமது இரட்சககர் இயேசுவுக்கோ சிலுவையில் அறைந்த பின்தான் தண்டனையின் காரணம் பிலாத்துவினால் எழுதி தரப்பட்டது. அதனால் இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு (மத் 27:37) என்று, இயேசு -வின் தலைக்கு மேல் இருந்த பலகையில் எழுதி வைத்தனர்.


நாம் ஆக்கினை என்கிற தண்டனையை அடைய கூடாது என்பதற்க்காக சிலுவையில் தொங்கின இயேசுவானவர் உங்கள் ஆக்கினை மற்றும் தண்டனையிலிருந்து உங்களை காப்பார்.


“ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்ச்சிக்கும்படி, அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்" (சங்109:31) என்ற வேத வாக்கியத்தின்படி, உங்கள் வலது பாரிசத்தில் நிற்பார். எல்லா துன்பத்திற்கும் விலக்கி தப்பு -விப்பார். நீங்கள் சாட்சி சொல்லுவீர்கள்.


பலகையில் ஆங்கிலத்தில் சுறுக்கமாக எழுதப்பட்டுள்ள INRI எழுத்துக்களின் முழு வார்த்தையை கீழே காணலாம்:


I - IESUS

N - NAZARINE

R -REXO

I -IDONEUS


இந்த வார்த்தைகளின் பொருள்:- “நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா".


நான்கு சுவிசேஷத்திலும் நான்கு விதமாக எழுதப்பட்டுள்ள ஒரே கருத்துடைய வார்த்தைகள்:


1. மத் 27:37

இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு


2. மாற் 15:26 

யூதருடைய ராஜா


3. லூக் 23:38

இவன் யூதருடைய ராஜா


4. யோவா 19:19

நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா


இயசுவை அடித்த வார் :


"அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்” (யோவா19:1).


தமிழில் இரண்டு எழுத்துக்களை மட்டும் உடைய சிறிய வார்த் -தையை உடைய வார் இயேசுவின் சரீரத்தில் ஏற்படுத்திய பெரிய காயங்கள் ஏராளம், ஏராளம்.


வார் அல்லது சாட்டை என்றாலே கொலை என்று அர்த்தமாகும் (லூக்18:33). ஒரு குற்றவாளியை பிடித்தால் கொலை செய்யும் எண்ணத்துடன்தான் வாரினால் அடிப்பார்களாம்.


இயேசுவை அடித்த சாட்டை என்னும் வாரின் அடிப்பகுதியில் ஓர் மரத்தினாலான கைபிடி ஒன்று இணைத்திருக்கும். அதில் ஒன்பது வார் (சாட்டை)கள் இணைத்திருக்கும். ஒன்பது வாரும் சுத்தமான தோலினால் உருவாக்கப்பட்ட கடினமான வாராக இருக்கும்.


சில வார்களின் இடை இடையே கூர்மையாக்கப்பட்ட எழும்புத் துண்டுகள் இணைந்திருக்கும். மற்றசில வார்களில் இரும்பி -னால் செய்யப்பட்ட குண்டுகள் (உருளைகள்) தொங்கவிடப்பட்டி -ருக்கும். எவ்வளவு பயங்கரமான ஆயுதம் பாருங்கள்.


இப்படிப்பட்ட கொஞரமான வாரைக் கொண்டு இயேசுவை அடித்ததினால் அவருடைய உடல் முழுவதும் ஏறத்தாழ 5480 காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், முதுகில் மட்டும் ஏறத்தாழ 150 ஆழமான தழும்புகள் உண்டானதாகவும் சரித்திரம் சொல்கின் -றது. இப்படிப்பட்ட கொஞரமான காயங்களையும், தழும்புகளை -யும் தன் முதுகின் மேல் ஏற்றுக்கொண்டு சிலுவையுைம் சுமந்து சென்றார் என்பதை நினைக்கும்போதே மனம் வலிக்கிறது. அப்ப -டியானால் எழும்புத் துண்டுகளும், இரும்புக் குண்டுகளும் இணைக்கப்பட்ட வாரினால் அடிக்கப்பட்ட இயேசு எவ்வளவு துடித் -திருப்பார் என்பதை சிந்தித்து பாருங்கள்.


இந்த கடைசி காலத்தில் வாழும் நாம் இப்போது இருக்கும் இந்த நிலைமையை நினைத்து நினைத்து ஆண்டவரைத் துதிக்க வேண்டும். இயேசுவை அடித்த வாரையும், அதனால் உண்டான காயங்களையும் நினைத்து பார்க்கும் யாருமே பாவம் செய்ய மாட்டார்கள்.


இந்த செய்தியை வாசிக்கும் சகோதர சகோதரிகளே ஆண்ட -வர் இயேசுவுக்காகவும், அவரால் அருளப்பட்ட சத்தியத்திற்க்கா -கவும் பாடுகளை சந்திக்க நீங்கள் ஆயத்தமா என்று உங்களை நீங்ளே சிந்தித்துப் பாருங்கள் 


இனிவரும் காலங்கள் பாடுகளும் உபத்திரவங்களும் நிறைந்த காலம். இயேசுவைப் போல பாடு அனுபவிக்க தன்னையே தந்த -வர்கள் மட்டுமே கிறிஸ்துவுக்காக வாழ முடியும். பரலோகத்தை அடைய முடியும்.


"அவரோடே கூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம்” [I]த்மோ2:12) என்ற மகிமையான வசனத்தின்படியே பாடுகளை சகிக்க ஒப்புக் கொடுக்கின்ற உங்களை சீக்கிரமாக தேவ இராஜ்யத்தில் ஆளுகை செய்யும் அதிகாரத்தில் வைப்பாராக.


a. வாரும் குரிப்புகளும்: 


1. இயேசுவின் முதுகில் ஏறத்தால 10 ஆழமான சாட்டையின் கீரல்கள் இருந்துள்ளன.


2. எலும்புத்துண்டுகளையும், இரும்புக் குண்டுகளையும் இரும் -பினாலான கொக்கிகளையும், இடையிடையே பின்னப்பட்டிருந்த சவுக்கினால் இயேசுவை அடித்திருந்தனர். அந்த அடிகளினால் இயேசுவின் சரீரத்தின் சதைகளெல்லாம் பிய்ந்து, ஆங்காங்கே தொங்கியது. அந்த நிலைமையிலும் துரிதமாய் நடக்க வேண்டு -மென்று கட்டாயப்படுத்தி, அந்த சூழ்நிலையிலும், சவுக்குகளி-னாலும், தழகளினாலும் தாக்கப்பட்டார்.


3. ரோமர்களுடைய சவுக்கின் நுனி ஒன்பது பிரிவுகளாக இருக்கும். ஒவ்வொரு எலும்புத் துண்டாக ஒன்பது எலும்புத் துண்டுகளும், அனைத்து எலும்புத் துண்டிலும் ஒரு இரும்புக் கொக்கியும்


4. சில இடங்களில் தோலும் மாமிசமும் பிய்க்கப்படும். அதனால் மிக அதிகமான வேதனை உண்டாவதுடன், அதிக அளவு இரத்த -மும் வெளியேறும்.


5. யூதருடைய தண்டடனைக் கணக்குப்படி 40 அடிகளும், ரோமருடைய கணக்குப்படி 80 அடிகளும் அடிப்பார்கள். பிலாத்து உத்தரவின் காரணமாக ரோமக் கணக்குப்படி அந்த கொடூரமான சவுக்கினால் 80 அடிகள் அடிக்கப்பட்டிருக்க வேண்டும்.


6. யூதர்கள் சில சமயங்களில் 40 அடிகள் அடிக்கும் தண்ட -னையை உத்தரவாகப் பெற்று, 39 அடிகள் அடித்துவிட்டு, நிறுத்தி சற்று ஓய்வெடுப்பார்கள். திரும்ப அடிக்கும்போது மீண்டும் ஒன்று, இரண்டு, என்று எண்ணத் துவங்குவார்கள். போர்ச் -சேவகர் கூட்டம் முழுவதும் கூடி வந்து வாரினால் அடித்தபோது இயேசுவின் முதுகு உழுது போடப்படும் படைச்சால்களைப்போல் ஆனது (சங் 129:3).


மூன்று காரணங்களுகக்காக வாரினால் அடித்தனர்.


1. மாற் 15:15 ஜனங்களைப் பிரியப்படுத்த 


2. மத் 27:26 சிலுவையில் அறைவதற்காக


3. லூக் 18:33 கொலை செய்வதற்க்காக


இயேசுவை யார் யார் வாரினால் அடித்தனர்?


 1. மத் 27:27 போர்ச்சேவகரின் கூட்டம் முழுதும்


2. யோவா 19:1 பிலாத்தவும் வாரினால் அடித்தான்


3. லூக் 22:63 மனிதர்களும் இயேசுவை வாரினால் அடித்தனர்


வாரினால் அடிப்பது எனதக் குறிக்கின்றது? 


மாற் 10:33 மரண (தண்டனை) ஆக்கினையைக் குறிக்கின்றது


நமக்கு என்ன பலன்? 


யோவா 3:17 அவருடைய ஆக்கினையினால் நமக்கு

இரட்சிப்பு கிடைக்கிறது


b. உவமையின் வார்கள் சில:


1. மத் 10:17

: தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட வார்


2. மத் 23:34

: ஆலயத்தில் வைத்து அடிக்கும் வார்


3. மாற் 10:34

: பரியாசம் பண்ணி அடிக்கும் வார்


4. மாற் 15:15

: ஜனங்களின் பிரியத்துக்காக அடிக்கும் வார்


5.லூக் 18:33

: அடித்து கொலை செய்யும் வார்


6. யோவா 19:1

: பிலாத்து இயேசுவை அடித்த வார்


7. அப் 22:25

: அழுந்த கட்டும் வார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.