சிலுவையின் வரலாறு பாகம் - 13 : முள்முடி, ஆணி
இயேசுவின் முள்முடி :
"இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார்” (யோவா19:5)
இயேசுவின் தலை என்று சொன்னாலே, அவருக்கு முள்ளு -களால் சூட்டப்பட்ட முள்முடி என்கிற முட்கிரீடம்தான் நினைவுக்கு வரும். முள்ளுகள் என்ற வார்த்தைக்கு கவலைகள், ஐசுவரி -யம், சிற்றின்பம், நெருக்கம் என்ற நான்கு அர்த்தங்கள் உண்டு (லூக் 8:14). ஆனால், ஆண்டவர் இயேசுவிடம் கவலை, ஐசுவ -ரியம், சிற்றின்பம் என்ற மூன்றுமே இல்லாவிட்டாலும் அவர் முட்களைப் போல நெருக்கப்பட்டார் என்பதில் சந்தேகமே இல்லை.
முடி என்ற வார்த்தைக்கு கிரீடம் என்ற சொல்லும் உண்டு. இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட முள்ளுகளின் அளவு ஏறத் -தால இரண்டு முதல் மூன்று இஞ்சு உள்ளதாக இருந்தது. அந்த முள்ளு செடியின் பெயர் “லோகஸ்ட்ரீ" என்பதாகும். லோகஸ்ட்ரீ என்றால் வெட்டுக்கிளி மரம் என்று அர்த்தமாகும். இந்த மரத்தின் முட்கள் ஒவ்வொன்றும் மிகவும் கூர்மையானதா -கவும் உறுதியானதாகவும் இருந்தது.
இப்படிப்பட்ட மிகக் கொடூரமும், விஷமும் நிறைந்த முட்க ளைக் கொண்டு செய்யப்பட்ட முள் முடியை இயேசுவின் தலை யில் வைத்து அழுத்தினதுமல்லாமல் கோலைக் கொண்டு அடிக்கவும் செய்தார்கள் (மத்27:30).
அதனால் 17 முட்கள் இயேசுவின் தலையை கிழித்துக் கொண்டு உள்ளே இறங்கினதாக சரித்திரம் சொல்கின்றது. முள்முடி சூட்டின -தால் முகமும் தலையும் அடைந்த மாற்றத்தைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தெளிவாக சொல்லியுள்ளார்.
கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ ஜனமே, காகத்தை போல கருமையான முடியைக் கொண்ட இயேசுவின் தலையும், தலை முடியும் சிகப்பு என்னும் நிறத்தினால் ஆன இரத்தத்தினால் கரை படிந்தது. யூதர்களின் இராஜவாய் முடி சூட்டப்பட வேண்டி -யவர், முழு உலகத்தின் கிருபாதர பலியாகும்படி முட்கிரிடத்தை சூட்டிக் கொண்டார்.
சங் 131:1 சொல்வது போல தலையில் உண்டாகும் இருமாப்பு, மேட்டிமை, மிஞ்சின கருமங்கள் போன்ற போராட்டங்களில் இருந்து விடுவிப்பதற்க்காகவே இயேசுவின் தலையை முள்முடி தொட்டது. நீங்கள் எது போன்ற பிரச்சனையில் அகப்பட்டுக் கொண்டு அதிலி -ருந்து விடுதலை ஆக முடியாத சூழ்நிலையில் தவிக்கலாம்.
"மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்ச வேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம் பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படா -மலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு;" (எசே2:6) என்ற வாக்குத்தத்த வசனத்தின்படி எதைக்குறித்தும் கவலைப் படாதீர்கள். உங்கள் தலையில் உண்டாகும் கவலைகள் -அனைத்தையும் இயேசு தமது தலையில் சுமந்து தீர்த்தார்.
இயேசுவின் தலையைத் தொட்டவைகளில் முள்ளுக்கு மிகப் -பெரிய பங்கு உண்டு. முள் என்பது கூறிய முனை உடையது. முள்ளின் முன்பகுதி மெலிந்தது, நீளமானது. ஆனால், உறுதி -யானது. மனிதனுக்கு காலத்தைக் காட்டும் கடிகாரத்தில் இருப் -பது இரண்டு கூர்மையான முள்ளுகள்தான். சில வகை பூ, மற்றும் செடிகளில் இவை தற்காப்புக்காகவும் படைக்கப்பட்டுள் -ளது. வேதாகமத்தில் முள் என்ற வார்த்தை முதன்முதலில் ஆதி 3:18-ல் முள்ளும் குறுக்கும் என்று ஆரம்பித்து, கடைசியாக அப் 26:14-ல் முள்ளில் உதைக்கிறது என்ற வார்த்தையோடு முடி -கிறது. இவ்விதமாய் ஏறத்தால 18 ஆகமங்கள் முள்ளைக் குறித்துப் பேசுகின்றது. முள்ளுகளோடு ஒப்பிடப்பட்டுள் லீலி புஷ்பத்தைக் குறித்து முழு வேதத்திலும் ஏறத்தால 12 முறை சொல்லப்பட்டுள்ளது.
I. மாற் 15:17 முள்முடியைச் சூட்டினார்கள்:
சங் 103:4 முடியைச் சூட்டினார்கள் (எ) கிருபையும், இரக்கமும் நிறைந்தது என்று பொருள்
உன்ன 3:11 இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதும் முடியோ -டிருக்கிற அவரைப் பாருங்கள் என்ற தீர்க்கதரிசன வார்த்தை இதன் மூலம் நிறைவேறினது
மறுரூபம்: உன்ன 2:2,3 முள்முடியால் இயேசு சூட்டப்பட்டதால் அவர் லீலி புஷ்பத்தைப் போல மறுரூபம் அடைந்தார் என்பதில் எவ்வளவும் சந்தேகமில்லை
II. யோவா 19:2,3 முள்மடியை தலையில் வைத்து அடித்தார்கள்:
இயேசுவின் தலையில் முள்முடியை வைத்து அடித்ததினால்
a. எண் 33:55 முள்ளு கண்களுக்குள் குத்தியிருக்கும்
b. எசே 28:24 மூளையையும், கண்ணின் இமைகளையும் தைத்திருக்கும்
C. எசே 2:6 தேள் கொட்டினதைப் போல வலித்திருக்கும்
(உ.ம்: நீதி 26:9 முள்முடியைப் பின்னினவர்களும், சூட்டிவிட்டவர்களும் வெறியர்கள்
பலன்: வெளி 19:12 முள்முடியை பொறுமையோடு ஏற்றுக் கொண்டதால், அவருடைய தலையில் பிதாவாகிய தேவன்
அநகே கிரீடங்களை சூட்டி மகிழ்ந்தார்
1. இயேசுவின் தலையில் 17 முட்கள் குத்தியிருந்தன.
2. அவருடைய தலையைக் கிழித்துக் கொண்டு ஏறத்தால
19 முட்கள் உள்ளே சென்றன.
3. ஒருவித முட்கள் நிறைந்த கொடியை வளையமாகப் பின்னி, கிரீடம் போல செய்து, இயேசுவின் தலையில் வைத்து, ஒரு கோலால் அடித்து, அதை தலையிலே இறுக்கமாக்கி வைத்தார்கள் (யோவா 19:1). இஸ்ரவேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிளில் காணப்படும் அந்த முட்கள் ஏறத்தால ஒன்று அல்லது ஒன்றரை அங்குல நீளமாக இருக்கும்.
III. முள்முடியைக் குறித்து உவமையாய் சொல்லப்பட்ட சில
வசனங்கள்:--
1. மத் 27:29 : முள்ளுகளால் ஆன முடி
2. யோவா 19:2 : பின்னின முள் முடி
3. மாற் 15:17 : சூட்டின முள் முடி
4. 11கொரி 12:7 : மாம்சம் என்னும் முள்
5.உன்ன 2:2 லீலி புஷ்பமாய் மாறும் முள்
IV.. புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சில முள்ளுகள்:
a. மத் 13:7 வளர்ந்து நெருக்கும் முள்
b. மத் 13:22 வசனத்தை நெருக்கும் முள்
C. மத் 27:29 பின்னப்பட்ட முள்
d. மாற் 4:7 வளர்ந்த முள்
e. மாற் 4:18,19 பலனனற்ற மனிதர்களாகிய முள்
f. லூக் 8:14 விதைக்கப்பட்ட முள்
g. யோவா 19:2 சிரசில் வைக்கப்பட்ட முள்
h.சங் 118:12 நெருப்புப் போன்ற முள்
i. அப் 9:5 கடினமான முள்
jஅப் 26:14 எபிரேயு பாஷையில் சொல்லப்பட்ட முள்
V. முள்ளோடு இணைத்து உவமையாகச் சொல்லப்பட்டுள்ள சில:
1. சங் 118:12 முள்ளு - நெருப்பு 1.
2. அப் 9:5 முள்ளு - கடினம்
3. அப் 26:14 முள்ளு - உதைத்தல்
4. எண் 33:55 முள்ளு - கண்கள்
5. நியா 8:7 முள்ளு - வனாந்தரம்
6.நியா 8:16 முள்ளு நெரிஞ்சில்கள்
7.யோபு 31:40 முள்ளு - கோதுமை
8.நீதி 24:31 முள்ளு காடு
9. நீதி 26:9 முள்ளு - பழமொழி
10. பிர 7:6 முள்ளு படபடப்பு
11. உன்ன 2:2 முள்ளு லீலிபுஷ்பம்
12. எரே 4:3 முள்ளு விதை
13. எசே 28:24 முள்ளு - தைத்தல்
14. ஓசி 2:6 முள்ளு -அடைப்பு
15. மத் 27:29 முள்ளு - முடி (கிரீடம்)
சிலுவையில் ஆணிகள் :
“அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள்” (அப் 2:23).
இயேசுவை தொட்ட பொருட்களில், ஆணிஎன்றஇரும்பு கைகளை யும், கால்களையும் உருவ குத்தி குடைந்து சென்றது என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால், அந்த ஆணிகளை இயேசுவின் கைகளில் ஓங்கி அடித்து அறைந்த மனிதர்கள் எவ்வளவு கொடியயவர்களாக இருந்திருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
a. முக்கிய குறிப்புகள்:
இயேசுவை சிலுவையில் அறைந்த ஆணிகளைக் குறித்த மிக முக்கியமான சில குறிப்புகளை இப்போது காண்போம்.
ஆணி என்றால் உறுதி (அ)கடாவுதல் என்று பொருள் (ஏசா 22:23). கடாவுதல் என்றால் உயர்வை குறிக்கும். ரோதை என்ற சிறு பெண் உறுதியாய் இருந்தாள் அவளுடைய பெயர் வேதத்தில் இடம் பிடித்தது (அப்12:13,15). நாமும் கூட ஆணியை போல எப்போதும், எல்லாவற்றிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
இயேசுவை சிலுவையில் அடித்த ஆணி முழுக்க முழுக்க இரும்பினால் செய்யப்பட்டதாக இருந்தது. இந்நாட்களில் நாம் கடைகளில் வாங்கும் ஆணியைப்போல் வழவழப்பாகவும் அழகாகவும் அந்நாட்களில் இருந்திருக்காது. துரு பிடித்ததும், சொறசொறப்பாகவும், கரடு முரடாகவும் தான் இருந்திருக்கும்.
நாம் வாங்குகிற ஆணியின் மேல் கொண்டை பகுதி வட்டமாக இருக்கிறதை பார்த்திருப்பீர்கள். ஆனால், இயேசுவை அடித்த ஆணியின் மேல் கொண்டை பகுதி நான்கு பக்கங்களைக் கொண்ட சதுரமாக இருந்துள்ளதாக ஆதாரங்கள் உள்ளது ஒவ்வொரு ஆணியும் ஏழு முதல் எட்டு இஞ்ச் அளவுக்கு நீளமா -னதாக இருந்துள்ளது. அந்நாட்களில் ஆணிகளில் இரண்டு வித ஆணிகள் காணப்பட்டது.
ஒன்று: வழக்கமான ஆணிகளைப் போல கூர்மையாகவும் நீள மானதாகவும் இருக்கும். இரண்டு: கொக்கி போல வளைந்த ஆணிகள். அதாவது, இது மனிதர்களை அரைவதற்காகவே இருந்தது. சிலுவையில் மனிதர்களை அறைந்ததும் அந்த ஆணியின் பின் பக்கத்தை வளைத்து விடுவார்கள். அந்த அள -வுக்கு அது வளைந்தும், கொக்கி போலவும் மாறக் கூடியது.
இயேசுவை பிடித்து சிலுவையில் அறையும் போது அவரு டைய உள்ளங்கைகளில் ஆணி அடித்திருக்க முடியாது என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏனென்றால், மருத் -துவ ஆராய்ச்சியின்படி உள்ளங்கைகளில் ஆணி ஆடித்து அவரை தொங்க விட்டால், பாரம் தாங்காமல் போயிருக்கும் என்கின்றனர். ஆதலால், உள்ளங்கைகளுக்கு பதிலாக கீழ் பகுதியில் அதாவது மணிக்கட்டு பகுதியில் ஆணி அடித்திருப்பார் -கள். அதுதான் உறுதியாய் இருந்திருக்கும் என்கின்றனர்.
ஆக, எது எப்படியோ, இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைந்தது உண்மையிலும் உண்மை. அதற்கு ஆதாரம் வேதத்தி -லும் காணப்படுகின்றது (அப் 2:23; யோவா20:25). வேதமும், வேதத்தில் உள்ள ஆதாரமும் தான் நமக்கு முக்கியம், அதுதான் சத்தியம், அந்த சத்தியம்தான் இந்த உலகத்தின் ஒளி. ஆகவே, நாமும் ஆணியைப் போல உறுதியாகவும், வெளிச்சமாகவும் மாறுவோம்.
புதிய ஏற்பாட்டில் மூன்று முறைமட்டுமே ஆணியை குறித்து சொல்லப்பட்டுள்ளது. இது, இயேசுவை சிலுவையில் சுமந்த மூன்றாணிகளுக்கு ஒப்பானது. அவைகளைக் குறித்து பார்ப்போம்.
1. அக்கிரமத்தின் ஆணி:
அப் 2:23 அக்கிரமத்தின் ஆணி என்றால் கொலை என்று அர்த்தமாகும். இந்த வசனத்திலிருந்து இரண்டு காரியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். முதலாவது: இயேசுவை ஆணிக -ளால் அறைந்தது, ஆசாரியர்களோ, மூப்பர்களோ அல்ல, அக் -கிரமக்காரர்கள்தான் ஆணியடித்துள்ளனர். இரண்டாவதாக: கொலை கொய்யும் நோக்கத்தோடு ஆணியடித்துள்ளனர். கொலையில் பலவிதமான கொலைகள் உண்டு. ஆனால், இந்த -விதமாக ஆணிகளால் அறைந்து கொல்வது மிக மிக கொடூர -மான, ஈவு இரக்கமற்ற மிருகத்தனமான கொலை.
அன்பான தேவ ஜனமே, அக்கிரமக்காரர்களால் இயேசு கொலை செய்யப்பட்டதின் நோக்கமே நம்முடைய அக்கிரமங்களை அவர் சுமந்து தீர்க்க வேண்டும் என்பதற்க்காகத்தான்.
அக்கிரமம் என்றால் என்ன? என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ (யோபு 6:30) நாவின் சொற்களும், வாயின் வார்த்தைகளும் தான் அக்கிரமத்தை கொண்டு வருகின்றது. ஆனபடியினால், சிலுவையில் ஆணிகளால் தன்னை கடாவ ஒப்புக் கொடுத்த இயேசுவை நோக்கிப் பார்த்து நாவின் சொற்களை சுறுக்கி, வாயின் வார்த்தைகளை அடக்குவோம். அப்போது நம்முடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்படும். இயேசுவின் இரத்தத்தால் மீட் -கப்படுவோம்.
II. காயத்தின் ஆணி:--
யோவா 20:25 காயத்தின் ஆணி என்றால் விசுவாசம் என்று அர்த்தமாகும்.
இயேசுவின் கைகளிலும், கால்களிலும் அடிக்கப்பட்ட ஆணி -யினால் உண்டான காயத்தின் அளவு எவ்வளவு என்பதையும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. "பின்பு அவர் தோமாவை நோக்கி நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்” (யோவா 20:27). அதாவது, ஆணி -யினால் உண்டான காயம் ஒரு விரலை விட்டு பார்க்குமளவுக் -கும், ஈட்டியினால் உண்டான காயம் கையை விடும் அளவுக் -கும் மிகப் பெரிதாக இருந்துள்ளது.
நம்முடைய சரீரத்தில் சிறிய காயம் உண்டானாலே மிகப் பெரிய வேதனையை அனுபவிக்கிறோம். இயேசுவைப் பாருங்கள் மிகப் பெரிய காயங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்காக, எனக்காக பொறுமையாய் சகித்துள்ளார். காயம் என்றால் என்ன என்று யோபுவின் புஸ்தகம் தரும் விளக்கத்தைப் பாருங்கள். நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன். மீறுதல் இல்லாதிருந்தும் எனக்கு உண்டான காயம் ஆறாததாயி -ருக்கிறது (யோபு 34:6). ஆம், நியாயத்தை அநியாயம் என்றும், மீறுதல் இல்லாதபோது மீறினாய் என்று குற்றம் சாட்டப்படுவதும் -தான் காயம் ஆகும்.
"நாம் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் சூட்டுக்கு சூடு, காயத்துக்கு காயம், தழும்புக்கு தழும்பு, பழி கொடுக்க வேண்டும்” (யாத் 21:25) என்ற சத்தியத்தின்படி நாம் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த தண்டனைகள் அனைத்தையும் இயேசு சிலுவையில் மூன்று ஆணிகளில் சுமந்து தீர்த்து விட்டார். ஆதலால், இனிமேல் பாவம் செய்யாமல் குற்றங்களுக்கு இடம் கொடாமல் கவனமாக இருந்து, இயேசுவுக்காகவும், சத்திய வச -னத்துக்காகவும் வாழ்வோம். அப்போது, சத்தியவானாகிய இயேசுவும் நம்மைக்குறித்து சாட்சி கொடுப்பார்.
II1. சிலுவை என்ற ஆணி:
"கொலோ 2:14 சிலுவை என்ற ஆணி என்றால் வெற்றி" என்று அர்த்தமாகும். "சிலுவையில் வெற்றி சிறந்தார் என்று வேதம் சொல்கிறது" (கொலோ 2:15). சிலுவை என்ற ஆணியை இயேசு சுமந்ததினால் நமக்கு கிடைத்த பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
b. எதிரான கட்டளைகள் (கொலோ 2:14):
எஸ்தர் ராஜாத்தியின் காலத்தில் சிறியோர், பெரியோர், குழந் -தைகள் ஸ்திரீகள் ஆகியோரை அழித்து நிர்மூலமாக்க ஆமான் என்ற கொடியவனால் ஆலோசனை கொடுக்கப்பட்டு கட்டளை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கர்த்தர் கட்டளைகளை செல்லாமல் போகப் பண்ணினார் (எஸ் 3:13 ; 8:5). அதேபோல, உங்கள் வேலையிலும், ஊழியத்திலும் உங்களுக்கு எதிராக யார் எப்படிப் -பட்ட கட்டளைளை பிறப்பித்தாலும் அதை வாய்க்காமல் போகப் பண்ணி, உங்களையோ வெற்றி சிறக்கப் பண்ணுவார்.
C. விரோதங்கள் யாவும் மாறும் (கொலோ 2:14):
சவுல் என்கிற இராஜா தாவீதை விரோதியைப் பார்ப்பது போலவே பார்த்து, நீண்ட காலங்களாக தாவீதை விரட்டிக் கொண்டே இருந்தான். ஆனால் முடிவில் கர்த்தர் தாவீதுக்கு மாபெரும் ஜெயத்தைத் தந்தார் (IIசாமு 3:1]. விரோதியாய் நினைத்தவன் மாண்டான். விரோதியை கூட விரோதியாய் நினைக்காதவன் வாழ்ந்தான்.
இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை (Iஇரா 5:4) என்ற வசனத்தை சாட்சியாக சொல்லும் -படி உங்களுக்கு கிருபை செய்து சிலுவையின் ஆணிகளினால் மாபெரும் வெற்றியை தந்தருளுவார். சிலுவையை பாடுகளின் சின்னமாக பார்க்காமல் வெற்றியின் அடையாளமாக பாருங்கள், வெற்றியின் மேல் வெற்றியைக் காண்பீர்கள்.
1. சரீரத்தில் அடித்த ஆணியின் நீளம் 8 அங்குலம் அகலம் 3/4 அங்குலம்
2. கைகளின் நடுப்பகுதியில் தடித்த ஆணிகளை அறைவதால் ஒவ்வொரு அடியினாலும் மகா வேதனை. ஆணிகள் அறைந்த பின்பு சிலுவையை புரட்டிப் போட்டு, ஊடுருவிய ஆணிகளை வளைத்து விடுவார்கள். அந்நேரத்தில் இயேசுவின் முகமும், மார்பும் தரையில் பதிந்திருக்க, இயேசுவின் முதுகின் மீது பார -மான மரச் சிலுவை அழுத்தி கொண்டிருந்திருக்கும்.
3. ஆணி அறையப்பட்டப் பின்னர் நெடுமரத்தின் அடிப்பகுதியை குழிக்குள் இறக்கின பொழுது, தரைக்குள் மரத்தின் அடிப்பகுதி தட்டும்போது மிகுந்த அதிர்வு ஏற்பட்டது. மூன்று ஆணிகளுள் அவரது சரீரம் இங்கும் அங்கும் அசைந்தது. இதைப் பார்த்த சிலர் தங்கள் முகத்தை மூடிக் கொண்டனர்.
(ஏசா 53:2,3,5,7,9,12) அந்த அளவுக்கு அவரது முகம் கொடூர மாக இருந்தது. அந்த தோற்றத்தை யாராலும், சித்திரத்தில் தீட்ட முடியாது.
i. ஆணிகள் இரண்டு வீதத்தில் இறங்கினது.
1. யோவா 20:25 ஆணிகள் இயேசுவின் கைகளில் இறங்கினது.
2. அப் 2:23 ஆணிகள் சிலுவையில் இறங்கினது.
ii. ஆணிகள் (எல்) என்ன அர்த்தம்?
ஏசா 22:23 ஆணி (எல்) உறுதி.
உ.ம்: அப் 12:15 ரோதை என்ற பென் உறுதியாக இருந்தால்
iii. இயேசுவை ஆணிகளால் அறைந்தது யார் தெரியுமா? அப் 2:23 "அக்கிரமக்காரர்கள் அறைந்தனர்."
iv. ஆணிகளால் உண்டான காயம் எவ்வளவு பெரியது தெரியுமா?
யோவா 20:25 ஒரு விரலை உள்ளே விடும் அளவுக்கு பெரிய காயம்.
v. கைகளில் அடித்த ஆணி எதைக் குறிக்கிறது? யோவா 20:25 விசுவாசத்தைக் குறிக்கிறது.
vi. சிலுவை (மரத்தில்)யில் அறைந்த ஆணி எதைக் குறிக்கிறது?
கொலோ 2:14 கொலை செய்யப்படுவதைக் குறிக்கிறது.
vii. இயேசுவை ஆணிகளால் அடித்ததினால் நமக்கு என்ன பலன்?
கொலோ 2:14 1. எதிரானவைகள் எல்லாம் மறையும்.
2. கட்டளைகள் அனைத்தும் உடையும்.
3. விரோதங்கள் யாவும் மாறும்.
4. பொய்யான கையெழுத்து
செல்லாமல் போகும்.
d. உவமையாய் சொல்லப்பட்டுள்ள சில ஆணிகள்:
1. நியா 4:21 தூக்கத்தின் ஆணி
2. நியா 4:22 நெற்றியில் அடித்த ஆணி
3. நியா 5:26 தலையை உடைத்த ஆணி
4.நியா 16:14 பிடுங்கப்பட்ட ஆணி
5. பிர 12:11 ஞானி என்ற ஆணி
6. ஏசா 22:23 உறுதியான ஆணி
7. யோவா 20:25 அவிசுவாசத்தின் ஆணி
8. அப் 2:23 அக்கிரமத்தின் ஆணி