சிலுவையின் வரலாறு பாகம் - 12 : சிலுவையில் மரித்தவர்கள்

 



சிலுவையின் வரலாறு பாகம் - 12 : சிலுவையில் மரித்தவர்கள் 


சிலுவையில் மரித்தவர் இயேசு மட்டும் தான் என்று சொல்கிற -வர்கள் உண்டு. இரண்டு கள்ளர்களையும் சேர்த்து மூன்று பேர் சிலுவிைல் மரித்தார்கள் என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் ஒன்பது விதமான மனிதர்கள் சிலுவையில் அறையுண்டு மரித்துள்ளனர். இதையும் வேதம்தான் சொல்கின்றது.


ஒன்று: தீர்க்கதரிசிகள்:


மத் 23:34 தீர்க்கதரிசிகளை சிலுவையில் அறைந்தனர். அத -னால் உண்டான விளைவு என்ன தெரியுமா? யாரெல்லாம் தீர்க் -கதரிசிகளை சிலுவையில் அறைந்தார்களோ அவர்களின் வீடுகள் அனைத்தும பாழாய் போயின (மத்23:31,38). இதை சுத்தமான மொழியில சொல்ல வேண்டுமானால், அவர்களின் வீடுகள் அனைத்தும் நாசமாய் போனது என்பதாகும். தீர்க்கதரி -சிகளிடம் கவனமாய் இருங்கள்.


இரண்டு: ஞானிகள்:


மத் 23:34 ஞானிகளை சிலுவையில் அறைந்தனர். ஞானி -களை சிலுவைக்கு ஏன் தேவன் ஒப்புக் கொடுத்தார் என்று எண்ணலாம். அதற்கும் உண்மையானக் காரணம் உண்டு. ஞானி -களின் ஞானத்தை பைத்தியமாக்கவும், தர்க்க சாஸ்திரங்களை அழிக்கவும், அவர்களை சிலுவைக்கு ஒப்புக் கொடுத்தார் (Iகொரி1:19,20). அந்நாட்களில் வாழ்ந்த ஞானிகளில் சிலர் தங்களுடைய ஞானத்தினால் தேவனுடைய வல்லமையை மறைக்கவும் முயற்ச்சித்தனர். அதனால், அவர்களை தேவனே தண்டனைக்கு ஒப்புக் கொடுத்தார்.


மூன்று: வேதபாரகர்கள்:


மத்23:34 வேதபாரகர்களை (வேத பண்டிதர்களை) சிலுவையில் அறைந்தனர். காரணம் என்ன தெரியுமா? வேதபாரகர்கள் மோசேயின் ஆசனத்தில் உட்காரப் பார்த்தார்கள் (மத்23:2ற்ர்7). வேதபாரகர்களும், வேத பண்டிதர்களும் பல நேரங்களில் தவறானதைத்தான் செய்தார்கள். மோசேயின் ஆசனத்தில் போய் உட்காரலாமா? கூடாது. காரணம் மோசே பரிசுத்தவான், நீதிமான், தேவனோடு கூட சஞ்சரித்தவன். பண்டிதர்கள் மனை -வியை தள்ளி விடவும், அழகான பெண்களை தெரிந்ததெடுக் -கவும் ஆலோசனை கொடுத்தனர் (எஸ்1:14,15). இப்படி பல வரலாற்று தவறுகளை செய்தபடியினால் அவர்களை சிலுவை -யில் அறைய தேவன் ஒப்புக் கொடுத்தார். இந்த சம்பவத்தை இன்னொரு முறையிலும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது: வேதபாரகர்களை சிலுவையில் அறைந்ததால், மரித்த வேதபார -கர்கள் மோசேயின் ஆசனத்தில் போய் உட்கார்ந்தனர்.


நான்கு: வலது புறத்துக் கள்ளன்:


மத்27:38 வலது புறத்துக் கள்ளனை சிலுவையில் அறைந்தனர்.

அதனால் அவனுக்கு இரண்டு பெரிய பலன்கள் கிடைத்தன (மத்25:34). 

1) பிதாவின் ஆசீர்வாதம் கிடைத்தது. 

2) ராஜ்யத்தையும் சுதந்தரித்து கொண்டான். 

இந்த இரண்டு ஆசீர்வாதங்களும் வலது புறத்தில் உள்ளவர்களுக்கான பிரத்தியேக ஆசீர்வாதங்கள்.


ஐந்து: இடது புறத்துக் கள்ளன்:


மத் 27:38 இடது புறக் கள்ளன் சிலுவையில் அறையப்பட்டான். சிலுவையில் அறையப்பட்ட இந்த இடது புறத்துக் கள்ளன் முக்கி -யமான மூன்று வார்த்தைகளை இயேசுவுக்கு எதிராகச் சொன் னான் (லூக்23:39).

 1) நீ கிறிஸ்துவானால் 

2) இரட்ச்சித்துக் கொள் 

3) இகழ்ந்தான். 

அவன் சொன்ன மூன்று வார்த்தைக்கு தக்கபடி மூன்று தண்டனை அவனுக்குக் கிடைத்தது (மத்25:41).

 1) சாபம் 

2) பிசாசு 

3) நித்திய அக்கினி. 

எவ்வளவு பெரிய தண்ட -னை பார்த்தீர்களா?


வலதுபுறத்து, இடதுபுறத்து கள்ளன்கள் இரண்டு பேரையும் சிலுவையில் அறையவில்லை. அதற்கு பதிலாக அவர்களின் கைகளையும், கால்களையும் சிலுவையோடு சேர்த்துக் கட்டினார் -கள் என்றும் சில வேத பண்டிதர்கள் கூறுகின்றனர். காரணம், இரண்டு பேரும் பெரிய குற்றவாளிகள் ஒன்றும் கிடையாது. வெறும் திருடர்கள்தான். அதனால்தான் வேதத்தில் கூட கள்ளன் என்று சொல்லப்பட்டுள்ளதாக விவரிக்கின்றனர். எது எப்படியோ! இரண்டு பேரும் இரண்டு பக்ககத்தில் சிலுவையில் அறையப்பட்ட -னர் (மாற்15:27) என்று தான் வேதம் சொல்கிறது. வேதம் சொல்வதுதான் நமக்கு முக்கியம்.


ஆறு: இயேசு:


மத்27:35 இயேசுவை சிலுவையில் அறைந்தனர். இயேசுவின் சிலுவை கீழ் பகுதியைத் தவிர மற்ற மூன்று பகுதியும் மூன்று திசைகளை நோக்கி இருந்தது. அதே போல மாலை மூன்று மணி வரைதான் இயேசு சிலுவையில் தொங்கி கொண்டிருந் -தார். கன்னிமரியாள், கிலெயொப்பா மரியாள், மகதலேனா மரியாள் ஆகிய மூன்று மரியாள்கள் சிலுவைக்கு அருகில் நின் -றிருந்தனர். சேவகன், நூற்றுக்கு அதிபதி, அன்பின் யோவான் என்னும் மூன்று ஆண்கள் சிலுவை அருகே இருந்தார்கள். இயேசுவுக்கு காடி மூன்று முறைகொடுக்கப்பட்டது. இயேசு சிலு -வையில் சொன்ன மிக மிக முக்கியமானது வார்த்தைகள் மூன்று அடங்கியது: பிதாவே, இவர்களை மன்னியும். இயற்கை -யில் மூன்று சம்பவம் நடந்தது. பூமி அதிர்ந்தது. கன்மலைக -ளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது.


இவைகள் அனைத்தும் மூன்று மூன்றாக நிகழ என்ன காரணம் தெரியுமா? உங்களுடைய கடந்தகாலம், நிகழ்காலம். வருங்காலம் என்னும் முக்கால பாவங்களையும் மன்னிக்கத்தான்.


இயேசு சிலுவையில் அறையப்பட்டபடியினால் மிக முக்கியமான மூன்று மாற்றங்கள் நம்முடைய சரீரத்தில் நடைபெறுகின்றது [IIகொரி13:4).


1) நம்முடைய பெலவீனங்கள் மறைகிறது 


2) நமக்கும் கிறிஸ்து -வின் வல்லமை விளங்குகிறது 


3) நாம் ஆவியில் பிழைத்தும் இருக்கின்றோம். 


இப்படிப்பட்ட வித்தியாசமான கிருபையுள்ள மாற் -றங்களை சிலுவையின் மூலம் நமக்கு தந்த தேவனை நாம் துதிக்க வேண்டும்.


ஏழு: பவுல்:


கலா 2:20 கிறிஸ்துவுடனே கூட பவுல் சிலுவையில் அறையப் -பட்டார். அதனால் அவருக்கு உண்டான விளைவு என்னத் தெரியுமா? மாம்சம், ஆசை, இச்சை மூன்றையும் முற்றிலுமாக ஜெயித்தார் (கலா5:24,25). அதனால் ஆவியினால் பிழைத்து, ஆவியனால் நடக்கிற மகா உன்னதமான நிலைமைக்கு உயர்த்தப் -பட்டார். உயிரோடு இருக்கும் போதே தன்னை இயேசுவோடு கூட சிலுவையில் அறைந்துக் கொண்டேன் என்று பவுல் சொல்கின்ற -வார்த்தையைப் பாருங்கள். நான் அநுதினமும் சாகிறேன்.


அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் சொல்லு -கிறேன் (கொரி15:31). இதை போல தைரியமாக, பகிரங்கமாக உங்களால் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ரோம 6:6 பழைய மனுஷன் சிலுவையில் அறையப்பட்டான் கலா 5:24 "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக் -கிறார்கள்."


எட்டு: பழைய மனுஷன்:


ரோம 6:6 நம்முடைய பழைய மனுஷனும் சிலுவையில் அறை -யப்பட்டான். ஏன்? இரண்டு காரணங்களுக்காக பழைய மனுஷ -ன் சிலுவையிலறையப்பட்டான்.


ஒன்று: நாம் பாவத்தில் ஊழியம் செய்யாத படிக்கு (ரோம 6:6). பிலிப்புவினால் இரட்சிப்புக்குள் நடத்தப்பட்டு, பிலிப்பு செய்த ஊழி -யங்களை கவணித்துக் கொண்டிருந்த சீமோன் [அப் 8:13,9). பின் நாட்களில் அவன் பணத்தினால் பேதுருவையும், தேவ -னுடைய வல்லமையையும் ஏமாற்றப் பாத்தான் (அப் 8:20-23). இப்படிப்பட்ட பாவத்தோடு நாம் ஊழியம் செய்யாதபடிக்கு சிலுவை -யில் அறையப்பட வேண்டும்.


இரண்டு: பாவ சரீரம் ஒழிந்து போகும் பொருட்டாக (ரோம 6:6]. பாவசரீரம் என்றால், மாம்சீகத்தின் பாவங்களாகும் (கொலோ 2:11). சிம்சோன் தன்னுடைய பாவசரீர இச்சைகளை விடாதபடியினால் அவனுடைய கண்கள் பிடுங்கப்பட்டது. விலங்கி -டப்பட்டான். மாவு அறைக்கும் அடிமையாக மாறினான் (நியா 16:21].சிம்சோனைப் போல நாமும் ஆகிவிடாதபடிக்கு நம்முடைய பாவ சரீரங்களை சிலுவையில் அறைய ஒப்புக் -கொடுத்தால், கிறிஸ்து இயேசுவோடு கூட நித்தியகாலமாக நிலைத்திருப்பாம்.


ஒன்பது: கிறிஸ்துவினுடையவர்கள்:


கலா 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் என்றால் மாம்சம், ஆசை இச்சை மூன்றையும் சிலுவையில் அறைந்தவர்கள்தான் கிறிஸ்துவினுடையவர்கள்.


யோசேப்பு தன் சரீரத்தை அறைந்தது போல் வாழ்ந்தான். அதனால் அவனால், மாம்சீக பாவத்தை செய்ய முடியவில்லை (ஆதி 39:10). அதனால் அவன் தேசம் முழுவதற்கும் உயர்த்தப் -பட்டான் (ஆதி 41:41,42).


பார்வோனும் அவன் சேனையும், தங்கள் ஆசையை அடக்கத் தெரியாமல், மோசேயையும், இஸரவேல் ஜனங்களையும் கொல் -லும் ஆசையோடு பின் தொடர்ந்து விரட்டினான் (யாத் 15:9,10). அவர்களின் ஆசையே அவர்களை சமுத்திரத்தில் தள்ளி கொண் -றுப்போட்டது. ஆதலால் நாம் ஆசையை வெறுப்போம். கிறிஸ்து -வை நேசிப்போம்.


இஸ்ரவேல் ஜனங்கள் இச்சையுள்ளவர்களாகி, பூண்டுக்காகவும் கீரைக்காகவும் முறுமுறுத்தனர் (எண் 11:4,5). ஆதலால், அவர்க -ளின் இச்சையே, அவர்களை குறைந்து போகப்பண்ணினது. ஆதலால், நாம் நம்முடைய மாம்சம், ஆசை, இச்சைகளை சிலு -வையில் அறைவோம். நாமும் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற உயிருள்ள சாட்சியை பெறுவோம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.