6. ஜீவனின் ஐக்கியம்

 



ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள்

6. ஜீவனின் ஐக்கியம்


இரண்டு காரியங்களை நிறைவேற்றும் நம்பிக்கையுடன், இந்தப் புத்தகத்தில் ஜீவனின் காரியத்திற்கு நம் கவனத்தைத் திருப்புகிறோம்: முதலாவது நாம் இங்கு குறிப்பிடுகிற ஜீவனின் அனுபவம் ஒவ்வொரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இருக்கிறதா இல்லையா என்பதை அவனோ அவளோ அறிந்து கொள்ள உதவுவதாகும்; இரண்டாவது, அவர்கள் மற்ற இடங்களுக்குச் சென்று ஆவியில் இதைப் பேசும்படி ஜீவனின் வழியை முற்றும்முடிய புரிந்துகொள்வதற்கு சகோதர சகோதரிகளை வழிநடத்துவதாகும். இந்தப் புத்தகம் பொதுவான போதனைக்காக இல்லை, ஆனால் ஒரு விசேஷமான ஆய்வுசெய்தலாக இருக்கிறது. ஜீவனின் எல்லாக் காரியங்களும் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்கு இந்த எல்லாக் காரியங்களையும் உங்களிடம் நாங்கள் கொண்டுவர விரும்புகிறோம். நீங்கள் அவைகளைக் கொண்டிருந்தால் அவைகளை உங்களால் பேசமுடியுமா? மற்றவர்களுடைய உணர்வுகளைத் தொடும்படி உங்களால் பேச முடியுமா? அவைகளை உபதேசமாக மட்டுமல்ல அனுபவ மாகவும் உங்களால் பேசமுடியுமா? இந்தக் காரணத்தினால் தான், ஜீவனின் ஒவ்வொரு பதமும் குறிக்கிற காரியங்கள் நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்துப் பார்க்க மட்டுமல்ல, ஒவ்வொரு பதத்தின் வரையறையையும் உபயோகத்தையும் கண்டுபிடிக்கவும் நாம் விரும்புகிறோம்.


இன்று ஒவ்வொரு சபைக்கும் ஜீவனின் காரியங்களே மிகவும் தேவையானது என்ற மிகக் கனமான பாரம், மிக ஆழமான உணர்வு எனக்குள் இருக்கிறது. நம் எல்லா வேலையும் நடவடிக்கையும் ஜீவனிலிருந்தே வரவேண்டும். நாம் அதிகமான வேலையிலும் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். நம் வேலையும் நடவடிக்கையும் பின்னாளில் அதிகரிக்கலாம், மேலும் இன்னும் அதிகமாக இன்றைவிட அதிதீவிரமாக்கப்படலாம். அது ஜீவனிலிருந்து வெளிவராதவரை, நம் வேலையும் சேவையும் நீடித்திருக்காது அல்லது அதற்கு அதிகக் கனம் இருக்காது. நம் வேலை மிகுதியான, நிலைத்திருக்கக்கூடிய கனிகொடுக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், நமக்கு ஜீவனில் அஸ்திவாரம் இருக்கவேண்டும். நாம் ஜீவனில் கர்த்தரைத் தொடவேண்டும், மற்றவர்களை ஜீவனில் கர்த்தரைத் தொடுவதற்கு நடத்தவேண்டும். அப்போது மட்டுமே தேவன் இந்த யுகத்தில் செய்யவிரும்பும் வேலைக்கு நாம் பொருத்தமாக இருக்கமுடியும்.


நம் வேலையின் எல்லா விளைவுகளும் ஜீவனால் அளக்கப்படவேண்டும். ஜீவனிலிருந்து வருபவை மட்டுமே தேவனால் அங்கீகரிக்கப்படும். சிலர் சுவிசேஷத்தை பிரசங்கிக் கிறார்கள் சிலர் பிசாசுகளைத் துரத்துகிறார்கள். இருப்பினும் அவர்கள் அவரால் அங்கீகரிக்கப்படவில்லை என்று மத்தேயு 7-ல் கர்த்தர் கூறுகிறார் (வ.22-23). மேலும் சிலர் பொறாமையினால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள் என்று பிலிப்பியர் 1-ல் அப்போஸ்தலன் கூறுகிறார் (வ. 15). சந்தேகமேயில்லாமல் இப்படிப்பட்ட வேலைகள் ஜீவனி லிருந்து வரவில்லை, ஆனால் மனித செயல்களிலிருந்து வருகின்றன. நாம் இப்படிப்பட்ட வேலையைச் செய்ய முடியாது, செய்யவும்கூடாது. நாம் கர்த்தருடைய ஜீவனில் வாழவும், அவருடைய வேலையைச் செய்வதற்கு நம்மை நடத்த அவருடைய ஜீவனை அனுமதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஏதோவொரு மாபெரும் வேலையை அல்லது வேலையில் எதையோ சாதிப்பதற்கு வாஞ்சிக்கக்கூடாது. கர்த்தருடைய ஜீவனை அதிகமாக அறிந்து அனுபவ மாக்குவது, மற்றவர்களும் ஏதோவொன்றைப் பெற்றுக் கொள்ளும்படி நாம் அறிந்துகொண்டு அனுபவமாக்கியதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவது என்ற ஒரேவொரு விருப்பம் மட்டுமே நமக்கு இருக்கவேண்டும். நாம் வேலை செய்யும்போது ஒரு வேலையை நிறுவக்கூடாது; ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தவும்கூடாது. கர்த்தருடைய ஜீவனை விடுவிப்பது மட்டுமே. அதாவது மற்றவர்களுக்கு கர்த்தருடைய ஜீவனைப் பகிர்ந்தளிப்பதும் வழங்குவதுமே நம் வேலையாக இருக்கவேண்டும். மனிதன் அவருடைய ஜீவனை ஆதாயப்படுத்தி, அவருடைய ஜீவனில் வளர்ந்து முதிர்ச்சியடைவதே இந்த யுகத்தில் தேவனுடைய மைய வேலை என்பதைப் பார்ப்பதற்கு கர்த்தர்தாமே நம்மேல் இரக்கமாயிருந்து நம் கண்களைத் திறப்பாராக. அவருடைய ஜீவனிலிருந்து வருகிற வேலை மட்டுமே, அவருடைய நித்திய தரத்தை எட்டி அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்.


முந்தைய அத்தியாயத்தில், ஜீவனின் உணர்வை நாம் பார்த் திருக்கிறோம். ஜீவனின் உணர்வுக்கு நெருக்கமாகத் தொடர்புடையதே ஜீவனின் ஐக்கியமாகும். எனவே, இப்போது ஜீவனின் ஐக்கியத்தைப் பார்ப்போமாக. நாம்


I. ஜீவனின் ஐக்கியத்தின் ஊற்று


ஜீவனின் ஐக்கியம் எங்கிருந்து வருகிறது? அதன் காரணி என்ன? மேலும் அது எதிலிருந்து வருகிறது? எங்களுக்கு (அப்போஸ்தலர்கள்) வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை...நீங்களும் (விசுவாசிகள்) எங்களோடு ஐக்கியமுள்ளவர் களாகும்படி... உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது" என்று 1 யோவான் 1:2-3 கூறுகிறது. நாம் "ஐக்கியம்" கொள்ளும்படி அப்போஸ்தலர்கள் நித்திய ஜீவனை" நமக்கு அறிவித்தார்கள் என்று இந்த வசனங்கள் காட்டு கின்றன. நித்திய ஜீவன் தேவனுடைய ஜீவனாக இருக்கிறது, மேலும் நமக்குள் நுழைகின்ற தேவனுடைய ஜீவன் ஐக்கியம் கொள்ளும்படி நமக்குத் திறனளிக்கிறது. இந்த ஐக்கியம் தேவனு டைய ஜீவனிலிருந்து வருவதால், இது ஜீவனின் ஐக்கியமாக இருக்கிறது. ஆகையால் ஜீவனின் ஐக்கியம் தேவனுடைய ஜீவனிலிருந்து வருகிறது; அதன் இருத்தல் தேவனுடைய ஜீவனா லானது; அது தேவனுடைய ஜீவனிலிருந்து வருகிறது; மேலும் அது தேவனுடைய ஜீவனால் நம்மிடம் கொண்டுவரப்படுகிறது. நம்முள் தேவனுடைய ஜீவனை நாம் பெற்றுக்கொண்ட உடனே, நாம் ஜீவனின் ஐக்கியத்தைப் பெறுவதற்கு இந்த தேவனுடைய ஜீவன் நமக்குத் திறனளிக்கிறது. ஆகையால் தேவனுடைய ஜீவனே ஜீவனின் ஐக்கியத்தின் ஊற்றாகும்.


II. ஜீவனின் ஐக்கியத்தின் ஊடகம்


தேவனுடைய ஜீவன் தேவனுடைய பரிசுத்த ஆவியில் இருக்கிறது. மேலும் தேவனுடைய பரிசுத்த ஆவியின்மூலம் தான் தேவனுடைய ஜீவன் நமக்குள் நுழைந்து நம்மில் வாழ்கிறது. ஆகையால் தேவனுடைய ஜீவனால் நமக்குக் கொண்டுவரப்படுகிற ஐக்கியம் தேவனுடைய ஜீவனிலிருந்து வந்தாலும், அது தேவனுடைய பரிசுத்த ஆவி என்னும் ஊடகத்தால்தான் வருகிறது. எனவே வேதாகமம் இந்த ஐக்கியத்தை "பரிசுத்த ஆவியின் ஐக்கியம்" என்றும் அழைக்கிறது (2) கொரி. 13:14,


"அந்நியோந்நியம்" என்பது மூலப்படிவத்தில் "ஐக்கியம்" ஆகும்). பரிசுத்த ஆவியானவர்தான் தேவனுடைய வனின் அனுபவத்தை நமக்குக் கொடுக்கிறவர்; ஆகையால் பரிசுத்த ஆவியானவர்தான் தேவனுடைய ஜீவனில் ஐக்கியம்கொள்ள நமக்குத் திறனளிக்கிறவர். நம் ஜீவனின் எல்லா ஐக்கியமும் பரிசுத்த ஆவியானவரில் இருக்கிறது, மேலும் பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படுகிறது. எனவேதான், "...ஆவியின் யாதொரு ஐக்கியம்" என்று பிலிப்பியர் 2:1 கூறுகிறது.


தேவனுடைய ஜீவனிலிருந்து வருகிற ஐக்கியத்தை நாம் கொண் டிருப்பதற்கு, தேவனுடைய பரிசுத்த ஆவி நமக்குள் அசைகிறார், கோருகிறார், உந்தித்தள்ளுகிறார். ஆகையால் நாம் ஜீவனின் ஐக்கியத்தை கொண்டிருக்க விரும்பினால் நாம் தேவனுடைய ஜீவனை கொண்டிருப்பது மட்டுமல்ல, தேவனுடைய பரிசுத்த ஆவியானவரிலும் வாழ வேண்டும். தேவனுடைய ஜீவனே ஜீவனின் ஐக்கியத்தின் ஊற்று, மேலும் தேவனுடைய பரிசுத்த ஆவியே ஜீவனின் ஐக்கியத்தின் ஊடகம். தேவனுடைய ஜீவன் ஜீவனின் ஐக்கியத்தை நமக்குத் தந்தாலும், தேவனுடைய பரிசுத்த ஆவியே இந்த ஜீவனின் ஐக்கியத்தை நடைமுறையில் நாம் அனுபவித்துமகிழச்செய்கிறவர். நாம் பரிசுத்த ஆவியில் வாழ்ந்து பரிசுத்த ஆவிக்கு அக்கறைசெலுத்தி நடக்கும்போது மட்டுமே. தேவனுடைய ஜீவனின் ஐக்கியத்தை நடைமுறையில் நாம் அனுபவித்துமகிழ முடியும்.


III. ஜீவனின் ஐக்கியத்தின் அர்த்தம்


நாம் ஜீவனின் ஐக்கியத்தை வரையறுப்பதற்குமுன்பு, ஒரு காரியம் தெளிவாக்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் தேவனுடைய ஜீவன் தேவனில் இருந்தது, அதன்பின்பு அது தேவனுக்கு சொந்தமானவர்களாகிய நமக்குள் நுழைந்தது. அப்படியானால், நமக்குள் நுழைந்த இந்த தேவனுடைய ஜீவன் ஒரு பகுதியா அல்லது முழுமையானதா? அது பகுதியானதும் அல்ல, முழுமை யானதும் அல்ல, மாறாக அது பாய்ந்தோடுகிறது என்பதே நம் இறுதித் தீர்ப்பாகும்.


ஒரு ஒளிவிளக்கில் உள்ள மின்சாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அது பகுதியான மின்சாரமா, மின்உற்பத்தி நிலையத் திலிருந்து வருகிற முழுமையான மின்சாரமா? இரண்டுமே இல்லை என்பதுதான் பதில்; ஏனென்றால் மின்உற்பத்தி நிலையத்தி லிருக்கிற அதே மின்சாரம்தான் இந்த ஒளிவிளக்குகளிலும் இருக்கிறது. இது ஒரு தொடர்ச்சியாக பாய்ந்தோடிக்கொண்டிருக்கிற மின்சார ஓட்டமாகும். மின்சாரஓட்டம் நின்றுவிட்டால் இந்த ஒளிவிளக்குகள் ஒளி தருவதை நிறுத்திவிடுகின்றன.


இன்னொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்: என் கையிலிருக்கும் இரத்தம், அந்தப் பகுதியின் இரத்தமா அல்லது முழு உடலின் இரத்தமா? அது அந்தப்பகுதியின் இரத்தமாக இருந்தால் அது எந்தத் தொடர்பையும் கொண்டிருக்காது. அது முழு உடலின் இரத்தமாக இருந்தால் அதுவும் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்காது. ஆனால் அது சுற்றி ஓடுகிற இரத்தம், அதாவது பாய்ந்தோடுகிற இரத்தம். அது தொடர்ச்சியாகச் சுற்றி ஓடுகிற இடைவிடாமல் பாய்ந்தோடுகிற முழு உடலின் இரத்தமாக இருக்கிறது. அது முழுமையாகவும் இருக்கிறது, பகுதியாகவும் இருக்கிறது; அது பகுதியாகவும் இருக்கிறது, முழுமையாகவும் இருக்கிறது.


நம்முள் இருக்கிற தேவனுடைய ஜீவனும் அப்படியே இருக்கிறது. அது தேவனிலிருந்து பாய்ந்தோடியது, மேலும் அது நம்மையும் சேர்த்து ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்க ளுக்குள் பாய்ந்தோடியது. இந்தப் பாய்ந்தோடுகிற ஜீவன் தேவனிலிருந்து வருகிறது; அது தேவன்மூலமாகக் கடந்து செல்லுகிறது, மேலும் அது நம்மையும் சேர்த்து ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்கள் மூலமாகக் கடந்துசெல்லுகிறது. இவ்வாறு அது தேவனோடும், ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களோடும் ஐக்கியத்தை ஏற்படுத்துகிறது.


அது பிரகாசிக்கிற மின்சார விளக்கைப்போலவே இருக்கிறது. அதில் உள்ள மின்சாரம் தொடர்ச்சியாகப் பாய்ந்தோடி, அதை மின்உற்பத்தி நிலையத்தோடும், பிரகாசிக்கிற மற்ற அநேக ஒளிவிளக்குகளோடும் உள்ள தொடர்பில் வைக்கிறது. அதனுள் இருக்கிற மின்சாரத்தின் ஓட்டத்தை இந்தத் தொடர்பு சார்ந்திருக்கிறது. இதைப்போல நம்மிலுள்ள ஜீவனின் ஐக்கியமும் நம்முள் இருக்கிற ஜீவனின் பாய்ந்தோடுதலைச் சார்ந்தே இருக்கிறது. நம்முள் இருக்கிற தேவனுடைய ஜீவன், ஜீவனின் ஒரு பாய்ந்தோடுதலைக் கொண்டுவருகிறது; இவ்வாறு நாம் ஜீவனின் ஐக்கியத்தைக் கொண்டிருக்கிறோம். ஜீவனின் ஐக்கியம் தேவனோடும், ஆயிரக்கணக்கான விசுவாசிகளோடும் தொடர்பிலிருக்க நமக்குத் திறனளிக்கிறது. ஆகையால் ஜீவனின் ஐக்கியத்தின் அர்த்தம் ஜீவனின் பாய்ந்தோடுதல் ஆகும். ஜீவனின் இந்தப் பாய்ந்தோடுதல் ஜீவனிலிருந்து பிரிக்கப்பட்டதல்ல; மாறாக இது ஜீவன்தானே பாய்ந்தோடுவதின் ஐக்கியமாகும். ஜீவனுடைய பாய்ந்தோடுதலின் இந்த ஐக்கியம், நாம் தொடர்ச்சியாக அதைப் பின்தொடர்ந்து, அதற்கு விட்டுக்கொடுத்து நடக்கவும் வாழவும் வேண்டும் என்று கோருகிறது. நாம் அதைப் பின்தொடராமல் அல்லது அதற்கு விட்டுக்கொடுக்காமல் இருக்கும்போதெல்லாம், அது பாய்ந்தோடுவதை நிறுத்திவிடுகிறது. இவ்வாறு நமக்கும் தேவனுக்குமிடையே உள்ள ஐக்கியம் துண்டிக்கப்படுகிறது; மேலும் நமக்கும் பரிசுத்தவான்களுக்கும் இடையேயுள்ள ஐக்கியமும் போய்விடுகிறது.


IV. ஜீவனின் ஐக்கியத்தின் செயல்பாடு


ஜீவனின் ஐக்கியத்தின் செயல்பாடு அல்லது உபயோகம் என்ன? அது, தேவனுடைய ஜீவனில் அல்லது தேவனில் உள்ள எல்லாவற்றையும் உள்ளார்ந்தரீதியில் நமக்கு வழங்குவதாகும். தேவனில் உள்ள பரிபூரணமெல்லாம் ஜீவனின் ஐக்கியத்தின் மூலமாக நமக்கு வழங்கப்படுகிறது. நாம் எவ்வளவு அதிகமாக ஜீவனின் பாய்ந்தோடுதலை நம்மில் பாய்ந்தோட அனுமதிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக தேவனுடைய பரிபூரணத்தைக் கொண்டு உள்ளார்ந்தரீதியில் நிரப்பப்படுகிறோம். ஜீவனின் ஐக்கியத்தின் இப்படிப்பட்ட நிரப்பீடு, உடலின் நிரப்பீடாகிய இரத்தவோட்டத்தைப்போலவும், விளக்குகளின் நிரப்பீடாகிய மின்னோட்டத்தைப்போலவும் இருக்கிறது.


நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா இல்லையா என்பதை ஜீவனின் உணர்வு நிரூபித்துக்காட்டுகிறது. மேலும் ஜீவனின் ஐக்கியம் ஜீவனின் காரியங்களை நமக்குத் தொடர்ச்சியாக வழங்குகிறது. உங்களுக்கான ஜீவனின் நிரப்பீடு துண்டிக்கப் படும்போதெல்லாம், ஜீவனின் உங்கள் ஐக்கியம் தடை செய்யப்படுகிறது என்று அர்த்தம். ஜீவனின் ஐக்கியத்தில் தொடர்ச்சியாக நாம் வாழ்ந்தால், நமக்கான ஜீவனின் நிரப்பீடு தொடர்ச்சியாகவும் இடைவிடாமலும் வரும்.


ஜீவனின் ஐக்கியமும் ஜீவனின் உணர்வும் ஒன்றோ டொன்று தொடர்புடையது. ஜீவனின் ஐக்கியம் தடைசெய்யப்பட்டவுடனே, ஜீவனின் நிரப்பீட்டை நாம் இழந்துவிட்டோம் என்று ஜீவனின் உணர்வு நம்மை உணரச்செய்கிறது. ஜீவனின் ஐக்கியம் தடைசெய்யப்படாதபோது, ஜீவனின் நிரப்பீட்டை நாம் கொண்டிருக்கிறோம் என்று ஜீவனின் உணர்வு நம்மை உணரச்செய்கிறது. ஆகையால் நாம் ஜீவனின் ஐக்கியத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா, நாம் ஜீவனின் நிரப்பீட்டைக் கொண்டிருக்கிறோமா என்பவை ஜீவனின் உணர்வு எதைச் சுட்டிக்காட்டுகிறதோ அதையே முழுவதும் சார்ந்திருக்கிறது. நாம் எவ்வளவு அதிகமாக ஜீவனின் ஐக்கியத்தில் வாழ்கிறோமோ, நம் ஜீவனின் உணர்வு அவ்வளவு கூர்மையாக இருக்கிறது, மேலும் அவ்வளவு அதிகமாக ஜீவனைக்கொண்டு நிரப்பப்படுகிறோம்.


ஜீவனின் ஐக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த அளவுக்கு கூறியது போதுமானது. ஜீவனின் உணர்வு எப்போதும் நம்மைப் பரீட்சிக்கிறது மற்றும் நிரூபிக்கிறது; ஆனால் ஜீவனின் ஐக்கியம் எப்போதும் நமக்கு நிரப்பீட்டை வழங்குகிறது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். கர்த்தருக்கு முன்பாக உள்ள நம் நிலைமை ஜீவனின் உணர்வினால் தீர்மானிக்கப்படுகிறது; நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கான நிரப்பீடு ஜீவனின் ஐக்கியத்தின்மூலம் பெறப்படுகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.