ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் - 5
ஜீவனின் உணர்வு
ஜீவன் என்றால் என்ன என்றும், ஜீவனின் அனுபவம் என்றால் என்ன என்றும் நாம் பார்த்திருக்கிறோம். மறுபிறப்பு என்ற ஜீவனின் முதல் அனுபவத்தையும், மறுபிறப்பின் மூலமாக ஆதாயப்படுத்தப்பட்ட பல்வேறு காரியங்களையும்கூட நாம் பார்த்திருக்கிறோம். நாம் இவைகளைப் பார்த்திருப்பதால், இப்போது ஜீவனின் உணர்வு என்ற காரியத்திற்கு வரமுடியும்.
நம்மைப் பொறுத்தவரை ஜீவனின் உணர்வு மிகவும் அனுபவத்துக்குரியது, தனிப்பட்டது, நடைமுறைக்குரியது. ஆகையால் ஜீவனில் எந்தவொரு ஈடுபாடும் நாம் கொண்டிருக்க வேண்டுமானால், நாம் இந்த ஜீவனின் உணர்வுக்கு அக்கறை செலுத்தி அதை நன்றாக அறியவேண்டும். ஜீவனின் அனுபவத்தையுடைய எல்லாரும் ஜீவனின் உணர்வுக்கும் ஜீவனின் அனுபவத்துக்கும் இடையேயுள்ள ஆழமான உறவை அறிவார்கள். ஆகையால் ஜீவனின் அறிவு என்ற கருப்பொருளை ஆய்வுசெய்ய விரும்பினால், ஜீவனின் உணர்வு என்ற காரியத்தை நாம் கட்டாயம் பார்க்கவேண்டும்.
I. வேதவாக்கிய ஆதாரம்
வேதாகமம் வெளிப்படையாக ஜீவனின் உணர்வை குறிப்பிட வில்லையென்றாலும், அது உண்மையாக இந்த காரியத்தைப் பற்றிப் பேசுகிறது. "மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்,' என்று ரோமர் 8:6 கூறுகிறது. இந்த வசனம் ஜீவனின் உணர்வைப்பற்றி நமக்கு மிகத்தெளிவாகப் பேசுகிறது. ஏனெனில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சமாதானம் தெளிவாக ஓர் உணர்வின் காரியமாக இருக்கிறது. இந்தச் சமாதானம் வெளியார்ந்த சுற்றுப்புறச் சூழலைக் குறிக்கவில்லை. மாறாக உள்ளார்ந்த நிலைமையைக் குறிக்கிறது; ஆகையால் இது நிச்சயமாகவே உணர்வைப்பற்றிய காரியம்தான். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சமாதானம் ஓர் உணர்வின் காரியமாக இருப்பதால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மரணமும் ஜீவனும்கூட ஓர் உணர்வின் காரியமாக இருக்கின்றன.
மரணத்தின் உணர்வு மரணத்தின் மூலக்கூறை நாம் உணரச் செய்கிறது. பெலவீனம், வெறுமை, மனஅழுத்தம், இருள், வலி போன்றவைகள் மரணத்தின் மூலக்கூறுகளாக இருக்கின்றன. மரணம் குறைந்தபட்சம் இந்த ஐந்து மூலக்கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் இந்த மூலக்கூறுகளின் முழுமொத்தம் பெருமளவு மரணத்திற்குச் சமமானது. மரணம் மனிதர்களை பலவீனமடையச்செய்கிறது; மேலும் மனிதர்கள் மிகவும் பலவீனமடையும்போது அவர்கள் மரிக்கிறார்கள். மரணம் மனிதர்களை வெறுமையடையச் செய்கிறது. ஏனெனில் மரணம் எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது. மரணம் மனிதர்களை மனஅழுத்தமும், இருதயத் தொய்வும் அடையச் செய்கிறது; மிக அதிகமாக மனஅழுத்தமடைந்து அமைதியாக இருப்பவர்கள் மரித்திருக்கிறவர்கள். மரணம் மனிதர்களை இருளடையச்செய்கிறது; ஆழமான இருளில் இருப்பவர்கள் மரணத்திற்குள் நுழைந்திருப்பவர்கள். அதே நேரத்தில், மரணம் மனிதர்களை வலி அனுபவிக்கச்செய்கிறது; மிக அதிகமாக வலி அனுபவிக்கிற ஒருவர் மரணத்திற்குள் விழுந்தவர். இவைகளெல் லாம் மரணத்தின் மூலக்கூறுகளாக இருக்கின்றன; ஆகையால் நாம் இவைகளை உணரும்போது மரணத்தை உணர்கிறோம்.
இந்த மரணத்தின் உணர்வுகள் நாம் மாம்சத்திற்கு அக்கறை செலுத்துவதின் விளைவுகளாகும். எப்போதெல்லாம் நாம் மாம்சத்திற்கு அக்கறைசெலுத்துகிறோமோ, அப்போ தெல்லாம் உடனே இந்த மரணத்தின் உணர்வுகளை நாம் கொண்டிருப்போம். எடுத்துக்காட்டாக, நீங்கள் கர்த்தருடைய நாளின் பிற்பகலில் மாம்சத்திற்கு சிறிதளவு அக்கறைசெலுத்தினால், நீங்கள் மாலையில் அப்பம்பிட்கும் கூட்டத்திற்கு வரும்போது உள்ளாக நீங்கள் பலவீனமாக உணர்வீர்கள். மேலும் உங்களால் எழுந்திருக்க முடியாது. அதே நேரத்தில் நீங்கள் வெறுமையை, மனஅழுத்தத்தை இன்னும்சொல்லப்போனால் இருளை, வலியை உணர்வீர்கள். இந்த உணர்வுகளெல்லாம் மரணத்தின் உணர்வுகளாயிருக்கின்றன. சில நேரங்களில் நீங்கள் ஒன்றை மற்றதைவிடப் பலமாக உணர்கிறீர்கள். சில நேரங்களில் எல்லா வற்றையும் சமமாகவே உணர்கிறீர்கள். இருந்தபோதிலும், நாம் மாம்சத்துக்கு அக்கறை செலுத்துவதினால்தான் நாம் மரணத்தை உணர்கிறோம்.
ஜீவனின் உணர்வு மரணத்தின் உணர்வுக்கு நேர் எதிரானது. மரணத்தின் உணர்வு நம்மை பலவீனமாகவும் வெறுமையாகவும் உணரச்செய்கிறது, ஆனால் ஜீவனின் உணர்வு நம்மை பலமாகவும் திருப்தியாகவும் உணரச்செய்கிறது. மரணத்தின் உணர்வு நம்மை மனஅழுத்தமாகவும் இருளாகவும் வலியாகவும் உணரச்செய்கிறது. ஜீவனின் உணர்வு நம்மை உயிரோட்ட மாகவும் பிரகாசமாகவும் ஆறுதலாகவும் உணரச்செய்கிறது. ஜீவனின் உணர்வு நம்மை பலமாகவும் திருப்தியாகவும் உயிரோட்டமாகவும் பிரகாசமாகவும் ஆறுதலாகவும் உணரச்செய்வதால், அது நம்மை சமாதானத்தின் உணர்வையும் கொண்டிருக்கச்செய்கிறது, அதாவது நலமாகவும் அமைதியாகவும் உணரச்செய்கிறது.
ரோமர் 8:6-ல் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களெல்லாம் ஒன்றுக்கொன்று முரணானவைகள் என்று நாம் உணரவேண்டும். மாம்சம் ஆவிக்கு முரணாக இருக்கிறது, மேலும் மரணம் ஜீவனுக்கும் சமாதானத்துக்கும் முரணாக இருக்கிறது. மரணம் ஜீவனுக்கு மட்டுமல்ல, சமாதானத்துக்கும் எதிரானது. ஆகையால் பலவீனம், வெறுமை, மனஅழுத்தம், இருள் ஆகியவைகளை மட்டும் மரணம் உள்ளடக்கவில்லை, மரணம் வலியையும் உள்ளடக்கியிருக்கிறது. பலவீனம், வெறுமை, மனஅழுத்தம், இருள் ஆகியவைகள் ஜீவனுக்கு முரணானவைகள், ஆனால் வலி சமாதானத்துக்கு முரணாக இருக்கிறது.
மரணத்தின் உணர்வு நாம் மாம்சத்திற்கு அக்கறை செலுத்து வதால் ஏற்படுகிறது. ஆனால் ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வு நாம் ஆவிக்கு அக்கறை செலுத்துவதால் ஏற்படுகிறது. நாம் ஆவியில் வாழ்ந்து ஆவியைப் பின்தொடர்ந்து ஆவிக்கு அக்கறை செலுத்தும்போது, நாம் நம்முள் பலமாகவும் திருப்தி யாகவும் உணர்கிறோம்; அதேநேரத்தில் நாம் உயிரோட்டமாகவும் பிரகாசமாகவும் ஆறுதலாகவும் அமைதியாகவும் உணர்கிறோம். எடுத்துக்காட்டாக, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஓர் உணர்வைத் தந்தால், நீங்கள் அதற்கு அக்கறைசெலுத்தி கீழ்ப்படிந்தால் நீங்கள் உங்களுக்குள் பலமாகவும், திருப்தி யாகவும் உணர்வீர்கள்; அதே நேரத்தில் நீங்கள் உயிரோட்ட மாகவும் பிரகாசமாகவும் ஆறுதலாகவும் அமைதியாகவும் உணர்வீர்கள், இவ்வாறு நீங்கள் ஆவிக்கு அக்கறைசெலுத்துவதால் நீங்கள் ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வைக் கொண்டிருப் பீர்கள்.
ரோமர் 8:6 ஜீவனின் உணர்வை குறிப்பிடுவதற்கான காரணம். இது ஆவியானவர், ஜீவன்,ஜீவவிதி ஆகிய மூன்று காரியங்களை முன்னதாகவே குறிப்பிட்டுள்ளது என்பதேயாகும். ஆவியானவர் நம்மில் இருக்கிறார், நம் ஆவியோடு ஒரே ஆவியாகிவிட்டார்: ஜீவன் ஆவியானவரின் உள்ளடக்கமாக ஆவியானவரில் உள்ளடங்கியிருக்கிறது; மேலும் விதி, ஜீவனின் இயல்பான ஆற்றலும், செயல்பாடுமாக இருக்கிறது. இந்த மூன்றும் ஒன்றாக இணைந்து ஜீவனுடைய ஆவியின் விதியாகிறது; இது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நமக்கு ஒரு குறிப்பிட்ட உணர்வைத் தந்து, நம்மில் ஜீவனின் எல்லாக் காரியங்களுக்கும் பொறுப்பாக இருக்கிறது. நாம் ஆவிக்கு அக்கறைசெலுத்தி ஆவியின்படி செயல்பட்டு வாழும்போதெல்லாம், இந்த விதி ஜீவன் மற்றும் சமா தானத்தின் உணர்வை நமக்குத் தருகிறது. ஜீவனை உணர்வ தென்றால், பலமாகவும் திருப்தியாகவும் உயிரோட்டமாகவும்
பிரகாசமாகவும் பசுமையாகவும் உணர்வதாகும். சமா தானத்தை
உணர்வதென்றால், ஆறுதலாகவும் அமைதலாகவும் நலமாகவும்
இயல்பாகவும் உணர்வதாகும். நாம் மாம்சத்திற்கு அக்கறை
செலுத்தி மாம்சத்தின்படி செயல்பட்டு வாழ்ந்தால், இந்த விதி
மரணத்தின் உணர்வை நமக்குத் தரும். அதாவது நாம் பலவீன
மாகவும் வெறுமையாகவும் மன அழுத்தமாகவும் இருளாகவும்
வலியாகவும் உணர்வோம்.
ஆகையால் ரோமர் 8:6
முழுவதும் உணர்வைப்பற்றிய
காரியத்தைப் பேசுகிறது. இந்த உணர்வு ஜீவனுடைய ஆவியின்
விதியால் நமக்குத் தரப்படுகிறது. ஜீவ ஆவியின் விதி
ஜீவனுக்குரியதாக இருப்பதால், அது தருகிற உணர்வும் கூட
ஜீவனுக்குரியதாக இருக்கிறது. ஆகையால் ரோமர் 8:6-ல்
குறிப்பிடப்பட்டுள்ள உணர்வு, இந்த விதியால் நமக்குத்
தரப்படுவதால் அது ஜீவனின் உணர்வுக்குரியதாக இருக்கிறது. ஜீவனின் உணர்வைப்பற்றிய காரியத்தைக்குறித்து வேத வாக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது இடம் எபேசியர் 4:19 ஆகும். புறவினத்தார் "உணர்வில்லாதவர்க ளாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும் படி தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக் கிறார்கள், என்று அது கூறுகிறது. உலகத்திலுள்ள மக்கள் எல்லா உணர்வு களையும் உதறித்தள்ளிவிட்டதே அவர்கள் விருப்பத்தோடு பாவம்செய்து, ஒழுக்கக்கேட்டை நடப்பிப் பதற்கான காரணம் என்று இது நமக்குச் சொல்லுகிறது. நிச்சயமாக மனிதன் பாவம்செய்து ஒழுக்கக்கேட்டை நடப்பிக்கிறபோது, அவனுக்குள் உள்ள உணர்வுகளை அவன் ஏற்கெனவே உதறித்தள்ளியிருக்க வேண்டும். ஒரு மனிதன் பாவம்செய்து, ஒழுக்கக்கேட்டை நடப்பிக்கும்போது அவனுக்கு எந்த உணர்வும் இல்லை என்று நாம் கூறமுடியாது, ஆனால் குறைந்தது அவன் தன் உணர்வுகளை ஒதுக்கிவைத்து விட்டான் என்று நாம் கூறமுடியும். ஒருவன் உணர்வுகளை ஒதுக்கிவைக்காவிட்டால், அதாவது ஒருவன் உள்ளான உணர்வுகளால் மட்டுப்படுத்தப்பட்டால், அப்போதுகூட அவன் பாவம்செய்து ஒழுக்கக்கேட்டை நடப்பிக்கமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பாவம்செய்து ஒழுக்கக் கேட்டை நடப்பிக்கிறவர்கள் எல்லாரும் தங்கள் உணர்வுகளை ஒதுக்கிவைத்தவர்களே. பாவம்செய்து ஒழுக்கக்கேட்டை நடப்பிக்கிற எவனும் தன் உணர்வுகளை ஒதுக்கிவைத்தே ஆகவேண்டும். ஏமாற்றுதல், திருடுதல், மற்றவர்களை அடித்தல், மற்றவர்களைக் கொள்ளையிடுதல் அல்லது வேறு எந்தவித கெட்ட, தீய செயல்களை யாராவது ஒருவன் செய்யும்போது, அவன் தன் உணர்வுகளை ஒதுக்கி வைத்தேயாக வேண்டும். ஒருவன் எவ்வளவு அதிகமாகப் பாவம்செய்து ஒழுக்கக்கேட்டை நடப்பிக்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவன் உள்ளான உணர்வை ஒதுக்கிவைக்கவேண்டும். ஆகையால் ஒரு தீய, ஒழுக்கக்கேடான மனிதன் உணர்வுகளற்றவனாக இருக்கிறான். ஆனால் ஒரு நல்ல, ஒழுக்கமான நபர் உணர்வில் செழிப்பாக இருக்கிறார்.
இப்போது ஒரு கிறிஸ்தவனின் உணர்வா, ஒரு புறவினத்தானின் உணர்வா யாருடைய உள்ளான உணர்வு பலமானது? நாம் கிறிஸ்தவர் களையும் அவிசுவாசிகளையும் ஒப்பிடுவோமானால் நம் உணர்வு பலமானதா, அவர்களுடைய உணர்வு பலமானதா? நம் உணர்வுகள் மிகப்பலமான வைகள் என்று நாம் பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களிடம் உள்ள உணர்வுகளுடன் கூடுதலாக அவர்களிடம் இல்லாத ஜீவனின் உணர்வுகளும் நம்முள் இருக்கின்றன. ஆகையால் நாம் பாவம்செய்து ஒழுக்கக்கேட்டை நடப்பித்தால் நாம் அவர்களைவிட மிகக்கடுமையாக நம் உணர்வுகளை ஒதுக்கிவைத்திருக்க வேண்டும். இந்தக் காரணத்தினால்தான் புறவினத்தார் செய்கிறது போல நாமும் எல்லா உணர்வுகளையும் ஒதுக்கிவைக்கக்கூடாது என்று வேதவாக்கியம் நமக்கு அறிவுரைகூறுகிறது. இவ்வாறு நாம் நம் உள்ளான உணர்வுக்கு அக்கறைசெலுத்த வேண்டுமென்று வேதவாக்கியம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நிச்சயமாக இது ஜீவனின் உள்ளான உணர்வுக்குச் செவிகொடுப்பதை வலியுறுத்துகிறது. எல்லா உணர்வுகளையும் ஒதுக்கி வைக்கிற அவிசுவாசிகளைப்போல இருக்கக்கூடாது என்று நமக்கு எபேசியர் 4 அறிவுரைகூறியபிறகு, நாம் பழைய மனிதனை கழற்றிப்போட்டு, புதிய மனிதனை அணிந்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கூறுகிறது. இந்தப் புதிய மனிதன் ஆவியானவரிலுள்ள ஜீவனுக்குரியவன். இந்தப் புதிய மனிதனில் வாழ்வதற்கு ஆவியானவரிலுள்ள ஜீவனில் நாம் வாழவேண்டும். ஆகையால் அவிசுவாசிகளைப்போல நாமும் எல்லா உணர்வு களையும் உதறித்தள்ளாமல் இந்தப் புதிய மனிதனில் வாழவேண்டும் என்று எபேசியர் 4 நமக்கு அறிவுரை கூறுகிறது. ஆவியானவரிலுள்ள ஜீவனில் நாம் வாழ்ந்து, ஆவியானவரிலுள்ள ஜீவனின் உணர்வுக்கு அக்கறை செலுத்தி, ஜீவனின் இந்த உணர்வின்படி வாழவேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
மேலும் ஏறக்குறைய அப்போஸ்தலர்களின் எல்லா நிருபங்க ளிலும் கிருபை, சமாதானம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிற ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்துதலின் வார்த்தைகள் இருக்கின்றன. நம்மால் ஆதாயப்படுத்தப்படும் தேவனே கிருபை, தேவனை ஆதாயப்படுத்திக்கொண்டதின் உணர்வே சமாதானம். நம் ஜீவனாக மாறுவதற்கும், நாம் அனுபவித்து மகிழ்வதற்கும் நம்மால் ஆதாயப்படுத்தப்படும் தேவனே கிருபை. இந்தக் கிருபை நமக்குள் சமாதானத்தை விளைவிக்கிறது; இது நமக்குள் சமாதானத்தின் உணர்வை கொண்டிருக்கச் செய்கிறது. அனுதினமும் தேவனை அனுபவமாக்குகிற, தேவனுடைய ஜீவனை அனுபவித்துமகிழ்கிற தேவனுடைய ஜீவனின் வல்லமையை ருசிபார்க்கிற ஒரு நபர் தனக்குள் சமாதானத்தைக் கொண்டிருந் தேயாகவேண்டும். இந்த சமாதானம் அவன் கிருபையை அனுபவிக்கும்போது கொண்டிருக் கிற உணர்வாகும். ஆகையால் நாம் நம்முள் சமாதானத்தைக் கொண்டிருக்கவில்லையென்றால் அல்லது சமாதானத்தை உணரவில்லையென்றால், நாம் கிருபையில் குறைவுபட்டிருக்கி றோம் என்பதையே இது நிரூபிக்கிறது. நாம் கிருபையில் குறைவுபடுகிறபோது நாம் தேவனில் குறைவுபடுகிறோம் என்று அர்த்தமாகும். நம்முள் போதுமான அளவுக்கு தேவனை ஆதாயப்படுத்திக்கொள்ளாததாலும், தேவனுடைய ஜீவனின் போதுமான நிரப்பீட்டைப் பெற்றுக்கொள்ளாததாலும், தேவனுடைய ஜீவனின் வல்லமையை போதுமான அளவுக்கு அனுபவமாக்காத தாலும் நாம் நம்முள் சமாதானத்தில் குறைவுபடுகிறோம். நாம் நம்முள் போதுமான அளவுக்கு தேவனை ஆதாயப்படுத்தி யிருந்தால், போதுமான அளவுக்கு தேவனையும் தேவனுடைய ஜீவனையும் அனுபவமாக்கியிருந்தால், நாம் நம்முள் போதுமான அளவுக்கு சமாதானத்தைக் கொண்டிருப்போம். இந்தச் சமாதானம் சுற்றுப்புறச்சூழலில் உள்ள சமாதானமல்ல, மாறாக உள்ளான சமாதானத்தின் ஒரு நிலைமையாகும். அப்போஸ்தலர்களின் வாழ்த்துதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சமாதானம் இந்த வகையான உள்ளான சமாதானம் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். உள்ளான சமாதானம் என்பது உணர்வைப்பற்றிய காரியமாகும். மக்கள் சமாதானத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்று அப்போஸ்தலர்கள் வாழ்த்தினபோது, மக்கள் உள்ளான உணர்வின் சமாதானத்தை அல்லது உள்ளான சமாதானத்தைக் கொண்டிருக்கவேண்டுமென்று அவர்கள் வாழ்த்தினார்கள் என்று அர்த்தமாகும். சமாதானத்தின் உள்ளான உணர்வு ஜீவனின் உணர்வாகும். ஆகையால் மக்கள் உள்ளான சமாதானத்தின் உணர்வைக் கொண்டிருக்கவேண்டும் என்று அப்போஸ்தலர்கள் வாழ்த்தியபோது, மக்கள் ஜீவனின் உள்ளான உணர்வுக்குக் கவனம் செலுத்தவேண்டும் என்று அப்போஸ்தலர்கள் விரும்பி னார்கள்.
II. ஜீவனின் உணர்வின் ஊற்று
நாம் பேசிக்கொண்டிருக்கிற ஜீவனின் உணர்வு எங்கிருந்து வருகிறது? அது எதிலிருந்து உற்பத்திசெய்யப்படுகிறது? அது மறுபிறப்பின்மூலம் நாம் ஆதாயப்படுத்திக்கொண்ட தேவனுடைய ஜீவன், ஜீவவிதி, பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்து, தேவன் ஆகியவர்களிலிருந்து உற்பத்திசெய்யப்படுகிறது. தேவனுடைய ஜீவன், ஜீவவிதி, பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்து, தேவன் ஆகியவர்கள் ஓர் உணர்வை நம்முள் ஏற்படுத்துகிறார்கள். இந்த உணர்வைத்தான் நாம் ஜீவனின் உணர்வு என்று அழைக்கின்றோம்.
ஒவ்வொரு ஜீவனுக்கும் அதனதன் உணர்வுகள் இருக் கின்றன. மேலும் ஜீவன் எவ்வளவு பலமாக இருக்கிறதோ அவ்வளவு கூர்மையாக அதன் உணர்வுகளும் இருக்கிறது. தேவனுடைய ஜீவனே மிகப்பலமான ஜீவன்; ஆகையால் நம்மிலுள்ள இந்த ஜீவன் வெறுமனே உணர்வுகளை மட்டுமல்ல, பலமான உணர்வு களையும் ஏற்படுத்துகிறது.
ஜீவவிதி ஜீவனிலிருந்து வருவதால், அதற்கும் உணர்வுகள் இருக்கின்றன. ஆகையால் நம்மிலுள்ள இந்த விதி விசேஷமாக நாம் அதற்குக் கீழ்ப்படியாதபோது உணர்வுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக, நம் உடல் சாதாரணமாக இருக்கும்போது, எந்த விசேஷ உணர்வும் அதில் இல்லை. ஆனால் அது நோய்வாய்ப்படும்போது அதில் பலமான உணர்வு இருக்கிறது. மேலும் இந்தப்பலமான உணர்வு உடலுக்குள் இருக்கிற விதிக்கு நாம் கீழ்ப்படியாதபோது நிகழ்கிறது. அதைப்போல, நாம் ஜீவவிதிக்குக் கீழ்ப்படியும்போது அது அதிக உணர்வை நமக்குத் தருவதில்லை, ஆனால் நாம் அதற்குக் கீழ்ப்படியாதபோது அது மிகவும் வேறுபட்ட உணர்வுகளைத் தருகிறது.
பரிசுத்த ஆவியானவர் தைலமாக நம்மில் அபிஷேகித்து அசைகிறார்; கிறிஸ்து செயல்பாடுடன் நம்மில் வாழ்கிறார்; மேலும் தேவன் நம்மில் வேலைசெய்கிறார். மூவரும் செயல் பாட்டோடும் நடவடிக்கையோடும் நம்மில் இருக்கிறார்கள். அவர்கள் அமைதி யாகவும் இல்லை, அசைவற்றவர்களாகவும் இல்லை; ஆகையால் அவர்கள் எல்லாரும் நம்மில் உணர்வுகளை ஏற்படுத்துகிறார்கள்.
இவ்வாறு அது நம்முள் இருக்கிற தேவனுடைய ஜீவனோ, ஜீவவிதியோ. பரிசுத்த ஆவியானவரோ, கிறிஸ்துவோ, தேவனோ யாராக இருந்தாலும் அவர்கள் நமக்கு உணர்வுகளை ஏற்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் நமக்கு உணர்வுகளைத் தருவதில் ஒன்றாக கலந்திணைந்திருக்கிறார்கள். ஆகையால் இந்த ஐந்து காரியங்களிலிருந்து வருகிற உணர்வுகள் ஐந்து வகையான உணர்வுகள் அல்ல, மாறாக ஒரே உணர்வு, அதாவது நாம் பேசுகிற ஜீவனின் உணர்வாகும்.
தேவனுடைய ஜீவன், ஜீவவிதி, பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்து, தேவன் ஆகிய இந்த ஐந்திலிருந்தும் வருகிற உணர்வுகள் ஒரே வகையான உணர்வாக இருப்பது ஏன்? மேலும் இந்த உணர்வு ஜீவனின் உணர்வாக இருப்பது ஏன்? இது ஏனென்றால், பரிசுத்த ஆவியானவரும் கிறிஸ்துவும் தேவனும் மூவொரு தேவனாக இருக்கிறார்கள்; தேவனுடைய ஜீவன் தேவனே; இந்த ஜீவவிதி தேவனுடைய ஜீவனிலிருந்து வருகிறது. ஆகையால் கண்டிப்பாகப் பேசுவதானால் இந்த ஐந்தும் ஒன்றே. ஆகையால் இவர்கள் நம்மிலிருக்கும்போது, நமக்குத் தருகிற உணர்வுகள் ஒரே வகையான உணர்வாகவே இருக்கிறது. இது ஜீவனின் மூவொரு தேவனிலிருந்தும் தேவனுடைய ஜீவனிலிருந்தும் ஜீவவிதியிலிருந்தும் வருவதே, இந்த உணர்வு ஜீவனின் உணர்வாக இருப்பதின் காரணமாகும். நம் ஜீவனாவதே நம்மிலுள்ள மூவொரு தேவனுடைய பிரதான குறிக்கோளாகும். மேலும் இந்த ஜீவன் ஜீவவிதியையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆகையால் இவர்கள் நமக்கு ஏற்படுத்துகிற உணர்வுகள் ஜீவனிலிருந்து வருகின்றன, ஜீவனுக்குரியதாக இருக்கின்றன; எனவே, இவைகள் ஜீவனின் உணர்வாக இருக்கின்றன. இந்த உணர்வு ஒன்றுதான். ஆனால் இதற்கு ஐந்து அம்சங்கள் இருக்கின்றன. இது தேவனுடைய ஜீவனிலிருந்து வருகிறது, மேலும் இது தேவனுடைய ஜீவவிதியிலிருந்து வருகிறது; ஆகையால் இதற்கு தேவனுடைய ஜீவனின் சுபாவமிருக்கிறது, இதைப்போல தேவனுடைய ஜீவவிதியின் செயல்பாடும் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த உணர்வு பரிசுத்த ஆவியானவர்,கிறிஸ்து, தேவன் ஆகியோரிடமிருந்தும் வருகிறது; ஆகையால் இது நம்மில் பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தின் மூலக்கூறையும், நம்மில் வாழ்கிற கிறிஸ்துவின் மூலக்கூறையும், நம்மில் அவருடைய சித்தத்தை உருவாக்குகிற, நிறை வேற்றுகிற, தேவனுடைய மூலக்கூறையும் உள்ளடக்கியிருக் கிறது. இந்த பல்வேறு அம்சங்களினால், இந்த உணர்வு வளமாகவும் பலமாகவும் கூர்மையாகவும் இருக்கிறது; இது அவிசுவாசிகளிடையே உள்ள மிகச்சிறந்த உணர்வைவிட இன்னும் வளமாகவும் பலமாகவும் கூர்மையாகவும் இருக் கிறது. அவிசுவாசிகள் கொண்டிருக்கக்கூடிய மிகச்சிறந்த உணர்வுகள் மனிதர்களிலுள்ள படைக்கப்பட்ட நன்மையின் உணர்வேயாகும். ஆனால், படைக்கப்பட்ட நன்மையின் உணர்வோடுகூட, இந்த ஜீவனின் உணர்வு மறுபிறப்பின் மூலம் நாம் ஆதாயப்படுத்திக் கொண்ட காரியங்களால் நமக்குள் கூட்டிச்சேர்க்கப்பட்ட ஒரு தெய்வீக உணர்வாகும்.
III. ஜீவனின் உணர்வின் செயல்பாடு
அப்படியானால் இந்த ஜீவனின் உணர்வின் செயல்பாடு அல்லது உபயோகம்தான் என்ன? நாம் எங்கு வாழ்கிறோம் என்பதை தொடர்ச்சியாக நாம் அறிந்துகொள்ளும்படிச் செய்வதே ஜீவனின் உணர்வின் செயல்பாடு அல்லது உபயோகமாகும். நாம் இயற்கையான ஜீவனில் வாழ்கிறோமா ஆவியானவரின் ஜீவனில் வாழ்கிறோமா? நாம் மாம்சத்தில் வாழ்கிறோமா ஆவியில் வாழ்கிறோமா? இதைத்தான் ஜீவனின் உணர்வு நமக்கு தொடர்ச்சியாக தெரியப்படுத்துகிறது, மேலும் இதற்காகத்தான் நம்மிடம் ஜீவனின் உணர்வு இருக்கிறது. ஆகையால், நம்மில் ஜீவனின் உணர்வு நம்மை வழிநடத்தி நம்மை சோதித்தறிகிறது. நாம் ஜீவனின் உணர்வைப் பின்தொடர்ந்தால் தேவன் நமக்குக் கொடுக்கிற வழி நடத்துதலை நாம் பின்தொடர்கிறோம், மேலும் அதேநேரத்தில் நாம் எங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைப்பற்றிய சரிபார்த்தலையும் பெறுகிறோம்.
நாம் கூறியதை இப்போது பிரயோகிப்போம். மரணத்தின் உணர்வு நாம் ஆவியில் வாழவில்லை, மாம்சத்தில் வாழ்கிறோம் என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் மரணத்தின் உணர்வைக் கொண்டிருக்கும்போது, நாம் ஆவியில் இல்லை, மாம்சத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறியவேண்டும். பலவீனம், வெறுமை, மனஅழுத்தம், இருள், வலி ஆகியவைகளை மரணத்தின் உணர்வு உள்ளடக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட உணர்வுகளை நாம் கொண்டிருக்கும்போது, நாம் ஏற்கெனவே சரியாக இல்லை, அதாவது நாம் ஏற்கெனவே ஆவியில் வாழாமல் மாம்சத்தில் வாழ்கிறோம் என்பதை நம்மிலுள்ள ஜீவனின் உணர்வு நமக்குத் தெரியப்படுத்துகிறது என்பதே இதன் அர்த்தமாகும்.
அப்படியானால் நாம் தேவனுக்குமுன்பாக சரியாக இருக்கிறோம். மேலும் ஆவியில் வாழ்கிறோம் என்று நாம் அறிவதற்கு, ஜீவனின் உணர்வு எந்த உணர்வைத்தான் தருகிறது? அது ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வை நமக்குத் தருகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது பலமாகவும் திருப்தியாகவும் உயிரோட்டமாகவும் பிரகாச மாகவும் ஆறுதலாகவும் நம்மை உணரச்செய்கிறது. நாம் எப்போதெல்லாம் பலமாகவும் திருப்தியாகவும் உயிரோட்ட மாகவும் பிரகாசமாகவும் ஆறுதலாகவும் நம்முள் உணர்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் தேவனுக்குமுன்பாக சரியாக இருக்கிறோம் என்பதற்கும், நாம் ஆவியில் வாழ்கிறோம் என்பதற்குமான உள்ளார்ந்த நிரூபணம் நம்மிடம் இருக்கிறது.
ஆகையால், நம்முள் ஜீவனின் உணர்வுக்கு மிகப்பெரிய செயல்பாடு இருக்கிறது. இது தொடர்ச்சியாக நம்மை வழிநடத்தி, நாம் எங்கு வாழவேண்டும் என்பதை நமக்குத் தெரியப்படுத்து கிறது. மேலும் நாம் இப்போது எங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை இது நமக்குத் தொடர்ச்சியாக நிரூபித்துக்காட்டுகிறது.
ஜீவனில் நம்மை தொடர்ந்து வழிநடத்துவதும் இந்த உணர்வுதான்; ஜீவனில் நம் நிஜமான நிலைமையை நமக்கு தொடர்ச்சியாக நிரூபித்துக்காட்டி, வெளிப்படுத்துவதும் இந்த உணர்வுதான். எனவே இது நம்முள் நம் வழிகாட்டியாகவும் சாட்சியாகவும் இருக்கிறது. இது உள்ளார்ந்த ஜீவனையும் சமாதானத்தையும் நம்மை உணரச்செய்யும்போதெல்லாம். ஜீவனில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென்று நிரூபிக்கிறது. ஜீவனும் சமாதானமும் இல்லாததாக அது நம்மை உணரச்செய்யும் போதெல்லாம். ஜீவனில் நமக்கு ஏதோவொரு பிரச்சினை இருக்கிறது என்று நிரூபித்துக்காட்டுகிறது.
உங்களுக்குள் ஜீவன் மற்றும் சமாதானம் இருப்பதின் உணர்வு இல்லையென்றோ, ஜீவன் மற்றும் சமாதானம் இல்லாததின் உணர்வும் இல்லையென்றோ நீங்கள் சொல்லக்கூடும், அதாவது பலமாக, திருப்தியாக, உயிரோட்டமாக, பிரகாசமாக அல்லது ஆறுதலாக இருப்பதின் உணர்வும் உங்களுக்கு இல்லை, மேலும் பலமாக, திருப்தியாக, உயிரோட்டமாக, பிரகாசமாக அல்லது ஆறுதலாக இல்லாததின் உணர்வும் உங்களுக்கு இல்லை என்று நீங்கள் சொல்லக்கூடும். இப்படிப்பட்ட நிலைமையில் இருப்பது, நீங்கள் ஒரு பிரச்சினையில் இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கிறது. நேர்மறையாக, நமக்கு ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வு இருக்கவேண்டும். நாம் உள்ளே பலமாகவும் திருப்தியாகவும் உயிரோட்டமாகவும் பிரகாசமாகவும் ஆறுதலாகவும் அமைதி யாகவும் உணரவேண்டும்; அப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. சிலவேளைகளில், தேவன் நம்மை நம் உணர்ச்சிகளை விட்டு வெளியே நடத்திச்சென்று, ஒரு குகைக்குள் நம்மை நுழைவதுபோல செய்யவிரும்பினாலும், அந்தக் குகையில்கூட நம் மிக ஆழமான பகுதியில் நமக்கு ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வு இன்னும் இருக்கிறது. வெளியார்ந்த உணர்ச்சிகள் போய்விட்டபோதிலும், மிக ஆழமான பகுதியில் ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வு இன்னும் இருக்கிறது.
ஜீவனும் சமாதானமும், ஜீவனின் உணர்வு நமக்குள்ளே தருகிற நேர்மறையான உணர்வுகளாகும், இது ஜீவனில் நம் நிலைமை இயல்பாக இருக்கிறது என்று நிரூபிக்கிறது. பலவீனமும் அமைதியின்மையும், ஜீவனின் உணர்வு நமக்குள்ளே தருகிற எதிர்மறையான உணர்வுகளாகும், இது ஜீவனில் நாம் ஏதோ பிரச்சினையைக் கொண்டிருக்கிறோம் என்று நிரூபிக்கிறது. பலவீனமும் அமைதியின்மையும் ஆகிய உணர்வுகள் மரணத்தின் உணர்வாக இருக்கின்றன. மரணத்தின் உணர்வு நிச்சயமாக நாம் மாம்சத்திற்கு அக்கறை செலுத்துவதிலிருந்தும், தேவனுக்குப் புறம்பான எந்தக் காரியத்தைத் தொடுவதிலிருந்தும் வருகிறது.
மரணத்தின் ஒவ்வொரு உணர்வும் நாம் ஏறக்குறைய மாம்சத்திற்கு அக்கறை செலுத்துகிறதையும், தேவனுக்கு புறம்பான காரியங் களை ஓரளவிற்குத் தொட்டுவிட்டதையும் நிரூபிக்கிறது. ஆகையால் நாம் மாம்சத்திற்கு அக்கறைசெலுத்துகிறோமா. ஆவியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா, தேவனைத் தொட்டுக் கொண்டிருக்கிறோமா என்பவையெல்லாம் நம்முள் இருக்கும் ஜீவனையும் சமாதானத்தையும் அல்லது பலவீனத்தையும் அமைதியின்மை யையும் சார்ந்திருக்கிறது. ஜீவனும் சமாதானமும் உள்ளே இருந்தால் அது நாம் ஆவியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், நாம் தேவனைத் தொட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. நாம் உள்ளே பலவீனமாகவும் அமைதியின்மை யாகவும் உணர்ந்தால் அது நாம் மாம்ச சிந்தையுடையவர்களாய் இருக்கிறோம் என்றும், தேவனுக்குப் புறம்பான காரியங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறோம் என்றும் நிரூபிக்கிறது.
ஒரு கிறிஸ்தவன் ஒருபோதும் பலவீனமாக உணரக்கூடாது என்பது அவசியமில்லை, ஆனால் உணரும்போதுகூட, இன்னும் அவன் அவன் பலமாக பலவீனமாக இருப்பதாக உணரவேண்டும். அவன் பலவீனமாக உணர்வது ஏனென்றால் அவன் தன்னையே அறிந்துகொண்டான்; அவன் பலமாக உணர்வது ஏனென்றால் அவன் கிறிஸ்துவைத் தொட்டு கிறிஸ்துவை தன் ஜீவனாக அறிகிறான். நாம் தொடர்ந்து பலவீனத்தை மட்டுமே உணர்ந்து ஒருபோதும் பலமாக உணரவில்லையென்றால், ஏதோ தவறு இருக்கிறது. தான் பலவீனமாக இருக்கிறபோதெல்லாம் தான் பலமாக இருப்பதாக அப்போஸ்தலன் கூறினார் (2 கொரி. 12:10). பலமான ஒரு நபர் தன் சொந்த பலவீனத்தை உணரும்போது, அந்தப் பலவீனத்தை பொருட்படுத்துவதில்லை. நாம் எப்போதுமே நம் பலவீனத்தை சிந்தித்து பலமாக இருக்கமுடியாவிட்டால், நமக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்று இது நிரூபிக்கிறது. நாம் ஏறக்குறைய மாம்சத்திலேயே இருந்துகொண்டிருக்கக்கூடும், ஏனென்றால் பலவீனம் மரணத்தின் ஓர் உணர்வாகும், மேலும் மரணத்தின் உணர்வு எப்போதுமே மாம்சத்திற்கு அக்கறைசெலுத்துவதிலிருந்தே வருகிறது.
ஒரு கிறிஸ்தவன் பலவீனமாக இருந்தால்கூட பலமாக உணரக்கூடும். அவன் வலியை உணர்ந்தால்கூட சமாதானத்தின் உணர்வைக்கொண்டிருக்கக்கூடும். அவன் வலியை உணர்வது ஏனென்றால், வெளியே இருந்து வரும் உபத்திரவத்தை சந்திக்கிறான்; அவன் சமாதானத்தின் உணர்வைக் கொண் டிருப்பது ஏனென்றால், தன் உள்ளிலிருந்து கர்த்தரைச் சந்திக்கிறான். கர்த்தரைத் தொடுகிறான். நாம் வெளியே இருந்து உபத்திரவத்தை சந்தித்தும் உள்ளார்ந்தரீதியில் நமக்கு சமாதானம் இல்லையென்றால் ஏதோ தவறு இருக்கிறது. உலகத்தில் நமக்கு உபத்திரவம் இருக்கிறது, ஆனால் தம்மில் சமாதானம் இருக்கிறது என்று கர்த்தர் கூறுகிறார் (யோவான் 16:33). கர்த்தரில் வாழ்கிற ஒருவன் அல்லது ஆவியில் வாழ்கிற ஒருவன், வெளியிலிருந்து அதிக உபத்திரவத்தைச் சந்திக்கக்கூடும், இருப்பினும் அவனுக்கு இன்னும் உள்ளார்ந்த ரீதியில் சமாதானம் இருக்கிறது: இல்லாவிட்டால், அவன் ஆவியில் வாழவில்லை என்று அது நிரூபிக்கிறது. உபத்திரவத்தில் இருக்கும்போது, நமக்கு உள்ளார்ந்த சமாதானம் குறைவுபட்டால், நாம் ஆவியில் வாழவில்லை என்று அது நிருபிக்கிறது; எந்த உபத்திரவமும் இல்லாமல் இருக்கும்போதும் நமக்கு உள்ளார்ந்த சமாதானம் இல்லை யென்றால், நாம் ஆவியில் வாழவில்லை என்பதற்கு அது இன்னும் அதிகமான நிரூபணமாகும்.
ஆகையால், ஜீவனில் நம் நிலைமையைப் பொறுத்தவரை, நாம் மாம்சத்திற்கு அக்கறைச்செலுத்துகிறவர்கள் அல்லது ஆவிக்கு அக்கறைசெலுத்துகிறவர்கள், நாம் மாம்சத்தில் வாழ்கிறோம் அல்லது ஆவியில் வாழ்கிறோம் என்பது ஜீவனின் உணர்வின் மூலம் நமக்கு நிரூபிக்கப்பட்டு, தெரியப் படுத்தப்படுகிறது. இவ்விதமான நிரூபித்தல் மூலமாகத்தான் ஜீவனின் உணர்வு நமக்குள்ளிருந்து வழிகாட்டுதலைத்தருகிறது. நாம் இவ்விதமான நிரூபித்தலின் வழிகாட்டுதலைப் பின்தொடர்ந்தால் தான் நாம் ஜீவனில் வாழமுடியும். ஆகையால், நாம் ஜீவனில் தொடர்ந்து செல்ல விரும்பினால், இந்த ஜீவனின் உணர்வு உள்ளிருந்து நமக்குத் தருகிற நிரூபித்தலுக்கும் வழிநடத்துதலுக்கும் நாம் கவனம்செலுத்த வேண்டும்.