ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் - 3
ஜீவனின் முதல் அனுபவம்-மறுபிறப்பு
ஜீவன் என்றால் என்ன என்றும், ஜீவனின் அனுபவம் என்றால் என்ன என்றும் நாம் பார்த்திருக்கிறோம். இப்போது நாம் மறுபிறப்பு என்ற ஜீவனின் முதல் அனுபவத்தைப் பார்ப்போம். மறுபிறப்பு தேவனுடைய ஜீவனுக்குரிய நம் அனுபவத்தின் முதல்படியாகும். ஆகையால் இது தேவனுடைய ஜீவனுக்குரிய நம் முதல் அனுபவமாகும். இந்த அனுபவம் மிகவும் அடிப்படையானதும் அதி முக்கிய மானதுமாகும். இதைப் பார்க்க நாம் பல்வேறு குறிப்புகளைப் பயன்படுத்துவோம். முதலில் நாம் இதைப் பார்ப்போம்.
I. மறுபிறப்பு ஏன் அவசியம்?
நாம் ஏன் மறுபடிபிறப்பிக்கப்பட வேண்டும்? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, தாழ்வான அம்சத்திலிருந்து பேசுவதானால், நம் ஜீவன் கெடுக்கப்பட்டு, தீமையாக மாறினதாலும் (எரே. 17:9; ரோமர் 7:18), தீமையிலிருந்து அது நன்மையாக மாற்றப்படமுடியாததாலும் (எரே. 13:23), மறுபிறப்பு அவசியமாகிறது. மறுபிறப்பிற்கு நாம் வழக்கமாகச் சொல்லும் காரணம் இதுதான். நம் ஜீவன் (1) கெடுக்கப்பட்டதும், பொல்லாததும், (2) முன்னேற்றப்பட முடியாததுமாக இருப்பதால், நாம் மறுபடிபிறக்கவேண்டும். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் சாதுக்களெல்லாரும் மனிதனை முன்னேற்றுவதற் காக சுய-முன்னேற்றக் கொள்கையை வலியுறுத்தினார்கள். நம் மனித ஜீவன் ஏற்கெனவே கெடுக்கப்பட்டு முன்னேற்றுவதால் நல்லதாக்கப்பட முடியாத தாகிவிட்டதால், தேவனுடைய இரட்சிப்பு மனிதனை சரிசெய்வதோ முன்னேற்றுவதோ இல்லை, மாறாக மனிதனை மறுபடிபிறப்பிப்பதாகும். இதுவே நாம் மறுபடிபிறப் பிக்கப்பட வேண்டியதற்கான முதல் காரணமாகும்.
இரண்டாவது, உயர்வான அம்சத்திலிருந்து பேசுவ தானால், நாம் மறுபடிப்பிறப்பிக்கப்படுவதற்கான மற்றொரு காரணமும் இருக்கிறது. ஆனால் முதலாவது நாம் கேட்போம்: நம் ஜீவன் கெடுக்கப்பட்டு, தீமையாக மாறாமல் இருந்திருந்தாலும், மறுபடிப்பிறப்பிக்கப்பட வேண்டியது தேவையா? ஆம்; நாம் மறுபடிபிறப்பிக்கப்படவேண்டியது இன்னும் தேவைதான்; ஏனென்றால், நம் மனித ஜீவன் படைக்கப்பட்ட ஜீவன் மட்டுமே, தேவனுடைய படைக்கப்படாத ஜீவன் அல்ல. நாம் படைக்கப்பட்டபோது, படைக்கப்பட்ட ஜீவனை மட்டுமே பெற்றோம்; தேவனுடைய படைக்கப்படாத ஜீவனை நாம் பெறவில்லை. நாம் தேவனுடைய படைக்கப்படாத ஜீவனைப் பெற்று, அவரைப்போலவே அவர் இருக்கிற வண்ணமாக இருக்க அவருடைய சாயலாக மறுசாயலாக்கப்படுவதே மனிதர்களாகிய நம்மைப்பற்றிய தேவனுடைய குறிக்கோளாகும். ஆகையால், நம் மனித ஜீவன் கெடுக்கப்படாமல் இருந்திருந்தாலும், நாம் மறுபடிப்பிறப்பிக்கப்படுவது இன்னும் அவசியம்தான்.
தொடக்கத்தில், ஆதாமுடைய ஜீவன் கெடுக்கப்படாமல் இருந்தாலும், அது படைக்கப்பட்ட ஜீவனாக இருந்தது, படைக்கப்படாத ஜீவன் இல்லை; அது மனித ஜீவன்; தேவனுடைய ஜீவன் இல்லை. ஆகையால் மனிதன் வீழ்ந்துபோகாமல் அல்லது அவனுடைய ஜீவன் கெடுக்கப்படாமல், எந்தத் தீமையுமில்லாமல், அவன் நல்லவனாகவே இருந்திருந்தாலும்கூட, அவனுக்கு மறுபிறப்பு இன்னும் தேவைதான். மனிதனைப் படைத்ததில் தேவனுடைய குறிக்கோள் ஒரு நல்ல மனிதனைப் பெறுவது மட்டுமல்ல, ஆனால் இன்னும் அதிகமாக, தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் உடைய தேவனைப்போலவே இருக்கிற ஒரு தேவ-மனிதனைப் பெறுவதேயாகும். ஒரு நல்ல மனிதனாக மட்டும் மனிதன் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்பியிருந்து, மனிதன் வீழ்ந்துபோகாமலும், கெடுக்கப் படாமலும் இருந்திருந்தால், அவன் மறுபடிபிறப்பிக்கப்பட வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால் மனிதன் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அதற்கும் மேலாக, அவரைப்போலவே இருக்கும் ஒரு தேவ-மனிதனே தேவ னுடைய விருப்பமாகும். ஆகையால் ஒரு நல்ல மனிதன்கூட மறுபடிபிறப்பிக்கப்படவேண்டும்.
இந்த இரண்டாவது காரணத்தை இலகுவாக எடுத்துக்கொள்ளா தீர்கள். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காரியமாகும். ஆ! மறுபிறப்பின் குறிக்கோள், நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்று தேவனைப்போல் இருப்பதே! நாம் கெடுக்கப்பட்டும், தீமையாகவும், முன்னேற்றப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறோம் என்று சொல்வது தேவையில்லாதது; ஒருவேளை நாம் முற்றிலும் நல்லவர்களாக அல்லது பூரணராகும்படி முன்னேற்றப்படக்கூடியவர்களாக இருந்திருந்தாலும், தேவனுடைய ஜீவனைப் பெறுவதற்கு நாம் மறுபடிபிறப்பிக்கப்பட வேண்டிய தேவை இன்னும் இருந்திருக்கும்.
மனிதன் தேவனைப்போலவும், அவருடைய ஜீவனையும் சுபாவத்தையும் பெற்ற தேவ-மனிதனாகவும் இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தேவன் மனிதனைப் படைத்தார். ஆனால் அவர் மனிதனைப் படைத்தபோது, தம் ஜீவனை மனிதனுக்குள் வைக்கவில்லை. அவருடைய ஜீவனைப் பெற்றுக்கொள்வதைத் தெரிந்தெடுக்க மனிதன் தன் சொந்த சித்தத்தைப் பயிற்சிசெய்ய வேண்டும் என்று அவர் விரும்பி னார். ஆகையால், படைக்கப் பட்ட மனிதர்களாகிய நாம் வீழ்ந்துபோகாமல் இருந்திருந்தாலும், இயற்கையான மனித ஜீவனோடு கூடுதலாக தேவனுடைய ஜீவனை நாம் இன்னும் பெறவேண்டியிருந்திருக்கும். நாம் மறுபடிப்பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். ஆகையால், மறுபிறப்பிற்கான காரணங்களுக்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன: நம் ஜீவன் கெடுக்கப்பட்டது, தீமையானது, மாற்றப்பட முடியாதது என்பது தாழ்வான அம்சம்; ஆகையால், நமக்கு இன்னொரு ஜீவன் தேவை; இதனால் நாம் வாழமுடியும். மனிதன் தேவனைப்போல் இருக்கவேண்டும் என்ற தேவனுடைய நோக்கமே உயர்வான அம்சம்; ஆகையால், நம் சொந்த ஜீவனோடுகூட, தேவனுடைய ஜீவனையும் நாம் பெறவேண்டும். நாம் பூரணமாகவும் பாவமில்லாமலும் இருந்திருந்தாலும், மறுபடி பிறப்பிக்கப்படவேண்டியது இன்னும் தேவை என்பதைப் பார்க்க மக்களுக்கு உதவும்படி இதுமுதல் நாம் மறுபிறப்பைப்பற்றிப் பேசும்போது, இந்த உயர்வான அம்சத்தையும் சுட்டிக் காட்டும்படியாக நாம் அனைவரும் இதைப் பார்ப்போமாக.
II. மறுபிறப்பு என்றால் என்ன?
வேதவாக்கியங்களின்படி, மறுபடிபிறப்பிக்கப்படுதல் என்றால் ஆவியானவரால் பிறப்பதாகும் (யோவான் 3:3-6). முதலில் நம் ஆவி மரித்த நிலைமையில் இருந்தது; ஆனால் நாம் விசுவாசித்த போது நம் ஆவியைத் தொட தேவனுடைய ஆவியானவர் வந்தார், இவ்வாறு நம் ஆவி தேவனுடைய ஜீவனைப்பெற்று உயிர்ப்பிக்கப் பட்டது. இந்த வழியில்தான், நம் இயற்கையான முதல் பிறப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு பிறப்பை தேவனுடைய ஆவியானவர் நமக்குக் கொடுத்தார். சுருங்கக்கூறின், மறுபடிபிறப்பிக்கப்படுவது என்றால் மீண்டும் பிறப்பது, அதாவது தேவனால் பிறப்பது (யோவான் 1:13), அல்லது நம் இயற்கையான ஜீவனோடுகூட தேவனுடைய ஜீவனைப் பெறுவதாகும்.
மறுபடிப்பிறப்பிக்கப்படுவதின் அர்த்தம் மீண்டும் பிறப்பதாகும். "மறுபடிபிறப்பது" என்ற பதத்தை நாம் ஏன் பயன்படுத்துகிறோம்? நாம் முதலில் நம் பெற்றோர்களால் பிறந்தோம்; ஆனால் இப்போது நாம் மீண்டும் பிறக்கின்றோம் அதாவது இந்தமுறை தேவனால் பிறக்கிறோம்; எனவே இந்த அனுபவம் மறுபடிபிறத்தல் என்று அழைக்கப்படுகிறது. பெற்றோர்களால் பிறப்பது நம்மை மனித ஜீவனைப் பெறச்செய்தது, இப்படியிருக்க, தேவனால் பிறப்பது நம்மை தேவனுடைய ஜீவனைப் பெறச்செய்கிறது. ஆகையால், மறுபடி பிறப்பிக்கப்பட்ட நாம் மனித ஜீவனோடு கூடுதலாக தேவனுடைய ஜீவனையும் கொண்டிருக்கிறோம்.
ஆகையால், மறுபடிபிறப்பிக்கப்படுவது என்றால், தேவனால் பிறப்பது அல்லது நம் இயற்கையான மனித ஜீவனோடுகூட தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்வது என்பதை நாம் தெளிவாகப் பார்க்கவேண்டும். நம் இயற்கையான ஜீவனுக்கு அப்பாற்பட்டு, தேவன் தம் ஜீவனை நமக்குள் வைக்கிறார். இதுவே மறுபிறப்பாகும்.
III.நாம் எவ்வாறு மறுபிறப்பு அடைவது?
ஒரு மனிதன் எவ்வாறு மறுபடிபிறப்பிக்கப்படமுடியும்? சுருங்கக் கூறின், தேவனுடைய ஆவியானவர் மனித ஆவிக்குள் நுழைந்து, தேவனுடைய ஜீவனை அதற்குள் வைக்கிறார்; இவ்வாறு மனிதன் மறுபடிபிறப்பிக்கப்படுகிறான்.
தேவனுடைய ஆவியானவர் எவ்வாறு மனித ஆவிக்குள் நுழைகிறார்? மனிதன் சுவிசேஷத்தைக் கேட்கும்போதோ, வேத வார்த்தையை வாசிக்கும்போதோ, தேவனுடைய ஆவியானவர் அவனில் வேலைசெய்து, அவன் பாவம் செய்திருக்கிறான் என்றும், அவன் கெடுக்கப்பட்டிருக்கிறான் என்றும் அவனை செய்கிறார்; எனவே அவன் பாவத்தைக் குறித்தும், நீதியைக் உணரச் குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும் கண்டித்து உணர்த்தப் படுகிறான் (யோவான் 16:8). ஒரு மனிதன் தன்னைப் பாவி என்று பார்த்து, தன் சீரழிவை உணர்ந்தறிந்து, மனந்திரும்ப சித்தமாயிருக்கும்போது, தேவனுடைய ஆவியானவர், கர்த்தராகிய இயேசு தன் இரட்சகர் என்றும், தன் மன்னிப்பிற்காக பாவ சிலுவையில் மரித்தார் என்றும் அவனைப் பார்க்கச்செய்கிறார். அந்தக் கணத்தில், அவன் தானாகவே கர்த்தரில் விசுவாசித்து, அவரைத் தன் இரட்சகராக பெற்றுக்கொள்ளுகிறான். அவன் கர்த்தரைத் தன் இரட்சகராகப் பெறும்போது, தேவனுடைய ஆவியானவர் அவன் ஆவிக்குள் நுழைந்து, தேவனுடைய ஜீவனை அதில் வைத்து, அவனை மறுபடிபிறப்பிக்கிறார்.
எனவே, தேவனுடைய ஆவியானவரின் கோணத்திலிருந்து பேசினால், தேவனுடைய ஜீவனை நம் ஆவியில் வைக்க தேவனுடைய ஆவியானவர் அதற்குள் நுழைகிறார், இது நம்மை மறுபடிப்பிறப்பிக்கிறது. நம் கோணத்திலிருந்து நாம் மனந்திரும்பி, விசுவாசித்து, கர்த்தராகிய இயேசுவை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்வதினால், நாம் மறுபடிபிறப்பிக்கப்படுகிறோம். இதன் அர்த்தம் நம் இயற்கையான ஜீவனோடு கூடுதலாக தேவனுடைய ஜீவனை நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதாகும்.
IV. மறுபிறப்பின் விளைவுகள்
மறுபிறப்பின் விளைவுகளை அல்லது நிறைவேறுதல்களை மூன்று காரியங்களாக சுருக்கமாக வகைப்படுத்தலாம்:
1) மறுபிறப்பு மனிதர்களைத் தேவனுடைய பிள்ளைகளாக்கு கிறது. தேவனால் பிறப்பதே மறுபிறப்பின் அர்த்தம் என்பதால், இது தானாகவே மனிதர்களைத் தேவனுடைய பிள்ளைகளாகும்படியும் (யோவான் 1:12-13), தேவனுடன் ஜீவ உறவைக் கொண்டிருக்கும் படியும் செய்கிறது. மறுபிறப்பின்மூலமாகத் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இந்த ஜீவன் மனிதர்களைத் தேவனுடைய பிள்ளைகளாகும்படிச் செய்கிறது; இந்த ஜீவன், மனிதர்கள் தேவனுடைய பிள்ளைகளாகும்படியான அதிகாரமாகவும் இருக்கிறது. தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் கொண்டிருந்து தேவனைப்போலவே இருக்கக்கூடிய இப்படிப்பட்ட தேவனுடைய பிள்ளைகள், தேவன் மனிதனைப் படைத்ததின் குறிக்கோளை நிறைவேற்றமுடியும்.
2) மறுபிறப்பு மனிதர்களைப் புதிய படைப்பாக மாற்றுகிறது. புதிய படைப்பு என்பது தன்னுள் தேவனுடைய மூலக்கூறுகளைக் கொண்டிருக்கிற ஒன்றாகும். ஏதோவொன்று தன்னுள் தேவனுடைய மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்போது, அது ஒரு புதிய படைப் பாகும். பழையபடைப்பில் தேவனுடைய எந்த மூலக்கூறும் இல்லை. மனிதர்களாகிய நம்மிடத்தில் இயற்கையாகவே தேவனு டைய எந்த மூலக்கூறுகளும் இல்லை; ஆகையால் நாம் பழைய படைப்பாக இருக்கிறோம். தேவனுடைய மூலக்கூறு நமக்குள் சேர்க்கப்படாதவரை நாம் புதிய படைப்பாக மாறுவதில்லை. இதையே மறுபிறப்பு நம்மில் நிறைவேற்றியிருக்கிறது. மறுபிறப்பு தேவனுடைய ஜீவனையும், சாட்சாத்து அவருடைய மூலக்கூறையும் நாம் கொண்டிருக்கச்செய்து, இதன்மூலம் நம்மைப் புதிய படைப்பாக்குகிறது (2 கொரி. 5:17). இந்தப் புதிய படைப்பு, தேவன் மனிதனோடு கலந்திணைவதின் இறுதிவடிவமாகும்; இதுவே இப்பிரபஞ்சத்தில் மிகவும் அதிசயமான காரியமாகும்: இது மனுஷீக மூலக்கூறுகளையும் தெய்வீக மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இது மனிதனாகவும் தேவனாகவும் இருக்கிறது, இது மனிதனைப்போலவும் தேவனைப்போலவும் இருக்கிறது.
3) மறுபிறப்பு மனிதர்களைத் தேவனோடு ஒன்றாக இருக்கும்படி இணைக்கிறது. இது மனிதனை, தேவனுடைய ஜீவனையும், அவருடைய மூலக்கூறுகளையும் பெறச் செய்வதுடன் தேவனுடன் ஒன்றாக இணைக்கவும் செய்கிறது. மறுபிறப்பினால் ஆவியானவராகிய தேவன் மனித ஆவிக்குள் நுழைந்து, மனிதன் அவரோடு ஒரே ஆவியாக இணைந் திருக்கும்படிச் செய்கிறார் (1 கொரி. 6:17). இது தேவனுடன் மனிதன் மிக ஆழமான உறவைக்கொண்டிருக்கும்படி, அதாவது தேவனுடன் ஒன்றாயிருக்கும்படி தேவன் செய்வதாகும்.
முடிவாக, கர்த்தராகிய இயேசுவில் நாம் விசுவாசிப்பதால் பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய ஜீவனை நம் ஆவிக்குள் வைத்து, நம்மைத் தேவனால் பிறக்கச்செய்து, தேவனுடைய பிள்ளைகளாக்கி, புதிய படைப்பில் தேவனோடு ஒன்றா யிருக்கும்படி இணைக்கும்போது, இதுவே மறுபிறப்பாகும்.