ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் - 2

 



ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் - 2

ஜீவனின் அனுபவம் என்றால் என்ன?

இப்போது நாம் இரண்டாவது கேள்வியைக் கேட்போம்: ஜீவனின் அனுபவம் என்றால் என்ன? ஜீவன் என்றால் என்ன என்பதை நாம் பார்த்துவிட்டால், ஜீவனின் அனுபவம் என்றால் என்ன என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.

I.தேவனை அனுபவமாக்குதல்

ஜீவன் தேவனே என்று நாம் பார்த்திருக்கிறோம். நாம் பெற்று, அனுபவமாக்கும்படி, நமக்குள் பாய்ந்தோடுகிற தேவனே ஜீவன். ஆகையால், தேவனை அனுபவமாக்குவது ஜீவனை அனுபவமாக்கு வதாகும். ஜீவனின் அனுபவங்க ளெல்லாம் தேவனை அனுபவ மாக்குவதும், தொடுவதுமாகும். தேவனைத் தொடாத எந்த அனுபவமும் ஜீவனின் அனுபவம் இல்லை.

எடுத்துக்காட்டாக, சில மனந்திரும்புதல்கள் தேவனுடைய பிரகாசித்தலின்படியானதல்ல, மாறாக மனிதனுடைய தற்பரிசோதனையின்படியானது. அது மனிதன் தேவனைத் தொடும்படிச்செய்யாததால், அது ஜீவனின் அனுபவம் இல்லை. தேவனுடைய பிரகாசித்தலினால் ஏற்படுகிற மனந்திரும்புதல், நிச்சயமாக மனிதன் தேவனைத் தொடும்படிச்செய்யும். ஆகையால் இது ஜீவனின் ஓர் அனுபவமாகும்.

மனிதனுடைய சொந்த நடத்தையிலிருந்து வருகிற எதுவும் ஜீவனின் அனுபவமல்ல. அது செயற்கையானது, மேலும் மனிதனுடைய சொந்த வேலையினாலானது; அது தேவன் மனிதனூடாகக் கடந்துசென்றதாலோ, மனிதன் தேவனூடாகக் கடந்து சென்றதாலோ ஏற்பட்டதல்ல. ஆகையால் அதனை ஜீவனின் ஓர் அனுபவமாகக் கருதமுடியாது.

பின்பு, எதை ஜீவனின் அனுபவமாகக் கருதமுடியும்? தேவன் மனிதனூடாகக் கடந்துசெல்வதினாலும், மனிதன் தேவனூடாகக் கடந்துசெல்வதினாலும் ஏற்படுகிற ஓர் அனுபவமே ஜீவனின் அனுபவமாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக: நம் ஜெபத்தில், நாம் தேவனைச் சந்தித்து, பிரகாசிக்கப்பட்டு, நம் சொந்த தவறைப் பார்த்து, தேவனுக்கு முன்பாக அதோடு இடைபடுகிறோம். நாம் நம் சொந்த தவறுகளைக் கண்டுபிடிப்பதல்ல, மாறாக, நாம் தேவனிடம் நெருங்கும்போது, நாம் உள்ளார்ந்தரீதியாக தேவனால் சந்திக்கப்பட்டு, அதனால் நம் சொந்த தவறைப்பார்க்கிறோம். தேவன் ஒளியாக இருக்கிறார். எனவே நாம் அவரைச் சந்திக்கும் போது, அவருடைய வெளிச்சத்தில் நம் தவறைப் பார்க்கிறோம். நாம் இயல்பாக தேவனிடம் அறிக்கையிட்டு, கர்த்தருடைய இரத்தத்தின் கழுவுதலைக் கேட்கிறோம். இதன் விளைவாக, தேவன் நம்மூடாகக் கடந்து செல்கிறார், நாமும் தேவனூடாகக் கடந்துசெல்கிறோம். இப்படிப்பட்ட அனுபவம், நாம் தேவனை அனுபவமாக்குவதை விளைவிக்கிறது, ஆகையால் இது ஜீவனின் அனுபவமாகும்.

ஜீவனின் அனுபவங்களெல்லாம் தேவனிடமிருந்து வருகிறதாகவும், நமக்குள் அவருடைய வேலைசெய்தலாகவும்

இருக்கின்றன; ஆகையால் அவை தேவனைத் தொடவும், அவரை

அனுபவமாக்கவும் நமக்கு ஏதுவாயிருக்கமுடியும். இப்படியில்லாத அனுபவமெல்லாம் ஜீவனின் அனுபவம் இல்லை. ஏனெனில் ஜீவன் தேவனாக இருக்கிறது, மேலும் ஜீவனை அனுபவமாக்குவது தேவனை அனுபவமாக்குவதாகும். எனவே தேவனுடைய இப்படிப்பட்ட எந்த அனுபவமும் ஜீவனை வெளிக்காட்டும் (பிலி. 2:13-16).

II. கிறிஸ்துவை அனுபவமாக்குதல்

ஜீவனை அனுபவமாக்குவது தேவனை அனுபவமாக்குவ தாகும், இருப்பினும் நம்மால் அனுபவமாக்கப்படும்படி தேவன் கிறிஸ்துவில் இருக்கிறார். கிறிஸ்து தேவனுடைய வெளிப்படுத லாகவும், ஊனுருவாகவும் இருக்கிறார்; அவர் நம் அனுபவமாக மாறுகிற தேவன். ஆகையால், தேவனுடைய நம் அனுபவ மெல்லாம் கிறிஸ்துவின் அனுபவமாகவும், கிறிஸ்துவிலும் இருக்கிறது. இவ்வாறு, ஜீவனை அனுபவமாக்குவது தேவனை அனுபவமாக்குவதாக இருப்பதால், இது கிறிஸ்துவை அனுபவமாக்குவதாகவும் இருக்கிறது.

தேவன் ஜீவனாக இருந்தாலும். அவர் கிறிஸ்துவில் இருந்து, கிறிஸ்துவாக மாறி, நம்மால் அனுபவமாக்கப்பட வில்லை என்றால், அவர் நம் ஜீவனாக இருக்கமுடியாது. நம்மால் அனுபவமாக்கப்படுவதற்கு அவர் நம் ஜீவனாக இருக்கவேண்டும். ஆனால் அவர் பரலோகத்தில், அதாவது எந்த மனிதனும் சோக்கூடாத ஒளியில் இருக்கையில், அவர் நம் ஜீவனாக இருக்கமுடியாது (1 தீமோ. 6:16). மேலும் அவர் நம் ஜீவனாக இருப்பதற்கு அவர் நம் மனித சுபாவத்தைக் கொண்டிருக்க வேண்டும். மனித சுபாவத்தை யுடைய நம்முடன் இணைக்கப் பட்டு, நம் ஜீவனாக இருக்கும்படி அவருடைய தெய்வீக ஜீவன் மனித சுபாவத்துடன் கலந்திணைய வேண்டும். ஆகையால் அவர் பரலோகத்திலிருந்து வந்து, மாம்சமாகி, மனித சுபாவத்தோடு கலந்திணைந்தார். இவ்வாறு, நாம் அவரை அனுபவமாக்குவதற்காக தேவன் கிறிஸ்துவாகி, மனிதசுபாவத்தில் நம் ஜீவனாகிறார். அவரை நம் ஜீவனாக அனுபவமாக்கும்போது, நாம் கிறிஸ்துவை அனுபவ

மாக்குகிறோம். சுருங்கக்கூறின், நாம் கிறிஸ்துவை அனுபவமாக்கும் போது, பின்வரும் அம்சங்களை நாம் அனுபவமாக்குவோம்.

A. கிறிஸ்து நம்மில் வெளிப்படுத்தப்படுதல் (கலா.1:16)

இது, நாம் இரட்சிக்கப்படும்போது கிறிஸ்துவினுடைய நம் ஆரம்ப அனுபவமாகும். தேவன் பரிசுத்த ஆவியானவர் மூலமாக கிறிஸ்துவை நம்மில் வெளிப்படுத்துவதை நாம் அனுபவமாக்கு கிறோம். இவ்வாறு நாம் அவரை நம் ஜீவனாகவும் நம் எல்லாமாகவும் அறிவதும் பெறுவதும் நமக்குச் சாத்தியமாகிறது.

B. கிறிஸ்து நம்மில் வாழ்தல் (கலா. 2:20)

இது, நாம் இரட்சிக்கப்பட்டபின்பு நம் ஜீவனாக நம்மில் வாழ்கிற கிறிஸ்துவினுடைய நம் தொடர்ச்சியான அனுபவமாக இருக்கிறது. வேறுவார்த்தைகளில் சொன்னால், கிறிஸ்து நம்மில் நிலைத்திருந்து நமக்காக வாழ்வதை நாம் அனுபவமாக்குகிறோம். பரிசுத்தவான்களாக நம் அனுதின வாழ்க்கையில் கிறிஸ்துவி னுடைய இந்தத் தொடர்ச்சியான அனுபவம் கிறிஸ்துவினுடைய நம் அனுபவத்தின் பெரும் பகுதியாக இருக்கிறது.

C. கிறிஸ்து நம்மில் உருவாகுதல் (கலா.4:19)

இது, கிறிஸ்து நம்மில் வளர்ந்து உருவாகும்படி கிறிஸ்துவின் எல்லாவற்றையும் நம் உள்ளார்ந்த ஜீவனின் மூலக்கூறாக இருக்க நாம் அனுமதிப்பதாகும். நம் ஜீவனாக அதாவது நமக்காக வாழ்கிற ஒருவராக நாம் அவரை அனுபவமாக்குவதற்கு மட்டுமல்லாமல், இன்னும் அதிகமாக நம் எல்லாமுமாக நாம் அவரை அனுபவமாக்குவதற்காக கிறிஸ்து நம்மில் இருக்கிறார்; இதன்மூலமாக அவருடைய ஜீவன் நம்மில் முதிர்ச்சியடையும்படி, நம் வாழ்க்கையில் அவர் வளர்ந்து உருவாகமுடியும்.

D. கிறிஸ்து நம் உடலில் பெரிதாக்கிக் காண்பிக்கப்படுதல் (பிலி. 1:20-21)

இது, கிறிஸ்து வெளியார்ந்தரீதியாக வெளிப்படும்படி, கிறிஸ்துவின் எல்லாவற்றையும் நம் வெளியார்ந்த வாழ்க்கையின் வெளிப்படுதலாக மாற நாம் அனுமதிப்பதாகும். வாழ்வானாலும் சாவானாலும் எந்தச் சூழ்நிலையிலும் நம் உடலில் கிறிஸ்து பெரிதாக்கிக் காட்டப்பட அனுமதிக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், நமக்கு வாழ்வதென்றால் கிறிஸ்துவே. இது, நிச்சயமாகவே கிறிஸ்துவினுடைய சற்று ஆழமான அனுபவம்தான்:

இது. அவர் நமக்குள் உருவாகுவதை அனுபவமாக்குவது மட்டுமல்ல, அவர் நம்மிலிருந்து வெளியே பெரிதாக்கிக் காண்பிக்கப்படுவதை அனுபவமாக்குவதுமாகும். கிறிஸ்து நம்மில் உருவாகுவது உள்ளார்ந்த ஜீவனின் முதிர்ச்சியாகும்; இதன்பிறகுதான், அவருடைய எல்லாவற்றையும் நம் உள்ளார்ந்த மூலக்கூறுகளாகக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்து நம் உடலில் பெரிதாக்கிக் காண்பிக்கப்படுவது வெளியார்ந்த வாழ்க்கையின் வெளிப்படுதலாகும்; இதனால் அவருடைய எல்லாவற்றையும் நம் வெளியார்ந்த வெளிப்படுதலாக இருக்க நாம் அனுமதிக்கிறோம். எனவே, இந்த அனுபவத்தில் கிறிஸ்துவை நம் உள்ளார்ந்த ஜீவனின் மூலக்கூறுகளாக மட்டுமல்ல, நம் வெளியார்ந்த வாழ்க்கையின் வெளிப்படுதலாகவும் அனுபவமாக்குகிறோம்.

E. கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவினால் நிறைந்திருத்தல் (எபே. 4:11)

இதன் அர்த்தம் சரீரமாகிய நாம் எல்லாரும் கிறிஸ்துவின் மூலக்கூறுகளாலும், கட்டமைப்பாலும் நிறையும்வரை கிறிஸ்துவை அனுபவமாக்குவதாகும்; இவ்வாறு நாம் வளர்ந்து, கிறிஸ்துவின் நிறைவின் வளர்ச்சியால் நிறைந்திருக்கிறோம். இது நிச்சயமாக கிறிஸ்துவினுடைய கூட்டான அனுபவத்தின் முழுமையாகும்.

F. கிறிஸ்துவின் சாயலாக மறுசாயலாக்கப்படுதல் (2 கொரி.3:18)

கிறிஸ்துவின் நம் அனுபவம் நாம் அவரைப்போலாகும் வரை நம்மை மறுசாயலாக்கமுடியும். இது, கிறிஸ்து நம்மில் வெளிப் படுத்தப்படும் நம் அனுபவத்தில் ஆரம்பித்து, நம் உடல் மீட்கப் படும்வரை தொடர்ந்து செல்கிறது (ரோமர் 8:23). நாம் எவ்வளவு அதிகமாக அவரை அனுபவமாக்குகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் மாற்றப்படுகிறோம், அதாவது நம் உடல் அவருடைய மகிமையான உடலின் ரூபத்துக்கு உருமாற்றப் படும்வரை மாற்றப்படுகிறோம் (பிலி. 3:21). அந்த நேரத்தில், நாம் முழுவதுமாக அவருடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்பட்டு (ரோமர் 8:29), நாம் "அவருக்கு ஒப்பாக" இருப்போம் (1 யோவான் 3:2). அப்பொழுது நாம் அவரை முழுமையான வழியில் அனுபவமாக்குவோம்.

நம்முள் இருக்கிற ஜீவனுக்கும் நம்மிலிருந்து வாழப்படும் பரிசுத்த மான வாழ்க்கைக்கும் உரியதெல்லாம் கிறிஸ்துவின் நம் அனுபவமாக இருக்கவேண்டும். கிறிஸ்து நம் ஜீவனாக இருப்பதால், அவரே நம் பரிசுத்தமாகுதலாகவும் இருக்கிறார் (கொலோ. 3:4; 1 கொரி. 1:31). நம் உள்ளார்ந்த ஜீவனுக்குரிய எந்த அனுபவமும் கிறிஸ்து நம்முள் வாழ்வதாக இருக்கவேண்டும்; மேலும் நம் வெளியார்ந்த பரிசுத்த மாக்கப்பட்ட வாழ்க்கையும் நம்மூலமாக கிறிஸ்து வாழ்ந்துகாட்டப்படுவதாக இருக்கவேண்டும். ஜீவனின் நம் அனுபவமெல்லாம் கிறிஸ்துவின் அனுபவமாக இருக்கவேண்டும். கிறிஸ்துவுடன் மரித்தல், அவருடன் உயிர்த் தெழுதல், அவருடன் பரமேறுதல் போன்ற இப்படிப்பட்ட ஜீவனின் பெரிய அனுபவங்கள் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்வின் எல்லா சிறிய அனுபவங்கள்கூட கிறிஸ்துவின் அனுபவமாக இருக்கவேண்டும். பாவத்திலிருந்து விடுதலை அல்லது உலகத்தை ஜெயங்கொள்வது, பரிசுத்தமாக்குதலையும் ஆவிக்குரியதன்மை யையும் வாழ்ந்துகாட்டுவது அல்லது அன்பையும் தாழ்மையையும் வாழ்ந்து காட்டுவது எல்லாம் கிறிஸ்துவின் அனுபவமாக இருக்கவேண்டும். நாம் மற்றவர்களிடம் காட்டும் சிறிதளவு சகிப்புத்தன்மையும் பொறுமையும்கூட கிறிஸ்துவின் அனுபவமாக இருக்கவேண்டும்.

கிறிஸ்துவை அனுபவமாக்குதல், நமக்குள்ளும் நம்மி லிருந்தும் கிறிஸ்துவை வாழ அனுமதிப்பதாகும். கிறிஸ்துவை அனுபவமாக்குவது கிறிஸ்துவை ஜீவனாக எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவினால் வாழ்வதாகும். கிறிஸ்துவை அனுபவமாக்கு வதின் அர்த்தம் நம் வாழ்க்கை மற்றும் செயல்கள் எல்லாம் கிறிஸ்துவே நம்மிலிருந்து வாழ்வதும் செயல்படுவதுமாகும். கிறிஸ்துவை அனுபவமாக்குவது, கிறிஸ்துவின் உயிர்த் தெழுந்த வல்லமையை அனுபவமாக்குவதாகும் (பிலி. 3:10); இது அவரை ஜீவனாக அனுபவமாக்குவதாகும்; ஆகையால் இப்படிப்பட்ட அனுபவமும் ஜீவனின் அனுபவம்தான்.

III. பரிசுத்த ஆவியானவரை அனுபவமாக்குதல்

யோவான் 14-ல் தாம் ஜீவன் (வ. 6) என்று கர்த்தராகிய இயேசு நமக்குச் சொல்லியபிறகு, தாமும் தேவனும் ஒன்று அதாவது அவர் தேவனில் இருக்கிறார். தேவன் அவரில் இருக்கிறார், அவர் ஜீவனாக இருப்பதின் அர்த்தம் தேவன் ஜீவனாக இருக்கிறார் (வ.7-11) என்றும், பரிசுத்த ஆவியானவரும் தாமும்கூட ஒன்று அதாவது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் நுழைந்து, நம்மோடு தங்கியிருப்பது நம்முடைய ஜீவனாக இருக்க நம்மில் கிறிஸ்து வாழ்வது (வ. 16-19) என்றும் மட்டுமல்ல, அவர் பரிசுத்த ஆவியானவராக நமக்குள் நுழைந்து நம்மில் வாழ்வதின் அர்த்தம் அவரும் தேவனும் ஆவியானவராக நமக்குள் நுழைந்து நம் ஜீவனாக நம்முடன் தங்கியிருப்பதுமாகும் (வ. 20-23) என்றும் அவர் நமக்குக் காண்பிக்கிறார். எளிமையாகப் பேசுவதானால், தாம் ஜீவன் என்று கர்த்தர் கூறியபிறகு, அவர் மூன்று காரியங்களை நமக்குக் காண்பிக்கிறார்: (1) தேவன் அவரில் ஜீவனாக இருக்கிறார், (2) அவர் பரிசுத்த ஆவியானவராக ஜீவனாக இருக்கிறார்,(3) மூவொரு தேவன் ஜீவனாக நமக்குள் நுழைகிறார். இவ்வாறு நாம் ஜீவனை அனுபவமாக்கும்போது, நாம் தேவனை அனுபவமாக்குவது மட்டுமல்ல, கிறிஸ்துவை அனுபவமாக்குவது மட்டுமல்ல, பரிசுத்த ஆவியான வரையும் அனுபவமாக்குகிறோம். உண்மையில் பரிசுத்த ஆவியானவர், நம்மால் அனுபவமாக்கப் படும் ஜீவனாக தேவனும் கிறிஸ்துவும் அல்லது நம்மால் அனுபவமாக்கப்படும் ஜீவனாக கிறிஸ்துவில் தேவன் ஆவார்.

கிறிஸ்து தேவனுடைய ஊனுருவாக இருப்பதுபோல, பரிசுத்த ஆவியானவரும் கிறிஸ்துவின் ஊனுருவாக இருக்கிறார். தேவன் ஜீவனாக கிறிஸ்துவில் இருக்கிறார், கிறிஸ்து ஜீவனாக பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். நாம் தேவனை கிறிஸ்துவில் அனுபவமாக்குகிறோம், கிறிஸ்துவைப் பரிசுத்த ஆவியானவராக அனுபவமாக்குகிறோம். இவ்வாறு ஜீவனை அனுபவமாக்குவது தேவனையும் கிறிஸ்துவையும் அனுபவமாக்குவதுபோல, பரிசுத்த ஆவியானவரையும் அனுபவமாக்குவதாகும்.

தேவன் ஜீவனாக இருக்கிறார், கிறிஸ்து ஜீவனாக வருகிற தேவனாக இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் ஜீவனாக கிறிஸ்து வில் தேவனுடைய ஆவியானவராக அல்லது ஜீவனின் ஆவியான வராக இருக்கிறார் (ரோமர் 8:2). இந்த ஜீவனின் ஆவியானவரே அதாவது பரிசுத்த ஆவியானவரே ஜீவனாக கிறிஸ்துவில் தேவனு டைய உள்ளடக்கம் எல்லாவற்றையும் நாம் அனுபவமாக்கும்படிச் செய்கிறவர். இந்த ஜீவனின் பரிசுத்த ஆவியானவரே கிறிஸ்துவின் உள்தங்குதலை நாம் அனுபவமாக்கும்படிச் செய்கிறவர். இந்த ஜீவனின் பரிசுத்த ஆவியானவரே கிறிஸ்துவில் தேவனுடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை நாம் அனுபவ மாக்கும்படிச் செய்கிறவர் (ரோமர் 8:9-11). இந்த ஜீவனின் பரிசுத்த ஆவியான வரே உடலின் தீய செயல்களையெல்லாம் மரணத்திற்குட்படுத்த நம்மை நடத்துகிறவர். மேலும் இந்த ஜீவனின் பரிசுத்த ஆவியான வரே நம்மில் ஜெபிக்கிறவர் (ரோமர் 8:13, 26). ஆழமானதோ மேலோட்டமானதோ ஜீவனின் நம் அனுபவங்க ளெல்லாம் பரிசுத்த ஆவியானவரால் உற்பத்தி செய்யப் படுகின்றன; ஆகையால் அவையெல்லாம் இந்த ஜீவனின் பரிசுத்த ஆவியானவருடைய அனுபவங்களாகும்.

பரிசுத்த ஆவியானவரே கிறிஸ்துவின் உள்தங்குதலையும், தேவனுடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் நம்மை அனுபவமாக்கச் செய்பவர் மட்டுமல்ல, நம்மில் தங்கியிருக்கிற பரிசுத்த ஆவியானவர்தான், ஜீவன் கிறிஸ்துவே என்பதை நாம் அனுபவ மாக்கும்படிச் செய்கிறவர், மேலும் நம்மில் தங்கியிருக்கிற தேவனே நாம் ஜீவனை அனுபவமாக்கும்படிச் செய்கிறவர் என்று ரோமர் 8:9-11 காண்பிக்கிறது. இவ்வாறு, தேவனுடைய ஜீவன் கிறிஸ்துவில் பரிசுத்த ஆவியானவர்மூலம் நம்மால் அனுபவமாக்கப் படுகிறது. எனவே இந்த ஜீவனை அனுபவமாக்க நாம் பரிசுத்த ஆவியானவரை அனுபவமாக்கவேண்டும்; மேலும் இந்த ஜீவனை நாம் அனுபவமாக்கும்போது, நாம் பரிசுத்த ஆவியானவரை அனுபவமாக்குகிறோம்.

ஆகையால், ஜீவனின் அனுபவம் என்பது மூவொரு தேவனின் அனுபவம் அல்லது நம் ஜீவனாக தேவனை கிறிஸ்துவிலும், கிறிஸ்துவை பரிசுத்த ஆவியானவராகவும் அனுபவமாக்குவதாகும். நம்மில் வேலைசெய்கிற பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை அனுபவமாக்குவதற்கும், கிறிஸ்துவில் தேவனை அனுபவமாக்கு வதற்கும் நம்மை நடத்துகிறார்; இதுவே ஜீவனின் அனுபவமாகும். பரிசுத்த ஆவியானவரில், நாம் தேவனூடாகவும் கிறிஸ்துவி னூடாகவும் கடந்துசென்று, தேவனும் கிறிஸ்துவும் நம்மூடாகக் கடந்து செல்ல அனுமதிக்கும்போது, இது ஜீவனின் அனுபவமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின், கிறிஸ்துவின், தேவனின், இப்படிப்பட்ட அனுபவம் மட்டுமே ஜீவனின் அனுபவமாகும். மற்றபடி எதுவும் ஜீவனின் அனுபவமாகக் கருதப்படமுடியாது. நீங்கள் இதை வைராக்கியம், மத வாழ்க்கை, சுய-முன்னேற்றம் என்று சொல்லக்கூடும். ஆனால் இது ஜீவனின் அனுபவம் என்று நீங்கள் சொல்லமுடியாது. ஜீவனை அனுபவமாக்குவது என்றால், தேவனை அனுபவ மாக்குவதும், கிறிஸ்துவை அனுபவமாக்கு வதும், பரிசுத்த ஆவியானவரை அனுபவமாக்குவதுமாகும். இது நாம் சொந்தமாக செய்யும் ஏதோவொன்றோ, முன்னேற்றத்திற்கான முயற்சியோ இல்லை; மாறாக, இது தேவன் நம்மில் அசைவது, கிறிஸ்து நம்மூலமாக வாழ்ந்துகாட்டப்படுவது, பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகிப்பது ஆகியவைகளின் விளைவாகும். நாம் இதை ஆசையாய்ப் பின்தொடர்வோமாக.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.