ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் - 4

 


ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் - 4


மறுபிறப்பின் மூலம் ஆதாயப்படுத்தப்படுபவைகள்


நாம் ஜீவனில் வளர விரும்பினால், மறுபிறப்பைப்பற்றிய எல்லா வற்றையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் மறுபிறப்பின்மூலம் நாம் எதனை ஆதாயப்படுத்தியிருக்கிறோம் என்று அறியவேண்டும். மறுபிறப்பு ஜீவனில் ஒரு தொடக்கத்தை நமக்குத் தருகிறது. மேலும் மறுபிறப்பின்மூலம் நாம் ஆதாயப்படுத்திக்கொண்டவை நமக்கு ஜீவனில் வளர்ச்சியைத் தருகிறது. எனவே நாம் ஜீவனில் வளர விரும்பினால் மறுபிறப்பைப்பற்றிய அறிவு நமக்குக் கொஞ்சமாவது இருக்கவேண்டும், மேலும் மறுபிறப்பின்மூலம் ஆதாயப்படுத்தப் படுபவைகளை நாம் அறியவேண்டும்.


மறுபிறப்பின்மூலம் ஆதாயப்படுத்தப்படுபவைகள் மறு பிறப்பின் விளைவுகளோடு மிக நெருங்கிய தொடர்புடைய வைகளாகும். மறுபிறப்பின் விளைவுகள், மறுபிறப்பின்மூலம் ஆதாயப்படுத்தப்படுவதிலிருந்து வருகின்றன. அதாவது முன்சொல்லப்பட்டது பின்சொல்லப்பட்டதால் நிறைவேறுகிறது. மறுபிறப்பு நம்மில் நிறைவேற்றுகிறவைகளே மறுபிறப்பின் விளைவுகளாக இருக்கின்றன. அதே நேரத்தில் -, மறுபிறப்பின்மூலம் நாம் பெறுகிற காரியங்களாக இருக்கின்றன. ஏனெனில், மறுபிறப்பு சில காரியங்களை நாம் ஆதாயப்படுத்தும்படிச் செய்திருப்பதால், இது நம்மில் சில நிறைவேறுதல்களைக் கொண்டிருக்கமுடியும். மறுபிறப்பு நம்மைத் தேவனுடைய பிள்ளைகளாக்கமுடியும்; ஏனென்றால், மறுபிறப்பு தேவனுடைய ஜீவனை நாம் ஆதாயப்படுத்தும்படிச்செய்கிறது. மறுபிறப்பு நம்மைப் புதிய படைப்பாக்கமுடியும்: ஏனென்றால், அது தேவனுடைய மூலக்கூறுகளை நாம் ஆதாயப் படுத்தும்படிச்செய்கிறது. மறுபிறப்பு நம்மைத் தேவனோடு இணைக்கமுடியும்; ஏனென்றால், மறுபிறப்பு தேவனுடைய ஆவியானவரை நாம் ஆதாயப்படுத்தும் படிச் செய்கிறது. நம்மில் மறுபிறப்பின் எல்லா நிறைவேறுதல் களும் மறுபிறப்பின்மூலம் நாம் பெற்றுக்கொண்ட காரியங்களால் சாதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட காரியங்கள் நம் மறுபிறப்பின் போது, நம் ஆவிக்குரிய வாழ்வில் பல்வேறு அனுபவங்களை நாம் கொண்டிருக்கச்செய்வதுடன், மறுபிறப்பிற்குப்பின்பு அவைகள் நம்மை ஜீவனில் வளரவும்செய்கின்றன. எனவே நாம் ஜீவனில் வளர விரும்பினால், மறுபிறப்பின்மூலம் நாம் ஆதாயப்படுத்தியிருக்கிற காரியங்களை நாம் அறியவேண்டும்.


வேதாகமத்தின் போதனையின்படி, மறுபிறப்பு குறைந்தது ஏழு காரியங்களை நாம் பெறும்படிச்செய்கிறது. இந்த ஏழு காரியங்களும் தெய்வீகமாகவோ பெரியதாகவோ, மற்றும் மிகமுக்கியமாகவோ நமக்கு நெருக்கமாகவோ இருக்கின்றன. நாம் இந்த ஏழு காரியங்களையும் ஒவ்வொன்றாகச் சுருக்கமாகப் பார்ப்போம்.


I. தேவனுடைய ஜீவன்


மறுபிறப்பின்மூலமாக நாம் ஆதாயப்படுத்துகிற முதலாவது காரியம் தேவனுடைய ஜீவன். தேவனுடைய ஆவியானவர் தேவனுடைய ஜீவனை நம் ஆவிக்குள் வைக்கிறபோது மறுபிறப்பு நிகழ்கிறது என்று நாம் முந்தைய அத்தியாத்தில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். மறுபிறப்பில், தேவனுடைய ஆவியானவர் செய்கிற முதன்மையான காரியம் நமக்குள் தேவனுடைய ஜீவனை வைப்பதாகும். ஆகையால், மறுபிறப்பு நமக்குத் தருகிற முதன்மையான காரியம் தேவனுடைய ஜீவனாகும்.


ஆனால் தேவனுடைய ஜீவன் என்றால் என்ன? அது தேவனுடைய உள்ளடக்கமும் தேவனுமேயாகும். தேவனில் இருப்பவைகள் எல்லாமும் தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அவைகளும் தேவனுடைய ஜீவனில் இருக் கின்றன. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் தேவனுடைய ஜீவனில் மறைந்திருக்கின்றன. தேவனுடைய சுபாவமும் தேவனுடைய ஜீவனில் அடங்கியிருக்கிறது. தேவன் என்னவாக இருக்கிறாரோ அதன் ஒவ்வொரு அம்சமும் தேவனுடைய ஜீவனில் உள்ளடங்கியிருக்கிறது.


எந்தவகையான உயிரினமானாலும், அது என்னவாக வெல்லாம் இருக்கிறதோ அவையெல்லாம் அந்த ஜீவனில் இருக்கிறது. அதன் எல்லாத் திறமைகளும் செயல்பாடுகளும் அதன் ஜீவனிலிருந்தே விளைகின்றன, மேலும் அதன் வெளியார்ந்த எல்லா நடவடிக்கைகளும் வெளிப்படுதல்களும் அதன் ஜீவனிலிருந்தே தோன்றுகின்றன. அது அந்தவகையான உயிரினமாயிருக்கிறது, ஏனெனில் அது அந்த வகையான ஜீவனைக் கொண்டிருக்கிறது. அதின் உயிருரு அதன் ஜீவனில் இருக்கிறது. இது ஒரு தெளிவான கோட்பாடாக இருக்கிறது.


தேவனே உச்ச உயர்வான ஜீவிக்கிற நபர், நிச்சயமாக (இன்னும் அதிகமாக) அவர் என்னவாகவெல்லாம் இருக் கிறாரோ அவையெல்லாம் அவருடைய ஜீவனில் இருக்கிறது. அவர் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அதாவது சத்தியம், பரிசுத்தம், ஒளி, அன்பு எதுவாகயிருந்தாலும், அவையெல்லாம் அவருடைய -


ஜீவனிலிருந்தே வருகின்றன. அவருடைய வெளிப்படுதல்க ளெல்லாம் அதாவது நன்மை, நீதி, தயவு, மன்னிப்பு எதுவாக யிருந்தாலும், அவையெல்லாம் அவருடைய ஜீவனிலிருந்தே வருகின்றன. அவருடைய ஜீவன் உள்ளார்ந்த ரீதியாக இப்படிப் பட்ட தெய்வீகத் திறமைகளையும், செயல்பாடுகளையும், வெளியார்ந்தரீதியாக இப்படிப்பட்ட தெய்வீக நடவடிக் கைகளையும், வெளிப்படுதல்களையும், அவர் கொண்டிருக்கச் செய்கிறது. அவர் இப்படிப்பட்ட தேவனாக இருப்பதற்கான காரணம் அவர் இப்படிப்பட்ட ஜீவனைக் கொண்டிருப்பதேயாகும். எனவே, அவர் தேவனாக இருப்பது அவருடைய ஜீவனில் இருக்கிறது.


தேவனுடைய ஜீவன் தேவனுடைய உள்ளடக்கமாக இருப்பதால், தேவனுடைய பரிபூரணம் அதில் மறைந்திருக்கிறது, மேலும் அதில் தேவனுடைய சுபாவமும் அடங்கியிருக்கிறது; ஆகையால், நாம் தேவனுடைய ஜீவனைப் பெறுகிறபோது, தேவனுடைய பரிபூரணத்தைப் பெறுகிறோம் (கொலோ. 2:9 10), மேலும் தேவனுடைய சுபாவத்தை நாம் கொண்டிருக்கிறோம் (2 பேதுரு 1:3-4). தேவன் தம்மில் எவைகளையெல்லாம் கொண்டிருக்கிறாரோ அவைகளும், தேவன் தாம் என்னவாக வெல்லாம் இருக்கிறாரோ அவைகளும் தேவனுடைய ஜீவனில் இருப்பதால், இந்த ஜீவனை நாம் பெறும்போது, தேவன் தம்மில் எவைகளை யெல்லாம் கொண்டிருக்கிறாரோ அவைகளையும், தேவன் தாம் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அவைகளையும் நாம் பெறுகிறோம். தேவனுடைய ஜீவன் இப்படிப்பட்ட தெய்வீகத் திறமைகளையும், செயல்பாடுகளையும் தேவன் கொண்டிருக்கச் செய்வதால், தேவனுடைய ஜீவன் தேவனில் உள்ளதைப்போல அதேவகையான திறமைகளையும், செயல்பாடுகளையும் நாமும் கொண்டிருக்கச் செய்யமுடியும். தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அவைகளும், தேவன் என்னவெல்லாம் செய்கிறாரோ அவைகளும் அவருடைய ஜீவனிலிருந்து வருவதால், தேவன் என்னவாக இருக்கிறாரோ அதுவாக நாம் இருப்பதற்கும், தேவன் என்ன செய்கிறாரோ அதை நாம் செய்வதற்கும் நம்மிலுள்ள இந்த ஜீவன் நமக்குத் திறனளிக்கமுடியும்; நாம் தேவனைப்போல இருக்கவும், தேவனை வாழ்ந்துகாட்டவும் இது நமக்குத் திறனளிக்க முடியும் என்பதே இதன் பொருளாகும்.


சகோதர சகோதரிகளே, தேவனுடைய ஜீவன் நம்மில் இருப்பதால், தேவனில் உள்ள எல்லாத் திறமைகளும் செயல்பாடுகளும் நம்மில் இருக்கின்றன என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நாம் தேவனுடைய ஜீவனை நம்மில் கொண்டிருப்பதால், தேவன் என்னவாக இருக்கிறாரோ அதுவாக நாம் இருக்கமுடியும் என்றும், தேவன் எதைச் செய்கிறாரோ அதை நாம் செய்யமுடியும் என்றும் நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? தேவனில் பரிசுத்தத்தின் திறமையும், ஒளியின் செயல்பாடும் இருக்கின்றன. தேவனுடைய ஜீவன் நம்மில் இருப்பதால், தேவனில் இருப்பதைப்போலவே அதே பரிசுத்தத்தின் திறமையும், ஒளியின் செயல்பாடும் நம்மில் இருக்கின்றன. தேவன் தம் பரிசுத்தத்தை வாழ்ந்துகாட்டி, தம்மிலிருந்து தம் ஒளியைப் பிரகாசிப்பதுபோல, நாமும்கூட நம்மிலுள்ள தேவனுடைய ஜீவனால் அவருடைய பரிசுத்தத்தை வாழ்ந்துகாட்டி, நம்மிலிருந்து அவருடைய ஒளியைப் பிரகாசிக்கமுடியும்; தேவன் பரிசுத்தமாயிருப்பதுபோல நாமும் பரிசுத்தமாயிருக்கமுடியும், தேவன் பிரகாசிப்பதுபோல நாமும் பிரகாசிக்க முடியும் என்பதே இதன் அர்த்தமாகும். தேவன் என்னவாக இருக்கிறாரோ அது அன்பு, தேவன் என்ன செய்கிறாரோ அது நீதி. நாம் தேவனுடைய ஜீவனை நம்மில் கொண்டிருப்பதால், தேவன் என்னவாக இருக்கிறாரோ அதுவாக நாம் இருக்க முடியும், தேவன் என்ன செய்கிறாரோ அதை நாம் செய்ய முடியும். தேவன் அன்பாக இருந்து, நீதியைச் செய்வதுபோலவே, தேவனுடைய ஜீவன் நம்மில் இருப்பதால், நாமும்கூட தேவனைப்போல அன்பாக இருக்கமுடியும், தேவனைப்போல நீதியைச் செய்யமுடியும். தேவன் அன்புகூருவதுபோல நாமும் அன்புகூரமுடியும், தேவன் நீதியுள்ளவராக இருப்பதுபோல நாமும் நீதியுள்ளவர்களாக இருக்கமுடியும். இவ்வாறு நாம் தேவனைப்போல இருக்க முடியும் தேவனை வாழ்ந்துகாட்டமுடியும்.


தேவனுடைய ஜீவன் கர்த்தராகிய இயேசுவை உயிர்ப்பித்த மாபெரும் வல்லமையாக இருக்கிறது என்பதை மேலும் நாம் அறியவேண்டும். கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் மரணத்தை உதறித்தள்ளி, மரணத்தை மேற்கொண்டார். மரணம் மிக வலிமையானது (உ.பா. 8:6). இந்த முழுப் பிரபஞ்சத்திலும் தேவனையும், தேவனுடைய ஜீவனையும் தவிர, மரணத்தைவிட வலிமையானது வேறெதுவும் இல்லை. கர்த்தராகிய இயேசு மரணத்திற்குள் நுழைந்தபோது, அவரைப் பிடித்துவைக்க மரணம் தன் எல்லா வல்லமையையும் பயன்படுத்தியது, ஆனால் கர்த்தர் மரணத்தின் பிடித்துவைக்கும் வல்லமையை உடைத் தெறிந்து, எழும்பினார்! இவ்வாறு கர்த்தர் மரணத்தால் பிடித்துவைக்கப் படாதவராக எழமுடியும் (அப். 2:24), ஏனென்றால், தேவனுடைய வல்லமையுள்ள ஜீவன் அவரில் இருக்கிறது. தேவனுடைய மாபெரும் வல்லமையுள்ள ஜீவன் மரணத்தின் பிடித்து வைக்கும் வலிமையான வல்லமையை உடைத்தெறிய அவருக்குத் திறனளித்தது. மறுபிறப்பு நமக்குத் தருகிற தேவனுடைய ஜீவன் மாபெரும் வல்லமையுள்ள தேவனுடைய இந்த ஜீவனேயாகும்!


மாபெரும் வல்லமையுள்ள தேவனுடைய இந்த ஜீவன் இன்று நம்மில் உயிர்த்தெழுதலின் மாபெரும் வல்லமையாக இருக்கிறது; தேவன் மேற்கொண்டதுபோல, நாமும் மரணத்தை உதறித்தள்ளி, மரணத்திற்குரியவைகளை எல்லாம் மேற்கொள்வதற்கு இது நமக்குத் திறனளிக்கிறது.


தேவனுக்கு இரண்டு வகையான மாபெரும் வல்லமைகள் உண்டு என்று வேதாகமம் நமக்குக் காட்டுகிறது: ஒன்று படைப்பின் மாபெரும் வல்லமை, மற்றொன்று உயிர்த் தெழுதலின் மாபெரும் வல்லமை. தேவனுடைய படைப்பின் மாபெரும் வல்லமை இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறது. உயிர்த்தெழுதலின் மாபெரும் வல்லமை மரித்தவர்களுக்கு ஜீவன் தருகிறது. இதனையே ஆபிரகாம் விசுவாசித்தான் (ரோமர் 4:17). தேவனுடைய கரத்தில் இருக்கும் தேவனுடைய படைப்பின் மாபெரும் வல்லமை மனிதனுக்காக எல்லாக் காரியங்களையும் படைக்க வல்லது. தேவனுடைய ஜீவனில் இருப்பதும், தேவனுடைய ஜீவனாக இருப்பதுமான தேவனுடைய உயிர்த்தெழுதலின் மாபெரும் வல்லமை, தேவனுக்கு வெளியேயுள்ள மரித்துப்போன காரியங்கள் எல்லாவற்றிலிருந்தும் மனிதன் விடுவிக்கப்பட்டு, தேவனையே வாழ்ந்துகாட்ட அவனுக்குத் திறனளிக்கிறது. ஆ. மறுபிறப்பின்மூலமாக நாம் பெறுகிற தேவனுடைய ஜீவன் தேவனுடைய இந்த மாபெரும் உயிர்த்தெழுதலின் வல்லமை! மறுபிறப்பின்மூலம் தேவன் நமக்குள் தம் ஜீவனை வார்த்திருக்கிறார், அதாவது நமக்குள் தம் மாபெரும் உயிர்த்தெழுதலின் வல்லமையை வார்த்திருக்கிறார் என்று அர்த்தமாகும். ஆ, நாம் மறுபடிபிறப்பிக்கப்படுகிறபோது நாம் பெறுகிற தேவனுடைய இந்த ஜீவன் தேவனுடைய உயிர்த்தெழுதலின் மாபெரும் வல்லமை என்பதை நாம் பார்ப்போமாக! இன்று நம்மில் உள்ள இந்த ஜீவன் தேவன் எவ்வளவு பலமுள்ளவராக இருக்கிறாரோ, அவ்வளவு பலமுள்ளவர்களாக நம்மை ஆக்கமுடியும். தேவன் மரணத்தை மேற்கொள்ள வல்லவராயிருப்பதுபோல, நம்முள் இருக்கிற மாபெரும் வல்லமையுள்ள இந்த ஜீவனால் நாமும் மரணத்தை மேற்கொள்ள வல்லவர்களாக இருக்கிறோம். மறுபிறப்பின் மூலமாக நாம் பெற்றுக்கொண்ட இந்த தேவனுடைய ஜீவன் என்னே ஜீவன்! இந்த ஜீவன் எந்த அளவிற்கு நம்மை தேவனைப்போல ஆக்கமுடியும்! இந்த ஜீவனுக்காக நாம் எவ்வளவாய் தேவனுக்கு ஆராதனைசெய்து, நன்றிகூற வேண்டும்!


II. ஜீவவிதி


மறுபிறப்பு தேவனுடைய ஜீவனை நமக்குத் தருவதால், அது ஜீவவிதியையும் நமக்குத் தருகிறது. தேவனுடைய ஜீவன் நமக்குள் நுழைந்ததால், இந்த ஜீவனில் அடங்கியுள்ள ஜீவவிதியும்கூட நமக்குள் கொண்டுவரப்பட்டது.


ஒவ்வொரு வகையான ஜீவனுக்கும் அதன் சொந்த உள்ளியல்பான ஆற்றல் இருக்கிறது. அது அதன் இயல்பான செயல்பாடாகும். மேலும், ஒவ்வொரு வகையான ஜீவனின் இயல்பான செயல்பாடும் அதன் இயல்பான விதி அல்லது அதன் ஜீவவிதியாகும். ஒரு குறிப்பிட்ட ஜீவன் ஒரு குறிப்பிட்ட உயிரினத்திற்குள் நுழையும்போது, அந்த ஜீவன் தன் இயல்பான விதி அல்லது தன் ஜீவவிதியை அந்த உயிரினம் கொண்டிருக்கும்படிச் செய்கிறது. அதுபோல, தேவனுடைய ஜீவனுக்கு அதன் தெய்வீக ஆற்றல் இருக்கிறது, அதுவே அதன் தெய்வீக இயல்பான செயல்பாடுகளாகும். மேலும், தேவனுடைய ஜீவனின் இயல்பான செயல்பாடுகள் அதன் இயல்பான விதி அல்லது ஜீவவிதியாகும். தேவனுடைய ஜீவன் நமக்குள் நுழையும் போது, அதனுள் அடங்கியுள்ள இயல்பான விதியை நமக்குள் கொண்டு வருகிறது; மேலும், இந்த விதி நமக்குள் ஜீவவிதியாக மாறுகிறது. இவ்வாறு, தேவனுடைய ஜீவன் நமக்குள் நுழையும்போது, அதனுள் அடங்கியுள்ள ஜீவவிதியும் நமக்குள் நுழைகிறது. தேவனுடைய ஜீவன் என்பது நாம் மறுபிறப்பின்மூலம் ஆதாயப்படுத்திக்கொண்ட ஒன்றாக இருப்பதால், அது தன்னுடன் கொண்டுவரும் ஜீவவிதியும்கூட நாம் மறுபிறப்பின்மூலமாக ஆதாயப்படுத்திக் கொண்டதாகும்.


தேவனுடைய ஜீவனில் தேவனுடைய சுபாவம். அடங்கி யிருக்கிறது. மேலும் தேவனுடைய ஜீவனில் தேவனுடைய பரிபூரணம் மறைந்திருக்கிறது என்று அத்தியாயம் ஒன்றில் நாம் பார்த்திருக்கிறோம். ஆகையால், தேவனுடைய ஜீவனில் அடங்கியுள்ள விதி தேவனோடும், தேவன் என்னவாக இருக்கிறா ரோ அதோடும், தேவனுடைய சுபாவத் தோடும் ஒத்திருக்கிறது; எனவே இந்த விதி சாட்சாத்து தேவனின் விதியாகும். தேவனுடைய ஜீவன் அதன் விதியை நமக்குள் கொண்டு வருகிற போது, அது நமக்குள் தேவனின் விதியைக் கொண்டுவருகிறது என்றும் அதற்கு அர்த்தமாகும்.


தேவனுடைய ஜீவன் நமக்குள் கொண்டுவருகிற ஜீவவிதி எபிரேயர் 8:10-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளாகும். இவை தேவன் நம் மனங்களுக்குள் வைத்து, நம் இருதயங்களில் எழுதியவைகளாகும். இந்த விதிகள் பழையஏற்பாட்டு விதிகளிலிருந்து வித்தியாசமானவை. பழைய ஏற்பாட்டு விதிகள் மனிதனுக்கு வெளியே கற்பலகைகளின்மீது தேவன் எழுத்துக்களால் எழுதியிருந்த தேவனுடைய விதிகளாகும் (யாத். 34:1, 28). ஜீவவிதிகள் நமக்குள் நம் இருதய-பலகையின்மீது தேவன் தம் ஜீவனால் எழுதியிருக்கிற தேவ னுடைய விதிகளாகும். கற்பலகைகளின்மீது எழுதப்பட்டிருந்த விதிகள் வெளியார்ந்த விதிகள், எழுத்துக்களாலான விதிகள், மரித்துப்போன விதிகள், வல்லமையற்ற விதிகள்; அவைகள் மனிதனில் எதையும் நிறைவேற்ற இயலாத விதிகளாகும் (ரோமர் 8:3; எபி. 7:18-19). நம் இருதயமாகிய பலகையின் மீது எழுதப்பட்டிருக்கிற விதிகள் உள்ளார்ந்த விதிகள், ஜீவவிதிகள், ஜீவிக்கிற விதிகள், மாபெரும் வல்லமையை யுடைய விதிகள்; அவைகள் தேவனுடைய இருதய விருப்பத்தை அறிந்து அவருடைய சித்தத்தைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், தேவனையே அறிந்து, தேவனையே வாழ்ந்துகாட்டவும் நமக்குத் திறனளிக்கின்றன.


எந்தவொரு ஜீவனிலும் அடங்கியுள்ள இயல்பான விதிகள், எவ்வாறு வாழவேண்டும். எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அந்த உயிரினம் எப்போதும் தானாகவே அறிந்துகொள்ளும்படிச் செய்கின்றன; இவ்வாறு, அவைகள் அந்த உயிரினத்திற்குள் ஜீவிக்கிற விதிகளாக மாறுகின்றன. ஒரு கோழியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது எவ்வாறு வாழவேண்டும், எவ்வாறு முட்டையிடவேண்டும் என்பவை அந்தக் கோழியின் ஜீவனில் அடங்கியுள்ள இயல்பான விதிகளாகும்; அந்த விதிகள் இந்தக் காரியங்களை எப்படிச் செய்யவேண்டும், அவைகளை எவ்வாறு வாழ வேண்டும் என்று தானாகவே அந்தக் கோழி அறியும்படிச் செய்கின்றன. மனிதன் வெளியே இருந்து எந்த விதியையும் அந்தக் கோழிக்குக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. அந்தக் கோழியில் இருக்கும் ஜீவனில் அடங்கியுள்ள இயல்பான விதிகள் அந்தக் கோழிக்குள் இருக்கும் ஜீவிக்கிற விதிகளாகும். அந்தக் கோழி இந்த முறையில் வாழவேண்டும் என்பதை அந்த விதிகள் தானாகவே அறிந்துகொள்ளச்செய்து, இந்தமுறையில் வாழ அந்தக் கோழிக்குத் திறனளிக்கின்றன.


அதைப்போல, நம்மிலுள்ள தேவனுடைய அடங்கியுள்ள இயல்பான விதிகள் அதன் இயல்பான ஜீவனில் ஆற்றல்களாகும்; நாம் எவ்வாறு செயல்பட்டு நடக்க தேவன் விரும்புவார். எவ்வாறு அவருக்குப் பிரியமாயிருப்பது, எவ்வாறு நாம் அவரை வாழ்ந்துகாட்டுவது என்று தானாகவே அறிய அவைகள் நமக்குத் திறனளிக்கின்றன. ஒரு காரியம் தேவனுடைய சுபாவத்துக்கு ஒத்திருக்கிறதா, தேவனுடைய சுபாவத்துக்கு முரண்பட்டிருக்கிறதா என்றும், அது நாம் செய்யும்படி தேவன் விரும்புகிற காரியமா, நாம் செய்யக்கூடாது என்று தேவன் விரும்புகிற காரியமா என்றும், தேவனுடைய ஜீவனிலுள்ள இயல்பான ஆற்றல்கள் அல்லது இயல்பான விதிகள் நம்மை அறிந்து கொள்ளச்செய்கின்றன, அதாவது இதைக்குறித்த உணர்வை நமக்குக் கொடுக்கின்றன. இவ்வாறு தேவனுடைய ஜீவனின் இயல்பான ஆற்றல்கள் அல்லது இயல்பான விதிகள் நம் உள்ளார்ந்த விதிகளாக மாறுகின்றன.


நம்மில் எழுதப்பட்டிருக்கிற இந்த விதிகள் தேவனுடைய ஜீவனின் இயல்பான ஆற்றல்களாகவும், தேவனுடைய இயல்பான விதிகளாகவும் இருப்பதால், வேதாகமம் அவைகளைப் "பிரமாணம்" என்று அழைக்கிறது. ரோமர் 8-ல் குறிப்பிடப்பட்டுள்ள "ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்" நம்மிலுள்ள இந்த ஜீவவிதியாகும். இந்த விதி தேவனுடைய ஜீவனிலிருந்து வருவதாலும், தேவனுடைய ஜீவன் தேவ னுடைய ஆவியானவரில் இருப்பதாலும், தேவனுடைய ஆவியானவரிலிருந்து பிரிக்கப்படமுடியாததாலும், ரோமர் 8 இந்த விதியை "ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்" என்று அழைக்கிறது. தேவனுடைய ஜீவன் தேவனுடைய ஆவியான வரில் இருக்கிறது, மேலும் தேவனுடைய ஆவியானவரோடு இணைக்கப்பட்டிருக்கிறது; தேவனுடைய ஆவியானவர் தேவனுடைய ஜீவனை அடக்கியிருக்கிறார்; இது தேவனுடைய ஜீவனின் ஆவியானவரே. இந்த விதி தேவனுடைய ஜீவனிலிருந்து வருவதால், இது தேவனுடைய ஜீவனின் ஆவியானவரி லிருந்து வருவதாகும். இது தேவனுடைய ஜீவவிதியாக இருப்பதால், இது தேவனுடைய ஜீவனின் ஆவியானவருடைய விதியாகவும் இருக்கிறது.


தேவனுடைய ஜீவன் வல்லமையுள்ளது; தேவனுடைய ஆவியானவரும் வல்லமையுள்ளவர். தேவனுடைய வல்லமை யுள்ள ஜீவனிலிருந்தும், தேவனுடைய வல்லமையுள்ள ஆவியானவரிலிருந்தும் வருகின்ற ஜீவனுடைய ஆவியின் விதியும் வல்லமையுள்ளது. நம்மிலுள்ள தேவனுடைய ஜீவன் இந்த விதியின் ஊற்று என்றும், நம்மிலுள்ள தேவனுடைய ஆவியானவர் இந்த விதியை செயல்படுத்துபவர் என்றும் நாம் சொல்லலாம். நம்மிலுள்ள இந்த விதி விசேஷமாக பலமானதும் வலிமையானதுமாகும்; இது தெய்வீக அறிவைக் கொண்டிருக்க நமக்குத் திறனளிப்பது மட்டுமல்ல, இது தெய்வீக வல்லமையைக் கொண்டிருக்கவும் நமக்குத் திறனளிக்கிறது. மறுபடிப்பிறப்பிக்கப்பட்டு தேவனுடைய ஜீவனைப் பெற்றவுடன் நாம் நாம் தேவனுடைய மக்களாக இருக்கவேண்டுமென்றும், இந்த பலமும் வலிமையுமான விதியின்படி, அதாவது இந்த மாபெரும் வல்லமையின் விதியின்படி அவரில் வாழவேண்டுமென்றும் தேவன் விரும்புகிறார். நாம் இரட்சிக்கப்பட்டபின்பு, இந்த ஜீவவிதி, அதாவது இந்த ஜீவிக்கும் விதியாகிய நம்மிலுள்ள இந்த விதிக்கேற்றபடி நாம் அவருடைய ஜீவனில் வாழவேண்டு மென்றும், அவருடைய ஜீவனை வாழ்ந்துகாட்ட வேண்டு மென்றும் தேவன் விரும்புகிறார்.


III. ஒரு புதிய இருதயம்


தேவன் நம்மை சுத்திகரிக்கிறபோது, இரட்சிக்கிறபோது அல்லது மறுபடிப்பிறப்பிக்கிறபோது, அவர் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருகிறார் என்று எசேக்கியேல் 36:26 நமக்குச் சொல்லுகிறது. வேதாகமத்தின் போதனையின்படி, மறுபிறப்பு நமக்கு ஒரு புதிய இருதயத்தையும் தருகிறது.


புதிய இருதயம் என்றால் என்ன? புதிய இருதயம் என்றால் பழைய இருதயம் புதிதாகியுள்ளது என்று அர்த்தம் இந்தப் புதிய இருதயம் நம் பழைய இருதயம் புதுப்பிக்கப்படுவதி லிருந்து வருகிறது. தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவ தென்றால், தேவன் நம் பழைய இருதயத்தைப் புதிதாக்குகிறார் என்று அர்த்தமாகும். தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருகிறார் என்று எசேக்கியேல் 36:26 கூறிய பின்பு, அவர் நம் கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு நமக்கு ஒரு சதையான இருதயத்தைத் தருகிறார் என்று அது கூறுகிறது. இந்த வசனத்திலிருந்து, நம் பழைய இருதயத்தைப் புதிதாக்குவதால் தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருகிறார் என்பது தெளிவாகிறது.


ஆரம்பத்தில் நம் இருதயம் தேவனை எதிர்த்தது, தேவனை விரும்பவில்லை, மேலும் தேவனைப்பொறுத்தவரை கல்லைப் போல கடினமாயிருந்தது; இவ்வாறு அது ஒரு 'கல்லான இருதயமாக மாறியது. பரிசுத்த ஆவியானவர் நம்மை மறுபடிப்பிறப்பிக்கும்போது, அவர் நம் இருதயத்தை பாவத்தி லிருந்து திரும்பச்செய்து தேவனைப்பொறுத்தவரை மிருது வாக்குகிறார். எனவே மறுபிறப்புக்குப்பின்பு, நம் கல்லான இருதயம் "சதையான இருதயமாக" மாறுகிறது. இந்தக் கடினமான கல்லான இருதயம் நாம் கொண்டிருந்த பழைய இருதயமாகும்; இந்த மிருதுவான சதையான இருதயம் தேவன் நமக்குத் தருகிற புதிய இருதயமாகும். நாம் மறுபடிபிறப்பிக்கப்படும்போது, தேவன் நம் பழைய இருதயத்தைப் புதிதாக்கி அதனை மிருதுவாக்குகிறார் என்பதே இதன் அர்த்தமாகும்.


நம் இருதயம் காரியங்களைக்குறித்த நம் பற்று மற்றும் பாசத்தின் உறுப்பாக இருக்கிறது. இது காரியங்களோடு உள்ள தொடர்பில் நம் பற்று, பாசம், களிப்பு, விருப்பம் ஆகியவற்றில் நம்மை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நம் பற்று, பாசம், களிப்பு, விருப்பம் ஆகியவையெல்லாம் நம் இருதயத்தின் செயல்பாடுகளாக இருக்கின்றன. நாம் மறுபடி பிறப்பிக்கப் படுவதற்குமுன்பு, நம் இருதயம் பாவத்தைப்பற்றியிருந்தது, உலகத்தை நேசித்தது, இச்சையான காரியங்களை விரும்பியது; இருப்பினும் தேவனைப் பொறுத்தவரை, அது பற்றும் பாசமும் இல்லாமல் குளிர்ந்ததாகவும் கடினமானதாகவும் இருந்தது; தேவனுடைய காரியங்களையும் ஆவிக்குரிய காரியங்களையும் பொறுத்தவரை அதற்கு எந்தக் களிப்புமில்லை எந்த விருப்பமுமில்லை. எனவே தேவன் நம்மை மறுபடிபிறப்பிக்கிற போது அவர் நம் இருதயத்தைப் புதுப்பிக்கிறார், மேலும் ஒரு புதிய பற்று, புதிய பாசம், புதிய களிப்பு, புதிய விருப்பம் ஆகியவைகளுடன் ஒரு புதிய இருதயமாக நம் இருதயத்தை அவர் ஆக்குகிறார். இவ்வாறு நாம் மறுபடிபிறப்பிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டபோது நம் இருதயம் தேவனைநோக்கிச் சாய்கிறது, தேவனை நேசிக்கிறது, தேவனை விரும்புகிறது; தேவனுடைய காரியங்களையும் ஆவிக்குரிய காரியங் களையும் பரலோக காரியங்களையும் பொறுத்தவரை அது களிப்பையும் விருப்பத்தையும் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட காரியங்கள் குறிப்பிடப்படும்போதெல்லாம் நம் இருதயம் மகிழ்ச்சியுள்ள தாகவும், உணர்வுள்ளதாகவும், விருப்பமுள்ளதாகவும் இருக்கிறது. சகோதர சகோதரிகளே, நீங்கள் இதைப் பார்த்திருக்கிறீர்களா? நம் மறுபிறப்பின்போது, நம் இருதயத்தை அவர் புதிதாக்கி நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவதின் காரணம், நாம் அவர் பக்கமாய் சாய்ந்து, அவரைப் போற்றி, அவரை விரும்பி, அவரை நேசிக்க வேண்டுமென்று தேவன் விரும்புவதேயாகும். முன்பு நாம் அவரை நேசிக்கவில்லை, நம்மால் அவரை நேசிக்க முடியவுமில்லை, ஏனெனில் நம் இருதயம் பழமையாகவும் கடினமாகவும் இருந்தது. இப்போது, அவர் நம் இருதயத்தைப் புதிதாக்கியும், மிருதுவாக்கியும், திருப்பியும் இருக்கிறார்; இவ்வாறு, நாம் அவரை நேசிக்கத் திறனுள்ளவர்களாகவும் சித்தமுள்ளவர்க ளாகவும் இருக்கிறோம். நம் இருதயம் புதிதாக்கப்படுவதின்மூலமாக ஒரு புதிய இருதயமாக மாறியிருப்பதால், இப்போது அதற்கு ஒரு புதிய செயல்பாடு இருக்கிறது. அது தேவன் பக்கமாய் சாய்ந்து, தேவனையும் தேவனுடைய காரியங்களையும் நேசிக்க முடியும் என்பதே இந்தப் புதிய செயல்பாடாகும்.


மறுபிறப்பு நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவதால், ஒரு புதிய பற்றையும் அன்பையும் மற்றும் ஒரு புதிய விருப்பத்தையும் ஏக்கத்தையும் நாம் கொண்டிருக்கச்செய்கிறது. இந்தப் புதிய பற்று, அன்பு, விருப்பம், ஏக்கம் ஆகியவை யெல்லாம் தேவனையும் தேவனுடைய காரியங்களையும் நோக்கியே உள்ளன. இதுவே புதிய இருதயத்தின் செயல்பாடு; இது நமக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுப்பதில் தேவனுடைய குறிக்கோளாகவும் இருக்கிறது.


IV. ஒரு புதிய ஆவி


தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருகிறார் என்று எசேக்கியேல் 36:26 கூறியபின்பு, தேவன் நம்மில் ஒரு புதிய ஆவியையும் வைக்கிறார் என்று அது கூறுகிறது. ஆகவே, மறுபிறப்பு நாம் ஒரு புதிய இருதயத்தை மட்டும் கொண்டிருக்கச் செய்வதில்லை; நாம் ஒரு புதிய ஆவியையும் கொண்டிருக்கச் செய்கிறது.


புதிய ஆவி என்றால் என்ன? புதிய ஆவி என்றால் நம் மரித்த பழைய ஆவி புதுப்பிக்கப்பட்டு உயிர்ப்பிக்கப் பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும். புதிய இருதயம் என்றால் புதுப்பிக்கப்பட்ட பழைய இருதயம் என்பதுபோல, புதிய ஆவி என்றால் புதுப்பிக்கப்பட்ட பழைய ஆவியாகும். பழைய இருதயம் புதுப்பிக்கப்படும்போது, மிருதுவாக்கப்படுகிறது; பழைய ஆவி புதுப்பிக்கப்படும்போது, உயிர்ப்பிக்கப்படுகிறது. இது ஏனென்றால், நம் பழைய இருதயத்தின் பிரச்சினை அதன் கடினத்தன்மையாகும், ஆனால், நம் பழைய ஆவியின் பிரச்சினை மரணத்தன்மையாகும். ஆயைால், தேவன் நம்மை அதன் மறுபடிப்பிறப்பிக்கும்போது, நம் கடினமான பழைய இருதயம் புதிய இருதயமாக மாறும்படி, அவர் அதை மிருதுவாக்குவதால் புதிதாக்குகிறார்; அதுபோல, நம் மரித்த பழைய ஆவி புதிய ஆவியாக மாறும்படி, புதிதாக்குகிறார். அவர் அதை உயிர்ப்பிப்பதால்


மனிதனுடைய படைக்கப்பட்ட ஆவி ஆரம்பத்தில் மனிதன் தேவனைத் தொடர்புகொள்வதற்கான உறுப்பாக இருந்தது. மனிதன் தன் ஆவியின்மூலமாகவும், ஆவியினாலும் தேவனோடு ஐக்கியம் கொண்டு, தேவனோடு தொடர்புகொண்டான். பின்னர், மனிதனுடைய வீழ்ச்சியின் காரணமாக பாவத்தின் கறைப்படுத்து தலால் அவனுடைய ஆவி சேதப்படுத்தப்பட்டது. இவ்வாறு, மனித ஆவி தேவனோடு கொண்டிருந்த அதன் செயல்பாட்டை இழந்து மரித்த ஆவியாக மாறியது. அது மரித்ததாயிருந்ததால் பழையதாக இருந்தது. நாம் மறுபடிபிறப்பிக்கப்படுகிறபோது, நம் ஆவி அனுபவித்த கறைபடுதலை கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் சுத்திகரிப்பதால், தேவனுடைய ஆவியானவர் தேவனுடைய மூலக்கூறாகிய தேவனுடைய ஜீவனை நம் ஆவிக்குள் வைத்து அதை உயிர்ப்பிக்கிறார் (கொலோ. 2:13-ஐ பார்க்க). இந்த முறையில் நம் மரித்த பழைய ஆவி புதுப்பிக்கப்பட்டு ஜீவிக்கிற ஒரு புதிய ஆவியாக மாறுகிறது.


ஆரம்பத்தில் நம் ஆவி ஒரு பழைய படைப்பாக இருந்தது; தேவனுடைய எந்த மூலக்கூறும் அதில் இல்லை. பின்னர், தேவனுடைய எந்த மூலக்கூறையும் அது கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அது பாவத்தால் கறைபடுத்தவும்பட்டது; இவ்வாறு, அது பழையதாக மாறியது. எதுவும் பழையபடைப்பின் ஒரு பகுதியாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன: ஒன்று, அது படைப்பின்போது தேவனுடைய மூலக்கூறு இல்லாததாக இருந்தது; மற்றொன்று, அது பாவத்தினாலும் சாத்தானாலும் கறைப்படுத்தப்பட்டும் சீரழிக்கப்பட்டும் இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களால்தான் நம் ஆவியும் ஒரு பழைய ஆவியாக மாறியது. எனவே, தேவன் நம்மை மறுபடி பிறப்பிக்கிறபோது, நம் ஆவியைப் புதுப்பித்து, அதை ஒரு புதிய ஆவியாக மாற்றும்படி அவர் இரண்டு பக்கங்களிலிருந்து வேலைசெய்கிறார். ஒருபக்கத்தில் நம் ஆவியின் கறைபடுதலை சுத்திகரிக்க அவர் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தைப் பயன்படுத்துகிறார். இதனால் நம் ஆவி சுத்தமாகிறது. மறுபக்கத்தில் நம் ஆவிக்குள் தம் ஜீவனை வைக்க அவர் தம் ஆவியைப் பயன்படுத்துகிறார். இதனால் நம் ஆவி அவருடைய மூலக்கூறைக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அம் பழைய ஆவியைப் புதுப்பித்து அதை ஒரு புதிய ஆவியாக ஆக்குகிறார். அவர் நம் ஆவியைப் புதுப்பித்து அதை ஒரு புதிய ஆவியாக ஆக்குவதின் அர்த்தம், அவர் நம்மில் ஒரு புதிய ஆவியை வைப்பதாகும்.


நம் மறுபிறப்பின்போது தேவன் ஏற்கெனவே நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தந்திருப்பதால், ஏன் மேலும் ஒரு புதிய ஆவியையும் அவர் நம்மில் வைக்கிறார்? இது ஏனென்றால் இருதயம் தேவனை விரும்பவும், தேவனை நேசிக்கவும் மட்டுமே முடியும்; அது தேவனைத் தொடர்புகொள்ளவோ, தேவனைத் தொடவோ முடியாது. ஆகையால் தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவது மட்டும் போதுமானதல்ல, அவர் நம்மில் ஒரு புதிய ஆவியையும்கூட வைக்கவேண்டும். தேவன் ஒரு புதிய இருதயத்தை மட்டும் நமக்குத் தந்தால், நாம் அவரை விரும்பவும் நேசிக்கவும் மட்டுமே அவர் செய்யமுடியும், நாம் அவரைத் தொடர்புகொள்ளும்படி அவர் செய்யமுடியாது. ஆகையால் நாம் அவரைத் தொடர்புகொள்ளவும், அவரோடு ஐக்கியம் கொள்ளவும், அவர் நம்மில் ஒரு புதிய ஆவியை வைக்க வேண்டும்.


இருதயம் நம் பற்று மற்றும் அன்பின் உறுப்பு என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். ஆகையால் தேவனை பொறுத்தவரை இருதயத்தின் செயல்பாடு அவரை நோக்கி சாய்ந்துகொள்வதும் அவரை நேசிப்பதுமாகும். இருதயம் தேவனை வாஞ்சிக்கிறது, அதாவது இருதயம் தேவன்மேல் தாகமாயிருக்கிறது என்று வேதாகமம் கூறுகிறது (சங். 42:1-2). இருதயம் தேவனை வாஞ்சிக்கமுடியும், தேவன்மேல் தாகமாயிருக்கமுடியும், ஆனால் அது தேவனைத் தொடர்புகொள்ளவோ, தேவனைத் தொடவோ முடியாது. இருதயத்திற்குத் தேவனை நேசிக்கும், தேவன்மேல் தாகமாயிருக்கும் செயல்பாடு மட்டுமே உண்டு; அதற்குத் தேவனைத் தொடர்புகொள்ளும் அல்லது தேவனைத் தொடும் ஆற்றல் இல்லை. தேவனைத் தொடர்புகொள்ளக்கூடியது இருதயமல்ல, ஆவியே. இருதயம் நாம் தேவனை நேசிப்பதற்கு மட்டுமே ஏற்றது. ஆனால் ஆவியே நாம் தேவனைத் தொடர்புகொள்ளவும், தேவனோடு ஐக்கியம்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது.


எடுத்துக்காட்டாக, என்னிடம் ஒரு ல பேனா இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். என் இருதயம் அதை மிகவும் விரும்புகிறது; ஆனால் என் இருதயம் அதைத் தொடவோ அதை எடுக்கவோ முடியாது. ஏனெனில் என் இருதயத்திற்கு அப்படிப்பட்ட ஆற்றல் இல்லை. அப்படிப்பட்ட ஆற்றல் என் கைக்கு உரியது. கை ஆவிக்கு உதாரணமாயிருக்கிறது. நம் இருதயம் தேவனை நேசித்து அவருக்காக ஆழமாகத் தாகம்கொண்டிருந்தாலும், அது தேவனைத் தொடர்புகொள்ளவும்முடியாது அவரோடு ஐக்கியம் கொள்ளவும் முடியாது. நம் ஆவி மட்டுமே அதைச் செய்ய முடியும். ஆகையால் நாம் மறுபடி பிறப்பிக்கப்படுகிறபோது தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவது மட்டுமல்ல, அவர் நமக்குள் ஒரு புதிய ஆவியையும் வைக்கிறார்.


புதிய இருதயத்தைக்கொண்டு நாம் தேவனை விரும்பவும் தேவனை நேசிக்கவும் முடியும். புதிய ஆவியைக்கொண்டு நாம் தேவனைத் தொடர்புகொள்ளவும் தேவனைத் தொடவும் முடியும். தேவனையும் தேவனுடைய காரியங்களையும் பொறுத்தவரை, புதிய களிப்பையும் பற்றுகளையும் மற்றும் புதிய உணர்வுக ளையும் ஆர்வத்தையும் கொண்டிருக்க நம் புதிய இருதயம் நமக்குத் திறனளிக்கிறது. தேவனையும் தேவனுடைய காரியங்க ளையும் பொறுத்தவரை புதிய தொடர்பையும் உட்பார்வையையும் மற்றும் புதிய ஆவிக்குரிய ஆற்றலையும் செயல்பாட்டையும் கொண்டிருக்க நம் புதிய ஆவி நமக்குத் திறனளிக்கிறது. முன்னாளில், நாம் தேவனை நேசிக்கவுமில்லை தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களை விரும்பவுமில்லை; மேலும் தேவனைத் தொடர்புகொள்ளவோ தேவனுடைய ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்து கொள்ளவோ நம்மால் இயலவில்லை. ஆனால் இப்போது ஒரு புதிய இருதயமும், ஒரு புதிய ஆவியும் நம்மிடம் இருக்கின்றன; ஆகையால் நாம் தேவனையும் தேவனுடைய காரியங்களையும் நேசிப்பது மட்டுமல்ல, நாம் தேவனைத் தொடர்புகொள்ளவும் தேவனையும் தேவனுடைய காரியங்களையும் அறிந்து கொள்ளவும் முடியும். முன்னாளில், தேவனைப் பொறுத்தவரை எந்த உணர்வும், தேவனில் எந்த ஆர்வமும் நமக்கு இல்லாதிருந்தது; தேவனையும் தேவனுடைய காரியங்களையும் பொறுத்தவரை, நாம் பலவீனமாகவும் எந்தவித ஆற்றல் இல்லாமலும் இருந்தோம். ஆனால் இப்போது ஒரு புதிய இருதயத்தோடும், ஒரு புதிய ஆவியோடும் தேவனையும் தேவனுடைய காரியங்களையும் பொறுத்தவரை, உணர்வும் ஆர்வமும் நாம் கொண்டிருப்பது மட்டுமல்ல, நாம் அவைகளைத் தொடர்புகொண்டு புரிந்துகொள்ள வல்லவர்களாகவும் இருக்கிறோம். எனவே நாம் தேவனை நேசிக்கிறபோது நம் ஆவி அவரைத் தொடுகிறது. நம் இருதயம் தேவனுடைய காரியங்களில் களிகூரும்போது, நம் ஆவி அவைகளைப் புரிந்துகொள்கிறது. இதுவே ஒரு புதிய இருதயத்துடன் கூடுதலாக ஒரு புதிய ஆவியை நமக்குக் கொடுப்பதில் தேவனுடைய நோக்கமாகும்.


V. பரிசுத்த ஆவியானவர்


தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருகிறார், மேலும் தேவன் நம்மில் ஒரு புதிய ஆவியை வைக்கிறார் என்று எசேக்கியேல் 36:26 கூறியபின்பு, தேவன் தம் சொந்த ஆவியை நம்முள் வைக்கிறார் என்றும் 27 தொடர்ந்து கூறுகிறது. ஆகையால் மறுபிறப்பின்மூலம் நாம் ஆதாயப் படுத்துகிறவைகளுள் தேவனுடைய ஆவியானவரும் இருக்கிறார். ஆரம்பத்தில் தேவனுடைய ஆவியானவர் நம்மிடம் இல்லை. தேவனுடைய ஆவியானவர் நம்மிடம் இல்லை என்பது மட்டுமல்ல, தேவனைப்பொறுத்தவரை நம் ஆவி மரித்திருந்தது. தேவன் நம்மை மறுபடிப்பிறப்பித்தபோது, ஒருபக்கத்தில் அவருடைய ஆவி அவருடைய ஜீவனை நம் ஆவிக்குள் வைக்கும்படிச்செய்து, நம் மரித்த ஆவியை இவ்வாறு உயிர்ப்பித்தார்; மறுபக்கத்தில் தேவன் தம் ஆவியையும் நம் ஆவிக்குள் வைத்தார்; நம் உயிர்ப்பிக்கப் பட்ட புதிய ஆவியில் அவர் தம் ஆவியை குடியிருக்கச் செய்தார் என்பதே இதன் அர்த்தமாகும். இவ்வாறு மறுபடி பிறப்பிக்கப் பட்டிருக்கிற நம்முள் தேவனுடைய ஜீவனின் மூலக்கூறைக் கொண்ட ஒரு உயிர்ப்பிக்கப்பட்ட புதிய ஆவி மட்டுமல்ல, நம் புதிய ஆவியில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவரும் இருக்கிறார்."


தேவன் ஏன் தம் ஆவியை நம்முள் வைக்கிறார்? நம் ஆவிக்குள் தங்கியிருக்கும் தேவனுடைய ஆவியின் செயல்பாடு என்ன?


வேதாகமத்தின்படி, நம்முள் தங்கியிருக்கிற தேவனுடைய ஆவியானவரின் பிரதானமான செயல்பாடுகளுக்கு குறைந்தபட்சம் ஏழு அம்சங்கள் இருக்கின்றன:


A. உள்குடியிருக்கும் ஆவியாக


நாம் தேவனையும், தேவன் கிறிஸ்துவில் நமக்காக நிறைவேற்றிய எல்லாவற்றையும் அறியவும், அனுபவ மாக்கவும் அவருடைய ஆவி நமக்கு உள்குடியிருக்கிற ஆவியாக இருக்கும்படி தேவன் தம் ஆவியை நம்முள் வைக்கிறார் (ரோமர் 8:9-11). இது புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தேவனால் தரப்பட்டிருக்கிற சிறப்பான ஆசீர்வாதம்; பழைய ஏற்பாட்டி டில் இது இல்லை. பழையஏற்பாட்டில், தேவன் வேலைசெய்ய தம் ஆவியை வெளியே இருந்து மனிதன்மேல் அனுப்பினார்; அவர் தம் ஆவியை மனிதனுக்கு உள்ளே குடியிருக்கச்செய்யவில்லை. கர்த்தருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப்பின்புதான், தேவன் தம் ஆவியை நமக்குக் கொடுத்து உள்குடியிருக்கிற ஆவியானவராகத் தம் ஆவியை நம்மில் குடியிருக்கச்செய்தார் (யோவான் 14:16-17). இவ்வாறு கிறிஸ்துவில் நாம் தேவனுடைய பரிபூரணத்தைப் (கொலோ. 2:9-10) பெற்று அனுபவிக்க உள்ளிருந்து நமக்கு தேவனையும் கிறிஸ்துவையும் அவரால் வெளிப்படுத்தமுடிகிறது.


B. தேற்றரவாளனாக


யோவான் 14:16-17-ல் தேற்றரவாளனைப்பற்றி கர்த்தர் நமக்குச் சொன்னார். வேறொரு தேற்றரவாளனாக நம்மில் குடியிருப்பதற்கு பரிசுத்த ஆவியை நமக்குத் தரும்படி பிதாவிடம் வேண்டிக்கொள்வேன் என்று அவர் சொன்னார். "தேற்றரவாளன்' " என்ற வார்த்தை மூலப்படிவத்தில் 1 யோவான் 2:1-ல் உள்ள 'பரிந்து பேசுபவர்' என்ற வார்த்தைக்கு இணையானது; எழுத்தின்படி இதை வழக்கறிஞர்" அல்லது "நமக்காக வாதாடுபவர்" என்று மொழிபெயர்க்கலாம். ஆரம்பத்தில் தேவன் தம் குமாரனை நம் தேற்றரவாளனாக, அதாவது பரிந்துபேசுபவ ராகத் தந்தார். அவருடைய குமாரன் அவரிடம் திரும்பிச்சென்ற போது அவர் தம் ஆவியை வேறொரு தேற்றரவாளனாக, அதாவது வேறொரு பரிந்துபேசுபவராக நமக்குத் தந்தார். நம் தேற்றரவாளனாக இருக்கும்படி தம் குமாரனின் ஊனுருவாக தம் ஆவியை அவர் அனுப்பினார் என்றும் இதற்கு அர்த்தமாகும். ஆகையால் நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவர் நம்முள் கிறிஸ்துவின் ஊனுருவாகவே இருக்கிறார். தேவனுக்கு முன்பாக கிறிஸ்து நமக்காக இருப்பதுபோல, நம்முள் ஆவியானவரும் முழுமையாகப் பொறுப்பேற்று நம்மைக் கவனித்துக்கொள்கிறார்.


C. சத்திய ஆவியாக


தேற்றரவாளனாக நம்மில் குடியிருக்க வருகிற பரிசுத்த ஆவியான வரே "சத்திய ஆவியானவர்" என்று யோவான் 14:16 17-ல் கர்த்தர் நமக்குச் சொல்லுகிறார். எனவே நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவர் சத்திய ஆவியானவரும் ஆவார். மூலப்படிவத்தில் சத்தியம் என்ற வார்த்தைக்கு நிஜம் என்று அர்த்தமாகும். ஆகையால், 'சத்திய ஆவியானவராக" அல்லது "நிஜத்தின் ஆவியானவராக" நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவர், தேவனும் கிறிஸ்துவும் என்னவாக இருக்கிறார்களோ அவையெல்லாவற்றையும் நமக்குள் நிஜமாக்குகிறார். தேவன் என்னவாக இருக்கிறாரோ, கிறிஸ்துவில் அவர் நமக்காக என்னவெல்லாம் ஆயத்தம்பண்ணியிருக்கிறாரோ, கிறிஸ்து என்னவாக இருக்கிறாரோ, தம் மரணம் உயிர்த்தெழுதலினால் நமக்காக என்னவெல்லாம் நிறைவேற்றியிருக்கிறாரோ அவைகளெல்லாம் நம்மில் குடியிருக்கிற தேவனுடைய இந்த ஆவியானவரால் நிஜமாக நமக்கு வெளிப்படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவைகள் நம்முடையவை களாகும்படி நாம் அவைகளைத் தொட்டு அனுபவமாக்கமுடியும்.


D. ஜீவனின் ஆவியாக


நம்மில் குடியிருக்கிற பரிசுத்த ஆவியானவரை "ஜீவனுடைய ஆவி" என்று ரோமர் 8 அழைக்கிறது (வ. 9, 2). நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவர் தேவனுடைய ஜீவனின் ஆவியானவர் என்றும் இது நமக்குக் காட்டுகிறது. தேவனுடைய ஜீவன் கிறிஸ்துவில் இருந்தாலும் (யோவான் 1:4) அது நம்முள் குடியிருக்கிற பரிசுத்த ஆவியானவர்மூலமாகத்தான் நம்மால் அறியப்பட்டு அனுபவமாக்கப்படுகிறது. ஜீவனோடு தொடர்புள்ள எல்லாக் காரியங்களும் நம்மில் குடியிருக்கிற இந்த பரிசுத்த ஆவியானவரால்தான் நமக்குத் தெரியப்படுத்தப்படுகின்றன.


"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்" என்று ரோமர் 8:9 கூறுகிறது, மேலும் "ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூட சாட்சிகொடுக்கிறார்" என்று வசனம் 16 கூறுகிறது. இந்த இரண்டு வசனங்களிலிருந்து தேவனுடைய ஆவியானவர் நம்மில் குடியிருப்பதென்றால், அவர் நம் ஆவியில் குடியிருக்கிறார் என்று அர்த்தமாகும் என்பதை நாம் பார்க்கிறோம்; அவர் நம் ஆவியுடன் இருக்கிறார்.


ஜீவனின் எல்லா அனுபவங்களும்கூட நம்மில் குடியிருக்கிற இந்தப் பரிசுத்த ஆவியானவரால்தான் நமதாக்கப்படுகின்றன.


E. முத்திரையாக


மறுபிறப்பில் நாம் பெறுகிற பரிசுத்த ஆவியானவர் நம்முள் முத்திரையாக இருக்கிறார் என்று எபேசியர் 1:13 மற்றும் 4:30 நமக்குக் காண்பிக்கின்றன. தேவன் தம் ஆவியை நம்மில் வைக்கும்போது அவர் தம் ஆவியை ஒரு முத்திரையாக நம்மீது பதிக்கிறார் என்பது அதன் அர்த்தமாகும். ஒரு முத்திரை ஒரு பொருளின்மீது பதிக்கப்படும்போது, அது அந்தப் பொருளின் மீதான உரிமையின் அடையாளமாக மாறுவது மட்டுமல்ல, மேலும் முத்திரிப்பதற்காக பயன் படுத்தப்படும் முத்திரையைப் போல அந்தப் பொருளின்மீது ஒரு அச்சுப்பதிவையும் ஏற்படுத்து கிறது. இது, முத்திரையாக நம்மிலுள்ள தேவனுடைய ஆவியான வரின் செயல்பாடாகும். நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவர் நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் காண்பித்து, உலக மனிதர்களிலிருந்து நம்மை வேறுபிரிக்கிற ஒரு குறியாக இருப்பதுடன், தேவன் மற்றும் கிறிஸ்துவின் ஊனுருவாக அவர், தேவனைப்போல அதாவது கிறிஸ்துவைப் போல நாம் மாறும்படி தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய சாயலின்படி நம்மை முத்திரிக்கிறார்.


F. அச்சாரமாக


தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அச்சாரமாக நம்மில் குடியிருக்கிறார் என்று எபேசியர் 1:14-ம், 2 கொரிந்தியர் 1:22 ம் நமக்குச் சொல்லுகின்றன. அச்சாரம் என்பது பிணையம் அல்லது உத்தரவாதமாகும். நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவர் தேவனுக்குச் சொந்தமானவர்களாக நம்மை வேறுபிரித்து, தேவனுடைய சாயலின்படி நம்மை முத்திரிக்கும் ஒரு முத்திரையாக மட்டும் இருக்கவில்லை; தேவனும் தேவனுக்குரிய எல்லாமும், ம் அனுபவித்து மகிழ்வதற்கான நம் பங்கும் நம் பரம்பரைச் சொத்துமாக இருக்கின்றன என்று உத்தரவாதமளிக்கிற அச்சாரமாகவும் அவர் இருக்கிறார்.


G. அபிஷேகமாக


நாம் கர்த்தரிடமிருந்து பெற்ற அபிஷேகம் நம்முள் இருக்கிறது என்று 1 யோவான் 2:27 கூறுகிறது. வேதாக மத்தில் அபிஷேகம் என்பது தேவனுடைய ஆவியானவரைக் குறிக்கிறது (லூக்கா 4:18). ஆகையால், நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவரே அபிஷேகம் என்று இந்த வசனங்கள் நமக்குச் சொல்லுகின்றன. நம்மிலுள்ள இந்த அபிஷேகம் நம்மை அடிக்கடி அபிஷேகிக்கிறது.


அபிஷேகம் என்பது நமக்குள் தேவனுடைய ஆவியானவரின் அசைதலாகும். நம்மில் தேவனுடைய ஆவியானவரின் அசைதல் அல்லது நம்மை அபிஷேகித்தல் என்றால், தேவனுடைய மூலக்கூறு நம் உள்ளார்ந்த மூலக்கூறாகும்படியும், நாம் தேவனையும் எல்லாவற்றிலும் அவருடைய விருப்பத்தையும் சித்தத்தையும் அறியும்படிக்கும் அவர் தேவனையே நம்மில் அபிஷேகிக்கிறார் என்று அர்த்தமாகும்."


இந்த ஏழு செயல்பாடுகளும் என்னே உயர்வானவை, என்னே மகிமையானவை! நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவரின் செயல்பாடுகளை அவைகள் நமக்குக் காட்டுவது மட்டுமல்ல. அவைகள் மறுபிறப்பின் மூலம் நாம் பெற்றுக் கொண்ட தேவனுடைய இந்த ஆவியானவர் எப்படிப்பட்ட ஆவியானவர் என்பதையும் நமக்குத் தெரியப்படுத்துகின்றன.


VI. கிறிஸ்து


நம்மில் குடியிருக்கிற தேவனுடைய ஆவியானவர் நம்மில்

குடியிருக்கிற கிறிஸ்துவின் ஆவியானவரே என்றும், நம்மில்

குடியிருக்கிற கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மில் குடியிருக்கிற

கிறிஸ்துவே என்றும் ரோமர் 8:9-10 நமக்குக் காட்டுகிறது.

நம்மிலுள்ள தேவனுடைய ஆவியானவர் கிறிஸ்துவின் ஊனுரு

என்று இது வெளிப்படுத்துகிறது. மறுபிறப்பு தேவனுடைய

ஆவியானவரை நம்முள் கொண்டிருக்கச்செய்வதால், அது நம்முள் கிறிஸ்துவையும் கொண்டிருக்கச் செய்கிறது. நாம் விசுவாசிக்கிறபோது, தேவன் தம் ஆவியானவர்மூலம் நம்மில் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறார் (கலா. 1:16). ஆகையால் கிறிஸ்துவை இரட்சகராக நாம் பெறுகிறபோது அவர் ஆவியானவராக நம்மில் குடியிருக்கிறார் (2 கொரி.13:5).


நம்மில் கிறிஸ்து குடியிருப்பதின் குறிக்கோள் என்ன? அவர் நம் ஜீவனாக இருப்பதற்காகவே. நம் எல்லாமுமாக இருக்கும்படி கிறிஸ்து நம்மில் குடியிருந்தாலும்கூட, அவர் நம் ஜீவனாக இருக்கவேண்டும் என்பதே அவருடைய உள்குடியிருப்பதற்கான மையக் காரணமாகும்.


நாம் அவருடைய ஜீவனையும், சுபாவத்தையும் பெற்று முற்றும்முடிய அவரைப்போல இருக்கவேண்டும் என்பதற் காகவே தேவன் தம் இரட்சிப்பில் நம்மை மறுபடிபிறப்பித் தார். நாம் பெற்றுக்கொள்வதற்கு அவர் கிறிஸ்துவில் தம் ஜீவனை வைக்கிறார் (யோவான் 1:4; 1 யோவான் 5:11, 12). வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கிறிஸ்து நம் ஜீவனாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் (யோவான் 14:6; கொலோ. 3:4). அவருடைய ஆவியானவர் நம்மில் அவருடைய ஜீவனை வைத்தாலும், அவருடைய ஆவியானவர் தம் ஜீவனை அறியவும் அனுபவ மாக்கவும் வாழ்ந்துகாட்டவும் நமக்குத் திறனளித்தாலும், அவருடைய ஜீவன் கிறிஸ்துவே. அவருடைய ஆவியானவர் மூலம் நாம் அவருடைய ஜீவனைப் பெற்று, அறிந்து, அனுபவமாக்க செய்தாலும்கூட, அவர் கிறிஸ்துவையே நம் ஜீவனாக்குகிறார். தேவன் தம் ஆவியின்மூலம் நம்மில் கிறிஸ்துவை வெளிப் படுத்துகிறார் என்றால், கிறிஸ்து நம் ஜீவனாகவேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்று அர்த்தம். கிறிஸ்து நம்மில் குடியிருக்கிறார் என்றால், அவர் நம்மில் ஜீவனாக வாழ்கிறார் என்றும் (கலா. 2:20), நம்மிலிருந்து அவர் தம் ஜீவனை வாழ்ந்துகாட்ட விரும்புகிறார் (2 கொரி. 4:10-11) என்றும் அர்த்தம். இவ்வாறு தம் ஜீவனில் நாம் அவருடைய சாயலாக வளர்ந்து, அவரைப்போல மாறவேண்டும் என்று அவர் விரும்புகிறார் (2 கொரி. 3:18). அவர் தேவனுடைய சாயலாக இருப்பதால் (கொலோ. 1:15), நாம் அவருடைய ஜீவனில் அவருடைய சாயலாக வளர்ந்து அவரைப்போலவே மாறும்போது நாம் தேவனுடைய வளர்ந்து தேவனைப்போல மாறுகிறோம். சாயலாக


தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ தேவனுடைய ஜீவன் என்று நாம் ஏற்கெனவே பார்த் திருக்கிறோம். அதுவே தேவன் தம் ஜீவனை கிறிஸ்துவில் வைக்கும்போது, தாம் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அதை கிறிஸ்துவில் வைக்கிறார். கிறிஸ்து தேவனுடைய மனிதமாம்சமாகுதலும் தேவனுடைய ஊனுருவுமாவார். தேவன் என்னவாக இருக்கிறாரோ அதுவும், தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாமும் சரீரப் பிரகாரமாக கிறிஸ்துவில் குடியிருக்கிறது (கொலோ. 2:9).ஆகையால், நம்மில் குடியிருக்கிற கிறிஸ்து தேவனின் பரிபூரணமெல்லாவற்றையும் கொண்டு நாம் நிரப்பப்படும்படிச் செய்கிறார் (எபே. 3:17-19).


நம் ஜீவனாக நம்மில் குடியிருக்கிற கிறிஸ்து இன்று தேவனுடைய பரிபூரணத்தையெல்லாம் அனுபவிப்பதற்கு மட்டு மல்ல, எதிர்காலத்தில் தேவனுடைய மகிமைக்குள் நுழைவதற்கும் நமக்குத் திறனளிக்கிறார் (ரோமர் 8:17; எபி. 2:10). ஆகையால், இன்று நம்மில் குடியிருக்கிற அவர் ஒருபக்கத்தில் நம் ஜீவனாக இருக்கிறார், மறுபக்கத்தில் நம் மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார் (கொலோ. 1:27). நம் ஜீவனாக இன்று அவர் நம்மில் குடியிருப்பதின் அர்த்தம், அவரில் உள்ள தேவனுடைய


*இந்தக் குறிப்பின் விரிவான விளக்கம் ஜீவனின் அனுபவம் என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது (லிவிங் ஸ்ட்ரீம் மினிஸ்ட்ரீயின் வெளியீடு), அத்தியாயம்


ஜீவன்மூலம் நாம் வளர்ந்து தேவனைப்போல மாறவும், வளர்ந்து தேவனுடைய சாயலுக்கு ஒப்பாக்கப்படவும், இறுதியாக தேவனுடைய மகிமைக்குள் வளரவும் செய்வார் என்பதாகும்.


VII. தேவன்


கிறிஸ்து தேவனுடைய ஊனுருவாக இருக்கிறார். மறுபிறப்பு நாம் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளச்செய்வதால், அது நாம் தேவனைக் கொண்டிருக்கவும்செய்கிறது. மேலும் கிறிஸ்து தேவனுடைய ஊனுருவாக இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் நிஜமாக இருக்கிறார். தேவன் கிறிஸ்துவில் இருக்கிறார், கிறிஸ்து பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். ஆகையால் மறுபிறப்பு பரிசுத்த ஆவியானவரை கொண்டிருக்கச் செய்யும்போது, அது கிறிஸ்துவை மட்டுமல்ல, தேவனையும் நாம் கொண்டிருக்கச் செய்கிறது. நாம்


தேவன் நம்மை மறுபடிபிறப்பித்ததிலிருந்து அவர் கிறிஸ்துவில் தம் ஆவியின்மூலம் நம்மில் குடியிருக்கிறார். அவர் நமக்குத் தந்திருக்கும் பரிசுத்த ஆவியானவரால் தேவன் நம்மில் குடியிருப்பதை நாம் அறிவோம் என்று அப்போஸ்தல னாகிய யோவான் கூறுகிறார் (1 யோவான் 3:24; 4:13). தாமும் தேவனும் சேர்ந்து நம்மில் குடியிருப்பதாக கர்த்தராகிய இயேசுவும் கூறினார். ஆகையால், நம்மில் குடியிருப்பது பரிசுத்த ஆவியானவரானாலும், கிறிஸ்துவானாலும் அது நம்மில் தேவன் குடியிருப்பதேயாகும். தேவன் கிறிஸ்துவில் இருக்கிறார், கிறிஸ்து ஆவியானவராக இருக்கிறார். ஆகை யால் ஆவியானவர் நம்மில் குடியிருப்பது கிறிஸ்து நம்மில் குடியிருப்பதாகும்; மேலும், கிறிஸ்து நம்மில் குடியிருப்பது தேவன் நம்மில் குடியிருப்பதாகும். தேவன் கிறிஸ்துவில் நம்மில் குடியிருக்கிறார்; மற்றும், கிறிஸ்து ஆவியானவராக நம்மில் குடியிருக்கிறார். ஆகையால் நம்மில் ஆவியானவர் குடியிருக்கிறபோது, நம்மில் கிறிஸ்துவும் தேவனும் குடியிருக்கிறார்கள். ஆவியானவர், கிறிஸ்து, தேவன் ஆகிய மூவரும் ஒன்றாக நம்மில் குடியிருக்கிறார்கள். மூவொரு தேவன் நம்மில் குடியிருக்கிறார் என்பதே இதன் அர்த்தமாகும்.


ஆனால், பரிசுத்த ஆவியானவர் நம்மில் குடியிருப்பதை வேதாகமம் குறிப்பிடுகிறபோது, நம்மில் அவர் அபிஷேகிப் பதை வலியுறுத்துகிறது (1 யோவான் 2:27); கிறிஸ்து நம்மில் குடியிருக்கிறார் என்று குறிப்பிடுகிறபோது, நம் ஜீவனாக நம்மில் அவர் வாழ்வதை அது வலியுறுத்துகிறது (கலா. 2:20); தேவன் நம்மில் குடியிருக்கிறார் என்று அது குறிப்பிடுகிறபோது, தேவன் நம்மில் வேலைசெய்வதை வலியுறுத்துகிறது (பிலி.2:13; எபி. 13:21; 1 கொரி. 12:6), இந்த மூன்று காரியங்களைப்பற்றிய மிகத் தெளிவான வேறுபாடுகளை வேதாகமம் தருகிறது. நம்மில் பரிசுத்த ஆவியானவர் குடியிருப்பதைப்பொறுத்த வரை, அது 'அபிஷேகிப்பதைப்"பற்றிப் பேசுகிறது; நம்மில் கிறிஸ்து குடியிருப்பதைப் பொறுத்தவரை, அது "வாழ்வதைப்"பற்றிப் பேசுகிறது; நம்மில் தேவன் குடியிருப்பதைப்பொறுத்தவரை, அது "வேலை செய்வதைப்" பற்றிப் பேசுகிறது. கிறிஸ்துவோ, தேவனோ நம்மை அபிஷேகிப்பதாக அல்லது பரிசுத்த ஆவியானவரோ, தேவனோ நம்மில் வாழ்வதாக அல்லது பரிசுத்த ஆவியானவரோ, கிறிஸ்துவோ நம்மில் வேலைசெய்வதாக அது ஒருபோதும் கூறவில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகிக்கிறார், கிறிஸ்து நம்மில் வாழ்கிறார், தேவன் நம்மில் வேலைசெய்கிறார் என்று மட்டுமே அது கூறுகிறது. இந்த மூன்று வகையான பேசுதல்களும் ஒன்றுக்கொன்று மாற்றப்படத்தக்கதல்ல. "அபிஷேகிப்பது" நம்மில் பரிசுத்த ஆவியானவர் தைலமாக இருப்பதோடு தொடர்புடையது; "வாழ்வது" நம்மில் கிறிஸ்து ஜீவனாக இருப்பதோடு தொடர்புடையது; "வேலைசெய்வது" நம்மில் தேவன் வேலை செய்வதோடு தொடர்புடையது.


பரிசுத்த ஆவியானவர் நம்மில் குடியிருப்பது தைலமாக இருப்பதாகும். ஆகையால், அவர் நம்மில் என்ன செய்கிறாரோ அது அபிஷேகிப்பதாகும். கிறிஸ்து நம்மில் குடியிருப்பது ஜீவனாக இருப்பதாகும். ஆகையால், அவர் நம்மில் என்ன செய்கிறாரோ அது வாழ்வதாகும். தேவன் நம்மில் குடியிருப்பது வேலைசெய்கிற ஒரு காரியமாகும்; ஆகையால், அவர் நம்மில் என்ன செய்கிறாரோ அது வேலைசெய்வதாகும். பரிசுத்த ஆவியானவர் நம்மை அபிஷேகிப்பதால் தேவனுடைய மூலக்கூறை நமக்குள் அபிஷேகிக்கிறார். கிறிஸ்து நம்மில் வாழ்வதால், தேவனுடைய ஜீவனை நம்மிலும் நம்மிலிருந்தும் வாழ்கிறார். தேவன் நம்மில் வேலைசெய்வதால், அவருடைய சித்தம் நம்மில் நிறைவேற்றப் படும்படி அவர் அதை நமக்குள் நடப்பிக்கிறார்.


நாம் பெற்றுக் ஆகையால், மறுபிறப்பின்மூலம் கொண்டவைகள் எவைகளோ அவைகள் மிகவும் பெரியவை, மிகவும் உயர்ந்தவை, மிகவும் ஐசுவரியமானவை, மிகவும் மகிமையானவை என்பதை நாம் பார்க்கவேண்டும். மறுபிறப்பின்மூலமாக தேவனுடைய ஜீவனையும் இந்த ஜீவனின் விதியையும் நாம் பெறுகிறோம். மறுபிறப்பின் மூலமாக ஒரு புதிய இருதயத்தையும் ஒரு புதிய ஆவியையும் நாம் பெறுகிறோம். மறுபிறப்பின்மூலம் பரிசுத்த ஆவியானவரையும் கிறிஸ்துவையும் தேவனையும் நாம் மேலும் பெறுகிறோம். நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கும் ஆவிக்குரியவர்களாக்குவதற்கும் மற்றும் நம்மை வெற்றியுள்ளவர்களாக்குவதற்கும் வரம்புகடந்தவர்க ளாக்குவதற்கும் மற்றும் நாம் ஜீவனில் வளர்வதற்கும் முதிர்ச்சி யடைவதற்கும் இவைகள் உண்மையாகவே நமக்குப் போதுமான வைகளாக இருக்கின்றன.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.