ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் - 1

 



ஜீவனை பற்றிய பதினான்கு குறிப்புகள் - 1


1. ஜீவன் என்றால் என்ன?


முதலாவது, நாம் ஜீவன் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஜீவனை அறிவதற்கு ஜீவன் என்றால் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். இதை விளக்குவது சற்றுக் கடினம்; எனவே, நிச்சயமாகவே கர்த்தருடைய இரக்கம் நமக்குத் தேவை. வேதாகமப் போதனையின்படி, இந்தக் கருப்பொருளைத் தெளிவு படுத்துவதற்கு குறைந்தது ஆறு குறிப்புகளாவது பரிசீலிக்கப்பட வேண்டும்.


I. தேவனுடைய ஜீவன் மட்டுமே ஜீவன்


ஜீவன் என்றால் என்ன என்பதை விளக்கும்போது, இப் பிரபஞ்சம் முழுவதிலும் எதை ஜீவனாகக் கருதமுடியுமோ அதுவே ஜீவன் என்ற ஒரு காரியத்தைக்குறித்து முதலாவது நாம் தெளிவாக இருக்கவேண்டும். "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்; தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்" என்று 1 யோவான் 5:12 கூறுகிறது. மேலும், "குமாரனிடத்தில் விசுவாச மாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; தேவனுடைய குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை" என்று யோவான் 3:36 கூறுகிறது. தேவனுடைய ஜீவன் மனிதனிடம் இல்லாவிட்டால், அவனிடம் ஜீவன் இல்லை என்று இந்த இரண்டு வேத வசனங்களும் நமக்குச் சொல்லுகின்றன. தேவனுடைய பார்வையில் அவருடைய ஜீவன் மட்டுமே ஜீவன் என்று இது காட்டுகிறது; இதைத் தவிர வேறு எந்த ஜீவனும் ஜீவனாகக் கருதப்படமுடியாது. இவ்வாறு, வேதாக மத்தில் தேவனுடைய ஜீவன் என்று குறிப்பிடப்படும்போது, இது மட்டுமே ஒப்பற்ற ஜீவன் என்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது


(யோவான் 1:4; 10:10; 11:25; 14:6 போன்றவைகள்). தேவனுடைய ஜீவன் மட்டுமே ஜீவன்; ஏனென்றால், தேவனுடைய ஜீவன் மட்டுமே தெய்வீகமாகவும், நித்தியமாகவும் இருக்கிறது. மற்ற ஜீவன்கள் ஜீவனாகக் கருதப்படுவதில்லை.


தெய்வீகம் என்பதின் அர்த்தம் என்ன? தெய்வீகம் என்ப தற்கு, தேவனுக்குரியது, தேவனுடைய சுபாவத்தையுடையது. அல்லது மற்ற எல்லாவற்றிலிருந்தும் வரம்புகடந்தது, வேறுபட்டது என்று அர்த்தமாகும். தேவன் மட்டுமே தேவன், தேவனிடம் மட்டுமே தேவனுடைய சுபாவம் இருக்கிறது. தேவன் மட்டுமே வரம்புகடந்தவராகவும், வேறுபட்டவராகவும் இருக்கிறார்; ஆகையால், தேவன் மட்டுமே தெய்வீகம். தேவனுடைய ஜீவன் என்பது தேவனே (இந்தக் குறிப்பைப் பின்பு நாம் பரிசீலிக்கலாம்). ஜீவன் என்பது தேவனாகவே இருப்பதால், இயல்பாகவே அதனிடம் தேவனுடைய சுபாவம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு தங்கக் கோப்பை தங்கமாக இருக்கிறது. அது தங்கமாக இருப்பதால், அதற்குத் தங்கத்தின் சுபாவம் இருக்கிறது. உண்மையில், தங்கமே அதனுடைய சுபாவம். இதுபோல, தேவனுடைய ஜீவன் என்பது தேவனே, மேலும் அதற்கு தேவனுடைய சுபாவம் இருக்கிறது; தேவனே அவருடைய ஜீவனின் சுபாவமாக இருக்கிறார். தேவனுடைய ஜீவன் தேவனாக இருப்பதாலும், தேவனுடைய சுபாவத்தைக் கொண்டிருப்பதாலும், தேவனுடைய ஜீவன் தெய்வீகமாக இருக்கிறது.


நித்தியம் என்பதின் அர்த்தம் என்ன? நித்தியம் என்றால் படைக்கப்படாதது, தொடக்கமும் முடிவும் இல்லாதது, தன்னில் தானே என்றென்றும் இருப்பது, மாறாமல் இருப்பது. தேவன் மட்டுமே படைக்கப்படாதவர்; "நித்தியத்திலிருந்து நித்தியம் வரை" இருப்பவர் (சங். 90:2, மூலப்படிவம்), அதாவது தொடக்கமும் முடிவும் இல்லாதவர். அவர் "இருக்கிறவராகவே இருக்கிறவர்" (யாத். 3:14), எப்போதும் "மாறாதவர்" (சங். 102:27). தேவன்தாமே இப்படி இருப்பதால், தேவனாகவே இருக்கும் ஜீவனும் இப்படிப் பட்டதாக இருக்கிறது. தேவனைப்போலவே தேவனுடைய ஜீவனும் படைக்கப்படாதது, தொடக்கமும் முடிவும் இல்லாதது, தானாகவே என்றென்றும் இருப்பது, ஒருபோதும் மாறாதது; ஆகையால், தேவனுடைய ஜீவன் நித்தியமானது. எனவே, தேவனுடைய ஜீவனை நித்திய ஜீவன் என்று வேதவாக்கியங்கள் பேசுகின்றன. தெய்வீகமும் நித்தியமும் தேவனுடைய சுபாவமாக இருப்பதாலும், தேவனுடைய குணாதிசயங்களை வெளிக் காட்டுவதாலும், அவைகள் அவருடைய ஜீவனின் சுபாவ மாகவும் ஜீவனுடைய குணாதிசயங்களைச் சித்திரிக்கிறதாகவும் இருக்கிறது. இருப்பினும் தெய்வீகமாயிருப்பது, தேவனுடைய ஜீவனின் ஒரு குணாதிசயமாக இருப்பது மட்டுமல்ல, இன்னும் அதிகமாக அது அவருடைய ஜீவனின் சாராம்சமாகவும் இருக்கிறது; அப்படியிருக்க, நித்தியமாயிருப்பது என்பது தேவனுடைய ஜீவனின் குணாதிசயம் மட்டுமே. தங்கக் கோப்பையின் உதாரணத்தை நாம் மீண்டும் பார்ப்போம். அதன் சுபாவம் தங்கமாகவும், துருப்பிடிக்காததாகவும் இருக்கிறது. இருப்பினும், தங்கம் அந்தக் கோப்பையின் குணாதிசயத்தை மட்டும் வருணிக்கவில்லை, அது அதன் சாராம்சமாகவே இருக்கிறது;


அப்படியிருக்க, அது தங்கமாக இருப்பதால், அதன் சுபாவம்

துருப் பிடிக்காததாக இருக்கிறது. இதுபோல, தேவனுடைய ஜீவன்

நித்தியமாக இருப்பதற்குக் காரணம்

அதுதெய்வீகமாக இருப்பதேயாகும். (தெய்வீகமாயிருப்பது என்பது தேவனுக் குரியதை மட்டுமல்ல, தேவனையே அடையாளப்படுத்துகிறது.) தேவனுடைய ஜீவன் நித்தியமானது ஏனென்றால் அது தெய்வீகமானது. இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட எந்த ஜீவனுக்கும் தெய்வீகசுபாவம் இல்லை; ஆகவே, படைக்கப்பட்ட எந்த ஜீவனும் நித்தியமானதல்ல. தேவனுடைய படைக்கப்படாத ஜீவனுடைய சுபாவம் மட்டுமே தெய்வீகமாகவும் நித்தியமாகவும் இருக்கிறது. தேவனுடைய ஜீவனின் சுபாவம் இப்படியிருப்பதால், இயல்பாகவே தேவனுடைய ஜீவனும்கூட அப்படியே இருக்கிறது. தேவனுடைய ஜீவன் நித்தியமானது ஏனெனில் அது தெய்வீக மானது. இப்பிரபஞ்சம் முழுவதிலும் தேவனுடைய ஜீவன் மட்டுமே தெய்வீகமாகவும் நித்தியமாகவும் இருக்கிறது; ஆகையால், தேவனுடைய ஜீவன் மட்டுமே ஜீவனாகக் கருதப்படுகிறது.


தெய்வீகமாகவும், நித்தியமாகவும் இருக்கிற ஜீவன் மட்டுமே ஜீவனாகக் கருதப்படமுடியும், ஏனெனில் ஜீவன் என்பது ஜீவிக்கிற ஒன்றைக் குறிக்கிறது; ஜீவன் என்று கருதப்படுவதெல்லாம் சாவாமையுடையதாக இருக்கவேண்டும். சாவாமையுடையதாக இருப்பது மாறாததாகவும் இருக்க வேண்டும். எந்தவிதமான தாக்குதலையோ அழிவையோ கடந்து வந்தபின்பும், அது முன்பு இருந்ததுபோலவே இருந்து, தொடர்ந்து வாழ்கிறது. ஒரு ஜீவன் மரணத்திற்கும், மாற்றத்திற்கும் உட்பட்டதாகவும், எந்தத் தாக்குதலையும், அழிவையும் சகித்துக்கொள்ளமுடியாததாகவும் இருப்பது நித்தியமானதோ, சாவாமையுள்ளதோ, மாறாததோ, இல்லை; ஆகையால் அது ஜீவனாகக் கருதப்படமுடியாது. ஜீவன் என்ற ஒன்று என்றென்றும் ஜீவிக்கிறதாகவும், ஒருபோதும் மாறாததாகவும் இருக்கவேண்டும். நித்தியமாக இருப்பது மட்டுமே இப்படி இருக்கமுடியும். அப்படியானால், நித்தியமானது என்பது என்ன? தெய்வீகமாக இருப்பது மட்டுமே! தெய்வீகம் என்பது தேவனுக்குரியது. இது தேவனே. தேவன் மட்டுமே தொடக்கமும் முடிவும் இல்லாதவராகவும், தாமாகவே இருப்பவராகவும், என்றென்றும் இருப்பவராகவும் இருக்கிறார். ஆகையால், அவரே நித்தியமானவர். தெய்வீகமாக இருப்பது மட்டுமே நித்தியமாக இருப்பதாலும், நித்தியமாக இருப்பது மட்டுமே எந்த மாற்றமும் இல்லாமல் நித்தியத்திற்கும் வாழமுடியும் என்பதாலும், தெய்வீகமாகவும் நித்தியமாகவும் இருப்பது மட்டுமே ஜீவனாகக் கருதப்படமுடியும்.


தேவதூதன், மனிதன், விலங்கு, தாவரம் போன்ற இப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா வகையான ஜீவன்களும் சாகக் கூடியவைகள், மாறக்கூடியவைகள். எனவே, அவைகள் நித்தியமானவைகள் இல்லை. அவைகளிடம் தேவனுடைய சுபாவமோ, தெய்வீகமோ இல்லை. தேவனுடைய ஜீவனுக்கு மட்டுமே தேவனுடைய சுபாவம் இருக்கிறது. ஆகையால், அந்த ஜீவன் தெய்வீகமானது நித்தியமானது, மற்றும் சாவாமையுள்ளது மாறாதது, மற்றும் மரணத்தினால் பிடித்து வைக்கப்படமுடியாதது அழிக்கப்படமுடியாதது (அப். 2:24; எபி. 7:17). எப்பேர்ப்பட்ட தாக்குதலையோ, அழிவையோ அது கடந்துவந்தாலும் அது மாறாததாகவும், எப்போதும் ஒரே மாதிரியாகவும் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் தேவனுடைய ஜீவனைத்தவிர வேறு எந்த ஜீவனாலும் இப்படி இருக்கமுடியாது. ஆகையால், நித்தியம் என்ற நிலையில் பார்க்கும்போது, தேவனுடைய ஜீவன் மட்டுமே ஜீவன், அது பெயரளவில் மட்டுமல்ல, அது நிஜத்திலும் ஜீவனாக இருப்ப தால், அது ஜீவனுடைய அர்த்தத்தை முற்றும் நிறைவேற்று கிறது. மற்ற ஜீவன்கள் பெயரளவில் மட்டுமே ஜீவன்களாக இருக்கின்றன, நிஜத்தில் இல்லை. ஆகவே, அவைகளால் ஜீவனுக்குரிய சாவாமை மற்றும் மாறாமை என்ற விதிகளை சந்திக்கமுடியவில்லை; அவைகள் ஜீவனாகக் கருதப்பட முடியாது. எனவே, தேவனுடைய ஜீவனுக்குரிய தெய்வீகம், நித்தியம் என்ற சுபாவத்தின்படி, இப்பிரபஞ்சத்தில் தேவனுடைய ஜீவன் மட்டுமே ஒப்பற்ற ஜீவனாக இருக்கிறது."


II. ஜீவன் தேவனுடைய வெளிப்பாய்தல்


ஜீவன் என்றால் என்ன என்பதைப் பொறுத்தவரை, தேவனுடைய ஜீவன் மட்டுமே ஜீவன் என்பதை முதலாவது நாம் பார்க்கவேண்டும். பின்பு, ஜீவன் என்பது தேவனுடைய வெளிப்பாய்தல் என்பதை நாம் கட்டாயம் பார்க்கவேண்டும். ஜீவத்தண்ணீருள்ள ஒரு நதி தேவனுடைய சிங்காசனத்தி லிருந்து பாய்ந்தோடுவதையும், அந்த ஜீவத்தண்ணீருள்ள நதியில் ஜீவமரம் இருப்பதையும்பற்றி வெளிப்படுத்தின விசேஷம் 22:1-2 பேசுகிறது. ஜீவத்தண்ணீர், ஜீவமரம் இரண்டும் ஜீவனையே அடையாளப் படுத்துகின்றன. ஆகையால், தேவனிடமிருந்து வெளிப்பாய்வதே ஜீவன் என்பது இங்கு நமக்குத் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. எனவே, ஜீவன் என்பது தேவனுடைய வெளிப்பாய்தல் என்று


தேவனுடைய ஜீவனே ஒப்பற்ற ஜீவனாக இருப்பதால், மூல கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு இந்த ஜீவனைப்பற்றிப் பேசும்போதெல்லாம், அது எப்போதும் மிக உயர்ந்த ஜீவனைக் குறிக்கிற சோயே (z0e) என்ற சொல்லையே பயன்படுத்துகிறது (யோவான் 1:4; 1 யோவான் 1:2; 5:12, முதலானவை). இதைத் தவிர, (1) மாம்சத்தின் ஜீவனைப்பற்றிப் பேசுவதற்கு பயோஸ் (bios) (லூக்கா 8:43: 21:4, முதலானவை), மற்றும் (2) மனிதனுடைய ஆத்தும ஜீவனை அல்லது இயற்கையான ஜீவனைப்பற்றிப் பேசுவதற்கு சூக்கே (psuche) (மத். 16:25-26; லூக்கா 9:24, முதலானவை) ஆகிய சொற்களையும் புதிய ஏற்பாட்டின் மூலப்படிவம் பயன்படுத்துகிறது.


ஜீவன் என்பது தெய்வீகமாகவும் நித்தியமாகவும் இருக்க வேண்டுமென்று ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். தேவன் தேவனாக இருப்பதால், இயல்பாகவே அவர் தெய்வீகமாக இருக்கிறார். மேலும் தேவன் நித்தியமானவர் என்று வேதாகமம் கூறுகிறது. எனவே தேவன் தெய்வீகமாகவும் நித்தியமாகவும் இருப்பதால், அவர் ஜீவனாக இருக்கிறார். ஆகையால், தேவன் வெளிப்பாய்வதே ஜீவன்.


தேவனுடைய தெய்வீகமும், நித்தியமுமான சுபாவத் தின்படி, தேவன்தாமே ஜீவனாக இருக்கிறார். ஆனால் தேவன் பாய்ந்தோடவில்லையென்றால், தம்மைப்பொறுத்தவரை அவர் ஜீவனாக இருந்தாலும், நமக்கு அவர் ஜீவனாக இல்லை. அவர் கட்டாயம் பாய்ந்தோடவேண்டும்; அப்பொழுது அவர் நமக்கு ஜீவனாக இருப்பார். அவருடைய வெளிப்பாய்தல் இரண்டு படிகள் மூலமாக கடந்துவருகிறது. முதலாவது, அவருடைய மாம்சமாகுதல். இதனால் அவர் பரலோகத்திலிருந்து மனிதர்கள் மத்தியில் பாய்ந்தோடி, தம்மை ஜீவனாக வெளிப்படுத்தமுடிந்தது (யோவான் 1:1, 14, 4). ஆகையால், வேதாகமம் இதனை, ஒருபக்கத்தில், அவர் "மாம்சத்திலே வெளிப்பட்டார்" என்றும் (1 தீமோ. 3:16), மறுபக்கத்தில், அந்த ஜீவன் வெளிப்பட்டது" (1) யோவான் 1:2) என்றும் பேசுகிறது. எனவே, அவர் மாம்சத்தில் இருந்தபோது, தம்மை ஜீவன் என்று கூறினார் (யோவான் 14:6). அவருடைய வெளிப்பாய்தலின் முதல்படியில், அவர் தம்மை ஜீவனாக நமக்கு வெளிப்படுத்த முடிந்தாலும், நம்மால் அவரை ஜீவனாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை; ஆகையால், வெளிப்பாய்தலின் இரண்டாவது படியை எடுத்தாகவேண்டும். அவருடைய வெளிப்பாய்தலின் இரண்டாவது படி, அவர் சிலுவையில் அறையப்படுவதாகும். அவர் எடுத்துக்கொண்ட மாம்ச அவர் உடல் மரணத்தின்மூலம் உடைக்கப்பட்டது. இவ்வாறு அவர் மாம்சத்திலிருந்து வெளிப்பாயவும், நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஜீவிக்கிற ஜீவத்தண்ணீராக மாறவும் முடிந்தது (யோவான் 19:34; 4:10, 14). பழைய ஏற்பாட்டில் உள்ள பாறை அவரை முன்னடையாளப்படுத்தியது; அது அடிக்கப்பட்டது; இஸ்ரயேல் மக்கள் பெற்றுக்கொள்வதற்காக அதிலிருந்து ஜீவத்தண்ணீர் வந்தது (யாத். 17:6; 1 கொரி. 10:4). ஜீவனைத் தனக்குள் கொண்ட ஒரு கோதுமை மணியாக இருக்கும்படி அவர் மாம்சமானார். மாம்சமாகிய ஓட்டிலிருந்து நமக்குள் பாய்ந்தோடி, அவருடைய அநேக கோதுமை மணிகளாகிய நம் ஜீவனாகும்படி அவர் சிலுவையில் அறையப்பட்டார் (யோவான் 12:24).


இவ்வாறு, தேவனிடமிருந்து நாம் பெறுகிற ஜீவன் தேவனுடைய வெளிப்பாய்தலாக இருக்கிறது. நமக்குள் பாய்ந்தோடுகிற இந்த ஜீவன் நம் பக்கத்தில் தேவனுடைய உள்பாய்தலாகவும், தேவனுடைய பக்கத்தில் தேவனுடைய வெளிப்பாய்தலாகவும் இருக்கிறது. பின்பு, இந்த ஜீவன் நம்மிடத் திலிருந்து வெளியே பாய்ந்தோடும்போது, இது மீண்டும் தேவனு டைய வெளிப்பாய்தலாகும். தேவனுடைய இந்த வெளிப்பாய்தல் அவருடைய சிங்காசனத்திலிருந்து தொடங்கியது: முதலாவது இது நசரேயனாகிய இயேசுவுக்குள் பாய்ந்தோடியது; பின்பு இது சிலுவையினூடாகக் சென்று, அப்போஸ்தலர்களுக்குள் பாய்ந்தோடியது; அதன்பின்பு, இது அப்போஸ்தலர்களிடமிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகளாகப் பாய்ந்தோடியது (யோவான் 7:38); இது எல்லா யுகங்களிலும் இருந்த பரிசுத்தவான்களினூடாகப் பாய்ந்தோடியிருக்கிறது; இறுதியாக இது நமக்குள்ளும் பாய்ந்தோடியிருக்கிறது. இது நம்மிடமிருந்து இன்னும் இலட்சக்கணக்கானவர்களுக்கு நித்தியத்திற்கும் பாய்ந்தோடும்; அதாவது, வெளிப்படுத்தின விசேஷம் 22:1-2, யோவான் 4:14 ல் பேசப்பட்டுள்ளபடி, இடைவிடாமல், என்றென்றும் பாய்ந்தோடிக் கொண்டேயிருக்கும்.


எசேக்கியேல் 47-60 குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீர் தேவனுடைய வெளிப்பாய்தலுக்கு அடையாளமாக இருக்கிறது. இந்தத் தண்ணீர் பாயும் இடத்திலுள்ள எல்லாவற்றிற்கும் ஜீவன் உண்டாயிருக்கும். அதைப்போல, எங்கெல்லாம் தேவ னுடைய இந்த வெளிப்பாய்தல் செல்லுகிறதோ, அங்கெல்லாம் ஜீவன் இருக்கும்; ஏனென்றால், இந்த வெளிப்பாய்தல் ஜீவனாகவே இருக்கிறது. இந்த வெளிப்பாய்தல் நித்தியத் திற்குப் பாய்ந்தோடும் போது, நித்தியம் ஜீவனின் தன்மையால் நிறைந்து, ஜீவனுடைய நித்தியமாக மாறிவிடும்.


முதன்முதலாக, வேதாகமம் ஜீவனைப்பற்றிப் பேசும்போது, அது பாய்ந்தோடுகிற ஒரு நதியை நமக்குக் காட்டுகிறது (ஆதி. 2:9-14). ஜீவத்தண்ணீரோ ஜீவமரமோ, ஜீவனோடு தொடர்புடைய எல்லாக் காரியங்களும் நம்மைப் பொறுத்த வரை தேவனுடைய வெளிப் பாய்தலாகவே இருக்கின்றன என்று வெளிப்படுத்தின விசேஷத்தின் முடிவில் நமக்குக் காட்டப்பட்டிருக்கின்றன. நமக்கு ஜீவன் என்பது தேவனுடைய வெளிப்பாய்தல் என்பதை இது தெளிவாகப் பேசுகிறது. தேவன் பரலோகத்திலிருந்து பாய்ந்தோடி, மாம்சத்தின்மூலமாக நமக்கு வெளிப்பட்ட ஜீவனாக நம் மத்தியில் பாய்ந்தோடினார். பின்பு, அவர் மாம்சத்திலிருந்து ஜீவனாக நமக்குள் பாய்ந்தார்; இந்த ஜீவனை நாம் பெற்றுக்கொண்டோம்.


III. ஜீவன் தேவனுடைய உள்ளடக்கம்


 ஜீவன் என்றால் என்ன என்பதைப் பொறுத்தவரை, ஜீவன் என்பது தேவனுடைய உள்ளடக்கம் என்பதே நாம் அறிந்து கொள்ளவேண்டிய மூன்றாவது குறிப்பு. ஜீவன் தேவனுடைய வெளிப்பாய்தலாக இருப்பதால், இது தேவனுடைய உள்ளடக்க மாக இருக்கிறது; ஏனெனில், தேவனுடைய வெளிப்பாய்தல் தேவனிடமிருந்தே வருகிறது, மேலும் தேவன்தாமே தேவனுடைய உள்ளடக்கமாக இருக்கிறார்.


தேவனுடைய உள்ளடக்கம் தேவனாகவே இருப்பதால், இந்த உள்ளடக்கம் தேவன் என்னவாகவெல்லாம் இருக் கிறாரோ அவைகள் அல்லது தேவத்துவத்தின் பரிபூரணம். தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் கிறிஸ்துவில் இருக்கிறது என்று வேதாகமம் சொல்லுகிறது (கொலோ. 2:9).இது ஏனென்றால், தேவனுடைய ஊனுருவாகிய கிறிஸ்து மனிதனுடைய ஜீவனாக இருக்கும்படி வெளிப்பட்டார். இந்த ஜீவன் தேவத்துவத்தின் பரிபூரணத்தை யெல்லாம், அதாவது தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அவை எல்லாவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ அவையெல்லாம் இந்த ஜீவனில் இருக்கிறது. தேவன் தேவனாக இருப்பது இந்த ஜீவனில் பிணைந்திருக்கிறது. ஆகையால், இந்த ஜீவன் தேவனுடைய உள்ளடக்கம், அதாவது தேவத்துவத்தின் பரிபூரணமாகும். நாம் இந்த ஜீவனைப் பெறும்போது நாம் தேவனுடைய உள்ளடக் கத்தைப் பெறுகிறோம். மேலும் தேவனில் உள்ள எல்லா வற்றையும் பெறுகிறோம். தேவன் என்னவாக இருக்கிறாரோ அதுவே நம்முள் இருக்கிற இந்த ஜீவன். இன்று இந்த ஜீவனில்தான் தேவன் நம் எல்லாமுமாக மாறுகிறார், மேலும் நம் எல்லாமுமாக இருக்கிறார்; இந்த ஜீவனில்தான் தேவன் நம் தேவனாக மாறுகிறார், மேலும் நம் தேவனாக இருக்கிறார். கிறிஸ்துவில் இந்த ஜீவன், தேவத்துவத்தின் பரிபூரணமாகவும், தேவனுடைய உள்ளடக்க மாகவும் இருப்பதால், நம்மிலும் இது தேவத்துவத்தின் பரிபூரண மாகவும், தேவனுடைய உள்ளடக்கமாகவும் இருக்கிறது.


IV. ஜீவன் தேவனே


ஜீவன் என்பது தேவனுடைய வெளிப்பாய்தல் என்றும், ஜீவன் என்பது தேவனுடைய உள்ளடக்கம் என்றும் நாம் பார்த்திருக்கி றோம். தேவனுடைய வெளிப்பாய்தல் தேவ னிடம் இருந்தே வருகிறது. மேலும் தேவனுடைய உள்ளடக்கம் தேவனாகவே இருக்கிறது. ஜீவன் தேவனுடைய வெளிப்பாய்தலும், தேவனுடைய உள்ளடக்கமுமாக இருப்பதால், இயல்பாக ஜீவன் தேவனே. இது, ஜீவன் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய நான்காவது குறிப்பாகும்.


யோவான் 14:6-ல், கர்த்தராகிய இயேசு, தாம் ஜீவன் என்று கூறுகிறார். இதைக்கூறியபின், 7-ல்இருந்து 11-வரையுள்ள வசனங்களில், தாமும் தேவனும் ஒன்று என்றும், அவர் இந்த வார்த்தையைப் பேசும்போது, அது அவரில் தேவன் பேசுகிறார் என்றும் தம் சீடர்களுக்குத் தெரியப் படுத்தினார். அவர் மாம்சமாக மாறின தேவன்; அவர் மாம்சத்தில் இருந்த தேவன் (யோவான் 1:1, 14; 1 தீமோ. 3:16). தாம் ஜீவன் என்று அவர் கூறும்போது, அது தேவன் ஜீவனாக இருக்கிறார் என்று தேவன் கூறுவதாகும். எனவே ஜீவன் என்பது சாட்சாத்து தேவனே என்று அவருடைய வார்த்தை கள் நமக்குக் காண்பிக்கின்றன.


தேவனுடைய ஜீவன்" என்ற பதத்தை வேதாகமம் அபூர்வமாகவே பயன்படுத்துகிறது என்ற உண்மைக்கு நாம் கவனம் செலுத்தவேண்டும். தேவன் ஜீவனாக இருக்கிறார் என்பதையே வேதாகமத்தின் போதனை முக்கியமாக நமக்கு வெளிப்படுத்துகிறது; அது பெரும்பாலும் தேவனை ஜீவனாகப் பேசுகிறது; "தேவனுடைய ஜீவன்" என்று அது அபூர்வ மாகவே குறிப்பிடுகிறது. தேவன் நம் ஜீவனாக இருக்கிறார் என்று அது சொல்லுகிறது; மேலும் தேவனை நம் ஜீவனாகவும் பேசுகிறது; நாம் "அவருடைய ஜீவனைப்" பெற தேவன் விரும்புகிறார் என்று அது ஏறக்குறைய சொல்லவேயில்லை. தேவனுடைய ஜீவன் என்பது தேவனே ஜீவன் அல்லது ஜீவனாக தேவன் என்பதிலிருந்து வித்தியாசமானது. தேவனுடைய ஜீவன் என்பது தேவனுடைய முழுமையையும் குறிக்க வேண்டுமென்ற அவசியமில்லை; அப்படியிருக்க தேவனே ஜீவன் அல்லது ஜீவனாக தேவன் என்பது முழுமையான தேவனையே குறிக்கிறது. கண்டிப்பாகப் பேசுவதானால், நாம் ஜீவனைப் பெறும்போது, நாம் தேவனுடைய ஜீவனைப் பெறவில்லை, மாறாக தேவனை ஜீவனாகப் பெறுகி றோம். தேவன் தம் ஜீவனை மட்டும் நமக்குக் கொடுக்கவில்லை; அவரே நம் ஜீவனாக இருக்கும்படி வந்தார். தேவன் தாமே ஜீவனாக இருப்பதால், அவருடைய ஜீவன் சாட்சாத்து அவராகவே இருக்கிறது.


அப்படியானால், ஜீவன் என்றால் என்ன? ஜீவன் தேவனாகவே இருக்கிறது. ஜீவனைக் கொண்டிருப்பதின் அர்த்தம் என்ன? ஜீவனைக் கொண்டிருப்பதென்றால், தேவனையே கொண்டிருப்ப தாகும். ஜீவனை வாழ்ந்துகாட்டுவ தென்றால், தேவனையே வாழ்ந்துகாட்டுவதாகும். ஜீவன் என்பது தேவனிலிருந்து சற்றும் வேறுபட்டதல்ல. அது அப்படி யிருந்தால், அது ஜீவனாக இருக்கமுடியாது. இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஜீவனைக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் அறிந்திருந்தால் போதாது; நாம் கொண்டிருக்கும் இந்த ஜீவன் தேவனே என்பதை நாம் மேலும் அறியவேண்டும். நாம் ஜீவனை வாழ்ந்துகாட்டவேண்டும் என்பதை மட்டும் அறிந்திருந்தால் போதாது; நாம் வாழ்ந்துகாட்டவேண்டிய ஜீவன் தேவனே என்பதையும் நாம் அறியவேண்டும்.


சகோதர சகோதரிகளே. உண்மையில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டிய ஜீவன் என்ன? நாம் ஜீவனை வாழ்ந்து காட்டும்போது, எதனை வாழ்ந்துகாட்டுகிறோம்? அன்பு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகியவைகளை வாழ்ந்துகாட்டுவது ஜீவனை வாழ்ந்துகாட்டுவதா? இல்லை! ஏனென்றால், அன்போ, தாழ்மையோ, பொறுமையோ ஜீவன் இல்லை; எந்தவித நன்மையோ, நற்பண்போ ஜீவன் இல்லை; தேவன் மட்டுமே ஜீவன். ஆகவே இப்படிப்பட்ட நற்பண்புகளை வாழ்ந்து காட்டுவது ஜீவனை வாழ்ந்துகாட்டுவதல்ல. தேவனை வாழ்ந்துகாட்டுவது மட்டுமே ஜீவனை வாழ்ந்துகாட்டுவதாகும். நாம் வாழ்ந்துகாட்டும் அன்பு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகியவைகள் தேவனுடைய வெளிப் பாய்தலாகவோ, தேவனுடைய வெளிப்படுதலாகவோ இல்லையென்றால், அவைகள் ஜீவன் இல்லை. நாம் வாழ்ந்து காட்டும் எந்த நன்மையோ, நற்பண்போ நம்மூலம் தேவனுடைய வெளிப்படுதலாக இல்லாவிட்டால், அது ஜீவன் இல்லை. நாம் வாழ்ந்துகாட்டும் நற்பண்புகள் தேவனுடைய வெளிப்பாய்தலாக, தேவனுடைய வெளியரங்கமாக, தேவனுடைய வெளிப்படுதலாக இருக்கவேண்டும்; அப்போது, நாம் ஜீவனை வாழ்ந்துகாட்டு கிறோம்; ஏனென்றால், ஜீவன் தேவனாகவே இருக்கிறது.


கொலோசெயர் 2:9-ம், எபேசியர் 3:19-ம் தேவனுடைய பரிபூரணத்தை நமக்குக் காட்டுகின்றன. நாம் பெறுகிற ஜீவன் இந்த பரிபூரணமான தேவனே. ஆகையால், இந்த ஜீவனும் பரிபூரணமானது. இதனில், அன்பு ஒளி மற்றும் தாழ்மை சாந்தம் மற்றும் பொறுமை சகிப்புத்தன்மை மற்றும் பரிவு புரிந்து கொள்ளுதல் ஆகியவைகள் இருக்கின்றன. இந்த ஜீவனில் தேவனிலுள்ள எல்லா நன்மைகளும் நற்பண்புகளும் இருக்கின்றன. ஆகையால் இந்த ஜீவன், இந்த நற்பண்புகளையெல்லாம் நம்மிலிருந்து வாழ்ந்துகாட்டமுடியும். இந்த நற்பண்புகளை வாழ்ந்துகாட்டுவது, தேவனை வாழ்ந்துகாட்டுவதாகும். ஏனெனில், இந்த ஜீவன் தேவனாகவே இருக்கிறது. இந்த ஜீவன் வாழ்ந்துகாட்டப்படும்போது, அன்பு, தாழ்மை, சாந்தம், பொறுமை போன்ற அநேக வெளிப்படுதல்கள் இந்த ஜீவனுக்கு இருந்தாலும், அவையாவும் தேவனுடைய வெளிப்படுதல்களாகும்; ஏனென்றால், அவை யாவும் தேவனிடத்திலிருந்து வாழ்ந்துகாட்டப் படுகின்றன. தேவனிடத்திலிருந்து வாழ்ந்துகாட்டப்படுவது, தேவனுடைய வெளிப்படுதலாகும் அல்லது ஜீவனுடைய வெளிப்படுதலாகும்; ஏனென்றால், தேவன் ஜீவனாக இருக்கிறார், ஜீவன் தேவனாக இருக்கிறது.


V. ஜீவன் கிறிஸ்துவே


ஜீவன் என்பது தேவனே என்று வேதாகமம் காண்பிக்நகிறது.


ஜீவன் கிறிஸ்துவாக இருக்கிறது என்று இன்னும் அதிகமாக அது நமக்குக் காண்பிக்கிறது. ஜீவன் தேவனாக இருந்தது; பின்பு தேவன் மாம்சமானார், அது கிறிஸ்து. ஆகையால் கிறிஸ்து தேவனே; மேலும், கிறிஸ்து ஜீவனும்கூட (1 யோவான் 5:12). தேவனாக இருந்த ஜீவன், அதாவது தேவன் என்னவாக இருக்கிறாரோ அந்த ஜீவன் அவரில் இருக்கிறது (யோவான் 1:4). எனவே கிறிஸ்து, தாமே ஜீவன் என்றும் (யோவான் 14:6; 11:25), மனிதன் ஜீவனைக் கொண்டிருக்கும்படி, பூமிக்கு தாம் வந்தார் என்றும் மீண்டும் மீண்டும் கூறினார் (யோவான் 10:10). ஆகையால், வேதாகமம் அவரை உடையவன் ஜீவனை உடையவன் என்றும் (1 யோவான் 5:12), நம்மில் இருக்கிற அவரே நம் ஜீவன் என்றும் (கொலோ. 3:4) கூறுகிறது.


ஜீவன் தேவனாக இருப்பதுபோல, ஜீவன் கிறிஸ்துவாகவும் இருக்கிறது. ஜீவனைக் கொண்டிருப்பது தேவனைக் கொண் டிருப்பதுபோல, ஜீவனைக் கொண்டிருப்பது கிறிஸ்துவைக் கொண்டிருப்பதாகும். ஜீவனை வாழ்ந்துகாட்டுவது தேவனை வாழ்ந்துகாட்டுவதுபோல, ஜீவனை வாழ்ந்துகாட்டுவது கிறிஸ்துவை வாழ்ந்துகாட்டுவதாகும். ஜீவன் என்பது தேவனிலிருந்து சற்றும் வேறுபட்டதல்ல என்பதைப்போல, ஜீவன் என்பது கிறிஸ்துவிலிருந்து சற்றும் வேறுபட்டதல்ல. தேவனைவிட்டு சற்று விலகுதல் ஜீவன் இல்லை என்பதைப்போல, கிறிஸ்துவைவிட்டு சற்று விலகுதலும் ஜீவன் இல்லை. ஏனென்றால், கிறிஸ்து ஜீவனாக இருக்கும் தேவனாவார். கிறிஸ்துமூலமாகவும், கிறிஸ்துவாகவும் தேவன் ஜீவனாக வெளிப்படுத்தப்படுகிறார். எனவே, கிறிஸ்து ஜீவனாக இருக்கிறார்; ஜீவன் கிறிஸ்துவாக இருக்கிறது.


VI. ஜீவன் பரிசுத்த ஆவியானவரே


யோவான் 14:6-ல் கர்த்தராகிய இயேசு, தாமே ஜீவன் என்று கூறியபின்பு, தாமும் தேவனும் ஒன்று என்று மட்டுமல்ல (வசனம் 7-11), பரிசுத்த ஆவியானவரும் தாமும் ஒன்று என்றும் (வசனம் 16-20) தம் சீஷர்களுக்குத் தெரியப்படுத்தினார்.* தேவனுடைய ஊனுரு, அதாவது அவர் தேவனில் இருக்கிறார், அவர் தேவன் அவரில் இருக்கிறார் என்று 7-ல்இருந்து 11-வரையுள்ள வசனங்களில் அவர் நமக்குக் காண்பித்தார். எனவே, அவர் ஜீவனாக இருப்பதின் அர்த்தம் தேவன் ஜீவனாக இருப்பதாகும். பரிசுத்த ஆவியானவர் அவருடைய ஊனுரு, அதாவது அவருடைய வேறொரு உருவம் என்று வசனங்கள் 16-ல்இருந்து 20வரை அவர் வெளிப்படுத்தினார்; அவருடைய பௌதீக பிரசன்னம் நம்மைவிட்டுப் போகும்போது, இந்த நிஜத்தின் ஆவியானவராகிய அவரே வேறொரு தேற்றரவாளனாக நமக்குள் வந்து, நம்முடன் தங்குகிறார். நம்மில் வாழ்ந்து, நம்முடன் தங்கியிருக்கிற இந்த ஆவியானவர், நாம் வாழும்படியாக நம் ஜீவனாக நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கிற அவரே ஆவார்; ஆகையால், தேவன் அவரில் இருப்பதாலும், அவர் பரிசுத்த ஆவியானவராக இருப்பதாலும், அவர் ஜீவனாக இருக்கிறார் என்று இந்த இரண்டு பகுதிகளும் நமக்குக் காண்பிக்கின்றன. தேவன் அவரில் ஜீவனாக இருக்கிறார்; அவர் பரிசுத்த ஆவியானவராக ஜீவனாக இருக்கிறார். அவர் ஜீவனாக இருப்பது, தேவன் ஜீவனாக இருப்பதும், பரிசுத்த ஆவியானவர் ஜீவனாக இருப்பதுமாகும். இவ்வாறு, அவர் தருகிற ஜீவத்தண்ணீர் நித்திய ஜீவன் என்று யோவான் 4:10, 14 நமக்குச் சொல்லுகிறது. நாம் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவரே நம்மிலிருந்து பாய்ந்தோடுகிற ஜீவத்தண்ணீர் என்று யோவான் 7:38-39 மேலும் நமக்குச் சொல்லுகிறது. பரிசுத்த ஆவியானவரே நித்திய ஜீவன் என்று இது வெளிப்படுத்துகிறது. நாம் பெறுகிற பரிசுத்த ஆவியானவரே நாம் அனுபவிக்கிற நித்திய ஜீவன் அல்லது ஜீவனாக நம்மால் அனுபவமாக்கப்படுகிற கிறிஸ்து. நித்திய ஜீவன், அல்லது ஜீவனாக கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவ ராக நம்மால் அனுபவமாக்கப்பட வேண்டும். இதன் காரணமாக பரிசுத்த ஆவியானவர் "ஜீவனின் ஆவியானவர்" என்று அழைக்கப் படுகிறார் (ரோமர் 8:2)


பரிசுத்த ஆவியானவர் "ஜீவனின் ஆவியானவராக" இருக்கிறார்; ஏனெனில், தேவனும் கிறிஸ்துவும் ஜீவனாக இருப்பது அவரில் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவரும் ஜீவனும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களைப் பிரிக்கமுடியாது. அவர் ஜீவனுக்குரியவர், ஜீவன் அவருக் குரியது. ஜீவன் அவருடைய உள்ளடக்கம், அவர் ஜீவனின் நிஜம். இன்னும் துல்லியமாகப் பேசுவதென்றால், அவர் ஜீவனின் நிஜம் மட்டுமல்ல, அவர் ஜீவனே ஆவார்.


தேவன் என்பவர் மூவொரு தேவன், அதாவது பிதா, குமாரன், ஆவியானவர் என்று நாம் யாவரும் அறிவோம். பிதா குமாரனில் இருக்கிறார்; குமாரன் ஆவியானவராக இருக்கிறார். குமாரனில் பிதா மனிதர்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படுகிறார். ஆகையால் *வசனங்கள் 16 மற்றும் 17-ல் பரிசுத்த ஆவியானவரை "அவர்" என்று கர்த்தர் குறிப்பிட்டார். ஆனால் வசனம் 18-ல், "அவர்" என்ற பிரதிப்பெயர்ச்சொல்லை "நான்" என்று மாற்றினார், "அவர்" என்பதை "நான்" என்று மாற்றியதால், "அவரே” "நான்" என்று கர்த்தர் கூறுகிறார். வசனங்கள் 16-லும் 17-லும் அவர் பேசின பரிசுத்த ஆவியானவர் கர்த்தரே என்று இது வெளிப்படுத்துகிறது.


குமாரன் பிதாவின் வெளிப்படுதல். குமாரன் ஆவியானவராக மனிதனுக்குள் நுழைகிறார்; ஆகையால் ஆவியானவர் குமாரனுடைய நுழைதல். பிதா ஜீவனின் ஊற்று, அதாவது சாட்சாத்து ஜீவனே. குமாரன் பிதாவின் வெளிப்படுதலாக இருப்பதால் (1 தீமோ. 3:16), அவர் ஜீவனின் வெளிப்படுதலாக இருக்கிறார் (1 யோவான் 1:2). ஆவியானவர் குமாரனின் நுழைதலாக இருப்பதால், அவர் ஜீவனின் நுழைதலாக இருக்கிறார். தொடக்கத்தில் ஜீவன் பிதா; அது குமாரனில் மனிதர் மத்தியில் வெளிப்படுத்தப்படுகிறது; மனிதன் அனுபவிக்கும்படியாக அது ஆவியானவராக மனிதனுக்குள் நுழைகிறது. இவ்வாறு ஆவியானவர் ஜீவனின் ஆவியாக மாறுகிறார். ஆவியானவர் ஜீவனின் ஆவியாக இருப்பதால், மனிதன் ஆவியானவர்மூலம் ஜீவனைப் பெறமுடியும்; மேலும் மனிதன் தன் மனதை ஆவியானவர்மேல் பொருத்தும்போது, அது ஜீவனாகிறது (ரோமர் 8:6). ஆவியானவர் ஜீவனின் ஆவியாக இருப்பதால், மனிதன் ஆவியானவரைத் தொடுவதற்குத் தன் ஆவியை இயக்கும்போது, அவன் ஜீவனைத் தொடுகிறான். அவன் ஆவியானவரைத் தொடர்புகொள்ளும்போது, ஜீவனைத் தொடர்புகொள்ளுகிறான். அவன் ஆவியானவருக்குக் கீழ்ப்படியும்போது, அவன் ஜீவனை அனுபவமாக்குகிறான். இவ்வாறு, சுருக்கமாகச் சொன்னால், ஜீவன் மூவொரு தேவன்;


ஆனால் நம்மைப் பொறுத்தவரை, ஜீவன் பரலோகத்தில் உள்ள

மூவொரு தேவன் இல்லை, மாறாக பாய்ந்தோடுகிற மூவொரு

தேவன். அவராகவே இருக்கிற அவருடைய உள்ளடக்கம்

முதலாவது கிறிஸ்துவின்மூலமாகப் பாய்ந்தோடியது, பின்பு நாம்

ஜீவனாக அவரைப்

பெறும்படி ஆவியானவராக அது

பாய்ந்தோடியது என்பதே மூவொரு தேவனின் இந்தப்

பாய்ந்தோடுதலின் அர்த்தமாகும். இவ்வாறு, ஆவியானவராக

கிறிஸ்துவில் தேவனைத் தொடும்போது, நாம் ஜீவனைத்

தொடுகிறோம், ஏனென்றால், ஜீவன் என்பது ஆவியானவராக

கிறிஸ்துவில் தேவனே ஆகும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.