மோசேயும் எலியாவும்
அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள் (மத் 17:3).
எந்தக்காரியமாக இருந்தாலும் அதற்கு பூமியிலுள்ள மூன்று பேர் சாட்சிகளாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து மறுரூபமானதற்கு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் சாட்சிகளாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பூமியிலிருந்து சாட்சி கொடுக்கிறவர்கள்.
இயேசுகிறிஸ்து மறுரூபமானதற்கு பரலோகத்திலிருந்தும் சாட்சி உண்டாயிற்று.
கிறிஸ்துவுக்குள் மரித்துப்போகிறவர்கள் அழிந்து போவதில்லை. மோசேயும் எலியாவும் கர்த்தருக்குள்
நித்திரையடைந்தவர்கள். இவர்கள் இருவர்மீதும் யூதர்கள் மிகுந்த
மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின்
சாட்சியாக இவ்விருவரும்
நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் மோசேக்குள்ளும் எலியாவுக்குள்ளும் அடங்கியுள்ளது. இவர்கள் இருவருமே இப்போது கிறிஸ்துவை கனம்பண்ணுகிறார்கள். கிறிஸ்துவுக்கு சாட்சி பகருகிறார்கள்.
இயேசுகிறிஸ்து மறுரூபமானபோது காணப்படுகிறார்கள். சீஷர்கள் இவர்கள மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக சீஷர்களுக்கு காண்கிறார்கள். இவர்கள் பேசுவதைக் கேட்கிறார்கள். இவர்கள் இருவரும் மோசேயும் எலியாவும் என்பதை அறிந்துகொள்கிறார்கள். மகிமையடைந்த பரிசுத்தவான்கள் பரலோகத்திலே
ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் இயேசுவோடுகூட
நடக்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட இயேசுவோடு பேசுகிறார்கள்.
இந்த நாளுக்கு 1,700 வருஷங்களுக்கு முன்பாகவே மோசே மரித்து விட்டார். அவருடைய சரீரம் அழிந்து போயிருக்கும். (உபா 34; யூதா 1:9) பரதேசிலிருந்து அவர் அழைத்து வரப்பட்டிருக்கலாம். (லூக்கா 16:21-31) மரணமடைந்தபின்பு உயிர்த்தெழுதல் வரையிலும் ஆத்துமா பாதாளத்தில் இருக்கும். அது முழு உணர்வோடும், வஸ்திரங்கள் அணிந்தவையாகவும் இருக்கலாம். (வெளி 6:9-11; எபி 12:23; சங் 16:10) இயேசு கிறிஸ்துவே மரித்தோரில் முதற்பலனானவர். ஆகையினால் இந்த இடத்தில் மோசே உயிர்த்தெழுந்த சரீரத்தில் வந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. (1கொரி 15:20-23)
மோசேயும், எலியாவும் மறுரூபமலையில் இயேசுவோடு பேசுகிறவர்களாக காணப்பட்டதனால் விளங்கும் சத்தியங்கள்
1.நியாயப்பிரமாணம் ஒழிந்துபோயிற்று. (மத் 11:11-13; லூக்கா 16:16)
2.மேசியாவின் பாடுகளைப் பற்றிய
தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிற்று.
(லூக்கா 24:25-27,44-45)
3.கிறிஸ்துவே மேசியா. தேவனிடமிருந்து வந்தவர். தேவனுக்கும், மனுஷனுக்கும் இடையில் ஒரே மத்தியஸ்தர். (அப் 3:22-23; எபி 1:1-2; 1 தீமோ 2:5)
4.மரித்துப்போன ஆத்துமாக்கள் உண்மையானவை, உணர்வுடையவை. (லூக்கா 16:19-31; வெளி 6:9-11)
5.ஆத்துமா மரிக்காது (1பேதுரு 3:4; 1பேதுரு 4:6; சங் 16:10; லூக்கா 20:38)
6.இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, வெகுமதிகள், தண்டனைகள் (மத் 16:27; LD 24:29-25:46)
7. சரீர உயிர்த்தெழுதல் (மத் 17:9; யோவான் 5:28-29; 1கொரி 15)
8.வருங்கால நித்திய இராஜ்ஜியம் உண்மையானது (மத் 16:28; மத் 17:1-9)
எலியா இன்னும் மரிக்கவில்லை. மானிட சரீரத்தில் பரலோகத்தில் சுமார் 1000 வருஷங்களாக உயிரோடு ஜீவிக்கிறான். (2இராஜா 2; மல் 4:5-6; சக 4:11-14; வெளி 11:3-11)

