தோமா வழி கிறிஸ்தவம்:பகவத் கீதை

 



8.பகவத் கீதை


    பகவத் கீதை என்பதற்குக் கடவுளின் பாடல் என்று பொருள், நற்செய்தி, நூல்கள் எங்ஙளம் கிறித்தவர்களால் சிறப்பித்துப் போற்றப் பெறுகிறதோ, அங்ஙளம் இந்து சமய மக்களால் போற்றப்படுவது பகவத் கீதை ஆகும். இது சமசுகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதளை வியாசர் என்னும் திராவிட முனிவர் இயற்றினார். இது கி.பி.4ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.8ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப் பட்டிருக்கலாம். யாவராலும் அறியப்படாத பரம்பொருள், மாந்தவுருவில் அவதரித்து, மக்களுக்குப் போதித்த மெய்ப் பொருளியலை விளக்கிக் காட்டுவதே கீதை ஆகும். மேலை நாட்டறிஞர்களில் சிலரும் கீதையின் மீது நாட்டங்கொண்டு, கிறித்தவ இறையியற் கருத்துகளோடு கீதையை ஒப்பிட்டு எழுதிய பகுதிகளும் குறிப்பிடத்தக்கவை. கிறித்தவக் கருத்துகளுக்கும் கீதைக்கும் உள்ள அடிப்படைத் தொடர்புகள் சிந்திக்கத்தவை.


    'பிரஸ்தானத் திரயம்’


    உபநிடதங்கள், பிரம சூத்திரம், பகவத் கீதை ஆகிய இம்மூன்றையும் 'பிரஸ்தானத் திரயம்' என்று வடமொழியில் குறிப்பிடுவர். அடிப்படையான மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். முடிவான பிரமாணமாக இந்த மூன்று நூல்களும் வேதாந்தத்திற்கு அடிப்படையாக விளங்குகின்றன.


    இம்மூன்றுமே கருத்தொற்றுமை உடையவை. இவற்றுள் கருத்து வேற்றுமை கிடையாது என்பர்.


    உபநிடதங்களைப் பசுக்கள் என்றும் கீதையைப் பால் என்றும் கூறுவர். கீதையின் அடிப்படைச் சாரம் உபநிடத நூல்களிலிருந்து பெறப்பட்டவை என்பது இதன் விளக்கம். நான்கு வேதங்களாகிய ரிக், யசூர், சாமம், அதர்வணம் ஆகியவற்றின் அடிப்படையிலிருந்து உபநிடதங்கள் வேறுபட்டவை. பலி செலுத்தி வழிபாடு செய்வது வேதங்களின் அடிப்படை. எனவே, இதனைப் 'பலிக்கோட்பாடு' என்பர். வேதாந்தமாகிய உபநிடதங்கள் பலியின் சிறப்பை ஏற்றுக் கொண்டு, பலி நிறைவேற்றம் என்னும் புதிய கோட்பாட்டைக் கூறுவதாகும். இந்த வழியில் வந்தது தான் பகவத் கீதை. எனவே கீதையின் கருத்து விளக்கத்திற்கு வேதங்கள் அடிப்படை அல்ல என்பது தெளிவாகும்.


    கீதையும் போர்க்களமும்


    பாண்டவருக்கும் கவுரவருக்கும் போர் நடைபெற்றது. அருச்சுனன் தலைமையேற்றுச் சென்ற தேருக்குத் ; தேரோட்டியாகக் கண்ணன் திகழ்ந்தார். எதிரணியில் தனக்கு எதிராகப் போர் புரிய அணிவகுத்து நின்ற தனது குரு, உறவினர் போன்றோரைக் கண்ட அருச்சுனன் கலங்கினான்; போர் புரிய விரும்பாத அவன் தனது வில்லைக் கீழே நழுவ விட்டான். அந்தச் சூழ்நிலையில் கண்ணன், அருச்சனனுக்கு உபதேசம் செய்தார். அந்த உபதேசமே 'கீதோபதேசம்' எனப்படும் கீதை ஆகும். இது வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் புராணக் கதை.


    பாண்டவர் - கவுரவர் போருக்குக் குருசேத்திரப் போர் என்று பெயர் சூட்டப்படுகிறது. தர்மத்தை நிலை நாட்டுவதற்காக நடைபெற்ற போரே குருசேத்திரப் போர் தர்மத்தின் மொத்த உருவமாகத் திகழ்பவரே அவதாரமாக வந்த கடவுள் அவதாரமாக வந்த கடவுளைக் குருவாக வந்த கடவுள் எனச் சைவ சமயம் குறிப்பிடுகிறது. அதனைக் குருசேத்திரப் போர் எனக் கொள்வது பொருத்தம், குருசேத்திரம் என்பது மாந்தருடைய உடலைே குறிப்பிடுகிறது. சேத்திரம் என்பதற்குக் கோயில் என்பது பொருள். 'குரு' என்பது, குருவாக வந்த கடவுள் ஆவார்; எனவே, குருசேத்திரம் என்பது, கடவுள் வாழும் கோயிலாக விளங்கும் மாந்தனையே குறிக்கிறது எனலாம்.


    கடவுளின் கோயிலாக விளங்க வேண்டிய இந்த மனிதனிடத்தில் நல்வினைக்கும்தீவினைக்கும் போராட்டம் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. இந்தப் போராட்டங்களின் உருவகமாகப் பாண்டவரையும் கவுரவரையும் குறிப்பிடலாம். நன்மை - நல்வினைகள் இவற்றைச் செயற்படுத்துவதே இறைவனின் திட்டம். ஆனால் அதனைச் செயற்படுத்த விடாமல், இந்த உடலில் உள்ளத்தில் போராட்டம் நடைபெறுகிறது. தீமையை அழித்து,நன்மையை நிலை நாட்டுவதற்குக் கடவுள் துணை புரிகிறார்; இதில் அவருடைய செயற்பாடாக விளங்குவது தான். கடவுளின் போதனை. மாந்தனுக்குப் போதிப்பதற்காகக் கடவுள் மாந்த ளாக் இவ்வுலகத்திற்கு வந்து போதனை மட்டுமல்லாமல் தம் செயற்பாடுகளாகிய சாதனையையும் மனித குலத்திற்குச் காட்டுகிறார் என்பது கீதை தரும் பாடம் ஆகும்.


    நல்வினை - தீவினை ஆகிய போராட்டம் பற்றிப் பவுலம

    களார் தமது மடல்களில் குறிப்பிடுகிறார். உரோமையாகுக்!

    எழுதிய மடலில் 7ஆம் அதிகாரம் 14 முதல் 25 வரையுள்ள வசனங்களில் இப்போராட்டம் குறித்து எழுதுகிறார்.

    "நான் அல்ல, எனக்குள் வாழும் பாவமே அப்படிச் (உரோ. 7:17)


    "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லை என்று நான் அறிந்திருக்கிறேன். நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை"

    (உரோ.7:18)


    "ஆகிலும் என் மனத்தின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவத்தில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப் பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்கிறது" (உரோ.7:23)


    கடவுளுக்கும் தீமைக்கும் ஏற்படும் போராட்டம்; ஆவிக்கும் உடலுக்கும் (மாமிசம்) நடைபெறும் போராட்டம். நம் உடம்பிள் உறுப்புகளைக் கடவுளுக்கு உட்படுத்துகிறபோது நம் உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக மாற்றுகிறோம் (உரோ.6:13,19) அதற்கு மாறாக, உலகத்துக்கும் சாத்தானுக்கு அவற்றை உட்படுத்தும் போது, சாத்தானுக்குரிய உறுப்புகளாக அடிமைப்படுத்துகிறோம். (உரோ.6:19)


    எனவே, கிறித்தவ வாழ்க்கை என்பது தீமையை எதிர்த்துப் போராடுகின்ற போர் வீரனுடைய வாழ்க்கையாகும். இதனைக் குறித்துப் பவுலடிகளார்,

    "மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தளங்க ளோடும் அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங் களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டமுண்டு" (எபேசி.6:12)


    என எழுதுகிறார். தீமையை எதிர்த்து நிற்கின்ற ஆன்மீக வீரன், ஒரு

    போர் வீரனைப் போன்று, சீருடையணிந்து எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும் என அவர் சித்திரித்துக் காட்டுகிறார். “தீங்கு நாளில் அவற்றை நீங்கள் எதிர்க்கவும் சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, கடவுளுடைய சர்வ

    ஆயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்" (எபே. 6:13)


    இந்த ஆன்மீக வீரன் அணிய வேண்டிய சீருடையையும், அணிய வேண்டிய போர்க் கருவிகளையும் தொடர்ந்து விளக்குகிறார்.


    'சத்தியம் என்னும் கச்சை"

    நீதி என்னும் மார்க்கவசம்’

    'நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணி"

    விசுவாசம் என்னும் கேடயம்'

    'இரட்சிப்பு என்னும் தலைக் கவசம்'

    'கடவுளின் வார்த்தையாகிய ஆவியின் பட்டயம்'

    (எபேசி. 6:14-17)


    (இவை பவுலடிகளார் விளக்கும் ஆன்மீகப் போர் வீரனின் தோற்றமாகும் இது. இதனை விளக்குவதாகக் குருசேத்திரப் போர்க்களம் காட்சியளிக்கிறது. இனி, சேத்திரம், சேத்ரக்ஞன் முதலியன எவற்றைக் குறிக்கின்ற சேத்திரம் - சேத்திரக்குள் எனக் காண்போம்


    சேத்திரம் - சேத்திரக்ஞன்


    கீதையின் 13ஆம் அதிகாரம்'சேத்திர, சேத்திரக்ஞ விபாக யோகம்' எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த உடல் 'சேத்திரம்' என்றும் அதில் உறைபவன் 'சேத்ரக்ஞன்' என்றும் கீதை குறிப்பிடுகிறது.


    "இதம் சரீரம்... சேத்ரமித்ய பி தீயதே ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு சேத்ரக்ஞ இது தத்வித:


    (கீதை. 13:1) (இவ்வுடல் சேத்திரம் எனப்படுகிறது. இதை அறிகிறவனைச் சேத்திரக்ஞன் என ஞானியர் பகர்கின்றனர்)

    "சேத்ரக்கும் சாபிமாம் வித்தி

    சர்வ சேத்ரேசூ" (கீதை, 13:2)

    (சேத்திரங்களனைத்திலும் என்னைச் 'சேத்திரக்ஞன்' என்று அறிக)

    திராவிடரின் மெய்ந்நூலடிப்படையில் (தத்துவம்) சேத்திரம் என்பது பிரகிருதியையும், சேத்திரக்ஞன் என்பது புருடனையும் குறிக்கிறது. பேரண்டம் பிரகிருதி; பேரான்மா புருடன். உலகு உடலாகவும் கடவுள் உள்ளுறைவோனாகவும் திகழ்கின்றமையை மேற்குறித்த கீதையின் பகுதிகள் விளக்குகின்றன.


    தனிமனித நிலையில், இவ்வுடல் சேத்திரமாகவும் (கோயில்) உள்ளுறையும் கடவுள் சேத்திரக்ஞனாகவும் கொள்ளப்படுகின் றனர், நம் உடலைப் 'பிரமாபுரம்' எனக் குறிப்பிடுவர். கோயில் என்பதும் சேத்திரம் என்பதும் ஒன்றே. கோ + இல் = கோயில், கோ. கடவுள். இல் - வீடு = கடவுளின் வீடு. கோயில் என்பது கடவுளின், வீடு எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், கோயிலின் கருவறையில் தாள் கடவுள் உருவத்தை நிலைப்படுத்துவது மரபு. அதுபோல, நம் உடல் கோயிலாகக் குறிக்கப்பட்டாலும், கடவுள் உறையும் இடமாகச் சுட்டப்படுவது நம் உள்ளம் தான். 'உள்ளம் பெருங்கோயில்' என்றார் திருமூலர்.


    "நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தமன்பே

    மஞ்சளநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே"

    எனத் தாயுமானவர் பாடுகிறார். எனவே, உள்ளமே கோயில் எனப்படும் சேத்திரம், அதில் உறையும் கடவுளே 'சேத்திரக்ரூன்' ஆவார். இதனை உள்ளுறைவோன் (அந்தர்யாமி) என்று குறிப்பிடுவர்,


    புதிய ஏற்பாட்டில் இக்கருத்து தெளிவாக விளக்கப்படுகிறது. இது குறித்துப் பவுலடிகளார், கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.


    “நீங்கள் கடவுளுடைய ஆலயமாயிருக்கிறீர் களென்றும், கடவுளின் ஆவி உங்களில் வாழுகிறார் என்றும் அறியாதிருக்கிறீர்களா?" (1கொரி. 3:16)


    ”கடவுளின் ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்"

    (1கொரி, 3:17)


    "உங்கள் உடலானது நீங்கள் கடவுளாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற தூய ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடை

    யவர்களல்லர் என்றும் அறியீர்களா?" (1கொரி.6:19)


    "நீங்கள்! கடவுளின்

    ஆலயமாயிருக்கிறீர்கள்" (2கொரி.6:16)


    கோயில் என்பது பழைய ஏற்பாட்டில் கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டதைக் குறித்தது. புதிய ஏற்பாட்டில் அது, நடமாடும் கோயிலாக விளங்கும் மக்களைக் குறித்தது. மாந்தரின் கைளால் கட்டப்பட்ட கோயில் அழியக் கூடியது; உயிரற்றது, ஆனால், நடமாடும் கோயிலாக விளங்கும் மாந்தக் கோயிலோ உயிருள்ளது. உடல் அழியலாம்; ஆன்மா அழிவதில்லை. எனவே தான் பவுலடிகள், "மனிதருடைய கைகளால் கட்டப்பட்ட ஆலயத்தில் வாழ்வதற்குக் கடவுள் விரும்புகிறதில்லை" (அப்.17:24) என எழுதுகிறார். அவர் வாழ்வதற்கு விரும்பும் இடம் மனிதனின் உள்ளத்தில்தான். அடுத்துக் கீதை காட்டும் அவதாரத்தை நோக்கலாம்.


    அவதாரம்


    அவதாரம் என்னும் சமசுகிருதச் சொல்லுக்குக் கீழே இறங்கி வருதல்' என்பது பொருள். எல்லாவற்றையும் கடந்த பரம்பொருள், இந்நிலவுலகிற்கு இறங்கி வருவதே அவதாரம் என்று சுட்டப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை'Incarnation' என்று குறிப்பிடுவர். இதற்குத் 'தசையாக மாற்றங் கொள்ளுதல்' எனத் தமிழில் பொருள் கூறலாம். கீதை கூறும் அவதாரமும் கிறித்தவம் கூறும் 'கடவுள் மாந்தனானார்' என்பதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை,

    யோவான் இது குறித்து எழுதுகையில், "வாக்கு மாந்தணகி விட்டார்”

    (யோ. 1:14)


    எனக் குறிப்பிடுகிறார். கிறித்துவின் பிறப்பு ஒரு பெண் மணியின் வயிற்றில் குழந்தையாகப் பிறந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி கடவுளாகிய தூய ஆவியார் கன்னிமரியாளின் மேல் நிழ லிட்டதால், அவர் கருவுற்றுக் குழந்தை இயேசுவைப் பெற்றெ டுத்தார். இயேசுவின் பிறப்பு கன்னிப் பிறப்பு ஆகும். அவர் கடவுளால் கருவுற்றதால், தூய பிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இயேசு, கடவுளின் மைந்தர் எனக் குறிப்பிடப்படுகிறார்.


    கீதையில், கடவுளின் அவதாரமாகச் சொல்லப்படும் கண்ண னின் பிறப்புப் பற்றிய செய்திகள் கீதையில் கூறப்படவில்லை. அவற்றைப் புராணகளில்தான் காண முடிகிறது. தூய பிறப்பு என்பது சமசுகிருதத்தில் 'திவ்வியம் ஜன்மா' (கீதை 4:9) எனக் குறிப்பிடப்படுகிறது.


    அவதாரமாக வந்த கடவுளை அல்லது மனித வடிவில், உள்ள கடவுளைக் கீதை தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்துகிறது. அருச்சுனனுக்கு அவர் ஆசிரியர் நிலையிலிருந்து போதனை செய்பவராக விளக்கப்படுகிறது.


    புதிய ஏற்பாட்டில், இயேசு கிறித்துவின் நற்செய்திப் பணி மூன்றரை ஆண்டுகளே நடந்தது என்று குறிப்பிடுவர். அக்காலத்தில் அவர் போதித்தவை, கிறித்தவ இறையியலாகப் போற்றப்படுகிறது. மக்களுக்கு அவர் போதனை மொழிகளே மந்திரம். இயேசுவின் போதனைகளே கிறித்தவத்தின் உயிர்நாடி அவற்றைக் கைக்கொள்பவர் களுக்குப் பாவங்களிலிருந்து விடுதலையும், சாவிலிருந்து விடுதலையும் கிடைக்கும். கீதையும் இங்ஙனம் குறிப்பிடுவதைக் காணலாம்.


    இவ்வுலகத் துன்பமாகிய 'சம்சாரத்திலிருந்து விடுபட்டு வீடுபேறாகிய முத்தியை எய்துவதையே கீதையின் அடிப்படை நோக்கமாகக் குறிப்பிடுவர். தர்மங்கள் செய்வதனால் ஒருவன் முத்தியடைய முடியாது. கடவுளைச் சரணடைவதால் அதனை எளிதில் அடையலாம் என்பதை,

    “தர்மங்களை எல்லாம் அறவே கைவிட்டு விட்டு இ என்னையே சரளாடைக. பாவங்களிலிருந்து உன்னை,32 விடுவிப்பேன்; வருந்தாதே" (கீதை. 18:66)


    என்று கீதை குறிப்பிடுகிறது. இதில் பாவ விடுதலை கூறப்படுகிறது.

    *ஊக்கங்கொண்டு,

    அவமதிக்காது

    இதைக்

    (போதனையை) கேட்கவாவது செய்யும் மனிதனும் விடுதலையுற்று நல்வினையாளர் எய்தும்

    நல்லுலகங்களை அடைவான்" (கீதை 18:71) 2டி

    என்பதில் வீடுபேறு கூறப்படுகிறது.

    பிறப்பு, இறப்பு அற்றவர் கடவுள். அவர் எப்படிப் பிறப்புக்கு

    உள்ளாகிறார் என்பது பற்றிக் கீதை குறிப்பிடுகிறது. "நான் பிறப்பற்றவன்.


    அழிவற்றவன்,

    உயிர்களுக்கெல்லாம் ஈசன்;

    எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி, ஆத்ம மாயையினால் அவதரிக்கிறேன்" (கீதை 4:6)


    கடவுள் தமது சித்தத்தின்படி உலகில் அவதரிக்கிறார். இதனைக் கிறித்தவம், "காலங்கள் நிறைவேறிய போது பெண்ணிடத்தில் உற்பத்தியானார்" என்று குறிப்பிடுகிறது.


    பரம்பொருளான கடவுள் முற்றறிவுடையவர். முழுமையான ஆற்றலுடையவர்; எங்கும் நிறைந்தவர்; எவராலும் அறியப்பட முடியாதவர். அத்தகைய கடவுள் மாந்தனாக அவதாரமெடுத் ததைப் பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவதாரமாக வந்த கடவுளை ஏற்றுக் கொள்ளாதவர் பலர் இவ்வுலகில் இன்றும் உள்ளனர். இயேசுவை. அவதாரமாக வந்த கடவுள் என்று ஏற்றுக்கொள்ளாததினாலேதான் அவருடைய இனத்தினரான யூதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அவர் கடவுளின் மைந்தர் என்பதை யூதரும் இசுலாமியரும் இன்று வரை ஏற்றுக் கொண்டிவர். இது பற்றிக் கீதை,

    பரம்பொருளான

    "என்னுடைய பரசொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாயிருப்பதையும் அறியாத மூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்" (கீதை 9:11)

    என்று விளக்கம் தருகிறது.


    கடவுள் மாந்தனாகப் பிறப்பார் என்னும் கருத்து வேதங்களில் இல்லை. கடவுளின் பிறப்புப் பற்றிப் பழைய ஏற்பாட்டில் முன்னறிவிப்பு இருந்தது.


    "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்”

    (ஏசாயா 9:6)


    "ஒரு கன்னி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்"


    போன்ற இறைவாக்குகள் அந்நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் கடவுளின் பிறப்பு, புதிய ஏற்பாட்டில் இயேசுவிடத்தில் தான் நிறைவேறுகிறது. கிறித்துவுக்கு முன்னிருந்த சமயங்களில் அவதாரம் என்ற நிகழ்ச்சி இடம்பெறவில்லை. எனவே, கிறித்தவ சமயமே, அவதாரக் கொள்கையை உலகிற் கொடுத்தது எனலாம். கீதை, கிறிஸ்துவுக்குப் பின் எழுந்த நூல். அந்த அவதாரக் கொள்கையைத் தன்மயமாக்கிக் கீதை இந்திய மண்ணின் இயல்புக்கேற்ப மொழிகிறது எனலாம்.


    அவதார நோக்கம்


    கடவுளின் அவதார நோக்கத்தைக் கீதை இரண்டு இடங்களில் தெரிவிக்கிறது.


    "எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் (அதர்மம்)

    மேலெழுகிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை

    நான் பிறப்பித்துக் கொள்கிறேன்” (கீதை 4:7)

    "நல்லாரைக் காப்பதற்கும், கெட்டவரைக்

    கரந்தொடுக்குவதற்கும்,

    தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் ஊழிதோறும்

    (யுகம்)

    நான் அவதரிக்கிறேன்" (கீதை 4:8)


    இவ்விரு பகுதிகளை நோக்க, கடவுளுக்குரிய அவதாரம் ஒன்றா பலவா என்றும் வினாக்கள் எழும்புகின்றன.


    அறம் அழிந்து மறம் மேலெழும்புகின்ற போதெல்லாம் புத்தர் அவதரிக்கிறார் என்னும் கருத்து புத்த சமயத்தில் உள்ளது. இதே போன்ற காரணத்திற்காக சமணத் தீர்த்தங்கரர் தோன்றுகின்றனர் என்பது சமண சமய நம்பிக்கை. இவ்வகையில் 24 புத்தர், 24 தீர்த்தங்கர் தோன்றுவர் என அச்சமய நூல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்காலத்தில் புத்தர் இன்னொருவர் தோன்றப் போகிறார் எனவும் தீர்த்தங்கரர் ஒருவர் தோன்றப் போகிறார் எனவும் அச்சமயங்களில் குறிக்கப்படுகின்றன. இவற்றை ஒத்த கருத்தினை வெளிப்படுத்துவதாகக் கீதையில், மேலே குறிக்கப் பட்ட பகுதிகள் அமைந்துள்ளன. சமண, பௌத்த சமயங்களில் கடவுட் கோட்பாடு இல்லை. எனவே, கடவுளே புத்தராகவோ தீர்த்தங்கராகவோ பிறப்பார் என்று, கடவுட் கோட்பாட்டையு டைய அவதாரக் கோட்பாட்டோடு இணைத்துக் காண முடியாது.


    ஆனால், கீதையின் ஆசிரியர், அவதாரக் கருத்தைக் கூறுகிறார். கடவுள் மாந்தனாக வருவதே அவதாரம் ஆகும். ஊழி தோறும் பிறவியெடுக்கிறேன் என வரும் கீதைப் பகுதியில், ஏடெழுதுவோரால் பிழைநேர்ந்திருக்கலாம், அல்லது இடைச் செருகலாயிருக்கலாம். 'யுக யுகமாய்ப் பிறக்கிறேன்' என்பதை மையமாக வைத்துக் கொண்டு ‘யுகாவதாரம்' என்னும் புதிய கொள்கையை உருவாக்கியது பிற்காலத்தில் நேர்ந்தது ஆகும். யுகங்களை நான்காக வகுத்து, கிரேத்தா யுகம், திரேத்தா யுகம், துவாபரா யுகம், கலியுகம் என்று எழுதி, ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரில் கடவுள் அவதரிக்கிறார் எனப் புராண விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. இவை வரலாற்று விளக்கங்கள் அல்ல.


    கீதையின் கருத்துப்படி,


    "தீமையை அழிப்பதற்கும். நன்மையை நிலைநாட்டுவதற்கும்" "தீயோரை அழிப்பதற்கும் நல்லோரைப் பாதுகாப்பதற்கும்"

    நன்மையை

    நல்லோரைப்

    அவதாரம் நிகழ்கிறது. தீமை என்பது என்ன? கடவுளின் திட்டத்திற்கு எதிரானதெல்லாம் தீமைதான். களவு, கொலை, நம்பிக்கைத் துரோகம், இலஞ்சம் இவை போல்வன எல்லாம் தீமையின் வடிவங்கள். பல்வேறு வடிவங்களிலுள்ள எல்லாத் தீமைகட்கும் வேராக விளங்கும் 'மூலத்' தை அழிப்பது என்பது தான் அதன் கருத்ததால் வேண்டும். அந்த மூல மலம் எது?


    இந்த மூல மலம் அல்லது முதற் பாவம் பற்றி விவிலியம் விளக்கிக் காட்டுகிறது, ஆதாம் என்ற முதல் மாந்தன், கடவுளின் கட்டளையை மீறினான். 'இந்தப் பழத்தை உண்டால் உன் கண்கள் திறக்கப்பட்டுத் தேவர்களைப் போலாவாய்' என்று சாத்தான் வஞ்சித்ததை உண்மையென்று நம்பினான்; 'நீ அப்பழத்தை உண்ணும் நாளிலே நிச்சயமாகச் சாவாய்' என்று கடவுள் உரைத்ததை நம்பவில்லை. நிலையான நன்மையைத் தரும் கடவுளின் உரையை நம்பாமல், நிலையான தீமை தரும் சாத்தானின் உரையை நம்பினான். அதனால் இவ்வுலகில் தீமை நுழைந்தது.


    தம் கட்டளையை மீறிய ஆதாம், ஏவை இருவரையும் கடவுள் அழித்து விடவில்லை. தீமை மீது அவருக்குக் கோபம் இருந்தாலும், தீமைக்கு உட்பட்ட அவர்கள் மீது கடவுள் அருள் கூர்ந்தார். அவர் அருள் எப்படி வெளிப்பட்டது? கனியை உண்டதால், ஆதாம், ஏவை இருவரும் நிர்வாணிகளாயிருப்பதை உணர்ந்தனர். எனவே, கடவுள் அவர்கள் மேல் அருள் கொண்டு,

    தோலாடையை மட்டுமல்லாமல்,

    அவர்களுக்கு உடுத்துவித்தார்.

    "அவர் உன் தலையை நசுக்குவார்”

    (ஆதி. 3:15)

    என்ற வாக்குத்தத்தத்தையும் அளித்தார். அதனுடைய வெளிப்பாடு தான் இயேசுவின் அவதாரம். முதல் மாந்தனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையினால் இவ்வுலகைப் பாவம் பற்றிக் கொண்டது. ஆகவே, கடவுளே இவ்வுலகில் அவதரித்துக் கடவு ளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தவராகி, சிலுவையிலே சாகும் வரை கீழ்ப்படிந்து, அச்சாவின் மூலம், முதலாம் ஆதாம் வழி வந்த பாவமாகிய தீவினையை அழித்தார். எனவே, இயேசு கிறித்து. இரண்டாம் ஆதாம் (1கொரி. 15:47) எனக் குறிப்பிடப்படுகிறார்.


    ஆதாம் வழிவந்த தீமையை அழிப்பது தான் அவதார நோக்கம் ஆகும். இதனைக் கீதை, தீமை (அதர்மம்)யை அழித்து, நன்மை (தர்மம்)யை நிலைநாட்டுவதற்குப் பிறப்பெடுக்கிறேன் என்று கூறுகிறது. தீமையின் வேரைப் பிடுங்குவதை விட்டு விட்டு, கிளைகளைத் தரிப்பதன்று. கிளை விடுகின்ற போது. கடவுள் அவதரித்துக் கிளைகளை வெட்டுவார். உடனே போய் விடுவார். மறுபடி கிளைகள் துளிர்த்து இலை தழைகள் பெருகும், மறுபடி அவதரிப்பார் என்னும் கருத்து ஏற்புடையதாக இல்லை. தீமையின் வேரையே பிடுங்கியெறிவது தான் அவதாரப் பணி. எனவே, இதனைக் குறிப்பதாகக் கீதையின் பகுதிகள் அமைந்துள்ளன என்பதே பொருத்தம் ஆகும்.


    அடுத்தது. "தீயோரை அழிப்பதற்கும் நல்லோரைப் பாதுகாப் பதற்கும்" கடவுள் அவதரிப்பதாகக் குறிப்பிடுகிறது கீதை.


    முதலாம் மாந்தளின் கீழ்ப்படியாமையால் உலகில் நுழைந்த தீமையை வேரறுக்கக் கடவுளே இவ்வுலகில் மாந்தனாகப் பிறந்து, தீமையை விட்டு விலகி, நன்மையைப் பற்றிக் கொள்ளும் நெறிகள் பற்றிப் போதனைகள் பல செய்தார்; அவரே வாழ்ந்தும் காட்டினார். இதைக் கிறித்தவம் காட்டுகிறது. அதுபோல, நன்னெறிகளை அவதாரக் கடவுளே போதிப்பதாகக் கீதை அமைந்துள்ளது.


    ஆதாமின் வழி வருகிற தீமை வேறு; அவரவர் செயல் வழி வரும் தீமை வேறு. ஆதாம் வழிவரும் தீமை மீது கடவுள் வெற்றி கொள்கிறார். அவரவர் செயல் வழி வரும் தீமையை நீக்க, அவர் போதித்து வழிகாட்டுகிறார். இவ்விரண்டு தீவினைகளுமே எரிநரகில் தள்ளக் கூடியவையே. அவதாரக் கடவுள் காட்டிய வழிகளிலிருந்து விலகி வாழும் மனிதர்கள், சாத்தானைப் பின்பற்றும் தீயவர்கள் அல்லவா? அவர்களின் முடிவு என்ன? அழிவுதான். அதுவே நரகம். கடவுளின் வழிகளைப் பின்பற்றி நன்மை செய்வர்களின் முடிவு என்ன? கடவுளால் எப்பொழுதும் பாதுகாக்கப்படும் மரணமில்லாப் பெருவாழ்வு. இதுவே 'நித்திய ஜீவன்' எனப்படும் நீடுவாழ்வு ஆகும்.


    இது குறித்து இயேசு பெருமான் மத்தேயு 13ஆம் அதிகாரத்தில் கூறிய விதைகள் பற்றி உவமைக் கதை ஒப்பு நோக்கத் தக்கது. நல்ல விதைகள் மூலம் பலன் கொடுப்பவை களஞ்சியத்தில் சேர்க்கப்படும். களைகள் சேர்க்கப்பட்டு நெருப்பிலே போடப்படும். இது குறித்து மத்தேயு நற்செய்தி நூலில்,

    மனுமைந்தர் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவகுடைய இராஜ்யத்திலிருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும்

    சேர்த்து,"

    "அவர்களை நெருப்புச் சூளையிலே போடுவார்கள்;

    அங்கே அமுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்"


    "அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் தந்தையின் இராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்" (மத்.13:41-43)


    என இயேசு பெருமான் கூறிய மொழிகள், கீதைக் கருத்துக்களோடு ஒப்பு நோக்கத் தக்கவை. 


    இது எதிர்காலத்தில் நிகழப் போகிற வேறு ஒரு யுகத்தைக் குறிப்பிடுகிறது. ஆதாம் வழிவந்த தீமையைத் தமது சிலுவைச் சாவின் வழி அழிக்க மாந்தனாகப் பிறந்த காலம் ஒரு யுகமாகும். இவ்வுலகுக்கு ஏற்படவிருக்கும் நடுத் தீர்ப்பாகிய நிகழ்ச்சி இனி வருங்காலத்தது ஆகும். அது வேறு காலத்தில் (யுகம்) நடக்கவுள்ளது. அந்த யுகத்தில் கடவுள் வெளிப்படுவது குறித்து கீதை மேற்கண்டவாறு தெரிவிக்கிறது. இவையே கீதையில் யுகாவதாரங்களாகக் குறிக்கப்படுகின்றன எனலாம். தீமைகள் பற்றிக் கீதை தெரிவிக்கும் கருத்துக்களை இனி நோக்குவோம்.


    கட்டுநிலை


    கடவுளின் அவதார நோக்கம் முன்னர் விளக்கப்பட்டது. இந்தியத் தத்துவம் எனப்படும் திராவிட மெய்ந்நூலில், ஆன்மாவின் கட்டுநிலை பேசப்படுகிறது. ஆன்மா அஞ்ஞானத் தால் மறைப்புண்டு கிடப்பதால் அதனால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. கடவுட் கோட்பாடற்ற சமணத் தத்துவமும் சைவ சித்தாந்தாந்தம் போன்ற கடவுள் கோட்பாட்டுச் சமய இறையியலும் இக் கட்டுநிலை பற்றிப் பேசுகின்றன.


    "அக்ஞானேன ஞானம் ஆவ்ருதம்" (கீதை 15:5)

    (ஞானம் அக்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது)


    என்று கீதை குறிப்பிடுகிறது. ஞானம் இவ்வாறு மறைக்கப் பட்டிருப்பதாலேயே, ஆன்மாவால் இயல்பாகச் செயற்பட இயலவில்லை. அது தன்னையும் அறிய இயலவில்லை, தன்னைப் என்று படைத்த கடவுளையும் அறிய இயலவில்லை. இதுவே இந்திய மெய்ந்நூலியலில் (Philosophy) 'பந்தம்' குறிப்பிடப்படுகிறது. கிறித்தவம் இதனை 'ஆதிப் பழி' 'ஆதாம் பாவம்' (Adam's sin) என்றும், சைவம் 'சகச மலம்' என்றும் வைணவம் 'பழவினை' என்றும் குறிப்பிடுகின்றன. கடவுளால் படைக்கப்பட்ட முதல் மாந்தனாகிய ஆதாம், பாவமற்றவனாக தூய்மையுடையவனாகப் படைக்கப் பட்டான். ஆனால், கடவுளின் கட்டளையை அவன் மீறியதால் பாவம் செய்தான். அதுவே 'முதற்பாவம்', 'ஆதிப்பழி' என்று குறிக்கப்படுகிறது. ஆதாமின் வழியாக வந்த பாவம், அவன் சந்ததியினரையும் தொடர்ந்து பற்றிக் கொண்டமையால், அது 'மூல மலம்' என்று குறிப்பிடப்படுகிறது. அதனால்தான், ஆன்மா இயல்பிலேயே பாவத்திற்குட்பட்டு நிற்கிறது என்று நம் நாட்டு நூல்கள் குறிப்பிடுகின்றன.


    கட்டுநிலைகள் இரண்டு என்று கீதையும் சைவ. வைணவ நூல்களும் கூறுகின்றன. முதலாவது கட்டுநிலை பிறவித்தளை எனப்படுகிறது. இதனைக் கீதை, 'ஜன்ம பந்தம்' (கீதை 2:51) என்று குறிப்பிடுகிறது. பிறப்பிலேயே ஒருவருக்குப் பந்தம் ஏற்படுகிறதென்றால், அது எப்படி வந்தது, எப்போது நிகழ்ந்தது என இந்தியத் தத்துவங்களிலோ இந்தியச் சமயங்களிலோ விளக்கப்படவில்லை. விவிலியத்தில்தான் இது விளக்கப்படு கிறது. முதலாம் மாந்தனாகிய ஆதாம் மூலம் வந்த பாவமே, மாந்தவினம் முழுமையையும் பிறப்பிலிருந்தே கட்டுகிறது. இதனை 'ஜென்ம பாவம்' என்று கிறித்தவம் கூறுகிறது. ஜென்ம பாவத்தை நீக்குவதற்குத் தான் கடவுள். இயேசு என்னும் மாந்தனாக அவதரித்தார்.


    இரண்டாவது கட்டுநிலையைக் 'கர்ம பந்தம்' (கீதை 2:39) 'கர்ம பந்தனம்' (கீதை 3:9) என்று கீதை குறிப்பிடுகிறது. கர்ம பந்தம் என்றால், செயல்வழி வரும் தீமையாகிய கட்டு ஆகும். கிறித்தவம் இதனைச் செயல்வழித் தீமை (Individual sin) என்று குறிப்பிடுகிறது. நாள்தோறும் ஒருவர் செய்யும் பாவம் அவரைக் கட்டுகிறது. கடவுளை அறியவிடாமல் அது தடை செய்கிறது. எனவே, இந்தக் கட்டுநிலைகளிலிருந்து விடுதலை பெறுவதற்குக் கடவுளைச் சரணடைய வேண்டும் என்று கீதை கூறுகிறது. இவ் இருவினைகளையும் "இருள்சேர் இருவினை” (குறள் 25) என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. கடவுளின் படைப்புப் பற்றிய செய்திகளை இனி நோக்குவோம்.


    படைப்பு


    கடவுளின் உயர்தனிப் பண்பாகப் போற்றப்படுவது அவரின் படைப்புத் தொழிலாகும். கீதையில் படைப்புப் பற்றிய செய்திகள் இல்லை என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. விவிலியத்தின் முதல் நூலாகிய ஆதியாகமம் உலகப் படைப்புப் பற்றிய செய்திகளோடு தொடங்குகிறது. உபநிடதங்கள் சிலவற்றிலும் இச்செய்திகள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய போக்கினைக் கீதையில் காண முடிவதில்லை. ஆனால், படைப்பிற்கெல்லாம் மூலமாக விளங்குபவர் கடவுள்: அவரிலிருந்தே இவ்வுலகம் தோன்றி, அவருக்குள்ளே அது அடங்குகிறது என்னும் கருத்து கீதையில் கூறப்படுகிறது.


    “நான் ஜகத்து முழுதினுடைய தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் காரணம்" (கீதை 7:6)


    "நூலிலே மணிகள் போன்று அண்டங்கள னைத்தும் கடவுளிலே கோத்து வைக்கப் பட்டுள்ளன" (கீதை 7:7)

    என்று மேலும் அது விளக்குகிறது.


    "எல்லா உயிர்களுக்கும் வித்து எதுவோ, அது நாள். என்னையன்றி இயங்குனவும் இயங்காதனவுமான பொருள் எதுவுமில்லை" (கீதை. 10:39)


    இன்னோரிடத்தில்,


    "பீஜம் மாம் சர்வ பூதானாம்" (கீதை 7:10) என்று குறிப்பிடுகிறது. (பீஜம் = விதை, தொடக்கம், மூலம்...)


    புருச சூக்தத்தில் குறிக்கப்பட்டுள்ள படைப்புப் பற்றிய செய்தி, கீதையில் இடம் பெற்றுள்ளது.


    "படைப்புத் தொடக்கத்தில், பிரசாபதி, பலியோடு கூட மக்களைப் படைத்து, 'இதனால் பல்கிப் பெருகுங்கள்.

    இது உங்களுக்குக் காமதேனுவாகட்டும்' என்றார்

    "(கீதை 3:10)


    கீதையின் இப்பகுதி 'புருச சூக்தத்தில்' குறிப்பிடப்படும் புருச பிரசாபதியின் உலகப் படைப்பை எதிரொலிக்கிறது. புருசன்


    பலியான போது, அவரது உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு படைப்பாக உருவெடுத்தது. இப்படைப்பு ஓர் உருவகக் காட்சியாக அங்கு விளக்கப்படுகிறது. இப்பலி, மானசிக பலியாக அறிஞர்களால் விளக்கப்படுகிறது.


    விவிலியக் கருத்தை இப்பகுதி விளக்குகிறது. இவ்வுலகப் படைப்புகளெல்லாம் கடவுளின் சிந்தனையில் இருந்தன. சிந்தனையில் இருந்தவை வார்த்தையில் வெளிப்பட்டன.


    "ஒளி உண்டாகுக" என்றார்; ஒளி உண்டானது

    "ஆகாயம் உண்டாகுக" என்றார்; ஆகாயம்

    உண்டானது.


    இவை போன்று, கடவுளின் வாக்கினால் உலகம் படைக்கப் பட்டதை ஆதியாகமம் தெரிவிக்கிறது. 'பலியோடுகூட மக்களைப் பிரசாபதி படைத்து, இதனால் பல்கிப் பெருகுங்கள்' எனவரும் கீதைப் பகுதியும் விவலியத்தை அடியொற்றியதாக அமைந்துள் ளது. அங்கும் 'நீங்கள் பல்கிப் பெருகி இந்நிலவுலகை நிரப்புங் கள்' (ஆதி. 1:28); நீங்கள் அவற்றை ஆண்டு கொள்ளுங்கள்' என்று கடவுள் கூறிய பகுதிகள் இங்குக் கருத்தத்தக்கன. அதோடு, "அவர் (இயேசு) உலகத் தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி" (வெளி. 13:8) என்று குறிப்பிடப்படுகிறார். இயேசு கிறித்து பலியானதோ ஏறத்தாழ அவரது முப்பதாம் வயதில். ஆனால், 'உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அடிக்கப்பட்டார்' என்று திருமறை குறிப்பிடுவது சிந்தனைக்குரியது.


    பிரசாபதி (பிரஜாபதி) என்னும் பெயர் கிறித்துவைக் குறிப்பிடும் சமசுகிருதப் பெயராகும். பிரஜை + பதி = பிரஜாபதி, பிரஜை என்பது மக்களைக் குறிக்கும், பதி - என்பது தலைவன், எனப் பொருள்படும். எனவே 'பிரஜாபதி' என்பது அரசன் என்னும் பொருள் தந்து நிற்கிறது. 'கிறிஸ்து' என்னும் பெயருக்கும் அரசன் என்பதே பொருள்.


    மாந்தனின் படைப்பும் கீதையில் இடம் பெற்றுள்ளது. இதுபற்றிக் கீதை,

    “எக்காலத்தும் எனது அம்சமே உயிராகத் தோன்றி, உயி ருள்ள உலகில் பிரகிருதியில் நிற்கின்ற மனது உட்பட ஆறு இந்திரியங்களை இழுக்கிறது." (கீதை

    15:7)


    எனக் குறிப்பிடுகிறது. உலகப் படைப்பில், மாந்தன் மட்டுமே ஆறாவது அறிவை உடையவன். பிற படைப்புகளெல்லாம் அவர் சிந்தனையின் வெளிப்பாடான வார்த்தை மூலம் உருவாயின. மாந்தன் மட்டும். கடவுளின் அம்சமாகப் படைக்கப்பட்டவன். விவிலியம் இதனை.


    மனிதனை அவர் மண்ணிலிருந்து உருவாக்கி அவன் நாசியிலே தன் உயிர் மூச்சை ஊதினார். nil மனிதன் உயிருள்ளவன் ஆனான்' (ஆதி, 2:7).


    மாந்தனின் ஆறாவது அறிவே 'ஆன்மா' எனப்படுகிறது. தன்னையும் கடவுளையும் அறிவதற்குத் துணைநிற்பது இந்த ஆன்மா தான். பிற உயிரினங்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது.


    'ஓம்' 'ஆம்' - ஆமென்


    'ஓம்' என்பது முளை மந்திரம் அல்லது பிரணவ மந்திரம் என்று குறிக்கப்படுகிறது. அவதாரக் கடவுளுக்குரிய பெயர்களில் ஒன்று 'ஓம்' என்பது. வேதாந்தத்தில் 'ஓம்' என்னும் மந்திரம் சிறந் ததோர் இடத்தைப் பெற்றிருக்கிறது. ஓம் என்பதும் ஆம் என்பதும் ஒரே பொருளைத் தருவன ஆகும். தமிழில் 'ஆ' என்னும் எழுத்து 'ஓ' என்றும் திரிபடையும். யாழ்ப்பாணத் தமிழர், ஆம் என்பதை ஓம் என்றே இன்றும் உச்சரித்து வருகின்றனர். பரம் பொருளுக்கு 'ஓம்' என்று பெயர் வழங்கப்படுகிறது என்பதைக் கீதை,


    "ஓம் தத் சத் என்று பிரமன் மூன்று விதமாய் மொழியப்பட்டுள்ளது” (கீதை 17:23)


    எனக் கூறுகிறது. தியானம் செய்வதற்கு இம்மந்திரம் மூல மந்திரமாகக் கொள்ளப்படுகிறது.


    ''ஓம்' என்பது தமிழில் 'ஆம்' என்பதைக் குறிக்கும். 'ஆம்' என்பதும் 'ஆமென்' என்பதும் ஒரே பொருளைத் தருவன ஆகும். இயேசு கிறித்துவுக்கு வழங்கப் பெறும் பெயர்களில் 'ஆம்''ஆமென்' என்பன குறிப்பிடத்தக்கன. தமது தந்தை (God * the Father)யின் வார்த்தைகள் அனைத்தையும் இயேசு பெருமான் ஆம் என்றே நிறைவேற்றினார். பவுலடிகள் இதுபற்றி,


    “கடவுளின் வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறித்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றனவே" (2கொரி. 1:20)


    என்று குறிப்பிடுகிறார் வெளிப்பாட்டு நூலில், கடவுளின் படைப்புக்கு ஆதியுமாயிருக்கிற 'ஆமென்' என்பவர் சொல்லுகிறது" (வெளி. 3:14)

    எனக் குறிப்பிடப்படுவது நோக்குதற்குரியது.


    'ஓம்' என்பதை ஓங்காரம் என்றும் குறிப்பிடுவர். ஓம் என்பது வெறும் எழுத்துக்களல்ல; அது வார்த்தை ஆகும். அதாவது, கடவுளாகிய வார்த்தை; வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து ஆவார். இவரே உலகப் படைப்புக்கு மூலகாரணர். இதனைத் தான் மேலே குறிப்பிடப்பட்ட திருவெளிப்பாட்டுப் பகுதி விளக்குகிறது. ஓங்காரத்தினின்றே பஞ்ச பூதங்களும் இப்பிரபஞ்சமும் தோன்றின என்பதைச் சைவ, வைணவ நூல்கள் தெளிவுப்படுத்துகின்றன. ஓம் என்றும் வார்த்தையாகிய கடவுள், உலகிற்கு ஒளியாயும் இருக்கிறார்.


    ஒளியாகிய கடவுள்


    நானே உலகின் ஒளி' என்று இயேசு கிறித்து கூறினார்.


    "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற னெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்

    (யோ. 12:46)


    "ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமா யிருங்கள்” (யோ. 12:36)


    'ஒளியுருவன் தானே உகப்புருவன்'. என்பது ஆழ்வார் பாடல். கீதை இதனை,


    *வானத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒருமிக்க உதித்திருக்குமானால் அது அம் மகாத்மாவின்

    ஒளிக்கு ஒப்பாகும்" (கீதை 11:12)

    'ஒளிக்கெல்லாம்

    அப்பாற்பட்டது.


    என்னும் கீதைப்பகுதி,

    ஒளியாகிய

    அது இருளுக்கு (கீதை 13:17)

    "அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது, இருளானது

    அதைப் பற்றிக் கொள்ளவில்லை" (யோ. 1:5)


    என்னும் விவிலியப் பகுதியை வெளிப்படுத்துகிறது. கடவுளின் ஒளி சூரியனைப் போன்று ஒளிர்கிறது என்பதால், சூரியனையே கடவுளாகக் கருதிவிடக் கூடாது. சூரியன் என்பது கடவுளால் படைக்கப்பட்ட பொருளே தவிர அதுவே கடவுளாகி விடாது. கடவுளின் ஒளி, ஒரு சூரியனிடமிருந்து வெளியாகும் ஒளியை விட ஆயிரக் கணக்கான மடங்கு அதிகமாகும். சூரியனை ஒளிரச் செய்பவர் கடவுள். எனவே, சூரியனே கடவுள் என்று நம்பி, படைத்தவனை விட்டு விட்டுப் படைப்பை வணங்குவது அறியாமையாகும்.


    மூவொருமைக் கோட்பாடு


    கீதை, அடிப்படையில் மூவொருமைக் கோட்பாட்டை விளக்குகிறது. மூவொருமைக் கோட்பாட்டைக் கிறித்தவம் உலகுக்குக் கொடுத்தது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


    கடவுளே அனைத்திற்கும் பிறப்பிடமானவர்.


    "அகம் சர்வஸ்ய பிரபவோ மத்த:" (கீதை 10:8) (நான் அனைத்திற்கும் பிறப்பிடம்; யாவும் என்னிடத்திலி ருந்தே விரிக்கின்றன)


    "பிதா ஹம் அஸ்ய ஜகதோ" (கீதை 9:17)


    (நானே இவ்வுலகத்தின் தந்தை)


    போல் வரும் பகுதிகள் கடவுளின் படைப்பாற்றலை யும் அவரின் தன்னிகரற்ற ஆளுமையையும் வெளிப்படுத்து கின்றன. கடவுள் அழிவற்றவர் என்பதை.


    இவை


    "நான் அழியும் தன்மையைக் கடந்து அழிவற்ற தன்மைக்கும் நான் மேலானவனாக இருப்பதால் உலகிலும் வேதத்திலும் புருசோத்தமன் என்று புகழ் பெற்றிருக்கிறேன்" (கீதை 15:18)


    அழிவற்ற நிலைக்குச் சமசுகிருதத்தில் 'அக்சரம்' என்று பெயர். கீதையில் கூறப்படும் விசுவரூப தரிசனமும் (கீதை 12ஆம் அத்தியாயம்) கடவுளின் பரசொரூபத்தை விளக்குவதாக உள்ளது; அவருக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை என்பதைக் கீதை 12:16 விளக்குகிறது. இவை போன்ற பகுதிகள் கடவுளின் பரத்துவத்தை (Transcending form) வெளிப்படுத்துகின்றன.


    கடவுளின் அடுத்த நிலை 'அபரம்' எனப்படும். இதற்கு அவதாரம் என்பதும் பெயர். கடவுள் மாந்தனாக இவ்வுலகில் பிறப்பெடுப்பதே அவதாரம். அவதாரமாக வந்த கடவுளின் போதனைகளே கீதை என்பதாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவதாரம் பற்றிய செய்திகள் முன்னரே விளக்கப்பட்டன. கடவுளின் அவதாரத்தைப் 'புருசோத்தமன்' என்று கீதை குறிப்பிடுகிறது. 'உத்தம புருஷன்' என்றும் இது வழங்கப் பெறும்.


    மூன்றாவதாக உள்ள நிலை ‘வைசுவானரன்' (கீதை 15:14) எனக் குறிக்கப்படுகிறது. வைசுவானரன் என்னும் சமசுகிருதச் சொல்லுக்கு நெருப்பு என்று பெயர். இது தீயைக்


    குறிக்காமல் கடவுளைக் குறிக்கிறது. இதன் விளக்கத்தைப் பிரமசூத்திரம் தெளிவாக விளக்குகிறது. 'வயிற்றுக்குள் இருந்து கொண்டு உணவைச் செரிக்கும் அக்கினிக்கு வைசுவானரன் என்று பெயர்' (சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத் கதை, ப. 715) என்று தவறான உரை எழுதப்பட்டுள்ளது. வைசுவானரன் என்பது கடவுளுக்குரிய பெயர். இதனைக் கீதை.


    "அஹம் வைச்வானர்:" (கீதை 15:14)


    எனத் தெளிவாகவே கூறுகிறது. இதற்கடுத்த


    சுலோகத்தில் "சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி" (கீதை 15:15)


    'நான் எல்லாருடைய உள்ளத்திலும் வீற்றிருக்கிறேன்'


    என்பது இதன் பொருள். விவிலியத்தில் தூய ஆவியானவர் நெருப்புடன் உவமைப்படுத்தப்படுகிறார். பெந்தெகொஸ்தே திருநாளில், மேல் வீட்டறையில் அமர்ந்திருந்தவர்கள் மீது


    "நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்" (அப். 2:3)


    என்று, தூய ஆவியார் பொழியப்பட்டமை விவிலியத்தில் விளக்கப்படுகிறது. கடவுள் நம் உள்ளத்தில் உறைகிறார் என்னும் கருத்து 'உள்ளுறைவோன்' (Immanent என்பதை விளக்குவதாகும்.


    எனவே, கடவுள் பரம் பொருளாகிய தந்தையாகவும் அவதாரக் கடவுளாகவும் உள்ளுறைவோனாகிய தூய ஆவியாகவும் கீதையில் விளக்கப்படுவதால், கிறித்தவத்தின்


    மூவொருமைக் கோட்பாட்டை விளக்குவதாகக் அமைந்துள்ளது.


    பலி நிறைவேற்றம்


    கிறித்துவுக்கு முற்பட்ட சமயங்களைப் பலிக் கோட்பாட்டுச் சமயங்கள், பலி மறுப்புக் கோட்பாட்டுச் சமயங்கள் என இருவகையாகப் பாகுபடுத்துவர். கிறித்தவத்தில் பலியின் சிறப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கடவுளே அவதாரமாக வந்து பலியாகி விட்டார். எனவே பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்தத் தேவையில்லை என்ற புதிய கோட்பாட்டை உரு வாக்கியதால், கிறித்தவ சமயம், பலி நிறைவேற்றக் கோட்பாடு என்னும் புதிய கோட்பாட்டை உடையதாகக் கொள்ளப்படுகிறது.


    இந்தப் புதிய கோட்பாட்டை உள்ளடக்கிய நூலாகப் பகவத் கீதை திகழ்கிறது. பலியைப் பற்றி இது பேசுகிறது. பலி என்பதை 'யக்ஞம்' என்று இந்நூல் குறிப்பிடுகிறது. ஆனால் இரத்தம் சிந்தி கடவுளுக்குப் பலி கொடுப்பது பற்றிப் பேசவில்லை, உயிர்ப் பலி கொடுப்பது பற்றியும் அது பேசவில்லை. வேதங்களின்படி, வழிபாட்டில் உயிர்ப்பலி கொடுக்கப்பட வேண்டும். உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட பிறகு, அவ்விலங்கின் மாமிசத்தை உண்ணுதல் வேண்டும். அது போன்ற வழிபாட்டு முறையைக் கீதையில் காண முடியாது.


    பலி செலுத்துவதால் கடவுளை அடைய முடியாது; வேதங்களால் கடவுளை அடைய முடியாது; தவத்தால் கடவுளை அடைய முடியாது; தானம் செய்வதாலும் கடவுளை அடைய முடியாது என்பதைக் கீழ்க்காணும் பகுதியின் வாயிலாகக் கீதை தெளிவுப்படுத்துகிறது.


    "நீ என்னை எவ்வாறு தரிசித்தாயோ அவ்வாறு நாள் வேதங்களாலும் தவத்தாலும் தானத்தாலும் யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்" (கீதை. 11:53)


    என்னும் பகுதி பலி செலுத்தி வழிபடும் வேத வழிபாட்டு முறையைப் பழைமையாக்கி விடுகிறது. விவிலியத்தில், பழைய ஏற்பாட்டுப் பலி முறை வழிபாட்டைப் போன்றதே வைதிக வழி பாட்டு முறையும் ஆகும். எனவே, வைதிகத்திற்கு மாறுபட்டதே கீதை என்பது தெளிவாகும். இதை உறுதிப்படுத்துவதாக.


    "அஹம் ஏவ அதியக்ஞ:" (கீதை 8:4)

    (நானே பலியாக இருக்கிறேன்)

    "அஹம் யக்ஞ:" (கீதை 9:16)


    இயேசு கிறித்து பலியாகிவிட்ட செய்தியைத் தெரிவிப்பதாக இவை அமைந்துள்ளன. அவர் பலியானது பாவத்தில் வீழ்ந்த மக்களை மீட்பதற்காக, இப்போதும், மக்கள் மீட்கப்படுவதற்காக அவர்களுக்கு நினைவூட்டப்படும் செய்தி கடவுள் பலியானார் என்பதே. இதே நிலையில் அமைந்துள்ளதே மேலே குறிப் பிட்டுள்ள கீதையின் செய்தியாகும். வேதாந்த நூல்கள் எல்லா வற்றிலும் இதே பகுதி இடம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.


    இயேசு கிறித்து பலியாகி உயிர்பெற்றெழுந்த பின்னர், பலியையல்ல; மனந்திரும்பிய பாவியையே அவர் விரும்புகிறார். பழைய ஏற்பாட்டின் படி விலங்குகளைக் கொன்று செலுத்தும் பலியை அல்ல: தன்னை வெறுத்து உயிருள்ள பலியாகக் கடவுளுக்கு ஒப்படைப்பதை அவர் விரும்புகிறார். எனவே, பலி என்பதற்குப் புதிய பொருள் கிறித்துவுக்குப் பின்னர் ஏற்பட்டது. பழைய ஏற்பாட்டின்படி, பஸ்கா விழா அன்று பழுதற்ற ஆடு பலியிடப்பட்டது. அதன் இரத்தம் வீட்டு வாயிற் கதவுகளில் பூசப்பட்டன. ஆனால் புதிய ஏற்பாட்டில், இயேசு தம் மாணாக்கரோடு பஸ்கா கொண்டாடிய போது, ஆட்டுக்குட்டிக்குப் பதிலாக அப்பம் பிட்டுக் கொடுக்கப்பட்டது. இரத்தத்திற்குப் பதிலாகத் திராட்சைச் சாறு பரிமாறப்பட்டது. கிறித்து பலியான தன் நினைவாகத் திருச்சபைகளில் இன்று வரை திருவருட் சின்னமாகப் (Sacrament)இது பின்பற்றப்பட்டு வருகிறது. இதைப் போன்றே, யாகம் (யக்ஞம்) என்பது புதிய நிலையில் மாற்றப்பட்டவையாகக் கீதையில் குறிப்பிடப்படுகின்றது.


    "திரவிய யக்ஞம், தபோ யக்ஞம், யோக யக்ஞம் செய்வர் சிலர், தன்னடக்கமும் விரதமும்

    உடைய மற்றவர் கற்றல், அறிதல் ஆகியவற்றை யாகமாகச் செய்வர்" (கீதை 4:28)


    எனக் கீதை குறிப்பிடுகிறது. மேலே குறிப்பிடப்பட்டவை எல்லாம் வேதாந்த வேள்வி முறைகள் ஆகும். இந்த வேள்வி முறைகட்கும் வேத வேள்வி முறைகட்கும் தொடர்பில்லை. வேத வேள்வி முறைப்படி தற்காலத்தில் நெருப்புக் குண்டத்தில் தீ வளர்த்துச் செய்யும் வேள்வி முறை வேதாந்தத்திற்கு மாறுபட்டது. ஆகம முறைக்கும் மாறுபட்டது. பலி நிறைவேற்றத்தின் விளைவாகத் தோன்றிய புதிய முறைகளே இவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


    புலனடக்கம்


    புலன்கள் வழி பாவம் ஒருவனைப் பற்றுகிறது. எனவே புலனடக்கம் ஒவ்வொருவருக்கும் தேவை. இதனைக்

    கீதை.


    "நீ முதலில் புலன்களை அடக்கி. ஞான விஞ்ஞானத்தை அழிக்கின்ற பாவ வடிவாம் ஆசையை அறவே ஒழித்து விடு" (கீதை 3:41)


    கர்ம யோகத்தைக் கடைப்பிடிப்பவன், தூய

    ஆன்மாவை உடையவன். உடலை வென்றவன்,

    புலன்களை தனதாத்மாவே உயிரனைத்துக்கும்

    ஆத்மாவெனக் காண்கிறவன் கர்மம் செய்யினும்

    கட்டுண்பதில்லை" (கீதை 5:7)

    என்பன போன்ற பகுதிகள் புலனடக்கத்தை வலியுறுத்து கின்றன. பவுலடிகளார் புலனடக்கம் பற்றித் தமது திருமுகங்களில் எழுதும் பகுதிகள் மனதில் கொள்ளத்தக்கன.


    "உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின் மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள்".


    நீங்களோ உங்கள் உறுப்புபகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்.

    (உரோமையர் 6:12-13)


    புலனடக்கம் பற்றி 'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்' என்று திருவள்ளுவர் கூறுவது போல, கீதையும்


    "ஆமை தன் அவயவங்களை அடக்கிக் கொள்வது போல் பொருள்களிடத்திருந்து பொறிகளை முழுதும் உள்ளிழுக்க வல்லவனுக்கு நிறைஞானம் நிலை பெறுகிறது" (கீதை 2:58)


    என மொழிகிறது. புலனடக்கம் இல்லாத ஒருவர், தமது செயல்களால் பாவம் செய்கிறார். அதனால் அவரது ஆன்மா கறைப்பட்டு விடுகிறது. கடவுளுக்கும் தமக்கும் பிளவு ஏற்பட்டுவிடுகிறது. இதனால். அவரால் கடவுளோடு தொடர்பு கொள்ள முடியாமற் போகிறது.


    எனவே நற்செயல்களைச் செய்து, பாவங்களிலிருந்து விடுபட்டு, உறுதியான உள்ளத்தோடு நோன்பிருந்து வழி படுகின்றவர் மேலான நிலையை அடைகின்றனர் (கீதை. 7:28) என்று கீதை எடுத்துரைக்கிறது.


    பிறவிச் சுழற்சி


    பிறவிச் சுழற்சிக் கொள்கை சமண, பௌத்த சமயங்களின் கோட்பாடு. இச்சமயங்களுக்குக் கடவுட் கோட்பாடு என்பது கிடையாது. எனவேதாள். ஒருவர் தாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அடுத்த பிறவியை எடுக்கிறார். இப்பிறவிகள் தொடர்ந்து சுழற்சியாக நடந்து வருகின்றன என்பது அச்சமயங்களின் நம்பிக்கை, போன பிறவி, இந்தப் பிறவி, அடுத்த பிறவி என அச்சமயங்கள் பேசுகின்றன. நன்மை செய்தாலும் பிறவியெடுக்க வேண்டும். தீமை செய்தாலும் பிறவியெடுக்க வேண்டும். நன்மை செய்த ஆன்மா கடவுளைச் சேருவதில்லை என்பது அச்சமயங்களின் கோட்பாடு.


    கீதை என்பது கடவுட் கோட்பாட்டையுடைய நூல். கடவுட் கோட்பாட்டுக்கும் பிறவிச் சுழற்சிக்கும் தொடர்பில்லை. பிறவிச் சுழற்சி பற்றிக் கீதையில் இடம் பெறுவன, அந்நூலில் உள்ளவைதாமா என்பது ஆய்வுக்குரியது. ஏனெனில், பிறவிச் சுழற்சிக் கோட்பாடு, கீதையின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு முரண்பட்டதாகும்.


    ஒருவரது சொந்த முயற்சியினால் வீடுபேறு கிட்டாது. என்பதைக் கீதை தெளிவாக்குகிறது. அவரது நற்செயல்கள் (புண்ணியங்கள்) மோட்சமாகிய வீடு பேற்றைத் தாரா. “கடவுளிடத்தில் அடைக்கலம் புகுவதாலேயே வீடு பேறு கிட்டும்.


    "தர்மங்களை யெல்லாம் விட்டு விட்டு என்னையே சரணடைக. பாவங்களிலிருந்து உன்னை நான் விடுவிப்பேன்"

    (கீதை 18:16)


    'நான் ஏராளமான தர்மங்களைச் செய்திருக்கிறேன். எனவே எனக்கு வீடு பேறு கிட்டும்' என ஒருவர் எண்ணுவதால் மோட்சம் கிடைக்காது. கடவுளைச் சரணடையும் போது மட்டுமே அது கிட்டு ம்.


    "இனி நானல்ல; எனக்குள் வாழும் கிறிஸ்துவே"

    (கலா.2:20)


    என்பதை உணர்த்துவதே மேற்குறித்த கீதையின் வரிகள்.


    பிறவிச் சுழற்சி, கீதையின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு முரணானது என்பதை,


    "பரம பக்குவப்பட்ட மகாத்மாக்கள் என்னை அடைந்து, துன்பத்துக்கு இருப்பிடமும் நிலையற்றதுமாகிய மறுபிறப்பை எடுப்பதில்லை"


    “என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை"

    (கீதை 8:15,16)


    என்னும் பகுதிகள் தெளிவுபடுத்துகின்றன. மறுபிறப்பு, அல்லது பிறவிச் சுழற்சி என்னும் சிந்தனை, இந்தியாவின் கடவுள் மறுப்புக் கோட்பாட்டினரிடையே இருந்து வந்துள்ளது. அவர்களுக்குப்

    புதிய கருத்துகளை அறிவிக்கின்ற போது, ஏற்கனவே அவர்கள் நம்பிக்கையை எடுத்துக் கூறி அதன்பிறகு தமது கோட்பாட்டைக் கூறுவது இயல்பு. இவ்வகையில் கீதை மேற்கண்டவாறு கூறுகிறதெனலாம்.மறுபிறப்பு என்பது கீதையில் வேறு பொருளைத் தருவதாகவும் அமைந்துள்ளது.


    மறுபிறப்பு


    மறுபிறப்பு என்பது உள்ளம் மாறிப் பிறத்தலைக் குறிப்பது ஆகும். உள்ளம் மாறிப் பிறத்தல் என்பது, உடலானது இரண்டாம் முறை பிறப்பது என்பது ஆகாது. சமண, பௌத்த நாத்திக சமயங்களுக்குரிய கோட்பாடு என்பது முற்பிறப்பு, அடுத்த பிறப்பு என்பன ஆகும். இது முன்னர் விளக்கப்பட்டது.


    "இவ்வுடலில் குழந்தைப் பருவமும் இளமைப்

    பருவமும் மூப்பும் உண்டாவது போல ஆன்மாவுக்கு

    வேறு உடல் எடுப்பதும் அமைகிறது" (கீதை 2:13)


    எனக் கீதை குறிப்பிடுகிறது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கிழப்பருவம் என்பன ஒரே உடலின் வளர்நிலைப் பருவங்களேயன்றி, வேறு வேறு உடல் எடுப்பது என்றாகாது. இந்த உவமையை எடுத்துக்கூறி, இதுபோல ஆன்மாவுக்கு வேறு உடல் அமைகிறது என்று கீதை கூறுவதாக உள்ளது. இளமைப் பருவத்தில் ஆன்மாவின் நிலை வேறு: கிழப்பருவத்தில் ஆன்மாவின் நிலை வேறு.


    யோவான் மூன்றாம் அதிகாரத்தில், மறுபிறப்புப் பற்றிய உரையாடல் ஒன்று இடம் பெறுகிறது. இயேசு பெருமானிடத்தில் நிக்கதேம் என்பவர் உரையாடும் போது.


    "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சி யைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார். (யோ. 3:3)


    இதனைக் கேட்ட நிக்கதேம், வயதான ஒருவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து,


    "மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர்; தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர் (யோ. 3:6)


    என்று பதில் கூறினார். இங்ஙனம் தூய ஆவியாரின் இயல்பைப் பெற்று, உள்ளம் மாறிப் பிறப்பவரை 'இருபிறப்பாளர்' என்று கூறுவர். இதனைக் கீதையும் 'துவிஜா' (கீதை. 1:7; 17:14) என்று சுட்டுகிறது. 'துவிஜா' என்றால் இருமுறை பிறந்தவர் என்பது பொருள். இதற்குப் பிராமணர் என்று தவறாகப் பொருள் எழுதியிருக்கின்றனர்.


    மறுபிறப்பு தொடர்பாக இன்னொரு கருத்தும் கீதையில்

    விளக்கப்படுகிறது.


    "பழுதுபட்ட துணிகளைக் களைந்து விட்டு மனிதன்

    புதியவற்றை அணிந்து கொள்வது போன்று, ஆன்மா பழைய உடலங்களை நீத்துப் புதியவற்றில் புகுகிறது" (கீதை. 2:22)


    மாந்தர் உயிர்த்தெழுவது பற்றிய செய்தி இதில் விளக்கப்படுகிறது.


    நாம் நிலத்தில் விதைக்கும் விதை மடிந்து போகிறது. அவ்வாறு மடிந்து போவதாலேயே முளைவிட்டுப் பயிராக விளைகிறது. விதையின் மேனிதான் பயிரின் உருவம். இது

    போலத்தான் ஒருவர் இறந்தவுடன் அவரின் உடல் நிலத்தில் விதைக்கப்படுகிறது. ஆனால், உயிர்த்தெழுதலில், அவ்வுடல் அழியாத வேறொரு மேனியை அணிந்து கொள்கிறது. இதனை ஆவிக்குரிய உடல் என்று விவிலியம் குறிப்பிடுகிறது.


    "மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுகிறது; ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்றெழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு" (1கொரி. 15:44)


    எனப் பவுலடிகளார் எழுதுவது நோக்கத்தக்கது. கீதை மற்றுமோர் இடத்தில், "இவ்வுடல்கள் அழியுமிடத்தும் நாம் இல்லாமற் போக

    மாட்டோம்" (கீதை 2:12)


    என்று குறிப்பிடுகிறது. அதோடு 'சாகாநிலை' (நித்திய ஜீவன்)

    பற்றியும் கீதை (2:15) குறிப்பிடுகிறது.


    'ஆணவமற்றவர், அவிவேகமற்றவர், பற்றினை வென்றவர் இருமை மயக்கத்தைக் கடந்தவர், மயக்க மொழிந்தவர் இத்தகையோர் அழியா நிலையை அடைகின்றனர்" (கீதை 15:5)


    'என்னில் நிலைத்திருங்கள்' என்று இயேசு பெருமான் கூறினார். 'எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னைச் சரண் அடைக' என்று கீதை கூறுகிறது. இதனையே சரணாகதி என்பர். 'என்னில் விசுவாசமாயிருங்கள்' என்பதைக் கீதை.


    "என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்துப் புத்தியைச் செலுத்துக. பின்பு என்னிடத்தில் வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை" (கீதை. 12:8)


    என்று கூறுகிறது. கடவுளை அடைவதே முத்தி என்னும் மோட்ச நிலை.


    இயேசு கிறித்து, மறு தோற்றம் (மறுரூபம் - Transfiguration) அடைந்த காட்சி நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை விளக்குவதாகக் கீதையின் "விசுவ ரூப தரிசனம்” அமைந்துள்ளதெனலாம். இயேசுவின் மறுதோற்ற நிகழ்வுக்குப் பிறகே அவரது சாவு, அதன்வழி மீட்பு நடந்தேறியது. இது கடவுளின் அருளை வெளிப்படுத்துவதாகும். 'அழியாத பதம்' இறையருளால் கிட்டுகிறது (கீதை 18:56), 'மேலான சாந்தியும் நிலைத்துள்ள வீடு பேறும் இறையருளால் கிட்டுகிறது' (கீதை) 18:62). கீதையில் குறிக்கப்படும் 'சரணாகதி' இயேசு பெருமான் காட்டியது ஆகும். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பணி கடவுள் நமக்குக் கொடுத்துள்ள பணி. அதைச் செய்வதற்குப் பலனை எதிர்பார்த்தலாகாது. "செயற்பாடற்ற (கிரியையற்ற) விசுவாசம் வீணானது" என்பது 'நிஷ்காமிய கர்மம்' ஆகும். அதாவது, பலனை எதிர்பார்க்காத பணி அல்லது செயல் என்பது பொருள். அதனைத் தொடர்ந்து செய்வோம். அதுவே இறைபணி ஆகும்.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.