வைணவக் கோட்பாடு

 



7. வைணவக் கோட்பாடு


    வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுள் விஷ்ணு ஆவார். விஷ்ணு என்னும் சொல்லுக்கு வேர்ச் சொல்லாய் இருப்பது "விண்" என்பது ஆகும். விண்ணிலிருந்து வெளிப்பட்டவர் விஷ்ணு. விண் என்னும் தமிழ்ச் சொல்லே சமசுகிருதத்தில் விஷ்ணு என்று ஆயிற்று. கடவுள் இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்தார்; அதன் மூலம் பாவத்தில் வீழ்ந்து கிடந்த மனுக்குலத்தை மீட்டார்; எனவே அவரை ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் நீடு வாழ்வு உண்டு (Eternal life - நித்திய ஜீவன்) என்பதை விளக்குவது வைணவ சமயமாகும். வைணவ சமயத்திற்கு அடிப்படையாக இருக்கும் இயக்கியம் "நாலாயிர திவ்வியப் பிரப்பந்தம்" ஆகும். தமிழ்நாட்டை மட்டுமே சார்ந்த பன்னிரு ஆழ்வார்களால் எழுதப்பட்ட பாசுரங்களால் இலக்கியம் தான் நாலாயிர திவ்வியப்பிரபந்தம். ஆன


    விண் மேகவண்ணன்


    விண் விண்ணு> விண்டு விஷ்ணு. மேலே குறித்த

    அடிப்படை யில் விஷ்ணு என்னும் பெயர் உருவாகி உள்ளது.

    விண் என்பது மேகத்தையும் குறிக்கும். மேகத்தின் நிறம் கருப்பு.

    நீலம் என்றெல்லாம் குறிக்கப்படுகிறது அதே நிறத்தை

    விஷ்ணுவிற்கும் ஏற்றிக் கூறுவது மரபு. மேக வண்ணன், கார்மேக

    வண்ணன் என்றெல்லாம் ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப்

    புகழ்வர். விஷ்ணு என்னும் பெயர் கிறித்துவுக்கு முற்பட்ட சங்க

    இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை. சைவ, வைணவம் என்னும் சமயங்கள் கிறித்துவுக்குப் பின்னரே தமிழகத்தில் உருவாயின. சிவன் என்னும் பெயர் சிவந்தவன் என்னும் பொருளைத் தரும். அதனால்தான் "அழல் வண்ணன்”, “தீ வண்ணன்" என்றெல்லாம் சிவபெருமான் போற்றப்படுகிறார். திருவாசகத்தில் திருவண்டப் பகுதி என்பதில் "கருமா முகிலில் தோன்றி" (67) என்றும் "அண்டத்தரும் பெறன் மேகன் வாழ்க" (95) என்றும் மாணிக்கவாசகர் வாழ்த்துகிறார்.


    நிறத்தின் அடிப்படையில் இரு பெரும் பெயர்கள் கடவுளுக்கு சூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பெயர்களே இரண்டு கடவுளர்களாகத் தோற்றம் அளிக்கின்றன. ஆனால் ஒரே கடவுளுக்கான இரண்டு பெயர்களே இவை என்பது அடிப்படை உண்மையாகும். இவ்வாறு வளர்ச்சி பெறுவதற்குத் திருவிவிலியம் துணை செய்திருக்கிறது என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. மோசே இசுரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தி லிருந்து மீட்டு வழிநடத்திவந்த போது கடவுளே அவர்களுக்கு முன்பாகப் பகலில் மேகத் தூணிலும், இரவில் நெருப்புத் தூணிலும் இருந்து அவர்களை வழி நடத்தினார்.


    ஆண்டவர் பகலில் அவர்களை வழி நடத்த மேகத்தூணிலும் இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலிலும் இரவிலும் அவர்கள் பயணம் செய்வதற்காக

    அவர்கள் முன் சென்று கொண்டிருந்தார்"


    "பகலில் மேகத்தூணும் இரவில் நெருப்புத் தூணும் மக்களை விட்டு அகலவே இல்லை" (யாத். 13:21,22)


    இவ்வாறு வழி நடத்தியதும் அல்லாமல் மோசேயோடும் இசுரயேல் மக்களோடும் பகலில் மேகத்தூணிலிருந்தும்,

    இரவில் நெருப்புத் தூணிலிருந்தும் கடவுள் பேசினார் என்ற பகுதிகளும் பழைய ஏற்பாட்டு நூல்களில் குறிக்கப் பட்டுள்ளன.


    விஷ்ணு திராவிடக் கடவுள்


    சமசுகிருதத்தில் எழுதப்பட்ட நான்கு வேதங்களில் “விஷ்ணு” என்னும் பெயர் சூரியனைக் குறிக்குமேயன்றி கடவுளைக் குறிக்காது. நால் வேதங்களில் முழுமுதற் கடவுள் பற்றிய குறிப்பே கிடையாது. 1. இயற்கை வழிபாடு, 2. சிறு தெய்வ வழிபாடு, 3. முன்னோர் வழிபாடு போன்ற சாதாரண வழிபாடுகள் மட்டுமே இவ்வேதங்களில் காணப்படுகின்றன. விஷ்ணு இந்த உலகத்தை மூவடியால் அளந்தார் என்று ரிக் வேதத்தில் காணப்படுகின்ற குறிப்புத் திராவிடக் கடவுளாகிய விஷ்ணுவைக் குறிக்காது. சூரியன் காலையில் எழுதல்; நடுப்பக லில் உச்சியில் நிலைபெறுதல்; மாலையில் வீழ்தல் ஆகிய மூன்று நிலைகளைக் குறிப்பது தான் மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் பொருளாகும். மற்றப்படி வைணவச் சமயத்தில் குறிக்கப்படும் வாமன அவதாரமாகிய "திரிவிக்கிரம அவதாரத்தைக்” குறிக்காது என்பதை அறிஞர்கள் எடுத்துக்காட்டி உள்ளனர்.


    "இருக்கு (ரிக்) வேதத்தில் விஷ்ணுவிற்கு ஆறு பாசுரங்களே உள்ளன. பிற்காலத்தில் அவர் அவதா ரங்களுக்குத் தெய்வமாக்கப்பட்டார். விஷ்ணு சிறிது மாந்தப்பண்பு ஏற்றப்பட்டவராகத் திகழ்கிறார். நிலம், காற்று ஆகாயம் ஆகிய எல்லையடங்கிய இயலு கத்தை (பிரபஞ்சம்) மூன்று அடிகளால் கடப்பதே வேதங்களில் அவருக்குக் குறிக்கப்படும் தலையாய செயற்பாடு, மூன்று எல்லைகளைக் கடந்து செல்லும் கதிரவனை உருவகப்படுத்தியமையே உண்மையில் விஷ்ணுவாகும் என ரிக் வேதத்தில் குறிக்கப்படுவதாக”

    அறிஞர் எடுத்துக் காட்டுவர்.


    (Rig Veda I, Samaveda, 2,8,2, Quoted by Geoffrey Parrinder, Avatar and Incarnation. Page 16.)


    'ஆரிய வேத காலத்தில் கதிரவனையே விஷ்ணு என்றழைத்தனர். பின்னர் தமிழரோடு தொடர்பு கொண்டு தமிழ் மதத்தை மேற்கொண்ட பின்பே விஷ்ணு என்னும் சொல் திருமாலைக் குறிக்கலாயிற்று"

    எனத் தேவநேயன் மேலும் தெளிவுபடுத்துகிறார்.

    (வடமொழி, வரலாறு. பக்கம். 2620)


    எனவே விஷ்ணு என்பவர் திராவிடக் கடவுளாகக் குறிக்கப் படுகிறாரேயன்றி வைதீக வழிபாட்டு மரபோடு தொடர்புடைய வர் அல்லர் என்பது விளங்கும். வைணவ மதத்திற்கு, நான்கு வேதங்களும் மூல நூல்கள் அல்ல; பழைய ஏற்பாட்டு வழி வந்த வழிபாடும் புதிய ஏற்பாட்டு நூல்களுமே இதற்கு மூலங்களாக விளங்குவதை அறிஞர் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.


    விஷ்ணுவும் பரிசுத்த ஆவியும்


    கிறித்தவம், சைவம், வைணவம் ஆகிய மூன்று சமயங்க ளுக்கும் அடிப்படையாக விளங்குவது மூவொருமைக் கோட் பாடு ஆகும். தந்தை, மைந்தன், தூய ஆவி ஆகிய மூன்று பெயர்கள் கிறித்தவத்தில் கடவுளுக்குக் குறிக்கப்படுகின்றன. பெயர் மூன்று என்று குறிக்கப்பட்டாலும் கடவுள் ஒருவரே. எனவே ஒரே கடவுளுக்குக் குறிக்கப்படும் மூன்று பெயர்களே தவிர மூன்று கடவுளர் அல்லர் என்பதே மூவொருமைக் கோட்பாட்டின் அடிப்படை ஆகும். தந்தை, மைந்தன் என்பன குடும்ப உறவுப்பெயர்கள். இயேசு கிறித்து கடவுளின் மைந்தர் என்று குறிப்பிடப்படுகிறார் (Son of God). ஒரு குடும்பத்தில் மகன் பிறக்க வேண்டும் என்றால் தாயாகிய ஒரு பெண்ணின் துணை தேவைப்படுகிறது. மூவராகிய கடவுளில் தூய. ஆவிக்கு எந்த இடத்தைக் கொடுப்பது? இயேசு கிறித்து தூய ஆவியானவரால் உற்பத்தியாகிப் பிறந்தார் என்று புதிய ஏற்பாடு கூறுகிறது.


    ஒரு குடும்பத்தில் தாயாகிய பெண் தேவைப்படுவதால் தூய, ஆவியைப் பெண் என்று குறிப்பிடுவது இயல்பு. இந்தப் பெண்ணையே சைவம் சக்தி என்று குறிப்பிடுகிறது. இறைவனின் அருட்சக்தியைப் பெண்ணாக உருவகிப்பது சைவ சமயம். எனவேதான் சிவபெருமானின் உடலில் பாதி இடப்பக்கம் சக்தி என்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. சிவனும் சக்தியும் இணைந்த உருவத்திற்கு ‘அர்த்தநாரீஸ்வரர்' என்று சமசுகிருதத் தில் சுட்டப்படுகிறது. அர்த்தம் - பாதி; நாரி - பெண்; ஈஸ்வரன் - ஆண். பாதி பெண்ணும் பாதி ஆணும் சேர்ந்த ஈஸ்வரன் என்பது அதன் பொருள். சிவனின் இடப்பக்கத்தைப் பெண்ணாக உருவகித்து, சக்தி என்று சைவம் பெயர் கொடுத்ததைப் போன்று வைணவம் கொடுக்கவில்லை. சக்தியை ஆண் என்று வைணவம் உருவகித்து அதையே விஷ்ணு என்று வைணவம் ஏற்றுக் கொண்டது. விஷ்ணு என்பதன் வேர்ச் சொல்லாகிய விண் என்பது வானோடு தொடர்புடையது. திருவள்ளுவரும் தூய ஆவியானவரை வான் சிறப்பு என்றும் அதிகாரத்தில் மேகம் என்றும் மழை என்றும் உருவகித்துப் பாடுவதைத் திருக்குறளில் காணலாம்.


    வைணவம் தூய ஆவியை ஆணாகக் கொண்டதில் கிறித்தவத்திற்கு முழுப் பங்குண்டு. ஏனெனில் இயேசு கிறித்து தூய ஆவியானவரால் உற்பத்தியாகிப் பிறந்தார் என்று புதிய ஏற்பாடு கூறுகிறது. ஆகவே புராண விளக்கங்களின்படி தூய, ஆவியானவரே விஷ்ணு என்னும் பெயரில் வைணவத்தில் சுட்டப்படுகிறார் என்பது புலனாகிறது.


    அவதாரக் கோட்பாடு


    அவதாரம் என்னும் சமசுகிருதச் சொல்லுக்குக் கீழே இறங்கி வருதல் என்பது பொருள்.


    அவ + தார் = அவதார்


    "அவ" என்பது முன்னொட்டு; இதன் பொருள் கீழே; தார் -

    இறங்கி வருதல்; இறங்கி வரும் முறை.

    அவதார் கீழே இறங்கி வரும் முறை.

    (P.H. Pandey, The Concept of Avatars with Special Reference to Gita. p-1.)


    'அம்' என்னும் விகுதியை இதனோடு சேர்த்து அவதாரம் எனவும் வழங்குவர் கடவுள் விண்ணுலகை விட்டு நில உலகத்திற்கு இறங்கி வந்தார் என்பதே அவதாரம் என்பதன் நேரடிப் பொருள். இதனை ஊனுடம் பெடுத்தல் என்று தமிழிலும் "Incarnation" என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடுகின்றனர்.


    கடவுள் மாந்தனாக உலகில் பிறந்தார் என்பது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். பிறப்பெடுத்தல் என்பது மாந்தருக்கு உரியது. கடவுள் மாந்தனாகப் பிறந்தார் என்னும் கோட்பாடு கிறித்தவத்தைத் தவிர வரலாற்றில் நிகழ்ந்ததாக வேறு எந்தச் சமயத்திலும் கூற முடியாது. கடவுளுக்கும் மாந்தனுக்கும் ஏற்பட்ட ஓர் உறவே அவதாரம் ஆகும்.


    மாந்தத்தன்மையும் இறைத்தன்மையும் கலந்த இரட்டை அற்புத நிகழ்ச்சியாகும். புறவியல்புகளின் குறைபாடு களோடு கூடிய மாந்தனின் இயற்கையில் இறைவன் தோன்றி அக்குறைபாடுகளை நிறைவாக்கி இறைவனுக்குரிய கருவியாகவும், இறை பிறப்பிற்குரிய பாத்திரமாகவும் தெய்வ உணர்வோடு கூடியதாகவும் இறைபணிகளை நிறைவேற்று வதாகவும் மாற்றம் செய்வதே அவதாரமாகும்" (P.K. Pandey (6.p.-212)


    அவதாரம்


    இந்தக் கருத்து கிறித்தவத்திற்கே பொருந்தி வருகிறது. இயேசு கிறித்து "கடவுளின் மைந்தர்”. அவரைப் பெற்றெடுத்த வர் கன்னி மரியாள். இவர் மாந்த இனத்தைச் சேர்ந்தவர். கடவுள், மாந்தராகிய கன்னி மரியாளிடம் பிறந்தவர். அவரே இயேசு கிறித்து. எனவே அவர் இறைத்தன்மையும் மாந்தத் தன்மையும் இணைந்து புதிய பிறப்பிற்கு உட்பட்டவர் இதனை மத்தேயு நற்செய்தி நூல் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. ஆவர்.


    "இயேசுவின் தாயாகிய மரியாள் யோசேப்புக்கு

    நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே

    அவர் பரிசுத்த ஆவியினாலே கற்பவதியானர் என்று

    காணப்பட்டது” மத். 1:18.


    தேம்பாவணியில் வீரமாமுனிவர், இயேசுவின் கன்னிப் பிறப்பைக் குறிப்பிடும்பொழுது "கன்னிச்சங்கு" என்னும் தமிழ் உவமை ஒன்றைப் பயன்படுத்துகிறார். ஆண் சங்கின் துணை இல்லாமலேயே இன்னொரு பெற்றெடுக்கக் கூடியதே கன்னிச் சங்கு என்பர்.


    எனவே கடவுளுக்கும் மாந்தனுக்கும் ஏற்பட்ட சம்பந்தத்தைக் குறிப்பிடுவதே அவதாரமாகும். இந்த உறவை ஏற்படுத்த வந்த கடவுளுக்கு இம்மானுவேல் என்னும் பெயரைக் கிறித்தவம் வழங்குகிறது.


    இம்மானுவேல் என்பதற்குக் கடவுள் நம்மோடு

    இருக்கிறார் என்பது பொருள்” மத். 1:23 இம்மானுவேல் என்பதைச் சைவம் "சம்பந்தநாதன்" என்று

    குறிப்பிடுகிறது.


    பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்

    தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று

    பேரிலா நாதன் ஒரு பேர் புனைந்து போற்றிப் பஃறொடை 69-71,


    கடவுளின் கன்னிப்பிறப்பு மிகவும் தூய்மையானது. ஏனெனில் மாந்தனுக்கு இயல்பாக உரிய "ஜென்ம பாவம்" என்பது (கருமாசு) பிறப்பிற்குட்பட்ட கடவுளுக்குக் கிடையாது. எனவே இது Divine Birth என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது.


    வைணவம் இதனைத் "திவ்யம் ஜென்மா" என்று

    குறிப்பிடுகிறது. கன்னி மரியிடத்தில் இயேசு பிறந்தார் என்பதைக் கிறித்தவம் குறிப்பிடுவதைப் போல, "ஒருத்தி மகனாய்ப் பிறந்து" என்னும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத் (498) தொடரால் வைணவம் திருமாலின் பிறப்பைக் குறிப்பிடுவது நோக்கற்கு உரியது ஆகும்.


    அவதார நோக்கம்


    கடவுள் மனிதனாக அவதரிப்பதற்கு முக்கியமானதொரு

    நோக்கம் இருக்க வேண்டும். "விண்ணின் றிழிந்து விளைக்கீடாய் மெய்கொண்டு"

    திருமந்திரம், முதல் தந்திரம் உபதேசம் 1 என்று திருமூலர் தம் பாடலில் குறிப்பிடுகிறார். இதில் "மெய்” என்று குறிக்கப்படுவது அவதாரத்தை. வினைக்கீடாய்க் கடவுள் மாந்தனைப் போன்ற உடலை எடுத்து மேலுலகை நீத்து இவ்வுலகில் அவதரித்தார் என்பது மேற்குறித்த பாடலடியின் விளக்கம். எந்த வினைக்கு அல்லது யாருடைய வினைக்கு ஈடாகக் கடவுள் மாந்தனைப் போன்ற உடல் எடுத்துப் பிறக்க வேண்டும் என்றும் கேள்வி எழுவது இயல்பே. வினை என்பது கடவுளுக்குக் கிடையாது. அதனால் தான் சிவன் அவதாரம் எடுப்பதில்லை என்று சைவர்கள் கூறி வருகிறார்கள். சிவனுக்கு அவதாரம் இல்லை என்று கூறுவது பொருந்தாது என்று சைவ சித்தாந்தம் தெளிவுபடுத்துகிறது. தன்னுடைய சாயலாக, எவ்விதப் பாவமும் இன்றிப் படைக்கப்பட்ட முதல் மாந்தன், பாவமாகிய தீவினை செய்தான். அந்த வினையின் பயன்தான் சாவும் நரகமும் என்பதைச் சமயநூல்கள் தெளிவுபடுத்துகின்றன. அவன் செய்த தீ வினைக்கு ஈடாகத் தாமே அவனைப் போன்று அவதரித்து அத்தீவினையைத் தம்முடைய நல் வினையின் மூலம் சமன் செய்வது என்பது கடவுளின் நோக்கம். இதன் மூலமாகப் பாவத்தில் வீழ்ந்த மாந்தனை மீட்டெடுத்து இழந்த இன்பத்தைத் திரும்பக் கொடுப்பதே அவதாரத்தின் நோக்கமாகும்.


    நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில், நம்மாழ்வார் அருளிய திருவிருத்தத்தில், "பொய்ந்நின்றஞாளமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இளியாம் உறாமை உயிரளிப்பான் எந்நின்ற யோனியு மாய்ப்பிறந்தாய் இமை யோர்தலைவா

    மெய்ந்நின்று கேட்டரு ளாய்அடி யேன் செய்யும் விண்ணப்பமே" (நம்மாழ்வார், திருவிருத்தம் 3580)

    எனும் பாடல் அவதார நோக்கத்தை விளக்குகிறது. பொல்லா ஒழுக்கு என்பது பாவத்தினால் விளையும் செயல்பாடு களையும் அதன் மூலமாக அவனுடைய உடம்பும் அதனுள் வாழும் ஆன்மாவும் மாசுபட்டு விடுகின்றன என்பதை அப்பாடலடி விளக்குவதோடு அப்பாவ உடலோடு கூடிய மாந்த இனம் அனைத்தையும் மீட்டுப் புத்துயிர் அல்லது புதிய வாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காகக் கடவுள் இவ்வுலகத்தில் அவதரித்தார் என்பதையும் விளக்குகிறது. "அழுக்குடம்பு" என்பது சைவம் குறிப்பிடும் சகச மலத்தையும் கிறித்தவம் குறிப்பிடும் கருமாசையும் சுட்டுவதாக உள்ளது. சகச மலத்தால் வருவது சாவு. அதனை நீக்கி உயிர் (நீடுவாழ்வு; நித்திய ஜீவன் - சாவாமை) அளிக்க இறைவன் அவதரித்தார் என்றும் இறையியல் விளக்கம் கிடைக்கிறது.


    "ஆன்மா இறைவனைக் காண வேண்டும் அடைய வேண்டும் என்று கொள்ளுகின்ற ஆர்வமாகிய பசியை விட இறைவன் ஆன்மாவை மீட்க வேண்டும் என்று கொள்ளுகின்ற ஆர்வமாகிய பசி பெரிதாகும். யாவற்றையும் கடந்து விளங்குகின்ற நிலையான பிரமம் பக்தனோடு ஒன்று சேர விரும்பும் ஆவலால் மனித உருவத்தில் அன்பேயாக கொள்கிறது" ஸ்ரீனிவாசாச்சாரி பி. எல். இராமானுஜர்,

    (விசிஷ்டாததுவைதம்) கீழை. மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு 1, பக். 574 -575 என்று ஸ்ரீனிவாசாச்சாரி வைணவ அவதார நோக்கத்தை விளக்குகிறார். இதே போன்று பிரமச்சாரி கீதானந்து என்பவரும் "கடவுள் இவ்வுலகிற்கு வந்து உலக மாந்தரோடு வாழ்ந்து அவர்களுக்கு விண்ணுலகின் உண்மை வழியைத் திறந்து வைக்கிறார். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் மீட்பினையும் பேறுபெற்ற நிலையையும் தருகிறார்"

    எனது தமது நூலில் விளக்கமளிக்கிறார்.

    (Brahmachari Gitanand, The Gita Idea of God or the Religion of Life, Beauty, Love, Truth & Righteousness p. 338)


    மேற்குறித்த ஆய்வுரைகள் கிறித்துவின் அவதாரத்தையே விளக்குவனவாக உள்ளன.


    கடவுளின் கட்டளையை மீறிய ஆதாம் மூலம் இந்த உலகமும் மாந்த இனமும் சபிக்கப்பட்டன

    'உண்ண வேண்டாம் என்று நான் உனக்கு

    விலக்கின மரத்தின் கனியை உண்டபடியினால் பூமி உன்னிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடி ருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதன் பலனைக் காண்பாய்" (ஆதி. 3:17)

    என விவிலியம் குறிப்பிடுகிறது.


    முதல் மனிதனாகிய ஆதாம் மட்டும் சபிக்கப்படவில்லை; அவன் வழித்தோன்றல்களாகிய எல்லாத் தலைமுறை யினருமே சபிக்கப்பட்டுச் சாவுக்கும். நரகத்திற்கும் உட்பட்டனர் என்பது விவிலியம் கூறும் உண்மையாகும். எனவே மாந்த இனத்தையே மீட்பதற்காகக் கடவுள், இயேசுவாக இவ்வுலகில் அவதாரம் செய்தார்.


    "ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப்

    பிறந்தார் ஆதந் தன்பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட ஆதிரை யோரையீ டேற்றிட"


    (கிறிஸ்தவ கீர்த்தனைகள், கீர்த்தனை 20) "ஆதம்புரிந்த பாவத்தாலே மானுடனாகி”

    (கிறிஸ்தவ கீர்த்தனைகள் - 41) - வேதநாயகம் சாஸ்திரியார் -

    "ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப் பூதலம் வந்ததார் மனமே?"

    (கிறிஸ். கீர். - 123 சத்தியநாதன் பிள்ளை)

    “உலகெலாம் உய்யவேண்டி உருக்கொடு

    மண்ணில் வந்தாய்

    நலமிகு உவமையாலே ஞானசீ லங்கள் சொற்றாய் கலகமும் கரவுங் கொண்ட கண்ணிலாப் பேயைச்

    சாய்த்தாய்

    அலகிலா ஒளியே! ஏசு ஐயனே! போற்றி போற்றி" (திரு.வி.க., கிறித்துவின் அருள் வேட்டல், 6 உலகெலாம் 1,) யேசு கிறித்து, தாம் இந்த உலகத்தில் அவதரித்த நோக்கத்தைப் இடங்களில் விளக்குகிறார்.


    "மனுமைந்தர் கெட்டழிந்து போனதை மீட்கவே. வந்திருக்கிறார்" (மத். 18:11)


    "மனு மைந்தரும் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யவும் எல்லாரையும் மீட்டுக் கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்" (மாற். 10:46)


    “பாவிகளையே மனமாற்றமடையும்படி அழைக்க வந்தேன். (லூக். 5:32)


    "தம் ஒரேமகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" யோ. 31:6


    தமது அவதார நோக்கத்தை இவைபோன்று பல இடங்களில் இயேசு கிறித்து விளக்குகின்ற ஏராளமான பகுதிகள் நற்செய்தி நூல்களில் இடம் பெறுகின்றன.


    பவுலடிகள் தம்மடலில்

    "நீதிச்சட்டத்தால் பாவத்தைப் போக்க ஆற்ற லற்றதாயிருந்தது. இந்நிலையில் அதனால் செய்ய இயலாததைக் கடவுள் தாமே செய்தார். எப்படி யெனில், அவர் தம் மாந்தரைப் பாவத்துக்கு உட் பட்ட நம் இயல்பு போன்ற இயல்புடையவராய்ப் பாவத்தைப் பரிகரிக்க அனுப்பி, இந்த இயல்பைக் கொண்டே பாவத்தின் அதிகாரத்திற்கு முடிவுண்டாக்கும் தீர்ப்பை அளித்தார்"


    என எழுதுகிறார். (உரோ. 8:3) இதனால், பாவத்தை அழிக்கும் அவதார நோக்கம் விளங்குகிறது.


    பாவ நீக்கமாகிய விடுதலையும் நீடுவாழ்வும் கடவுள் இவ்வுலகில் மாந்தனாகப் பிறந்த தன் நோக்கங்களாகக் கிறித்தவம் குறிப்பிடுவதைப் போன்று வைணவ சமயமும் தெரிவிக்கின்றது.


    கீதையும் அவதாரமும்


    வைணவத்தில் பகவத் கீதை, போற்றற்குரியதோர் இடத்தைப் பெற்றுள்ளது. மாபாரதக் கதையின் ஒரு நிகழ்வாகக் கீதோபதேசம் சுட்டப்பெரினும் அறிஞரிடையே கருத்து வேறுபாடுகளுண்டு. மாபாரதம் என்பது கதை தழுவிய இதிகாசம். ஆனால் கீதை, இறையியலோடு தொடர் புடையதொரு நூல், வேதாந்தத்திற்கு அடிப்படையான, 'பிரஸ்தானத்திரய'த்தில் ஒன்றாக இது கொள்ளப்படுகிறது.


    கடவுளின் அவதாரமாகிய நிகழ்வு இதில் சுட்டப் பெறாமல், அவதாரமாக வந்த இறைவனின் போதனைகள் இதில் இடம் பெறுவன சிந்தனைக்குரியன. மேலும் கீதை பற்றி அறிஞர் ஒருவர் விளக்கும் போது,

    'அவதாரத்தின் செயற்பாடுகள் பலதிறத்தனவாக இருந்தாலும் இருபெருஞ் செயல்கள் சிறப்பானவை. அவை அறத்தைத் (தர்மம்) திரும்பவும் மீட்டுக் கொணர்தல்; மாந்த வினத்திற்கு விடுதலையளித்தல். அஃதாவது, புதிய ஆன்மீகச் செய்தி. தெய்வீகச் சட்டப்படி, புதிய வளர்ச்சி, ஆன்மீக உணர்வு.

    -Susmita Pandey, Birth of Bhakti in Indian Religions and Art, P.55)

    என விளக்கிக் காட்டுவார்.


    இழந்த அறத்தைத் திரும்பக் கொணர்தல் என்று வைணவம் குறிப்பிடுவது, கிறித்தவத்தில், இழந்து போன ஏதேனின் இன்ப நிலையை மீண்டும் கொணர்தல் என்பதோடும், சைவத்தில், செம்பில் சேரும் களிம்பினை நிலையாக நீக்குவதோடும் ஒன்றிணைந்து செல்கின்றது.


    தமது அவதார நோக்கத்தைக் கண்ணனே கூறுகின்ற பகுதியை அறிஞர் பலர் சுட்டிக் காட்டுவர்.


    "பாரதச் செல்வா!

    எந்தெந்தக் காலங்களில் தர்மம் அழிந்து அதர்மம்

    எழுந்து நிற்குமோ, அப்போது என் பிறப்பு என்னும்

    சம்பவத்தை நானே நடத்துகிறேன்"

    -கீதை 4:7


    "அறமது (தர்மம்) குன்றி மறமது (அதர்மம்) எழுகின்றபோது, நல்லாரைப் புரப்பதற்காகவும் தீயோரை அழிப்பதற்காகவும் நேர்மையை உலகில் பிறவியெடுக்கிறேன்"

    நிலைநிறுத்தவும் ஊழிதோறும் நான்

    -கீதை 4:8


    அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பல பிறவிகளை (அவதாரங்கள்) எடுப்பதாகக் கூறுவது சமண, பௌத்த சமயங்களில் குறிப்பிடப்படும் கருத்தாகும். அதனுடைய மறுபிறவி, பிறவிச் சுழற்சி முதலிய கருத்துகளெல்லாம் கடவுள் மறுப்புச் சமயக் கோட்பாடுகளேயன்றிக் கீதை போன்ற கடவுட் கோட்பாட்டு நூல்களுக்குப் பொருந்துவ தன்று. இதைப் போலவே பல அவதாரங்கள் விளக்கும் புராணக் கருத்துக்களையும் கொள்வது பொருத்தமானது ஆகும்.


    தசாவதாரங்கள்


    விஷ்ணுவின் அவதாரங்கள் பலவாறாகப் புராணங்களில் குறிக்கப்படுகின்றன. பாகவத புராணத்தில் அவதாரங்களின் எண்ணிக்கை மும்முறை பட்டியலிட்டுக் காட்டப்படுகிறது. முதன் முறை (1,3,6,-22) 22 அவதாரங்களும், இரண்டாம் முறை (II.7,1) 23 அவதாரங்களும், மூன்றாம் முறை (IX 4, 311) 16 அவதாரங்களும் குறிக்கப்படுகின்றன. வாயுபுராணத்தில் 10 அவதாரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இப்பத்து அவதாரங் களும் மரபாகக் குறிக்கப்படுகின்ற தசாவதாரங்களும் மாறுபட்டு விளங்குகின் றன. சாத்வத சம்கிதை 39 அவதாரங்களை வகைப்படுத்துகின் றன. அரிவம்சத்தில் 8 அவதாரங்களே குறிக்கப்படுகின்றன. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் மச்சம், கல்கி ஆகிய இரு அவதாரங்களைத் தவிரத் தசாவ தாரங்களிலுள்ள மற்ற அவதாரங்கள் குறிக்கப்படுகின்றன என்பர்.


    அவதாரங்களின் எண்ணிக்கை, புராணத்திற்குப் புராணம் மாறுபடுகின்றது. எனினும், பொதுவான நம்பிக்கையின்படி


    1. மீன் (மச்சம்)

    2. ஆமை (கூர்மம்)

    3. பன்றி (வராகம்)

    4.ஆளரி (நரசிம்மம்)

    5. குறளன் (வாமனம்)

    6. மழுவேந்தி இராமன் (பரசுராமன்)

    7. இராமன் (தயராத இராமன்)

    8.கண்ணன் (கிருஷ்ணன்)

    9. புத்தர்

    10. கல்கி


    ஆகிய இவையே தசாவதாரங்கள் என இன்று வழங்கப்படு கின்றன. இவற்றுள் ஒவ்வோர் அவதாரத்திற்கும் ஒரு கதையும், கதை வழி நோக்கமும் கற்பிக்கப்படுகின்றன.


    வரலாறு வேறு, புராணங்கள் வேறு. அடிப்படையான ஒன்றனை விளக்குவதற்குப் புராணக்கதைகள் எழுந்தன. கொச்சையான பல நிகழ்வுகளும் புராணங்களில் குறிக்கப்படுகின் றன. வரலாற்றளவில் நிகழ்ந்த அவதாரம் ஒன்றே ஒன்றுதான். புராணச் செய்திகளைக் கற்று விட்டு, அவை வரலாற்று நிகழ்வுகள் என்று மயங்குதல் கூடாது.


    தசாவதாரங்கள் குறித்து மறைமலையடிகள் கூறும் ஆய்வுரை கீழே தரப்படுகிறது.


    “அக்கதைகளில் கூறப்படுவோர், உண்மையில் திருமாலின் அவதாரங்கள் அல்லர், அவருட் சிலர் அறிவு ஆற்றல்களில் ஏனைய மக்களைவிடச் சிறிது உயர்ந்தவரும், மற்றுஞ் சிலர் கதைபுனைந்த ஆரியக்குருமாரால், உள்ளவர் போல் வைத்துச் சுட்டிச் சொல்லப்பட்டவரும் ஆவர். அத்தகைய இவர்களுக்கும் முழுமுதற் கடவுளாகிய திருமாலுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லை யென்பது கடைபிடிக்க. என்றும் முழுமுதற் கடவுளாகிய திருமாலைப் பிறப்பு இறப்புக்கட்கு உட்படுத்துவதே பெருங்குற்றம்; இறைவியாகிய உமைப்பிராட்டியே திருமால்" (மலைமலையடிகள், மாணிக்கவாசகர் காலம். ப. 281)


    என்னும் கருத்துரை மனங்கொளத்தக்கது. எனினும், கடவுளே அவதாரமாக இவ்வுலகில் வந்தார் என்பதை அடிப்படையாக விளக்குவதே வைணவம் ஆகும்.


    தசாவதாரங்களாகக் குறிக்கப்படுகின்றவரின் தந்தையர் இவ்வுலக மாந்தராகவே சுட்டப்படுவது நோக்கத்தக்கது. உலக மாந்தனுக்குப் பிறக்கும் ஒருவர் இன்னொரு மாந்தராவாரேயன்றி. அவர் கடவுளாகார். அவதாரம் என்பது மாந்தராக வந்த கடவுளைக் குறிக்கிறதேயன்றிச் சாதாரண மாந்தன் ஒருவனைக் குறிக்கவில்லை.


    இவற்றை நோக்க, இயேசு கிறித்து கடவுளின் மைந்தர் ஆவார். பரிசுத்த ஆவியாகிய கடவுள் மாந்தவினத்தில் பிறந்த கன்னிமரியாளின் மேல் நிழலிட்டதால் கருவுற்று. மாந்த வயிற்றில், மாந்தனாகப் பிறந்தார் என்று விவிலியம் கூறுகிறது (மத். 1:20; லூக். 1:35). இயற்கை இறந்த, (Super Natural) இரட்டைக் கூறுபாடுடைய (Dual Phenomenon) அற்புத நிகழ்ச்சி யாகும் இது. எனவேதான், இயேசு கிறித்து கடவுளின் மைந்தர் (Son) of God) என்று போற்றப்படுகின்றார். தசாவதாரங்களிலுள்ள அவதார மாந்தர் எவரும் இவ்வாறு குறிக்கப்படுவதில்லை. மழுவேந்தி இராமன், சமதக்கினி என்னும் பிராமணனுக்கும் இரேணுகைக்கும் பிறந்த மகனாவார்; தயரதன் மைந்தன் இராமன்; வாசுதேவன் மைந்தன் கண்ணன்; இவரெல்லாரும் புராண மாந்தரே தவிர வரலாற்று மாந்தரல்லர்.


    புத்தர் வரலாற்று மாந்தர். இவர் கடவுள் கொள்கையை ஏற்காதவர்; அல்லது அறியொணாக் கொள்கையுடையவர். இவரைத் திருமாலின் அவதாரம் என்று உருவாக்கியவர் சங்கரர் என்பர். இதன் மூலம் இந்தியாவில் புத்த சமயம் அழிவுற்றது. அதோடு, தசாவதாரங்களில் சொல்லப்படும் அவதார மாந்தர் அனைவருமே இறந்துபட்டனர். கிறித்தவம் கூறும் அவதார மாந்தர் இயேசு, இறந்து உயிர்த்தெழுந்தவர். அவரது கல்லறை இன்றளவும் வெறுமையாக உள்ளது. சாவை வெற்றி கொண்டதோடு, அதே போன்ற வெற்றியை மாந்த குலத்துக்கும் அளிப்பதே அவதார நோக்கமாகும் என்பதைக் கிறித்தவம் விளக்குகிறது.


    தசாவதாரக் கதைகளில் விடுதலை அல்லது மீட்பு என்னும் நோக்கம் அடிப்படையாக உள்ளதைக் காணலாம். இத்தசாவ தாரங்கள், படிநிலை வளர்ச்சியை விளக்கு வதாகவும் உள்ளன. கீழ்க்காணும் அட்டவணையின் மூலம் இதனைத் தெரியலாம்.





    மேலே உள்ள அட்டவணை, படிநிலை வளர்ச்சி அல்லது கூர்தலறக் கோட்பாட்டை (Theory of Evolition) அடியொற்றியதாகத் திகழ்வதைத் தெளிவுபடுத்துகிறது. மாந்த அவதாரங்களாகப் பரசுராமன், இராமன், கண்ணன், புத்தர் ஆகிய நால்வர் மட்டுமே குறிக்கப்படுகின்றனர். பரசுராமன் கதை பிராமண, சத்திரியப் போராட்டத்தை விளக்குகிறது. கண்ணன் வழிபாடு என்பது வட புலத்து ஆயர் குடிமக்களிடம் இருந்து வந்த வீரவழிப்பாட்டோடும் சமூக வழிபாட்டோடும் கள். தேவ தொடர்புடையதாக விளங்குகிறது. இராமாவதாரம் உண்மை நிகழ்வன்று என்பதை மறைமலையடி நேயப்பாவாணர் போன்ற அறிஞர் எடுத்துக்காட்டுவர். இராம கதை சமண, பௌத்த இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன. இதன் முதல் நூலாகிய வான்மீகி இராமாயணத்தில் கடவுளின் அவதாரமாக இராமன் குறிக்கப்படவில்லை. கி.பி. 9 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பரே முதன்முதலில் இராமனை அவதாரமாக்கி ஒரு காப்பியத்தைப் படைத்தார் என்பது அறிஞர் அளிக்கும் விளக்கம் ஆகும்.


    மேலே குறித்தவை, புராணங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் வைணவ இலக்கியங்களில் ஆழ்வார் களின் பாசுரங்கள் திருமாலின் தசாவதாரங்களைப் பாடினாலும் இறையியல் கொள்கைகளை விளக்கு வனவாகவும் திகழ்கின்றன. ஆழ்வார் பாடல்களையும், உபநிடதங்கள், பிரமசூத்திரங்கள், கீதை ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டு இராமானுசர், "விசிட்டாத்துவைதம்” என்னும் புதிய விளக்கத்தை அளித்திருப்பதை அறிஞருலகு நன்கறியும்.


    நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்குத் "திராவிட வேதம்" என்றும் நம்மாழ்வார் பாசுரங்களுக்குத் "திராவிட மாபாடியம்" என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.


    மூவொருமைக் கோட்பாடு


    சிவனின் இடப்பக்கமாகிய சக்தியை ஆன ஆண் என்று கொண்டதாலே திருமாலுக்குத் தனியொரு சமயம் உரு வானது. உமையவள்தான் திருமாலாகப் போற்றப்படுகிறாள் என்று மறை மலையடிகள் குறிப்பிடுவது எண்ணிப் பார்க்கத் தக்கது. சிவன், சக்தி, திருமால், குமரன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் ஆகிய எழுவரும் சிவனின் உடம்பிலிருந்து தோன்றியவர்கள். இவர் களைச் சிவக் குடும்பமாகக் குறிப்பிடுவர். சிவக்குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவைதாம் அறுவகைச் சமயங்கள்.


    "அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு"


    என்னும் பழமொழியை நோக்க, ஒரே கடவுட் கொள்கைதான் பழந்தமிழர் அல்லது திராவிடர் கொள்கை என்பது தெளிவாகிறது. இது பின்னர் அறுவகைச் சமயங்களாகத் தனித்தனியாகப் பிரிந்து, தனித்தனியே வளரலாயின. எனினும் ஒவ்வொரு சமயத்திலும் மூவொருமைக் கோட்பாடு மையமாகத் திகழ்வதை அதனதன் இறையியற் கொள்கை விளக்குகிறது.


    வைணவம் கூறும் "மூர்த்திபேதங்கள்", "கிறித்தவம் கூறும் மூவொரு கடவுளை விளக்குகின்றன. மூர்த்தி பேதங்களைத் “திருக்கோலங்கள்" எனத் தமிழில் அழைப்பர். பரசொரூபம், வியூக சொரூபம், விபவ சொரூபம், அர்ச்சாவதார சொரூபம், அந்தர்யாமி சொரூபம் என ஐந்து திருக்கோலங்களை உள்ளடக்கிய திருக்கோலங்கள் ஒவ்வொன்றுக்கும் இறையியல் விளக்கங்கள் கூறப்படுகின்றன. இவற்றைக் கீழ்க்காணுமாறு பகுத்து.

    கிறித்தவ, மூவொருமைக் கோட்பாட்டுடன் விளக்கிக் காட்டுவர்.




    கடவுள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் உள்ளவர் என்பதைப் பர சொரூபம் விளக்குகிறது. விபவ சொரூபம் என்பது அவதாரத்தை விளக்குகிறது. இது "இறைமைந்தன்" என்னும் கிறித்தவக் கோட்பாட்டை விளக்குகிறது. வியூகம் என்பதற்கு வெளிப்பட்ட கோலம் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல், மீட்பு ஆகிய வியூகக் கோட்பாட்டிற்கு இறையியற் கொள்கையாக விளக்கமளிக்கப்பட்டாலும், விருசிணி குடும்பத்தில் பிறந்த வாசுதேவன், கண்ணன், பிரதியும்நன், அநிருத்தன் முதலியோரை (வாசுதேவனின் குடும்பத்தினர்) அவதாரம் என்னும் கடவுள் நிலைக்கு உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாகும் இது. இந்தக் கொள்கை வழிதான் வீரர்களும் அரசர்களும் கடவுளின் அவதாரங்களாக உயர்த்தப்பட்டார்கள். அர்ச்சாவதாரம் என்பது அவதாரமாக வந்த கடவுளை வழிபடுவதற்காக அமைக்கப்பட்ட உருவ வழிபாட்டுக்குரிய கோலமாகும். உருவத்தில் வந்த கடவுளுக்கு உருவத்தை அமைத்துப் பூசிப்பதற்குப் பயன்படும் கோலமே இதுவாகும். எனவே, விபவம், வியூகம், அர்ச்சை ஆகிய மூன்றும் அவதாரமாக வந்த கோலத்தை விளக்குவதால், கிறித்தவத்தின் மகனாம் கடவுளை இவை வெளிப்படுத்துகின்றன. "அந்தர்யாமி" என்பதற்கு உள்ளுறைவோன் (Inmanent God) என்று பொருள். கடவுள் எம் உள்ளத்தில் உறைகிறார்; எம் இதயக் கோயிலே கடவுள் உறையும் உண்மையான கோயில் என்பதை விளக்குவதே இத்திருகோலம் ஆகும்.


    கைகளால் கட்டப்பட்ட ஆலயத்திலும் மேலாக, மக்கள் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு கடவுள் உறைகிறார் என்பதே தூய ஆவியார் (Holy Spirit) பற்றிய கிறித்தவக் கோட்பாடு ஆகும்.


    1கொரி.3:16-17; 2கொரி. 6:16 போன்ற பகுதிகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. இதனைக் கீதை, "சேத்ரம்", “சேத்ரக்ஞன்” என்னும் இரு பெயர்களால் குறிப்பிடுகிறது. சேத்ரம் என்பது கோயில்; சேத்ரக்ஞன் என்பது கோயிலில் வாழும் கடவுள். எனவே, உள்ளமாகிய கோயிலைத் தூய்மையாகப் பேண வேண்டுவதன் இன்றியமையாமை வைணவத்தில் சிறப்பிக்கப்படுகிறது.


    இரு வினைகள்


    கிறித்தவம், சைவம், வைணவம் போன்ற திராவிட சமயங்களில் இருவினைகள் விதந்து பேசப்படுகின்றன. இருவினைகள் என்றால் சாதாரணமாக நல்வினை, தீவினை என்று பொருள் விளக்கம் தரப்படுகிறது. ஒருவர் செய்கின்ற நல்வினைகள், தீவினைகள் முதலியவற்றை, "இரு வினைகள் என்னும் தொடர் குறிக்கவில்லை என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. ஏனெனில்,


    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு -திருக்குறள்,5


    என்னும் குறளில் "இருள்சேர் இருவினை" என்னும் தொடர் திருவள்ளுவரால் ஆளப்படுகிறது. இருளில் சேர்க்கின்ற இருவினைகள் என்பது இதன் பொருள். நல்வினை, தீவினை எனப் பொருள் கொண்டால், தீவினை ஒருவரை இருளில் (நரகில்) சேர்க்கும் என்பதை ஒப்புக் கொள்ளலாம், ஆனால் நல்வினை எப்படி ஒருவரை நரகில் சேர்க்க முடியும்? எனவே "பிறவிப் பெருங்கடல்” (குறள்) என்பதையும் "பிறவாழி" (குறள் 8) என்பதையும் இருவினைகள் குறிக்கின்றன என்று ஆய்ஞர் எடுத்துக் காட்டியுள்ளனர். அஃதாவது, பிறவியிலேயே ஒருவரைத் தொடர்ந்து வரும் தீமையும், தாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல் வழித் தீமையும் ஆகிய இவையே இருவினைகள் என்று சமய இலக்கியங்களிலும் மறை நூல்களிலும் குறிக்கப்படுகின்றன. வைணவமும் இவற்றை விளக்குகிறது.


    நம்மாழ்வார் தம் திருவாய் மொழியில்,

    "பிறவித் துயரற ஞானத்துள் நின்று"

    "தொல்வினை தீர லாரும்"

    நாலாயிரம், 2148

    நாலாயிரம், 2457

    என்று “பிறவிப் பிணி”, “தொல்வினை” போன்ற தொடர்களைக் குறிப்பிடுகிறார். இவை இரண்டுமே ஒரே பொருளன. மேலும் அவரே, "சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து

    என்றும்

    நாலாயிரம், 2135


    "பெருமையுடைய பிரானார் - இருமை வினைகடி வாரே"

    -நாலாயிரம், 2145


    என்றும் பாடுவன நோக்கற்பாலன. இங்கு அவர் "இருவல் வினைகள்”, “இருமை வினை" என்னும் பெயர்களை ஆளுகை செய்தார்.


    பிறவிப் பிணி, தொல்வினை என்பன சைவ சமயத்தில் பெருவழக்கில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள். பிறவியிலேயே ஒருவனைத் தொடர்ந்து பிணித்துவரும் பாவமாகிய வினை ஆகும். கிறித்தவம் இதனை "ஆதிப்பழி", "ஆதம் பாவம்" என்னும் பெயர்களால் குறிப்பிடுகிறது. கருவிலேயே ஆதிப்பழி ஒருவனைப் பற்றிக் கொள்வதால் அது "கருமாசு" என்றும் பிறவிதோறும் தொடர்வதால் "பிறவிப் பிணி" என்றும் சுட்டப்படுகின்றன. பிறவி என்பது பிறவிச் சுழற்றி அன்று. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பாவம் என்பது பொருள். இப்பாவம் உலக மக்கள், இறந்தோர், உயிரோடிருப்போர் அனைவரையும் பற்றியுள்ளது. இவர் தம் எண்ணிக்கை, கடல் போல் பெரியது. எனவே திருவள்ளுவர் இதனை பிறவிப் பெருங்கடல் என்று குறிப்பிடுகிறார். "மற்றவினை" என்பது ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனை, வார்த்தை, செயல் முதலியவற்றால் செய்கின்ற பாவங்கள். இவற்றிலிருந்து விடுபடுவதற்கு இறைவன் துணை புரிகிறார்.


    மாதவம்


    பிறவிப் பிணியிலிருந்து ஒருவரால் தம்மை விடுவித்துக் கொள்ள இயலாது. எனவே, கடவுளே இவ்வுலகில் பிறந்து. மாந்தனை மீட்டார் என்பதுதான் அவதாரக் கோட்பாட்டின் அடிப்படை.


    மாந்தவினத்தை மீட்பதற்காகக் கடவுள் தம்மையே பலியாகக் கொடுத்தார் என்று கிறித்தவம் கூறுகிறது. பாவத்திற்குக் கழுவாயாகக் கொடுக்கப்படுவதே பலி. பலி என்பதை வேள்வி என்றும் கூறுவர். வள்ளுவம் இதனைத் தவம் என்றும் குறிப்பிடுகிறது.


    “தன்னுயிர் தாறைப் பெறுதல்" -திருக்குறள், 260 சைவ சித்தாந்தம்

    "தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த"

    -சிவஞானபோதம்.8


    என்று குறிப்பிடுகிறது. வடமொழியில் இது "யக்ஞம்” என்னும்

    சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இருள்சேர்

    வினைகளினின்றும் மாந்தவினத்தை உய்வித்து, நீடுவாழ்வினை

    (நித்திய ஜீவன்) அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான்

    அவதாரமாக வந்த கடவுள், தம்மை வேள்விப் பொருளாகக்

    கையளித்தார் என்பதைக் கிறித்தவம், சைவம் ஆகிய சமயங்கள்

    விளக்கிக் காட்டுவதைப் போன்று வைணவ சமயமும் விளக்கி

    காட்டுகிறது.

    திருமழிசையாழ்வார்,


    "வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி ஆயனான மாயமென்ன மாயமே-நாலாயிரம், 1786 என்று பாடும் பாடலடிகள் மேற்குறித்த கருத்துக்கு அரண் செய்கின்றன.


    மேலும் திருமழிசையாழ்வார்.


    "நீயே தவத்தேவ தேவனும்" நாலாயிரம், 3503


    என்று விதந்து பாடுவது நோக்கத்தக்கது. எனவே, திருமாலுக்கு மாதவன் என்றும் பெயர் கொடுக்கப் பட்டுள்ளது. தீவினையாகிய பற்றினையறுக்க இறைவன் மேற்கொண்ட தவமும் ஆழ்வார் பாடல்களில் இடம் பெறுகிறது. திருப்பாணாழ்வார் இதனைக் கீழ்க் காணுமாறு பாடுவது நோக்கத்தக்கது.


    "பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன் வாரமாக்கி வைத்தான் வைத்தன்றி யென்னுள் புகுந்தான் கோர மாதவம் செய்தனன் கொ லறியேன் அரங்கத் தம்மான்திரு ஆர மார்வது அன்றோ

    அடியேனை யாட்கொண்டதே" -நாலாயிரம், 913


    இப்பாசுரத்தில் சுட்டப்படும் கோர மாதவம் இயேசு பெருமானின் சிலுவைத் தவத்தைக் குறிப்பிடுவதாகக்

    கொள்ளலாம்.


    சாவின் மேல் வெற்றி

    இறைவன் சாவின் மேல் வெற்றி கொண்டதைப் பூதகி என்னும் பேய்ச்சியின் நஞ்சு தடவிய முலைப் பாலுண்டு அவளைக் கொன்ற நிகழ்ச்சியை ஆழ்வார்கள் தம் பாடல்களுள் குறித்துச் சென்றுள்ளனர். இதனைக் கீழ்க்காணும் அடிகள் புலப்படுத்துகின்றன.

    "பேய்முலை நஞ்சுண்டு” -நாலாயிரம், 479


    *பேயைப் பிணம்படப் பாலுண்ட பிரான்"

    -நாலாயிரம், 701


    "முன் வஞ்சமகளைச் சாவப் பாலுண்டு"

    -நாலாயிரம், 2696


    "வன்பேய் முலையுண்டதோர் வாயுடையன்"

    -நாலாயிரம், 272


    அவதாரமாய் வந்த இறைவனை அழிப்பதற்காக வந்த பேயை வெற்றிக்கொண்ட செய்தியையே மேற்குறித்த அடிகள் விளக்குகின்றன. அதனால்தான் நம்மாழ்வார்.


    ''வினையேன் வினைதீர் மருந்தானாய்"

    -நாலாயிரம் 2131


    என்று பாடுகிறார். மாந்த குலத்தைப் பற்றிய பழவினையை நீக்குகின்ற மருந்தாகவே இறைவன் விளங்குகிறான்.


    நீடு வாழ்வு


    மாந்த இனத்தைக் கௌவிய பாவமாகிய தீவினைகளைக் களைந்த இறைவன் இவ்வினத்திற்குச் சாவாமையாகிய நீடுவாழ்வை அருளிச் செய்கிறான் என்பதை வைணவம் தெளிவுபடுத்துகிறது. நீடுவாழ்வினை "அமிர்தத்துவம்” என்று சமசுகிருதம் குறிப்பிடுகிறது. அமிழ்தம் என்னும் தமிழ்ச் சொல்லே அமிர்தம் என்று அம்மொழியில் சுட்டப்படுகிறது. அமிழ்தம் என்பதற்குச் சாவாமை தரும் மருந்து என்பது பொருள். இதனைத் திருவள்ளுவர் "நீடுவாழ்வு" (6) என்றும் தொடரால் குறிப்பிடுகிறார். இதோடு தொடர்புறுத்திப் பேசப்படுவனவே மோட்சம், துறக்கம், வீடுபேறு என்றும் பெயர்கள்.

    நம்மாழ்வார்.


    "சார்ந்த இருவல் வினைகளும்

    சரித்து மாயப் பற்றறுத்து

    தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி, வீடு திருத்துவான்"

    -நாலாயிரம், 2135


    என்றும் அடிகளில் வீடு பேற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். வீடு பேற்றுக்கு இரு வல்வினைகளும் அறுக்கப்பட வேண்டும் என்னும் குறிப்பு மேலே கூறப்படுகிறது.

    அவ்வாறே.

    "அமுதம் அமரர்கட்கீந்த நிமிர்சுடராழி நெடுமாலே"

    -நாலாயிரம், 2142


    என்னும் தொடரிலும் குறிக்கப்படுகிறது. இதனை நம்மாழ்வார்.

    "அற்றது பற்றெனில் உற்றது வீடு"

    -நாலாயிரம், 2097


    என்று குறிப்பிடுவது நோக்கற்பாலது. இறைவனோடு சேர்ந்து இன்புற்றிருக்கும் நிலையே அமிர்த்தத்துவம் எனப்படும் துறக்கவின்பமாகும். இவ்வின்பத்தை மனுக்குலம் அனைத்தும் பெற வேண்டும் என்பதே வைணவ சமயத்தின் குறிக்கோளாகும். இதனை மக்கள் அனைவரும் பெற்று உய்வு பெறுவதற்கு வகுக்கப்படட நெறியே "பிரபக்தி" நெறியாகும்.


    பிரபத்தி


    தனது முயற்சியால் எதுவும் நடைபெறுவதில்லை. எல்லாம் அவன் செயலே என்று கடவுளின் அருளையே நினைத்து எதிர்பார்த்திருப்பதைப் பிரபத்தி நெறி என்பர். இதனை, "மர்க்கட நியாயம்". "மார்ஜர நியாயம் என்னும் இரண்டு உவமைகளால் விளக்குவர். தாய்க்குரங்கின் வயிற்றினை அதன் குட்டி பற்றிக் கொள்கிறது. எனவே, தாய்க்குரங்கு செல்லுமிடமெல்லாம் குட்டியும் செல்லும். இது மர்க்கட நியாயம். பூனையானது தனது குட்டியைத் தானே கௌவித் தாய் விரும்புமிடத்திற்குக் குட்டியைத் தூக்கிச் செல்கிறது. இது "மார்ஜர நியாயம்". தன்னை முற்றிலுமாகக் கடவுளிடத்தில் ஒப்புக் கொடுத்து விடுவதே மேற்கூறிய உவமைகளின் அடிப்படை உண்மை. இதனைச் "சரணாகதி” என்று குறிப்பிடுவர். பூனைக் குட்டி போன்று தன்னைக் கடவுளிடத்தில் முழுமையாக ஒப்புக் கொடுத்தாலும், குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக் கொள்வது போன்று கடவுளைப் பற்றுவதை ஆன்மா விட்டு விடக் கூடாது என்பது உட்பொருள். பிரபத்தியின் உட்பொருள் இறையருள் ஆகும். இதனைக் கிறித்தவம் பின்வருமாறு விளக்குகிறது.


    "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்”

    யோ.6:44


    இறைவனது அருள் கிட்டுவோர் மட்டுமே உய்வு பெற முடியும் என்பது கிறித்தவத்தின் அடிப்படையாக உள்ளது. கிறித்தவத் தின் கிளையான வைணவமும் இதனைத் தெளிவுபடுத்துகிறது. இதனைப் பெறுவதற்கு. ஒருவர் தம்மையே கடவுளிடத்தில் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். கடவுளுக்கும் சாத்தானுக்கும் ஒருவரால் பணியாற்ற முடியாது. சாத்தானின் பிடியிலுள்ள உலகப் பற்றினால் வரும் பாவங்களைக் கைவிட்டு, கடவுள் நம் மூலம் செயலாற்ற நம்மையே கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.


    இதனைப் பவுலடிகள்,

    "இனி வாழ்பவன் நான் அல்லன்; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்”

    -கலா. 2:20


    என்று எழுதுவதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.

    கடவுள் தமது மக்களின் மேல் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பே அவரது அவதாரத்திற்கு வழி வகுத்தது. மாந்தனாக உலகில் பிறந்து, மக்களுக்காகத் தம் போதனைகளால் நல்வழி காட்டினார். அது மட்டுமல்லாமல் தம்மையே பலியாகக் கொடுத்து மீட்பினை அருளினார். இஃது அவர் அருளிச் செய்த ஈவாகும். அதனைச் சொந்தமாக்கிக் கொள்பவர் அனைவருக்கும் நீடுவாழ்வு உண்டு என்பதை விளக்குவதே வைணவம். கிறித்தவத்திற்கும் வைணவத்திற்கும் இவற்றுள் வேறுபாடு எதுவுமில்லை என்பது தேற்றம்.




    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.