6.திராவிட ஆன்மீகத்தில் சமற்கிருத மொழி
பொதுமக்கள் எவராலும் பேசப்படாத மொழி சமற்கிருத மொழி, இன்று கிடைக்கப்பெறும் வேதங்கள், உபநிடதங்கள். பிற வேதாந்த நூல்கள், இன்ன பிறவும் சமற்கிருத மொழியில் உள்ளன. சமற்கிருத மொழி எவருடைய தாய் மொழியாகவும் இல்லாத காரணத்தால் இன்று அது வழக்கிழந்த மொழியாக உள்ளது. திராவிடரின் ஆன்மீக நூல்கள் சமற்கிருத மொழியில் இயற்றப்பட்ட மைக்கு ஒரு தலைமையாய காரணம் இருத்தல் வேண்டும்.
அறிஞர் இயற்றிய தொடர்பு மொழி
அறிஞர்களின் மொழியாகச் சமற்கிருதம் கருதப்படு கிறது. நாம் பேசும் மொழி வழங்கும் பகுதியைக் கடந்துள்ள பகுதிகளில் நமது கருத்துகளைப் பரப்ப வேண்டுமெனில் ஆங்கிலத்தின் மூலம் தான் இன்று அவற்றைப் பரப்ப இயலும். அதுபோலவே, அக்காலத்தில் தமது கருத்துகளை இந்திய மண்ணில் பரப்புவதற்காகத் திராவிட அறிஞர்களால் உருவாக்கப்பட்ட தொடர்பு மொழி தான் சமற்கிருத மொழி. திராவிட அறிஞர்களால் இம்மொழி உருவாக்கப்பட்டதென இன்றைய ஆய்வுகள் தெளிவு படுத்துகின்றன.
வியாசர் தமது எழுத்துகளனைத்தையும் சமற்கிருதத்தில் எழுதினார். ஆதி கவி எனப் போற்றப்படும் வால்மீகி ஒரு திராவிடர், அவர் இராமாயணத்தைச் சமற்கிருதத்தில் எழுதினார். மகாகவி காளிதாசர் ஒரு திராவிடர். ஏராளமான காப்பியங்களை அவர் சமற்கிருதத்தில் எழுதினார். இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, சமற்கிருதத்தில் பெருமளவு இலக்கியங்களைப் படைத்தவர்கள் எல்லாரும் திராவிட அறிஞர்களாகத் திகழ்வது விளங்குகிறது. சமற்கிருத மொழியும் திராவிட நாடாகிய தமிழகத்தில், காஞ்சிபுரத்தில் உருவாகியிருக்கலாம் என்னும் கருத்தும் அறிஞர்களிடையே நிலவுகிறது. இது மேலும் ஆராயத் தக்கது.
அசோகரது கல்வெட்டில் சமற்கிருதம் இல்லை
'சமற்கிருத மொழியின் சிறப்பு' - 'The significance of Sanskrit" என்னும் கட்டுரையிலுள்ள கருத்துகள் கீழே தரப்படுகின்றன.
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசர் அசோகருடைய கல்வெட்டுச் சான்றுகளே புழக்கத் திலிருந்த இந்திய மொழிகள் பற்றிய பழைய ஆதாரமாகத் திகழ்கின்றன. அசோகர் தமது கருத்துகளை ஒருவகைப் பிராகிருத மொழியில் செதுக்கினார். ஆப்கானிஸ்தானிலிருந்த மக்களுக்குத் தமது செய்தியைக் கிரேக்கம், அரமேயம் ஆகிய மொழிகளில் எழுதுவித்தார். அவற்றில் ஒன்று கலிங்கக் கல்வெட்டின் கிரேக்க மொழியாக்கமாகும். கிரேக்க இலக்கியத்திற்கும் செம்மொழி கிரேக்கத்திற்கும் எவ்வகையிலும் குறையாத கிரேக்க மொழியாக இதுவிளங்குகிறது. அசோகரது கல்வெட்டுகளில் எவ்விடத்திலும் சமற்கிருத மொழி பயன்படுத்தப்படவே இல்லை. சமற்கிருத மொழி அவர் காலத்தில் வழக்கிலில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அங்ஙனம் வழக்கத்தி லிருந்திருந்தால் சமற்கிருத மொழி அவர் கட்வெட்டுகளில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
கிறித்துவின் காலத்திற்கு முன்னர் வெளிநாட்டவர் பலர் இந்தியாவின் மீது படையெடுத்தனர். இதன் மூலம் அவர்தம் மொழிகளும் இந்தியாவில் கலக்கத் தொடங்கின. இவ்வகை மொழிக் கலவை, பிராகித மொழியாகக் குறிப்பிடப்படுகிறது. பிராமி எழுத்துகள் கொண்டு கி.பி. 150 இல் எழுதப்பட்ட செம் மொழி சமற்கிருதக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று கிடைக்கும் செம்மொழி சமற்கிருதக் கல்வெட்டுகளில் மிகப் பழமையானது என இது கருதப்படுகிறது. சந்திரகுப்த மௌரியர் கட்டிய அணைக் கட்டினைப் பழுது செய்தது தொடர்பான புகழ்ப்பாவாக இச்சமற்கிருதக் கல்வெட்டுத் திகழ்கிறது. அசோகரது 14 கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ள அதே பாறையில உருத்திரதமனா என்பரால் எழுதப்பட்ட கல்வெட்டு இது ஆகும். கத்தியவாரிலுள்ள கிர்னாரில் இது உள்ளது. தமக்கு ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அசோகரது கல்வெட்டுகளெல்லாம் பிராகிருதத்தில் செதுக்கப்
பட்டிருக்கும்போது, உருத்திரதமனா என்பவர் செம்மொழி சமற்கிருதத்தில் செதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாணினியின் மாபாடியம்
சமற்கிருத மொழியின் காலத்தைக் கணிப்பிடுவதில் பாணினியின்
'வியாக்காரண மாபாடியம் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. பாணினியைக் குறை கூறுபவரும்.
பாணினியின் சூத்திரங்களில் சிலவற்றை மறுத்துரைத்த வருமான காத்தியாயனா என்பவரின் கூற்றுக்கு மறுப்பாகவும் தமது சூத்திரங்களுக்கு அரணாகவும் இம்மாபாடியம் விளங்குகிறது. என்பர். பாணினியின் காலத்தைக் கி.மு. 2 முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்டதாகக் கணக்கிடுவார். ஆனால் இவ்வாறு குறிக்கப்படும் பாணினியின் காலம் தவறானது என்றும் அது ஒரு யூகத்தின் அடிப்படையிலானதேயன்றி உண்மையன்று என்றும் எஸ்.டி.ஜோசி, ஜே.ஏ.எப். உரூட் பெர்கன் போன்ற ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வரலாற்றில் கொண்ட போரசு
இந்திய வரலாற்றில் கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம் மிகவும் குறிப்பிடத்தக்க காலம் என வரலாற்றாசிரியர் குறிப்பிடு கின்றனர். வடமேற்குப் பகுதியிலிருந்து கிரேக்கர்களை அகற்றிய மூன்று குழுவினரில் சகர்கள் (சித்தியர்) ஒரு குழுவினர் ஆவர். பஹலவர் (பார்த்தியர்), குசாணர் (இயூ-.சி) ஆகியோர் மற்றக் குழுவினர். வடமேற்குப் பகுதியில் சிறுசிறு கிரேக்க அரசுகள் இருந்தன. கி.மு. முதலாம் நூற்றாணடின் இடைக்காலத்தில் நேர்ந்த சித்தியக் குடியினரின் எழுச்சியால் கிரேக்க அரசுகள் எளிதில் வீழ்ந்தன. பின்னர் உருவான சகர்களின் இந்தோ-சித்தியப் பேரரசு, இந்தோ பார்த்தியரால் முறியடிக்கப்பட்டன. இவர்களது நாணயங்களில் கொண்ட போரஸ், ஆர்த்தருஸ் போன்ற பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன. கொண்ட போரசின் காலத்தினை 103ஆம் ஆண்டு தக்-இ-பாஹி (Takht-i-Bahi) எழுத்துப் பொறிப்புகள் உறுதி செய்கின்றன. கொண்ட போரசின் 26ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தை இது சுட்டுகிறது. இவரது காலத்தை 'ஆசிசி'
ஆண்டுப்படி (Era of Azes கிமு. 57 கணக்கிட்டால் கி.பி. 46ஆம் ஆண்டோடு பொருந்தி வருகிறது. கொண்ட போரசு ஆட்சியேற்ற காலம் கி.பி. 20ஆம் ஆண்டு ஆகும்.
இயேசு பெருமான் சிலுவையிலறையுண்டதைத் தொடர்ந்து, அதாவது, கி.பி, 30ஆம் ஆண்டிலேயே தோமா இந்தியா நோக்கிப் புறப்பட்டு விட்டாதாக மரபு வழிச் செய்தி கூறுகிறது. 'தோமாவின் செயல்கள்' (Acts of Thomas) என்னும் நூலில் குறிக்கப்படும் கொண்ட போரசின் பெயர் வரலாற்று ஒழுங்கின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆகும். எனவே, கொண்ட போரசின் ஆட்சிக்காலத்தில் தோமாவின் வழியாக இந்தியாவில் கிறித்தவம் காலூன்றத் தொடங்கிவிட்டது என்பது உறுதியாகிறது.
குப்தர், பஹலவர்-சமற்கிருதம்
இந்தியாவின் வடமேற்கிலிருந்த சகர்கள்
இரானியர்களோடிருந்த உறவை முரித்துக் கொண்டார்கள். அவர்கள் பஹலவர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தார்கள். பஹலவர்களின் சார்பிலிருந்த சகர்களின் இரு மன்னராட்சி மரபினர்க்கும் போதுமான அளவிற்கு உரிமைகள் இருந்தன. என்றாலும், மொழி, பண்பாடு முதலியவற்றைப் பொறுத்தமட்டில் பஹல்வர்களையே பின்பற்றினர்.
அலகபாத்திலுள்ள அசோகரது கல்தூணில் சமுத்திர குப்தரால் (கி.பி.330-380) பொறிக்கப்பட்டுள்ள சமற்கிருதக் கல்வெட்டு பிற்காலத்துப் பிராமி எழுத்துகளால் ஆனது. அது வெட்டப்பட்ட காலம் குறிக்கப்படவில்லை. அரசரது வீரதீரச் செயல்களைக் குறித்து அவரது படைத்தலைவர் அரிசேனரால் விவரமாகப் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டு கி.பி. செதுக்கப்பட்டிருக்கலாம்.
இரண்டாம் சந்திர குப்தர் (கி.பி. 380-415) சகர்களின் ஆட்சிப் பகுதிகளைத் தமக்குத் கீழ்ப்படுத்திய பிறகு, பஹலவா சகர் பேரரசு குப்தர்களின் காலத்தில் சிறப்புடன் திகழ்ந்தது. சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட காஞ்சி மன்னர் விஷ்ணு கோபனைப் (பல்லவர் கி.பி.4-9ஆம் நூற்றாண்டு) பற்றியும் பின்னர் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் அவர் விடுதலையானது பற்றியும், மேற்படி குப்தர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. தென்னகத்துப் போக்கு ஆசிரியர்களிடையே இருந்தாலும் முடிந்த முடிபாக எதுவும் கூற இயலவில்லை. ஆனால், குப்தர்களின் படையெடுப்பால் குப்தரின் மொழியும் பண்படும் தென்புலத்திலும் பரவலாயிற்று.
பல்லவர்களையும் வடபுலத்துப் பஹலவர்களையும் இணைத்துக் காட்டும் கிரந்தமும் சமற்கிருதமும்
சென்னையைச் சார்ந்துள்ள பல்லவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கல்கோயில்கள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றிலும் செப்பேடுகளிலும், தொடக்கக் காலக் கிரந்த எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சமற்கிருத ஆவணங்கள் உள்ளன. கிரந்த எழுத்துமுறை, திராவிட மொழி வரிவடிவத்தைச் சார்ந்தது. சமற்கிருத மொழி யை எழுதுவதற்காகக் கிபி. 5ஆம் நூற்றாண்டு வாக்கில் உரு வான வரிவடிவ எழுத்து முறையே கிரந்தம் ஆகும். கி.பி. 5ஆம்நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கல்வெட்டுகளில் பிற கிளை மொழிகளின் இடத்தைச் சமற்கிருதம் பிடித்துக் கொண்டது.
பிராமி, கரோஷ்டி, நாகரி, எழுத்து முறை
இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்து முறை ஆய்வின் அடிப்படையில் பார்த்தால், சமற்கிருத எழுத்து முறை. இன்னும்
பிற்பட்ட காலத்தைச் சார்ந்ததாகத் தெரிகிறது. சிந்து வெளி நாகரிகம் 1920 இல் கண்டுபிடிக்கப்பட்டது வரையுள்ள காலக் கட்டத்தில், பழம் பெரு இந்தியாவில் வழக்கிலிருந்த வரிவடிவ எழுத்து முறைகளில் பிராமியும் கரோஷ்டியும் குறிப்பிடத்தக்கவை. செமித்தியரின் தாக்குரவால் கி.மு.7ஆம் நூற்றாண்டளவில் பிராமி உருவாகியிருக்கலாம் என்னும் கருதுகோள் ஒன்று உண்டு.
கரோஷ்டி எழுத்து முறை கி.பி. 5ஆம் நூற்றாண்டில், பாரசீகரின் ஆட்சிக்குட்பட்டிருந்த இந்திய வடமேற்குப் பகுதிகளில் வழக்கிலிருந்தது. இயேசு பெருமான் பேசிய மொழி அரமேயம் ஆகும். அரமேய மொழியிலிருந்து நேரடியாக உருவானதே கரோஷ்டி ஆகும். இது வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதப்பட்டது.
பிராமி எழுத்து முறையிலிருந்து குப்தரின் எழுத்து முறை உருவானது.கி.பி. 4முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டுகளில் இம்முறை வழக்கத்திற்கு வந்தது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் கீழைக் குப்தர் எழுத்து முறையின் தன்மைடைய அடியொற்றி 'சித்தமற்கா' (Siddhamatrka) வரிவடிவ எழுத்து முறை உருவானது. இதிலிருந்து கி.பி. 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் நாகரி (Nagari) எழுத்து முறை தோன்றியது. தற்போது இந்த வரிவடிவ எழுத்து முறையே சமற்கிருதம் எழுதுவதற்குப் பயன்படுகிறது.
சமற்கிருதத்தை எழுதுவதற்குப் பயன்பட்ட கிரந்த எழுத்து முறை மாற்றப்பட்டு நாகரி எழுத்து முறை வழக்கத்திற்கு வருவதற்கு அரசியல் ஒரு காரணமாகும்.
பிராகிருதம், சமற்கிருதம்
மகாயான பௌத்தி இலக்கியங்கள் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சமற்கிருதத்தில் இயற்றப்பட்டன. இக்காலக் கட்டத்திலிருந்த சமற்கிருத மொழிக்கும் செம்மொழி சமற்கிருத மொழிக்கும் வேறுபாடு உண்டு. கி.பி. 4முதல் கி.பி. 8 ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் குப்தர் மற்றும் பல்லவர் கால ஆட்சிக் காலங்களில் உருவான சமற்கிருதம் செம்மை செய்யப்பட்ட மொழியாகும். எனவே இது செம்மொழி சமற்கிருதம் (Classical Sanskrit) என அறிஞரால் வழங்கப்படுகிறது. 'சமஸ்கிருதம்' என்பதற்குச் 'செம்மை செய்யப்பட்டது' என்று பொருள்.
சமற்கிருத மொழி உருவாக்கப்பட்டதற்கு முன்பிருந்த மொழிகள் 'பிராகிருதம்' என வழங்கப்பட்டன. சமற்கிருத மொழியின் உருவாக்கத்திற்குப் பிற்பட்ட காலங்களில் தோன்றிய மொழிகளும் 'பிராகிருதம்' என்பதாகவே குறிக்கப் பட்டன. இவ்வேறுபாட்டை அறிய இயலாவிடின் குழப்பமே ஏற்படும். வரலாற்றாசிரியரிடையேயும் இக்குழப்பம் இருந்த காரணத்தினால், வேதங்களின் காலத்தைக் கிறித்துவுக்குப் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகக் குறித்து வைத்துள்ளனர். இங்ஙனம் குறித்து வைத்தோரில் ஐரோப்பிய வெள்ளை ஆரியரும் இந்திய ஆரியரும் அடங்குவர்.
சமற்கிருதம் என்பது சமயக் கருத்துக்களைப் பரப்புவதற்காகப் பல்வேறு மொழிகளின் கலப்புறவால் உருவாக்கப்பட்டதொரு குறியீட்டு மொழியாகும். (Religious code language) என்பர். இதில் கிரேக்கம், இலத்தீன், திராவிடி (தமிழ்), பாலி, அர்த்தமாகதி, பாரசீகம், அரமேயம் ஆகிய மொழிக்கூறுகள் கலந்துள்ளன. இம்மொழிகளாலாகிய கலப்பு மொழியே சமற்கிருதம் ஆகும்.
தோமா நற்செய்தியின் பயன்கள்
இந்தியச் சமயங்களின் வரலாற்றில் கிறித்தவ ஆண்டின் தொடக்கக் காலத்தில் தோமா கொணர்ந்த இயேசு பெருமானின் நற்செய்தியின் பயனாகப் புதிய வளர்நிலை உருவாகத் தொடங்கியது. பழைய வழிபாடுகளிலும் சமயங்களிலும் இருந்து வந்த பலியை மையமாகக் கொண்டிருந்த கோட்பாடுகள் தளர்வுற்று, கடவுளின் அவதாரம், பலி நிறைவேற்றம். கட்டுநிலை, சரணாகதி, விடுதலை, மீட்பு, முத்தி போன்ற கிறித்தவக் கோட்பாடுகள், புதிய அடிப்படைக் கோட்பாடுகளாக நிலை பெற்று வளரத் தொடங்கின. இதன் விளைவாகவே திராவிடரின் சமயமான அறுவகைச் சமயமும், திராவிடரின் மெய்ந்நூலான (Philosophy) வேதாந்தமும் முகிழ்ந்தன.
அறுவகைச் சமயங்கள் தமிழ் மொழியில் வளர்ச்சியுற்றதைப் போன்று வேதாந்த இலக்கியங்கள் சமற்கிருத மொழியில் வளர்நிலை பெற்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் தோன்றிய கிரந்த எழுத்துகள் சமற்கிருதத்தை எழுதுவதற்குப் பயன்பட்டன. ஆனால், கி.பி. 7ஆம் நூற்றாண்டுவாக்கில் நாகரி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டு ஒலியாக்கம் செய்யப்பட்டன.
இந்தியாவின் வடபுலத்தில் அடிக்கடி நேர்ந்த அந்நியரின் படையெடுப்பினால், அங்கிருந்த திராவிடர் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டனர். அதோடு திராவிடர்களின் நூல்கள் பல அழிக்கப்பட்டன. எஞ்சிய நூல்கள் சிதைப்புகட்கும், திரிபுகட்கும் ஆளாயின.
இன்று இந்து சமயத்தின் நூல்களும் திராவிட மெய்ந் நூலியலும் சமற்கிருதத்தில் கிடைக்கின்றன. வரலாற்றடிப் படையில் கல்வெட்டுகளின் ஆதாரத்தைத் துணையாகக் கொண்டு பார்க்குமிடத்து, இவை கி.பி. 2ஆம் நூற்றாண் டிற்குப் பிற்பட்ட காலங்களிலேயே இயற்றப் பட்டன என்பது உறுதியாகிறது. மேற்குறித்த நூல்களனைத்திலும் கிறித்தவத்தின் தாக்கம் வேரோட்டமாக அமைந்துள்ளன. இதற்கு மூல காரணமாகத் தோமா முதன் முதலாக வடபுலத்திலிருந்த பஹலவர்களுக்கு ஆற்றிய நற்செய்திப் பணி அமைகிறது என்பதை அறிஞர் எடுத்துக் காட்டுகின்றனர்.
தொடக்கக் காலங்களில் கிரந்த எழுத்து முறையே, சமற்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்பட்டு வந்துள்ளது. வேதங்களையும் உபநிடதங்களையும் வேத வியாசரே தொகுத்துள்ளார். பிரமசூத்திரம், பகவத்கீதை, மகா பாரதம், பதிணெண் புராணங்களையும், வியாசரே, இயற்றியுள்ளார். வியாசர் ஒரு திராவிடர். 'வியாசர்' என்னும் கருத்துமுறை மரபும் திராவிட மரபாகும். எனவே, திராவிடராகிய வியாசர் கிரந்த எழுத்துக்களையே பயன்படுத்தியிருக்கலாம். கிரந்த எழுத்து முறை கி.பி. 5ஆம் நூற்றாண்டில்தான் உருவானது என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. எனவே, வேதங்கள் இக்காலத்திற்குப் பிறகே எழுதப்பட்டன என்பது பெறப்படுகிறது. எனவே, சமற்கிருத மொழியின் தோற்றமும், குப்தர்-பஹலவர் ஆட்சிக்கால ஆவணங்களும், தக்-இ-பாஹி (Takht-i-Bahi inscription) பொறிப்புகளும் தோமா இந்தியாவில் ஆற்றிய நற்செய்திப் பணியை வரலாற்றடிப்படையில் உறுதி செய்கின்றன. அவர் பணியின் பயனாகச் சமற்கித மொழியின் உருவாக்கமும் அறுவகைச் சமயங்களின் தோற்ற வளர்ச்சியும் வேதாந்தத்தின் வளர்நிலையும் அமைந்தன என்பது தெற்றென விளங்குகிறது.

