5.வேதமும் வேதாந்தமும்
வேதங்களுக்கும் இந்தியர்களாகிய திராவிடர்களுக்கும்
தொடர்பில்லை. வேதங்கள் தொடக்கத்திலிருந்தே
வாய்மொழியாகவே வழங்கி வந்தன. திராவிடரோடு
ஆரியர்களுக்குத் தொடர்பு ஏற்பட்ட பிறகே வேதங்கள்
உருவாயின
என்று அறிஞர் கூறுவர். வேதங்களில்
குறிப்பிடப்பெறும் நிகழ்வுகளில் பெரும்பாலானவை இந்திய
மண்ணில் நடைபெறவில்லை என்பர். வேதங்களை இயற்றிய
ஆசிரியரில் சிலர் திராவிடராயும் இருக்கின்றனர் என அறிஞர் சிலர்
எடுத்துக்காட்டுவர்.
வேதங்கள் நால் வேதங்கள் எனவும் சதுர் வேதங்கள் எனவும் வழங்கப்பெறும், அவை இருக்கு (ரிக்), யசூர், சாமம், அதர்வணம் என்பன. இருக்கு என்பதற்குச் செய்யுள் என்று பொருள். வேள்வி செய்வதற்குரிய யாக மந்திரங்களைத் தொகுத்துக் கூறுவது யசூர், வேள்வியின் போது பாடக் கூடிய இசையோடு கூடிய மந்திரங்கள் சாமம். இருக்கு வேதமே முதலில் இருந்ததாகக் கருதப்படும் மிகப் பழைய வேதம். அந்த ஒரு வேதமே பின்னர் மூன்று வேதங்களாகி, 'வேதத் திரயீ', அஃதாவது, மூவேதம் என்னும் வழக்கினைப் பெற்றது. அதன்பிறகு ஆறிலொரு பகுதி இருக்கு வேத மந்திரங்களைக் கொண்டதும், பெரும்பாலும் சாவிப்பு மந்திரங்களாலானதும் உரைநடை கலந்ததுமான அதர்வண வேதம் தோன்றியது. இதன்பிறகே. நான் மறை அல்லது 'சதுர்வேதம்' என்னும் வழக்கு உருவானது.
'வைதிகப் பண்பாடானது வெளிநாட்டைச் சார்ந்தது. அது கொஞ்சங் கொஞ்சமாக இந்தியச் சூழலுக்கேற்பத் தம்மை மாற்றம் செய்து கொண்டு, தமது வழிபாடு, அறக்கோட்பாடு, பொருளியல் அமைதி ஆகியன தற்போதுள்ள இந்தியரின் வாழ்வு, எண்ணம், சமூகம் ஆகியவற்றில் ஆழமாக ஊடுருவல் செய்துள்ளது. எனத் தி.பி. சிங்கல் என்னும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.
நால்வேதங்களிலுள்ள கருத்துக்கள்
ஆரியரின்
வழிபாட்டை வெளிப்படுத்துகின்றன. வைதிகம் என்பது வழிபாடே தவிர அது சமயமன்று. முழுமுதற் கடவுள் பற்றிய கோட்பாடு வேதங்களில் இல்லை. "வைதிக வழிபாடு என்பது இயற்கை வழிபாடு ஆகும். இதில் மாந்தன் என்பவன் 'விலங்குகளின் அரசன்' என்றும் 'விலங்குகளில் முதலாமவன் என்றும் கருதப்பட்டான். பேரண்டத்தின் இயற்கை ஆற்றல்களைக் கண்டு அவன் பெருவியப் பெய்தினான்", என்பர். பிருதுவி, வருணன், அக்கினி, சூரியன், வாயு போன்ற ஐம்பெரும் பூதங்களையும் தியசு, அதிதி, மருத்துகள், இந்திரன், மித்திரன், பரிசனியன், அசுவினியர் முதலான பிற தேவர்களையும் வழிபட்டுவந்தவரே ஆரியர் என்பதை வேதங்களில் காணலாம்.
சிவன், விஷ்ணு, சக்தி முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் முதலியோர் சிவக் குடும்பத்தைச் சேர்த்தோர். இவர்கள் திராவிடரின் கடவுட் பெயர்கள். இவர்களுக்கும் வைதிக நெறிக்கும் தொடர்பில்லை. இவர்களில் பிரமனைத் தவிர மற்ற ஆறு பேரும் அறுவகைச் சமயங்கள் ஒவ்வொன்றிற்கும் முழுமுதற் கடவுளாவர்.
சிவனைச் சூத்திரக் கடவுள் என்று ஆரியப் பிராமணர் குறிப்பிடுகின்றனர். இதனால்தான் மாணிக்கவாசகர்,
"தொன்னாடுடைய சிவனே போற்றி" என்று பாடுகிறார். சிவன் தென்னாட்டுக் கடவுள். 'உருத்திரன்' என்னும் பெயர் வேதங்களில் உள்ளது. இதற்குக் கலகக்காரன் என்று பொருள். இந்த உருத்திரனைச் சிவனோடு பிற்காலத்தில் இணைத்து, 'உருத்திர சிவன்' என அழைக்கத் தொடங்கினர். கலகக்காரனான உருத்திரனுக்கும் அன்பே வடிவான சிவனுக்கும் இடையிலான வேறுபாடு ஏராளம்!
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" என்று திருமூலர் பாடுகிறார். எனவே, சிவன் திராவிடக் கடவுளே தவிர, ஆரியக் கடவுள் அல்லர்.
இதுபோன்றே 'விஷ்ணு' என்பவரும் திராவிடக் கடவுள் ஆவார். 'விஷ்ணு' என்னும் பெயர் வேதங்களில் காணப்படுகிறது. ஆனால் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளான திருமாலை அது குறிக்கவில்லை. வேதங்களில் கூறப்படும் விஷ்ணு என்பதற்குச் சூரியன் என்று பொருள். 'விஷ்ணு மூன்றடியால் உலகை அளக்கிறார்' என வேதங்களில் இடம்பெறும் பகுதி, காலையில் சூரியன் உதிப்பதையும், நண்பகலில் சூரியன் உச்சிக்குச் செல்வதையும் மாலையில் சூரியன் மேல் திசையில் மறைவதையும் விளக்கிக் காட்டுவதாகும். விண்> விண்டு என்னும் தமிழ்ப் பெயர் வானுலகோடு தொடர்புடையது. விண் > விண்ணு> விஷ்ணு என்றாயிற்று. மற்றப்படி வேதத்தின் விஷ்ணுவுக்கும் தமிழ்க் கடவுளான விஷ்ணுவுக்கும் தொடர்பில்லை.
வேதச் சார்புடைய இலக்கியங்கள்
வேதச் சார்புடைய இலக்கியங்களை மூன்று வகைகளில் அடக்கலாம். அவை:
1. சம்கிதைகள்
2.பிராமணங்கள்
3. ஆரணியகங்கள்
ஆகியன. உபநிடதங்களையும் மேற்குறித்தவற்றோடு இணைத்துக் காட்டுவர். இது தவறு. ஏனெனில், உபநிடதங்கள் திராவிடரின் கருத்து முறை சார்ந்த இலக்கியங்கள் ஆகும். பின்னர் இது பற்றிக் காண்போம். இவை தவிர சூத்திர அமைப்பில் எழுதப் பெற்றவையாக, கல்ப சூத்திரம், சிரௌத சூத்திரம், கிருகிய சூத்திரம், தரும சூத்திரம் போல்வனவும் வைதிக இலக்கியங்கள் எனக் குறிக்கப்பெறுகின்றன.
வைதிக வழிபாட்டு முறை - 1 பலிக்கோட்பாடு
வைதிக வழிபாட்டு முறை பெரும்பாலும் இயற்கையை வழிபடும் முறையாகும். சிறு தெய்வங்கள், முன்னோர்கள், தலைமைத் தெய்வம் போன்ற பிற வழிபாடுகளையும் வேதங்களில் காண்கிறோம். வைதிக வழிபாடு பெரும்பாலும் பலி முறை வழிபாடு ஆகும். பலி செலுத்தி வழி முறையைச் சிந்து வெளி வழிபாடு, பழந்திராவிட வழிபாடு முதலியவற்றிலும் காண்கிறோம்.
விலங்குகளைப் பலியிட்டு வழிபட்டதோடு, பலியிடப்பட்ட விலங்குகளின் மாமிசத்தை ஆரியர்கள் உண்டு, சோம பானம், சுரா
பானம் முதலிய போதை தரும் பானங்களை மாந்திக் களித்திருந்த செய்தியை இருக்கு வேதம், மாபாரதம் போன்ற நூல்களின் வாயிலாக அறிகிறோம்.
வழிபாட்டு முறையில் விலங்குகளைப் பலியிடுவது ஒரு சடங்குமுறை. எனவே அச்சடங்கினை இயற்றுபவர் ஒருவர் தேவை. அதனைச் செய்தவர் 'புரோகிதர்' ஆவார். புரோகிதராயிருந்தவரே பிற்காலத்தில் 'பிராமணர்' என்னும் பெயரைப் பூண்டனர். பலியிட்டபோது அவர்கள் பின்பற்றிய முறைகள் சடங்குகள் என்னும் இடத்தைப் பெற்றன. சடங்கினை இயற்றியோர் தலைமை அல்லது சிறப்பு இடத்தை வகிக்கலாயினர். பலிச் சடங்குகளைக் கூறும் பகுதிக்குக் 'கர்ம காண்டம்' என்று பெயர். இது 'கர்ம மார்க்கம்' எனவும் வழங்கப்பட்டது.
பழைய ஏற்பாடும் ஆரிய வேதமும்
வேதம் என்னும் பெயர் 'வித் என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதென்பர். 'வித்' என்பதற்கு அறிவு என்று பொருள். எனவே, வேதம் என்றால் அது ஆரியருடைய வேதத்தைத்தான் குறிக்கிறது எனக் கொள்ள வேண்டுவதில்லை. கிறித்தவர்களும் தங்களின் மறைநூலை வேதம் என்றே வழங்குகின்றன. 'பரிசுத்த வேதாகமம்' என்பது இன்றும் வழக்கிலுள்ளது. கிறித்தவர்களை வேதக்காரர்கள் என்று அழைக்கும் மரபும் உள்ளது.
பழைய ஏற்பாட்டுச் சமயம், பலி செலுத்தி வழிபட்ட சமயம் ஆகும். முதல் மாந்தனாகிய ஆதாம் கடவுளின் கட்டளையை மீறியதால் உலகில் பாவமும் அதன் பயனாகச்
சாவும் வந்தன. இதனால் மாந்த இனமும் மண்ணுலகும் அதிலுள்ள அனைத்துமே கடவுளால் சபிக்கப்பட்டன.
முதல் மாந்தனது பாவத்திற்குக் கழுவாயாகக் கடவுளே பலியாவார் என்னும் கருத்து. தொடக்க குறிக்கப்படுகிறது. (ஆதி. 3:21). நூலில்
இவ்வுலகம் நோவா காலத்துப் பெருமழையால்
அழிவுற்றது; நோவாவும் அவன் குடும்பத்தினரும், தெரிவு செய்யப்பட்ட விலங்கினங்களும் காப்பாற்றப்பட்டன. எனவே, நன்றியறிதலின் அடையாளமாக நோவா எரிபலியாக விலங்குகள், பறவைகள் முதலியவற்றைச் செலுத்தினார். (ஆதி. 8:20).
இவ்விவிலியப் பகுதியின் மூலம், விலங்கினங்களும் பறவையினங்களும் பலியிடப்பட்ட செய்தியும், பலியில் நெருப்பு இடம் பெற்ற செய்தியும் குறிக்கப்பட்டிருப்பதை அறிகிறோம்.
"இந்தியாவில் இத்தகு வேள்விமுறை வழிபாடு, பிராமணங்களில் (Brahmanas) எப்போது தோன்றி வளர்ந்தது என அறுதியிடுவது கடினம்; இது பின்னர் ஒன்றோடொன்று தொடர்புடைய விரிவான சடங்குகளாக வளர்ந்துள்ளது", எனத் தாசுகுப்தா தெரிவிக்கிறார்.
இதே போன்று பலிக்கோட்பாட்டுச் சமயமாகிய பழைய ஏற்பாட்டுச் சமயத்தில் ஏராளமான பலி முறைகளும் பலிச் சடங்குகளும் பெருகி வளர்ந்துள்ள செய்தியை விடுதலைப் பயணம் (Exodus), லேவியர் (Leviticus), எண்ணிக்கை
(Numbers), இணைச் சட்டம் (Deutronomy) ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.
பலிகளை எந்தெந்த முறைப்படி, எந்தெந்த
நோக்கத்தோடு செலுத்த வேண்டும் என்பதில் ஒழுங்கு முறையும் கட்டமைதியும் பின்பற்றப்படும் போது அது விதிமுறையாகிறது. சமயத் தலைவர் வழி அவற்றை விதிக்கும்போது அவை சமயச் சட்டங்களாக மாறுகின்றன. பழைய ஏற்பாட்டில் இவை 'கட்டளைகள்' என வழங்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டுப் பலி முறைகளில் நெருப்பு ஓர் இன்றியமையாத இடத்தைப் பெற்றதைப் போன்று. ஆரிய வேதங்களின் பலிமுறைகளிலும் நெருப்பு இன்றியமையாத இடத்தைப் பெற்றது.
பழைய ஏற்பாட்டின்படி, பலிகள் கடவுளுக்குச் செலுத்தப்பட்டன. பலியிடப்பட்டவை நெருப்பிலும் இடப்பட்டன. வைதிகப் பலியில், நெருப்பே ஒரு தெய்வமாக வழிபடப்பட்டது. பலிப் பொருளான சோமச் சாறும் ஒரு தெய்வமாகவே வழிபடப்பட்டது.
நெருப்பு மூட்டிப் பலி செலுத்தும் பலிபீடங்கள் அரப்பாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதனைச் சான்றாகக் காட்டி, அரப்பா நாகரிகம், ஆரியநாகரிகம் என்று சிலர் விளக்கம் கூற முற்பட்டுள்ளனர். நெருப்போடு கூடிய பலிமுறை திராவிடர்க்கும் உரியது. இதற்குச் சான்றாக இசுரயேலரின் பலிமுறைகள் விளங்குகின்றன. நோவாவின் காலந்தொட்டே. நெருப்போடு தொடர்புடையதாகப் பலிகள் கடவுளுக்காகச் செலுத்தப்பட்டன.
வைதிகப் பலிமுறைகளை அடிப்படையாக வைத்துப் பலியியற்றும் ஆரியப் புரோகிதரான பிராமணர் சமய நிலையிலும் சமுதாய நிலையிலும் தலைமையிடத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் திராவிடரை நிரந்தரமாக அடிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் 'பூர்வ மீமாம்சை' என்னும் பலிக்கோட்பாட்டு நூல் சைமினி முனிவரால் இயற்றப்பட்டது.
வேதமும் வியாசரும்
முன்னர்க் குறிக்கப்பட்டது போல, வேதங்கள் வாய் மொழிப் பாடல்களாகவே இருந்து வந்தன. இங்ஙனம் எழுதப்படாமலிருந்த பாடல்களை வியாசர் என்பார் தொகுத்தருளினார். வேதம் என்னும் பெயரையும் இவரே வழங்கினார் என்பர். வேதங்களைத் தொகுத்து அவற்றுக்கு எழுத்துருவம் கொடுத்த காரணத்தினால் இவை இன்று நமக்குக் கிடைக்கின்றன. இவை தொகுக்கப்பட்ட காலம் கிறித்துவுக்குப் பிற்பட்ட காலம் என்பது வரலாற்று உண்மை.
வியாசர் என்பது காரணப்பெயர்
'வி + ஆஸ் = வியாஸ்' என்பதற்கு முறைப்படி தொகுத்துரைத்தல் என்று பொருள். எனவே, வியாசர் என்பதற்கு முறைப்படி தொகுப்பவர் அல்லது தொகுப்பாளர் என்று பொருள். வியாசர் என்பது தொகுப்பாளராகிய ஆசிரியர் ஒருவரை மட்டுமே குறிக்காமல் ஒரு பரம்பரையினரைக் குறிக்கும் பெயராக அது திகழ்கிறது. ஒரே கருத்துச் சார்புடைய அல்லது கோட்பாட்டைச் சார்ந்த தொகுப் பாளர்களை வியாசர் என்னும் பெயரால் அழைத்திருக்க வேண்டும். அஃதாவது.
'ஒத்த கருத்துடைய பரம்பரை அல்லது மரபு' (School of) Thought) என்பதை விளக்குவதே வியாசர் என்னும் பெயர் ஆகும் எனல் பொருத்தமுடையது.
வியாசரின் பணிகள் மூவகையாக அமைந்துள்ளன. அவை:
1.தொகுப்புப் பணி:
வாய்மொழிப் பாடல்களாக இருந்த வேதங்களை இவர் தொகுத்தார். உபநிடதங்களையும் இவரே தொகுத்தார்.
2.நூலியற்றும் பணி:
பிரம சூத்திரம், பகவத் கீதை ஆகிய நூல்களையும் இவரே இயற்றியுள்ளார். மாபாரதம் என்னும் இதிகாசத்தையும் பதினெண் புராணங்களையும் துணைப் புராணங்களையும் இவரே இயற்றினார் என்பர்.
3.உரை வகுக்கும் பணி:
யோக சூத்திரத்திற்கும் சைமினியின் மீமாம்ச சூத்திரத்திற்கும் வியாசர் உரை வகுத்தார் என்பதை ஆசிரியர் சிலர் குறிப்பிடுகின்றனர்.
இந்தியச் சமயங்கள், மெய்ந்நூலியல், புராணங்கள் போன்றவற்றில் பெரும்பகுதியான பணியை வியாசர் என்ற ஒருவரே செய்திருக்க இயலாது. அதோடு வியாசரின் பணி வேதாந்த விளக்கமாகவே திகழ்கிறது. எனவே, வேதாந்தக் கருத்து மரபு முறையைப் பரப்பிய பணியினராக 'வியாசர்' திகழ்ந்துள்ளார் எனலாம்.
வேதாந்தக் கருத்துமுறை சார்ந்த வியாசர் வேதங்களை ஏன் தொகுக்க வேண்டும்? வாய்மொழிப் பாக்களைத் தொகுத்து எழுத்துருவம், கொடுத்து அவற்றுக்கு வேதங்கள் என்னும் பெயரையும் கொடுத்ததற்குக் காரணமே, வேதாந்தக் கருத்துகளைக் கூறுவதற்குத் தான். நியாயப்படி, வைதிகர்கள் தானே வேதங்களைத் தொகுத்திருக்க வேண்டும்? வேதங்களை எழுதினால் அவற்றின் ஆற்றல் குறைந்து விடும் என்றும் வேதங்களை ஓதும் போது சூத்திரர் கேட்க நேர்ந்தால் அவர்கள் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று கூறியவரெல்லாரும் வைதிகர்கள் என்பது வரலாறு. எனவே, வேதங்களைத் தொகுத்ததிலும் உபநிடதங்களைத் தொகுத்ததிலும் ஆரியரின் பங்கு எதுவுமில்லை என்பது தெளிவு.
வியாசரின் கருத்துமுறை அனைத்தும் பலி நிறை வேற்றக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. பலி நிறைவேற்றக் கோட்பாட்டில், பலியின் சிறப்பு ஏற்றுக் கொள் ளப்படுகிறது; ஆனால் பலி செலுத்தும் வழிபாட்டு முறை நிறுத்தப்படுகிறது. ஏனெனில் கடவுளே பலியாகி விட்டதால். இனிமேல் பலி செலுத்துவது தேவையற்றது என்னும் புதிய கோட்பாடு இந்தியாவில் வேரூன்றத் தொடங்கி விட்டது.
பலி செலுத்தி வழிபடுவதற்கும் பலி நிறைவேறி விட்டது என்பதற்கும் பலியே அடிப்படை. பலியைச் சொல்லாமல் பலி நிறைவேற்றத்தைச் சொல்ல முடியாது. ஏன் பலி நிறைவேறியது அல்லது நிறுத்தப்பட்டது என்பதை விளக்குவதற்கு, முன்னரே வழக்கத்திலிருந்த பலிக் கொள்கையைக் கூற வேண்டுவது தேவையாகிறது.
பலி நிறைவேற்றத்தைக் கூறுவதற்கான கோட்பாடு களை வகுத்துக் கொடுத்தவரே வியாசர். ஆகவே, வேதப் பாடல்களில் பலிக்கோட்பாடு இடம் பெற்றிருந்த காரணத் தால், தமது கோட்பாட்டினை விளக்குவதற்குப் பலி தொடர் பான பாக்களைத் தொகுப்பது வியாசருக்குத் தேவை யாயிற்று.
வேதாந்தம்
வேதம் + அந்தம் = வேதாந்தம்
வேதத்தின் இறுதிப் பகுதியே வேதாந்தம் என்று இது வரை விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த விளக்கம் சரியானதன்று.
'வைதிகப் பலிச் சடங்குகளைக் கற்பிப்பது தான். வைதிகம் கற்பிக்கும் கன்ம மார்க்கம் ஆகும். அத்தகு சடங்குகளை உபநிடதங்கள் ஏற்காமல், உண்மையையும் மூலப்பண்புக் கூற்றையும் உண்மையையும் வெளிப்படுத்தி அவற்றின் வழி மாந்தருக்கு விடுதலை அளிப்பதாக உபநிடதங்கள் திகழுகின்றன' எனத் தாசுகுப்தா என்றும் அறிஞர் குறிப்பிடுகிறார்.
பிரமன், ஆன்மா, உயிர், உலகு, கட்டு, விடுதலை, பேரின்பம் முதலான உண்மைகளின் அடிப்படை பற்றிய ஆழ்சிந்தனைகளை ஆராய்ந்து பார்க்கும் நோக்கில் வேதாந்தக் கருத்துமுறைகள் அமைந்துள்ளன. கர்மங்களிலிருந்து (பலி) விடுதலை பெற்று, மாந்தனின் ஆன்மீக விடுதலைக்கு வழிவகுக்கும் சிந்தனைகளை உள்ளடக்கியதால். வேதத்தினின்றும் வேதாந்தம் மாறுபட்டது ஆகும்.
சுவேதாஸ்வதரா உபநிடதத்தில் தான் வேதாந்தம் என்னும் சொல் முதன் முதலாகப் பயின்று வருகிறது (6.22). பிரம சூத்திரத்திலும் (3.3.1) இச்சொல் பயில்கிறது.
'வேதத்திலே கர்மானுட்டானங்களை விதந்து பேசும் பகுதியாகிய பிராமணங்களை மறுக்கவும் கண்டிக்கவும் எழுந்தவையே உபநிடதங்கள்' என்பது அறிஞர் பலரின் கருத்து.
"ஞானமின்றிக் கிரியைகளையும் சடங்குகளையும் கைக்கொள்ளுகிறவர்கள் காரிருள் கிடக்கிறார்கள். ஆனால் செய்ய, வேண்டிய கருமங்களைப் புறக்கணித்து விட்டு வேதாந்த ஆராய்ச்சிகளிலே மகிழ்ச்சியடைந்து திருப்தி கொள்கிறவர்களும் அதைவிடப் பெரிய அந்தகாரத்தில் மூழ்குவார்கள்", என ஈசாவாகிய உபநிடதம் குறிப்பிடுகிறது. இப்பகுதியிலே பலிமுறைச் சடங்குகள் கண்டிக்கப் படுவதைக் காணுகிறோம். அதே நேரத்தில் செய்ய வேண்டிய கருமங்களைப் புறக்கணிக்கக் கூடாது' என்றும் ஈசா வாசியம் குறிப்பிடுகிறது. ஞானம் தேவையானது. அதோடு பிரம ஞானத்தோடு கூடிய செயலும் (கருமம்) இன்றியமையாதது என்று இங்கு விளக்கப்படுகிறது. இதனை யாக்கோபு தமது திருமுகத்தில் 'கிரியை இல்லாத விசுவாசம் செத்தது' (யாக்கோபு 2:17) என எழுதிக் காட்டுகிறார்.
எனவே, கடவுளைப் பற்றிய ஞானமும் வேண்டும்; ஞானத்தின் பயன் செயலிலும் வெளிப்படவேண்டும். இதனை 'ஞான கன்ம சமுச்சயம்' என்பர்.
வேதங்கள் சார்பான பலிமுறை உபநிடதங்களால் பழைமையாக்கப்பட்டு விட்டன. 'உபநிஷத்' என்னும் வட சொல்லுக்கு 'ஆசிரியர் அருகில் நெருங்கி அமர்தல்' என்பது பொருள். அங்ஙனம் ஆசிரியர் அருகில் நெருங்கி அமர்ந்த
மாணாக்கருக்குக் கற்பித்த மறைமொழிகளே உபநிடதங்கள். காடுகளில் இவை போதிக்கப்பட்டன. அதுவும் கமுக்கமான அமர்வுகளில் போதிக்கப்பட்டன.
பெரும்பாலும் உரைநடை வடிவங்களில் அமைந்த வையே உபநிடதங்கள். ஆசிரியருக்கும் மாணாக்கருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களாக இவை அமைந்துள்ளன. பற்பல சமயங்களில் பற்பல முனிவர்கள் தங்களை அணுகிய மாணாக்கர் வினவிய வினாக்களுக்கு அளித்த விடைகள் யாவும் உபநிடதங்களில் இடம் பெற்றுள்ளன. உபநிடதங்களைப் பல்வேறு முனிவர்கள் ஆக்கியுள்ளனர். ஆகவே, எந்தவொரு கருத்தும் தொடர்ச்சி யாகவோ யாதானுமொரு ஒழுங்குக்கு உட்பட்டு ஆராயப்படுவதை உபநிடதங்கள் விளக்கவில்லை.
ஒரே கருத்தினைப் பற்றிப் பற்பல இடங்களில் பற்பல விதமான குறிப்புகளாக விளக்கப்படுவதை உபநிடதங்களில் காணுகிறோம். அங்ஙனம் பற்பல இடங்களில் கூறப்படும் ஒரே கருத்தினைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துப் பார்த்தாலுங்கூட, அக்கருத்துப் பற்றிய முழுமையையும் அறிய இயலவில்லை.
ஒரே கருத்தினைப் பற்றியே ஒரு முனிவர் ஒருவிதமாகவும் மற்றொரு முனிவர் வேறொரு விதமாகவும் கூறியுள்ளதையும் உபநிடதங்களில் காணுகிறோம்.
ஆனாலும், உபநிடதக் கருத்துக்களை ஒருங்கிணைத்து அவற்றின் அடிப்படைக் கருத்துக்களை ஒருமுகப்படுத்தும் முயற்சியாக வேதாந்தத் தரிசனங்கள் திகழுகின்றன. 'தரிசனம்' என்னும் வடசொல்லுக்குக் 'காட்சி' என்று பொருள். புறக்கண்ணால் பார்க்கும் காட்சியிலிருந்து மாறு பட்ட அக்காட்சியை விளக்கிக் காட்டும் முயற்சியே தரிசன நூல்கள்.
வேதாந்தமும் புதிய ஏற்பாடும்
இந்தியாவில் எழுந்த தரிசனங்களை, 'அறுவகைத் தரிசனங்கள்' என்று கூறுவது பெருவழக்கு. அவை: சாங்கியம். யோகம், நியாயம் - வைசேடிகம்: பூர்வ மீமாம்சை - உத்தர மீமாம்சை என்பன. இவற்றுள் பூர்வ மீமாம்சை என்பது வைதிகத் தரிசனம். பிற ஐந்தும் திராவிடத் தரிசனங்கள்.
இவ்வைந்தனுள்ளும் 'பிரம சூத்திரம்' எனப்படும் வேதாந்த சூத்திரம் வியாசர் என்றும் பாதராயணரால் இயற்றப்பட்டது. இது பிரமனாகிய கடவுளைப் பற்றிய ஞானத்தை விளக்கி உரைக்கிறது. பிரமன் என்பவர் இயேசு கிறித்து ஆவார். அவரைப் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சியாக இந்நூல் திகழுகிறது. பிரம சூத்திரத்திற்குச் 'சாரீரக மீமாம்சை' என்னும் பெயரும் உண்டு. சரீரத்தில் வந்த கடவுளைப் பற்றி ஆராய்ச்சி என்பது இதன் பொருள். இயேசுவையே மையமாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டுள்ளது என்பதை அண்மையில் வந்துள்ள ஆய்வுகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. "விவிலிய ஒளியில் பிரம சூத்திரம்” என்னும் சிறு நூலில் இது மேலும் விளக்கப்படுகிறது. இந்நூல் பலி நிறைவேற்றக் கோட்பாட்டை விளக்குகிறது.
திருவிவிலியத்தில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இருபெரும் பகுதிகள் உள்ளன. பழைய ஏற்பாட்டுச் சமய வழிபாட்டுச் சிந்தனைகள் பலிக் கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்டன. ஆனால் புதிய ஏற்பாடோ. உடலில் வெளிப்பட்ட கடவுள், பாவத்தில் வீழ்ந்த மாந்தவினத்தை மீட்பதற்காகத் தம்மையே பலியாக ஈந்து, மீட்பளித்தார்; அவர்மேல் பற்றுறுதி கொள்பவர்களுக்கு மீட்பும் நீடுவாழ்வும் கிடைக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. இதே அடிப்படையில் தோன்றியவையே வேதாந்தச் சிந்தனைகள்.
தோமா வழி இந்திய மண்ணில் பரவிய இயேசு பெருமானின் நற்செய்தியின் விளைவாகவே வேதாந்தம் எழுந்திருக்கிறது என்பது தற்கால ஆய்வுகளால் புலனாகிறது. தினபக்
எனவே, வேதத்தைப் பழைய ஏற்பாடாகக் கொண்டால், வேதாந்தத்தைப் புதிய ஏற்பாடாகக் கொள்ளலாம் என்பது தெற்றெனப் புலனாகிறது.
வேதாந்தத்தின் அடிப்படை நூல்களாகப் 'பிரத்தானத் திரய என்பது குறிக்கப்படுகிறது. 'அடிப்படையான மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.
அவை:
1.உபநிடதங்கள்
2. பிரம சூத்திரம்
3.பகவத் கீதை
உபநிடதங்கள் பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு திராவிட முனிவர்களால் விளக்கப்பட்டவை. உபநிடதங் களின் பிழிவாக அமைவதே பிரமசூத்திரம் ஆகும். சூத்திர வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதால், இவற்றில் உள்ள உண்மைப் பொருளைக் கண்டு கொள்வதில் இடர்பாடுகள் உள்ளன. இதனால் சங்கரர், இராமானுசர், மாத்வர் போன்ற உரையாசிரியர் பலர் விளக்கங்கள் எழுதியுள்ளனர். பொருந்தாததும் தவறானதும் ஆன உரைகள் பலவும் அங்குக் காணப்படுகின்றன. கிறித்தவ இறையியலோடு இணைத்துப் பிரம சூத்திரத்தை ஆயும் போது தெளிவான உண்மைகள் புலப்படுகின்றன.
வேதாந்த நூல்கள் பெரும்பாலும் வடமொழியாகிய சமற்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. சமற்கிருத மொழி கிறித்து காலத்திற்குப் பின்னர் இந்தியாவில் திராவிடரால் தோற்றுவிக்கப்பட்ட தொரு மொழி, வேதாந்தக் கருத்துக் களைப் பரப்புவதற்காக அறிஞர்களால் உருவாக்கப்பட்ட மொழிதான் சமசுகிருதம் ஆகலாம் என்பது அறிஞர் பலரின் கருத்து. அண்மைக் காலத்தில் இவ்வகை ஆய்வுப் போக்குக் காணப்படுகிறது. எனவே, சமற்கிருத மொழி பற்றியும் ஒரு சிறிது காண்போம்.

