சைவ சித்தாந்தத்தில் அவதாரக் கோட்பாடு
உலகப் பெருஞ் சமயங்களில் அவதாரக் கோட்பாட்டினைத் தெள்ளத் தெளிவாக அறிவித்து நிற்பன கிறித்தவ சமயமும் வைணவ சமயமும் ஆகும் என்பதனை அனைவருமே ஏற்றுக் கொள்வர். சைவ சமயம் அவதாரக் கோட்பாட்டை உடையதா? சைவ சித்தாந்த மெய்யறிவியல் நூல்கள் அவதாரக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றனவா? இத்தலைப்பின் நோக்கம். என்பதனை ஆராய்வதே
திருக்குறளும் அவதாரக் கோட்பாடும்
'கடவுள்' என்னுஞ் சொல், எல்லாவற்றையுங் கடந்து, எண்ணிற்கும் எட்டாத பரம்பொருளையே குறிக்கும்" என்று விளக்கம் தரும்போது கடவுளுக்குத் தனி உருவம் கொடுக் கப்படா நிலை புலனாகின்றது. 'பரம்பொருள்' என்று கடவுளைச் சுட்டுவது 'எல்லாவற்றுக்கும் மேலான பொருள்' என்பதனை உணர்த்துவதாகும். கடவுள் என்று பால் பிரித்துச் சுட்டாத நிலையை மாற்றி 'இறைவன்' என்ற பெயரைத் திருவள்ளுவர் முதன்முதலாக ஆளுவதில் ஆழ்ந்த பொருள் உண்டு. இறைவன் என்பது வள்ளுவர் காலத்திற்கு முன் அரசனைக் குறிக்கும் தமிழ்ச் சொல். கடவுளை அரசனாகச் சுட்டும் மரபு யூத, கிறித்தவ மரபுகளோடு தொடர்பு டையதாகும். கடவுள் வாழ்த்தில், 'ஆதி பகவன்', 'வாலறிவன் மலர் மிசையேகினான்', 'இறைவன்',
'பொறிவாயில்' ஐந்துவித்தான் 'தனக்குவமை இல்லா தான்', 'அறவாழி அந்தணன் எண்குணத்தான்' என்ற ஆண்பாற் பெயர்களால் கடவுள் கட்டப்படுகிறார். பரம்பொருள் என்பதனை யுணர்த்தும் கடவுள் என்ற சொல்லை விடுத்து ஆண்பால் ஒருமைப் பெயர்களால் சுட்டுவதே அவதாரக் கருத்தை உணர்த்துவனவாக அமைந்துள்ளன. இதன் மணிமுடியாக 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரம் அமைந்துள்ளது. 'ஒழுக்கத்து நீத்தார்', 'துறந்தார்', 'நிறைமொழி மாந்தர்' என்பன கடவுள் தன் உயர்ந்த நிலையைத் துறந்து (நீத்து) மாந்தனாகப் பிறந்து ஒழுகிக் காட்டியதைப் பறைசாற்றுகின்றன.
சைவ சமயமும் வைணவ சமயமும் தோன்றுவதற்குத் திருக்குறள், பெருங்காரணமாக இருந்திருக்கிறதென்பது அறிஞர்களின் துணிபு. சைவர்களும் வைணவர்களும் திருக்குறளைத் தத்தமக்குச் சொந்தமென உரிமை பாராட்டு வதாலும், வேறு பல அகச் சான்றுகளாலும் இது புலனாகும். சைவக் கொண் முடிபு (சித்தாந்தம்)நூல்களில் திருக் குறளைத் தமது சமய நூலாகக் காட்டும் பல இடங்களை நாம் காணலாம். எனவே, சைவ மெய்யறிவு நூல்களிலும் அவதாரக் கருத்துகளைக் காண்பது அரிதாகத் தோன்ற வில்லை. நுண்ணிதின் ஆய்வோருக்கு அவதாரக் கோட்பாடு என்ற அடித்தளத்தின் மீதே சிவமதக்கோட்பாடு எழுப்பப் பட்டுள்ளது என்பது அங்கை நெல்லியெனப் புலனாகும்.
அவதாரம் எதற்கு?
'அருவ'மான நிலையிலுள்ள கடவுள் 'உருவ'மாகத் தோன்றலே அவதாரம். 'அரூபி'யான பரம்பொருள் 'சொரூ'பியாக ஆதலே அவதாரம். படைப்புகளிலெல்லாம் உயர்ந்த படைப்பு மாந்தனைப் படைத்ததே, (Man is the crown of creations) "கடவுள் தமது சாயலாகவே மாந்தனை உருவாக்கினார்" என்று விவிலியம் கூறுகிறது. தூய்மையான படைப்பான மனிதன் இறைவனின் கட்டளையை மீறிப் பாவத்திற்குள்ளானான். புளிப்பு மரத்தினின்று புளிப்பான கனியும் அதன் வித்தினின்று மீண்டும் புளிப்பான தருவும் தோன்றுவது போல, நம் முன்னோர் செய்த தீவினையாகிய பாவம் மாந்தவினத்தைத் தொடர்ந்து வருகிறது. செம்பினில் களிம்பு எங்ஙனம் இயல்பாக இருக்கிறதோ அங்ஙனமே பாவமும் ஒருவனை இயல்பாகவே பற்றியிருக்கிறது. இதனையே 'சகசமலம்' எனச் சித்தாந்தம் சுட்டுகிறது. (சக=உடன்; ஜ=பிறந்த; மலம் = பாவம்)
செம்பின்களிம்பைப் போக்குவதெவ்வாறு? புளிப்பு மரத்துக்கனியின் புளிப்புச்சுவையைப் போக்குவதெவ்வாறு?
களிம்பற்ற பொன்னை உருக்கி, உருகிய நிலையிலுள்ள பொன்னோடு செம்பினைச் சேர்க்கும்போது புதிய உலோகம் தோன்றுகிறது. களிம்பு சேரும் செம்பு, களிம்பு சேராப் பொன்னுடன் சேரும்போது செம்பில் களிம்பு சேருவதில்லை. புளிப்புச் சுவையுடைய கனிதரும் மரத்தை, இன்சுவை தரும் மரத்தோடு வெட்டி, ஒட்டுச் சேர்க்கும்போது புளிப்புச் சுவைதரும் மரம் இனிப்புச் சுவை தரும் கனியைத் தருகிறது. மேலே குறிக்கப்பட்டவை சைவ சித்தாந்தம் காட்டும் எடுத்துக்காட்டுகள்.
'பசு'வை இயல்பாகப் பற்றியிருக்கும் 'மலத்'தினை அகற்றுவது 'பதி'யினால் மட்டுமே இயலுவதொன்றாகும். பதியாகிய முதல்வனும் தான் நினைத்த மாத்திரத்திலே மலத்தை நீக்கிடவில்லை. பொன் நெருப்பிலிடப்பட்டு உருகுவதைப் போல உருகிட வேண்டும்; புளிப்புச் சுவையுடைய மரம்.
தன்னோடு இணைக்கப்படும் பொருட்டாய் இன்சுவை மரம் வெட்டப்பட வேண்டும். சகசமலத்தில் சிக்கியிருக்கும் மாந்தனை மீட்க வேண்டு மானால் அதற்குரிய விலை கொடுக்க வேண்டுமல்லவா? அதுவே இறைவன் செய்த 'தவம்'. எனவே, மாந்தனை மீட்க, இறைவன் மாந்த வடிவில் 'அவதாரம்' எடுக்க வேண்டும். இதுவே அவதாரத்தின் நோக்கம்.
சிவன்-பெயர்க் காரணம்
சிவன் என்னும் சொல் சிவந்தவன் பொருளைத் தருகிறது. இது செம்மை என்ற சொல்லடியாகப் பிறந்தது எனலும் பொருந்தும். "அரம்=சிவப்பு. அரன்=சிவன்" என்று பாவாணர் காட்டுகிறார். பாவமாகிய மலத்தை அரிந் தெடுப்பவன் என்றும் கூறுவர். சிவன் என்னும் சொல். சங்கப் பனுவல்களுள் காணப்பட்டிலது. சிவம், சைவம் என்ற பெயர்கள் கி.பி.6 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதென்பது ஆய்வாளர்களின் கருத்து, இறைவனுக்கு நிறம் உண்டு என்று குறித்துச் சொல்லும் வழக்கு பிற்காலத்ததாகத் தெரிகிறது. சைவ சமயம் தோன்றியது தமிழகத்திலே தான். சிவன் தமிழரின் கடவுள். வடவர்களுக்கும் சிவமதத் தோற்றத்திற்கும் தொடர்பில்லை. எந்நாட்டவர்க்கும் இறைவனாக விளங்குபவனே தென்னாட்டில் சிவன் என வழங்கப் பெறுகிறான் என்று மாணிக்கவாசகர் மொழிகிறார். இதனை,
'தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்ற அடிகள் விளக்குகின்றன.
சிவம் என்பது அன்பையே காட்டுகிறது என்பார் திருமூலர்!
"அன்பும் சிவமும் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும், அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந் திருந் தாரே"
என்பது திருமந்திரம். இவற்றால் இறைவன் அன்பின் வடிவானவன் என்றும் சிவந்த நிறத்தவன் என்றும் கொள்ளற்கு இடமளிக்கிறது.
அருவம், உருவம், அருவுருவம் என்று மூன்று நிலைகளைச்
சைவம் இறைவனுக்குக் குறிக்கின்றது. திறந்த வெளியாகிய
ஆகாயமே (பரவெளி அம்பலம்) அருவ நிலை; நடவரச படிமம்
உருவ நிலையையும், இலிங்கம் அருவுருவ நிலையையும்
காட்டுகின்றன என்பது பொருத்தமானதாகும்.
இறைவன் அவதாரம் எடுத்திரானேல் உருவமாகக் காட்டப்படும் நடவரசனின் தத்துவம் எதற்கு? இறைவன் கட்புலனாத் தோன்றியவன் என்பதனை உணர்த்துவதாகவும் 'உருவ' நிலையுள்ளது. இல்லை யென்றால், கடவுளை அருவ நிலையினனாக மட்டுமே சுட்டியிருந்திருக்கலாம் அல்லவா?
சேயோன் என்னும் சொல்லும் சிவன் என்னும் சொல்லும் ஒரே கடவுளையே குறித்திருக்க வேண்டும் என எண்ணுதற்கு இடம் உள்ளது. சேய் என்பது குழந்தை என்ற பொருளையும் தருகிறது. சேயோனுக்கு முருகன் என்ற பொருள் தற்போது ஆளப்பட்டு வருகிறது. முருகன் என்றது குமரக் கடவுளைக் குறிக்கிறது. இதுவும் கடவுளின் அவதாரத்தையே குறிக்கிறது. சிவன் என்றும் சேயோனென்றும் தந்தை மகன் என்ற தனித்தனிக்கடவுளராகப் பிற்காலத்தில் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு
இஃது இடமளிக்கிறது. "சேயோன், சிவன் என்னும் இரு சொல்லும் சிவந்தவன் என்ற பொருள்படும் ஒரே சொல்லின் இரு வேறு வடிவமாயினும் நடைமுறையில் அவை இரு வேறு தெய்வங்களைக் குறித்தலாலும், சேய் என்னும் முருகன் பெயர் குழவி என்னும் பொருள்படுதலாலும், முருகன் குமரன் என்னும், பெயர்கள் இளமை பற்றியவையாதலாலும், முருகனைத் தமிழரே சிவன் மகனாகக் கொண்டு விட்டதாகத் தெரிகிறது" என்ற ஆய்வுரை இங்கு ஒப்பு நோக்கதற்குரியது.
கடவுள் மாந்தவுடல் எடுத்திரானேல் அவனுடைய திருமேனிக்குச் சிவந்த நிறத்தை இணைத்துக் காட்டுவது எதனால்? சிவன் தமிழகத்திற்குரியவன்; அவ்வாறிருக்க அவனுக்குச் சிவந்த மேனி எனக் காட்டுதற்குக் காரணம் யாது? திராவிட இனத்தவரின் நிறம் கருமை என்பது தானே இயல்பு? 'அழல்வண்ணன்' 'செந்தீயின் வடிவானவன்' என்று காட்டும் போது சிவனின் மெய்ப்பொருள் உண்மையை விளக்குவதாக அமைந்திருப்பினும் அவன் திருமேனி நிறத்தைச் சுட்டுவதில் யாதானுமொரு காரணத்தை வெளிப்படுத்துவதற்காகச் சிவன்' என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். இது மேலும் ஆய்தற்குரியது.
மாணிக்கவாசர் இந்நிலவுலகிற்கு வந்து தன் திருத்தாள்ணைகளைக் காட்டி, நாயினும் இழிவாய்க் கிடந்த அடியேனுக்குத் தாயினும் மேலான' அருள் பொழிந்த தத்துவனே என்று போற்றுகிறார்.
இறைவனை வழுத்தும்போது.
"நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!'
என்னும் அடிகளில் 'நிலந்தன்மேல் வந்தருளி' என்னும் சீர்கள் அவதாரக் கருத்தினை உணர்த்துவனவாக அமைந்துள்ளன.
மேலும்,
"அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்றிகழாதே"
என, இறைவன் இந்நிலவுலகில் வந்து (பிறந்து) குருபரனாகி, அருள் செய்த சீர்மையைப் பெரிதும் உணர்ந்து, ஓர்ந்து மணிவாசகர் கூறுகிறார்.
அவனியில் வந்தான் - குருபரனாக விளங்கினான் - அருள்
செய்தான் என்ற முப்பெருநிலைகளை இப்பாடல் அடிகள்
உணர்த்துகின்றன.
இறைவன் மாயா காரியமாகிய இவ்வுடலை எடுத்திலன்; அருள் வடிவமாகியதொரு தோற்றத்தையே கொண்டான் என்று வாதிடுவோர்க்குத் தகுந்த பதில் கூறுவதுபோல் இவ்வடிகள் அமைந்துள்ளன.
"பிறியாக், கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப்பேர் கொண்டு"
எனக் குமரகுருபரர் விளம்புகின்றார். இறைவன் உலகில் தோன்றி, குரு என்ற திருப்பெயருடன் விளங்கியமையை அவர் குறிக்கின்றார். அருளாகிய தோற்றத்தை மட்டுமே இறைவன் கொண்டானென்றால் அதன் விளக்கம் என்ன? 'குரு', 'ஆசார்ய மூர்த்தம்' 'அருள் வடிவங் கொண்டவன்' என்பன போன்ற சொற்றொடர்களால் சிவபெருமான் குறிக்கப்படுவதன்
நோக்கத்தையும் விளக்கத்தையும் சைவக் கொண்முடிபுகளின் துணைகொண்டு தெளிவாக அறியலாம். இறைவனின் அவதாரக் கோட்பாடு எங்ஙனம் சித்தாந்த மெய்யறிவு நூல்களில் மிளிர்கின்றன என்பதனை இனி ஆய்வோம்.
சைவக் கொண்முடிபு காட்டும் அவதாரம்
சைவ சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை பதினான்கு. இவை மெய்கண்ட நூல்கள் எனவும் வழங்கப்பெறும். இவற்றை எழுதிய ஆசிரியர் அறுவர். மெய்கண்ட நூல்களை எழுதிய ஆசிரியர்களுக்குச் சந்தான குரவர்கள் எனப்பெயர் சூட்டியுள்ளார்கள். இவற்றில் முதலிரு சாத்திரங்களான 'திருவுந்தியா'ரை இயற்றிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் பெயரும் 'திருக்களிற்றுப் படியா'ரை இயற்றிய திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் பெயரும் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நீக்கியமை சூழ்ச்சியின் பாற்பட்டதாகும். நுணுகி ஆயும் அறிஞர்க்கு இதன் காரணம் புலனாகாமற் போகாது.
'திருவுந்தியா'ரின் முதற் செய்யுள் கடவுள் திருஅவதாரம் எடுத்ததைச் செப்புகின்றது.
"அகளமாய் யாரும் அறிவரிதப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற"
ஒருவராலும் அறிய முடியாத நிலையிலுள்ள பரம்பொருள் (அகளம்). வடிவத்தைத் தாங்கி (சகளம்) வந்தது; அது தன்னையே நமக்காகத் தந்தது என்பது செய்யுளின் விளக்கம். இது
கிறித்தவக் கருத்தோடு ஒப்பு நோக்கத்தக்கது. 'வார்த்தை மாமிசமானது' என்று 'அறியப் படாத கடவுள்' அறியப்பட்ட இறைவனாக விளங்கியமையை விவிலியம் கூறுகிறது. "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும் எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்". இறைவாக்கினராக விளங்கிய இறைவன் தன்னையே மக்களுக்காக வலிந்து ஈந்தான் என்பனப் போன்ற விவிலயக் கருத்துகள் திருவுந்தியாரின் செய்யுளுக்கு மேலும் விளக்கந்தருவனவாய் உள்ளன.
அருளுரு நிலை
ஆன்மாக்களின் பாசப் பிணியை மெய்யுணர்வளித்தற் பொருட்டு ஆசிரியத் திருமேனி தாங்கி வெளிப்பட்டு அருள் புரிபவன் இறைவன் என்பதை,
அறுத்து
"அறியாமை யுண்ணின் றளித்தே காணுங்
குறியாகி நீங்காத கோ"
என்ற பா உணர்த்துகிறது. 'காணுங் குறியாகி' என்பது நோக்கற்பாலது. 'கோ' என்ற அரசனைக் குறிக்கும் சொல்லும் கடவுளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
"அருளா வகையா லருள்புரிய வந்த
பொருளா ரறிவார் புவி"
என்பதினுக்கு உரை கூறும் நிரம்ப அழகிய தேசிகர், "படைப்பு. நிலை, ஈறு, மறைப்பு என்னும் நான்கினையும் தோன்றாது
செய்தவாறு போல, அருளென்னுந் தொழிலினையும் தான் பண்ணாதது போலப் பண்ணும்படி, மானுட வடிவென்னும் அங்கியால்" மறைத்துக் கொண்டு வந்த உண்மைப் பொருளே இக்குருவடிவு என்பதனை அறியமாட்டாது உலகு" என எழுதுகிறார். இதன் மூலம், மானுட வடிவங்கொண்டவன் கடவுள்; அதுவே அருள் வடிவம் என்பது போதரும்.
"மூவகை ஆருயிர் வர்க்கம் மூலமத் தார் மூன்று தீவகமாம் எனவுருவாய் வந்து
மலத்தார் கன்ம
முடையாரன்றே
நாதன்
திருநோக்கால் பரிசத்தால்
திகழும் வாக்கால்
பாவனையால் மிகுநூலால்
யோகப் பண்பால்
பரவிவரும் அவுத்திரியாற்
பாச நாசம்
மேவ அருளுதவும் அவுத் திரியிரண்டு திறனாம்
வியன்கிரியை ஞானமென விளம்புமாறே
என்ற சிவப்பிரகாசப் பாடலுக்கு உரை கூறும் மதுரைச் சிவப்பிரகாசர், "சிவன் இந்த மூவகை ஆன்மாக்களுக்கும் உண்டான மலங்களைப் பாகம் வருத்துமிடத்து யாதாமொரு பறவைகளை மிருகங்களைப் பிடிக்க வேண்டினர்கள் அதற்கேற்ற பார்வையைக் காட்டிப் பிடித்தாற்போல ஒரு மலத்தையுடைய விஞ்ஞானகலருக்கும், இரண்டு மலத் தையுடைய பிரளயாகலருக்கும், மூன்று மலத்தையுடைய சகலருக்கும் அவரவர் நிலைக்குத் தக்கதாகத் திருமேனி கொண்டு இரட்சிக்குமிடத்து விஞ்ஞானகலரும் பிரளயாக லரும் இப்பூதேசச் சம்பந்தமற நிற்கையில் அவர்களைப் போலச் 'சாதாரணமாகிய மானுடச் சட்டை சாத்தி வந்து இரட்சிக்கும்' என மானுட அவதாரத்தைக் கூறுகிறார்.
'திருவருட்பயன்’ ஆசிரியரும்
"பார்வையென மாக்களைப் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை எனக்காணார் புவி"
என்று குறிக்கிறார். மாந்தனைத் தன்பால் இழுத்துக் கொள்ள வேண்டும் என்ற அன்பினால் இறைவன் அருள் சுரந்து குருமேனியாகிய அருள் வடிவுகொள்கிறான். இஃது அவதாரத்தைச் சட்டாமல் வேறெதையும் சுட்டவில்லை.
உமாபதி சிவாசாரியார் 'போற்றிப் பஃறொடை' என்ற
சாத்திரத்தில்,
"இறவாத இன்பத் தெமை
இருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்து
நறவாருந்
தாருலா வும்புயத்துச் சம்பந்த
நாதனென்று
பேரிலா நாதன்ஒரு பேர்
புனைந்து-பாரோர்தம்
உண்டி உறக்கம் பயம் இன்பம்
ஒத்தொழுகிக்
கொண்டு மகிழ்ந்த குணம்
போற்றி"
என மொழிவதில உலக முதல்வன் இவ்வுலகில் பிறந்தமையைப் 'பிறவா முதல்வன் பிறந்து' என்றும், 'பூமியிலுள்ளவர்களைப் போல உண்பதும் உறங்குவதும் அருள்வதும் விடய போக இன்பமுறுவதும் ஒத்தொழுகிக் கொண்டெழுந்தருளி மகிழ்ந்திருந்த குண முடையவன் என மிகத் தெளிவாகவே அவதாரச் சிறப்பினைக் கூறுகின்றார். அருள் வடிவு மட்டுமே இறைவன் கொண்டான் என்றால். இவ்வுலகோர் போன்று மாந்தவுடல் எடுத்தான் எனச் வேண்டுவதென்ன? சாத்திரங்கள் கூற
கடவுள் தனது பிறப்பாகிய 'ஜனனத்'தாலே மாந்தரின் மும்மலங் கழுவிட அறிவுரை கூறும் ஆசிரியனாகத் தோன்றினான் என்பதற்குச் சிவஞான சித்தியார் சுபக்கம் விளக்கத் தருகிறது.
"சித்தாந்தத் தேசிவன்தன் திருக்
கடைக்கண் சேர்த்திச்
செனனம் ஒன்றி லேசீவன்
முத்தராக
வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி
மடுத்தானந்தம் பொழிந்து
என்ற பாடலில் 'செனனம்' என்பது அவதாரம் என்ற பொருளில் ஆளப்படுதல் காண்க.
குருவும் அவன் ஒழுகிக் காட்டியதும் தவமும்
சிவனின் திருமேனியை ஆசார்ய மூர்த்தம், 'குரு', 'குரவன்' என்று சுட்டுவர் அறிஞர். மூர்த்தம் என்பது திரு. மேனி வடிவமாகும். 'குருமூர்த்தி குருபரன்' என்பதற்கு 'The deity in human form appearing for the instruction of a devoted person of the சகலர், especially spoken of the Siva" - என்பது தமிழ் ஆங்கில அகர முதலி தரும் விளக்கமாகும்.
கிறித்தவ
சமய மரபில் கடவுளை அரசனாகவும் ஆசாரியனாகவும் குருவாகவும் காட்டும் மரபு உள்ளது. அறவழியை ஒழுகிக் காட்டுதற் பொருட்டே இறைவன் குருவடிவில் பிறந்தனன்; பிறந்து நல்வழியில் நடக்க வேண்டிய வழியை மக்களுக்குக் காட்டினன். இறைவன் பூமிக்கு வருவது மாத்திரமன்று; எது நல்வழி என்று அறிந்து கொள்ள முடியாது. திகைக்கும் மக்களுக்கு அவர்கள் நடக்க வேண்டிய நல் வழியை அவன் காட்ட வேண்டும். மனிதரின் உள்ளத்தில் உணர்ச்சி மாத்திரையாய் மட்டும் விளங்கிநின்று இறைவன் மனிதருக்கு ஒழுக்க நெறியைக் காட்ட முடியாது. ஆகவே, இவற்றை விளக்க அவன் காட்சி மாத்திரையாய் அருவத்திலிருந்து உலகில் மனித உருவமாயினான் எனவும் வள்ளுவர் தன் நூலில் இனி விரித்துரைக்கப் போகும் ஒழுக்க நெறி சாதாரணஒழுக்க நெறி அன்று; ஐந்தவித்தானாகிய இறைவன் காட்டிய பொய்தீர் ஒழுக்க
நெறி எனவும் கூறுகிறார்" என மு. தெய்வநாயகம் கூறும் ஆய்வுரை. இறைவன் குருவாகத் தோன்றியதன் உண்மையை அரண் செய்கிறது.
சைவ சித்தாந்த சாத்திரங்களின் பிழிவாக விளங்கும் சிவஞானபோதம், இறைவன் குருவாக வந்த திருவவதாரத்தை எடுத்தியம்புகிறது.
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய் தவத் தினில் உணர்த்தவிட்டு. அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே"
மலத்தில் சிக்கி உழன்று கொண்டிருக்கும் கேவல நிலையிலுள்ள ஆன்மாவை மீட்க அகளமாய் நின்ற பரம்பொருள் சகளமாய் வந்து குருவாய் நின்று மெய்யறிவினை உபதேசித்துத் தன் தவத்தின் வாயிலாக ஆன்மாவிற்கு உணர்த்திக் காட்டிய பெருஞ்சிறப்பை மேற்காட்டிய சூத்திரம் விளம்புகிறது.
இம்மெய்ப்பொருள் உண்மையைத் தெளிவுபடுத்து வதற்காக எடுத்துக்காட்டு ஒன்றும் கூறப்படுகிறது. அரசனின் மகன் காணாமற் போய் வேடர் குடியிலே வாழ்கிறான். தான் அரச குடியைச் சார்ந்தவன் என்ற உணர்வோ அறிவோ இன்றி. வேடர்களோடு வேடனாய் வாழும் தன் மகனை அழைத்து வர அரசன் புறப்படுகிறான். எவ்வுருவத்தில்? அரச உருவத்தில் அன்று. வேடர் கோலத்தில்; அக்கோலத்தில் சென்று. ஆட்சிக்குரியவன் அவன் என்பதனைத் தம் மகனுக்கு
உணர்த்துகிறான். அப்போது தன் உண்மை நிலையை அறிந்து வேடர் குடியை நீங்கி அரசனைப் பின்பற்றுகிறான். இவ்வெடுத்துக் காட்டு இறையவதாரத்தின் நோக்கத்தையும் சிறப்பையும் தெளிவாக்குகிறது.
அருவுருவாகி நிற்கும் இறைவன் உருவாகத் தோன்றாவிடில் யாராலும் உற்று உணர முடியாது என்பதனைச் சிவஞானபோத எடுத்துக்காட்டு வெண்பா ஒன்று விளக்குகிறது
“இல்லா முலைப்பாலும்
கண்ணீரும் ஏந்திழைபால் நல்லாய் உளவாமால் நீர்நிழல்
போல்-இல்லா
அருவாகித் தோன்றானை
யாரறிவார் தானே
உருவாகித் தோன்றானேல்
உற்று
இறைவன் அருளுரு என்ற தோற்றம் மட்டுமே கொண்டான்; மாயா உருவமாகிய மாந்த உருவினை எடுக்கவில்லை என்று சாதிப்பவர்க்குச் சைவவாதி நிராகரணத்தில் உமாபதி சிவாசாரியார் பதிலிறுக்கிறார்.
"அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான் ஏய்ந்தவர்-எம்ம னோரே"
இதன் உரை: "ஆசாரியனுடைய வடிவு அருள் வடிவாயிருக்குமென்று நீர் சொன்னதினுடைய அர்த்தத்தை விசாரிக்குமிடத்து; கர்த்தாவோ என்றால் ஒரு காலும் அழியாத திருமேனியினை உடையவன்; அவன் அழிந்து போவதாயிருக்கிற இந்த மாயா சரீரத்தைப் பொருந்தான். அப்படியன்று காணும். ஆன்மாக்களை இரட்சிப்பான் பொருட்டாக இந்த மாயா சரீரத்தைப் பொருந்துவன் என்னில் யாரொருத்தர் இம்மாயா சரீரத்தைப் பொருந்தினவர்கள். ஆன்ம வர்க்கத்திலே ஒருத்தரொழிந்து வேறொன்றாகச் சொல்லப்படாது", என்பதாகும். சைவவாதியே, அருளுரு என்ற பொருளினைத் தவறாக விளக்கம் கூறிவருவதனை மறுக்கு முகத்தான் 'சைவவாதி நிராகரண'த்தின் அடிகள் அமைந்து விளக்கப்படுத்துகின்றன. எனவே ஆசாரிய மூர்த்தமென்ற அருள்வடிவு, ஊனுடம் பெடுத்த இறைவனின் திரு அவதார வடிவே என்பது புலனாகின்றது.
ஊனுடம்பெடுத்துள்ள மாந்தனை மீட்பதற்கு இறைவனும் ஊனுடம்பெடுத்து வருதலே தருக்க வியலுண்மைக்கும் பொருந்துவதாயுள்ளது. உலகம் உய்யும் பொருட்டாய் இறைவன் வந்தமையை,
"வைய முழுதும் மலக்கயங் கண்டிடும்
உய்யவந் தானுரை யுந்தீபற
உண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற"
என்ற செய்யுள் உணர்த்துகிறது. 'உய்ய வந்தான்' என்பது இரட்சிப்பவன், மீட்பர் என்ற பொருளைத் தருகிறது. கிறித்தவத்திலும் இறைவனுக்கு இப்பெயரே சுட்டப்படுதல் நோக்குதற்குரியது. இயேசு என்னும் பெயர் உலகை மீட்பவர் என்ற பொருளைத் தருவதாகும்.
உலகில் பிறந்தவரெவரும் இறப்பதும் உண்மையாகும். கடவுளும் மாந்தனாகப் பிறந்தார். என்றால் அவரும் இறந்தார். என்று கோடலே இயற்கையின்பாற்பட்டதாகும்.
இறைவனின் மரணத்தைச் சுட்டும் வகையில் 'தவம்' என்ற சொல் ஆளப்படுகிறது. தன்னுயிர் தானறப்பெறுதல்' என்பது 'தவம்' என்ற அதிகாரத்தில் உள்ளது. தன்னுயிரை மற்றவருக்காக விடுதலே தவம் என்ற விளக்கம் இதில் கிடைக்கிறது. தவத்திற்குப் பொருள் கூறும் பேராயர்
இரா. அருளப்பா அவர்கள், அறிவுரை கூறும் குருவாக மட்டுமல்ல, அல்லது ஒரு குரு வேடத்தில் அன்று, உண்மையாகவே தவத்தை மேற்கொண்டு வந்தார் என்கிறது விவிலியம்.
அதாவது துன்பத்தை ஏற்று, துன்புற்று அதன் வாயிலாக மனிதனை மீட்க வந்தார்" என விளக்குகிறார். "ஆன்மாவிற்காகத் தான் துன்பத்தை ஏற்றுத் தன்னுயிர் தானறப்பெறுதலாகிய தவத்தினில்" என்று பொருள் உரைக்கிறார் மு. தெய்வநாயகம்,
"மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியரென் றுந்தீபற
தவத்தில் தலைவரென்றுந்தீபற'
என்று திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார், இறைவனின் தவமே தலைசிறந்ததென விளக்குகிறார்.
தன்னுடைய இறப்பின் மூலமே மீட்பாகிய கருமத்தை இறைவன் நிறைவேற்றினார்; இனி அவர் பிண்டமாகிய மனித உருவில் வரமாட்டார்; அவருக்கு இனி இறப்புமில்லை என்ற விளக்கத்தையும் சித்தாந்தம் தெளிவுபடுத்துகிறது.
"கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் பிண்டத்தில் வாராரென் றுந்தீபற
பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற"
இதில் 'கண்டம்' என்பது மரணத்தைக் சுட்டுவதாகத் தெரிகிறது. உயிருக்குக் கேடு நேரிடுவதனைக் கண்டம் என்று சுட்டும் உலக வழக்கினையும் நோக்குக.
சைவ மெய்யறிவுக் கருத்துகளைத் தொகுத்துக் கூறும்
வகையில்,
"வணங்குவாய் செகசோதி
ஒருவ னாகி
மாநிலத்தை ஒருநொடியில்
வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும்
படைத்த பின்பு
குவலயத்தில் தானுதித்துக்
குருவாய் வந்து
சனமான சமுசாரம் ஒன்றில்
லாமல்
சன்னியாசி போலிருந்து
தலத்தைக் காட்டி
அன்பான சித்தர்களை
இருத்திப் போட்டு
அகண்டதலஞ் சென்றவரை அண்டுவாயே'
என அகத்தியர் என்ற சித்தர் பாடுகிறார்.
இப்பாடலில் இறைவனின் திருப்பிறப்பு, அவரின் இறப்பு மீண்டும் அவர் உயிர்த்து விண்ணகம் சென்ற மாட்சி ஆகியன சுட்டப்படுகின்றன.
அன்பு ஈன்றெடுத்த குழவியே அருள் - 'அருளென்னும் அன்பீன் குழவி' என்று திருவள்ளுவரும் 'ஈன்றெடுத்தல்' என்ற மாந்தப் பிறப்பின் இயற்கையைத் திருவருள் மீது ஏற்றிச் சொல்கிறார் எனக் கொள்ளுதற்கு இடமேற்படுகிறது.
இறைவன் இவ்வுலகின்மேல் வைத்த அன்பின் வெளிப்பாடே
இயேசு பிரானாகிய தன் திருக்குமாரனை இவ்வுலகில்
அனுப்பினார் என விவிலியம் கூறுகிறது.
"அருவும், உருவும் அறிஞர்க்கறிவாம்
உருவம் உடையான் உளன்"
என்பதில் 'அறிவாம் உருவம் உடையான்' என்பது வள்ளுவர் காட்டும். 'வாலறிவன்' என்பதனோடு இணைத்துப் பார்க்க ஏதுவாகிறது. அவன் அருவும் உருவும் ஆய இருவடிவங்களாயும் விளங்குவதாகச் சுட்டுகிறார் ஆசிரியர்.
எனவே, சைவ சித்தாந்தத்தில், 'குருமூர்த்தி' 'அருளுரு' 'சகளம்' போன்ற மெய்யறிவு விளக்கங்கள் கடவுளின் திரு அவதாரத்தை விளக்குவனவாகவே அமைந்துள்ளன.
கடவுள் மனிதனாய்ப் பிறந்தான்; குருவடிவாய்த் திகழ்ந்து நல்வழி ஒழுகி, அதன் மூலம் நல்லறத்தைப் பகர்ந்தான்;
தன்னுயிரைத் தானறப் பெற்ற தவத்தினால் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றினான் என்ற மெய்ம்மைக் கருத்துக்கள் சைவ சித்தாந்த சாத்திரங்களில் பொதிந்து கிடக்கின்றன. இதனை விரிப்பிற் பெருகும். தொகுப்பின் எஞ்சும்.


