தோமா வழிக் கிறித்தவத்தின் புராண வளர்ச்சி

 



தோமா வழிக் கிறித்தவத்தின் புராண வளர்ச்சி

முனைவர் யா.தா. பாசுகரதாசு


    மூவொரு கடவுள் கோட்பாட்டைக் கிறித்தவமே உலகிற்கு வழங்கியது என்பர். தமிழ்ச் சங்க இலக்கியங்களில் சைவ, வைணவ சமயக் கோட்பாடுகள் அதிகம் காணப் படவில்லை. கிறித்துவுக்குப் பிற்பட்ட காலங்களிலேயே உருவாகியிருக்க முடியும் என்பது ஆய்வின் அவை மூலம் புலப்படுகின்றது. கடவுளை மூவொருவராகக் காணும் மரபினைக் கடவுள், வார்த்தை, ஆவி என யூத சமயம் தொடங்கியது. எனினும் அது தனியொரு கோட்பாடாக வளரவில்லை. புதிய ஏற்பாட்டில்தான் மூவொருமைக் கோட்பாடு வளர்ந்து முழுமை பெற்றது எனலாம். இக்கோட்பாட்டை உள்ளடக்கிக் கடவுள், நீத்தார். வான் என்னும் நிலையில் திருவள்ளுவர் மூவொரு கடவுளைத் தமிழில் அறிமுகம் செய்தார். அதோடு அவர், 'இயல்புடைய மூவர்' என்னும் பெயரால் கடவுளைக் குறிப்பிடுகிறார்.


    சிவன், விஷ்ணு, பிரமன் என்னும் பெயர்கள் முழு முதற் கடவுளைக் குறிக்கும். இப்பெயர்கள் மும்மூர்த்தியைக் குறிக்கும். இம்மூவரும் சிவனுடைய உடலோடு தொடர்புடையவர்கள்; சிவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூன்று கடவுளர் அல்லர். மூவராகிய ஒரு கடவுளைக் குறிக்கும் பெயர்களே இவை.


    சிவனை 'அர்த்தநாரி' என்று அழைப்பர், 'அர்த்தம்' என்பது பாதி; 'நாரி' என்பது பெண். சிவனின் உடலில் ஒரு பாதி பெண் இவரைச் சக்தி என்பர். உமை என்பதும் வழக்கு. அதனால், பி. சிவனை 'உமையொரு பாகன்' என்று அழைப்பர். இதனை அடிப்படையாகக் கொண்டதே. 'சோமாஸ் கந்த மூர்த்தி என்பதும் ஆகும். மிகப் பழமையான கோயிலாகக் கருதப்படும் கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ளது. இங்கு, சோமாஸ்கந்த மூர்த்தியாகக் கடவுளின் உருவங்கள் உள்ளன. உமையோடும், கந்தனோடும் கூடிய கடவுள் (மூர்த்தி) என்பது இதன் பொருள். இதனையே அம்மை, அப்பன், மகன் என்பர். மாமல்லபுரத்திலும் இவ்வகைச் சிற்பங்கள் உள்ளன. 


    சிவன் உடலிலிருந்து ஏழு கடவுளர்?


    சிவனுடைய ஒரு பாதி பெண். அவரைச் சக்தி என்பர். சக்தியை ஆண் என்று குறிப்பிட்டால், அவருக்கு 'விஷ்ணு' என்று பெயர். சிவனுக்கும் சக்திக்கும் பிறந்த பிள்ளைகள் இருவர். ஒருவர் குமரன் என்னும் முருகன்; மற்றவர் பிள்ளையார் என்னும் விநாயகர். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகள் இருவர். ஒருவர் பிரமன்; மற்றவர் ஐயப்பன். மேலே குறிப்பிட்டபடி, சிவன், சக்தி, விஷ்ணு, குமரன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் என்னும் ஏழு கடவுளர் குறிக்கப்படுகின்றனர்.


    அப்படியானால் கடவுள் ஒருவரா எழுபேரா என்னும் கேள்வி எழுகிறது. இவை ஒரே கடவுளின் வெளிப்பாடுகளே என்பது தெளிவு. ஏனெனில், சிவனுடைய உடலிலிருந்தே இவர்கள் தோன்றியுள்ளார்கள். அவருடைய உடலில் பாதிதான் சக்தி. இச்சக்தியைச் சிவன் மனைவி என்று கொண்டனர். இப்போது இரண்டு பேராகச் சொல்லுகிறோமே தவிர, உண்மையில் உடல் ஒன்றுதான். சிவனுக்கும் சக்திக்கும் பிள்ளைகள், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிள்ளைகள் என்றெல்லாம் புராண விளக்கங்கள் பின்னர் எழுந்தன. இந்நிலையில், சிவன் - கணவன்; சக்தி மனைவி, இவர்களின் பிள்ளைகள் என்னும் விளக்கங்கள் குடும்ப உறவுப் பெயர்களாக விளங்குகின்றன. எனவே தான், இவர்களைச் சிவக் குடும்பம் என்று குறிப்பிடுகிறோம்.


    இந்த ஏழு பெயர்களும் ஏழு பேர்களைக் குறிக்காமல், ஏழு வகையான இறையியல் விளக்கங்களைத் தருவனவாக உள்ளன. ஏழு பெயர்களில் ஒவ்வொன்றுக்கும் புராண விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. புராணக் கதை விளக்கங்களிலும் ஒன்றுக் கொன்று முரண்பாடுகளும் வேறுபாடுகளும் உள்ளன. புராணங்கள், அடிப்படைக் கருத்துக்களை அல்லது கோட்பாடு களை விளக்குவதற்காக எழுதப்பட்டவை. எனவே, ஏழு கடவுளர் அல்லர், ஒரே கடவுளின் செயற்பாடுகளை விளக்க வந்த ஏழு வகை விளக்கங்களே அவை என்பதே பொருத்தம்.


    அப்பன்


    மேலே குறிப்பிட்டவற்றில் சிவன் அப்பனாகக் குறிக்கப்படு கிறார். குமரன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் ஆகிய நால்வரும் சிவன் மைந்தராக விளக்கப்படுகின்றனர். சிவம் என்பது அன்பைக் குறிக்கும்: சிவன் என்பது அன்பர் எனப் பொருள்படும். சிவன் என்னும் தமிழ்ப் பெயரும் எகோவா என்னும் எபிரேயப் பெயரும் ஒன்றையே குறிக்கின்றன.


    கடவுள் இவ்வுலக மக்களின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகவே அவர் தமது மகனை (குமாரன்) அனுப்பினார். குமரன், பிள்ளையார் முதலியோர் சிவமைந்தர்;


    ஆகையால் சிவன், அப்பன் என அழைக்கப்படுகிறார். கிறித்தவத்தில், இயேசு, பரம்பொருளாகிய கடவுளை அப்பா என அழைத்ததால், கடவுள் தந்தை எனப்படுகிறார்.


    அம்மை


    கடவுளின் அருட்சக்தியைப் பெண் என்று கொண்டது சைவம். எனவே, சக்தியை அம்மை என்று அச்சமயம் அழைத்தது. இயேசு பெருமான் மகனாக அழைக்கப்படுகிறார்; கடவுள் தந்தையாக அழைக்கப்படுகிறார். குடும்ப உறவில், மகனது பிறப்பிற்குத் தாயின் துணை தேவையாகிறது. தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரில், தூய ஆவியை ஆண் என்று கொள்வதா, பெண் என்று கொள்வதா என்ற கேள்விகள் எழுந்தன. தந்தை (Father), மகன் (Son) என்றிருப்பதால், தூய ஆவியைப் (Holy spirit) பெண் என்றுதான் கொள்ள வேண்டும் என்பது ஒரு சாராரின் கொள்கை. இந்தக் கொள்கையை உடையவர்தாம் சைவ சமயத்தனர்.


    இவ்வகைக் கொள்கை தோன்றிய காரணத்தால், இதற்கு மாற்றுக் கொள்கையும் தோன்றலாயிற்று. தூய ஆவியைப் பெண் என்று கொள்ளக் கூடாது; ஆண் என்று தான் கொள்ள வேண்டும்; ஏனென்றால், இயேசு கிறித்து தூய ஆவியால் உற்பவித்துப் பிறந்தவர் (மத்.1:18,20; லூக். 1:35). எனவே, தூய ஆவியாரைப் பெண் என்று கொள்ளலாகாது; அவரை ஆண் என்றே கொள்ள வேண்டும் என ஒரு சாரார் கொண்ட கோட்பாட்டின் விளைவாகத் தோன்றியதே வைணவ சமயம். கிறித்தவத் திருச்சபை வரலாற்றில், தொடக்க நூற்றாண்டுகளில் தூய ஆவியைப் பெண் எனக் கொண்டிருந்த கொள்கையும் உண்டு என்பர்.


    மகன்


    சிவக் குடும்பத்தில் கடவுளின் மக்களாகக் குமரன். பிள்ளையார், பிரமன், ஐயப்பன் ஆகிய நால்வர் குறிப்பிடப் படுகின்றனர். 'கடவுளின் மைந்தன்' (Son of God) என்னும் இறைக் கோட்பாட்டை விளக்குவதற்கு இந்நால்வரைப் பற்றிய புராணக் கதைகள் தோன்றின. குமரனாகிய முருகக் கடவுள், தீமையை வென்றவர் என்னும் கோட்பாட்டை விளக்குகிறது; பிள்ளையாராகிய விநாயகர், இறந்து உயிர் பெற்றவர் என்னும் கோட்பாட்டை விளக்குகிறது; பிரமன் உலகைப் படைத்தவர் என்னும் கோட்பாட்டை விளக்குகிறது; ஐயப்பன் சூரியனைப் போன்ற ஒளிமயமானவர் என்னும் கோட்பாட்டை விளக்குகிறது. கடவுளின் மகன் ஒருவர்தான்; ஆனால் அவரின் கல்யாண குணங்களாகிய இறைப் பண்புகளை விளக்குவதற்காக நான்கு கதைகளும், இக்கதைகளில் ஒரே கடவுளுக்கு நான்கு வகையான வெவ்வேறு பெயர்களும் சூட்டப்படுகின்றன. பிரமனுக்குக் கோயிலோ, வணங்கும் ஆட்களோ இல்லாமையால், வைணவத்தோடு அது இணைக்கப்பட்டு விட்டது.


    இன்றைய நிலையில், முருகனும் பிள்ளையாரும் சைவ சமயத்தோடும், பிரமனும் ஐயப்பனும் வைணவ சமயத்தோடும் இணைந்து விட்டனர். பிரமனுக்கு வழிபாடு இல்லாத நிலையில் எஞ்சியுள்ள ஆறு கடவுள் பெயர்களாலும் ஆறு சமயங்கள் தோன்றின. அவையே 'அறுவகைச் சமயங்கள்' என்று போற்றப்படுகின்றன.


    சிவன் -  சைவம்


    சக்தி - சாக்தம்


    விஷ்ணு - வைணவம்


    குமரன் - கௌமாரம்


    பிள்ளையார் (கணபதி) - காணாபத்தியம்


    ஐயப்பன் - சௌரம்


    இவை ஒரே கடவுளின் ஆறு தன்மைகளை விளக்குகின்றன.


    பலி நிறைவேற்றம்


    இவ் ஆறு சமயங்களிலும் பலி செலுத்தும் முறை கிடையாது. இந்து சமயக் கோயிலின் உள்ளே நுழைந்ததும் அங்குப் பலிபீடம் இருக்கிறது. அப்பலிபீடத்திற்கு எண்ணெய் பூசி, பூவைச் சார்த்திச் சிறப்பிக்கும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. பலி பீடம் இருக்கிறது; ஆனால் அங்குப் பலி செலுத்துவது கிடையாது. உலகச் சமய வரலாற்றில், வழிபாட்டு முறையில் பலியை நிறுத்திய ஒரே சமயம் கிறித்தவம் ஆகும். ஏனெனில் கடவுளே, மனிதனாக வந்தார்; அவரின் பெயர் இயேசு; அவர் மக்களின் பாவங்களுக்காகப் பலியாகி விட்டார்; பாவ நிவாரண பலி நிறைவேறி விட்டது; எனவே இனிமேல் பலி செலுத்தத் தேவையில்லை என்னும் புதிய 'பலி நிறைவேற்றக் கோட்பாட்'டைக் கிறித்தவம் தோற்றுவித்ததால், இந்து சமயக் கோயில்களிலுள்ள பலி பீடங்களில் பலி செலுத்துவது நிறுத்தப்பட்டு விட்டது.


    தீமையை வென்றவர்


    குமரக் கடவுள் தீமையை வென்றவர் என்னும் அடிப்படை உண்மையை விளக்குகிறது. இது குறித்துப் புராணக் கதை நம் நாட்டில் வழங்கி வருகிறது. சூரபத்மன் என்பவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து தீமை செய்து வந்தான். எனவே அவர்கள் கடவுளாகிய சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் தமது நெற்றிக் கண்ணின் தீப் பொறியிலிருந்து முருகனைப் பிறப்பித்தார். சரவணப் பொய்கையில் ஆறு உருவங்களில் பிறந்த இவரை ஒன்றாக இணைக்கவே உடல் மட்டும் ஒரே உருவமாகவும் முகங்கள் ஆறாகவும், பன்னிரு கண்களுடனும் பன்னிரு கைகளுடனும் அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். சூரனுடன் போரிடுவதற்குச் சத்தி, வேலாயுதத்தைக் கொடுத்தார். சூரனுடன் முருகன் போரிட்டார். முருகனிடமிருந்து தப்பிக்கப் பல மாய வித்தைகள் புரிந்தான் சூரன். இறுதியில் ஒரு மாமரமாக அவன் நின்றான். முருகன் தனது வேலால் மரத்தின் மீது எறியவே, மரம் இரண்டாகப் பிளந்தது. அவற்றில் ஒன்றைச் சேவலாக்கி, அதனைத் தமது கொடியாகவும், அடுத்ததை மயிலாகவும் மாற்றித் தமது ஊர்தியாகவும் முருகப் பெருமான் வைத்துக் கொண்டார். மயில் தனது கால்களில் பாம்பைப் பற்றிக் கொண்டிருக்கிறது.


    இக்கதை இயேசு கிறித்துவை விளக்குவதாக உள்ளது. இவருக்குப் பன்னிரு மாணாக்கர் இருந்தனர். இப்பன்னிரு வரும் இயேசுவின் பன்னிரு கண்களாகவும் பன்னிரு கைகளாகவும் செயல்பட்டவர்கள். 'சூர்' என்னும் தமிழ்ச் சொல்லுக்குத் தீமை என்பது பொருள். தீமையின் உருவகம் தான் சூரபத்மன் ஆவான். இது சாத்தானைக் குறிப்பது. இயேசு பெருமான் சிலுவையாகிய

    மாமரத்தில் சாத்தாணகிய தீமையை வென்று மக்களுக்குப் புது வாழ்வை ஈந்தார்.


    வள்ளி, தெய்வாளை என்று இரண்டு மனைவியர் முருகனுக்கு இருந்தனர். வள்ளி அவரது சொந்த இனத்தவரல்லர். சொந்த இளத்தவரான தெய்வானையை முருகன் மணந்தார். பிறகு குறவரினப் பெண்ணாகிய வள்ளியை, அவர் தேடிச் சென்று மணந்து கொண்டார். இயேசு பெருமானுக்கு இரண்டு மனைவியர்! கிறித்தவர்கள் மனைவியை மணவாட்டி என்று குறிப்பிடுவர். இயேசுவுக்கு உரிமையாக, அவரது இனத்திலுள்ள யூதத் திருச்சபையாகிய மணவாட்டி (தெய்வானை); அடுத்தது பிற இனத் (புறஜாதி) திருச்சபையாகிய மணவாட்டி (வள்ளி). இவை உருவகமாகவும் பிறது மொழிதலாகவும் புராணங்களில் சொல்லப்படுகின்றன. இயேசு கிறித்து மணமாகாதவர், திருச்சபைகள் மணப்பெண்களாக உருவகிக்கப்படுகின்றன. முருகனுக்குத் தமிழ்நாட்டில் இரு மனைவியர். ஆனால் வடநாட்டில் அவர் திருமணமாகாதவர்.


    முருகனின் படை வீடுகளும் கோயில்களும் பெரும் பாலும் மலைகளிலேயே அமைந்துள்ளன. அம்மலையை நோக்கி, அவரு டைய அடியவர்கள் காவி உடுத்தி, உடம்பில் அலகு முதலியன குத்தி, தம் உடலை வருத்திக் கொண்டு, காவடி சுமந்து சென்று தம் நேர்த்திக் கடன் கழிப்பர். இது இயேசு பெருமானின் பாடு. மரணத்தை நினைவுபடுத்துவ தாக உள்ளது. சிலுவையில் அறையப்படுபவருக்குச் சிவப்பு (காவி) ஆடை உடுக்கப்பெறும். அவர் உடம்பில் சவுக்கடி முதலியவற்றால் காயங்கள் உருவாகும். இதனை நினைவுப்படுத்தும் வகையில் நம் நாட்டில் அலகு குத்திக் காயப்படுத்திக் கொள்கின்றனர். கொல்கதா மலை நோக்கிச் சென்ற இயேசு சிலுவை மரத்தைத் தூக்கிச் சென்றார். அதாவது,


    சிலுவை மரத்திலுள்ள குறுக்குத்தடியை மட்டுமே சிலுவையி லடிக்கப் பெறுபவர் தூக்கிச் செல்வது வழக்கம். நெடுந்தடியாகிய மரம் அம்மலையிலே ஊன்றப்பட்டிருக்கும். குறுக்குத் தடியைக் குறிப்பது தான் காவடி. இதனை மயிலிறகாலும் துணியாலும் அலங்கரித்துள்ளனர். காவடி என்பது காவு + தடி ஆகும். பலி கொடுக்கும் மரம். காவடி என்பதும் சிலுவை என்பதும் ஒன்றே ஆகும் அல்லவா? சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு. மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தன் மூலம் அவர் தீமையாகிய சாவின் மேல் வெற்றி கொண்டார். இது பிள்ளையாரின் வரலாறாகப் புராணங்களில் சொல்லப்படுகிறது.


    இறந்து உயிர் பெற்றவர்


    தனது காவலுக்காக, உமையவள் (பார்வதி) தனது உடம்பின் அழுக்கினை உருட்டி அதனைத் தனது பிள்ளையாக வைத்திருந்தார். தான் இருக்குமிடத்திற்கு எவரையும் உள்ளே விடாதவாறு காவல் புரியுமாறு தன் பிள்ளைக்கு உமை கட்டளையிட்டார். உமையவள் உள்ளே சென்ற சற்று நேரத்தில் சிவன் வந்தார். காவல் புரிந்த பிள்ளை, சிவனை உள்ளே அனுமதிக்கவில்லை. சினமுற்ற சிவனார், அப்பிள்ளையைத் தம் மழுவாயுதத்தைப் பயன்படுத்தித் தலையை வெட்டி விட்டார். குழந்தையை இழந்த பார்வதி, சிவனைக் கடிந்து கொண்டார். தன் பிள்ளையை உயிர்ப்பிக்குமாறு வேண்டினார். ஒரு யானையின் தலையை வெட்டிக் கொணர்ந்தார் சிவன். பிள்ளையின் முண்டத்தில் தலையை ஒட்டவே, குழந்தை உயிர் பெற்றெழுந்தது. அதனால் தான் மனித உடலும் யானைத் தலையும் உடையவரானார் பிள்ளையார். இயேசு இறந்தார். ஆனால் மறுபடி உயிர்த்தெழுந்தார். இறப்பதற்கு முன்னர் அவருக்கிருந்த உடலிலிருந்து, உயிர்த்தெழுந்த பின்னர் அவருக்கிருந்த உடல் வேறுபட்டது. பூட்டியிருந்த அறைக்குள் நுழைந்து (ஊடுருவி) 'உங்களுக்குச் சமாதானம்' என்றுரைத்தார். இதனை விளக்குவது தான் மனித உடலும் யானைத் தலையும் உடைய பிள்ளையார்த் தத்துவம்.


    விநாயகர் அகவலில்,

    ‘குவலயந் தன்னில் குருவாய் உதித்து கோடு ஆயுதத்தால் கொடுவினை களைந்து'


    என்று குறிப்பிடப்படுகிறது. கோடு என்பது மரத்தைக் குறிக்கும். வினை என்பது நம்மைப் பிணைத்திருக்கும் பாவ வினை. இதனைக் களைவதற்கு இயேசு பெருமான் கோடு ஆயுதமாகிய சிலுவைப் பொறியில் உயிர் நீத்தார். கோடு ஆயுதத்தால், பாவ வினையைக் களைந்தார் என்பது இதன் விளக்கம். இதனால் 'வினை தீர்த்த விநாயகர்' என்று இவர் போற்றப்படுகிறார்.


    உலகைப் படைத்தவர்


    புராணங்களின்படி பிரமன் என்பவர் உலகைப் படைத்தவர் எனப்படுகிறார். இவர் விஷ்ணுவின் உந்திக் கமலத்தில் உதித்தவர். உ அதாவது திருமாலின் வயிற்றில் பிறந்தவர் பிரமன் ஆவார். இவரே உலகத் தோற்றத்திற்குக் காரணர்; படைப்புக் கடவுள். இயேசுவுக்கும் உலகப் படைப்பிற்கும் தொடர்பு உண்டா? தந்தையாகிய (பிதா) கடவுள்தானே உலகைப் படைத்தவர் என வினா எழலாம். ஆனால் இயேசுவுக்கு உலகப் படைப்பில் பங்கு உண்டு என்று விவிலியம் கூறுகிறது.


    "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” (யோவான் 1:3)


    "இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள்ளே ஆதி காலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் காண்பிப்பதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது" (எபேசியர் 3:1)


    இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் என வரும் பகுதிகளால் இதனை அறியலாம்.


    படைப்புத் தொழிலையுடைய பிரமனுக்கு நான் முகன் என்று பெயர். இப்பிரமனுக்குக் கோயில் வழிபாடு இல்லை. ஏனெனில் இவர் கடவுளை ஏமாற்றி விட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமானின் அடியையும் முடியையும் கண்டுபிடிப்பதென, பிரமனுக்கும் திருமாலுக்கும் போட்டி ஏற்பட்டது. அவரது அடியைக் காண்பதற்காகத் திருமால் பன்றியின் வடிவில் பூமியைத் துளைத்துக் கொண்டு கீழ் நோக்கிச் சென்றார். அவரது முடியைக் காண்பதற்காகப் பிரமன் அன்னப்பறவை வடிவில் வானில் பறந்து சென்றார். காலம் வளர்ந்து கொண்டே சென்றது. சிவனும் வளர்ந்து கொண்டே சென்றார். அவரது அடியையும் முடியையும் இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேனோக்கிப் பறந்து சென்ற அன்னப்பறவை வடிவிலிருந்த பிரமன், தாழம்பூ ஒன்று கீழ்நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டார். 'நீ எங்கேயிருந்து வருகிறாய்?' என்று தாழம்பூவிடம் பிரமன் கேட்டார். 'சிவபெருமான் தலையை அலங்கரித்துக் கொண்டிருந்தேன். தவறி விழுந்து விட்டேன்' என்றது தாழம்பூ.


    'நீ விழுந்து எத்தனை காலமாயிற்று?' என்று பிரமன் கேட்டார்.


    'அது கணக்கிட முடியாதபடி அதிகக் காலமாயிற்று என்றது பூ.


    அப்படியானால் நீ எனக்கொரு உதவி செய்ய வேண்டும். சிவபெருமானின் முடியை நான் பார்த்தேன் என்று நீ சிவபெருமானிடம் சாட்சி கூற வேண்டும் என்றார் பிரமன்.


    தன்னிடம் கேட்பவர் பிரமனாயிற்றே! 'சரி' என்று தாழம்பூ ஒப்புக் கொண்டது.


    முடியைக் காணாமல் பிரமன் பூமிக்குத் திரும்பினார். அடியைக் காணாமல் திருமாலும் திரும்பினார். திருமால் தம் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால், சிவனின் முடியைக் கண்டு விட்டதாகப் பிரமன் கூறினார். அதற்குச் சாட்சியாகத் தாழம்பூவை நிறுத்தவே அதுவும் 'ஆம்' என்றது. தம்மை ஏமாற்றியது சிவனுக்குத் தெரியாமலா போய்விடும்? உடனே அவர், பிரமனுக்குக் கோயிலும் கிடையாது; வழிபாடும் கிடையாது எனச் சபித்து விட்டார். தன்னையே தாழம்பூ ஏமாற்றியதால், 'இனி, சிவ பூசையில் தாழம்பூ இடம் பெறக் கூடாது' என்று சபித்து விட்டதால், இன்று வரை சார்த்தப்படுவதில்லை என்பர். சிவனுக்குத் தாழம்பூ பிரமன் ஏமாற்றுக்காரன். பிரமனின் ஆணவத்தினிமித் தம் அவருடைய ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவன் கிள்ளிவிட்டார்; எனவே, அவருக்கு நான்கு தலைகளே உள்ளன என்று புராணம் தெரிவிக்கிறது. ஏமாற்றுக்காரனா கிய பிரமனுக்கும் படைப்புத் தொழிலையுடை கடவுள் மைந்தருக்கும் வேறுபாடு உள்ளது. இருவரும் வேறு வேறானவர். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் ஒருவரே எனப் பலர் மயங்குகின்றனர்.


    சூரியனைப் போன்ற ஒளி மயமானவர்


    *கடவுள் ஒளியாயிருக்கிறார்; அவரிடத்தில் எவ்வளவேனும் இருள் இல்லை; என்று யோவான் நற்செய்தி நூல் இயேசுவைக் குறித்துக் கூறுகிறது.


    "நானே உலகின் ஒளி"


    என்று இயேசு பெருமானே கூறியுள்ளார். ஒளியை அடிப்படையாகக் கொண்ட சமயத்தைக் 'சௌரம்' என்பர். இது சூரிய வழிபாட்டைக் கூறும் என்று குறிப்பிடுவர். அது தவறாகும். சூரியனைப் போன்ற ஒளிமயமான இறைமகனாகிய இயேசுவைக் குறிப்பதே இது ஆகும். இதை வெளிப்படுத்திக் காட்டுவதாக ஐயப்ப வழிபாடு அமைந்துள்ளது. ஐயப்பனை வழிபடச் சபரிமலைக்குச் செல்பவர்கள் 'மகரசோதி'யைத் தரிசிக்கச் செல்வதாகக் கூறுவது நோக்கத்தக்கது.


    கடவுளின் மகன் எனப்படும் இறையியல் கோட்பாடுகளில்

    மிகச் சிறப்பான நான்கை விளக்கும் வகையில் மேற்குறித்த நான்கு கடவுள் பெயர்களும் அவர்களைச் சுற்றியுள்ள கதைகளும் சொல்லப்படுகின்றன. எனவே, சிவக் குடும்பக் கடவுளரில் பிரமனைத் தவிர மற்ற ஆறு பேர் பெயர்களிலும் தனித்தனிச் சமயங்கள் தமிழகத்தில் உருவாகியுள்ளன. அவையே அறுவகைச் சமயங்கள் என வழங்கப்படுகின்றன. இது பற்றிய விளக்கம் முன்னர்க் குறிக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் அட்டவணை இதனைத் தெளிவுப்படுத்துகிறது.


    அறுவகைச் சமயம்



    தந்தை God the Father

    தாய் God the Holy Spirit

    மகன்

    God the Son


    1. சிவன்


    2. சிவன்

    1. சக்தி


    2. சக்தி

    1. குமரன் (தீமையை வென்றவர்)


    2. பிள்ளையார் (இறந்து உயிர்பெற்றவர்)






    சைவம்

    1. சிவன்


    2. சிவன்

    1. விஷ்ணு


    2. விஷ்ணு

    1. பிரமன் (உலகைப் படைத்தவர்)


    2. ஐயப்பன் (ஒளிமயமானவர்)






    வைணவம்


    மேற் குறித்தவற்றுள் 'இறை மகன்' என வரும் குமரன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் ஆகிய நால்வரின் பிறப்பு முறையும் இயற்கையிறந்த பிறப்பு முறையாக விளக்கப்படுகின்றன. இயேசு கிறித்துவின் கன்னிப் பிறப்பு

    என்பதும் இயற்கையிறந்த பிறப்பாகும். இது புராணக் கதையாகச் சொல்லப்படும் போது கற்பனை கலந்ததாகச் சொல்லப்படுவது நோக்கத்தக்கது.

    You have to wait 15 seconds.

    Download Timer

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.