தோமா வழி ஆதி இந்தியக் கிறித்தவம்
முனைவர் யா.தா. பாசுகரதாசு
இயேசு பெருமானின் நேரடி மாணாக்கரான தோமையர் தமிழகத்திற்கு வந்து நற்செய்திப் பணியாற்றினார் என்னும் வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர் கூறும் காரணம் தமிழகத்திற்கும் பாலத்தீனத்திற்கும் உள்ள இடைவெளி. தற்காலத்தில் உள்ளது போன்ற போக்குவரத்து வசதி அக்காலத்தில் இல்லையே என்பது தான்.
இந்தியாவும் இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகமும் பிறநாடுகளோடு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தரைவழியாகவும் கடல் வழியாகவும் மிகப்பேரளவில் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. யவனர், கிரேக்கர், யூதர், பாரசீகர், அராபியர் முதலானோர் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். பேரரசர் சாலமோனின் கப்பல் தமிழகக் கடற்பகுதிகட்கு வந்து தங்கம், மிளகு, திப்பிலி, தந்தம், குரங்கு முதலிய பொருட்களை ஏற்றிச் சென்றதாக விவிலியத் திருமறைப் பகுதிகள் தெரிவிக்கின்றன. ஓப்பீரின் தங்கம் எனச் சாலமோனின் உன்னதப்பாட்டில் இடம் பெறும் 'ஒப்பீர்' என்பது தமிழகத்திலுள்ள உவரித் துறைமுகம் என்று அறிஞர் பலர் நிறுவியுள்ளனர்.
கிரேக்கர்கள் இந்தியாவோடு கொண்ட தொடர்பு பெரும்பாலும் தரைவழித் தொடர்பாகும். பேரரசர் அலெக் சாந்தரின் மறைவுக்குப் பின் கிரேக்கரின் தொடர்பு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தன. கிறித்துவுக்கு முற்பட்ட காலங்களில் இத்தொடர்பின் வழி காந்தாரக் கலை வளர்ந்தது என்பர்.
கிரேக்கருடனும் உரோமருடனும் தமிழகம் நடத்திய வாணிகம் பற்றிய விரிவான குறிப்புகளை டாலமி என்ற எகிப்திய நில நூலாசிரியரும் பிளினி என்ற உரோம வரலாற்றாசிரியரும் வேறு சிலரும் தந்துள்ளனர். உரோம மன்னர், உயர்குடி மக்கள், ஆடை அணிகலங்களுக்காகச் செலவு செய்த பொன்னால். உரோம உலகு வறுமையுற்றதும், தமிழகம் வளமுற்றும் வந்தது கண்டு பிளினி அங்கலாய்த்துக் கொண்டார்.
யவனர் யார்?
யவனர் என்ற சொல் முதன்முதலில் கிரேக்க நாட்டின் பக்கத்திலுள்ள அயோனியா (lonia) என்ற தீவையும் அங்கு வாழ்ந்து வந்த மக்களையும் குறித்தது. காலப்போக்கில் அது கிரேக்கர், உரோமர், யூதர், சிரியா, அரேபியா முதலிய நாடுகளைச் சார்ந்த வணிகர்களையும் குறிக்கத் தொடங்கிற்று. வடநாட்டு இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர்கள் பெரும் பாலும் கிரேக்கர்களாகவே திகழ்ந்தனர். ஆனால் தமிழ்ச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர் என்பது உரோமர் யூதர்களையும் குறித்தது. களையும்
*யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப"
என்னும் புறநானூற்றுப் பாடல் அடிகள், உரோம நாட்டைச் சார்ந்த யவனர்கள் அந்நாட்டு மதுவை இங்குக் கொணர்ந்ததாகவும் அதி தமிழக மன்னர் விருந்துகளில் பரிமாறப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன.
உயவனர் கொணர்ந்த பாவை விளக்கு' பற்றிய செய்தியை நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. உரோம நாட்டுப் போர் வீரர் பலர் பாண்டியனின் பாசறைக் காவலர்களாய்ப் பணியாற்றியுள்ளனர். யவனர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் சேர்ந்து வாழ்ந்த பகுதிக்கு 'யவனர் சேரி' எனப் பெயர் வழங்கி வந்ததை பட்டினப்பாலை என்னும் பத்துப்பாட்டு நூல் தெரிவிக்கிறது.
"யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்" என வரும் பெருங்கதைத் தொடரின் மூலம், அரண்மனைகளைக் தருவிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட யவனத் தச்சர்களில் ஒருவராகத் தோமா, இந்தியாவிற்கு வந்தார் என்று குறிப்புகள் கிடைத்துள்ளன.
இவர்கள் 'யோனர்கள்' என்று அசோகருடைய கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள். "கிரேக்கர்களை 'யெவ்னா' (Yavna) என்று டேரிடயஸ் மன்னன் அழைப்பதும், யவன் (Yavan) என்று இவர்களை கிறித்தவத் திருமறை சுட்டுவதும் குறிப்பிடத்தக்கது" என்று அறிஞர் எடுத்துக் காட்டுவர். அதோடு, ஓமரின் (Homer) காப்பியங்களில் அயோனியன் என்ற சொல்லிலிருந்து வந்த இச்சொல் அயோன் (ioan) என்று இடம் பெற்றுள்ளதாகவும் கிரேக்கரின் எழுத்துக்களை 'யவன லிபி' என்று பதஞ்சலி குறிப்பிடுவதையும் எடுத்துக் காட்டுவர். எனவே கிரேக்கர். உரோமர், யூதர்,சீரியர். அராபியர் முதலியோருக்கு வழங்கப் பட்டுவந்த பொதுப் பெயரே ‘யவனர்' என்பது தெளிவாகிறது.
இயேசு பெருமான் பிறந்தபோது, பாலத்தீனப்பகுதிகள் அகஸ்டஸ் சீசரின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த சீசரின் நாணயங்கள் தமிழகத்தின் பகுதிகளில் ஏராளம் கிடைத்துள்ளன. புதுச்சேரிக் கருகிலுள்ள அரிக்கமேடு என்னும் ஊரில் நடைபெற்ற அகழ்வாய்வுகள் மூலம் அங்கு யவளச் சேரி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கிடைத் துள்ள உரோம நாணயங்களும் பெரும் அளவிலானவை தமிழகத்திலேயே கிடைத்துள்ளன. இந்நாணயங்களுள் அகஸ்டஸ் சீசர். தைபீரியஸ், கேயஸ் கிளாடியஸ் ஆகியோரின் முத்திரைகள் உள்ளன.
தென்னாட்டிலிருந்து அகஸ்டஸ் சீசருக்கும் பிற உரோம நாட்டரசர்களுக்கும் தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சோ நாட்டிலிருந்து ஒரு தூதுக் குழுவும் பாண்டி நாட்டிலிருந்து ஒரு தூதுக் குழுவும் அகஸ்டஸ் சீசரைக் காணச் சென்றதாக இலத்தீன் மொழி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிளாடியஸ் மன்னன் காலத்தில் இந்தியாவிலிருந்து சென்ற தூதுக் குழு பற்றிப் பிளினி குறிப்பிடுகிறார். பாண்டிய மன்னர்களிடமிருந்து அகஸ்டஸ் சீசரைச் சந்திக்க கி.மு.26இல் டெரகோனா என்னுமிடத் திற்கும் கி.மு.20இல் சமோஸ் என்ற இடத்திற்கும் சென்ற தாகக் கனகசபைப் பிள்ளை குறிப்பிடுகிறார்.
சாலமோன் பேரரசரின் சிம்மாசனம் இந்திய நாட்டு யானைத் தந்தத்தால் அணி செய்யப்பட்டிருந்தது எனக் குறிப்பிடுவர். சங்கப் பாடல்கள் மூலமாகவும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற இன்னபிற காப்பியங் கள் மூலமாகவும் தமிழகத்திற்கும் யவன நாடுகளுக்கும் இருந்த வணிகத் தொடர்பு மிகப் பெருமளவில் விளங்குகிறது.
விசுவாசிகளின் தகப்பனாகக் கருதப்பெறும் ஆபிரகாம் வாழ்ந்த 'ஊர்' என்பது தமிழ்ப் பெயராகும். இங்குத் தமிழர் வாழ்ந்து வந்த குடியிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
அகழ்வாராய்ச்சி புலப்படுத்துகிறது. பழந்தமிழ்ச் சொற்கள் பல, பிறநாட்டு மொழிகளில் சில மாற்றங்களோடு வழங்கி வருவதை மொழியியலார் எடுத்துக்காட்டியுள்ளனர். எனவே, யவனத்திற்கும் தமிழகத்திற்கும் கருத்துப் பரிமாற்றங்களும் பிறவும் வணிகத் தொடர்பு மூலம் கொள்வினை கொடுப்பினையாகத் தொன்றுதொட்டே வழங்கி வந்ததை வரலாறு காட்டுகிறது. எனவே, யவனராகிய தோமையர் இந்திய நாட்டிற்கு வந்து இயேசு பெருமானின் நற்செய்தியைப் பரப்பினார் என்பது வரலாற்றில் நிகழக் கூடிய ஒன்றே என்பது விளங்கும்.
தோமையரும் தமிழகமும்
பழைய ஏற்பாட்டில் குறிக்கப்படும் ஆபிரகாம் வழிவந்தவர் இயேசு பெருமான். இதே மரபில் வந்தவர்தாம் இயேசு பெருமானும், சங்க இலக்கிய மரபின்படி, தோமையர் ஒரு யவனர்.
ஐரோப்பியர் இந்தியப் பெருநாட்டிற்கு வருவதற்கு முன் பல நூற்றாண்டுகட்கு முன்பே கிறித்தவம் இந்திய நாட்டிற்கு வந்து விட்டது. கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே கிறித்தவம் இந்தியாவில் பரவத் தொடங்கிற்று என்பதைச் சவகர்லால் நேரு. இராஜேந்திர பிரசாத் போன்றோர் தத்தம் நூல்களில் எழுதிச் சென்றுள்ளனர்.
உரோம ஆட்சிக்கு உட்பட்டு வாழ்ந்தோர் யூதர்கள். உரோமர்களுக்கு முன்னர் அந்நாடுகளைக் கிரேக்கர் ஆண்டு வந்தனர். ஆகவே, அக்காலங்களில் கிரேக்க மொழி பொது மொழியாக வழங்கி வந்தது. இயேசு பெருமானின் மாணாக்கர் யூதராயிருந்தாலும், இயேசுவின் நற்செய்தியைக் கிரேக்க மொழியிலேயே எழுதினர். இயேசுவின் நற்செய்தியும் அதன்
விளக்கங்களாயமைந்த பிற பகுதிகளும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. வழங்கப்படுகிறது. அவை புதிய ஏற்பாடு என
தோமையர் இந்திய மண்ணில் காலடி வைத்த காலத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டுத் தொகுக்கப் பெறவில்லை என்பது வரலாற்றுண்மை. தோமா இங்குக் கொணர்ந்தது இயேசு பெருமானின் மீட்புச் செய்தியாகிய நற்செய்தியையே. இவரின் நற்செய்திப் பணியே இந்தியச் சமய வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது.
திதிமு என்னப்பட்ட தோமா இயேசு பெருமான் உயிரோடு எழுந்து தங்களுக்குக் காட்சியளித்தார் எனக் கூறியதை ஏற்கவில்லை. அவருடைய விலாவிலே தமது கை விரலால் தடவிப் பார்த்தாலொழிய நம்ப மாட்டேன் என்று கூறியவர். எட்டு நாட்கள் கழித்து இரண்டாம் முறை உயிர்த்தெழுந்த இயேசு காட்சியளித்த போது தோமா அங்கிருந்தார். குத்துண்ட தமது விலாவிலே கைவிரலால் தடவிப் பார்க்குமாறு கூறியதால், தோமா அவ்வாறு செய்து, "என் கடவுளே! என் ஆண்டவரே!" என்று பரவசப்பட்டு ஏற்றுக் கொண்டவர். "கண்டு விசுவாசம் வைப்பவரை விடக் காணாமலே விசுவாசம வைப்பவர் பேறு பெற்றவர்" என இயேசு பெருமான் தோமாவிடம் கூறினார்.
இயேசு உயிர்பெற்றெழுந்து நாற்பது நாட்கள் கழித்து விண்ணேற்றம் அடைவதற்கு முன்பு தம் மாணாக்கரை நோக்கி,
"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி பறைசாற்றுங்கள்" (மாற் 16:15)
என்று கட்டளை கொடுத்தார். அதனைத் தலைமேற் கொண்டு அவர் மாணாக்கர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணி செய்ய விழைந்தனர்.
யார் யார் எந்தெந்த நாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்பதை இயேசுவின் மாணாக்கர் கூடி முடிவு செய்தனர். தோமாவுக்கு இந்தியாவில் பணி செய்யும்படி சீட்டு விழுந்தது.
“நான் ஒரு எபிரேயன்; நான் எப்படி இந்திய மக்களுடன் பேச முடியும்? நான் அங்குப் போக இயலா"தெனக் கூறியதாகவும் பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தூயதோமா இந்தியாவிற்கு வந்து பணியாற்றியதைப் போலவே, தூய பர்தலேமேயும் பணியாற்றினார் என்று குறிப்புகள் உள்ளன. கி.பி.2ஆம் நூற்றாண்டில் பாண் டேனியஸ் (Panteaneious) என்பவர் எழுதியுள்ளார். தூய பர்தலேமேயு மும்பைப் பகுதியில் பணியாற்றியதாகவும் அவர் வழி வந்த கிறிஸ்தவர்கள் போர்த்துக்கீசியர் வருவதுவரை தனிப்பிரிவாகச் செயலாற்றி யதாகவும் பின்னர் மும்பை நகரிலிருந்து மற்றக் கிறித்தவர் களோடு கலந்து விட்டதாகவும் அறிஞர் குறிப்பிடுவர்.
தோமாவழிக் கிறித்தவர்கள் என்று தம்மை உரிமை பாராட்டி வரும் கிறித்தவர்கள் கேரளத்தில் மலபார் பகுதியில் இன்றும் உள்ளார்கள். மலபாரோடு தொடர்புடைய இச்செய்திகள் மிகப்பழமை வாய்ந்தனவாகக் கருதப் படுகின்றன.
கேரளப் பகுதியில் பழையூர், பாரூர், கொக்கமங்கலம் முதலிய பகுதிகள் தோமையருடன் நெருங்கிய தொடர்புடையன. இவர் கேரளத்தில் 7 திருச்சபைகளை நிறுவியதாகச் செய்திகள் உள்ளன. அவை 1. கொடுங்களூர் அல்லது மாலியங்கரை 2, பபூர் அல்லது பழையூர் 3. பரூர் அல்லது கோட்டக்காவு 4 கொக்கமங்கலம் 5. நீரணம் 6. சாயல் அல்லது நிலக்கல் 7.கொல்லம் ஆகியன. அதில் அரைத் தேவாலயம் திருவிதாங்கோட்டில் இன்றும் உள்ளது. பிற கோயில்களும் கேரளத்தில் உள்ளன. தோமையர் பற்றிய நாட்டுப் புறப் பாடல்கள் மலபார்ப் பகுதியில் ஏராளமாக வழங்கப்படுகின்றன.
தோமையர் இந்தியாவிற்கு வருகை புரிந்து பணியாற்றியது பற்றி மூன்று வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அவை:
1. வட இந்தியப் பகுதி
2. மலபார்ப் பகுதி
3. சோழ மண்டலப் பகுதி
என்பன ஆகும். மலபார்ப் பகுதியிலும் சோழமண்டலப் பகுதி யிலும் அவர் ஆற்றிய பணிகள் பற்றி ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
வட இந்தியப் பகுதியிலுள்ள தட்சசீலம் (Taxila) என்னும் பகுதியை ஆண்டு வந்த கொண்ட பேரரசு என்ற அரசனைத் தோமையர் சந்தித்தார் என்ற செய்தியை வட இந்தியப் பகுதி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மன்னன் கொண்ட போரசின் தச்சனாகத் தோமா சென்றார் என்று அம்மரபு கூறுகிறது. கொண்ட போரசு என்ற மன்னனை ஒரு புராண மாந்தனாகவே அண்மைக் காலம் வரைக் கருதி வந்தனர். ஆனால் அம்மன்னனின் அரசு நாணயங்கள் மிகப் பெருமளவில் இன்று கிடைத்துள்ளன. எனவே, அவர் ஒரு வரலாற்று மாந்தர் என்று, இப்போது மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், தோமா வடபுலம் சென்று நற்செய்திப் பணி ஆற்றியமையும் மெய்ப்பிக்கப்படுகிறது.
தோமையர் பணியால் உருவான கிறித்தவம் பெருமளவில் வெளியில் தெரியாமல் போனதற்குரிய காரணம் யாது? இதற்குரிய விடை இக்காலத்தில் ஆய்வின் வழி கிடைத்திருக்கிறது.
கி.பி. 410இல் கோத்தியர் (Goths) உரோமரைப் புறங்கண்டமையால் இந்தியாவுடன் கொண்டிருந்த வணிக உறவும் நசிக்கத் தொடங்கியது. பின்னர் அது தழைக்கத் தொடங்கியது. காஸ்மாஸ் இண்டிகாபிளிஸ்டஸ் என்பார் இந்தியாவிலிருந்த வணிக மையங்கள் பலவற்றைக் குறிப்பிடுகிறார். இவ்வாணிகம் கி.பி. 641 வரை தொடர்ந்தது. பின்னர் இசுலாமியர் அலெக்சாந்திரியாவைச் கைப்பற்றிய தால், அவர்களின் மேலாண்மை கிழக்குப் பகுதியில் ஓங்கத் தொடங்கியது. எனவே இந்தியாவிற்கும் மேற்குப் பகுதிக்குமிருந்த வணிக உறவு மறுபடியும் தளர்வுறத் தொடங்கியது. பல நூற்றாண்டுகள் இந்நிலை தொடர்ந் ததால் மேலை நாட்டார் இந்தியா பற்றி மறக்கத் தொடங்கினர். எனவே தான், கி.பி.15ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குப் புதிய வழி கண்டுபிடிப்பது நேர்ந்தது என்பர்.
இந்தியாவில் தோமா
தோமையர் இந்தியாவில் பணியாற்றினார் என்பதைச் சீரியாக் மொழியில் எழுதப்பட்டுள்ள பழைய நூல்களில் ஒன்றான "அப்போஸ்தலரின் கோட்பாடுகள்" (The Doctrine of the Apostles) என்ற நூல் சான்று பகர்கின்றது.
தோமாவின் வாழ்க்கையையும் அவரது நற்செய்திப் பணியையும் விளக்குவதாகக் கிடைத்துள்ள அடிப்படை நூல் ஒன்று "தூய தோமையரின் பணிகள்" (The Acts of St. Thomas) என்பது ஆகும்.
1945ஆம் ஆண்டு எகிப்தின் தென்பகுதியிலுள்ள 'நாக ஹமாதி (Nag Hammadi) என்னும் ஊரில் உழவர்கள் இருவர் ஓதுக்கிடத்தில் வைக்கப்பட்டிருந்த சாடிகள் சிலவற்றைக் கண்டெடுத்தனர். அவற்றில் 52 கையெழுத்துப் படிகள டங்கிய 13 கட்டப்பட்ட புத்தகங்கள் இருந்தன. இதற்கு முன்பு எங்கும் கிடைத்திராத கிறித்தவ நூல்களின் கையெழுத்துப் படிகள் இவற்றுள் அடங்கும். அவற்றுள் ஒன்று 'தூய தோமையரின் பணிகள்' என்னும் நூல் ஆகும். மத்தேயு, மாற்கு, லூக்கா முதலிய நற்செய்தி நூல் களிலுள்ளவற்றுக்கும் இணையான பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. "வாழ்பவராகிய இயேசு கற்பித்த கமுக்கமான போதனைகளைத் திதிமுவாகிய யூதா தாமசு எழுதினார்" என்று இந்நூல் தொடங்குகிறது. இறையரசை வெளிக் காட்டும் ஞானாசிரியராக இயேசு இந்நூலில் சித்திரிக்கப் படுகிறார். இந்நூல் கி.பி.4ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்ட தாகலாம் என்பர்.
இந்நூல் புறனடை ஆகமங்களுள் (Apocrypha) ஒன்றாகக் கருதப்படுகிறது. தோமா இந்தியாவிற்குப் போக வேண்டுமென்று அவர் பேரில் சீட்டு விழுந்தது பற்றிய குறிப்பு இந்நூலில் உள்ளது. இந்திய அரசராகிய கொண்டோபர் என்பவர் இதில் குறிக்கப்படுகிறார். தற்போது கிடைக்கப் பெற்ற ஆய்வாளர்களின் சான்றுரைகளின்படி, காபூல், காந்தகார், பஞ்சாபின் மேற்கு, தெற்குப் பகுதிகளில் கிடைத்துள்ள நாணயங்களில் கொண்ட போரசின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவை கி.பி. 20 முதல் கி.பி. 45ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சார்ந்ததாகலாம் என்பர். இவரது அரசின் எல்லை பெசாவரைச் சுற்றிலுமுள்ள பகுதிகளை உள்ளிட்டதாகலாம் என்பர். கொண்டபோரசு என்னும் அரசனது அவைக்குத் தோமா வருகை தந்தார் என்னும் மரபு வழிச் செய்தி உண்மையாதல் வேண்டும்
என்று முனைவர் பிளீட் என்பார் தக்ட்-இ-பாகி (Takht-i-Bahi) என்னும் கல்வெட்டையும் நாணயத்தையும் சான்று காட்டி விளக்குகிறார். இக்கல்வெட்டு 1857இல் கிடைத்ததாகவும் தற்போது இது இலாகூர் அருங்காட்சியத்தில் உள்ளதாகவும் குறிப்பிடுவர்.
தூய ஈப்ரிம் (St. Ephrem) - கி.பி. 4ஆம் நூற்றாண்டு, தூய கிரகோரி நசியான்சன் (St. Gregory Nazianzan)-கி.பி. 4ஆம் நூற்றாண்டு, தூய அம்புரோசு (St. Ambrose)-கி.பி.4ஆம் நூற்றாண்டு, தூய ஜெரோம் (St.Jerome)-கி.பி.4ஆம் நூற்றாண்டு, தூய கவுடென்டியசு (St. Gaudentius, Bishop of Brescia)-கி.பி. 5ஆம் நூற்றாண்டு, தூய பாலினசு (St. Paulinus of Nola)-கி.பி. 5ஆம் நூற்றாண்டு, தூய யோவான் கிறிசோஸ்தம் (St. John Chrysostom) கி.பி. 4-5ஆம் நூற்றாண்டுகள், தூய கிரகோரி (St. Gregory, Bishop of Tours) -கி.பி. 6ஆம் நூற்றாண்டு, வணக்கத்தற்குரிய பேட் (The Venerable Bede) கி.பி. 8 ஆம் நூற்றாண்டு-போன்றோர் எழுதியுள்ள குறிப்புகளின்படி தோமையர் இந்தியாவில் அருட்பணி ஆற்றினார் என்பது ஆணித்தரமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூய ஈப்ரிம் என்பார் சீரியாக் மொழியில் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தவர். இவர் தோமாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியுள்ளார். தோமையர் இந்திய மண்ணில் இரத்தச் சாட்சியாக மறைந்தார் என்றும் இந்தியாவிலே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் இவர் குறிப்பிடுகிறார். தூய தோமாவிற்கு தேவாலயம் ஒன்று எடிசா (Edessa) என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்தது பற்றியும் இவர் குறிப்பிடுகிறார். சீரியாக் மொழியில் தூய தோமாவைப் பற்றி எழுதப்பட்ட நூல்களுள் 'டிடஸ்காலியா' (Didascalia) என்பது குறிப்பிடத்தக்கது. "இறைத்
தொண்டரின் போதனைகள்" எனப் பொருள்படும் இந்நூல், தூய தோமாவை இந்திய நாடு வரவேற்றதாகக் குறிப்பிடுகிறது. கடன் கடந்த பகுதிகளிலும் கடற்கரையோரப் பகுதிகளும் அவரை வரவேற்றதாகவும் அங்கு அவர் ஆலயங்களைக் கட்டியதாகவும் இந்நூல் குறிப்பிடுகிறது.
சிந்து மாநிலத்தில் சிந்து ஆற்றுப் பகுதியிலுள்ள தட்ட (Tatta) என்னுமிடத்தில் தூய தோமையர், 'தூம பகத்' (Thurs Bhagat) என்னும் பெயரில் வணக்கத்திற்குரியவராக விளங்குகிறார் என்பர். இவரை வழிபடும் மக்கள் கிறித்தவரின் சடங்குகள் சிலவற்றை இன்றும் கடைப்பிடித்து வருவ தாகவும் அவர்களிடம் நூல் ஒன்று இருப்பதாகவும் அது மத்தேயுவின் நற்செய்தி நூலாக இருக்கலாம் எனவும் கருதுவர். தட்டாவில் வாழ்ந்துவரும் பக்கீர் இணக்குழுவினர் (Fakir Community) அரமேய மொழிப் பெயர்களைத் தாங்கியவர் களாகத் திகழ்கின்றனர். தூய தோமையரால் திருமுழுக்குப் பெற்ற பரம்பரையினராக அக்குழுவினர் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வதாக அறிஞர் குறிப்பிடுவர்.
தோமா மாலியங்கரை எனப்படும் கொடுங்களூருக்கு வந்து வியப்புறு செயல்கள் பலவற்றைச் செய்து ஆலயங்களை நிறுவிய பின்னர் மயில்புரம் (Mailepuram) சென்றதாகவும், சில காலங்கழித்து அவர் சீன நாடு சென்று திரும்பியதாகவும் செய்திகள் உள.
மயில்புரம் என் மேலே குறிக்கப்பட்டிருப்பது சென்னையிலுள்ள மயிலாப்பூர் ஆகும். சோழ மண்டல மரபுரைப்படி தோமாவின் நற்செய்திப் பணித் தளங்களாக மயிலாப்பூரை மையப்படுத்தியே அமைகின்றன. இதன்படி சின்னமலைப் (Little Mount) பகுதியில் கூராயுதத்தால் கொலையுண்டு இறந்ததாகவும் அவரது உடல் தற்போதுள்ள தோமையரின் பேராலயத்தில் (SanThome Basilica) அடக்கம் செய்யப்பட்டதாகவும் வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மயிலையிலுள்ள தோமையரின் கல்லறை யைக் கி.பி. 1295இல் வெனிசிய நாட்டுப் பயணி மார்க்கோ போலோ (Marco Polo பார்வையிட்டதாகத் தம்முடைய குறிப்பேட்டில் எழுதியுள்ளார். இவரது குறிப்புகளை வேறு எவரும் மறுத்ததாகத் தெரியவில்லை என்பர்.
தோமாவால் மனமாற்றம் பெற்றவர்கள் நான்கு குடும்பங்களைச் சார்ந்தோர் ஆயர் தகுதி பெற உரிமை பெற்றதாகவும் மலபார் மரபுரை கூறுகிறதென்பர். அவை. 1. பலமட்டம் 2. சங்கரப்புரி 3. கல்லி 4. கல்லியன் காவு என்பன. கோரவலன் காடு என்னும் பகுதியில் மேற்குறித்தோரில் சிலர் இன்றும் இருப்பதாகக் கூறுவர்.
மார்க்கோ போலோவின் குறிப்புரையின்படி கிறித்தவர்களும் சாரசேனர்களும் (Saracens) தூய தோமாவின் கல்லறைக்குத் வந்து திருப்பயணம் செய்வது பெருவழக்கானது என்றும் தோமாவைக் கொன்ற இடத்திலுள்ள மண்ணை எடுத்து நோயுற்றோருக்குப் பூசியதால் அவர்தம் நோய் குணமானதென்றும் அம்மண் சிவந்த நிறத்திலுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தினை 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரிஞொல்லி (Marignolli) என்பவரும் எழுதியுள்ளார். தோமாவின் கல்லறைப் பகுதியிலிருந்து மண்ணை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் தொடருகிறதென்பர்.
வாஸ்கோடகாமா கி.பி. 1498இல் இந்தியாவிற்கு வருகை அரிவதற்கு முன்னரே சீரியக் கிறித்தவர், தோமாவைப் புதைத்த இடமாகிய மயிலாப்பூருக்குச் சென்று வழிபடும் வழக்கம் இருந்தது. இவர்களது வழிபாட்டு முறைக்கும் திராவிட இந்துக்களின் வழிபாட்டு முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை பற்றி ஆசிரியர் பலர் எடுத்துக்காட்டியுள்ளனர்.
மலபாரிலிருந்த கிரியன் கிறித்தவத் திருச்சபைகளை கி.பி. 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த போர்த்துக்கீசியர்கள் மதிக்கவில்லை. ஆதித் திருச்சபையைச் சார்ந்த இந்தக் கிறித்தவர்கள் ஐரோப்பியத் திருச்சபைகளுக்கு எதிரான நெஸ்தோரியக் (Nestorian) கிறித்தவப் பிரிவினைச் சார்ந்தோர் என ஐரோப்பிய ஊழியர்கள் பழித்துரைத்த செய்தியையும் எடுத்துக் காட்டுவர்.
வாஸ்கோடகாமா ஒரு போர்ச்சுக்கீசியர் இவர் கி.பி. 1498இல் இந்தியாவிலுள்ள கள்ளிக்கோட்டைக்குச் சென்று அங்கிருந்த இந்துக் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அவர் இக்கோயிலை, இந்தியப் பண்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வந்த கிறித்தவக் கோயில் என்று நம்பினார். இவர் இரண்டாம் முறையாகக் கி.பி. 1502இல் இந்தியாவிற்கு வந்தபோது சீரியா நாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வந்த சீரியக் கிறித்தவர்கள் போர்ச்சுக்கீசியரின் பாதுகாப்பை நாடினர். இந்துக்களிடமிருந்தும் இசுலாமியரிட மிருந்தும் தங்களுக்குப் பாதுகாப்புத் தருமாறு வேண்டினர். இதற்கு அடையாளமாகத் தங்களின் முன்னாள் அரசரின் செங்கோலை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந் நிகழ்ச்சிக்குப் பிறகு போர்ச்சுக்கீசியராகிய ஐரோப்பியரைப் பின்பற்றத் தொடங்கிய சீரியக் கிறித்தவர்கள்
தமக்குரிய பண்பாட்டை விட்டு விட்டு ஐரோப்பியக் கிறித்தவத்தையும் அவர்தம் நாகரிகத்தையும் பின்பற்றத் தொடங்கினர். எனவே தோமா தொடங்கி வைத்த இந்தியக் கிறித்தவம் நலியத் தொடங்கியதோடு, இந்தியக் கிறித்தவருக்கும் ஐரோப்பியக் கிறித்தவருக்கும் இருந்த தொடர்பு அற்றுப்போய் விட்டது.
தோமாவின் நற்செய்தி நூல்
தமது நற்செய்தி நூலின் தொடக்கத்தில் இயேசுவின் வாழ்க்கை பற்றி 'அநேகர்' எழுதத் தொடங்கியதாக லூக்கா குறிப்பிடுகிறார். தொடக்கக் காலத் திருச்சபையில் நான்கு நற்செய்தி நூல்களைத் தவிர வேறு நூல்கள் இருக்கவில்லை என்று கூறமுடியாது. அவ்வாறு எழுதப்பட்டவற்றில் தோமாவின் நற்செய்தி நூலும் ஒன்று. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் சில பகுதிகளே கிடைத்துள்ளன. இந்நூலின் உள்ளடக்கம் பற்றி வேறு பல கையெழுத்துப் படிகளும் எகிப்தில் அண்மைக் காலங்களில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தோமாவின் நற்செய்தியின் மொழியாக்கம் முழுமையாகக் 'காப்டிக்' (Coptic) மொழியில் கிடைத்துள்ளது. புதிய ஏற்பாட்டிலிருந்து இது சற்று மாறுபட்டது. இயேசு பெருமானின் வார்த்தைகள் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளன. வேறு நிகழ்வுகள் இடம் பெற வில்லை. சிலுவையில் இயேசு அறையப்பட்ட நிகழ்ச்சியோ உயிர்த்தெழுதலோ கூட இதில் இடம் பெறவில்லை. ஆனால் இயேசு பெருமான் கூறிய மொழிகள் புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ளதைப் போன்றே இதிலும் அமைந்துள்ளன.
சின்னமலை (Little Mount)
சென்னையில் தோமாவின் வாழ்க்கை தொடர்பாக மூன்று இடங்கள் புனிதமாகக் கொள்ளப்படுகின்றன. இதில்இ சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்னமலை என்பதும் ஒன்று மரஞ்செடி கொடிகளும் புதர்களும் மண்டிக் கிடந்த இடமாக. அக்காலத்தில் திகழ்ந்திருக்க வேண்டும். தம்மைக் கொல்ல வந்தவர்களிடமிருந்து பாதுகாப்பளித்த இடமாகவும் இது கருதப்படுகிறது. இது பற்றித் தமிழில் வெளியான இதழாகிய ‘சுமித்திரன்’ 1900 இல் வெளியிட்ட கட்டுரையொன்றில் தோமா பற்றிய செய்திகளை வழிமொழிந்து எழுதியுள்ளது. சின்னமலையில் இக்குகை இன்றும் உள்ளது. இக்குகையின் மேல் கிறித்தவத் திருக்கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நீரூற்று ஒன்றும் உள்ளது. தமது போதனையைக் கேட்பதற்குத் திரளாக வந்த மக்களுக்குத் தாகம் தீர்க்கும் வண்ணம் தோமா இறைவனிடம் வேண்டுதல் செய்ததால் இந்நீரூற்று தோன்றியதாக ஒரு செய்தி கூறப்பட்டு வருகிறது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய ஜெசுயிட் சபையார் இவ்விடத்தில் ஒரு கோயிலைக் கட்டினர். தற்போதுள்ள கோயில் கி.பி. 1559இல் கட்டப்பட்டது.
தோமையர் குன்று (St. Thomas Mount)
தோமையர் இரத்தச் சாட்சியாக இறந்த இடம் தோமையர் | குன்று ஆகும். இது பெரிய மலை என்றும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பியரைப் 'பரங்கிகள்' (Phirangis) என அழைத்தது வழக்கமாகையால் பரங்கி மலை என்றும் இது அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திற்கு மேல் 300 அடி உயரமுள்ள மலையாக இது விளங்குகிறது. தோமா இம்மலை மேல் தாமே செதுக்கிய சிலுவைக்கு அருகில் தொழுது கொண்டிருந்த போது ஈட்டியில் குத்தப்பட்டு, அச்சிலுவையைத் தழுவிய வண்ணமாகவே இரத்தம் சிந்தி இயேசுவுக்கு இரத்தச் சாட்சியாக உயிர்துறந்தார் என்பது வரலாற்று மரபு. அங்ஙளம் இறந்த தோமையரின் உடலை, அவர் தம் மாணாக்கர் எடுத்து வந்து மயிலாப்பூரில் தற்போது சாந்தோம் தேவாலயம் உள்ள இடத்தில் அடக்கம் செய்தனர்.
தோமா கொல்லப்பட்ட இடத்தில் மலையுச்சியில் கி.பி. 1523இல் போர்த்துக்கீசியர் திருக்கோயில் ஒன்றைக் கட்டினர். அது கி.பி. 1547 இல் விரிவுபடுத்தப்பட்டது. அரமேனியா வைச் சர்ந்த கோஜா சாபர் (Coa Safar) கி.பி. 1707 இல் இதனை மேலும் விரிவாக்கம் செய்தார். தோமாவால் செதுக்கப்பட்டதாகக் கருதப்படும் கற்சிலுவை இன்றும் அங்குக் காணப்படுகிறது.
தோமையரின் கல்லறை (Tomb of St. Thomas)
தோமா புதைக்கப்பட்ட கல்லறை சென்னையிலுள்ள மயிலாப்பூரில் உள்ளது. இக்கல்லறை கி.பி. 1523இல் தோண்டப்பட்டது. அப்போது மண்டையோட்டின் சில எலும்புகளும், முதுகெலும்புகளும் மண் நிரம்பிய மண்பானை யொன்றும் அதனருகில் ஈட்டியின் நுனியும் கிடைக்கப் பெற்றன. மரக்கொம்பின் ஒரு பகுதியும் கூட அங்குக் கிடைத்துள்ளது. அதன் பிறகு தோமாவின் எலும்புகளை, அடக்கம் செய்யும் சிறு பெட்டியில் வைத்துப் பூட்டி மறுபடியும் அடக்கம் செய்தனர். இதே கல்லறை கி.பி. 1729இலும் திறக்கப்பட்டது. அக்காலக் கட்டத்தில் தெளிவான ஒளி அங்கிருந்து வெளிப்பட்டது என்று கூறுவர். மைசூர் சுல்தானாகிய ஐதர் அலியின் படையெடுப்புகளால் தோமா கல்லறை மீது கட்டப்பட்ட பேராலயம் பெரும் பாதிப்புக்குள்ளானது. கி.பி. 1893இல் மீண்டும் கட்டப்பட்ட தோமையரின் ஆலயம் 1956, மார்ச்சு 16இல் போப் பயஸ் என்பவரால் சிறிய பேராலயமாகத் தகுதிப்படுத்தப்பட்டது. பேராலயத்தின் உட்பகுதிகளிலும் தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலே தொகுத்துரைத்த குறிப்புகளும் ஆதாரங்களும் ட தோமையர் தமிழகத்தில் ஆற்றிய பணிகளுக்குச் சான்று பகர்கின்றன. பேராலயம் இருக்கும் பகுதியில், முன்பு கிடைத்த பல கட்டடப் பகுதிகளும் சிலைகளும் தற்போது பேராலயத்தின் வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று தோமாவின் சிலை என்று குறிக்கப்படுகிறது கி.பி. 1729இல் தோண்டப்பட்ட போது இச்சிலை கிடைத்தது என்பர். இரட்டைச் சிலையாக இஃது அமைந்துள்ளது. ஒரு எ பக்கத்தில் தூய தோமாவைப் போன்றும் மறுபக்கம் ஒரு திராவிடரைப் போன்றும் தோற்ற மளிக்கிறது. அவ்வுருவம் தாடியுடனும் காணப்படுகிறது.
தோமா வாழ்ந்து மறைந்த பகுதி மயிலாப்பூர். அவ்வாறே திருவள்ளுவரும் மயிலையில் வாழ்ந்த குறிப்புகள் உண்டு. திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலையொன்றும் கோயிலும் மயிலையில் அவர் பிறந்த இடத்தில் உள்ளன. இங்ஙனம் தோமாவையும் திருவள்ளுவரையும் இணைத்து நிற்பது மயிலாப்பூர் ஆகும். தோமா கொணர்ந்த நற்செய்தி யைத் திருவள்ளுவர் அறிந்திருப்பார் என ஆய்வாளர் பலர் கூறும் நி கருத்துகளுக்கு அரண்செய்வதாக இஃது அமைந்துள் ளது இயேசு பெருமானின் மலைப் பொழிவின் சாரமாகவும் கிறித்தவு இறையியற் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக வும் திருக்குறள விளங்குகிறதென அண்மைக் காலங்களில் வெளி வந்து கொண்டிருக்கும் ஏராளமான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேற்குறித்த வரலாற்றாதாரங்கள் இத்தொடர்பினை மேலும் உறுதி செய்கின்றன என்பதில் ஐயமில்லை.
இந்தப் பின்னணியில் இந்தியச் சமயங்களை ஆராயும் போது பல புதிய உண்மைகள் புலனாகின்றன. தமிழகத்தில் முகிழ்ந்த பக்தி இயக்கத்தின் மூலக்கருவாகக் கிறித்தவம் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. பக்தி இயக்கத்தின் விளைவாகவே சைவ, வைணவ சமயங்கள் தமிழகத்தில் தோன்றின. தமிழ் மண்ணில், தமிழ்ப் பண்பாட்டினைத் தன்மயமாக்கிக் கிறித்தவ சமயம், சைவ வைணவ சமயங்களாகத் துளிர்த்துக் கிளை பரப்பியுள்ளன. நிறுவன அமைப்பில் யூதேயாவிலும் மற்றப் பகுதிகளிலும் வளர்வதற்கு முன்னர் இந்திய நாட்டிற்கு அது வருகை தந்து விட்டதால், கி.பி. 1478க்குப் பின் வந்த ஐரோப்பியக் கிறித்தவத்தைப் போன்று இந்திய நாட்டின் ஆதிக்கிறித்தவம் நிறுவன அமைப்பாக வலுப்பெறவில்லை. ஐரோப்பிய ஆட்சியாளர்கள் கிறித்தவ சமயத்தை ஏற்றுக் கொண்டு, அரசாங்கச் சமயமாகத் தகுநிலை பெற்று விட்டமையால், அவர்கள் பண்பாட்டிற்கேற்ப வளர்ந்தது ஐரோப்பியக் கிறித்தவம். உலக நாடுகள் பல ஒரு காலக் கட்டத்தில் ஐரோப்பியரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தமையால், ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படையிலேயே அந்நாடு களில் கிறித்தவம் பரவி வளரலாயிற்று. கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் இந்தியாவில் பரவிய ஐரோப்பியக் கிறித்தவமும் இதே நிலையிலேயே வளர்ந்தது.
எனவே, தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் தோமையரின் நற்செய்தி, பக்தி இயக்கமாக மலர்ந்து சைவ வைணவ சமயங்களாக வளர்ந்து நின்ற நிலையில் ஐரோப்பியர் பின்பற்றிய அதே கருத்துகள் அந்நியச் சமயமாகக் காட்சியளிக்கத் தொடங்கின. ஆனால், உண்மையில் இவை இரண்டும் ஒரே அடிப்படையில் அமைந்தவையே என்பது ஆய்வுகள் இன்று வெளிப்படுத்தும் உண்மையாகும்.



