இன்றைய ஜெப குறிப்புகள்
உலகத்திற்க்காக ஜெபிப்போம் PRAY FOR OUR WORLD 65-82
65. உலகத்தில் தினமும் எத்தனையோ ஆயிரமாயிரமான ஜனங்கள் மரிக்கின்றார்கள், அவர்களுக்காய் ஊக்கமாய் ஜெபிப்போம் - எசேக்கியேல் 33:8 -
66. எருசலேமின் சமாதானத்திற்காய் ஜெபிப்போம் - சங்கீதம் 122 :6,7
67. உலகில் மனிதர்களுக்குள்ளே காணப்படும் பரியாசங்கள், கேலி, கிண்டல் ஒழிந்துபோக ஜெபிப்போம் - எபேசியர் 5 :4
68. உலகில் பார்வையில்லா குருடர்களை தேவன் வழிநடத்தி காத்திட ஜெபிப்போம் - ஏசாயா 42:16
69. தேவன் அருவருக்கும் பாவங்கள் தேசங்களில் காணப்படாதிருக்க ஜெபிப்போம் – நீதிமொழிகள் 6:16-19
70. தேசங்களிடையேயும், தேசத்திற்குள்ளும் காணப்படும் சண்டைகள் குறைந்திட ஜெபிப்போம் - யாக்கோபு 4:1
71. உலகில் காணப்படும் சோம்பேறிகள் மாறிட ஜெபிப்போம் * நீதிமொழிகள் 19 :24
72. உலகில் ஏமாற்றுக்காரர்கள் மனந்திரும்பிட ஜெபிப்போம் -ஆதியாகமம் 32 :27
73. குறிசொல்கிறவர்கள் இல்லாமல் போக ஜெபிப்போம் - எசேக்கியேல் 12:24
74. எல்லா நாடுகளிடையேயும், எல்லா மக்களிடையேயும், எல்லா குடும்பங்களி டையேயும் கர்த்தர் சமாதானத்தை தந்திட ஜெபிப்போம் - யோவான் 14 :27
75. உலகில் உள்ள எல்லா இசைக்கருவிகள் வாசிப்போருக்காய் ஜெபிப்போம் - 2 ராஜாக்கள் 3 :15
76. உலக மக்கள் மெய் தேவனை பின்பற்றி, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவர்களாய் மாறிட ஜெபிப்போம் - 1 யோவான் 5:20
77. ஆகாரங்கள் பற்றாக்குறையின்றி எல்லோருக்கும் தாராளமாய் கிடைத்திட ஜெபிப்போம் - சங்கீதம் 145:15
78. தேசங்களிலே காணப்படும் லஞ்ச, லாவண்யங்கள் எல்லாம் முற்றிலும் இல்லாமல் போக ஜெபிப்போம் - உபாகமம் 16 :19
79. தேசங்களிலே வறட்சிகள் மாறி, தேசங்கள் தன் பலனை தந்திட தேவனை நோக்கி ஜெபிப்போம் - சகரியா 8 :12
80. உலகில் காணப்படும் போஜனப் பிரியர்கள் எல்லாரும் மாறிட ஜெபிப்போம் - நீதிமொழிகள் 23 : 2,3
81. தேசங்களில் காணப்படும் விவாகரத்துகள் முற்றிலும் குறைந்திட ஜெபிப்போம் - மல்கியா 2 : 16
82. தேசங்களில் உள்ள ஒவ்வொரு சபைகளும் 24 மணி நேரமும் தொடர்ந்து ஆண்டவரை துதித்து ஸ்தோத்திர ஆராதனைகளை ஏறெடுத்திட ஜெபிப்போம்- எபிரேயர் 13 : 15